ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்

+8
ஜாஹீதாபானு
krishnaamma
மாணிக்கம் நடேசன்
அசுரன்
பாலாஜி
ஈகரையன்
ராஜா
சிவா
12 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

 உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள் - Page 2 Empty உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்

Post by சிவா Mon Oct 14, 2013 10:50 am

First topic message reminder :

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு.

இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும்.

பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது.

இதுபோன்றவர்களுக்கு எளிய வழியில் உடல் பருமனைக் குறைப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த த‌ண்‌ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும்.

சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.

பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும்.

அமுக்கிராவேர் பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும். சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும்.

மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும். இதுதவிர, வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம்.

இது எ‌ல்லாவ‌ற்‌றி‌ற்கு‌ம் மேலாக காலை‌யி‌ல் அரை ம‌ணி நேர‌ம் நடைப‌யி‌ற்‌சி மே‌ற்கொ‌ண்டா‌ல் கொழு‌ப்பு‌ம் கரையு‌ம், உட‌‌ல் எடையு‌ம் குறையு‌ம், பு‌த்துண‌ர்வாகவு‌ம் இரு‌க்கு‌ம்.

.1)எப்போதும் நமது எண்ணங்கள் பாசிட்டிவாக இருந்தால்தான் எந்த வெற்றியையும் அடைய முடியும்.அது இந்த உடல் மெலிவதற்கும் பொருந்தும்.உடல் மெலிய வேண்டும் என்று உடற்பயிற்சி,டயட்டிங் இருக்க ஆரம்பித்து விட்டால், இனி உடல் எடை குறையும்,இப்போது கொஞ்சம் குறைந்து விட்டது என்று நீங்களே மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.இதுதான் உங்களை மேலும் முயற்சி செய்ய வைக்கும்.என்ன் இது 2 வாரமாகியும் உடல் எடை குறைய வில்லையே என்று பாதியில் விட்டு விடாதீர்கள்.அப்புறம் மேலும் எடை கூட வாய்ப்பு அதிகம்.

2) எக்காரணம் கொண்டும் சாப்பிட்ட பிறகு உடல் பயிற்சி செய்யாதீர்கள்.சாப்பிடும் முன்பு செய்வதுதான் சரி.

3)குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை விட சூடான தண்ணீர் குடிப்பது உடல் எடை குறைக்க உதவும்.

4) 3 வேளையாக சாப்பிடாமல் 3 மணி நேர இடைவெளியில் 6 தடவையாக சாப்பிடுங்கள்.அதனால் எப்போதும் சாப்பிடும் ஒரு வேளை உணவை(அதே அளவை) இரண்டாக பிரித்து 2 வேளையாக சாப்பிடுங்கள்.இதுதான் இன்று மிகவும் அதிகமான பேர் பின்பற்றும் டயட்டிங் முறை.எல்லோருடைய மெட்டபாலிசமும் ஒரே மாதிரி இருக்காது.இப்படி பிரித்து சாப்பிடுவதால் உடம்பில் கொழுப்பு தங்க வாய்ப்பு இல்லாமல் எளிதில் உணவு ஜீரணமாகிவிடும்.அதனால்தான் மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளை சிறிய உணவாக உண்ண சொல்லுகிறார்கள்.எப்போதும் சாப்பிடும் தட்டைவிட சிறிய தட்டில் சாப்பிடுங்கள்.அப்போதுதான் நாம் நிறைய சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் வரும்.மெதுவாக,நன்றாக மென்று சாப்பிடுங்கள்.இதனால் உணவு எடுத்துக் கொள்ளும் அளவும் குறையும்.

5)சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.கொள்ளு ரசம்,கொள்ளு சுண்டல் போன்றவை செய்து சாப்பிடலாம்.அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள்.இது நிச்சயம் எடையை குறைக்கும்.

6)என்ன சாப்பிட்டாலும் அதிலிருந்து எவ்வளவு எனர்ஜி கிடைக்கிறது என்று பாருங்கள்.இது வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு எளிது.அதிகம் கிலோ ஜூல்ஸ் உள்ள பதார்த்தங்களை எளிதாக தவிர்த்து விடலாம்.இதில் முக்கியமாக தவிர்க்க வேண்டியவை Sweets.எடை கூட இது முதற் காரணம்.Equal போன்ற கலோரி குறைந்த Sweetener ஐ உபயோகியுங்கள்.

7) டயட் என்றால் பட்டினி கிடப்பதில்லை.அதேபோல் சுவை குறைந்த உணவை சாப்பிட வேண்டும் என்பதும் இல்லை.இப்படி செய்ய ஆரம்பித்தால் வெறுப்புதான் வரும்.எதையும் மனதிற்கு பிடித்து செய்ய வேண்டும்.ஒரு வேளை கூட பட்டினி கிடக்காதீர்கள்.அப்புறம் உங்களையும் அறியாமல் அடுத்த வேளை அதிகம் சாப்பிட்டு விடுவீர்கள்.மீண்டும் உணவு கொழுப்பாக உடலில் தங்கிவிடும்.காலை உணவு எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

8)ஆவியில் வேக வைத்த உணவு,நீர் காய்கறிகள் என்று திட்டமிட்டு சமையுங்கள்.வாரம் ஒரு முறை பொரித்த உணவு,ஸ்வீட்ஸ் என்றுகூட சாப்பிடலாம்.முக்கியமாக டயட் இருந்தாலும் நம் உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் தொடர்ந்து கிடைக்குமாறு பார்த்துக் கொளுங்கள்.புரோட்டீன்,கார்போஹைடிரேட்,நல்ல கொழுப்பு,கால்ஷியம்,இரும்புச் சத்து முதலியவை நம் உடலுக்கு கண்டிப்பாக தேவை.இதன் அளவு குறைந்தால் முடி கொட்டுதல்,ரத்த சோகை,எலும்பு தேய்மானம் முதலியவை ஏற்படும்.பருப்பு,கீரை,அவித்த முட்டை,சாதம்,பால் முதலியவை சேர்த்துக் கொள்ளுங்கள்.சமைக்கும் முறையில் அதிகம் கொழுப்பு சேர்ந்து விடாமல் செய்து சாப்பிடுங்கள்.

8) டயட்டில் ஒன்று சொல்வார்கள்.வெள்ளையாக இருப்பவற்றை, குறைந்த அளவு சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று.ஜீனி,உப்பு,சாதம்,பால்,தயிர் போன்றவை தான் இப்படி அளவை குறைக்க வேண்டிய பொருட்கள்.நிறைய பேர் Full Cream milk, Skim Milk க்கு உள்ள வேறுபாட்டை அறியாமல் இருக்கிறார்கள்.Skim milk தண்ணீரை போன்று இருப்பதால் பலரும் அதை Diluted Full Cream milk அதாவது தண்ணீர் சேர்க்கப்பட்ட பால் என்று நினைத்து விடுகிறார்கள்.அதனால் அதை வாங்கி உபயோகப்படுத்துவதும் இல்லை.Skim milk என்பது கொழுப்பு நீக்கப்பட்ட பால்.ஆனால் பாலில் உள்ள அத்தனை சத்துக்களும் அப்படியேதான் இருக்கும்.எனவே உடல் எடை குறைய skim milk உபயோகிக்கலாம்.சத்துப் பற்றாக்குறை ஏற்படாது.

9)வாரம் ஒரு முறையாவது ஓட்ஸ்,பார்லி சேர்த்துக் கொள்ளுங்கள்.ஓட்ஸ் உடம்பில் உள்ள கொழுப்பையும்,பார்லி உடம்பில் அதிகம் உள்ள நீரையும் குறைக்கும்.ஆனால் பார்லியை அதிகம் முக்கியமாக கருவுற்றிருக்கும் பெண்கள் உபயோகப்படுத்த வேண்டாம்.இது நீரின் அளவை குறைத்து சிசேரியனில் கொண்டு விட்டுவிடும்.சிலர் கால்,கை வீக்கம் கர்ப்ப காலத்தில் ஏற்படும்போது அதிகம் பார்லியை உட்கொண்டுவிடுவதால் இப்படி நேர்ந்துவிடுகிறது.இதற்கு மாற்றாக வெந்தயக்கஞ்சி செய்து சாப்பிடலாம்(கர்ப்பிணிகள்).

10)உங்களது லைப்ஸ்டைலுக்கு ஏற்றார்போல் உடல் பயிற்சியை அமைத்துக் கொள்ளுங்கள்.உங்களால் பிட்னெஸ் செண்டருக்கு தொடர்ந்து சென்று பயிற்சி செய்ய முடியும் என்றால் மட்டுமே அதில் சேருங்கள்.குழந்தை வைத்திருப்பவர்கள்,குழந்தையை ப்ராமில் வைத்து தள்ளிக் கொண்டு வாக்கிங் போகலாம்.அவர்களுக்கு வேடிக்கை காண்பிக்க வெளியில் அழைத்து சென்றது போலிருக்கும்.வாக்கிங் செய்வது மிகவும் அவசியம்.உடம்பில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் குறைக்க நினைக்காதீர்கள்.வாக்கிங்,ஜாகிங் இப்படி வெளியே செல்லும் எந்த பயிற்சியும் செய்ய முடியாதவர்கள் வீட்டிலேயே உடல் பயிற்சி செய்யலாம்.ஒழுங்காக கற்றுக் கொண்டு அல்லது புக்கில் படித்து புரிந்து,அதற்கென உள்ள வீடியோக்களை வாங்கிப் பார்த்து வீட்டினுள்ளேயே செய்யலாம்.

11)அதிக எண்ணெய்,மட்டன்(மாதம் ஒரு முறையோ,வாரம் ஒரு முறையோ கொழுப்பில்லாத கறியாக சாப்பிடலாம்),ஸ்நாக்ஸ்(சிப்ஸ்) போன்ற கலோரி அதிகமுள்ள பொருட்களை தவிர்த்து விடுங்கள்.டீ குடிப்பது உடலில் கொழுப்பை சேர விடாது.அதுவும் க்ரீன் டீ மிகவும் நல்லது.பாலை சேர்க்காமல் அல்லது ஸ்கிம் மில்க்கை சேர்த்து குடிக்கலாம்.

12)சில வகை உணவுகள் செரிப்பதற்கு அதிக எனர்ஜியை எடுத்துக் கொள்ளும்.உதாரணமாக ஆப்பிள்,Broccoli போன்றவை செரிக்க அதிக எனர்ஜி தேவைப்படும்.அப்படி அதிக எனர்ஜி தேவைப்படும்போது நமது உடலில் உள்ள கொழுப்பிலிருந்து சக்தி எடுத்துக் கொள்ளும்.எப்படியிருந்தாலும் மேற்கண்ட பொருட்களை சாப்பிடும்போது உடலில் கொழுப்பு சேர்வதில்லை.

13)Pepsi,Coke போன்ற பானங்களை குடித்தே ஆக வேண்டும் என்றால் Sugar Free அல்லது Diet பானங்களை பருகலாம்.Milo,Horlicks போன்றவை எடையை கூட்டவே செய்யும்.சாலட் சாப்பிட்டாலும் அதில் மயோனைஸ்,சாலட் டிரஸ்சிங் சேர்க்காமல் எலுமிச்சை,மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடலாம்.Baked Beans,Tuna can,Crackers போன்றவற்றை சிறிய உணவாக எடுத்துக் கொள்ளலாம்.இதன் மூலம் புரோட்டீன் போன்ற சத்துக்கள் கிடைத்துவிடும்.முடிந்தவரை வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள்.வெளியில் சாப்பிடுவதுகூட எடை ஏற ஒரு காரணம்.முக்கியமாக பிட்ஸா,சிக்கன் ஃபிரை போன்ற அயிட்டங்கள் நிச்சயம் எடையை கூட்டிவிடும்.

14)Exercise,Diet இல்லாமல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதல்ல.Diet என்ற வார்த்தையை உபயோகப்படுத்தாமல் ஹெல்தியாக சாப்பிடுகிறோம் என்று நினையுங்கள்.நிச்சயம் சரியான டயட்டும்,உடற்பயிற்சியும் எடையை குறைக்கும்.பரம்பரை காரணமாக சிலர் குண்டாக இருப்பார்கள்.அவர்களும் முயன்றால் எடையை நிச்சயம் குறைக்கலாம்.உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள்,மருத்துவர்கள் ஆலோசனை கேட்டு உடற்பயிற்சி செய்யலாம்.


 உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


 உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள் - Page 2 Empty Re: உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்

Post by ஈகரையன் Mon Oct 14, 2013 1:22 pm

அருமையான பதிவு.

 உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள் - Page 2 3838410834  உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள் - Page 2 3838410834  உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள் - Page 2 3838410834 
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

 உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள் - Page 2 Empty Re: உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்

Post by பாலாஜி Mon Oct 14, 2013 1:29 pm

ராஜா wrote:
சிவா wrote:அழுகை அழுகை அழுகை அழுகை 
சொன்னா நம்புங்க தல! தினமும் மூன்று மணி நேரம் உடற்பயிற்சி செய்து இப்படி வந்துள்ளேன்!
 
சரி சரி விடுங்க , நான் தான் இப்ப ஒரு வாரமா உடற்பயிற்சி செய்யமுடியல , விடுமுறை எடுக்கவிருப்பதால் கடுமையான் வேலை அதனால் வீட்டுக்கு போனதும் குளிர்பானம் அருந்திவிட்டு தூங்கிடுவேன். வந்து தான் தொடர்ந்து செய்யணும் 


சரி நான் கிளம்புறேன் தல , சுற்றுப்பயணம் கிளம்பனும் (சைட் என்று சொன்னால் நாட்டாமை வந்துடுவார் தீர்ப்பு சொல்லுறதுக்கு ) புன்னகை
சைட்டா ... ம்ம்ம்ம்ம்ம் ....பல்லு உள்ளவங்க பக்கோடா சாப்பிடுறாங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள் - Page 2 Empty Re: உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்

Post by அசுரன் Mon Oct 14, 2013 2:01 pm

தேவை ஏற்பட்டால் ஒழிய உடல் எடையை குறைப்பதில் யாருக்கும் ஆர்வம் இருப்பதில்லை. அருமையான பதிவு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள் - Page 2 Empty Re: உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்

Post by சிவா Mon Oct 14, 2013 2:06 pm

அசுரன் wrote:தேவை ஏற்பட்டால் ஒழிய உடல் எடையை குறைப்பதில் யாருக்கும் ஆர்வம் இருப்பதில்லை. அருமையான பதிவு
ஆமாமா, நான் விரைவில் திருமணம் செய்ய இருப்பதால் உடல் எடையைக் குறைக்க கடும் முயற்சி செய்து வருகிறேன்!


 உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள் - Page 2 Empty Re: உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்

Post by அசுரன் Mon Oct 14, 2013 2:07 pm

சிவா wrote:
அசுரன் wrote:தேவை ஏற்பட்டால் ஒழிய உடல் எடையை குறைப்பதில் யாருக்கும் ஆர்வம் இருப்பதில்லை. அருமையான பதிவு
ஆமாமா, நான் விரைவில் திருமணம் செய்ய இருப்பதால் உடல் எடையைக் குறைக்க கடும் முயற்சி செய்து வருகிறேன்!
 மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள் - Page 2 Empty Re: உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்

Post by சிவா Mon Oct 14, 2013 2:09 pm

என்ன தல, வாழ்த்துச் சொல்லாம அடிக்கிறீங்க! போங்க தல.. நீங்க சுத்த மோசம்!


 உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள் - Page 2 Empty Re: உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்

Post by பாலாஜி Mon Oct 14, 2013 2:10 pm

சிவா wrote:
அசுரன் wrote:தேவை ஏற்பட்டால் ஒழிய உடல் எடையை குறைப்பதில் யாருக்கும் ஆர்வம் இருப்பதில்லை. அருமையான பதிவு
ஆமாமா, நான் விரைவில் திருமணம் செய்ய இருப்பதால் உடல் எடையைக் குறைக்க கடும் முயற்சி செய்து வருகிறேன்!
மணி விழா திருமணத்திற்கு எல்லாம் நீங்க உடல் எடையைக் குறைக்க தேவையில்லையே


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள் - Page 2 Empty Re: உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்

Post by அசுரன் Mon Oct 14, 2013 2:11 pm

சிவா wrote:என்ன தல, வாழ்த்துச் சொல்லாம அடிக்கிறீங்க! போங்க தல.. நீங்க சுத்த மோசம்!
 உங்களுக்கு கல்யாணம் ஆகி பல வருடங்கள் ஆனதாக தானே கேள்விப்பட்டேன். அதான் வாழ்த்தை அண்ணி பாணியில சொன்னேன் ஹாஹா குதூகலம் குதூகலம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள் - Page 2 Empty Re: உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்

Post by சிவா Mon Oct 14, 2013 2:11 pm

பாலாஜி wrote:மணி விழா திருமணத்திற்கு எல்லாம் நீங்க உடல் எடையைக் குறைக்க தேவையில்லையே
தப்பா சொல்றீங்க ஜீ! மணி விழா இல்லை, மணவிழா! என்ன கொடுமை சார் இது 


 உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள் - Page 2 Empty Re: உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்

Post by பாலாஜி Mon Oct 14, 2013 2:13 pm

சிவா wrote:
பாலாஜி wrote:மணி விழா திருமணத்திற்கு எல்லாம் நீங்க உடல் எடையைக் குறைக்க தேவையில்லையே
தப்பா சொல்றீங்க ஜீ! மணி விழா இல்லை, மணவிழா! என்ன கொடுமை சார் இது 
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி  மணி விழா என்றால் ஆறுபதாம் கல்யாணம் ( 60 வயதில் செய்ய படும் மணவிழா ஒகே மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள் - Page 2 Empty Re: உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum