ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா

+11
முனைவர் ம.ரமேஷ்
ஜாஹீதாபானு
மனோஜ்
jenisiva
ராஜா
raghuramanp
T.N.Balasubramanian
ரேவதி
டார்வின்
பாலாஜி
Aathira
15 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

தினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Empty தினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா

Post by Aathira Wed Oct 16, 2013 2:15 pm

First topic message reminder :

தினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 1381431_600483963327142_1108661728_n

அவள் சொன்ன அடையாளம்

ஒரு மைல் தூரம் நடந்தால்தான் சின்ன செவத்தாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் வரும். சோலையம்மா நான்கு எட்டு தூரத்தை ஒரே எட்டில் பாயுற வேகத்தில் தாண்டிக்கிட்டு இருந்தா. அவளுக்கு பெயரில் மட்டும்தான் சோலை. இந்த மண்ணுல பொறந்ததில இருந்து வாழ்க்கையில வெறும் பாலைதான். ஒவ்வொரு எட்டு வைக்கும் போதும் அவளோட வயிற்றுக்கும் நெஞ்சுக் குழிக்கும் நடுவில் கனமான பந்துகள் ஏழெட்டு உருளுற மாதிரி இருந்தது. இடது கையாலே தன்னோட அடிவயித்த அழுத்திப் பிடிச்சிக்கறா. ஊட்டி ரேசுல பந்தயக்குதிரங்க ஓடுற குழம்படிச் சத்தம் அவ நெஞ்சுக்குள்ளே கேக்குது.

“ஆத்தாடி, இது என்ன? புருசன பஞ்சாயத்துல வச்சு தூக்கிக் கொடுத்தப்போ கூட இப்படி அடிச்சுக்காத நெஞ்சு இப்ப இப்படி படார் படார்னு அடிச்சுக்குதே”னு அவ வாய் முனுமுனுக்குது. குளம் நெறஞ்சு கரைய ஒடச்சிட்டு தண்ணி ஓடியாறது மாதிரி அவ கண்ணுக் குளம் நெறஞ்சு கண்ணீர் ஓடியாறது.

”ஏலே சோலே எங்கினே விடிகாலையிலே கெளம்பிட்டே, இம்புட்டு வெரசா போறவ” என்று கேள்வி கேட்டு அரசாணி அவ முன்னால நிற்கிறா.
தனக்கு முன்னால ஒருத்தி நின்னதோ, அவ கேள்வி கேட்டதோ எதுவும் தெரியாமல், காத்துல கரஞ்ச சத்தமும், கண்ணுல தெரிஞ்ச உருவமும் மறைய, எட்டி நடை போட்டா சோலையம்மா.

”என்னத்த காணாததக் காணப் போறா இவ! ஒரு பதிலு கூடச் சொல்லாம பேயறஞ்சவ மாதிரி போறா” என்று முணகிக்கிட்டே அரசாணி போனா. அவ எட்டு ஊருக்குக் கேக்குற மாதிரி கத்தி பேசினதே இவ காதில விழுகல்ல. இந்த முணகலா இவளுக்குக் கேட்கப் போகுது? சித்தபிரம்ம பிடித்தவளா நடந்துகிட்டு இருக்கிறா.

நெத்தியில இறங்கிய வேர்வை புருவத்தில் எறங்கி, கண்ணீரோட சேந்து வடியுது. இந்தத் தண்ணியில வெள்ளாமை செஞ்சிருந்தா ஒரு ஊரே ஒரு வருசம் ஒக்கார்ந்து சாப்படலாம்.

முகத்தில வடியற வேர்வையைத் தொடைக்க இழுத்து சொறுகின முந்தானையை அவள அறியாமலேயே அவ கை எடுக்குது. ஆனா தொடக்காமயே மறுபடியும் சொருகுது. வெடித்துச் செதர்ற பாறைங்க எங்கெங்கோ போயி நொடியில் மண்ணுக்கே திரும்புறது மாதிரி அவ நெனப்புங்க எல்லாம் எங்கேயோ போனாலும் போலீஸ்காரர் சொன்ன அந்த சேதிக்கே திரும்பத் திரும்ப வந்து நிக்குது.

புள்ளயோட வயசக் கூடச் சொல்லத் தெரியாத பெத்தவ அவ. ”நம்ம புள்ளக்கு ஒம்பது வயசு இருக்குமா, இல்ல பத்து வயசு இருக்குமா” ன்னு நெனச்சுப் பார்த்தவ, பக்கத்து வீட்டு மாரியம்மாவும் அவளும் ஒரே மாசத்துல புள்ள பெத்தவங்க. அவ புள்ள இசக்கி வயசுதானே நம்ம புள்ளக்கும் இருக்கும். அவ ஒரு வாரத்துக்கு முன்னே பேசும்போது “கழுதெக்குப் பத்து வயசு ஆவுது; களச்சு வூட்டுக்கு வர்ற ஆத்தா அப்பனுக்கு ஒரு கொவள தண்ணி மோந்துத் தரத் துப்பில்ல” ன்னு சொல்லி பொலம்பினது நெனப்பு வர நம்ம புள்ளக்கும் பத்து வயசுதானே இருக்கும். இப்ப எம்புட்டு வளந்திருக்கும்? இசக்கி ஒசரம் இருக்குமோ. அப்ப காது மடல் புதுநெறமாத்தான் இருந்துச்சு. எல்லாரும் புள்ள நல்ல நெறமுன்னு சொன்னாக. புள்ள இப்ப புது நெறமாத்தான் இருக்குமா இல்ல அவங்க அப்பன மாதிரி கருகருன்னு இருக்குமா?னு நெனச்சிக்கிட்டே நடைய எட்டிப் போட்டா.

கால் முன்னாடி எட்டு வச்சாலும் மனசு என்னமோ பின்னாடிதான் எட்டு வச்சு போய்ட்டு இருக்கு அவளுக்கு. கொழந்த பொறந்தப்ப, அது கெவர்மெண்ட் ஆசுபத்திரி. இவ மயக்கம் தெளிஞ்சு கண்ணத்தொறந்து பாத்தப்ப, கொழந்த பொறந்துடுச்சும்மான்னு டாக்டரு சொன்னது, நர்சுங்கல்லாம் இவளப் பாத்து ஒரு மாதிரி சிரிச்சிட்டே அந்தப்பக்கமும் இந்தப் பக்கமும் போனது, “கொழந்த நல்லாத்தான் லச்சனமா அவுக அப்பன உரிச்சு வச்ச மாதிரி இருக்கு, ஆனா இப்படி ஆயிடுச்ச்சே”ன்னு பாத்தவங்க எல்லாரும் சொன்னது, மாடசாமி ஒத்தப் பார்வையில நெருப்ப அள்ளிக் கொட்டிட்டு ஆசுபத்திரியை விட்டு போனது எல்லாம் அடுக்கடுக்கா நினைவுக்கு வருது. ஒரு நொடியில் ஓராயிரம் நெனப்புகள அசை போடும் வாமனமா வளருது அவ மனசு.

அன்னக்கு அப்படித்தான் குழந்தையைக் குளிப்பாட்டி, அதுக்குப் பொட்டு வச்சு, கண்ணே, எங்கண்மணியே உங்கப்பன் உன்னக்காணா பாவியா இருக்கானேன்னு பொலம்பிக்கிட்டே தொட்டில்ல போட்டுட்டு, குறுநொய்யைப் போட்டு கஞ்சியும் சோறுமா வடிச்சி, தொட்டுக்க உப்பு, பச்சமொளகா, புளி சேத்து ஒரு துவையல அரைச்சு கஞ்சியயும் துவையலையும் தூக்குச் சட்டியில போட்டு எடுத்துட்டு வந்து தொட்டிலைப் பார்த்தா, அங்க புள்ளையக் காணோம். குய்யோ முறையோன்னு அழுதது, ஊரு முழுக்க கொழந்தையைத் தேடி அழுத்தது, அப்பறம் நாள், வாரம், மாசம், வருசம்னு புள்ள நெனப்ப மனசு நெறையவும், கஞ்சிய வயிறு கொறையவும் வச்சிட்டு இத்தனை வருசத்தை ஓட்டினதெல்லாம் நெனச்சிகிட்டே வந்தவ எப்படித்தான் இவ்வளவு வெரசா நடந்தான்னே தெரியாம போலிசு டேசனுக்கு வந்து சேந்துட்டா..

”நாந்தான் சோலையம்மா, எங்கொழந்த கெடச்சிருக்குன்னு சொன்னீங்களே.. எங்கே? எங்கே? எங்கே?” ன்னு படபடப்பா கேட்டா.
போலிசுகாரர் “ஒங்குழந்தைக்கு என்ன அடையாளம்னு சொல்லும்மா” ன்னு கேட்க, அவ கண்ணு முன்னாடி வருது பத்து வருசத்துக்கு முன்னால நடந்த அந்த ஊர்ப் பஞ்சாயத்து.

பஞ்சாயத்துல மீசையை முறுக்கி விட்டுக்கிட்டு, கண்ணு முழி ரெண்டும் வெளிய வந்து விழுந்துரும் போல பிதுங்க, வேட்டிய மடிச்சு கட்டி, நெஞ்ச நிமித்திக்கிட்டு வெறப்பா மாடசாமி வந்து நின்னது, ”வெரவா ஒரு முடிவுக்கு வாங்கப்பு”ன்னு ஊர் பெருசுங்க சொன்னது, பொட்டுல அரைஞ்ச மாதிரி அவன் அந்தப் புள்ளய அனாதை ஆசிரமத்துல விட்டுட்டு வந்தா வச்சு வாழுறேன்னு மாடசாமி சொன்னது, கண்ணுல கொடங்கொடமா தண்ணி கொட்ட, ”நமக்குன்னு பொறந்தது, அத எப்படி அனாதையா விடறது”ன்னு அவ அழுதது, அதற்கு அவன் ”கை, கால் இல்லாம பெத்திருந்தாலும் பரவால்ல வளத்துக்கலாம், சான் புள்ளயினாலும் ஆண் புள்ளன்னு சொல்லிக்கலாம், ஊமை குருடா பொறந்து இருந்தாலும் ஒன்னுமில்லாத்துக்கு ஒரு ஊமைப் பொண்ணுனு சொல்லி வளத்துக்கலாம். ரெண்டுலயும் சேத்துக்க முடியாத இந்தக் கழுத பெத்த புள்ளய என்ன பொறப்புன்னு சொல்லி வச்சுக்கிறது? என் முடிவ நா சொல்லிட்டேன். அவ புள்ளய விட்டுட்டு வரதுன்னா வரட்டும். இல்லாட்டி அத்துக்கிட்டு போகட்டும்”னு சொன்னது, அவ அழுகையோட ஆனால் அழுத்தமா “அவருக்கு நா இல்லாட்டி வேற ஒருத்தி வருவா, இந்தப் புள்ளக்கி என்னவிட்டா யாரு தொண, நா எம்புள்ளயோடவே இருந்துக்கிறேன்” என்று சொல்லி தாலியை அறுத்துக் கொடுத்துட்டு வந்தது, எல்லாம் ஒரு சினிமாவா அவ கண்ணுல வர, அவ அப்படியே கல்லா நிக்கறா.

போலீஸ்காரர் “ஏம்மா என்ன அடையாளம்னு கேட்டா எதோ லச்ச ரூவா குடுத்துட்டு புள்ளய கூட்டிட்டுப் போன்னு சொன்ன மாதிரி செலயா நிக்கறே” என்று மீண்டும் ஒரு அதட்டு போட்டார்.

இத விட வேற என்ன அடையாளத்தை அவளால பெருசா சொல்லிட முடியும்? தன் பிள்ளையை ஆம்பளையா பொம்பளையான்னே சொல்ல முடியாத அவ, ”நான் பொம்பள போலீசுகிட்ட பேசனும்” னு சொன்னா.

”ஏம்மா ஆம்பிளகிட்டயே பேசாத ஊருல பொறந்த மாதிரி பன்றே, சொல்லும்மா அடையாளத்தை” என்று மீண்டும் அவர் கத்த, அவளுக்கு வாயிலிருந்து வார்த்தகள் வரல்ல. கண்ணுல இருந்து தண்ணிதான் வருது.

அப்போ அந்தப் பக்கமா ஒரு பெண் போலிசு வர,, அவ ஒடிப்போய் அவங்க காதுல ஏதோ சொல்ல, அவங்க சங்கடத்தோட, திருதிருன்னு முழிச்சி கிட்டிருந்த அந்தக் கொழந்தையைத் தன் ரூமுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. சோலையம்மாவும் பின்னாலயே போனா. அழுகையோடவும், ஆனந்தத்தோடவும், அடையாளம் கூட சொல்ல முடியாத அவளோட கொழந்தையோடவும் வெளியே வந்தா.




Last edited by Aathira on Wed Oct 16, 2013 2:32 pm; edited 1 time in total
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


தினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Empty Re: தினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா

Post by jenisiva Thu Oct 17, 2013 1:54 pm

வாழ்த்துக்கள் . உங்கள் கதை என்னை நெகிழ வைத்தது .அருமையான கதை அளித்ததற்கு நன்றி.
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

தினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Empty Re: தினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா

Post by மனோஜ் Thu Oct 17, 2013 3:02 pm

நல்ல கரு! நல்ல நடை !சிந்திக்க வைக்கும் கதை ! வாழ்துக்கள் அன்பு மலர் 


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

தினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Empty Re: தினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா

Post by பாலாஜி Thu Oct 17, 2013 3:04 pm

T.N.Balasubramanian wrote:என்ன ஒற்றுமை !

பதிவுகள் 12721 !!

மதிப்பிடுகள் 1272 !!!

ரமணியன்
ஆமோதித்தல் ஆமோதித்தல் 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Empty Re: தினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா

Post by ஜாஹீதாபானு Thu Oct 17, 2013 6:38 pm

கதை ரொம்ப அருமை அக்காபுன்னகை

சஸ்பென்ஸ், த்ரில் எல்லாம் இருந்துச்சு கதைல...தினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 3838410834 தினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 3838410834 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Empty Re: தினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா

Post by Aathira Thu Oct 17, 2013 9:35 pm

டார்வின் wrote:தினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 3838410834 தினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 3838410834 தினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 3838410834 தினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 3838410834
நன்றி டார்வின் அன்பு மலர் 


தினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Aதினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Aதினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Tதினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Hதினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Iதினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Rதினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Aதினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Empty Re: தினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா

Post by Aathira Thu Oct 17, 2013 9:37 pm

raghuramanp wrote:
கதை ஒரே பக்கத்துல முடிஞிசிடடுச்சே
இன்னும் இருந்தா படித்துகொனண்டே இருக்கலாம் போல இருக்கு.
வழ்த்துக்கள்
சிறுகதை இதுக்கு மேல் நீட்டினா சுவை குறைஞ்சிடுமோ... படித்து சுவைத்தமைக்கு நன்றி ரகுராமன். அன்பு மலர் 


தினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Aதினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Aதினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Tதினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Hதினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Iதினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Rதினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Aதினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Empty Re: தினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா

Post by Aathira Thu Oct 17, 2013 9:39 pm

jenisiva wrote:வாழ்த்துக்கள் . உங்கள் கதை என்னை நெகிழ வைத்தது .அருமையான கதை அளித்ததற்கு நன்றி.
படித்தமைக்கும் பகர்ந்தமைக்கும் மிக்க நன்றி ஜெனிசிவாஅன்பு மலர் 


தினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Aதினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Aதினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Tதினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Hதினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Iதினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Rதினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Aதினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Empty Re: தினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா

Post by முனைவர் ம.ரமேஷ் Thu Oct 17, 2013 9:55 pm

சோலையம்மாவும் பின்னாலயே போனா. அழுகையோடவும், ஆனந்தத்தோடவும், அடையாளம் கூட சொல்ல முடியாத அவளோட கொழந்தையோடவும் வெளியே வந்தா.
அழகிய தொடக்கத்தில் துவங்கி... பாதைகள் மாறி... பருவம் மாறி... குழந்தையாக வாழ்க்கை மறுபடியும் கிடைத்திருக்கிறது...

சிறப்பாக இருக்கிறது... கதைக்குப் பாராட்டுகள்


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Empty Re: தினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா

Post by Aathira Thu Oct 17, 2013 10:04 pm

மனோஜ் wrote:நல்ல கரு! நல்ல நடை !சிந்திக்க வைக்கும் கதை ! வாழ்துக்கள் அன்பு மலர் 
மனோஜ்..... எப்படி இருக்கீங்க? எத்தனை நாளாச்சு ஈகரைப் பக்கம் தல காட்டி? ஏன் இத்தனை நாளா வரலை? நலம்தானே??



தினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Aதினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Aதினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Tதினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Hதினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Iதினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Rதினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Aதினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Empty Re: தினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா

Post by ayyasamy ram Thu Oct 17, 2013 10:54 pm

தினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 3838410834 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா - Page 3 Empty Re: தினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum