Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்by heezulia Today at 12:01 pm
» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏன் இந்த பாகுபாடு??
+3
ayyasamy ram
ராஜா
அருண்
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஏன் இந்த பாகுபாடு??
First topic message reminder :
முகநூலில் சில நாட்களுக்கு முன்பாக நண்பர் ஒருவர் பதிவிட்டு இருந்தார்.அதாவது வெளிநாடுகளில் இருந்து,அதிலும் குறிப்பாக அமெரிக்க,ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பயணிக்கும் போது, ஒரே விமானமாக இல்லாமல் முதலில் துபாய் அல்லது சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு வந்து,மீண்டும் அங்கிருந்து மற்றுமொரு விமானத்தில் இந்தியாவை நோக்கி பயணிப்பவர்களே அதிகம்.காரணம் நேரடி விமானங்களில்,விமான கட்டணம் அதிகமாக இருக்கும் வாய்ப்புண்டு.
அப்படி நாம் பயணிக்கும் தருணங்களில்,அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் இருந்து துபாய், சிங்கப்பூர் வரும் விமானங்களில் விமான பணிப்பெண்கள்,மிக அருமையாக கவனிக்கிறார்கள்.ஏதாவது உதவி கேட்டால் உடனடியாக பதிலளிப்பார்கள். ஆனால் அதே விமான சேவையைப் பயன்படுத்தி சிங்கப்பூர் ,துபாய் போன்ற நாடுகளில் இருந்து இந்தியா நோக்கி வரும் போது விமான பணிப்பெண்களின் செயல்பாடுகள் சரி இல்லை,சரிவர கவனிப்பதில்லை,உதவிகள் கேட்டால் உடனே பதில் தருவதில்லை, அலட்சியமாக நடந்து கொள்கிறார்கள்.ஏன் இந்த பாகுபாடு? என்று கேட்டு இருந்தார்.
இந்த பாகுபாட்டை பலர் நேரடியாகவே பார்த்திருக்கும் வாய்ப்பு உண்டு.
மிக நியாயமான கேள்வியும்,கோபமும் தான்!
விமான சேவைகளில் ஒருபோதும் பாகுபாடு இருக்க கூடாது. வாடிக்கையாளருக்கான சேவை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க இயலாது.
ஆனால் அடிப்படையில் பொதுவாகவே மேற்கத்திய நாடு, ஆசிய நாடு என்றவுடன் ஒரு பாகுபாடு இருக்கிறது என்பதை மறுக்க இயலாது.இது கிட்டத்தட்ட நம் ஊர் கடைகளில், பொது தளங்களில் கோட்டும், சூட்டும் போட்டவனுக்கு உள்ள மரியாதைக்கும், கோவணம் அல்லது வேட்டி கட்டியவனுக்கு கொடுக்கப்படும் மரியாதைக்கும் உள்ள வித்தியாசம் போலவே.
இன்னொரு சரியான உதாரணம் சொல்ல வேண்டுமானால், நுனி நாக்கு ஆங்கிலம் அல்லது ஆங்கிலம் எழுபது சதவிகிதம்,தமிழ் முப்பது சதவிகிதம் கலந்து தங்க்லீஷ் என்ற புதிய மொழியில் பேசுபவர்கள் அனைவரும் அறிவாளிகள், உயர்ந்தவர்கள், தமிழில் முழுமையாக பேசுபவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்பது போல வளர்த்தெடுக்கப்பட்ட பொதுப் புத்தியைப் போன்ற முட்டாள்தனம்! இது ஒரு அடிமைப் புத்தி!
தமிழ் தெரிந்தவனோடு,தமிழில் பேசுவதற்கு கூச்சப்படும்,அது அவமானம் அல்லது நாகரீக குறைவு என்றெண்ணும் தமிழ்நாட்டு தமிழர்களை,என்னென்ன அசிங்கமான வார்த்தைகளை கொண்டு அர்ச்சித்தாலும் தகும்.இந்த அடிமைப் புத்தியைப் போலவே மேற்கத்தியர்கள்,ஆசிய நாட்டவர் என்ற பாகுபாடு.
ஆனால் இந்த அடிமைப் புத்தியையும் தாண்டி,விமானங்களில் நம்மவர்கள் செய்யும் அட்டூழியங்களும், சிலர் நடந்து கொள்ளும் விதமும் கூட இந்த சேவை குறைபாட்டுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்பது,நூறு முறைக்கு மேல் சர்வதேச விமானங்களில் பயணித்த என் அனுபவத்தின் மூலம் ஓரளவுக்கு கணிக்க முடிகிறது.
மதிப்பும்,மரியாதையும் நாம் நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது.
லண்டனில் இருந்து இந்தியா வரும் போது,துபாய் வழியாக வந்த எமிரேட்ஸ் விமான சேவையில்,எந்த குறைபாட்டையும் காண இயலவில்லை.மீண்டும் விடுமுறைக்கு பிறகு,இந்தியாவில் இருந்து லண்டன் நோக்கிய பயணம்.
திருவனந்தபுரத்தில் இருந்து துபாய்,துபாயில் இருந்து லண்டன்,அதே எமிரேட்ஸ் விமான சேவை.இந்த விமான பயணம் தான்,என் வாழ்வில் மறக்க முடியாத மிக மோசமான பாடங்களையும், படிப்பினைகளையும் கற்றுத் தந்த பயணம்.
திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் கிளம்பிய சற்று நேரத்தில்,சரக்கு சரக்கு என்று தொடர் கூச்சல். மீண்டும் மீண்டும் சரக்கு என்று இவர்கள் கேட்க,எக்கானமி வகுப்பில் பயணம் செய்பவர்களுக்கு,குறிப்பிட்ட அளவு மது தான் பரிமாறப்படும் என்று பணிப்பெண் சொல்கிறார்.விஸ்கி, பிராந்தி, ரம் போன்ற மதுபானங்களுக்கு பதிலாக பீர் வேண்டுமானால் தருகிறேன் என்று அந்த பெண்கள் சொல்ல, இல்லை இல்லை எங்களுக்கு விஸ்கி தான் வேண்டும் என்று இவர்கள் கெஞ்சுகிறார்கள்.விட்டால் அவர்கள் காலில் கூட விழுவதற்கு தயாராய் இருக்கிறார்கள்.
பல நேரங்களில் விதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாகவே,அந்த பணிப்பெண்கள் மது கொடுத்தாலும் கூட,நம்மவர்கள் விடுவதில்லை.மீண்டும் மீண்டும் எழுந்து நின்று கொண்டு, மேடம் மேடம் என்று அவர்கள் கையைத் தொட்டு கூச்சலிடுவதை பார்த்து, அந்த பெண்களே கடும் எரிச்சலை வெளிப்படுத்துகிறார்கள்.
அடுத்து சாப்பாடு நேரம்.. சாப்பாடு வைத்திருக்கும் வண்டியை பாதையில் நிறுத்தி இருப்பார்கள். பாதையின் இருபுறமும் உள்ள பயணிகளுக்கு சாப்பாட்டை பரிமாறுவார்கள்.
அவ்வாறு அந்த பணிப்பெண்கள் ஒருபக்கமாக பரிமாறும் போதே,மறு பக்கத்தில் இருக்கும் நம்மவர்கள் சாப்பாட்டை திருடுகிறார்கள்.இரண்டு பிரியாணி,மூன்று பிரியாணி என்பதைத் தாண்டி,வைத்திருக்கும் பழங்களை,ஐஸ்கிரீமை,மிட்டாய்களை திருடுகிறார்கள்.
போதை உச்சத்துக்கு ஏற, திருடிய ஐஸ்கிரீம்கள் கையில் இருந்து தவறி,கீழே விழுந்து தரை விரிப்புகளை நாசம் செய்ய, அதைத் தொடர்ந்து தரையில் சிந்திய ஐஸ்கிரீமை நானே துடைத்து விடுகிறேன் பார் என்ற அளவில், விமானத்தில் கொடுக்கப்பட்ட கம்பளியை வைத்தே அந்த மனிதர் துடைக்க,விமான பணிப்பெண்கள் விட்டு விடுங்கள் என்று கதற, இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க நமக்கும் கொஞ்சம் அல்ல நிறையவே பொறுமை வேண்டும்.
பல நேரங்களில் அந்த விமான பணிப்பெண்கள் இவர்களின் தொல்லை தாங்காமல், வேறு ஆண் விமான பணியாளர்களை இவர்கள் பக்கம் வர சொல்லி விட்டு, ஒதுங்கி கொண்டார்கள். அவர்களின் முணு முணுப்பு அவர்களின் கோபத்தையும்,எரிச்சலையும் வெளிப்படுத்தியதை நாம் காண தவறவில்லை.
மொத்தத்தில் விமானத்துக்கு செலவு செய்த பயணசீட்டு தொகையை சரக்கிலும்,சாப்பாட்டிலும் எப்படியாவது கழித்து விட வேண்டும் என்ற கொலை வெறியில் வந்த பல பயணிகளை பார்த்த பிறகு, நமக்கு வந்த கோபத்தின் அளவு சொல்ல இயலாது.
விமானம் தரையிறங்குவதற்கு முன்பாகவே எழுந்து நின்று கொண்டு, தங்கள் பைகளையும், பெட்டிகளையும் எடுத்துக் கொண்டு எதோ வேகமாக ஆபீஸ் போற மாதிரி அவசரம் காட்டுவதும், பணிப்பெண்கள் அவர்களை அமர சொல்லி பலமுறை சத்தம் போடுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இந்த பண்பாடும், நாகரிகமும், நடந்து கொள்ளும் விதமும் தான்,நம்மீது மற்றவர்கள் வைத்திருக்கும் மரியாதையை தீர்மானிக்கும்.வெளிநாடுகளில் வேலை செய்யும்,இந்தியர்களின் பழக்க வழக்கமும்,நேர்மையும்,பண்பாடும் தான் நம் தேசத்தின் மீதான நன் மதிப்பை பெற்றுத் தரும்.
இந்த விமானசேவை குறைபாட்டுக்கான பதிலை,நண்பரின் பக்கத்தில் இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்று பதிந்தேன். அவ்வளவு தான். வளைகுடா நாட்டில் வேலை செய்யும் நபர் ஒருவர், இது வளைகுடா நாட்டில் வேலை செய்யும் இந்தியர்களை கேவலப்படுத்தும் செயல்.
உலகுக்கே மரியாதையும், பண்பாடும் கற்று தந்தவன் தமிழன், இந்தியன் என்று இந்தியாவின் பெருமைகளை எல்லாம் அடுக்கி கொண்டே போனார். அவரால் நான் சொன்ன குற்றசாட்டுகளை ஜீரணிக்க முடியவில்லை.அதற்கு அவர் சொன்ன பதில்கள் ஏற்க தக்கதாக இல்லை. அதாவது வளைகுடா நாட்டில் வேலை செய்யும் இந்தியர்கள் ஏழைகள்,சாதாரண வேலைகளுக்கு செல்லும் கூலித் தொழிலாளிகள். படித்தவர்கள் அவர்களை குறை சொல்லுவது அகங்காரம் என்றெல்லாம் சொன்னார். அத்தோடு இல்லாமல் இது ஒரு கட்டுக் கதை என்றும் சொல்லி இருந்தார்.
நான் கண்ட காட்சிகள் அத்தனையும் உண்மை.இந்த சம்பவங்களை செய்தவர்கள் தமிழர்கள்,மலையாளிகள் என்று நான் பிரித்து பார்க்கவில்லை.அவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று எனக்கு தெரிந்திருந்தாலும் கூட, அதைப் பதிவது இங்கு தேவையற்றது என்றே எண்ணுகிறேன். இதை படித்தவர்கள்,படிக்காதவர்கள் என்ற பாகுபாட்டில் சொல்லவில்லை.
மேலைநாடுகளில் படித்தவன்,படிக்காதவன் என்ற பாகுபாடெல்லாம் நான் அதிகமாக பார்த்தது இல்லை. ஆனால் பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில்,எல்லோரும் ஒரே மாதிரியாக தான் நடந்து கொள்கிறார்கள்.
இங்கே படித்தவன், படிக்காதவன் என்பதல்ல சிக்கல். உலகுக்கே நாகரிகமும், பண்பாடும் கற்று தந்தவர்கள் தமிழர்கள்,இந்தியர்கள் என்று எப்போதும் வெறும் பெருமை பேசினால் மட்டும் போதாது.அந்த நாகரீகத்தையும், பண்பாட்டையும் நாம் காத்துக் கொள்ள வேண்டும். நாம் சொல்லாமலேயே, நம் நடத்தைகள் மற்றும் செயல்பாடுகள் நம் பண்பாட்டையும், நாகரீகத்தையும் மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
குடும்பங்களை பிரிந்து, வளைகுடா நாடுகளில் சாதாரண வேலைகளுக்கு, கூலித் தொழிலாளிகளாய் செல்பவர்கள் நிலவரம் என்ன என்பதை மற்றவர்கள் யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.காரணம் என் தகப்பனார் இருபது ஆண்டுகள் வளைகுடா நாடுகளில் கூலித் தொழிலாளியாய் வேலை செய்தவர்.அதற்காக அவரும் இது போன்று நாகரீக குறைவாக நடந்து கொண்டால் அதை சரி என்று ஏற்க இயலுமா?
குறைகள் ஒருபுறம் இருக்க, உணர்வு மிகுந்த இன்னொரு அனுபவத்தையும் நான் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.அதே விமானத்தில் எனதருகில் உட்கார்ந்திருந்த நபர் எதுவும் பேசாமல் அமைதியாகவும்,சோகமாகவும் இருந்தார்.என்னாச்சு அண்ணே என்று கேட்க, கத்தாரில் கொத்தனாராக வேலை செய்கிறேன். மூன்று ஆண்டுக்கு பிறகு ஆறுமாத கால விடுமுறைக்காக ஊருக்கு வந்து விட்டு திரும்பி செல்கிறேன்.
மூன்று சின்ன சின்ன குழந்தைகள் எனக்கு.அவர்களை பிரிந்து செல்ல எனக்கு மனம் இல்லை.வேறு வழியில்லாமல் நான் திரும்பி செல்கிறேன் என்று உணர்ச்சி மிகுந்து,அவர் சொன்ன குடும்ப கதையை கேட்டதும், என்னையறியாமல் ஒரு சோகம் என்னை தொற்றிக் கொண்டது. காரணம் அந்த உண்மை கதைக்கும்,எனக்குமான தனிப்பட்ட சம்ம்மந்தம் அந்த வலியை என்னால் உணர முடிந்தது.அவர் எந்த ஆர்ப்பாட்டமும் செய்யாமல் அமைதியாகவும்,கவலையோடும் அமர்ந்திருந்தார்.
இப்படிப்பட்ட நெகிழ்ச்சியான நல்ல அனுபவங்களும் பலமுறை கிடைத்ததுண்டு!
இயல்பாக அவரவருக்கு வர வேண்டிய நாகரீகம்,இல்லாத பட்சத்தில் மற்றவர்களை பார்த்தாவது அதைக் கற்றுக் கொண்டால் உத்தமம்.
இந்தியாவை அவமானப்படுத்த வேண்டும் என்பதல்ல என் நோக்கம். நல்லவிடயங்களை எங்கிருந்து வேண்டுமானாலும்,யாரிடம் இருந்து வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு வேண்டும்.
விமான சேவைகளில் ஏன் இந்த பாகுபாடுகள் என்று குறை பட்டுக்கொள்ளும் நாம், அதே வேளையில் இது போன்ற நாகரீக குறைபாடுகளும்,அதற்கான ஒரு காரணமாக இருக்கலாம் என்பதையும் கட்டாயம் மனதில் கொள்ள வேண்டி இருக்கிறது!
//**இது என் அனுபவத்தில் நான் உணர்ந்த விடயம்! இது மட்டும் தான் காரணம் என்பதல்ல..**//
திருக்குறள்:
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.
விளக்கம் :
ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர் தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
-ஆன்டனி வளன்

அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ஏன் இந்த பாகுபாடு??
ராஜா, அருண், சிவா, பாலாஜி - எனக்கு விசா, டிக்கட் அனுப்புங்க - பறந்து (மதுவுக்கு பறக்க மாட்டேன், அம்மா புண்ணியத்துல இங்க நிறையவே கிடைக்குது) பார்த்துட்டு சொல்லுறேன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஏன் இந்த பாகுபாடு??
பாஸ் நம்பிட்டோம் நீங்க தான் உலகம் சுற்றும் வாலிபன் ஆச்சே..யினியவன் wrote
ராஜா, அருண், சிவா, பாலாஜி - எனக்கு விசா, டிக்கட் அனுப்புங்க - பறந்து (மதுவுக்கு பறக்க மாட்டேன், அம்மா புண்ணியத்துல இங்க நிறையவே கிடைக்குது) பார்த்துட்டு சொல்லுறேன் புன்னகை
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பாகுபாடு !
» அறிவுக்கு ஏது பாகுபாடு.
» ஜீரோ பாகுபாடு, ஜீரோ எய்ட்ஸ்- இன்று உலக எய்ட்ஸ் தினம்!
» பாகுபாடு தீர்க்கப்படும் நாள்
» இரட்டை டம்ளர் பாகுபாடு; டீ கடைகாரர்கள் 3 பேர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum