புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேர்கள்! Poll_c10வேர்கள்! Poll_m10வேர்கள்! Poll_c10 
90 Posts - 77%
heezulia
வேர்கள்! Poll_c10வேர்கள்! Poll_m10வேர்கள்! Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
வேர்கள்! Poll_c10வேர்கள்! Poll_m10வேர்கள்! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
வேர்கள்! Poll_c10வேர்கள்! Poll_m10வேர்கள்! Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
வேர்கள்! Poll_c10வேர்கள்! Poll_m10வேர்கள்! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வேர்கள்! Poll_c10வேர்கள்! Poll_m10வேர்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேர்கள்! Poll_c10வேர்கள்! Poll_m10வேர்கள்! Poll_c10 
255 Posts - 77%
heezulia
வேர்கள்! Poll_c10வேர்கள்! Poll_m10வேர்கள்! Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
வேர்கள்! Poll_c10வேர்கள்! Poll_m10வேர்கள்! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
வேர்கள்! Poll_c10வேர்கள்! Poll_m10வேர்கள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
வேர்கள்! Poll_c10வேர்கள்! Poll_m10வேர்கள்! Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
வேர்கள்! Poll_c10வேர்கள்! Poll_m10வேர்கள்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வேர்கள்! Poll_c10வேர்கள்! Poll_m10வேர்கள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வேர்கள்! Poll_c10வேர்கள்! Poll_m10வேர்கள்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
வேர்கள்! Poll_c10வேர்கள்! Poll_m10வேர்கள்! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வேர்கள்! Poll_c10வேர்கள்! Poll_m10வேர்கள்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேர்கள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 28, 2013 8:00 pm

அன்று, ஆடி வெள்ளிக் கிழமை. குளித்து முடித்து, கூந்தலின் நுனியை முடிச்சிட்டு, மல்லிகை சரத்தில், துளியூண்டு கிள்ளி, முடிச்சில் செருகினாள் ராசாத்தி அக்கா. பேரன் விக்னேஷை, பள்ளிக்கு அனுப்பி விட்டு, பக்கத்தி லிருக்கும் மாரியம்மன் கோவில் திண்ணையை, பசுஞ்சாண மிட்டு மெழுகி, இரண்டு இழை கோலம் போட்டு, நிமிர்ந்த போது, மணி ஏழே முக்கால். திருப்பூரை விட்டு, சற்று தள்ளி இருக்கும் வெள்ளியங்காட்டில், பல சரக்கு கடை நடத்தும் கணவர் நடராஜனுக்கு, காலை உணவு எடுத்துச் செல்ல வேண்டும்.

"பரபர'வென்று, பாத்திரத்தில் உணவை அடைத்தவளுக்கு, வயதின் தளர்ச்சியும், தன் ஒரே வாரிசின் இழப்பு தந்த வேதனையும், உடல் வலிமையை, குறைத்திருப்பதை உணர்த்தியது. ஆயிற்று... வரும் ஐப்பசியோடு அவளுக்கு, ஐம்பத்தி நாலு வயது.
ஏனோ, அன்று, மகன் மற்றும் மருமகளின் நினைவுகளால், மனதில் ஆற்றாமை அதிகமாக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஒரு சாலை விபத்தில், கறிவேப்பிலை கொத்தாய், பொத்தி பொத்தி வளர்த்த ஒரே மகனும், மருமகளும் அகால மரணமடைந்தனர்.

மகனையும், மருமகளையும் நினைத்து நினைத்து, நெஞ்சுருகிப் போனவளுக்கு, பேரன் விக்னேஷ் மட்டுமே, வாழ்வாதாரமாய் ஆறுதலளித்தான். வங்கியில் இருக்கும் இன்சூரன்ஸ் பணம், கடை வருமானம் இரண்டையும் பயன்படுத்தி, பேரனின் வருங்காலத்தை, ஒளியுடையதாய் ஆக்கி விட வேண்டுமென்பதில், குறியாயிருந்தாள்.
மகன் கதிர்வேலு, விக்னேஷை, இன்ஜினியராக்க வேண்டும் என்று, ஆசைப்பட்டான். மருமகள் பானுவோ, தன் பெரியப்பா மகள் கோகிலாவைப் போல், டாக்டராக வேண்டும் என்று, ஆசைப்பட்டாள். கணவர் நடராஜனுக்கோ, பேரனை நன்கு படிக்க வைத்து, ஒரு அரசு உத்தியோகத்தில் அமர்த்தி விட வேண்டும் என்ற ஆசை.

மகனும், மருமகளும் ஆசைப்பட்டபடியே, தன் பேரனை, கையிருப்பு கரைந்தாலும் பரவாயில்லை என்று, நகரத்திலேயே, நல்ல தரமான ஆங்கிலப் பள்ளியில் சேர்த்தாள். எப்படியோ கஷ்டப்பட்டு, தன் பேரனை ஒரு இன்ஜினியராகவோ, டாக்டராகவோ ஆக்கி விட வேண்டும். இல்லையெனில், ஏதாவது ஒரு அரசுப் பணியிலாவது,சேர்த்து விட வேண்டும் என்பதில், உறுதியாய் இருந்தாள்.
"படபட'வென்று, வண்டிச் சத்தம் கேட்டு வாசலுக்கு வந்தவள், சோர்ந்து, சுருண்டு போன ராதிகாவை, அவளது கணவன் வேணுகோபால், கைத்தாங்கலாய், கோவிலுக்குள் அழைத்துப் போவதை பார்த்தாள். துவண்டு சரிந்தவளை, ஓடிச் சென்று தாங்கியவள், மெதுவாக தன் வீட்டுக் கூடத்திற்கு அழைத்து வந்து, படுக்க வைத்து, ஆடைகளை தளர்த்தி, காற்றாடியை சுழல விட்டாள். குளிர்ந்த நீரால், முகத்தை துடைத்து, சூடாக சுக்கு காபி கொடுத்து, குடிக்க வைத்தாள்.

""காலையிலிருந்து வாந்தி யும், மயக்கமுமாயிருக்கா. கோவிலுக்கு, நாளைக்கு போகலாம்ன்னு சொன்னா, "ஆடி வெள்ளிக் கிழமை, போயே ஆகணும்'ன்னு அடம் பிடிக்குறா. அதான் கூட்டிட்டு வர வேண்டியதாப் போச்சு,'' தயக்கத்துடன் பேசினான் வேணுகோபால்.
""பயப்படாதே தம்பி... சாதாரண வாந்தி, தலைசுற்றல் தான். அடுத்த வருஷம், திருவிழாவிற்கு, ரெண்டு பேரும் கைப்புள்ளையோட வரணும்,'' என்று, வாழ்த்தி அனுப்பினாள்.

நான்கு மாதங்களுக்கு முன், ஓடிப் போகவிருந்த காதல் ஜோடியா இவர்கள்! ராசாத்தி அக்காவும், அந்த தெருவிலுள்ள பல பெண்களும், இரவு வேளைகளில், மாரியம்மன் கோவில் திண்ணையில் உட்கார்ந்து, ஊர்க்கதை பேசிக் கொண்டிருப்பர். இடை இடையே, தான் சிறுமியாய் இருந்த போது, தனக்கு அப்பாவும், பாட்டியும் கூறிய கதைகளையெல்லாம், உணர்வு பூர்வமாய், அவர்களுக்கு கூறுவாள் ராசாத்தி அக்கா. ஒருநாள், பெற்றவர்களின் இன்னல் தீர்க்க, தன்னுயிர் ஈந்த சிறுத் தொண்டன் மகன், சீராளன் கதையை, ராசாத்தி அக்கா சொல்லச் சொல்ல, வேணுகோபாலை காதலித்துக் கொண்டிருந்த ராதிகாவின் கண்கள், கரகரவென்று கண்ணீரை கொட்டியது. ஓடிப்போய் திருமணம் செய்து கொள்வதென்ற, தன் முடிவை மாற்றி, ராசாத்தி அக்காவிடம் விஷயத்தை சொல்ல, ராஜாத்தி அக்கா இரு வீட்டு பெரியவர்களிடமும் பக்குவமாய்ப் பேசி, இவர்களின் திருமணத்தை நடத்தி வைத்தாள்.

கணவர் பசியோடிருப்பார் என்ற உணர்வு உந்த, பழைய நினைவுகளை ஒதுக்கி விட்டு, உணவுப் பாத்திரம் வைத்திருந்த கூடையை, எடுத்துக் கொண்டு, தெருவில் இறங்கி, நடக்கத் தொடங்கினாள். தனக்கு பின்னால் வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனம் ஒன்று, திடீரென்று, தன் அருகில் வந்து நின்றதும், அதிர்ச்சியோடு பார்த்தாள்.

புத்தம் புதிதான ஹோண்டா சைன் வண்டியில், தன் மகனின் நண்பன் மோகன் அமர்ந்திருப்பதை பார்த்து, புன்னகைத்தாள். மின்சார வாரியத்தில் வேலை பார்த்த மோகனின் தந்தை, அவனை இன்ஜினியராக்கியிருந்தார். பெங்களூருவில் அவனுக்கும், அவனது மனைவிக்கும் ஒரு பிரபல ஐ.டி., கம்பெனியில் வேலை. கை நிறைய சம்பளம். அவனது உடலின் வனப்பும், செழிப்பும், வருமானத்தின் செழுமையை பறை சாற்றியது.

கதிர்வேலு இருந்த வரையில், "அம்மா... என் பொழப்பு தான் கடைக்கும், வீட்டிற்குமாய் அல்லாடற பொழப்பா போச்சு. என் மகனையாச்சும், மோகனாட்டம் இன்ஜினியராக் கணும்...' என்று, சொல்லிக் கொண்டே இருப்பான்.
""வாங்கம்மா. வண்டியில ஏறுங்க. கடை வழியாத் தான் போறேன். உங்களை கடையிலே, டிராப் செய்றேன்.''
நகரப் பேருந்தில் நசுங்கும் தொல்லைக்கு, இன்று, விடுதலை கிடைத்த மகிழ்ச்சியில், ராசாத்தி அக்காள் வண்டியில் ஏற, வண்டி பறந்தது. பேப்பர் கடை முக்கு திரும்ப, எதிரே வேகமாய் வந்த கார், அவர்களுக்கு முன்னால், சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண் டிருந்த மாணவனை, இடித்து விட்டு பறந்து விட, கீழே விழுந்த மாணவனின் தலையில் ரத்தம். கூட்டம் கூடுவதற் குள், அந்த இடத்தை தாண்டிப் பறந்தான் மோகன்.

""ஏம்ப்பா... மோகன் கொஞ்சம் வண்டியை நிறுத்து. யார் பெத்த புள்ளையோ. பாவம் சின்னப் பையன். அவனுக்கு ஏதாவது உதவி செய்யலாம்.''""பேசாம வாங்கம்மா. இடிச்சவனே நிக்காமப் போயிட்டான். நான் லீவிலே வந்திருக்கிறேன். நாம உதவி செய்யப் போயி, போலீஸ் கேஸ், அது இதுன்னு நம்மால அலைய முடியாது.''தன்னைச் சுற்றி, ஒரு துன்ப நிகழ்வு நிகழ்ந்ததை, சுத்தமாய் மறந்து, கடையில், ராசாத்தி அக்காவை இறக்கி விட்டு, புன்னகை மாறாமல் சென்று விட்டான் மோகன்.

ராசாத்தி அக்காவின் மனம் கிடந்து தவியாய் தவித்தது. இந்த மோகன் வண்டியை நிறுத்தாம வந்துட்டானே... ஒரு உயிரின் வலியை, உணர விடாமல், இவனைத் தடுத்தது எது? விழுந்து கிடந்த சைக்கிளும், சிதறிக் கிடந்த புத்தகங்களும், தலையில் ரத்தம் வழியும் சிறுவனுமாக, மனக் கண்ணில், அழுத்தமாய் பதிந்து விட்ட காட்சியின் நிஜத்தை, அழிக்க முடியாமல், திணறினாள் ராசாத்தி அக்கா.
மாலை வழக்கம் போல, பேரனோடு சென்று, மாரியம் மனுக்கு விளக்கேற்றி, ஓரமாக திண்ணையில் அமர்ந்தாள். கட்டட வேலைக்கு செல்லும் வேலாயி, சாமி கும்பிட்டு விட்டு, அவளருகே வந்தாள். அவள் நெஞ்சு முழுக்க வியாபித்திருந்த, துயரச் சூறாவளியை, முகத்தில் மறைக்க முடியாமல் திணறினாள். கண்களின் பளபளப்பிற்கு காரணம், கசியத் துடிக்கும் கண்ணீர் என்பதை, ராசாத்தி அக்காவால் புரிந்து கொள்ள முடிந்தது.

நான்கு ஆண்டுகளுக்கு முன், விஷச் சாராயத்திற்கு புருஷனை பறி கொடுத்தவள். ஒரு மகளை, ஊத்துக்குளி ரைஸ் மில்லில், வேலை பார்க்கும் கோவிந்தனுக்கு கட்டிக் கொடுத்திருந்தாள். தலைப்பிரசவத்திற்கு வந்திருந்த மகள், போன வைகாசியில் தான், ஊருக்கு கிளம்பி போனாள். மகனின் படிப்பை நிறுத்தி, பனியன் கம்பெனிக்கு வேலைக்கு அனுப்பியிருந்தாள். மகளின் புகுந்த வீட்டில், பிரச்னையோ என்னவோ...""ஏ புள்ள வேலாயி, மொகம் ஏன், இத்துணூன்டா இருண்டு போய் கிடக்குது. எதனாச்சும் பிரச்னையா?'' வாஞ்சையோடு வினவினாள், ராசாத்தி அக்கா.

""என்னத்த சொல்றது அக்கா... வயித்துப் பாட்டுக்கே உம்பாடு, எம்பாடுங்கறப்போ, பையனுக்கு சிறுநீர் குழாய்ல கல்லிருக்குதாம். அடிக்கடி வயித்து வலின்னு, சுருண்டு படுத்துக்கறானேன்னு, போன வாரம், டவுன் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனேன். டெஸ்ட் எடுத்து பார்த்துட்டு, "கல் இருக்குது, ஆப்ரேஷன் செய்யணும், இருபதிலிருந்து, முப்பாதாயிரம் வரை செலவாகும்'ன்னு சொல்றாங்க. கிடைக்குற எம்பது ரூபா கூலியிலே, நான் இத்தனை பணத்துக்கு எங்கே போவேன்? புருஷனை தான் முழுங்கிட்டேன். புள்ளையாச்சும் தங்காதான்னு துடிச்சிட்டுருக்கேன்,'' என, புலம்பினாள் வேலாயி.

""இதுக்கு போய் ஏன் அழுவுறே... நான் ஒரு வைத்தியம் சொல்றேன். பையனை கூட்டிட்டு வா. அனந்தகிரி பொன்னுசாமிக்கு, போன மாதம் இதே பிரச்னைக்குத் தான் மருந்து கொடுத்தேன். எண்ணி இருபத்து மூணாவது நாள், கல்லு வெளிய வந்திருச்சு. கவலையில்லாமல் வீட்டுக்கு போ,'' என ஆறுதலாய் பேசி, அனுப்பினாள் ராசாத்தி அக்கா.

சிறுநெருஞ்சி, பெருநெருஞ்சி, உதிய மரப்பட்டை மூன்றையும் ஒன்றாக இடித்து, இரவில், ஒரு சட்டியில் ஊற வைத்து, காலையில், அதை எடுத்து, ஒன்றறை டம்ளராக வரும் வரை காய்ச்சி, தினமும் குடிக்க கொடுத்தாள். வாழைத் தண்டு ஜூஸ், வெள்ளை முள்ளங்கி ஜூஸ் என, ஒருநாள் விட்டு ஒரு நாள் குடிக்கச் சொன்னாள். இருபத்தி ஏழாவது நாளிலே, கல் கரைந்து வெளியேறுவதை, வேலாயி மகனால் உணர முடிந்தது. இருபது ரூபாய் கூட செலவில்லாமல், தன் மகனுக்கு குணமான அதிசயத்தை, வேலாயியால் நம்பாமல் இருக்க முடியவில்லை. தன் காலில் விழ வந்தவளை, தடுத்து நிறுத் தினாள் ராசாத்தி அக்கா. இந்த ஏழையிடம், இரக்கமற்று இருபதாயிரம் ரூபாயை பறிக்க பார்த்த, மருத்துவ கல்வியின், பரம ரகசியம், ராசாத்தி அக்காவுக்கு புரியவில்லை.

பள்ளியிலிருந்து வீடு திரும்பிய, பேரன் விக்னேஷுக்கு கொறிக்க, குடிக்க கொடுக்க வேண்டியதை கொடுத்து, பக்கத்து தெரு டீச்சரிடம், டியூஷன் வகுப்பிற்கு கூட்டிச் சென்றாள். டீச்சரின் கணவர் வேலாயுதம், வட்டாட்சியர் அலுவலகத்தில், வேலை பார்த்துக் கொண்டிருந்தார். வழக்கத்துக்கு மாறாக அன்று, வீட்டு தொலைக்காட்சி முன், அமர்ந்திருந்தார். ஒரு வேளை, "உடல் நலம் சரியில்லையோ...' என்று டீச்சரிடம் விசாரிக்க...

""அதொண்ணுமில்லீங்க. யாருக்கோ பட்டா மாத்திக் கொடுக்கறதுக்கு, ரெண்டாயிரம் பணம் வாங்கினாராம். அதற்கு போயி ரெண்டு மாசத்துக்கு சஸ்பெண்ட் செய்துட்டாங்க. இந்தக் காலத்துல, யாரு தான் வாங்கல... என்னமோ ஊரு, உலகத்துல நடக்காத மாதிரி, இவருக்கு மட்டும் தண்டனை. என்ன பெரிய சஸ்பெண்ட். ரெண்டு மாசத்துக்கு அப்புறம் வேலைக்கு போக போறாரு.''
தன் கணவர் செய்த தவறை, நியாயப் படுத்தியதோடில்லாமல், குற்ற உணர்வு சிறிதுமின்றி, டியூஷன் எடுக்க சென்ற டீச்சரையும், தொலைக்காட்சியில், காமெடி கலக்கலை ரசித்துக் கொண்டிருந்த அவரது, "சஸ்பெண்ட்' ஆன கணவரையும், வெறுமையாய் பார்த்து, வீடு திரும்பினாள் ராசாத்தி அக்கா.

மாணிக்கம் செட்டியார் கடையில், சரக்கு வண்டி ஓட்டிக் கொண்டிருந்த காலத்தில், பசி வேளையில், எண்ணிப் பார்க்காமல் வாங்கி வந்த சம்பளப் பணத்தை, தன் தாயாரிடம் கொடுத்த தந்தை, உணவருந்த அவசரப்பட்டதும், பணத்தை எண்ணிப் பார்த்த தாயார், சம்பளத்தில், பத்து ரூபாய் அதிகமாக இருப்பதற்கு காரணம் கேட்க, பதற்றத்தோடு, கூடுதலாக இருந்த பத்து ரூபாயை, கடைக்குச் சென்று, திருப்பிக் கொடுத்து விட்டு வந்த பிறகே, உணவருந்திய தன், படிப்பறிவற்ற தந்தையை, ராசாத்தி அக்காவால், நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

பேரனை, மடியில் போட்டு கொஞ்சிக் கொண்டி ருந்தார் நடராஜன். ""நீ இங்கிலீசு படிக்கோணும்; இன்ஜினியராகணும்; உனக்கு அறிவு பெருகணும். அரசு உத்தியோகம் பார்க்கணும்,'' என, இறைவனிடம் பிரார்த் திருப்பது போலவே, பேரனிடம் பேசிக் கொண்டிருந்தார்.

""அறிவு கெட்டத்தனமா உளறிக்கிட்டு இருக்காம, போய் தூங்கற வேலையை பாருங்க. அவன் டாக்டரும் ஆக வேண்டாம்; இன்ஜினிய ரும் ஆக வேண்டாம். கவர்ன் மென்ட் வேலை பார்க்காத வனெல்லாம் கஞ்சியில்லா மலா சாகறான்? மொதல்ல, பேரனை மனுஷனா ஆக்கப் பாருங்க. மத்ததெல்லாம் அப்புறம் பார்க்கலாம். அவனுக்கு தூக்கம் வர்றதுக்குள்ளே அரிச்சந்திரன் கதை, அர்ச்சுனன் கதை, ராமன் கதை, தர்மன் கதையெல்லாம் சொல்லிக் கொடுங்க. நானும், சின்ன வயசில கேட்ட மருதுபாண்டி, கட்டபொம்மன், கண்ணகி கதையெல்லாம் சொல்லி வைக்குறேன். வாடா இங்கே!'' என, வாஞ்சையோடு இழுத்தணைத்த பாட்டியை, புதிராய் பார்த்தான் விக்னேஷ்.

வேர்களை பழுதாக்கி விட்டு, கிளைகளை அலங்கரித்துக் கொண்டிருக்கும் வேடிக்கையான சமூகத்தில், விழுதுகளையாவது, பலப்படுத்த நினைக்கும் பாட்டியின் வேதனை, அவனுக்கு புரியாமல் போனதில், ஆச்சரியமில்லை.

nandri - varamalar புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 28, 2013 10:58 pm

வேர்களை பழுதாக்கி விட்டு, கிளைகளை அலங்கரித்துக் கொண்டிருக்கும் வேடிக்கையான சமூகத்தில், விழுதுகளையாவது, பலப்படுத்த நினைக்கும் பாட்டியின் வேதனை, அவனுக்கு புரியாமல் போனதில், ஆச்சரியமில்லை. wrote:
உண்மையில் இன்றைய நிலையை அப்பட்டமாக படம் பிடித்து காட்டியது போல இருந்தது. சூப்பருங்க 

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Tue Oct 29, 2013 12:49 pm

வேர்களை பழுதாக விட்டால் மரத்திற்கே ஆபத்து... இது தெரிந்தும் வரும் பொது பார்க்கலாம் என்ற குருட்டு தைரியம் நம்மிடையே பரவலாக காணப்படுகிறது... அதன் விளைவுகள் கூட நினைத்து பார்க்க முடியாத அளவு வேதனையாக உள்ளது...



அன்புடன் அமிர்தா

வேர்கள்! Aவேர்கள்! Mவேர்கள்! Iவேர்கள்! Rவேர்கள்! Tவேர்கள்! Hவேர்கள்! A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக