புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் ! Poll_c10காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் ! Poll_m10காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் ! Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் ! Poll_c10காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் ! Poll_m10காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் ! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் ! Poll_c10காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் ! Poll_m10காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் ! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் ! Poll_c10காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் ! Poll_m10காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் ! Poll_c10காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் ! Poll_m10காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் ! Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் ! Poll_c10காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் ! Poll_m10காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் ! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் ! Poll_c10காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் ! Poll_m10காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் ! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் ! Poll_c10காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் ! Poll_m10காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் ! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் !


   
   
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Sat Oct 12, 2013 6:34 pm

மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றினாலும் ,அங்கேயே தங்கிவிட இயற்கை அனுமதிக்கவில்லை . மனித இனம் , தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பூமியின் பல்வேறு இடங்களுக்கும் இடம்  பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது .பல்வேறு மாறுதல்கள் அடைந்த பிறகு நாடு என்ற அமைப்பு உருவானது . இன்றும் பல்வேறு விலங்குகள் தங்களுக்கென்று எல்லைகள் வகுத்துக் கொண்டு வாழ்கின்றன . தனது எல்லைக்குள் தன் இனத்தைச் சேர்ந்த இன்னொரு விலங்கை அனுபதிப்பதில்லை . அது போலவே மனிதனும் தனக்கென்று எல்லைகள் வகுத்துக்கொண்டு வாழ்கிறான் . வீடு ,வயல் ,பாதை ,ஊர் ,வட்டம் ,மாவட்டம் ,மாநிலம் ,நாடு என்று வெளிப்புறத்திலும் மொழி , ஜாதி ,மதம் ,இனம் ,மாநிலம் ,நாடு என்று உள்ளுக்குள்ளும் எல்லைகள் வகுத்துக்கொண்டு நிதமும் தன் சக இனத்திடம் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறான் .மனிதன் இன்னமும் விலங்கு தான் ; இனிமேலும் விலங்கு தான் .மனிதன் என்று ,எல்லாவற்றையும் கடந்து சக மனிதனை ,சக மனிதனாக நினைக்கிறானோ , தானும் இயற்கையின் ஒரு அங்கம் தான் என்று உணர்கிறானோ, அன்று சொல்லிக் கொள்ளலாம் "தான் ஆறறிவு படைத்த விலங்கு" என்று .

ஒரு நாட்டின் வளம் ,செல்வம் என்பதெல்லாம் நீண்ட காலம் நீடிப்பதில்லை . அன்று செல்வ வளமுடன் இருந்த நாடு , இன்று ஏழை நாடு .அன்று மனிதர்களே இல்லாமல் இருந்த நிலப்பரப்பு இன்று வளர்ச்சியடைந்த நாடு . அன்று அனைத்து விலங்குகளாலும் அடித்து துரத்தப்பட்ட மனித இனம் , இன்று  மற்ற அனைத்து விலங்குகளையும் அடித்து துரத்துகிறது ; இயற்கையைக் கட்டுப்பாடில்லாமல் அழிக்கிறது . எல்லாம் ஒரு சுழற்சி தான் போல . வரலாற்றைப் புரட்டும்போது இந்தியா ,ஒரு காலத்தில் மிகவும் அதிகமான செல்வ வளங்கள் நிறைந்த நாடாக இருந்திருக்கிறது . இந்தியாவை அடைய பல நாடுகளில் இருந்து கடல் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன . இந்தியாவை கண்டுபிக்கும் சாக்கில் கண்டறியப்பட்ட நிலப்பகுதிகள் அதிகம் . அப்படி வந்த மெக்காலே இங்கிலாந்தில் ஆற்றிய உரை சுவாரசியமானது .

1835 ம்  ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதியன்று பிரிட்டிஷ் பார்லிமென்டில் லார்டு மெக்காலே ஆற்றிய உரை இது :

"நான் இந்திய நாட்டை குறுக்கிலும் நெடுக்கிலுமாகச் சுற்றுப் பயணம் செய்து பார்த்துவிட்டேன் . எங்கும் ஒரு பிச்சைக்காரனையோ , திருடனையோ நான் காணவில்லை ! இந்திய நாடு ஏராளமான செல்வம் கொழிக்கும் ஒரு நாடு ! உயர்ந்த பண்பு நலன்கள் கொண்ட நாடு ! சிறந்த மனநலமும் குணநலமும் கொண்ட மக்கள் . இப்படி ஒரு நாட்டை நாம் வெற்றி கொள்ள முடியும் என்று நான் எண்ணவில்லை . அவ்வாறு நாம் இந்திய நாட்டை வெற்றி கொள்ள வேண்டுமானால் நாம் முதலில் அந்த நாட்டின் முதுகெலும்பாக உள்ள ,காலம் காலமாக வளர்ந்து வந்த ஆன்மீகத்தையும் , பண்பாட்டையும் உடைத்து எறிய வேண்டும் . எனவேதான் இந்தியாவின் பழமை மிக்க கல்வி முறையையும் இயல்பான பண்பாட்டையும் நாம் மாற்றி விட வேண்டும் என்று யோசனை கூறுகிறேன் .

இந்தியர்கள் தங்களது நாட்டையும் , தங்கள் மொழியையும் விட இங்கிலாந்து நாடும் , ஆங்கில மொழியும் சிறந்தது என நினைக்கும்படி நாம் செய்துவிட்டால் அவர்கள் தங்கள் கெளரவத்தையும்  சொந்த கலாசாரம் , பண்பாடு முதலியவற்றையும் இழந்து விடுவார்கள் . பிறகு நாம் எப்படி நினைத்தோமோ அப்படி அவர்கள் மாறிவிடுவார்கள் . அடிமைகளாகி  விடுவார்கள் . இந்தியா ஓர் உண்மையான அடிமை நாடாகிவிடும் ."

விடுதலை பெற்று இத்தனை ஆண்டுகள் கழித்தும் இன்னும் நாம் ஆங்கில மொழிக்குத் தான் அதிக மரியாதை கொடுக்கிறோம் . மக்களே கவனியுங்கள் , பிச்சைக்காரனோ ,திருடனோ கண்ணில் படவில்லையாம் . அப்படி வளம் மிகுந்த நாட்டை பல்வேறு படையெடுப்புகள் மூலம் கொள்ளையடித்துச் சென்றனர் . பிரிட்டிஷ்காரர்கள்  நிலையாக வியாபாரத் தளத்தை அமைத்து கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டி இனி கொள்ளையடிப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்தார்கள் . இந்தியாவின் வளம் குன்றாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக சுதந்திரம் கிடைத்திருக்காது . ஒரு நெடிய சுதந்திரப் போராட்டமும்  பல ஆயிரம் உயிர்களும் தேவைப்பட்டன அந்த சுதந்திரத்தைப் பெற . அப்படி வாங்கப்பட்ட சுதந்திரம் , சாதாரண இந்திய மக்களுக்கு பெரிய அளவில் எந்தப் பயனையும் தரவில்லை . சுரண்டலும் ,கொள்ளையடித்தலும் நிகழ்கிறது ,அன்று வெள்ளையர்களால் ,இன்று இந்தியர்களால் ,நாளை வெள்ளைக்காரர்களால் ?

இன்று இந்தியா தான் உலகின் மிகப்பெரிய சந்தை . எதைக் கண்ணில் காட்டினாலும் மறு பேச்சு இல்லாமல் வாங்கும் கூட்டம் அதிகமுள்ள நாடு இந்தியா . சாப்பாட்டை விட மற்ற விசயங்களுக்கு  அதிகம் செலவு செய்யும் மக்கள் நிரம்பிய நாடு . அதனால் , வணிக நிறுவனங்களின்  ஒரே நோக்கம் எப்படியாவது இந்தியாவில் கடை விரித்து லாபம் பார்ப்பது . அதற்கு எதை வேண்டுமானாலும் செய்ய பெரு முதலாளிகள் தயாராக உள்ளனர் . சின்ன உதாரணம் , வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் நுழைய மட்டும் 125 கோடி செலவு செய்துள்ளது . உள்ளே நுழையவே 125 கோடி என்றால் இந்தியாவின் சந்தை மதிப்பை கற்பனை செய்து கொள்ளுங்கள் . இந்தியாவை மறுபடியும் வெள்ளைக்காரர்கள்  உரிமையுடன் ஆளப் போகிறார்கள் .

இந்த விசயமெல்லாம் தெரியாத ஒரு மனுஷன், சமாதியில இருந்து எந்திருச்சு உட்கார்ந்து  கத்துறார் ,கத்துறார் .கேட்க நாதியே இல்லை .எல்லாப் பேரும்  கோடிகளில்  புரள்கிறார்கள் .அரசியவாதிகள் பணக் கோடிகளில் ,மக்கள் தெருக் கோடிகளில் . அதனால் அவர் கத்துவது யாருக்கும் கேட்கவில்லை . அவர் ஒன்றைத் தான் சதா புலம்பிக் கொண்டே இருக்கிறார்  .அது  "இப்படி ஒரு நிலை வரவா சுதந்திரம் பெற்றோம் . சுதந்திரம் பெறாமலே இருந்து இருக்கலாமே ! " என்பது தான் . அந்த வெவரம் கெட்ட மனுஷன் வேற யாரும் இல்ல நம்ம "காந்தி" தான் .

ரூபாய்க்கு மதிப்பு இருந்த வரை காந்திக்கும் மதிப்பு இருந்தது .ரூபாயின் மதிப்பு குறைந்து  கோடிகள் எல்லாம் சாதாரணம் என்றாகிவிட்ட நிலையில் இன்று காந்திக்கும் மதிப்பு இல்லை . காந்தியின் கொள்கைகள் எல்லாம் காணாமல் போய்விட்டன . காந்தி வளர்த்து  விட்ட " காங்கிரஸ் கட்சி " மட்டும் இன்று தேவைப்படுகிறது , ஊழல் மட்டும் செய்யவும் , கொள்ளையடிக்கவும் ,நாட்டை சகாய விலையில் விலை பேசவும் . இன்றைய  காங்கிரஸ் கட்சிக்கும் காந்திக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை . மக்கள் என்றால்  யார் ? அவர்கள் எப்படி இருப்பார்கள் ?என்று அறிவுப்பூர்வமான  கேள்விகள் கேட்கும் தகுதி உள்ளவர்கள் மட்டுமே இன்று காங்கிரஸ் கட்சியில்  இருக்கிறார்கள் . மக்களாட்சி என்பதற்கும் காங்கிரஸ் ஆட்சி என்பதற்கும் துளியும் தொடர்பில்லை . கிராமப்  பொருளாதரத்தை மேம்படுத்தாமல் வளர்ச்சியை கொண்டு வர முடியாது . வளர்ச்சி கீழிருந்து மேல் நோக்கியதாக இருக்க வேண்டும் .இந்தியாவில் வளர்ச்சி என்பது அந்தரத்தில் இருக்கிறது .

தேசிய ஒருமைப்பாடு என்பது மிகவும் மோசமடைந்து வருகிறது . தண்ணீர் ,மின்சாரம் ,இனம் ,பகுதி என்று பலவித பிரிவினைகள் . இந்தியன் எல்லா இடத்திலும் இந்தியனாக இல்லை . மின்சாரத்தைப் போல தண்ணீரையும் தேசியமயமாக்கினால் தான் என்ன ? எப்படியாவது பதவிக்கு வர வேண்டும் என்று நினைக்காமல் ,பல்வேறு பட்ட மக்கள் ,பல்வேறு கலாசாரங்களுடன் வாழும் இந்தியாவைப் பற்றி கொஞ்சமாவது அரசியல் கட்சிகள் நினைக்க வேண்டும் .இல்லையென்றால் இவர்கள்  பதவிக்கு வர எதுவும் இருக்காது .

ஆசையின் விளைவாக உலகில் நிகழும் மாற்றங்களை மெளனமாக பார்த்து ரசித்துச் சிரிக்கிறார் ,புத்தர் .

புத்தர் சிரிக்கிறார் !

பின் குறிப்பு :

உலகம் அழியுமா ? இப்போதைக்கு அழியாது . ஒரு காலத்தில் டைனோசர்கள் உலகை ஆண்டன .இன்று ,மனிதர்கள் ஆள்கிறார்கள் .நாளை ,வேறு ஏதாவது ஒரு விலங்கு உலகை ஆளலாம் . பூமி அழியவே அழியாதா .அழியும் ,சூரியன் என்று அழிகிறதோ அன்று பூமியும் அழிந்துவிடும் . மனிதர்கள் அழிந்தாலும் சூரியன் இருக்கும் வரை, பூமி உயிருடன் இருக்கும் என்று தான் தோன்றுகிறது .

நன்றி :- தினமணி

http://jselvaraj.blogspot.in/2012/12/blog-post_14.html

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக