ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் திலீபன் கண்ணதாசன் !

2 posters

Go down

ஆயிரம் ஹைக்கூ !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர் திலீபன் கண்ணதாசன் ! Empty ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் திலீபன் கண்ணதாசன் !

Post by eraeravi Sat Oct 05, 2013 7:36 pm

ஆயிரம் ஹைக்கூ !

நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !

நூல் விமர்சனம் கவிஞர் திலீபன் கண்ணதாசன் !


வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் .
சென்னை .17
தொலைபேசி 044-24342810 , 044- 24310769.
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com

184 பக்கங்கள் விலை ரூபாய் 100.

ஹைக்கூ ஒரு ஆத்ம தரிசனம் ஹைக்கூ உணர்வுகளின் தாய். பரவசத்தின் உச்சம் .ஹைக்கூ இதயத்தில் இடைவிடாது பறக்கும் மின்மினி ஜென் தத்துவ கோட்பாடுகளின் இலக்கிய வடிவம் ஹைக்கூ .
.
எளிமையான தேடல் ,தேடலின் எளிமை இயல்பான வாழ்க்கை தத்துவம் .யார் கடவுள் ?கடவுளை அடைய யாது வழி ? இல்லை நீயே கடவுள்! என தத்துவ விசாரணையாக இருந்த ஹைக்கூ கவிதைகளை ஒரு துறவியைப் போல் ,தும்பியைப் போல பறந்து திரிந்த ஹைக்கூ கவிதைகளை உள்வாங்கிய இந்தியா போன்ற வளரும் நாடுகள் இவ்வகை இலக்கிய குறும்பாக்களை தங்கள் நாட்டின் முகங்களுக்கு ஏற்றபடி செதுக்கிக் கொண்டார்கள் .

நகமும் சதையுமாக ரத்தம் வழியும் பிரச்சனைகளுக்கு தீர்வாய் ,சமூக கேடுகளை எதிர்க்கும் போர்க்குரலாய் தமிழ்க் கவிஞர்கள் ஹைக்கூ என்ற ஆயுதத்தை பயன்படுத்தினர் .அந்த வரிசையில் 15 வருடங்களாக ஹைக்கூ கவிதை எழுதுவதை ஒரு தவமாக செய்து வருகிறார் கவிஞர் இரா .இரவி .

ஹைக்கூ எழுதுவதில் ஆழ்ந்த ஈடுபாடு உள்ளவர் .பல்வேறு தலைப்பிகளில் சிறு சிறு நூலாக வெளியிட்ட இரவி தன் ஹைக்கூ காதலிக்காக ஹைக்கூ தாஜ்மகாலே கட்டியிருக்கிறார் .

ஆயிரம் கவிதைகள் !
ஆயிரம் முத்தங்கள் !
ஆயிரம் பார்வைகள் !
ஆயிரம் வலிகள் !
ஆயிரம் அக்கினி குஞ்சுகள் !
ஆயிரம் இழப்புகள் !
ஆயிரம் வண்ணத்துப் பூச்சிகள் !

என மனித வாழ்வின் சகல உணர்வுகளையும் கவிதையாக்கி இயந்திர உலகில் அவசர அவசரமாய் ஓடிக் கொண்டிருக்கிற மனிதர்களின் கையைப் பிடித்து நிறுத்தி கவிதைகளை பரிசளிக்கிறார் . கவிதைகள் விதைகளாய் நம் இதய நிலங்களில் விழுந்து விருட்சமாய் வளர்ந்து கனிகளைத் தந்து இச்சமூகம் பசியாற வேண்டும் என்பதே கவிஞர் இரவியின் கவிதைக் கோட்பாடு .இணைய தளங்களிலும் இதயத் தளங்களிலும் இயங்கிக் கொண்டு இருக்கும் இரா .இரவி ஹைக்கூ உலகில் நம்பிக்கைக் குரிய கவிஞர் .

ஈழம் - நம் இயலாமை
ஈழம் - நம் குற்ற உணர்ச்சியின் குறியீடு .எரிந்த பிணத்தின் வாடையைச் சுமந்த காற்று நம் மூச்சுக் காற்றாய் சுவாசிக்க நேர்ந்த பொழுது மூக்கை பொத்திக் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டோம் .ஈழத்தில் நம் இனம் அழிந்த காட்சி அதற்கு தமிழகமே சாட்சி .ஈழத்தின் வலிகளாய் இரவியின் வார்த்தைகள் .

தாமதமாகவே விழித்தது
தூங்கிய தமிழினம்
லட்சக்கணக்கில் தமிழரை இழந்து !

என்று கவிதைக் கண்ணீரால் நம் இயலாமையை கழுவுகிறார் . இந்தியாவின் ஆகப் பெரிய சொத்து இயற்கை வளங்கள் அதிகார மையங்களின் பேராசைக்கு பெரும் தீனியாக இந்தியத் தாயின்
கர்ப்பப்பையே விலையாக பேசப்படுகிறது .இரவியின் இதயம் வெடித்து புலம்புகிறது .

கொள்ளை போனது
பச்சைவயல்
பன்னாட்டு நிறுவனங்கள் !

உலகின் பசித்தீயை அணைத்த உழவனின் வாழ்க்கை எரிந்து கொண்டு இருக்கிறது .மானம் காக்க ஆடை நெய்த நெசவாளர் வாழ்க்கை கிழிந்து கிடக்கிறது .கவிஞனின் பேனா கவலையில் மூழ்கிறது .

புத்தாடை நெய்தும்
கந்தல்
நெசவாளர் வாழ்க்கை !

தரைதட்டி நிற்கிறது ஹைக்கூ கப்பல் .இறக்கி வைக்க முடியாத சுமைகளாய் வார்த்தைகள் .

குழந்தைகளின் உலகம் மாறி விட்டது குழந்தைகள் பெற்றோர்களின் கனவுகளை சுமக்கும் பொம்மைகளாக மாறி விட்டனர் .வரையப்பட்ட வட்டங்களுக்குள் வெட்டப்பட்ட காய்களாய் குழந்தைகள்.
குழந்தைகளின் மன உணர்வைப் பதிவு செய்கிறார் கவிஞர் .

தடியால் அடித்துக்
கனிவதில்லை கனி
குழந்தைகளும்தான் !

கலை கலைக்காக எனும் எண்ணத்தில் படைக்கும் படைப்புகளில் அற்புதங்களும் அழகியலும் இருந்தாலும் மக்களுக்கு புரியாத மொழியில் இருந்தால் அவைகள் வெறும் காகிதங்களே .
உண்மையாய் பாசாங்கற்று , வெள்ளந்தியாய் மக்களின் மொழியில் மக்கள் பிரச்சனைகளை பேசுகின்ற கவிதைகள் காலத்தை வென்று வாழும் .

சமூக மாற்றத்திற்கான கருவியாய் ஹைக்கூ கவிதைகளை ஏந்தி நிற்கும் கவிஞர் இரா .இரவியின் கவிதைப் பயணம் தொடர
வாழ்த்துகிறேன் .இருட்டில் இருக்கும் எம் மக்க்களின் இதயத்தில் ஏற்றி வைத்த ஆயிரம் மெழுகுவர்த்திகள் .கவிஞர் இரா .இரவியின் ஆயிரம் ஹைக்கூ கவிதைகள் ... இருள் விலகும் என்ற நம்பிக்கையில் .

eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஆயிரம் ஹைக்கூ !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர் திலீபன் கண்ணதாசன் ! Empty Re: ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் திலீபன் கண்ணதாசன் !

Post by செம்மொழியான் பாண்டியன் Sat Oct 05, 2013 7:41 pm

இரண்டு பதிவுகள் அய்யா


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் புதுயுகன் லண்டன்
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம்: கவிஞர் ஆனந்தி !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிபாரதி மு .வாசுகி ,மேலூர் .
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : பேராசிரியர் முனைவர் யாழ். சந்திரா. ‘

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum