Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்படியொரு குடி தேவையா?
+2
M.M.SENTHIL
சாமி
6 posters
Page 1 of 1
இப்படியொரு குடி தேவையா?
தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கையை விட பாழாய்ப் போன டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு உயர்ந்திருப்பதாக பேஸ்புக்கில் கிண்டலடிக்கிறார்கள். டாஸ்மாக் கடைகளை வைத்து அலுங்காமல் குலுங்காமல் ஆண்டுக்கு நாற்பதாயிரம் கோடியை அள்ளித் தட்டுகிறது தமிழக அரசு. இது தெரிந்த கதை. ஆனால், டாஸ்மாக் ஊழியர்களும் பார் நடத்துபவர்களும் ஓசைப்படாமல் பெரும் சம்பாத்தியம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். 'குடி'மக்களும் கண்ணுக்கு தெரிந்தே இந்த களவாணித்தனத்தை அங்கீகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் சரக்குகளில் கலப்படம் பண்ணாமலும் போலிகளை புகுத்தாமலும் அசல் சரக்கின் மீதே குவாட்டருக்கு ஐந்து ரூபாய் அதிகம் வைப்பதிலிருந்து தொடங்குகிறது டாஸ்மாக் பணியாளர்களின் 'தொழில்' திறமை. அடுத்து, தண்ணீர் பாக்கெட், பாலிதீன் கப். இதையும் பார் உரிமையாளருடன் சிலபல ஒப்பந்தங்களை போட்டுக்கொண்டு, இவர்களேதான் சப்ளை செய்கிறார்கள். ஒரு தண்ணீர் பாக்கெட்டும் பாலிதீன் கப்பும் தலா ஐம்பது பைசாவுக்கு வாங்கி, கிராமப்புறமாக இருந்தால் மூன்று ரூபாய்க்கும் நகர்ப் பகுதியாக இருந்தால் ஐந்து ரூபாய்க்கும் விற்கிறார்கள். ஆக, தண்ணீர் பாக்கெட், கப் சகிதம் ஒரு குவாட்டர் விற்றால் டாஸ்மாக் ஊழியருக்கு தனியாக, குறைந்தது பத்து ரூபாய் கட்டிங் கிடைத்துவிடுகிறது.
இதுமட்டுமா? குடிமகன்கள் அதிகம் விரும்பும் சரக்குகளில் இவர்களின் கைவரிசையே தனி. இதற்கு மூலதனம் ஒரே ஒரு கோணி ஊசிதான். கோணி ஊசியை பாட்டில் மூடியின் அடிப்பகுதியில் லாவகமாக நுழைத்து, அப்படியே ஒரு சுற்று சுற்றி அழுத்தமாக பதிந்திருக்கும் மூடியின் அடிப் பகுதியை இலகுவாக்குகிறார்கள். பிறகு அதை அப்படியே கழற்றிவிட்டு, பாட்டிலில் இருந்து ஐம்பது மில்லி அளவுக்கு சரக்கை வெளியே எடுக்கிறார்கள். அதற்கு பதிலாக தண்ணீரை ஊற்றி பாட்டிலை பழையபடி கோணி ஊசி துணையோடு அழுத்தமாக மூடிவிடுகிறார்கள். இதில் பாட்டில் மூடியின் திருகுகள் எந்த பாதிப்பும் அடையாது. அதனால் யாருக்கும் சந்தேகமும் வராது. இவ்வாறு இரண்டு குவாட்டர் பாட்டில்களில் தலா 50 மில்லி எடுத்தால் போதும்.. அதில் தண்ணீரை கலந்து புது பிராண்ட் குவாட்டரை உருவாக்கி விடுவார்கள். கட்டிங் கேட்டு வரும் குடிகாரர்களுக்கு இந்த பாட்டிலில் இருக்கும் சரக்கை ஊற்றிக் கொடுத்து பைசா பார்த்துவிடுவார்கள். இந்த விடாக்கண்டனை மிஞ்சும் கொடாக்கண்டன்களும் இருக்கிறார்கள். கோணி டெக்னிக்கை கண்டுபிடித்துவிட்டால், 'பாட்டில் கழுத்து சுத்திக்கிச்சு.. வேற பாட்டில் குடுங்கப்பு' என்று கேட்டு வாங்கிக்கொண்டு போவது தனிக்கதை.
சில பேராசைக்காரர்கள் ஐம்பது மில்லிக்கு பதிலாக நூறு மில்லி வரை உறிஞ்சிவிட்டு, கலப்படம் தெரியாமல் இருப்பதற்காக ஹான்ஸ் சாற்றை ஊற்றி சமநிலைப்படுத்தி விடுகிறார்கள். ஹான்ஸ் என்ன நன்மை (!) செய்யும் என்று கேட்காதீர்கள். அடுத்து பாருக்கு வருவோம். கூலிங் பீர்தான் இவர்களின் டார்கெட். கடையில் கேட்டால், “உள்ளே பாரில் இருக்கிறது'' என்று கைகாட்டி விடுவார்கள். 75 ரூபாய் பீர்பாட்டிலை பாரில் வாங்கினால் 100 ரூபாய் அழவேண்டும். ஒரு பீருக்கு 25 ரூபாய் லாபம் பார்க்கும் பார் உரிமையாளர், மற்றவற்றை சும்மா விடுவாரா?
சென்னை பார்களில் பாலிதீன் கப், தண்ணீர் பாக்கெட், நாலைந்து கடலைகள் கொண்ட பாக்கெட், 25 கிராம் மிக்சர் பாக்கெட் என்று எதை எடுத்தாலும் ஆறு ரூபாய்! மட்டமான தண்ணீர் பாட்டில் ஒன்று முப்பது ரூபாய். அதன் தரத்தைப்பற்றி எல்லாம் கேள்வி எழுப்பக்கூடாது. குழாய் தண்ணீரைப் பிடித்துக்கொண்டு வந்து பத்து ரூபாய்க்கு பாரில் தள்ளிவிடுவார்கள். அதைத்தான் இருபது ரூபாய் அதிகம் வைத்து நமக்கு பில் போடுகிறார்கள். தப்பித் தவறிக்கூட வெளியிலிருந்து எதையும் உள்ளே கொண்டுபோக முடியாது. மீறினால் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடுவார்கள். சென்னையில் முக்கிய இடங்களில் பார் பிரவேசம் செய்யவே பத்து ரூபாய் தண்டம் அழவேண்டி இருக்கிறது. ஏ.சி.யாக இருந்தால் இந்தத் தொகை மணிக்கொருமுறை எகிறும்.
கோழிப்பண்ணைகளில் சீக்கு வந்து செத்துப் போகும் கோழிகள், முட்டையிட்ட பிறகு பண்ணைகளை விட்டு கடத்தப்படும் கோழிகள் ஆகியவைதான் பார்களில் பரிமாறப்படும் சிக்கன் வகையறா. பத்து ரூபாய்க்கு ஐந்து என்று கிடைக்கும் மத்தி மீன்கள் இங்கே காஸ்ட்லியான ஃபிஷ் பிரை. கிடைத்தால் ஆட்டுக்கறி.. கிராக்கியாக இருந்தால் இருக்கவே இருக்கிறது மலிவாக கிடைக்கும் மாட்டுக்கறி. இவை சுத்தம் செய்யப்படும் முறையையும் சமைக்கும் ஃபார்முலாவையும் பார்த்தால் குடிமகன்களே ஜீவகாருண்யம் பேச ஆரம்பித்து விடுவார்கள். அவ்வளவு ஹைஜீனிக்(?)
'80 ரூபாய் குவார்ட்டருக்கு கடைக்கார னுக்கு ஐந்து ரூபாய், தண்ணீர் பாக்கெட், கப்புக்கு பத்து ரூபாயா?' என்று அதிர்ச்சியாய் யோசிக்கிறவர்கள், சில நேரங்களில் சரக்குக்கு தோஷமில்லை என்று சொல்லி, யாராவது குடித்துவிட்டு வைத்திருக்கும் 'யூஸ் அண்ட் த்ரோ (செய்யாத) கப்பை லபக்கிக் கொள்கிறார்கள். அது நல்ல வாயன் குடித்ததா, நாற வாயன் குடித்ததா என்றெல்லாம் அவர்கள் பார்ப்பதில்லை. போதாக்குறைக்கு, அங்கே மீந்து கிடக்கும் தண்ணீர் பாக்கெட்களில் இருக்கும் தண்ணீரை ஊற்றிக் குடித்துவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். அதுவும் இல்லையென்றால் அருகில் இருப்பவர்களிடம் கூச்சமின்றி தண்ணீர் பிச்சை கேட்கிறார்கள்.
டாஸ்மாக் பொறுப்பாளரையும் பார் உரிமையாளரையும் தவிர, அந்தந்த ஏரியா அரசியல்வாதிகளுக்கும் அட்சய பாத்திர மாய் அள்ளிக் கொடுக்கிறது டாஸ்மாக். இவர்களுக்கு கடைகளிலிருந்து மாமூல் போவது தனி. இது தவிர, பெட்டி பெட்டியாய் சரக்குகளை கொள்முதல் செய்து வைத்துக் கொண்டு டாஸ்மாக் டைம் முடிந்த பிறகு, 'குடி' மக்கள் சேவையை தொடங்கி விடுகிறார்கள். இதில் குவாட்டருக்கு நாற்பது ரூபாய் நாசூக்காய் சம்பாதிக்கிறார்கள். விடுமுறை நாட்களில் இவர்கள் வைத்ததுதான் ரேட்.
இத்தனை பேரும் உங்கள் பையிலிருக்கும் பணத்தைத்தான் பலவழிகளில் பஸ் பிடித்துவந்து சுரண்டுகிறார்கள். இவ்வளவு கேவலங்களுக்கு மத்தியில், சுகாதாரம் சீர்கெட்ட நிலையில் இப்படியொரு குடி தேவையா? நிதானமாக யோசியுங்கள்! நன்றி-தெஹிந்து

Re: இப்படியொரு குடி தேவையா?
நடப்பவைகளை அப்படியே தோலுரித்துக் காட்டியிருக்கிறது இந்த விஷயம்.
ஆனாலும் திருந்த மாட்டார்களே எம் மக்கள்.
ஆனாலும் திருந்த மாட்டார்களே எம் மக்கள்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: இப்படியொரு குடி தேவையா?
வரிக்குவரி உண்மை சாமி அவர்களே , இதில் உள்ள அனைத்தையும் நானே நேரடியாக பார்த்துள்ளேன்.
அதிலும் குறிப்பாக chicken , தமிழ்நாட்டில் பிரபலமாக உள்ள ஒரு கறிகோழி நிறுவனத்தில் வேலை பார்த்த எனது நண்பர் ஒருவர் சொல்லிய பிறகு சென்னையில் கோழி அதுவும் fastfood & ரோட்டில் விற்கும் chicken 65 எல்லாம் கண்ணால் கூட பார்க்கமாட்டேன்.....
Re: இப்படியொரு குடி தேவையா?
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இப்படியொரு குடி தேவையா?
இந்த அதிர்ச்சி தகவல்களை பகலில் படித்து விட்டு............சம்பந்தபட்டவங்க கொஞ்சம் பேராவது திருந்தினால் தேவலை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இப்படியொரு குடி தேவையா?
திருந்தாத ஜென்மங்கள் தான் இந்த மாதிரி கடைகளுக்கு சென்று தண்ணியடிக்கும் அம்மா
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: இப்படியொரு குடி தேவையா?
அந்தக்கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறதே அசுரன், அது தான்கொஞ்சம் வருத்தமாக இருக்குஅசுரன் wrote:திருந்தாத ஜென்மங்கள் தான் இந்த மாதிரி கடைகளுக்கு சென்று தண்ணியடிக்கும் அம்மா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» குடி குடியைக் கெடுக்கும்-4 / குடி...இது எங்கே போய் முடியும்...?
» குடி கெடுக்கும் குடி
» குடி கெடுக்கும் குடி
» பிருந்தாவனத்திலா இப்படியொரு நிலை!
» இப்படியொரு நிலைமையில் தமிழகத்தை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்!
» குடி கெடுக்கும் குடி
» குடி கெடுக்கும் குடி
» பிருந்தாவனத்திலா இப்படியொரு நிலை!
» இப்படியொரு நிலைமையில் தமிழகத்தை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum