புதிய பதிவுகள்
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 20:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:29

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:05

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:32

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:55

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:47

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 13:55

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:01

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சர்க்கரை நோய் தீரும்! Poll_c10சர்க்கரை நோய் தீரும்! Poll_m10சர்க்கரை நோய் தீரும்! Poll_c10 
43 Posts - 44%
ayyasamy ram
சர்க்கரை நோய் தீரும்! Poll_c10சர்க்கரை நோய் தீரும்! Poll_m10சர்க்கரை நோய் தீரும்! Poll_c10 
42 Posts - 43%
prajai
சர்க்கரை நோய் தீரும்! Poll_c10சர்க்கரை நோய் தீரும்! Poll_m10சர்க்கரை நோய் தீரும்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
சர்க்கரை நோய் தீரும்! Poll_c10சர்க்கரை நோய் தீரும்! Poll_m10சர்க்கரை நோய் தீரும்! Poll_c10 
3 Posts - 3%
Jenila
சர்க்கரை நோய் தீரும்! Poll_c10சர்க்கரை நோய் தீரும்! Poll_m10சர்க்கரை நோய் தீரும்! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
சர்க்கரை நோய் தீரும்! Poll_c10சர்க்கரை நோய் தீரும்! Poll_m10சர்க்கரை நோய் தீரும்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
சர்க்கரை நோய் தீரும்! Poll_c10சர்க்கரை நோய் தீரும்! Poll_m10சர்க்கரை நோய் தீரும்! Poll_c10 
1 Post - 1%
jairam
சர்க்கரை நோய் தீரும்! Poll_c10சர்க்கரை நோய் தீரும்! Poll_m10சர்க்கரை நோய் தீரும்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சர்க்கரை நோய் தீரும்! Poll_c10சர்க்கரை நோய் தீரும்! Poll_m10சர்க்கரை நோய் தீரும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சர்க்கரை நோய் தீரும்! Poll_c10சர்க்கரை நோய் தீரும்! Poll_m10சர்க்கரை நோய் தீரும்! Poll_c10 
86 Posts - 54%
ayyasamy ram
சர்க்கரை நோய் தீரும்! Poll_c10சர்க்கரை நோய் தீரும்! Poll_m10சர்க்கரை நோய் தீரும்! Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
சர்க்கரை நோய் தீரும்! Poll_c10சர்க்கரை நோய் தீரும்! Poll_m10சர்க்கரை நோய் தீரும்! Poll_c10 
7 Posts - 4%

4 Posts - 3%
Baarushree
சர்க்கரை நோய் தீரும்! Poll_c10சர்க்கரை நோய் தீரும்! Poll_m10சர்க்கரை நோய் தீரும்! Poll_c10 
3 Posts - 2%
Rutu
சர்க்கரை நோய் தீரும்! Poll_c10சர்க்கரை நோய் தீரும்! Poll_m10சர்க்கரை நோய் தீரும்! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சர்க்கரை நோய் தீரும்! Poll_c10சர்க்கரை நோய் தீரும்! Poll_m10சர்க்கரை நோய் தீரும்! Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரை நோய் தீரும்!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri 18 Oct 2013 - 17:38

சர்க்கரை நோய் தீரும்! OnUpq6AiRQq6FU8jDQMY+sugar

கொங்கு நாட்டின் ஒரு பகுதியை வளப்படுத்தும் அமராவதி ஆற்றின் கரையில் 10க்கும் மேற்பட்ட வழிபாட்டு சிறப்புமிக்க சிவாலயங்கள் உள்ளன. அதில் ஒன்று திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டைக்கு  அருகில், மடத்துக்குளம் வட்டத்தில் அமைந்துள்ள கடத்தூர் அர்ச்சுனேசுவரர் திருக்கோயில். உடுமலையிலிருந்து கணியூர் வழியாக பழனி மற்றும் தாராபுரம் செல்லும் சாலையில் சுமார் 23 கி.மீ.  தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. நகரப் பேருந்துகள் இவ்வூருக்கு வந்து செல்கின்றன. பசுமையான வயல்கள், தென்னை மரங்கள், மருத மரங்கள் சூழ அமராவதி ஆற்றின் கரையில் இயற்கை  சூழலில் இக்கோயில் அமைந்துள்ளது.

மருதவன ஈசுவரர்: இத்திருக்கோயிலில் எழுந்தருளும் சுயம்பு வடிவான இறைவனை மருதீசர், மருதுடையார், மருந்தீசர், அர்ச்சுனேசுவரர் எனவும், இறைவியை கோமதி அம்மன் எனவும் போற்றி  வழிபடுகின்றனர்.

திருக்கோயில் அமைப்பு: திருக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அமராவதி ஆறு கோயில் அருகே வளைந்து ஓடுகிறது. அதிகாலையில் சூரிய ஒளி அமராவதி ஆற்று நீரில் பட்டு, சுயம்பு  வடிவான இறைவன் மீது படும் அற்புதக் காட்சி இத்தலத்தின் சிறப்பு. கிழக்கு வாயிலில் மூன்று நிலை கோபுரம் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது.

திருக்கோயில் திருச்சுற்றில் வலம்புரி விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, பைரவர் சந்நிதிகள் அமைந்துள்ளன. வாயிலின் முன்பு பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. சுவாமி சந்நிதியின்  கருவறையின் தெற்கு தேவகோட்டத்தில் வெள்ளை நிற பளிங்குக் கல்லால் ஆன தென்முகக்கடவுள் வடிவம் வழிபடப் பெறுகின்றது. இத்திருமேனி காசியிலிருந்து கொண்டு வரப்பட்டதாகக் கூறுகின்றனர்.

கோமதி அம்மன்: இறைவனது வலது பக்கம் அதாவது தெற்குப் பகுதியில் கிழக்கு நோக்கி இறைவி சந்நிதி அமைந்துள்ளது சிறப்பு. இறைவி உலக உயிர்களைக் காக்கவும், துன்பத்தைப் போக்கவும் மருத  மரத்தின் கீழ் தவமிருந்து அருள் வழங்குகிறாள் என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. சந்நிதி வாயிலின் அருகே அனைவராலும் வணங்கப்படும் புற்று பெரிய அளவில் காணப்படுகிறது.

புராண வரலாறு: பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தின்போது இப்பகுதியில் மறைந்து வாழ்ந்ததாக புராண வரலாறு கூறுகிறது. இத்திருக்கோயில் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாய் விளங்குகிறது. இக்கோயிலில்  காணப்படும் 70க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினர் வெளியிட்டுள்ளனர். கொங்கு சோழர்களான வீர சோழன், வீர நாராயணன்,வீர ராஜேந்திரன், விக்கிரம சோழன்  ஆகியோர் 12-13ஆம் நூற்றாண்டுகளில் இத் திருக்கோயிலுக்கு பெருந்தொண்டு செய்துள்ளனர். சிறப்பான வழிபாட்டிற்காக தானமும் அளித்துள்ளனர்.

இறைவன் "ஆளுடையார் திருமருதுடையார் கோயில் மருதவனப் பெருமாள்'' என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறார். மேலும் இவ்வூர் ""கடற்றூர் ஆன இராசராச நல்லூர்'' என அழைக்கப்படுகிறது.

இறைவனுக்கும், தேவிக்கும், பிள்ளையார், பைரவர் ஆகியோருக்கும் சனிக்கிழமை தோறும் எண்ணெய்க்காப்பு செய்யவும், சந்தியா தீபம் ஏற்றவும் தானம் அளிக்கப்பட்டுள்ளது. கருமுகை போன்ற மலர்  மாலை கொடுக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் கார்த்திகை விழா நடைபெறும்பொழுது அப்பம் அமுது படைக்கவும், தைப்பூசத் திருவிழா நடத்தவும் தானம் அளிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் அருகே  "தண்ணீர் பந்தல்' அமைக்கவும், இத்திருக்கோயிலில் திருவெம்பாவை பாடல்கள் ஓதுவதற்கும் தானம் கொடுக்கப்பட்டுள்ளது. பாடல்களைப் பாடுபவர்களை "திருவெம்பாவைத் திருத்தாள் கூட்டம்' எனக்  கல்வெட்டு குறிப்பிடுகிறது. இக்கோயிலின் தூண், உத்திரம், வாசற்கால், கதவு போன்ற கட்டடப் பகுதிகளை பலர் தானம் அளித்துள்ளனர். பலர் ஒன்றிணைந்து இக்கோயிலை அமைத்துள்ளனர் என்பதை  அறியும்பொழுது வியப்பு மேலிடுகிறது. கோயிலின் கட்டக் கலையின் பகுதிகளின் பெயர்களையும் அறிய முடிகிறது. திருக்கோயில் முழுவதும் கல்வெட்டுகளாகக் காணப்படுவது இத்தலத்தின் சிறப்பு.

சர்க்கரை நோய் தீரும் : கொங்குச் சோழனான மூன்றாம் விக்கிரம சோழன் (கி.பி. 1302) ஆட்சியின் போது விக்கிரம சோழன் திரிபுவன சிங்கன் என்பவனுக்கு பிரமேகம் என்ற சர்க்கரை நோய் வந்தது.  கடத்தூர் மருதுடையாரை வேண்டித் தொழ இறைவன் அருளால் அந்நோய் நீங்கியது. எனவே இறைவனுக்கு அமுது செய்ய நிலம் அளித்தான் அந்த அரசன். ஆகவே சர்க்கரை நோயினால்  துன்பப்படுபவர்கள் இத்தலத்து இறைவனை வேண்டி நலமடையலாம்.

சிறப்புகள்: இக்கோயிலில் சிவராத்திரி, பிரதோஷம், அன்னாபிஷேகம், அஷ்டமி பைரவர் பூஜை, ஆடிப்பூரம் போன்ற வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளிலும், வளர் பிறை பஞ்சமி, பௌர்ணமி திதி அன்றும் திருமணத் தடை நீங்க பரிகார பூஜை நடைபெறுவதால் இத்திருத்தலம் "தென் திருமணஞ்சேரி' எனவும் சிறப்பித்து  அழைக்கப்படுகிறது.

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6.30 - 12.30, மாலை 4.30 - 7.00 - தகவலுக்கு: 97151 34275 - தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக