புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்த் திரைப்படங்களில் மோசமான பாத்திர வார்ப்புகள்!
Page 1 of 1 •
இதுவா படைப்பு சுதந்திரம்?
ஒரு படைப்பாளி கவிஞனாக இருந்தால் - அவனது கவிதைகள் அறவயப் பட்டவையாக, ஆளுமை மிக்கவையாக, அறச்சீற்றம் கொண்டவையாக, அழகியல் உள்ளவையாக, சமூக அக்கறை நிறைந்தவையாக இருக்கும்பட்சத்தில் அவை வரவேற்கப்படுகின்றன; பின்பற்றப்படுவதற்கும், மேற்கோள்கள் காட்டப்படுவதற்கும் உரியவையாகி, நினைவுகளிலும் நூலகங்களிலும் பாதுகாக்கப்படுகின்றன.
ஒரு படைப்பாளி சிற்பியாக இருந்தால் - அவனது சிற்பங்கள் செய்நேர்த்தி மிக்கவையாக, செய்திகளைச் சொல்பவையாக, படைத்தவனின் கடுமையான உழைப்பாற்றலைப் பிரதிபலிப்பவையாக இருக்கும்பட்சத்தில் அவை ரசிக்கப்படுகின்றன, விலைகொடுத்து வாங்கப்படுகின்றன, கோயில்களில் நிலை நிறுத்தப்பட்டு வணங்கப்படுகின்றன.
ஒரு படைப்பாளி பெருங்கதை புனைபவனாக இருந்தால் - அவனது கதாபாத்திரங்கள் அறம் உரைப்பவையாக, மானுட வாழ்வியலை உணர்த்துபவையாக இருந்தால், அவை உயிருள்ள பாத்திரங்களாகவே உணரப்பட்டு உதாரணபுருஷர்களாக்கப்படுகின்றன. அவ்வகையில்தான் என்றைக்கோ எழுதப்பட்ட பல்வேறு வகையான இதிகாசங்களின் கதாபாத்திரங்கள் இன்றைக்கும் நம்முடன் உணர்வுபூர்வமாக உறவாடிக் கொண்டிருக்கின்றன.
நாவல் இலக்கிய உலகில் கதை மாந்தர்களாக வார்க்கப்பட்ட குறிஞ்சி மலர் "அரவிந்தன்', பொன்னியின் செல்வன் "வந்தியத்தேவன்', புத்துயிர்ப்பு "நெஹ்லூதவ்' போன்ற பல உன்னத கதாபாத்திரங்களை நாம் பட்டியலிட முடியும். போற்றிப் பின்பற்ற மட்டுமல்ல, எவரும் பின்பற்றக் கூடாத எச்சரிக்கைகளாகவும் சில கதாபாத்திரங்கள் வார்க்கப்படுவது உண்டு.
அந்தவகையில் கோடிக்கணக்கான மக்களை ஈர்த்துக்கொண்டிருக்கும் தற்போதைய தமிழ்த் திரைப்படங்களின் பாத்திர வார்ப்புகளில் மிகப்பெரியதொரு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இன்றைய திரைப்படங்களின் கதாநாயகர்களாக படைக்கப்படுவோரில் பெரும்பாலானவர்கள் குதர்க்கவாதம் செய்கிறார்கள். கூச்சம் எதுவுமற்று குழுவாகச் சேர்ந்து மது குடிக்கிறார்கள். பேசிக்கொண்டே சிகரெட்டைப் பற்றவைத்து, புகைப்பது என்பது வாழ்வியலோடு இரண்டறக் கலந்திருக்க வேண்டிய இயல்பான நடைமுறையென்று மறைமுகமாக உணர்த்துகிறார்கள். பெற்றோருக்கும் குடும்ப உறவுகளுக்கும் எவ்வகையிலும் கட்டுப்பட மறுக்கிறார்கள். அவர்கள் கல்லூரிகளில் படிப்பதாகக் காட்டப்பட்டால், அங்கு படிப்பது ஒன்றைத்தவிர மற்ற எல்லாவற்றையும் செய்கிறார்கள். குறிப்பாக, பெண்களை விரட்டி விரட்டிக் காதலிக்கிறார்கள். தங்களது ஆசிரியர்கள் உள்பட அனைவரையும் கேலி செய்கிறார்கள்.
எதைச் செய்தேனும் "எடுபட்டு' விடவேண்டும், "பெருவெற்றி' பெற வேண்டும் என்கிற வணிக வலுக்கட்டாயமே தமிழ்த் திரையின் படைப்பாளிகளை இப்படியான கதாபாத்திரங்களை படைக்கும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது. இளவயது ஆண்களையும், பெண்களையும், மாணவ மாணவிகளையும் ஈர்த்து, திரையரங்கில் அவர்களைக் கைதட்டவைத்துப் பெருங்குரலில் சிரிக்கவும் வைத்துவிட்டால் நமது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிடும் என்கிற படைப்பாளிகளின் மனோ நிலையே இன்றைய "திரை'யின் கதாபாத்திர வார்ப்புகள் பெருவீழ்ச்சியடைந்ததற்கான முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது.
நமது சமூகத்தில் பிள்ளைகள் பதின்மவயதை அடையும்வரை அவர்களால் பெற்றோர்களுக்கு எத்தகைய சமூக இடர்பாடுகளும் நேர்வதில்லை. அதற்குப்பிறகு அதாவது பதிமூன்று வயது தொடங்கி ஏறக்குறைய இருபத்தைந்து வயதுவரை பெற்றோர்களுக்கு ஒவ்வாதவர்களாக மாறுகின்றனர். இன்று மிக எளிதாக வசப்பட்டு விட்ட அலைபேசி, இணையம், முகநூல் போன்ற தகவல் தொடர்பு ஊடக வசதிகள் இன்றைய பிள்ளைகளை, அவர்களது பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறவுகளோடு பேச விருப்பமற்றவர்களாக மாற்றிவிட்டன. அவர்களின் எதிர்கால வாழ்க்கை நலமாக அமைய வேண்டும் என்று கவலையுற்று கருத்து தெரிவிக்கிற, அல்லது கண்டிப்பு காட்டுகிற குடும்ப உறவுகளை, தங்கள் மகிழ்ச்சிக்கு எதிரானவர்களாகக் கருதத் தொடங்கியுள்ளனர்.
இன்றைய நமது பிள்ளைகள், பெற்றோர்களின் கருத்துகளுக்கும், கண்டிப்புகளுக்கும், அதற்கு முற்றிலும் எதிரான திரைக் கதாநாயகர்களின் தூண்டுதல்களுக்கும் இடையில் அகப்பட்டு அல்லற்படுகின்றனர்.
எதை எதை எடுத்துச் சொன்னால் இளையோரும் மாணவரும் உடனடியாக கேட்டுக்கொள்வார்களோ அதை மட்டுமே சொல்ல வேண்டும் என்பதிலும், எதை எதை எடுத்துக் காட்டினால் அவர்கள் பரவசப்பெருக்கடைந்து பார்ப்பார்களோ அதை மட்டுமே காட்ட வேண்டும் என்பதிலும், யார் யாரை தங்களுக்கு ஒவ்வாதவர்களாக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களைக் குறிவைத்துக் கேலி செய்கிற வேலையை மட்டுமே செய்யவேண்டும் என்பதிலும் இன்றைய நமது திரைப்படைப்பாளிகள் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள். போக்கிரித்தனங்கள் நிறைந்தவனாக, பொறுப்பற்றவனாக, குடிகாரனாக, உழைப்பதற்கு விருப்பமற்றவனாக, தனக்கு எவ்வகையிலும் பொருந்தாத தெருச்சண்டைகளில் பலரோடு மோதி வெல்பவனாக, வலிய வலியச் சென்று காதலிப்பவனாக சித்திரிக்கப்படுகிற ஒரு திரைப்பாத்திரம், அதுபோன்ற உணர்வுப் போக்குடைய இளைஞர்களுக்கான வலிமையான மறைமுக அங்கீகாரமின்றி, வேறு என்ன?
தங்களது பிள்ளைகள் நன்றாகப் படிக்கவேண்டும், படிப்புக்கேற்ற வேலைகளைப் பெற்று அவர்களின் வாழ்வு நலமாக அமையவேண்டும் என்பதுதான் நமது சமூகத்தில் பிள்ளைகளைப் பெற்ற அனைவரும் காண்கின்ற பெருங்கனவாகும். ஆனால், அவர்களது கனவுகளுக்கு முற்றிலும் முரணான குணக்கூறுகளைக் கொண்டவர்களைத்தான் அவர்களது பிள்ளைகள் திரையரங்குகளில் கதாநாயகன்களின் வடிவில் பார்த்து ரசித்துப் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது கசக்கின்ற ஒரு நிஜமாகும்.
குடும்பம் எனும் அமைப்பும் விதம் விதமான பணிப் பயிற்சி நிறுவனங்களும் கல்வி நிறுவனங்களும் சேர்ந்து பெரும் பொருள்செலவில் ஆண்டுக்கணக்கில் திட்டமிட்டு வடிவமைத்து உருவாக்கிவரும் இளைய சமுதாயச் சக்திகளை, அவர்களுக்கு வெளியே இருக்கிற ஓர் ஊடகம் ஒரே நாளில் மாற்றிவிடுகிறது. மது அருந்தக் கூடாது என்பதை எழுத்துகளின் வாயிலாகவும், வார்த்தைகளின் வாயிலாகவும் வலியுறுத்தி வாழ்நாள் முழுவதும் சொல்லிக் கொண்டிருக்கும் சமூகவியலாளர்கள், மது அருந்தும் காட்சிகளை விதம்விதமான கோணங்களில் வண்ணமயமாக ஒளி ஒலி காட்சிகளாகக் காட்டுகிறவர்களிடம் பரிதாபமாகத் தோற்றுவிடுகின்றனர்.
மது, புகை, வெட்டுக்குத்து வன்முறை, போக்கிரிக் கலாசாரம், பொத்தாம் பொதுவான பொறுப்பற்ற பகடித்தனங்கள் போன்ற அனைத்துக் கூறுகளுக்குமான மறைமுகமான விளம்பரப் பொதுமேடையாகவும் அவற்றையெல்லாம் உரத்த குரலில் அங்கீகரிக்கும் நிறுவனமாகவும் இன்றைய நமது தமிழ்த்திரை மாற்றப்பட்டுவிட்டது. இந்தக் கூறுகளோடு காதல் கவர்ச்சி போதையையும் போதுமான அளவுக்குக் கலந்து தந்து அது தன் வணிகத்தைப் பாதுகாத்துக் கொள்கிறது. திரைப்படங்களை வெறும் திரைப்படங்களாக மட்டுமே பார்த்துவிட்டு அவற்றில் இருந்து தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு சுயத்தோடு விளங்குகிறவர்களாக நமது பெரும்பான்மை மக்கள் இல்லை.
ஓர் இளைஞன் நல்ல தகுதிகள் ஏதுமற்றவனாக இருந்தாலும்கூட அவன் தான் சந்திக்கும் பெண்ணை விரட்டி விரட்டிக் காதலிக்கும் தகுதியை மட்டும் உடையவனாக இருக்கிறான் என்பதே கடந்த சில ஆண்டுகளாக நமது தமிழ்த்திரையுலகம் தமது கதாபாத்திரங்களின் வாயிலாக முன்வைக்கும் ஆணித்தரமான கருத்தாக இருக்கிறது.
உலகின் எந்த நாட்டுத் திரையுலகமும் காதலைப் பிடித்துக்கொண்டு இதுபோன்ற ஆட்டங்களை ஆடுவதில்லை. சில கோயில்களில் பம்பையும் உடுக்கையும் சேர்ந்து பரவசம் மிகுந்த இசையை வேகவேகமாக எழுப்பி சன்னதம் வந்து ஆடும் சாமியாடிகளை உருவாக்குவது போல, நமது தமிழ்த் திரைப்படங்கள் காதல் உடுக்கையை வேக வேகமாக அடித்து அடித்து காதல் சாமியாடிகளை உருவாக்கி அவர்களை வெறி நடனமாடி வீதி உலா வரச் செய்கின்றன. வேதனை மிகுந்த இத்தகைய போக்குகளின் விளைவுகளைத்தான் நம் சமூகம் அனுபவித்து வருகிறது. பெற்றோரும் அனுபவித்து வருகின்றனர். ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டு கற்பனை செய்தால் நமது தமிழ்த் திரையுலகின் ஒளிப்பதிவுக் கருவிகள், ஒலிப்பதிவுக் கூடங்கள், பாடல் பதிவுக் கூடங்கள் என ஒவ்வொன்றும் காதல் உணர்வு ஊற்றெடுக்கப் பயன்படுத்தப்படும் உடுக்கைகளாகவே தெரிகின்றன.
சிந்திக்கிற - படிக்கிற, மக்கள் குறைவாகவும், பார்க்கிற - கேட்கிற மக்கள் பெருவாரியாகவும் இருக்கிற நமது சமூகத்தில், அதிலும் படிக்கிற மக்களே கூட பார்க்கிற - கேட்கிற கலாசாரத்திற்குத் தங்களைப் பழகிக்கொண்டுவிட்ட இன்றைய சூழலில் ஊடகங்களிலேயே பெரும் ஊடகமாக } குறிப்பாக அனைத்து ஊடகங்களுக்கும் தாய் ஊடகமாக } நிலைபெற்றுவிட்ட திரைப்படத்தின் சமூகப்பொறுப்பு எத்தகையது என்பது உள்ளார்ந்த அக்கறையோடும், தொலைநோக்கு பார்வைகளோடும் உணரப்படவில்லை. ஒரு அபத்தத்தை எழுதுவதும், பேசி நடிப்பதும், வடிவமைப்பதும் ஒரே ஒரு முறைதான் நடக்கிறது. ஆனால், அந்த அபத்தம் எத்தனை ஆயிரம் முறை மீண்டும் மீண்டும் வெளியாகி மக்கள் மனதில் திணிக்கப்பட்டு நிலைநிறுத்தப்படுகிறது என்பதை ஊடக உலகம் நினைத்துப் பார்ப்பதாகத் தெரியவில்லை.
செய்ய வேண்டியவற்றைச் செய்வதைக் காட்டிலும், செய்யக்கூடாதவற்றைச் செய்யாமல் இருப்பதுதான் மனிதகுலத்தின் உண்மையான வளர்ச்சிக்கு அடிகோலும். அந்த அடிப்படையில் பார்த்தால் இன்றைய நம் தமிழ்த் திரையுலகம் எதை எதைச் செய்து கொண்டிருக்கிறது, எதை எதைச் செய்யாமல் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். படைப்பாளிகளுக்கு இருக்கும் படைப்புரிமை என்பது சமூகத்தைப் பாழ்படுத்தும் உரிமையாக மாறலாகாது!
ஜெயபாஸ்கரன் - கட்டுரையாளர்: கவிஞர்.- நன்றி தினமணி

சினிமா இளைஞர்களை சீரழிக்கிறது என்பது
எல்லாம் பழமை வாதம்...
-
பல கோடிகளை கொட்டி படம் எடுப்பவர்கள்
மத்தியில், சொற்ப செலவில் எடுக்கப்பட்ட
படங்களும் வெற்றிக்கொடியை நாட்டுகின்றன...
-
சினிமா காதலை கொண்டாடுகிறது என்றால்
அது கேவலமல்ல...
-
சிந்து நதியில் சேர நாட்டு பெண்களுடன்
உலா வருதல் எத்தனை சுகம் என்று பாரதியாரும்
பாடி வைத்தார்..

திரு அய்யாசாமி அவர்களின் கருத்துடன் உடன்படுகிறேன்...
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
மன்னிக்க வேண்டும் அன்பரேayyasamy ram wrote:சினிமா இளைஞர்களை சீரழிக்கிறது என்பது
எல்லாம் பழமை வாதம்...
-
பல கோடிகளை கொட்டி படம் எடுப்பவர்கள்
மத்தியில், சொற்ப செலவில் எடுக்கப்பட்ட
படங்களும் வெற்றிக்கொடியை நாட்டுகின்றன...
-
சினிமா காதலை கொண்டாடுகிறது என்றால்
அது கேவலமல்ல...
-
சிந்து நதியில் சேர நாட்டு பெண்களுடன்
உலா வருதல் எத்தனை சுகம் என்று பாரதியாரும்
பாடி வைத்தார்..
அவர் செலவைப் பற்றிக் கூறவில்லை,மாறாக பொருட்செலவு மிகையோ குறைவோ எதுவாயினும் இன்றைய திரைப்படங்களில் நல்ல பாத்திரங்களோ அதற்கேற்ற மாந்தர்களோ அமைக்கப்படுவதில்லை .சினிமா கலாச்சாரத்தை சீரழிக்கிறதா என்பதற்க்கு பல கருத்துக்கள் இருக்கலாம் ஆனால் வளர்க்கிறதா என்பதற்க்கு இல்லை என்பதே ஒரே பதில் .
முதலமைச்சரையே கோடம்பாக்கத்தில் தேடிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் அங்கிருந்து வரும் நடிகனின் பாணியை,செய்தியை,நடவடிக்கையை ஒரு இளைஞன் நிச்சயமாய் தொடரவே செய்வான் .(பொழுது போக்காக எடுத்துக்கொள்ளும் மனநிலை இல்லை) வேலையிடம்,கல்லூரி,பொது இடங்களில் (சொல்லப்போனால் பள்ளிகள் மன்னிக்கவும்) எப்படியெல்லாம் கேவலமாக நடந்து கொள்ளலாம் என்பதை கதாநாயகனே கற்றுத்தருகிறான் .
தன்னைத் தொடரும் ரசிகனுக்கு நல்லதைக் கற்றுத்தரும் கடைமை தனக்கிருப்பதை அவன் உணரவேண்டும் .(மீண்டும் தான் விரும்பும் நடிகனின் பாணியை,செய்தியை,நடவடிக்கையை ஒரு இளைஞன் நிச்சயமாய் தொடரவே செய்வான்)
அன்றைய திரைப்பட நாயகர்கள் பணம் தவிர சமுதாய அக்கறையும் கொண்டிருந்தார்கள் .(குறிப்பாக எம் ஜி ஆர் புகையையோ மதுவையோ திரையில் காட்டியதில்லை)சினிமா காதலைக்கொண்டாடட்டும் ஆனால் அதுமட்டுமே சமுதாயமில்லை அங்கே இன்னும் இன்னும் நிறைய விடயங்களில் நாம் நிறைவுகொள்ள வேண்டியதிருக்கிறது .இன்னும் கொட்டித்தீர்க்க வேண்டும் நேரமில்லை ............
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
ஒரு கலைஞனால் (ஏன் கடவுளால்கூட ) உலகைத் திருத்தமுடியாது ஆனால் கெட்டுவிடாமல் பார்த்துக்கொள்ள முடியுமே .ayyasamy ram wrote:எம்.ஜி.ஆர் காலத்திய ரசிகர்கள் இப்போதும்
இருக்கிறார்கள்....
-
அவரது படத்தைப் பார்த்து புகையையோ மதுவையோ
தொடாதவர்களாக இருக்கிறார்களா..?!
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அதற்கு பிறகு வந்த நட்சத்திர நடிகர்கள் பண்ணுவதை பார்த்து ஸ்டைல் ஆக புகைபிடிப்பதையும் மது அருந்துவதையும் செய்தவர்கள் ஏராளம் என்பதை மறுக்க முடியுமா உங்களால்.ayyasamy ram wrote:எம்.ஜி.ஆர் காலத்திய ரசிகர்கள் இப்போதும்
இருக்கிறார்கள்....
-
அவரது படத்தைப் பார்த்து புகையையோ மதுவையோ
தொடாதவர்களாக இருக்கிறார்களா..?!
அல்லது , திருமணம் செய்யாமலேயே ஒரு பெண்ணுடம் வாழ்ந்தால் என்ன தவறு என்று அனைவரும் பார்க்கும் தொலைக்காட்சியில் ஒரு நடிகன் சொல்லுகிறான் அதை பார்த்தும் நமது மக்கள் கெட்டு போகமாட்டார்கள் என சொல்லுகிறீர்களா?!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
ராஜா wrote:அதற்கு பிறகு வந்த நட்சத்திர நடிகர்கள் பண்ணுவதை பார்த்து ஸ்டைல் ஆக புகைபிடிப்பதையும் மது அருந்துவதையும் செய்தவர்கள் ஏராளம் என்பதை மறுக்க முடியுமா உங்களால்.ayyasamy ram wrote:எம்.ஜி.ஆர் காலத்திய ரசிகர்கள் இப்போதும்
இருக்கிறார்கள்....
-
அவரது படத்தைப் பார்த்து புகையையோ மதுவையோ
தொடாதவர்களாக இருக்கிறார்களா..?!
அல்லது , திருமணம் செய்யாமலேயே ஒரு பெண்ணுடம் வாழ்ந்தால் என்ன தவறு என்று அனைவரும் பார்க்கும் தொலைக்காட்சியில் ஒரு நடிகன் சொல்லுகிறான் அதை பார்த்தும் நமது மக்கள் கெட்டு போகமாட்டார்கள் என சொல்லுகிறீர்களா?!
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இன்றைய தமிழ் சினிமாக்களால் நல்ல நெறிமுறைகளை மக்கள் மறந்து வருகின்றனர் என்பது மட்டும் உண்மை. (ஒருசில அரிய படங்கள் தவிர)
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
கலாச்சாரத்தை கலைகள் தான் வளர்க்கும் என்பதை தமிழர்களின் தொன்மையும் பாரம்பரியமுமே பறைசாற்றும். இணயமும் ,இதழியமும் கூட பொறுப்பாகச் செயலாற்றிக்கொண்டிருக்கின்றன. ஆனால் பலரையும் ஏன் படிப்பறிவில்லாதவரையும் சென்று சேரும் மிகப்பெரிய அவளாவிய சக்திகொண்ட சினிமா ஏன் பொறுப்பில்லாமல் செயல்படுவது மட்டுமல்லாமல் அது சார்ந்த சமூகத்தையும் சுரண்டுகிறது ?ஆறறிவு கொண்ட ஒரு ரசிகன் தன்னுடைய தலைவனின் மேல் எந்த எல்லைவரை பாசம் வைத்திருந்தால் அவனுக்காக தற்கொலை செய்யத் துணிவான் ?
தான் ரசிகனிடம் பணம் பறித்து கலைத்தினிப்பு (வியாபாரம் என்பதை ஒப்புக்கொள்ளமுடியாது )செய்யும் ஒருவனுக்கு சமுதாய உணர்வு இருக்கும் என்று நினைப்பதே நமது அறியாமை என எண்ணுகிறேன் .குறைத்த பட்சம் காமம் ,களவு ,இரத்தம் ,மனநிலையைப் பாதிக்கும் காட்சிகள் ,தீவிரவாதம் ,குழந்தைகளைப் பாதிக்காத காட்சிகள் -இவற்றைக் காட்சிப்படுத்தலாம்
நீங்கள் சொல்வது போல எம் ஜி ஆரைப் பார்த்து திருந்துவான் என்றால் அந்தப் படங்களிலே வரும் வில்லனைப் பார்த்து தெருவுக்குத் தெரு கொலையல்லவா நடக்க வேண்டும் ?
நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் வழக்கத்திற்க்கு மாறாக நாம் ஒரு செய்தியை முதல் முறை கேள்விப்பட்டாலோ சந்தித்தாலோ அது அதிர்ச்சி,அடுத்தமுறை செய்தி ,அதற்கடுத்தமுறை அது வாழ்வியல் முறைகளில் ஒன்றாக (சில எதிர்ப்புகள் இருந்தாலும் )மாறிவிடும் 2ஜி- யைப்போல .இன்னும் ..........

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1