புதிய பதிவுகள்
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_m10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram
ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_m10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10 
52 Posts - 42%
T.N.Balasubramanian
ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_m10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_m10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_m10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_m10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_m10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10 
2 Posts - 2%
prajai
ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_m10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_m10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_m10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_m10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10 
418 Posts - 48%
heezulia
ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_m10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10 
292 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_m10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_m10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_m10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10 
28 Posts - 3%
prajai
ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_m10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_m10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_m10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_m10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_m10ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 13, 2013 9:52 am

ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! 2ybdbnnSzm0bhmmVvKU3+tamil

சென்னையைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் புதுச்சேரியில் டெம்பிள் அட்வென்சர் என்கிற ஸ்கூபா டைவிங் பள்ளியை நடத்திவருகிறார். இவர்தான் முதன்முதலில் மேற்குறிப்பிட்ட சுவரை கண்டுபிடித்தார். இதுகுறித்து அவர், ‘‘ஸ்கூபா டைவிங் பயிற்சிக்காகவும் கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாணவர்களைத் தகுந்த உபகரணங்களுடன் கடலுக்கு அடியில் அழைத்துச் செல்வேன். அப்படி ஒருமுறை சென்றபோது யதேச்சையாக தட்டுபட்டதுதான் அந்த சுவர் போன்ற அமைப்பு. ஆரம்பத்தில் அதை இயற்கையான கடல் நிலவியல் அமைப்பு என்று நினைத்து, அதற்கு ‘அரவிந்த் வால்’என்று பெயரிட்டேன்” என்றார்.

இந்த விவரங்கள் ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தை நடத்திவரும் ஒரிசா பாலுவின் கவனத்துக்குச் சென்றது. அவர் சில மாதங்களாக அங்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அந்தச் சுவரில் இருந்து மண்ணையோ கல்லையோ பெயர்க்காமல் மேற்பார்வை ஆய்வுகளை செய்தார். அதில்தான் இது அழிந்துபோன சங்ககால தமிழ் துறைமுகமான எயிற்பட்டினம் என்பது தெரியவந்துள்ளது. ஆய்வு குறித்து அவர் நம்மிடம் பேசினார்.

‘தமிழர்கள் கடல் வழியாக உலக மக்களை எப்படி இணைத்தார்கள் என்பதையும் தமிழர் மற்றும் தமிழின் கலாச்சார தொன்மைகளையும் இதுபோன்ற ஆய்வுகள் மூலம் உலகுக்கு நிரூபிக்கலாம். தவிர, மீனவர் நலனுக்கும் இன்றைக்கு தமிழக மீனவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கும் இந்த ஆய்வுகள் மிக முக்கியம். ஏனெனில் கடல் கொண்ட அழிந்துபோன நகரங்களின் இடிபாடுகளால்தான் பவழப் பாறைகள் பெருமளவு உருவாகின்றன. இடிபாடுகளும் அதிலுள்ள பவழப் பாறைகளுமே மீன், குறிப்பாக சுறாக்கள் மற்றும் கடல் உயிரினங்களின் இனப்பெருக்கத்துக்கு உகந்த இடங்கள். அங்கு மீன் வளம் அபரிதமாக இருக்கும். அதனால், கடல் கொண்ட அழிந்துபோன நகரங்களைக் கண்டுபிடித்து அங்கு கழிவுகளைக் கொட்டாமல், செயற்கையாக வெப்பத்தை ஏற்படுத்தாமல், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாமல் அரசு பாதுகாத்தால் மீன் வளம், மீனவர் நலம் காக்கப்படும்.

மீனவர்கள் எல்லை தாண்டி சென்று ஆபத்துகளை சந்திக்க வேண்டியது இல்லை. எல்லாவற்றையும்விட இதுபோன்ற பகுதிகள்தான் சுனாமி போன்ற பேரழிவுகளின்போது பொங்கி வரும் பேரலைகளை ஆற்றுப்படுத்தி ஊரை காக்கும் அரண்களாக அமைகின்றன.

மேற்கண்ட சுவரை ஆய்வு செய்ததில் சுவரின் ஒரு பகுதி அரிக்கமேடு முகத்து வாரம் வரையிலும் அடுத்தப் பகுதி புதுச்சேரியின் எல்லையில் இருக்கும் நரம்பை வரை செல்கிறது. அதை ஒட்டி மரக்கலங்கள் சென்று வரும் வகையிலான ஒரு கால்வாய் இருந்ததற்கான தரவுகளும் கிடைத்துள்ளன. அதன்படி இந்த மதில் சுவர் ஒரு கோட்டையின் சுவராக அல்லது கடல் நீர் தடுப்புச்சுவராக இருக்கலாம்.

ஒரிசா பாலு ஏற்கெனவே குமரிக்கடலில் 130 கி.மீ. வரை 100 மீட்டர் ஆழம் வரை தேடியதில் கன்னியாகுமரியில் இருந்து 54 கி.மீ. தொலைவில் கடலின் 40 மீட்டர் ஆழத்தில் 22 கி.மீ. அகலமும் 44 கி.மீ. நீளமும் கொண்ட அழிந்துபோன ஒரு தீவு நகரம் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அந்த நகரத்தை கிரேக்கர்கள் ‘மரிக்கனா’என்று குறிப்பிட்டுள்ளனர். தவிர, பூம்புகார் கடலில் 21 கி.மீ. வரை 65 இடங்களில் அழிந்துபோன நகர இடிபாடுகளையும் கண்டுபிடித்தவர். தவிர அரிக்கமேடு ஆய்விலும் இவரது பங்கு அதிகம்.

மேற்கண்ட சுவரை ஆய்வு செய்ததில் சுவரின் ஒரு பகுதி அரிக்கமேடு முகத்து வாரம் வரையிலும் அடுத்தப் பகுதி புதுச்சேரியின் எல்லையில் இருக்கும் நரம்பை வரை செல்கிறது. அதை ஒட்டி மரக்கலங்கள் சென்று வரும் வகையிலான ஒரு கால்வாய் இருந்ததற்கான தரவுகளும் கிடைத்துள்ளன. அதன்படி இந்த மதில் சுவர் ஒரு கோட்டையின் சுவராக அல்லது கடல் நீர் தடுப்புச்சுவராக இருக்கலாம்.

புவியியல் ஆய்வுகளின்படி இந்த இடம் வங்கக் கடல் விழுங்கிய சங்க கால நகரமான எயிற்பட்டினம். அதற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியமான எட்டுத் தொகையின் பாடல்களில் இருக்கிறது. இந்த தகவல்களைக் கொண்டு தமிழக தொல்லியல் துறையும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகமும் இந்திய கடல் சார் தொல்லியல் துறையும் தகுந்த ஆய்வுகளை மேற்கொண்டு, இந்தப் பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவிர, இந்த சுவருக்கு 10 ஆயிரம் ஆண்டுகள் தொடங்கி 25 ஆயிரம் ஆண்டுகள் வயது இருக்க வேண்டும். அது உறுதிப்படுத்தப்பட்டால் உலகின் முதல் கட்டடக் கலை தமிழர்களுக்குச் சொந்தமானது என்பதும் நிருபிக்கப்படும்” என்றார்.

எயிற்பட்டினத்தைப் பற்றி சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகையின் சிறுபாணாற்றுப்படை நூலில் பாடல் இருக்கிறது. அப்போது எயிற்பட்டனத்தை ஆண்ட ஒய்மானாட்டு நல்லியக்கோடனை, சங்கப்புலவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் புகழ்ந்து அந்தப் பாடலை எழுதியிருக்கிறார். அந்த பாடலில் ‘மதிலொடு பெயரியப் பட்டினம்’என்று இந்த ஊரை குறிப்பிடுகிறது.

மதில் என்னும் சொல்லுக்கு ‘எயில்’என்றும் பெயர் உண்டு. அதனால், அவ்வூர் எயிற்பட்டினம் ஆயிற்று. அக்காலத்தில் பிரபலமான துறைமுக நகரமாக விளங்கிய இவ்வூருக்கு சீனர்களும் கிரேக்கர்களும் வந்து வணிகம் செய்திருக்கின்றனர். கிரேக்கர்கள் இந்த ஊரை ‘சோபட்மா’என்று குறிப்பிட்டுள்ளனர். ‘சோ’என்னும் சொல் மதிலைக் குறிக்கிறது.

நத்தத்தனாரின் சங்க இலக்கியப் பாடலில் நெய்தல் நகரமான எயிற்பட்டினத்தில் ஒட்டகங்கள் தூங்குவதுபோன்ற பெரிய மரக்கலங்கள் எயிற்பட்டினத்தில் இருந்து சீறியாழ்பாணன் வரை இருந்ததாகவும் வரிசையாக நின்றதாகவும், எயிற்பட்டினத்தில் அன்னப்பறவைகள் வடிவத்தில் தாழம்பூக்கள் பூத்ததாகவும் அங்கு சுவையான சுட்ட மீனும் பழம்பேடு (பழச்சாற்று கள்) கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். - திஹிண்டு 12-10-2013

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 13, 2013 9:56 am

வாசகர்களின் பின்னூட்டங்கள்:-

தி.நெடுஞ்செழியன்
தமிழர்களின் தொன்மையை நிலைநிறுத்த இதுபோன்ற கடலியல் ஆய்வுகள் இன்னும் வேகமாகச் செயல்படவேண்டும். ஒரிசா பாலு அவர்களின் அயராத உழைப்பு தமிழர்களின் தொன்மையைப் பறைச்சாற்றும். விரிவான செய்தியை வெளியிட்ட தி இந்துவிற்கு நல்வாழ்த்துகளும் பாராட்டுகளும் என்றும் உரியன.

Vijay Venkatesh
அருமையான கண்டுபிடிப்பு !! வழக்கம் போல் இந்திய அரசு இதை கண்டுகொள்ளாது !! நாம் தான் எதாவது செய்ய வேண்டும்.

M.N.VENKATESAN
இது போன்ற வரலாற்று செய்திகள் தமிழில் இல்லையே... என்று ஏங்கி கிடந்த தமிழர்களுக்கு தமிழ் இந்து வரபிரசாதமாக வந்துள்ளது. எயிற்பட்டின ஆராய்ச்சி தமிழக மற்றும் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நன்றி தி இந்து.

அசின் தங்கராஜ், கழுகுமலை.
"...எட்டுத் தொகையின் சிறுபாணாற்றுப்படை..." என்று கட்டுரை ஆசிரியர் குறிப்பிடுகிறார். அது தவறு. சிறுபாணாற்றுப்படை பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.

Shankar Raju Shastry
தமிழர்களின் பழைய வரலாறுகள் இன்னும் உலகிற்கு அதிகம் தெரியபடுத்த வேண்டியிருகிறது. இதுவரை கண்டுபிடித்தது ரொம்ப குறைச்சல். நம் தமிழர்கள் வரலாறு மிகவும் பெரியது. பல ஆயிரம் வருடம் பழமையானது. கட்டிட கலை முதல் கணக்கு வரை, விவசாயம் முதல் விந்ஞ்சானம் வரை பலவற்றை உலகிற்கு அறிமுகபடிதியது தமிழ். நம் அரசு இத்தகைய வரலாறுகளை தேடி கண்டுபிடிக்க உதவ வேண்டும். மதிய அரசும் பாரபட்சம் இல்லாமல் இந்த அராய்ச்சியலர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.

Ponniah Rajamanickam
அருமையான கண்டுபிடிப்பு. ஆனால் காலக் குறியீடுகள் தான் குழப்பம் தருகின்றன. சஙக இலக்கியங்கள் காலம் 10000 அல்லது 25000 அல்ல. காவேரிப்பூம்பட்டினம் ஒரு சுனாமியில் மூழ்கிய காலத்தில் இது நடைபெற்று இருக்கலாம். ஆராய்ச்சியாளர்கள் அறிவியல் பூர்வமாக ஆய்வு செலுத்துவதில் கவனம் செலுத்தவேண்டும். உணர்ச்சிகளைக் கைவிட வேண்டும்

Jambulingam Balagurusamy Superintendent at TAMIL UNIVERSITY, THANJAVUR
ஆழ்கடலில் புதையுண்ட வரலாற்றைத் தேடிச் செல்லும் ஆய்வாளர்களுக்கும், அறிஞர்களுக்கும் நாம் கைகொடுப்பது அவசியம். வரலாற்றுப்பக்கங்களில் மிகச் சிறந்த பதிவாக அமையப்போகும் இச்சாதனையைப் படைத்தவர்களுக்குப் பாராட்டுகள். பணி தொடரட்டும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82727
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 13, 2013 10:03 am

ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! 103459460 

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 13, 2013 10:44 am

இதை தானே நான் தேடிக்கிட்டிருந்தேன்.

இவரின் விலாசம் அல்லது தொலைபேசி எண் எதாவது கிடைக்குமா? நண்பர்கள் கொடுத்து உதவுங்கள். நானும் அந்த டைவிங் சென்று கடலுக்கு அடியில் உள்ள நமது பண்டைய நாகரீகத்தை தாங்கிநிற்கும் சுவரை அல்லது ஒருசில இடிபாடுகளையாவது பார்க்கவேன்டும் என்பது எனது தனியாத தாகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக