ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம் Empty ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்

Post by பாலாஜி Thu Oct 03, 2013 11:31 am

அட்டகாசம்’ மிஷ்கின்!

படத்தில் பாடல் (அதிலும் 'மஞ்சள் சேலை’) இல்லை, அச்சுப் பிச்சு காமெடி இல்லை, பன்ச் வசனங்கள் இல்லை, ஹீரோயின் இல்லை, 'சந்தானம்’ இல்லை... இப்படிப் பல 'இல்லை’கள். ஆனால், இது இதுவரையிலான உங்களின் உச்சம் மிஷ்கின். அடர்ந்த காட்டில் கரடியும் புலிகளும் துரத்த, தன்னால் கொல்லப்பட்ட ஓர் ஆட்டுக்குட்டியின் குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் ஓர் ஓநாயின் கதையே படம்!

தர்ம நியாயத்துக்கு உட்பட்டு 'கொலைத் தொழில்’ செய்யும் நாயகன், இறுதியில் மனம் திருந்தும் கதைதான். ஆனால், அதற்கான திடுக் திரைக்கதை, மர்மமான ட்ரீட்மென்ட், மனிதம் உணர்த்தும் கதாபாத்திரங்கள்... என ஒவ்வொரு காட்சியும், அதன் பின்னணியும் ஆயிரமாயிரம் கதை சொல்கின்றன!

புலிகளின் வியூகங்களும், அதை முறியடிக்கும் ஓநாயின் ஆட்டங்களுமாக இடைவேளை வரை விறுவிறு திகுதிகுவென விரைகின்றன காட்சிகள். ஆனாலும், இது என்ன படம், ஏன் இத்தனை ஓட்டம், 'ஓநாய்-கரடி-ஆட்டுக்குட்டி’ இடையே என்ன தொடர்பு என்றெல்லாம் ஒரு மூலையில் சந்தேகங்கள் குடைந்துகொண்டே இருக்கின்றன. அந்த அத்தனை சந்தேகங்களையும் போக்க பெரிய ஒரு ஃப்ளாஷ்பேக்கை எதிர்பார்த்து நமக்குள் இருக்கும் சினிமா ரசிகன் காத்திருக்க, இரண்டு மெழுகுவத்திகளுக்கு இடையே மிஷ்கின் அதை அவிழ்க்கும் இடமும் விதமும்... அபாரம். எளிய வார்த்தைகள் மூலம் விரியும் அந்த வலியான கதை சொல்லல், நம் மனசுக்குள் விஷ§வலாக விரிவது, புது அனுபவம். நன்றி மிஷ்கின்!

வுல்ஃப்’ பாத்திரத்தில் மிஷ்கின். ஓர் ஓநாயின் உடல் மொழியையே தனக்குள் புகுத்தியிருக்கிறார். வேட்டைக் களத்தில் ஒவ்வோர் உறுப்பினரை இழக்கும்போது தலைகுனிந்து கவலைப்படுவதும், அம்மாவையும் குழந்தையையும் தூக்கிக்கொண்டு வலியோடு ஓடுவதும், ஸ்ரீயை நம்பியும் நம்பாமல் தன் ஆட்டத்தில் ஈடுபடுத்துவதுமாக... அசரடிக்கிறார். வெடவெட ஸ்ரீக்கு, இதில் மிஷ்கினுக்கு இணையான கதாபாத்திரம். ஒரு மனிதாபிமானத்தில் மிஷ்கினைக் காப்பாற்றிவிட்டு, போலீஸிடம் சிக்கிப் படும்பாட்டில் மிரட்சி, வெறுப்பு, கோபம், இயலாமை... என அனைத்து முகபாவங்களையும் காட்டி ஆச்சர்யப்படுத்துகிறார்.
அந்த மின்சார ரயில் துரத்தலும், ஓடும் காருக்குள் மிஷ்கின், வில்லனை வெளியேற்றும் சமயோசிதமும்... ஒரு ஆக்ஷன் படத்தின் உச்சகட்ட உதறல் கொடுக்கும் காட்சிகள்! அப்படியான விறுவிறு த்ரில்லருக்கான வியூகங்கள் மட்டுமே இருந்திருந்தால், இது இன்னொரு சினிமா. ஆனால், படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அதன் பின்னணிக்கேற்ப வார்க்கப்பட்டிருப்பதும், சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஒருவன் மனநிலையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை நச்நச்சென உணர்த்தும் காட்சிகளுமே, படத்தை வேறு தளத்துக்கு அழைத்துச்செல்கின்றன!

அத்தனை ரிஸ்க் எடுத்து ஸ்ரீ காப்பாற்றிய மிஷ்கினை, அவரே கொல்லவேண்டிய இக்கட்டுக்கு ஆளாகும் காட்சிகள், நிதர்சனத்துக்கு மிக நெருக்கம். படித்தவர்களும் பொறுப்பானவர்களும் தங்கள் கடமையை மறக்க, ஒரு பிச்சைக்காரனின் உதவியோடு நல்லது நடக்கும் ஆரம்பக் காட்சிகள், துப்பாக்கிச் சூடு வாங்கும் ஒவ்வொரு போலீஸும் விநோத வார்த்தை பிரயோகிப்பது, அம்மாவின் காலுக்குச் சூடு வைத்தவர்களின் காலைக் காயப்படுத்துவது, குண்டடி வாங்கிய எட்வர்டு அப்பாவிடம் வேறு வழி இல்லாமல் துப்பாக்கியைக் கொடுக்க, அவர் தான் தெரியாமல்கூட யாரையும் சுட்டுவிடக் கூடாது என்று தலைக்கு மேல் உயர்த்தி துப்பாக்கியை வெடிப்பது, அத்தனை போலீஸ் கும்பலிலும் நல்ல உள்ளம் படைத்த ஓர் அதிகாரி இருப்பது, எந்த போலீஸையும் கொல்லாமல் காயப்படுத்தி, மயக்கப்படுத்தி மிஷ்கின் தப்பிப்பதுமான காட்சிகளில் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சக மனிதர்கள் மீது ப்ரியம் விதைக்கிறது திரைக்கதை.

மூன்று போலீஸ்காரர்கள் வில்லனின் ஆட்களால் கொல்லப்படுகிறார்கள். முதல் இருவர் சாகும்போது இந்து, கிறிஸ்துவ கடவுள்களின் பெயர்களைச் சொல்லி விழுவார்கள். மூன்றாவது நபரான கான்ஸ்டபிள், 'ஐயா’ என்று சொல்லிக் கும்பிட்டு, வாய்தா வாங்கி, உயிர் பதைத்து நிற்பார். ஆயுள் முழுக்க 'ஐயா... ஐயா’ என்றுஅழைத்தே பிழைக்கும் கான்ஸ்டபிள்களின் வாழ்க்கை இயல்பை பொளேரென அறையும் சாம்பிள்!
போலீஸ் அதிகாரி ஷாஜி, திருநங்கை ஏஞ்சல் கிளாடி, மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் ராமகிருஷ்ணன், சிறுமி சைதன்யா... என அறிமுகப் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் அசத்தல். வழக்கமான மிஷ்கின் சாயல் இல்லாமல், ஒவ்வொரு பாத்திரமும் தனித்தன்மையோடு இருப்பது ஆச்சர்யம்! ஆனால், தமிழ்நாட்டுக்குச் சம்பந்தமே இல்லாத 'சாமுராய்’ பாணி வாள் வீரர்களைப் புகுத்தி தன் டச் கொடுத்துவிட்டார் மிஷ்கின்.

மிஷ்கின்-ஸ்ரீ சந்திப்புக்குப் பிறகுதான் பரபரக்கிறது படம். ஆனால், அந்தச் சந்திப்புக்கான தேவை என்ன? 'ஆட்டுக்குட்டி’க் குடும்பத்தைக் காப்பாற்றுவது மட்டுமே நோக்கமென்றால், அதைத் தவிர்த்திருக்கலாமே ஓநாய்? நள்ளிரவுக்கு மேல் மிஷ்கினுக்கு அதீத மயக்க மருந்து செலுத்தி மேஜர் ஆபரேஷன் செய்கிறார் ஸ்ரீ. ஆனால், காலையிலேயே மயக்கம் தெளிந்து தப்பிவிடுகிறார் மிஷ்கின். தமிழ் சினிமாவின், 'இட்ஸ் எ மெடிக்கல் மிராகிள்’களில் இதுவும் ஒன்று!

ஆரம்பக் காட்சி முதல் இறுதி வரை யாரேனும் யாரையேனும் சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஆக்ஷன் த்ரில்லர் என்றாலும் இவ்வளவு வன்முறையா?

இருளும் ஒளியும் கலந்த இரவு சென்னையை ஒரு பூனையைப் போல கண்காணித்து திக் திக் திகில் ஊட்டுகிறது பாலாஜி வி.ரங்காவின் ஒளிப்பதிவு. ஸ்ரீ திரையில் தோன்றும்போது பதறவைக்கும் பின்னணி இசை, மிஷ்கின் தோன்றும்போது நெகிழ்த்தி, மாற்றுத் திறனாளிகளைக் காட்டும்போது உருகவைக்கிறது. 'முன்னணி - இசைக்கோப்பில்’ அழுத்தமாக முத்திரைப் பதிக்கிறார் ராஜா.

'புலி-ஓநாய்-கரடி-ஆட்டுக்குட்டி’ கதையை 'வணிக சமரசம் இல்லாமல்’ படைத்ததற்கும், 14 கொலைகள் செய்த ஒரு சீரியல் கில்லர் உயிரோடு இருக்க வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு நம் மனதை நெகிழ்த்தியதற்கும்... இந்த ஓநாயை ஆசை ஆசையாக அரவணைக்கலாம்!

நன்றி -விகடன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம் Empty Re: ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்

Post by ரா.ரா3275 Thu Oct 03, 2013 12:23 pm

நிஜம்தான் இது வித்யாசமான படம்தான்.


ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம் 224747944

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம் Rஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம் Aஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம் Emptyஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம் Rஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம் Empty Re: ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்

Post by பாலாஜி Thu Oct 03, 2013 12:28 pm

ரா.ரா3275 wrote:நிஜம்தான் இது வித்யாசமான படம்தான்.
மிஷ்கின் படங்கள் அனைத்தும் வித்யாசமான படங்கள்தான் .

எனக்கும் மிகவும் பிடித்த இயக்குனர் .. அஞ்சாதே படத்தை எத்தனை முறை பார்த்துயிருப்பேன் என்று எனக்கே தெரியாது .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம் Empty Re: ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்

Post by ரா.ரா3275 Thu Oct 03, 2013 12:33 pm

காட்சிக்கும் ஒளிப்பதிவிற்கும் மெனக்கெடுவார்.அது பிடிக்கும்.


ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம் 224747944

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம் Rஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம் Aஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம் Emptyஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம் Rஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம் Empty Re: ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்

Post by பாலாஜி Thu Oct 03, 2013 12:36 pm

ரா.ரா3275 wrote:காட்சிக்கும் ஒளிப்பதிவிற்கும் மெனக்கெடுவார்.அது பிடிக்கும்.
அவரது காட்சிபடுத்தும் விதம் எப்பொழுதும் வித்தியாசமாகவே இருக்கும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம் Empty Re: ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்

Post by ரா.ரா3275 Thu Oct 03, 2013 1:10 pm

ஆமா ஆமா...


ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம் 224747944

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம் Rஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம் Aஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம் Emptyஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம் Rஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம் Empty Re: ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்

Post by பாலாஜி Thu Oct 03, 2013 1:29 pm

ரா.ரா3275 wrote:ஆமா ஆமா...
உங்களின் படங்களும் இது போல தனி தன்மையுடன் இருக்க வாழ்த்துகள்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம் Empty Re: ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்

Post by ஜாஹீதாபானு Thu Oct 03, 2013 1:34 pm

பாலாஜி wrote:
ரா.ரா3275 wrote:ஆமா ஆமா...
உங்களின் படங்களும் இது போல தனி தன்மையுடன் இருக்க வாழ்த்துகள்
ஆமோதித்தல் 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம் Empty Re: ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்

Post by ரா.ரா3275 Thu Oct 03, 2013 1:38 pm

நன்றி பாலாஜி மற்றும் பாட்டி...


ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம் 224747944

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம் Rஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம் Aஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம் Emptyஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம் Rஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம் Empty Re: ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்

Post by ஜாஹீதாபானு Thu Oct 03, 2013 1:39 pm

ரா.ரா3275 wrote:நன்றி பாலாஜி மற்றும் பாட்டி...
நன்றி எல்லா வேணாம்...

டிக்கெட் மட்டும் குடுத்துருங்க ....


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம் Empty Re: ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum