ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா

Go down

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா Empty 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா

Post by T.N.Balasubramanian Thu Oct 10, 2013 7:08 pm

 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு -
அதில் பல வில்லங்கமான விவகாரங்கள்  வெளிவரக் காரணமாக இருந்த (பெண் தொழிலதிபர் ?)-அரசியல் புரோக்கர் நீரா ராடியாவை நினைவிருக்கிறதா ?
2008-ல் மத்திய நிதியமைச்சகத்துக்கு -வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக சில புகார்கள்
வந்ததைத் தொடர்ந்து, வருமான வரி இலாகாவிற்கு  அதை தீவிரமாக விசாரணை  செய்யும்படி நிதியமைச்சகம் உத்திரவு இட்டது.

அதைத் தொடர்ந்து, வருமான வரி இலாகா,மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி
பெற்றுக் கொண்டு, முதலில் ஆகஸ்ட் 20, 2008 முதல் 120 நாட்களுக்கும்,பின்னர் மே 2009-ல் மேலும் 120 நாட்களுக்கும்நீரா ராடியாவின் தொலைபேசி அழைப்புகளை -
புலன் விசாரணைக்காக பதிவு செய்தது.

இந்த பதிவுகளிலிருந்து சில பகுதிகள் தான் முன்புவெளியாகி, திருவாளர் ராஜா, திருமதி கனிமொழி,தொழிலதிபர் ரத்தன் டாட்டா போன்றவர்களை  தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கியது !
மொத்தம் 5851 தொலைபேசி அழைப்புகள் கொண்ட இந்த தொகுப்பில் இன்னும் என்னென்ன ரகசியங்களும்,அதிர்ச்சிகளும் அடங்கி இருக்கின்றன என்பது 
யாருக்கும் முழுமையாகத் தெரியாது.ஏனெனில், இதை இன்னும் முழுமையாகக் 
கேட்டவர்கள் யாரும் கிடையாது ..!!

நேற்று முன்தினம் (செவ்வாயன்று) உச்சநீதிமன்றத்தில்,சிபிஐ ஒரு இடைக்கால அறிக்கையை அளித்தது.இதுவரை 25% அழைப்புகள் தான் பரிசீலனை செய்யப்பட்டிருக்கின்றன என்றும் முழுவதையும்  பரிசீலனை செய்து முடிக்க இன்னும் குறைந்த பட்சம் 3 மாத கால அவகாசமும்,வருமான வரி இலாகாவிலிருந்துசில அதிகாரிகளின் உதவியும் தேவைப்படும் என்றும்சிபிஐ தன் அறிக்கையில் கூறி இருக்கிறது.
சமரிப்பிக்கப்பட்ட  இடைக்கால அறிக்கையில்  உள்ள சில அதிர்ச்சியான விவரங்கள் -- பல அந்தரங்கமான உரையாடல்கள் இதில் அடங்கி இருக்கின்றன.- இவற்றில் அடங்கி இருக்கும் சில தகவல்கள்  வெளியாவது – நாட்டின் பாதுகாப்பை  பலவீனப்படுத்தக்கூடியதாக இருக்கலாம். இதுவரை ஆராய்ந்ததில் (25% பகுதி மட்டும்),
நீரா ராடியா பலத்த வருமான வரி மோசடியில் ஈடுபட்டிருக்கிறார் -
அவருக்கு கிடைத்த பல கோடி ரூபாய் தொகைகள் -வருமானத்தில் இருந்து மறைக்கப்பட்டிருக்கின்றன.சரியான தொகை இன்னும் தெரியவில்லையென்றாலும்,இவை பல நூறு கோடிகள் இருக்கலாம்.
தனக்கு கிடைத்த -கணக்கில் காட்ட முடியாத கருப்புப்பணத்தை -130 வெவ்வேறுபட்ட தொகைகளை -வெவ்வேறு நபர்களிடமிருந்து கடனாகப் பெற்றதாக  தனது வருமான வரி கணக்கில் காட்டியுள்ளார்.(கடனாக வந்த தொகைகளுக்கு வருமான வரி கட்டவேண்டியதில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு அவை திரும்பக் கொடுக்கப் படாத கடனாக -ஜீரணம் ஆகி விடும் !)
அவரது இந்த கோடிக்கணக்கான வருமான வரிமோசடிக்கு, வருமான வரி இலாகாவில் பணி புரியும் – அவருக்கு மிகவும் நெருங்கிய சிலரும் துணையாக இருந்திருக்கிறார்கள் என்பது – நீரா ராடியாவுக்கும்அவர்களுக்கும் நிகழ்ந்த சில உரையாடல்களிலிருந்து
சிபிஐ தற்செயலாகக் கண்டுபிடித்துள்ள அதிர்ச்சித் தகவல்.

(இது போன்ற போலிக் கடன்களை, வருமான வரி இலாகாவால் வெகு சுலபமாக கண்டு பிடிக்க முடியும் - அதற்கென்றே சில நடைமுறைகள், வழிகள்அவர்களிடம் இருக்கின்றன.
ஆனால் – சம்பந்தப்பட்ட அதிகாரிகள்“கண்டு கொள்ள வேண்டிய விதத்தில்” 
கண்டுகொள்ளப்பட்டால் – இந்த கடன்கள் “கண்டு கொள்ளாமல்” விடப்படும் !!
நீரா ராடியாவிற்கு இதையெல்லாம் யாராவது சொல்லித்தர வேண்டுமா என்ன ?)

இது குறித்து உச்சநீதிமன்றம், வருமான வரி இலாகாவிற்கு கடுமையான கண்டனத்தைத்
தெரிவித்துள்ளது. வருமான வரி மோசடி நிகழ்ந்திருக்கிறது என்று வந்த புகாரைத் தொடர்ந்து,
2008ஆம் ஆண்டிலேயே தொலைபேசி அழைப்புகளை பதிவும் செய்த வருமான வரி இலாகா,  கடந்த 4 ஆண்டுகளாக இதன் மீது ஏன் எந்தவித  மேல் நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று  கடுமையாக வினவி இருக்கிறது.

தற்போது கூட, 2ஜி ஊழல் தொடர்பாக எதாவது  தடயங்கள் கிடைக்கிறதா என்று சிபிஐ பரிசீலனை  செய்யும்போது, எதேச்சையாக – ஒரு விபத்து போல் தான் இந்த மோசடி குறித்த தகவல்கள்  கிடைத்திருக்கின்றன. 25 % பரிசீலனையிலேயே இவ்வளவு என்றால் – மொத்தத்தையும் பரிசீலனை செய்தால் இன்னும் என்னென்ன அதிர்ச்சிகள் வெளிவருமோ என்று வருமான வரி இலாகாவை  கடுமையாகச் சாடி தங்களது கண்டனத்தை பதிவு 
செய்திருக்கிறது உச்சநீதி மன்றம்.

இதில் வேடிக்கை என்னவென்றால் -நீரா ராடியா மீது இதுவரை 2ஜி வழக்கிலும் சரி, அவரது   வருமான வரி மோசடி குறித்தும் சரி -எந்தவிதமான வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
ஒரு F.I.R. கூடக் கிடையாது !

அவரும் தன் கடையை மூடிவிட்டு - குஷியாக வெளிநாடு போய் செட்டிலாகி  விட்டார்.     சம்மன் வரும்போது மட்டும் டூரிஸ்ட் போல் வந்து சாட்சி சொல்லி விட்டு, மீண்டும் பறந்து    போய் விடுகிறார்.
(கென்யாவில் பிறந்து,  லண்டனில் படித்து -இந்தியாவில் தொழில் அதிபராக அவதாரம்    எடுத்தவர் -இங்கே விவகாரங்கள் எசகுபிசகாக  வெளி வந்ததும் - வியாபாரத்தை 
முடித்துக்கொண்டு வெளியேறி விட்டார் !)


இது போன்ற விசித்திரங்கள் நம் நாட்டைத்தவிர உலகில் வேறு எங்கேயாவது நடக்குமா ?
இல்லை நடந்தால் மக்கள் தான் சகித்துக் கொள்வார்களா ? என்ன இருந்தாலும் நம்மவர்களின் பொறுமை மகத்தானது - ஈடு இணையே இல்லாதது !!

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நீரா ராடியா ,
Danger ஆன lady யா 
ரமணியன் 



நன்றி-காவிரிமைந்தன் 
 


Last edited by T.N.Balasubramanian on Thu Oct 10, 2013 7:14 pm; edited 1 time in total (Reason for editing : comments)
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum