புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_c10ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_m10ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_c10 
92 Posts - 67%
heezulia
ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_c10ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_m10ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_c10ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_m10ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_c10ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_m10ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_c10 
3 Posts - 2%
prajai
ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_c10ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_m10ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_c10ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_m10ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_c10ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_m10ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_c10ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_m10ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_c10ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_m10ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_c10ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_m10ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_c10ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_m10ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_c10 
146 Posts - 73%
heezulia
ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_c10ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_m10ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_c10ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_m10ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_c10 
9 Posts - 5%
prajai
ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_c10ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_m10ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_c10 
5 Posts - 3%

Shivanya
ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_c10ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_m10ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_c10 
1 Post - 1%
nahoor
ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_c10ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_m10ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்...

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Sep 29, 2013 6:55 pm

“ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால், முதலில் அதன் மொழியை அழிக்க வேண்டும். பின்பு, அந்த இனத்தின் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். மூன்றாவது, அவர்களை இருப்பிடத்திலிருந்து வெளியேற்ற வேண்டும். நான்காவது, அவர்கள் நினைவுகளை அழித்து ஒழிக்க வேண்டும்”

சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கும்பறையூர் என்ற பளியர் கிராமத்துக்குச் சென்றிருந்தேன். நாங்கள் சென்ற நேரம் ஒரு வீட்டில் காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். மலைவாழ் மக்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்று பார்க்க வேண்டும் என்ற ஆவலில் எட்டிப் பார்த்தபோது, இரண்டு சிறுவர்கள் ஒரு அலுமினியக் கிண்ணத்தில் நூடுல்ஸ் வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். என்னால் நம்பவே முடியவில்லை.

திகைப்புடன் இந்த உணவு எப்படிப் பழக்கமானது என்று கேட்டபோது, “விலை மலிவாக இருக்கிறது, அத்துடன் அடிக்கடி டி.வி-யில் காட்டப்படுவதால் பிள்ளைகள் சாப்பிட ஆசைப்படுகிறார்கள்” என்று அந்த வீட்டுப் பெண் சொன்னாள். “குடிக்கத் தண்ணீர் தாருங்கள்” என்று கேட்டதும் வெளிறிப்போன பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றில் தண்ணீர் கொண்டுவந்து தந்தார்.

மண் குவளை, மரக் குவளை, வெண்கல, அலுமினிய டம்ளர், சில்வர் டம்ளர் என்று இருந்த காலம் போய், இன்று பிளாஸ்டிக் பாட்டில் இல்லாத வீடுகளே இல்லை. இவை தண்ணீர் அடைத்து விற்கப்படும் பாட்டில்கள், குடித்து முடித்தவுடன் நசுக்கித் தூக்கி எறியப்பட வேண்டியவை. ஆனால், அதை அன்றாடம் தண்ணீர் குடிக்கும் டம்ளராகப் பயன்படுத்துகிறோம். எனக்குத் தெரிந்து, எந்த நாட்டிலும் இப்படி பிளாஸ்டிக் பாட்டிலில் விருந்தினருக்குத் தண்ணீர் தரும் பண்பாடு கிடையாது. பிளாஸ்டிக் பூக்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் பொம்மைகள், பிளாஸ்டிக் பழங்கள், பிளாஸ்டிக் கோப்பைகள்... பிளாஸ்டிக் இல்லாத வீடுகளே இல்லை. இதுதான் நமது பண்பாட்டின் அடையாளம் என்றால் வெட்கப்பட வேண்டியிருக்கிறது.

“பண்படுதலே பண்பாடு” என்பார் டி.கே.சி. “பண்பாடு என்னும் சொல்லே 1937க்குப் பிறகுதான் பயன்பாட்டுக்கு வந்தது. டி.கே.சி-தான் பண்பாடு என்ற சொல்லை உருவாக்கினார்” என்கிறார் பிரபஞ்சன்.

இன்று நுகர்வுக் கலாச்சாரமே நமது பண்பாட்டினைத் தீர்மானிக்கிற சக்தியாக மாறியிருக்கிறது. அதைத் தனது சுயலாபத்துக்குரியதாக மாற்றிக் கொண்டிருக்கின்றன வணிக நிறுவனங்கள். அதற்குத் துணை நிற்கின்றன ஊடகங்கள்.

பண்பாட்டின் சிறப்பியல்புகளை, முதன்மைக்கூறுகளை, நம்பிக்கைகளை முன்னிறுத்தும் எழுத்தும், இலக்கியமும் சமூக தளத்தில் இரண்டாம் நிலையில் ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன. நாம் பண்பாட்டு நெருக்கடியான சூழலில் வாழ்ந்து வருகிறோம்.

பண்பாடு என்பது ஓர் இனக் குழுவின் வரலாறு. புரிந்துணர்வு, வாழ்வியல் வழிமுறைகள், தொழில்சார் தேர்வுகள், நம்பிக்கைகளை உள்ளடக்கியது. மொழி, உணவு, இசை, நுண்கலைகள், சமய நம்பிக்கைகள், தொழில் கருவிகள் போன்ற காரணிகள் பண்பாட்டு உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இரண்டாயிரம் வருடப் பண்பாட்டுப் பெருமை கொண்ட தமிழ்ச் சமூகம் அதன் வேரில் இருந்து, மரபில் இருந்து தன்னைத் துண்டித்துக்கொள்ள எதற்காக இத்தனை அவசரப்படுகிறது?

இன்றையப் பண்பாட்டு மாற்றங்களுக்கு முக்கியக் காரணம், சந்தைக் கலாச்சாரம். அது உருவாக்கிய பொய்கள், அந்தப் பொய்களை முன்னிறுத்திக் கொண்டாடும் ஊடகங்கள், அதன் வழி உருவான கட்டுக்கதைகள்... இவையே பண்பாட்டு மாறுதல்களை உருவாக்குகின்றன.

பண்பாட்டின் தேவை என்பது சக மனிதனுடன் அன்பு செலுத்தவும், இருப்பதைப் பகிர்ந்துகொள்ளவும், இயற்கையோடு இயைந்து வாழ்வதற்கு முயற்சிக்கவும், தான் வாழும் சமூகம் மேம்பட உதவி செய்வதுமே ஆகும்.

பண்பாட்டுக் கலப்புகளை எதிர்கொள்ளும்போது புதிய பண்பாட்டு மாற்றங்கள் பிறக்கின்றன. இன்று தமிழகத்தில் பரோட்டா அன்றாட உணவுகளில் ஒன்றாக மாறிப்போயிருக்கிறது. பரோட்டா கடைகள் இல்லாத ஊர்களே இல்லை. ஒரு நாள் பரோட்டா தயாரிப்பதை நிறுத்திவிட்டால் தமிழகத்தில் மிகப் பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டுவிடும்போல் இருக்கிறது.

ஆனால், பரோட்டா சாப்பிடுகிற எவருக்கும் அது எங்கிருந்து தமிழகத்துக்கு வந்தது, அதை ஏன் வீட்டில் பெண்கள் சமைக்க மறுக்கிறார்கள், இவ்வளவு புகழ்பெற்ற பரோட்டாக்கள் ஏன் கடவுளின் உணவாக இன்றும் மாறவில்லை என யோசனை செய்வதில்லை. பண்பாட்டின் ஆதார அம்சங்களில் ஒன்றான உணவு சீர்கெட்டுப் போனதே இன்றைய ஆரோக்கியக் கேடுகளுக்கு முக்கியக் காரணம்.

தமிழ்ப் பண்பாட்டின் முக்கிய அடையாளங்களாக காதல், வீரம், கொடை, பக்தி விருந்தோம்பல் ஆகிய ஐந்தினையும் குறிப்பிடுகிறார்கள். இன்று இந்த ஐந்தும் சீரழிந்துபோன நிலையில், புரையோடி நோய்க்கூறென மாறியிருக்கிறது.

இலக்கியங்களில் காதலைக் கொண்டாடிய தமிழ்ச் சமூகம், இன்று சாதியை முதன்மைப்படுத்தி, காதலர்களைத் துரத்திக் கொல்லத் துடிக்கிறது. ‘யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் ’ என்பதெல்லாம் வெறும் இலக்கிய உளறல்கள் என்று சொல்லும் அளவு தமிழ்ச் சமூகத்தில் சாதிய உணர்வு தலை தூக்கியுள்ளது.

இன்னொரு பக்கம் கங்கை கொண்டான், கடாரம் வென்றான் என்று வீரம் பேசிய தமிழ்ச் சமூகத்தில் இன்று மிஞ்சியிருப்பது கூலிப்படைக் கலாச்சாரம் மட்டுமே. குற்றம் தனி நபரின் செயலாக இல்லாமல் தொழிலாக மாறிவிட்டது நம் காலத்தின் அபாயம்.

காலனியம் துவங்கிவைத்த பண்பாட்டு அழிப்பு இன்று பன்னாட்டு நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டு உலகம் தழுவிய ஒற்றைப் பண்பாடு என ஒரு பொய்வாதமாக உருவெடுத்துள்ளது. இது முற்றிலும் வணிகர்கள், வணிக லாபங்களுக்காக உருவாக்கும் ஒரு தந்திரம்.

தமிழகப் பண்பாட்டுச் சீரழிவில் வெட்கித் தலை குனிய வேண்டிய அம்சமாக நான் கருதுவது குடியே. கடந்த 20 ஆண்டுகளில் தமிழகத்தில் குடி ஒரு கொடிய நோயாகப் பற்றிப் படர்ந்துவருகிறது. குடிப்பவர்கள் தன்னை அழித்துக்கொள்வதுடன் பொதுவெளியில் ஆபாசம் பேசி, வாந்தி எடுத்து, சண்டையிட்டு, சாலை விபத்துகளை உருவாக்கி, தன்னையும் சமூகத்தையும் சீரழித்துவருகிறார்கள். குடிவெறி கொலை களவு செய்யவும், பெண்களை வன்பாலுறவு கொள்ளவும் தூண்டுகின்றன. தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படாவிட்டால் குடிநோயில் இருந்து தமிழ் மக்களை யாராலும் காப்பாற்றவே முடியாமல் போய்விடும்.

பண்பாட்டுப் பெருமை பேசும் நாம் சுத்தமான ஒரு பொதுக் கழிப்பறையைக் கூடப் பேண முடியாத சமூகமாக ஏன் இருக்கிறோம். மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வண்ணம் ஒரு கழிப்பறை எந்த நகரிலாவது அமைக்கப்பட்டிருக்கிறதா? பார்வையற்யோர் பேருந்து நிலையப் பொதுக் கழிப்பறைக்குள் கால் வைக்க முடியுமா? நினைக்கவே அவமானமாக இருக்கிறது.

ஜாக் லண்டனின் கதை ஒன்றில், “ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால், முதலில் அதன் மொழியை அழிக்க வேண்டும். பின்பு, அந்த இனத்தின் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். மூன்றாவது, அவர்களை இருப்பிடத்திலிருந்து வெளியேற்ற வேண்டும். நான்காவது, அவர்கள் நினைவுகளை அழித்து ஒழிக்க வேண்டும்” என்பார்.

இந்த நான்கும்தான் இன்று தமிழகத்தில் நடந்துவருகிறது.

எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர் நன்றி-திஹிந்து

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Sep 29, 2013 7:42 pm

மொழியை அழிக்கும் வேலைகளில் மற்றவர்கள் பங்கை விட நம்மவர்களின் பங்கு தான் அதிகம்.....இது சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. 

இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு முதன்மையாக அமைவது கல்வி முறைதான். வெறும் வாழ்கைக்கு வேண்டிய அறிவையும் பிழைப்பதற்கு வேண்டிய அறிவையும் கொடுத்தால் பத்தாது. நமது பண்பாடு கலாச்சாரம் மொழி போன்றவற்றில் மாணவர்களின்  ஈடுபாட்டை அதிகரிக்கும் வகையில் பாடதிட்டங்கள் மாற்றியமைக்க வேண்டும். பாடத்துடன் பயிற்சி பாடத்தையும் சேர்க்கவேண்டும். 

விளையும் செடியின் போக்கை  எளிதாக மாற்றலாம். மரமாகி விட்டால் அதன் போக்கை மாற்ற முடியாது 

நல்ல கட்டுரை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக