Latest topics
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!by ayyasamy ram Today at 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 12:42
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 10:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 19:36
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 19:34
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 19:33
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 19:31
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:29
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 19:14
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 19:12
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 19:11
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:10
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 19:09
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 19:08
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 16:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:20
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:05
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:02
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:03
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:34
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:47
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri 8 Nov 2024 - 20:36
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:04
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:01
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:35
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:11
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 22:15
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 21:53
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 21:49
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:25
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:23
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:21
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:19
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 17:21
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 10:37
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 10:34
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed 6 Nov 2024 - 16:23
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed 6 Nov 2024 - 16:19
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed 6 Nov 2024 - 16:16
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பைலின்' புயல் கரையை கடந்தது, கோரப்புயல் விடிய விடிய ருத்ரதாண்டவம்
2 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பைலின்' புயல் கரையை கடந்தது, கோரப்புயல் விடிய விடிய ருத்ரதாண்டவம்
First topic message reminder :
புதுடில்லி: கடந்த ஒரு வாரமாக, அச்சுறுத்தி வந்த, நாசக்கார, "பைலின்' புயல், நேற்றிரவு, ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கும், ஒடிசா மாநிலம் பாரதீப் நகருக்கும் இடையே கரையை கடந்தது. ஒடிசாவில், கோபால்பூரை மிக கடுமையாக தாக்கியது. மேலும் இந்த இரு மாநிலங்களின் பல ஊர்களும், புயலில் கோர தாக்குதலால் சின்னாபின்னமாகின. கோரப்புயல், விடிய விடிய ருத்ரதாண்டவம் ஆடியதால் ஏற்பட்ட, உயிர் மற்றும் பொருட்சேத விவரங்கள், இன்று தெரிய வரும்.
அந்தமான் கடலின் மேல், கடந்த வாரம், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. கடந்த, 8ம் தேதி, அது, புயலாக மையம் கொண்டது. இந்த வார துவக்கத்தில், அது, பெரும் புயலாக மாறியது. இந்த புயலுக்கு, "பைலின்' என, பெயர் சூட்டப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், மணிக்கு, 195 கி.மீ., முதல், 250 கி.மீ., வேகமுள்ள சூறாவளி காற்றுடன், ஒடிசா மாநிலத்தை நோக்கி, அந்த புயல் நகர்ந்தது. இதனால், ஆந்திராவின் வடக்கு மற்றும் ஒடிசாவின் தெற்கு கடலோர பகுதிகளில், கடும் சேதம் ஏற்படும் என, எச்சரிக்கப்பட்டிருந்தது.நேற்று இரவு, 7:00 மணி அளவில் ஒடிசா மாநிலம், பாரதீப்பிலிருந்து, தென் கிழக்கு பகுதியில், ஆந்திராவின் கலிங்கப்பட்டினம், ஒடிசாவின் கோபால்பூர் இடையே, புயல், கரையை கடந்தது. அப்போது, மணிக்கு, 300 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. 3.5 மீட்டர் உயரத்துக்கு, கடல் அலைகள் ஆவேசமாக எழுந்தன.புயல் கரையை கடந்தபோது, பேய் மழை கொட்டியது.
இதையடுத்து, ஒடிசா, ஆந்திரா கடலோர பகுதிகளில் தங்கியிருந்தவர்களை, பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் நடவடிக்கைகள், நேற்று காலை முதலே, போர்க்கால அடிப்படையில் துவங்கின.இரு மாநில போலீசாருடன், ராணுவம், துணை ராணுவப் படை, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், களத்தில் இறங்கினர். ஒடிசாவின், கஞ்சம், புரி, குர்தா, ஜெகதீசிங்பூர், கேந்திர பிரபா ஆகிய மாவட்டங்களில் வசித்த, மூன்று லட்சம் பேர், பாதுகாப்பு படையினரால் அப்புறப்படுத்தப்பட்டனர். அதிகபட்சமாக, கஞ்சம் மாவட்டத்தில் மட்டும், ஒரு லட்சம் பேர், வெளியேற்றப்பட்டனர். ஆந்திராவில், ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வசித்த, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். ஒட்டு மொத்தமாக, இரண்டு மாநிலங்களிலும், ஐந்து லட்சம் பேர், பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
இரண்டு மாநிலங்களிலும், 200க்கும் அதிகமான, தற்காலிக நிவாரண முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி, ஹவுரா விசாகப்பட்டினம் இடையே இயங்கும், 50க்கும் மேற்பட்ட ரயில்கள், ரத்து செய்யப்பட்டன; விமான சேவையும் ரத்து செய்யப்பட்டது. மீட்புக் குழுவினர், கடலோர மாவட்டங்களில், வீடு வீடாகச் சென்று, வெளியேறும்படி, மக்களை அறிவுறுத்தினர். ஆனால், அங்கு வசிக்கும் வயதான சிலர், "எல்லாம், கடவுள் பார்த்துக் கொள்வார். எங்களுக்கு ஒன்றும் நடக்காது. எங்கள் மண்ணை விட்டு வெளியேற மாட்டோம்' என, அடம் பிடித்தனர். ஒடிசாவின், பிரதீப் மீன்பிடி துறைமுகத்திலிருந்து, மீன் பிடிக்கச் சென்ற, சில மீனவர்கள், கரை திரும்பாததால், கடற்படையினர், அவர்களை தேடும் முயற்சியில் இறங்கினர்.
ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் கடலோர மாவட்டங்களில், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆந்திராவின், ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலைகளில், போக்குவரத்து குறைந்தது; வீதிகள் வெறிச்சோடின. பொதுமக்கள், வீடுகளுக்குள் முடங்கினர். கடல் நீர், 300 மீட்டர் வரை, நிலப் பகுதிக்குள் புகுந்தது. மணிக்கு, 240 கி.மீ., வேகத்துக்கு காற்று வீசியதால், மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்சார கம்பங்கள், சாய்ந்தன. கூரை வீடுகள், பிய்த்துக் கொண்டு போயின. ஒடிசா, ஆந்திர மாநிலங்களின் கடலோர பகுதிகள், புயலின் கோரதாண்டவத்தில் சிக்கித் தவித்தன. குறி"ப்பாக, ஒடிசாவின் சின்னஞ் சிறு, கடலோர நகரமான, கோபால்பூர், கடும் பாதிப்பை சந்தித்தது.
இடைவெளி இல்லாமல், இரவு முழுவதும், "பைலின்' புயல், ருத்ர தாண்டவம் ஆடியது. புயலின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், மீட்புக் குழுவினரே, திண்டாடிப் போயினர். திரும்பும் திசையெங்கும், வெள்ளக் காடாக காட்சி அளித்தது. காற்றின், பேயோசையை தவிர, வேறு எந்த சத்தமும் கேட்கவில்லை. கலிங்கப்பட்டினம் கோபால்பூர் இடையே, புயல், கரையை கடந்ததாகவும், கரையை கடந்தாலும், அடுத்த, 6 மணி நேரத்துக்கு, அதன் தாக்கம் இருக்கும் என்றும், வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்தனர். ராணுவத்தின், முப்படையினரும், முழு வீச்சில், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த புயலால், எத்தனை பேர் இறந்தனர், எவ்வளவு பொருட்சேதம் ஏற்பட்டது என்பது பற்றிய விவரங்கள், இன்று தெரிய வரும்.
கத்ரீனாவை விட கடுமை:
அமெரிக்காவின் ஹவாய் தீவில், "பேர்ல் ஹார்பர்' துறைமுகத்தில் செயல்படும், அமெரிக்க கடற்படையின், புயல் எச்சரிக்கை மையம், "புயலின் தாக்கம், மிக மிக கடுமையாக இருக்கும். மணிக்கு, 305 கி.மீ., வேகத்தில், கரையை கடப்பதற்கு வாய்ப்பு உள்ளது' என, எச்சரித்திருந்தது. "கடந்த, 2005ல், அமெரிக்காவை சூறையாடிய, "கத்ரீனா' புயலுக்கு, இணையாக, இந்த புயல் இருக்கும்' என்றும், சர்வதேச வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். பொதுவாக, புயல்கள், கரையை நெருங்கும் போது, சற்றே வலுவிழந்து காணப்படும். ஆனால், "பைலின்' புயல், கரையை நெருங்கும் சமயத்தில், வலு பெற்றதால், பாதிப்பு கடுமையாக அதிகம். அதன் விவரம் இன்று தெரியவரும்.
"பைலின்' - பெயர் எப்படி வந்தது? கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டுவதை, 1950ம் ஆண்டில், சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம் உருவாக்கியது. "வெப்ப மண்டல நாடுகள்' என அழைக்கப்படும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஏமன், தாய்லாந்து ஆகிய, எட்டு நாடுகள் ஒரு குழுவாகச் சேர்ந்து, வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு, 2004ம் ஆண்டு முதல் பெயரிட்டு வருகிறது. ஒவ்வொரு நாட்டிலிருந்தும் அந்தந்த நாட்டு மொழிகளில் எட்டு பெயர்கள் என, மொத்தம், 64 பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பட்டியல்தயாரிக்கப்பட்டது. இதிலிருந்து, சுழற்சி முறையில் புயலுக்கு பெயர் வைக்கப்படுகின்றன. இதன்படி, ஒடிசாவை தாக்கிய புயலுக்கு, தாய்லாந்து மொழியில், "பைலின் (நீலக்கல்)' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. தானே (மியான்மர்), முர்ஜன் (ஓமன்), நீலம் (பாகிஸ்தான்), மகசென் (இலங்கை), பைலின் (தாய்லாந்து) வரிசையில், அடுத்து வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு, ஹெலன் (வங்கதேசம்), லெகர் (இந்தியா) என, பெயர் சூட்டப்படும்.
250 கி.மீ., வேகத்தில் சூறை:
இந்தியாவை இதுவரை தாக்கிய புயல்களிலேயே இது தான் கடுமையானது. இதன் வேகம், மணிக்கு 250 கி.மீ., முதல், 315 கி.மீ., இருந்தது. ஹவுரா - விசாகப்பட்டினம் வழியாகச் செல்லும் 56 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.பல இடங்களில் 300 முதல், 600 மீட்டர் தூரம் வரை கடல் நீர் புகுந்தது.கஞ்சம் மாவட்டம் உட்பட, 4.5 லட்சம் பேர், பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அருகில் உள்ள மாநிலங்களையும் சேர்த்து, மொத்தம் 1.2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர்.புவனேஸ்வர் விமான நிலையம் மூடப்பட்டு, நிவாரணப் பொருட்களை கொண்டு வரும் விமானப்படை விமானங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.இரு மாநிலங்களில், ஐந்து மாவட்டங்களில், 500 புயல் மையங்கள், 100 பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன; 40 விமானங்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன.மொத்தம், 1,600 தேசிய பேரிடர் மீட்பு படையினர், மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.நாட்டின் பெரிய துறைமுகங்களில் ஒன்றான பாரதீப் மற்றும் கோபால்பூர் துறைமுகங்கள் மூடப்பட்டன.
தினமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பைலின்' புயல் கரையை கடந்தது, கோரப்புயல் விடிய விடிய ருத்ரதாண்டவம்
-
இந்தப் புயலில், 18 தமிழக மீனவர்கள்
ஒடிசாவின் காட்டுப்பகுதியில் சிக்கித்
தவிக்கின்றனர். இரண்டு நாட்களாக
உணவின்றி தவிப்பதாகவும், தங்களை
மீட்கும்படியும் தகவல் அனுப்பியுள்ளனர்
-
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் பெய்ட்டி புயல் கரையை கடந்தது; ஒடிசா, மே. வங்காளத்தில் மழை
» "தானே' புயல் கரையை கடந்தது:ஓடுகள் பறந்தன; மரங்கள் முறிந்தன; தொலைதொடர்பு துண்டிப்பு
» பைலின் புயல்: ஒடிசா முதல்வர் வாகனத்தை மறித்த கிராம மக்கள்
» நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்!
» நள்ளிரவில் மாருதா புயல் கரையை கடக்கும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum