புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ச்செல்வம் எங்கள் தமிழீழச் செல்வம் Poll_c10தமிழ்ச்செல்வம் எங்கள் தமிழீழச் செல்வம் Poll_m10தமிழ்ச்செல்வம் எங்கள் தமிழீழச் செல்வம் Poll_c10 
366 Posts - 49%
heezulia
தமிழ்ச்செல்வம் எங்கள் தமிழீழச் செல்வம் Poll_c10தமிழ்ச்செல்வம் எங்கள் தமிழீழச் செல்வம் Poll_m10தமிழ்ச்செல்வம் எங்கள் தமிழீழச் செல்வம் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
தமிழ்ச்செல்வம் எங்கள் தமிழீழச் செல்வம் Poll_c10தமிழ்ச்செல்வம் எங்கள் தமிழீழச் செல்வம் Poll_m10தமிழ்ச்செல்வம் எங்கள் தமிழீழச் செல்வம் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழ்ச்செல்வம் எங்கள் தமிழீழச் செல்வம் Poll_c10தமிழ்ச்செல்வம் எங்கள் தமிழீழச் செல்வம் Poll_m10தமிழ்ச்செல்வம் எங்கள் தமிழீழச் செல்வம் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ்ச்செல்வம் எங்கள் தமிழீழச் செல்வம் Poll_c10தமிழ்ச்செல்வம் எங்கள் தமிழீழச் செல்வம் Poll_m10தமிழ்ச்செல்வம் எங்கள் தமிழீழச் செல்வம் Poll_c10 
25 Posts - 3%
prajai
தமிழ்ச்செல்வம் எங்கள் தமிழீழச் செல்வம் Poll_c10தமிழ்ச்செல்வம் எங்கள் தமிழீழச் செல்வம் Poll_m10தமிழ்ச்செல்வம் எங்கள் தமிழீழச் செல்வம் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
தமிழ்ச்செல்வம் எங்கள் தமிழீழச் செல்வம் Poll_c10தமிழ்ச்செல்வம் எங்கள் தமிழீழச் செல்வம் Poll_m10தமிழ்ச்செல்வம் எங்கள் தமிழீழச் செல்வம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தமிழ்ச்செல்வம் எங்கள் தமிழீழச் செல்வம் Poll_c10தமிழ்ச்செல்வம் எங்கள் தமிழீழச் செல்வம் Poll_m10தமிழ்ச்செல்வம் எங்கள் தமிழீழச் செல்வம் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தமிழ்ச்செல்வம் எங்கள் தமிழீழச் செல்வம் Poll_c10தமிழ்ச்செல்வம் எங்கள் தமிழீழச் செல்வம் Poll_m10தமிழ்ச்செல்வம் எங்கள் தமிழீழச் செல்வம் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தமிழ்ச்செல்வம் எங்கள் தமிழீழச் செல்வம் Poll_c10தமிழ்ச்செல்வம் எங்கள் தமிழீழச் செல்வம் Poll_m10தமிழ்ச்செல்வம் எங்கள் தமிழீழச் செல்வம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ச்செல்வம் எங்கள் தமிழீழச் செல்வம்


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Thu Oct 29, 2009 7:52 pm

எமது அண்ணாவுக்கு வீரவணக்கம்.


02-11-2009
2ம் ஆண்டு நினனவலைகள்

தமிழ்ச்செல்வம் எங்கள் தமிழீழச் செல்வம் Pri_tamilselvan


கரும்புலிகளின் “எல்லாளன் நடவடிக்கை” வெற்றிக்களிப்பில் இருந்த எமக்கு 02.11.2007 அன்று விடியக்காலை தலையில் பேரிடி விழுந்தது. “தமிழ்ச்செல்வனின் இடத்துக்கு அடிச் சிட்டானாம்”என்ற காற்று வழிச்செய்தி கேட்டு பறந்தோடிப் போன எமக்கு தோழர்களுடன் சேர்ந்து தன் மூச்சையெல்லாம் எம்மிடம் தந்துவிட்டு விடுதலை மூச்சாகிப்போன எம் தமிழ்ச்செல்வத்தைத்தான் கண்டோம். “நீ வீரச்சாவு அடைஞ்சா அக்கா உன்னைப் பற்றி எழுத நிறைய வைச்சிருக்கன்” என்று சிரிப்புடன் கூறிய தம்பியைப்பற்றி எழுத வந்திட்டுதே என்று நினைக்கவே இதயம் கனக்குது.


அவன் உயிருடன் இல்லை என்பதனை இன்று கூட எம் மனசு ஏற்குதில்லை ஒரு போராளி கூறியது போல அவன் எம்மைவிட்டுப் பிரிந்து விட்டான் என்பது எவ்வளவு உண்மையோ அதே போல அவன் (உயிர்) எம்மைவிட்டு பிரிய வில்லை என்பதும் அதேயளவு உண்மை தான். என் ஆழ்மனசில பதித்த அவன் சார்ந்த விடையங்களை எழுதுவம் என்றால் எங்கிருந்து தொடங்குவது? ஆரம்ப நாட்களில் இருந்தா? என மனசு போராட, என் விழியை நிமிர்த்திப் பார்த்தால் முன்னால் நின்று சிரிக்கின்றான் (படத்தில்)





”அக்கா இந்திய இராணுவ காலத்துச் சம்பவங்களை எழுதிவை, வரலாற்றுக்கு உதவும்” என்று அன்புக்கட்டளையிட்டவனுக்கு எழுதவேண்டி வந்திட்டுதே என மனசு குமுறுகிறது. என்றாலும் எழுதவேண்டும் என்ற ஓர் உந்தல் இதோ என் மனதில் பதிந்த அவன் பற்றிய நினைவுகள். 1986ஆம் ஆண்டு வல்வை மருத்துவமனைக் கடமையில் இருந்து ஒரு நாள் காலை லெப்.கேணல் டேவிற்றுடன் ஓர் பையன் 18-19வயது தான் இருக்கும் தலைநிறைய முடியும் முகம் நிறைய சிரிப்புமாக என் முன்னால் நின்று “வணக்கம் டொக்ரர் அக்கா” என்றான். “ஆள் தினேஸ் தென்மராட்சியில் இருந்து வாரார் உங்களைப்பார்க்க வேணும் என்றார் அதுதான் கூட்டிற்று வந்த னான்”; என்றான் டேவிற்.


அந்த முதல் சந்திப்பிலேயே தன் பாசவலைக்குள் என்னை இழுத்துவிட்டான் அந்த குட்டித்தம்பி தினேஸ் அன்றில் இருந்து தன் இறுதி மூச்சு வரை வற்றாத பாசத்துடன் என்னுடன் பழகிய உயிர்தான் அந்த பாசச் செல்வம். 1987ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கி விட்டபின் வடமராட்சி கைப்பற்றவென “லிபரே சன் ஒப்பிரேசன்” போர் தொடர, இராணுவம் நகர, வல்வை மருத்துவமனையில் இருந்து நகர்ந்த நான் மந்திகை, முள்ளியூடாக கொடிகாமம் வந்து இறங்க, பேருந்து தரிப்பில் நின்ற யோகி அண்ணா என்னைக் கூட்டிப்போய் ஒப்படைத்தது தினேசிடம் தான்; பொறுப்பேற்ற என்னை பத்திரமாக இருக்க ஒழுங்கு செய்து மருத்துவ சேவை செய்ய வசதி பண்ணி தந்தது மட்டுமல்லாமல் எங்கள் தேசியத்தலைவரையும் சந்திக்கும் பாக்கியத்தையும் ஏற்படுத்தித் தந்து வாழ்வில் மகிழ்வின் எல்லைக்கு என்னைக் கொண்டு சென்றவனும் அந்தப் பொறுப்புச் செல்வம் தான்.


1987ஆம் ஆண்டு இறுதிப்பகுதி இந்திய ஆக்கிரமிப்புக்காலம் எனக்கு ஆபத்து என அறிந்து தென்மராட்சியில் இருந்து இராணுவ வேலிகளை ஊடறுத்து முள்ளி வெளியூடாக வந்தபோது இராணுவத்தினரை எதிர்கொண்டு மோதி ஓட்டி வந்த ஈருருளியையும் பறிகொடுத்து நடைப்பயணமாக வந்து என் இருப்பினை கண்டவுடன் முட்கீறிய காயங்கள்;, கிழிந்த சாறம், கலைந்த கேசம், சவரம் செய்யாத முகம் எல்லாம் ஒன்று சேர, கண்ணில் நிறைந்த நீருடன் சிரித்த சிரிப்பில் அன்புச்செல்வத்தைக் கண்டேன். 1988-1989ஆம் ஆண்டு காலப்பகுதியில் நோய்வாய்ப்பட்ட, காயமுற்ற தன் தோழர்களை சிகிச்சைக்காக வடமராட்சிக்கு அனுப்பிவிட்டு அவர்களின் உடல் உள நிலைபற்றி நேரில் வந்து விசரிக்கும் தருணங்களிலும், பின்னாளில் நவமறிவுக்கூடம், சிறீமுகாம், மயூரிமுகாம், போராளிகளிடமும் சென்று அவர்களின் உடல் நலம் பற்றி விசரிக்கின்ற போதிலும் இனியவாழ்வு இல்லம், அன்புச்சோலை மூதாளர் பேணலகம் போன்ற இடங்களிற்கு விசேடதினங்களில் சென்று அன்பினைப் பரிமாறுகின்ற போதிலும் அக்கறைச் செல்வத்தைக்கண்டேன்.


இந்திய இராணுவத்தினருடன் சமர் நடக்கையில் “உங்கட தம்பியவே மலைக்கு முட்டை எறிகினம் இருந்து பாருங்க என்ன நடக்கும்” என்று கூறியவர்களுக்கு முன்னால் தலைவரின் ஆசியுடன் ஆலோசனைகளையும் பெற்று வீறு நடைபோட்டு சளைக்காது போராடிவென்ற போதும் யாழ்.மாவட்ட தளபதியானவுடன் மருத்துவப் பிரிவினைப் பொறுப்பெடுத்து அதன் விரிவாக்கத்துக்காக மருத்துவப் போராளிகளை வளர்ப்பதிலும் மருத்துவர்களை உள் வாங்குவதிலும் காட்டிய தீவிரம் இடைவிடாது குட்டிக் குட்டித் தாக்குதல்களை சளைக்காது எதிரிக்கு கொடுப்பதில் காட்டிய வீரம் என்பனவும் அவனை ஓர் உறுதிச் செல்வமாக எடுத்துக்காட்டியது.


ஆனையிறவு பெரும்போரில் (1991ஆம் ஆண்டு) நெஞ்சில் பாரிய விழுப்புண் ஏற்றபோதும், யாழ்தேவி சமரில் மூக்கில் செல்துண்டு செருகி நின்றபோதும் அதன் பின்பு தவளைத் தாக்குதலின் போது உடலில் இருபத்தியாறு காயங்கள் பெற்ற வேளையிலும் கூட, முகத்தில் வேதனையோ அன்றி அழுகையோ வெளிப்படாது புன்முறுவல் தென்பட அங்கு அதிசய செல்வத்தைக்கண்டேன். தவளைத்தாக்குதலில் விழுப்புண் ஏற்று அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் குற்றுயிராகக் கிடந்து துடித்தபோது அண்ணனின் அன்புக் கடிதம் “என் செல்லத்தம்பிக்கு” என விழித்துத் தொடங்கி தொடர அதைத் திரும்பத்திரும்ப வாசித்து உடல் உளம் புத்துயிர் பெற்றதினை அருகில் இருந்து பார்த்த எமக்கு அங்கு நம்பிக்கை செல்வம் தெரிந்தான்.


“உங்கட தம்பிக்கு சில சமயம் இனி நடை சாத்தியப்படாது சக்கர நாற்காலிதான் தஞ்சம்” என்ற மருத்துவ அறிஞரின் கூற்றை பொய்யாக்கி மாதக்கணக்கில் பயிற்சி எடுத்து தன் அன்பு (கப்டன் முகிலன்); “முய்யா”வின் உதவியுடன் அங்குலம் அங்குலமாக படிப்படியாக முன்னேறி ஒரு தடியில் வீறு நடைபோட்டபோதும் எமது போராட்டத்தின் நியாயப்பாட்டினை சர்வதேசத்திற்கு எடுத்துச் சொல்லவதற்காக பல சுற்றுப்பேச்சுக்களுக்கு ஏறி இறங்கிப் பறந்த போதும் நாம் அங்கு விடாமுயற்சிச் செல்வத்தைக்கண்டோம். பாலா அன்ரியின் மழலைத் தமிழை ரசிப்பான், அவ சமைத்துக் கொடுத்த மீன் சொதியையும் ருசிப்பான், அம்மாவின் கீரைக்கறிக்கும் பால் கத்தரிக் காய்க்கறிக்கும் சப்புக் கொட்டுவான் நாம் ஏசினாலும் சிரிப்பான் பகிடிவிட்டால் கெக்கட்டம் போட்டுச் சிரிப்பான் அதிலும் பாலா அங்கிள் சும்மா கதைச்சாலே கண்ணில் நீர் வரச் சிரிப்பான் இக் கணங்களில் எல்லாம் அவனை பிள்ளைச் செல்வமாக பார்த்தோம்.


1995ஆம் ஆண்டு யாழ்.இடப்பெயர்வின் பின்பு சாவகச்சேரியில் இரவு பகலாக சூறாவளியென சுழன்று மக்களுக்கும் போராளிகளிற்கும் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்ததுடன் காயமடைந்த போராளிகளிற்குரிய மருத்துவ சிகிச்சை ஒழுங்குகளையும் செய்து தந்ததோடு மட்டுமல்லாமல் வன்னிக்கு வந்தபின்னர் மக்களுக்கும் புலிகளுக்குமான மருத்துவ தேவையை பூர்த்தி செய்வதற்காக தலைவரின் ஆலோசனையைச் சுமந்து கொண்டு இராணுவ மருத்துவமனைகளையும், திலீபன் மருத்துவ மனைகளையும் அமைத்து காயமடைந்தவர்களுக்கும் உரிய சிகிச்சையை மேற்கொள்ள தகுந்த வழி சமைத்தவன் எங்கள் திறமைச் செல்வம்தான்.


தன் நிர்வாகத்துக்குக் கீழ் உள்ள போராளிகளை அணுகும் விதத்திலும், மாறாத புன்னகையுடனும், உரிமையுடன் நெருங்கும் விதத்திலும் சேர்ந்திருந்து கூழ் குடிக்கும் கணங்களிலும் தோழமைச் செல்வத்தைக் கண்டோம். ஏனக்கோர் அன்புத் துணையை தேர்ந்தெடுத்த செய்தியை முதன் முதல் எமக்குக் கூறி சேர்ந்து ஆனந்தப்பட்ட பொழுதிலும் பின் திருமண மேடையில் எம் பெரும் தலைவன் அன்புக்கட்டளைக்கு இணங்க அன்புத் தம்பியாக திருமணத் தோழனாக என் தாயின் அருகில் இருந்து எம்மை மனம் நிறைந்த புன்னகையுடன் வாழ்த்திய போதிலும் எடுத்ததிற் கெல்லாம் ரேகாவை அழைக்கும் தருணங்களிலும் அவன் உரிமைச் செல்வமாக மிளிர்ந்தான்.


பாசத்தலைவனின் ஆசியுடன் நடந்தேறிய அவன் திருமணபந்தத்தின் பின்பு வீட்டிற்கு வர நாம் மலர் தூவி வரவேற்க துணையுடன் சேர்ந்து நின்று சிரித்த சிரிப்பிலும் பின் நாளின் ஒளி, அலை, இசையுடன் புன்னகையையும் சேர்த்து உலாவரும் போதிலும் ஒளிச் செல்வத் தைக்கண்டோம். “என்ன விசர் கதை கதைக்கிறாய்”, “வாரும் ஐசே உமக்கு இண்டைக்கு இருக்கு” “நீர் பார்த்த வேலையப்பா இது” என ஏசும் செல்லக்கண்டிப்பில் இருந்து ஆள்சேர்ப்பு ஒன்று கூடலில் பட்டென வந்து போகும் பெரும் கோபம் வரை கண்டிப்புச் செல்வத்தைக் கண்டோம். பேச்சுவார்த்தை மேசையிலே தேசத்தின் குரல் பாலா அண்ணையுடன் சேர்ந்திருந்து தலைவர் சொல்லித்தந்த பாடங்களை வைத்தே எதிர்த்தரப்பினை திக்கு முக்காட வைத்த சம்பவங்களை நகைச்சுவையுடன், எம்மை ஒன்று கூட்டி வைத்து சொல்கையில் குதூகலச் செல்வத்தைக் கண்டோம்.


“வீட்டுக்கொருவர் நாட்டைக்காக்க” என்பதற்கு இணங்க மேற்கொண்ட ஆள் சேர்ப்பின் போது இடையில் வந்த நெருக்கடிகள், இடை யூறுகள், அத்தனையையும் தாண்டி உறுதிதளராது பணியில் வெற்றி பெற்று விடுதலைக்கு பலம் சேர்த்த போதிலும் அரசியல் கட்டமைப்பினை காலத்துக் கேற்ப கோட்டம், வட்டம் என நிர்வாகங்களையும், ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து பணியாற்ற திட்டம் போட்டபோதும் வெற்றிச் செல்வத்தைக் கண்டோம். சின்னத்தங்கச்சி நிற்கிறாளா என உரிமையுடன் கூப்பிட்டு கீர்த்திகாவுடன் (ஜெயசிக்குறு சமரில் கப்டன் கீர்த்திகா ஆகிவீட்டாள்) செல்லச் சண்டை பிடிக்கும் போதிலும் அவளின் ஆற்றல் திறனைக்கண்டு கொண்டு, ராயூ மாஸ்ரரின் சிறுத்தைப் படையணிக்கு அவளை மருத்துவப் போராளியாக அனுப்ப என்னிடம் அக்கறையுடன் கேட்டு எடுத்த கணத்திலும், எல்லாவற்றிற்கும் மேலாக பெண்போராளிகளை பாசமாக “பிள்ளையள்” என விழிக்கும் போதும், ஒன்று கூடல்களில் பிள்ளைகளை விட்டுக் கொடுக்காமல் கதைக்கும் தருணங்களிலும், பிள்ளைகள் வெற்றி படைக்கும் வேளையில் அவர்களைக் கூப்பிட்டு “திறமையான வேலை” என வாய் நிறை சிரிப்புடனும் மனம் நிறைந்த மகிழ்வுடனும் பாராட்டும் வேளையிலும் சகோதர செல்வத்தைக் கண்டோம்.


எப்போதும் தலைவரின் அருகில் இருந்து அவரது ஆற்றல் திறன் வெளிப்பாடுகளை உள்வாங்கி படிப்படியாக வளர்த்ததோடு மட்டுமல்லாது தனது அனுபவப் பகிர்வுகளை போராளிகள் மத்தியில் கொண்டு செல்லும் போது அண்ணை சொன்னவர் இது அண்ணையின் எதிர்பார்ப்பு இது தலைவரின் சிந்தனையின் வெளிப்பாடு என அடிக்கொரு தடவை அண்ணை அண்ணை என கதைக்கும் போது அதில் நாம் அண்ணனின் தம்பிச் செல்வத்தைக்கண்டோம். புலம்பெயர் மக்கள் கடும்பனியிலும், குளிரிலும் இரவு பகல் நேரம் பார்க்காது விடுதலைக்கு உரம் சேர்ப்பதனை கண்டு வந்து எம்மிடம் கூறும் தருணங்களில் பெருமிதச் செல்வத்தைக்கண்டோம். ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விடுதலைக்கு வித்தாகி போகின்ற தருனங்களிலும். விடுதலைக்கு உரம் சேர்ப்பதற்காக உழைக்கின்ற வேளையில் எதிர்பாராத விதமாக எதிரியின் கைகளில் சித்திரைவதைப்படுகின்ற எம் மக்களின் நிலை பற்றி கேள்விப்படும் வேளைகளிலும் அங்கு வேதனைச் செல்வத்தைக்கண்டோம்.


சர்வதேச அரங்கில் புகுந்து எமது அரசியல் தெளிவை உலகிக்கு தெரிவித்ததுடன் எம் அரசியல்துறையின் கீழ் உள்ள அனைத்து நிர்வாகங்களையும் ஒன்று சேர கட்டியெழுப்பி திறம்பட செயற்பட வைத்துக்கொண்டு யாழ்குடாநாட்டை விடுவிக்க பூநகரி சண்டைக் களத்தினையும் பொறுப்பெடுத்து நடாத்திய விடுதலைச் செல்வத்தையும் கண்டோம். மருத்துவர்களின் இறுதிச் சந்திப்பிலும் மூத்த மருத்துவர்கள் செய்த கடமைகளை எடுத்தியம்பி எம் கடமையின் பெறுமதியை இளம் மருத்துவர்களுக்கு எடுத்துரைத்து மேலும் வலுச்சேர்க்க “ஸ்பாட்டன் திறிகண்றட்” படத்தினையும் போட்டுக் காட்டிய போது அங்கு ஆற்றல் செல்வம் தெரிந்தான்.


மருத்துவப்பிரிவினைப்; பொறுப்பெடுத்தவுடன் ரேகா, மனோஜ் ஆகியோருடன் இணைந்து அதனை வளர்ச்சியுடன் கூடிய விரிவாக்கம் செய்வதற்கு மும் மூர்த்திகளாக சேர்ந்து நின்று கள மருத்துவம், தளமருத்துவம் என இரு முனையில் செயற்பட அதில் களமருத்துவ ஒழுங்கினை தன் நேரடிப் பார்வையில் ஒழுங்கு படுத்தியதோடு மட்டு மல்லாது அதே களத்தில் தாக்குதல் தளபதியாகவும் செயற்பட்ட கணங்களில் ஆளுமைச் செல்வம் தெரிந்தான். எம் மண்ணில் யார் என்ன செய்தாலும் சட்டென குறையேதும் சொல்லாது அந்தமாதிரி இருக்கு, அட்டகாசமாக இருக்கு திறமையான வேலை என பாராட்டி மனம் நோகாது பார்க்கும் தருனங்களில் உளவளத்துணைச் செல்வத்தைக்கண்டோம்.


எத்துன்பம் வந்தாலும் ஆழ்மனக் கிடப்பில் போட்டுவிட்டு யார்முன்பு வந்தாலும் எப்போதும் முகம் நிறைந்த சிரிப்புடன் உலாவரும் வேளையில் சர்வதேசத்தையே சுண்டி இழுத்த புன்னகைச் செல்வத்தைக்கண்டோம். நவம்பர் 2ம் நாள் 2007 எதிரியின் குண்டு வீச்சில் விடுதலை மூச்சான செய்தி கேட்டு ஆழ்மனசு கலங்கிய தலைவர், குமுறிய போராளிகள், கதறி அழுத தமிழீழ மக்கள் ஆகியோருடன் தமிழக மக்களும், உலகதமிழினமும். சேர்ந்து துடித்ததைக்கண்டதில் எங்கள் தமிழ்ச் செல்வம் தமிழீழச் செல்வமாகியதையும்; கண்டோம்.















ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Oct 29, 2009 7:56 pm

தமிழ்ச்செல்வம் எங்கள் தமிழீழச் செல்வம் Moz-screenshot-8தமிழ்ச்செல்வம் எங்கள் தமிழீழச் செல்வம் Moz-screenshot-9தமிழ்ச்செல்வம் எங்கள் தமிழீழச் செல்வம் 1234u

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Oct 29, 2009 9:20 pm

தமிழ்ச்செல்வம் எங்கள் தமிழீழச் செல்வம் 678642



தமிழ்ச்செல்வம் எங்கள் தமிழீழச் செல்வம் Skirupairajahblackjh18
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Oct 29, 2009 9:46 pm

நந்திதாவின் வீர வணக்கம்

எங்கள் இதயத்தில் ஏற்றிவைத் தோமுன்னைச்
சிங்கள ரங்குன்னைத் தீண்டுவரோ- தங்கமே
நற்றமிழர் உள்ளளவும் நாவுரைக்கும் நின்பெயரை
மற்றவரை யாமதியோ மே

சிந்தையில் வந்திக்கும் நந்திதா



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக