Latest topics
» மலர்களின் மருத்துவ குணங்கள்by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்
+2
ayyasamy ram
சிவா
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்
First topic message reminder :
பாட்னா: பீகாரில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியின் பிரசார கூட்டம் துவங்குவதற்கு, சில நிமிடங்களுக்கு முன், பாட்னா ரயில்வே ஸ்டேஷன், கூட்டம் நடந்த மைதானம் உட்பட, ஆறு இடங்களில், அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில், அப்பாவிகள் ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதற்கான சதி குறித்து விசாரிப்பதற்காக, தேசிய புலனாய்வு அமைப்பு, சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது.
பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்கு, பா.ஜ.,வுக்கு ஆதரவாக, நாட்டின் முக்கிய நகரங்களில், அவர் பிரசாரம் செய்து வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம், ஏராளமான கூட்டம் கூடுகிறது. இளைஞர்கள், அதிக அளவில் திரளுகின்றனர். இந்நிலையில், பீகார் மாநிலம், பாட்னாவில், நரேந்திர மோடி பங்கேற்கும் பிரசார கூட்டத்துக்கு, அந்த மாநில பா.ஜ.,வினர், பிரமாண்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர். சிறப்பு ரயில், சிறப்பு பஸ்கள் மூலமாக, பீகாரின் பல பகுதிகளிலிருந்தும், ஆயிரக்கணக்கான பா.ஜ.,வினர், கூட்டம் நடந்த, பாட்னா, காந்தி மைதானத்தில், நேற்று அதிகாலையிலேயே குவிந்தனர். இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்பதற்காக, நரேந்திர மோடி, காலை, 10:00 மணிக்கு, பாட்னா வந்து சேர்ந்தார். அடுத்த சில நிமிடங்களில், பாட்னா ரயில்வே ஸ்டேஷனில் உள்ள கழிப்பறையில், பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
பரபரப்பு :அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். இதில், ஒருவர், பரிதாபமாக உயிரிழந்தார்.பொதுக் கூட்டம் நடக்கும், காந்தி மைதானத்திலிருந்து, ரயில்வே ஸ்டேஷன், இரண்டு கி.மீ., தூரத்தில் தான் உள்ளது. இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அடுத்த, 10 நிமிடங்களுக்குள், காந்தி மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில், தொடர்ச்சியாக, ஐந்து குண்டுகள், அடுத்தடுத்து வெடித்தன. கூட்டம் நடந்த மைதானத்திலும், குண்டு வெடித்ததால் ஏற்பட்ட புகை மூட்டம் காணப்பட்டது. இதனால், அங்கு திரண்டிருந்தவர்களிடையே, பீதி ஏற்பட்டது. இந்த குண்டுவெடிப்புகளில், மொத்தம், ஆறு பேர் பலியாகினர்; 60க்கும் மேற்பட்டோர், படுகாயமடைந்தனர். இவர்கள், அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இடையூறு இல்லை:ரயில்வே ஸ்டேஷன் மற்றும் கூட்டம் நடக்கவிருந்த மைதானம் ஆகிய இடங்களில், வெடிக்காத நிலையில், மேலும் சில குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, செயல் இழக்கச் செய்யப்பட்டன. கூட்டம் நடந்த இடத்தில், பரபரப்பும், பீதியும் ஏற்பட்டாலும், நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள், கூட்ட மேடைக்கு வந்த பின், அங்கு அமைதி ஏற்பட்டது. பிரசார கூட்டமும், எந்தவித இடையூறுமின்றி, தொடர்ந்து நடந்தது. பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சனம் செய்தார்.குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், இது தொடர்பாக, முதல்வர் நிதிஷ் குமாரை தொடர்பு கொண்டு பேசினார். விரைவாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று, நிதிஷ் குமாரிடம், பிரதமர் வலியுறுத்தினார்.
நான்கு பேர் கைது:மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் கூறுகையில், ""குண்டுவெடிப்பு தொடர்பாக, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. வெடித்த குண்டுகள் அனைத்துமே, குறைந்த திறனுடையவை. இதனால், பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை,'' என்றார். இதற்கிடையே, மோடியின் கூட்டம் முடிவடைந்ததற்கு பின், நேற்று மாலையும், பாட்னாவில், ஒரு இடத்தில் குண்டு வெடித்ததால், பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.நரேந்திர மோடி பங்கேற்ற கூட்டத்தில், குண்டுகள் வெடித்தது, பா.ஜ.,வினரிடையேயும், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குண்டுவெடிப்புக்கானசதித் திட்டம் குறித்து விசாரிப்பதற்காக, தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.,வைச் சேர்ந்த அதிகாரிகள், பாட்னா விரைந்துள்ளனர். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்., தலைவர் சோனியா உள்ளிட்டோர், குண்டு வெடிப்புக்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நிதிஷ் கூட்டம் ரத்து:பீகார் முதல்வர் நிதிஷ் குமார், முங்கர் என்ற இடத்தில் நடக்கவிருந்த பொதுக் கூட்டத்துக்கு கிளம்புவதற்கு, தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது, குண்டுவெடிப்பு குறித்த செய்தி, அவருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த கூட்டத்தை ரத்து செய்தார். உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், குண்டுவெடிப்பில் பலியானோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
என்.ஐ.ஏ., விசாரணை:குண்டுவெடிப்பு குறித்து விசாரிப்பதற்கு, தேசிய புலனாய்வு அமைப்பின் உதவியை, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நாடினார். இதையடுத்து, தேசிய புலனாய்வு அமைப்பினர், பாட்னாவுக்கு விரைந்தனர். அவர்களுடன், தேசிய பாதுகாப்பு படை வீரர்களும், விரைந்துள்ளனர். இவர்கள், குண்டுகள் வெடித்த இடத்தில், முக்கிய தடயங்களை சேகரிப்பதுடன், விசாரணையையும், மேற்கொள்ளவுள்ளனர். குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்களிடமும், தேசிய புலனாய்வு அமைப்பினர், விசாரணை நடத்தவுள்ளனர்.

Re: பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி
பிகாரில் பங்கேற்ற கூட்டத்தில் நடைபெற்ற
குண்டுவெடிப்பு சம்பவத்தைக் கண்டித்து
திங்கள்கிழமை (அக்.28) மற்றும்
செவ்வாய்க்கிழமை (அக்.29) ஆகிய இரு
நாள்களில் தமிழகம் முழுவதும் கண்டன
போராட்டம் நடைபெறும் என்று அக்
கட்சியின் மாநிலத் தலைவர்
பொன்.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
-
பிகாரில் பங்கேற்ற கூட்டத்தில் நடைபெற்ற
குண்டுவெடிப்பு சம்பவத்தைக் கண்டித்து
திங்கள்கிழமை (அக்.28) மற்றும்
செவ்வாய்க்கிழமை (அக்.29) ஆகிய இரு
நாள்களில் தமிழகம் முழுவதும் கண்டன
போராட்டம் நடைபெறும் என்று அக்
கட்சியின் மாநிலத் தலைவர்
பொன்.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
-
Re: பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்
அரசியல் என்றாலே மக்களை பலி வாங்கித்தான் விளம்பரம் என்பது
இப்போது தொடர்கதையாகிவிட்டது.
இப்போது தொடர்கதையாகிவிட்டது.
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Re: பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்
குண்டு வெடித்தும் தைரியமா மேடை ஏறி பேசி இருக்கார்!!!
மேடையில் குண்டு இல்லைன்னு அவருக்கு எப்படி தெரியும்?

amirmaran- இளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
Re: பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்
மக்கள் என்பவன் தான் உழைத்தால் தான் தன் குடும்பம் பிழைக்கும் எனத் தெரிந்திருந்தும், ஏன் கேடுகெட்ட அரசியல்வாதிகளின் பின்னால் ஒடுகிறான்! இப்படிக் கொல்லாமல் ஒட்டு மொத்த கூட்டத்திற்கு வந்தவர்களையும் கொன்றிருந்தால் அடுத்து யாரும் பொதுக்கூட்டங்களின் பக்கமே செல்லமாட்டார்கள்!vishwajee wrote:அரசியல் என்றாலே மக்களை பலி வாங்கித்தான் விளம்பரம் என்பது
இப்போது தொடர்கதையாகிவிட்டது.
Re: பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்
எத்தனை படத்தில் பார்த்திருக்கிறோம், அதுபோல் இவர்களே குண்டு வைத்திருந்தால்?amirmaran wrote:குண்டு வெடித்தும் தைரியமா மேடை ஏறி பேசி இருக்கார்!!!
மேடையில் குண்டு இல்லைன்னு அவருக்கு எப்படி தெரியும்?
Re: பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்
அன்சாரி எழுதி வைத்திருந்த செல்போன் நம்பர்கள் துப்பு துலக்க உதவியது: சதி திட்டம் முழுமையாக கண்டுபிடிப்பு!
மோடி கூட்டத்தில் குண்டு வெடிப்பை நடத்திய தீவிரவாதிகளில் ஒரு தீவிரவாதியின் கவனக்குறைவே நேற்று பீகார் போலீசாருக்கு பெரும் அதிர்ஷ்டமாக அமைந்தது.
ரெயில் நிலையத்தில் குண்டு வைக்கும் பொறுப்பு இம்தியாஸ் அன்சாரி என்பவனிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. அவன் மொத்தம் 3 குண்டுகளை எடுத்து வந்திருந்தான்.
குண்டு வைக்க செல்லும்போது யாரும் செல்போனை எடுத்துச் செல்லக்கூடாது என்று இந்தியன் முஜாகிதீன் மூத்த தலைவர்கள் உத்தரவிட்டிருந்தனர். இதனால் அன்சாரி தன் கூட்டாளிகள் சுமார் 12 பேர் பெயரையும் அவர்களது செல்போன் நம்பர்களையும் ஒரு தாளில் எழுதி மடித்து தன் சட்டை பைக்குள் வைத்திருந்தான்.
அவன் 2 குண்டுகளை வைத்துவிட்டு 3–வது குண்டை வைப்பதற்காக ரெயில் நிலையத்தின் மற்றொரு பகுதிக்கு சென்று கொண்டிருந்தான். அதற்குள் முதல் குண்டு வெடித்துவிட்டதால் ரெயில் நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டு, பயணிகள் நாலாபுறமும் சிதறி ஓட தொடங்கினார்கள்.
உடனடியாக போலீசார் ரெயில் நிலையத்தை சுற்றி வளைத்தனர். இதனால் கையில் 3–வது குண்டை வைத்திருந்த அன்சாரிக்கு அடுத்து என்ன செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டது. போலீசாரிடம் இருந்து தப்பிக்க ஓடினான்.
ஆனால் போலீசார் அவனை சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவனிடம் வெடிகுண்டு இருப்பதை கண்டுபிடித்த போலீசார் அவனை முழுமையாக சோதனையிட்டனர்.
அவன் எழுதி வைத்திருந்த அவனது கூட்டாளிகளின் பெயர், செல்போன் விவரம் அடங்கிய தாளை போலீசார் எடுத்தனர். இதுதான் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளின் சதி திட்டத்தை முழுமையாக அம்பலப்படுத்தவும், துப்பு துலக்கவும் பெரிதும் கை கொடுத்தது.
முக்கியமாக குண்டு வெடிப்பை திட்டமிட்டு நடத்தியது முகம்மது தெக்சீன் அக்தர் என்ற தீவிரவாதி என்பது தெரிய வந்துள்ளது. இவன் 2011–ம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டு வெடிப்பிலும், இந்த ஆண்டு ஐதராபாத்தில் நடந்த குண்டு வெடிப்பிலும் தொடர்புடையவன்.
இவன் இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தை தோற்று வித்த யாசீன் பத்கலின் வலதுகரமாக திகழ்ந்தவன் ஆவான். இப்போது இவன்தான் இந்தியன் முஜாகிதீன் இயக்கத்துக்கு தலைமையேற்று நடத்தி வருகிறான்.
கடந்த ஆகஸ்டு மாதம் பத்கல் போலீசாரிடம் பிடிபட்டான். அதற்கு பழிக்கு பழி வாங்கவே அக்தர் இந்த குண்டு வெடிப்பை நடத்தியதாக தெரிகிறது.
அக்தர் பாட்னாவில் பதுங்கி இருப்பதாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். அக்தருக்கு மேஈனு என்றும் ஒரு பெயர் உண்டு. இவன் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவன்.
அவன் உள்பட 12 முக்கிய தீவிரவாதிகளின் செல்போன் நம்பர்கள் அன்சாரி மூலம் கிடைத்திருப்பதால் அதை வைத்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. 12 தீவிரவாதிகளும் கடந்த ஒரு வாரத்தில் யார்– யாருடன் பேசி இருக்கிறார்கள் என்ற விபரம் சேகரிக்கப்பட்டு போலீசார் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே பாட்னா குண்டுவெடிப்பு தொடர்பான முழு தகவல்களும் ஓரிரு நாட்களில் வெட்ட வெளிச்சமாக வாய்ப்புள்ளது.
malaimalar

டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Re: பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்
இந்த தீவிரவாதிகளை சிறையில் அடைக்க கூடாது.மாறாக பாகிஸ்தானிலோ,ஆப்கானிஸ்தனிலோ வசிக்கும்படி செய்ய வேண்டும்.அப்போதுதான் இந்தியாவின் அருமை புரியும்.
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Re: பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்
இது சரியான தண்டனையாக இருக்கும் செய்வார்களா?டார்வின் wrote:இந்த தீவிரவாதிகளை சிறையில் அடைக்க கூடாது.மாறாக பாகிஸ்தானிலோ,ஆப்கானிஸ்தனிலோ வசிக்கும்படி செய்ய வேண்டும்.அப்போதுதான் இந்தியாவின் அருமை புரியும்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்
» டெல்லி உயர்நீதிமன்ற வாயிலில் குண்டுவெடிப்பு-5 பேர் பலி? 28 பேர் காயம்
» இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி
» ஐ.நா., கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார்
» சர்ச்சை விளம்பரத்தை பீகார் செய்தித்தாள்களில் வெளியிட்டார் மோடி - மோதல் முற்றுகிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum