புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காளிவதம்! Poll_c10காளிவதம்! Poll_m10காளிவதம்! Poll_c10 
90 Posts - 71%
heezulia
காளிவதம்! Poll_c10காளிவதம்! Poll_m10காளிவதம்! Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
காளிவதம்! Poll_c10காளிவதம்! Poll_m10காளிவதம்! Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
காளிவதம்! Poll_c10காளிவதம்! Poll_m10காளிவதம்! Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
காளிவதம்! Poll_c10காளிவதம்! Poll_m10காளிவதம்! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காளிவதம்! Poll_c10காளிவதம்! Poll_m10காளிவதம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காளிவதம்! Poll_c10காளிவதம்! Poll_m10காளிவதம்! Poll_c10 
255 Posts - 75%
heezulia
காளிவதம்! Poll_c10காளிவதம்! Poll_m10காளிவதம்! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
காளிவதம்! Poll_c10காளிவதம்! Poll_m10காளிவதம்! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
காளிவதம்! Poll_c10காளிவதம்! Poll_m10காளிவதம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
காளிவதம்! Poll_c10காளிவதம்! Poll_m10காளிவதம்! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
காளிவதம்! Poll_c10காளிவதம்! Poll_m10காளிவதம்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காளிவதம்! Poll_c10காளிவதம்! Poll_m10காளிவதம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காளிவதம்! Poll_c10காளிவதம்! Poll_m10காளிவதம்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
காளிவதம்! Poll_c10காளிவதம்! Poll_m10காளிவதம்! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காளிவதம்! Poll_c10காளிவதம்! Poll_m10காளிவதம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காளிவதம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 24, 2013 9:40 am

“என்னாடி செல்லி... என்னாத்துக்கு விழுந்தடிச்சு வர்ற?’
அத்த... அவுத்த... கன்னிமார் ஓடையோரம்...என்ன எழவுடி? சொல்லித்தான் தொலையேன்.ஒரு அறியாப் பச்சைக்குழந்தை...நாலு வயசு இருக்கும். பொணமா கிடக்குது அத்த... மூச்சி நெஞ்செல்லாம் இரத்தமா பிராண்டிக் கிடக்குது

அய்யோ! செங்காளி.. வனத்தாயி... ரத்தக் காவா விழுகுதே... உனக்குப் பெரும் படையல் போடணும்... மாரி, மக்க காக்கோணும்... தாமதமாயிடுச்சு... பொறுத்துக்கடி செங்காளி! புலம்பிக் கொண்டே தலையாரிக்குத் தகவல் சொல்ல ஓடியவள் திரும்பி நின்று!
அமாவாசை, பௌர்ணமிக்கு ஒரு பச்சை மண்ணை பலி வாங்கிடுது அந்த முரட்டான் பன்னி! மருந்து வெச்சாலும் சாக மாட்டேங்குதே! யாரு பெத்த பூவோ? என்று பெருமூச்செறிந்தபடி விபூதி டப்பாவை எடுத்து வந்தாள்.
அம்மா... செங்காளி... வனத்தாயி... உஸ்... உஸ்.... காத்து, கருப்பு, பிரேத பயம் அண்டாம காப்பாத்தும்மா என்ற கும்பிட்டு செல்லியின் நெற்றியில் திருநீறு பூசிவிட்டாள் கெங்கம்மா.

பூம்பாடி, கொல்லிமலையைச் சுற்றியிருக்கும் பொட்டுப் பொத்தானி, விவசாயக் கிராமங்களுள் ஒன்று. ஹெக்டேர்க் கணக்கில் விளைந்திருக்கும் காபி தோட்டத்தைக் கடந்தால், தென்படும் தாழ்வாரப் படுகைகளில், சின்னக் சின்னக் கூழ்ங்கற்களாய்ச் சிதறியிருக்கும் மண் குடிசைகள், ஆடு வளர்த்தும் சிறு காய்கறித் தோட்டம் போட்டும் பிழைப்பு நடத்தும் ஆதிவாசியினர். ஊர் பெருசுகள் மூலிகை பறிக்க, தேன் எடுக்கப் போனாலும், இளந்தாரி ஆண்கள் பத்து கிளாஸ்வரைக்குமாவது படித்துவிட்டு, காபி எஸ்டேட்டிலும் ரிஸார்ட் ஓட்டல்களிலும் வேலை செய்தார்கள்.

செல்லியின் புருஷன் வீரய்யணும் ஒரு கிலோ மீட்டர் மேலே ஏறினால் வரும் தாழையூர் மலை ஜாதியினர் அரசு ஆரம்பப் பள்ளியில் பியூனாக வேலை பார்த்து வந்தான். “அரைக்காசு ஆனாலும் அரசாங்கக் காசு’ என்று செல்லியின் அப்பா கல்யாணம் கட்டி வைத்துவிட்டார்.

ஆனாலும் செல்லியின் அம்மாவுக்கு மகளை தன் நாத்திக்காரி மகனுக்குக் கட்டிக் கொடுக்க இரண்டு மனசுதான். காட்டுப் பன்றிகள், யானைக் கூட்டம், காட்டெருமை, விஷப்பாம்புகள்... எத்தனை எத்தனை கொடிய விலங்குகள், காட்டுல வாழுற வாழ்க்கை என்ன லேசானதா? மழை அடிச்சா, காட்டை விட்டு இறங்கவே முடியாது. ஒரே அவசர ஆத்திரத்துக்கோ, நோய் நொடிக்கோ வண்டி அம்புடாது. கண்ணாட்டம் வளர்த்த செல்லியை, டவுனு மாப்பிள்ளைக்கு கட்டித் தரத்தான் அவளுக்கு ஆசை.
ஆனால், வீரய்யன்தான் வம்படியாக பச்சைக் குச்சு கட்டி வெச்சவனுக்குத்தான் பரிசம் போடவும் உரிமைன்னு செல்லியை மனையில குத்த வெச்ச மறுமாசமே வந்து பொண்ணு கேட்டுவிட்டான்.

செல்லிக்கும் சின்ன வயசுல இருந்தே வீரய்யன் என்றால் ஒரு இதுதான்! காக்கிச் சட்டையும், காக்கி பேண்ட்டும் அணிந்து, ப்யூன் டிரஸ்ஸில் அவன் நின்றாலும்கூட செல்லிக்கு சினிமாவில் வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹீரோ மாதிரியே இருக்கும்.
செல்லிக்கு, அத்தை மவன் வீரய்யனைப் பிடிச்சுருந்தது போலவே, பூம்பாடி கிராமத்தையும் பிடிச்சுருந்தது.

மாசு தூசு இல்லாத காற்று, அங்கங்கே சின்னச் சின்ன ஓடை. பறவைகளின் கிச்சுக் கிச்சு ஓசை, இதமான குளிர்... குளிருக்கு அடக்கமாக கம்பளிப் போர்வை. போர்வைக்குள்ளே வீரய்யன்.கல்யாணமாகி ஆறு மாசமானாலும் வெட்கமும் குழைச்சலுமாக கண்கள் மினுங்க வளையவந்தாள் செல்லி. காலையில் புதுத்தம்பதி கண் விழிக்கறதுக்குள்ள, பழையதைத் தின்றுவிட்டு, காலிஃப்ளவர் தோட்டத்துக்குப் போய்விட்டுவாள் செங்கம்மா.

வீரய்யனும் புதுப்பொண்டாட்டியிடம் கொஞ்சம் செல்லமாய் வம்பு செய்துவிட்டு, எட்டு மணிக்கெல்லாம் ஸ்கூலுக்குப் போய்விடுவான்.
அப்புறம் செல்லி ராஜ்ஜியம்தான். சோறு பொங்குவாள். கன்னிமார் ஓடைக்குப் போய் துணி அலசுவாள். மீன் பிடிப்பாள். துணி காயும்வரை, புளியம்பழம், நாவல்பழம், வாதாங்கொட்டை பறிப்பாள். ஆட்டுக்குட்டி மேய்ப்பாள். மஞ்சள் பூசிக் குளித்து நீந்துவாள். எப்படியோ பொழுதுபோக்கிவிட்டு, வீரய்யன் வரும்போது வந்து நிற்பாள்.

ஒருமுறை வீரய்யனே கண்டித்திருக்கிறான்.“ஏம் புள்ள! தின்னது செரிக்க மாட்டேங்குதாக்கும்! ஏன்... காட்டுல மேட்டுல அலையறவ? முரட்டான் பன்னிக்கூட்டம் மதம் பிடிச்சு அலைஞ்சுத் திரியுது. மாட்டுன தெரியும்... கண்ணாம் முழிய நோண்டிரும்டி!’“ஆமாடி செல்லி! போனமாசம்கூட மேட்டுக் கிணத்தோரமா, ஆறு வயசு பொட்டைப் புள்ளைய கொன்னுப் போட்டுடுச்சு.. சூசகமா இருந்துக்கணும்டி!’

செல்லி, பூம்பாடிக்கு வாழ்க்கைப்பட்டு வந்ததுல இருந்து, காட்டுப் பன்றிகளின் அட்டகாசம் பற்றி பலரும் சொல்லிச் சொல்லி பயமுறுத்தினார்கள். காட்டுப்பன்னிக்கு ஒரு மஸ்து வந்துடுமாம். அப்ப அதோட கண்ணுல இருந்து, மஞ்சளா ஒரு தண்ணி வடியுமாம். அந்த நேரத்துல அது கன்னி சிசுக்களா பார்த்து, கடிச்சு ரத்தம் குடிக்குமாம்!

இதுவரை ஏதோ ககை போல கேட்டுக் கொண்டிருந்த செல்லி, இப்போது அந்தக் கோரக் காட்சியைக் கண்ணால் பார்த்துவிட்டவளாய், காய்ச்சல் வந்து படுத்தே விட்டாள்.யாரோ மேலட்டூர் கிராமத்துக் குழந்தையாம். மிட்டாய் வாங்க, கடைக்குப் போன குழந்தை, எப்படிக் காட்டுக்குள் போனது? பன்றி வந்து இழுத்துப் போனதா என்று போலீஸும் குழம்பித் தவித்தது.

மஞ்சள் நிலவு, பால் போன்ற வெளிச்சத்தைப் பொழிந்தது. கெங்கம்மா, செங்காளியம்மனுக்குப் பெரும் படையல் போடுவதற்காக மலையடியவாரத்துக்குப் போயிருந்தாள். நாலு ஊர் ஜனமும் சேர்ந்து கிடா வெட்டி பொங்கலிட்டு துஷ்ட விலங்கு வராமலிருக்க வேண்டிக் கொண்டிருந்த அதேசமயம், பூம்பாடி குடிசையில் செல்லியும் வீரய்யனும் மட்டுமே!

வீரய்யன் நல்ல போதையில் இருந்தான். கருவாட்டுக் குழம்பை சோறு போட்டு பிசைஞ்சு, தானே செல்லிக்கு ஊட்டி விட்டான்.
“ஐயே... ஒரே நாறுது! பீடி, சாராயத்தை எப்பத்தான் விடுவியோ!’ செல்லியின் வாய் அலுத்துக் கொண்டாலும், அவளது உடல் அவனது மார்போடு பசைபோட்டு ஒட்டிக் கொண்டது.“இதென்ன மச்சான்... உன் முதுகுல ரத்தக் கீறலு!’“உன் நெகந்தாண்டி, பாரு.. பேரு மாதிரி வளர்த்துருக்க!’

“போ மச்சான். என் கையில நகமே இல்ல பாரு...’ என்று ஏதோ பேசப் போனவளை நெருக்கிக் கட்டிக் கொள்ள “என் செல்ல மொரட்டான்!’ என்று முணுமுணுத்தாள், காதல் மயக்கத்திலிருந்த செல்லி.

கீரைக்காடு... பத்து ஆட்கள் பரவிப் பரவி களை எடுத்தக் கொண்டிருந்தனர். செல்லி கொண்டு வந்திருந்த பூண்டு ரசத்தையும் முட்டைப் பொரியலையும் வழித்துச் சாப்பிட்டாள் கெங்கம்மா. புது மருமகளின் கைப்பக்குவத்தைச் சுற்றியிருந்தவர்களும் ருசி பார்த்து, “உம் கொடுத்து வச்சவ கெங்கம்மா!’ என்று பெருமூச்செரிந்தனர். மாமியார் சாப்பிட்ட பித்தனைத் தூக்கை வாய்க்காலில் கழுவிக் கொண்டு புறப்பட்டாள் செல்லி. பிளாஸ்டிக் கூடையும் கையுமாக மலைப்பாதையில் இறங்கியபோது செல்லிக்கு ஒரு யோசனை தோன்றியது.

பக்கத்துல இரண்டு மேடு ஏறி சாமந்திப் பூந்தோட்டம் தாண்டினா வீரய்யன் ஸ்கூலு வந்துடும். அன்னிக்கு சனிக்கிழமை. ஸ்கூலு லீவு நாள்னாலும் ஒட்டடை அடிக்க, செடிக்குத் தண்ணி ஊத்தணும்னு எதுன்னா வேலையிருக்குன்னு வீரய்யன் கிளம்பிடறது வழக்கம்தான். ஆனா இதுவரை பள்ளிக்கூடப் பிள்ளைங்க இல்லாத நாள்ல தனியா போனதுல்ல... இன்னிக்குப் போய் நின்னா என்ன? அப்பயே திகைச்சுப் போயிடுவானே!

பக்கத்து தேக்கு மரங்களிலிருந்து கீச்சான் குருவிகள் சத்தம் போட்டது, நேற்று கயிற்றுக் கட்டிலின் சத்தம்போலவே இருக்கவே, வெட்கத்தில் முகம் சிவந்த செல்லி, வீரய்யனைப் பார்க்கப் போகும் ஆவலில், குதி நடை போட்டாள்.
மஞ்சள் நிறக் கட்டடம் “ஹோ’ என்று அமைதியில் உறைந்து இருந்தது வாசல் கதவில் பூட்டு.
“மச்சான் வீட்டுக்குப் போயிடுச்சா?’ என்று நினைத்தபடியே ஸ்கூலுக்குப் பின்பக்கமாக இருந்த, சத்துணவுக் கூடத்துக்குப் போய்ப் பார்த்தாள். அங்கேயும் யாருமில்லை. ஆனால் கதவு உள்பக்கமாகச் சாத்தியிருக்கவே... லேசாய் உடைந்திருந்த ஜன்னல் வழியே எக்கி நின்று பார்த்தாள்.

அங்கே... அங்கே... அவள் கண்ட காட்சி...!
ஐயா.. இதென்ன? செல்லியின் கண்கள் விரிந்தன. அங்கு ஒரு மர பெஞ்சின்மீது, பெண் குழந்தை ஒன்று... செல்லிக்கு அடி வயிற்றைக் கலக்கியது. விழாமலிருக்க ஜன்னல் கம்பியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.
“ச்சை.. வாயைத் திறந்த...உன்னைக் கழுத்தை நெருச்சுக் கொன்னுடுவேன்!’
“மிரட்டுவது யார்... வீரய்யனா? மச்சானா? அடப்பாவி!’

அதற்குமேல் பொறுக்காதவளாய் “தட்... தட்...’ எனக் கதவைத் தட்டினாள் செல்லி கைகள் நடுங்க.
“தடக்’ என கதவு திறந்ததும், “அக்கா.... அக்கா... ஊம்... ஊம்....இந்த மாமா’ அழுதுகொண்டே ஓடி வந்த அந்தக் குழந்தைக்கு அஞ்சு வயசுதான் இருக்கும்.

“சரி... போ... நிக்காதே வூட்டுக்கு ஓடு! வெரசா ஓடு!’ என்று அந்தச் சிறுமியை விரட்டினாள்.
“ஏய் செல்லி.. எவுத்துக்கு இங்க வந்தவ? சனியனே...!’ போதையில் வந்த வீரய்யன், கையில் கிடைத்த தட்டை எடுத்து ஓங்கி அடிக்கப் பாய்ந்தான்.

“மச்சான்... நீ.. நீயா... தூத்தெறி’ காறி உமிழ்ந்தாள் கடுங்கோபத்துடன்.
“ஆமாடி! நான்தான்டி... இதுவரைக்கும் நாலு இளங்குட்டிகளைக் கெடுத்து குளோஸ் பண்ணுனவன் நான்தான்!’ மாரில் தட்டியபடியே உளறிக் குளறினான்.

செல்லிக்கு உலகமே தட்டாமாலையாகச் சுற்றியது.
“அப்ப.. முரட்டான் பன்னி சாகடிக்கிறதா ஊர்ல பேசிக்கிறதெல்லாம்...’
“எல்லாம் டூப்பு; நான் கட்டி வுட்ட கதைடி. என்ன எவன்டி கேக்குறது? ப்ரூப்பு இருக்குதா ப்ரூப்பு?’
“நான் இருக்கிறனே மறந்துட்டியா? இப்பவே போறேன் போலீசுக்கு!’
“அவ்ளோ தெகிரியமா போச்சா... பொட்டப் புள்ளைக்கு... உன்ன உசிரோட விட்டாதானே?’
செல்லியின் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்துக் கீழே தள்ளினான். கையில் கிடைத்த கிரைண்டர் குழுவியை எடுத்து செல்லியின் தலைமீது இறக்கிய மறுகணம்...

கீழே கிடந்த ஏதோ பலகை இடறி தாறுமாறாகக் கீழே விழுந்தான்.
செல்லிக்கு எங்கிருந்துதான் அவ்வளவு தைரியம் வந்ததோ... சட்டென்று அருகிலிருந்த மண்ணெண்ணெய் கேனை பாய்ந்து எடுத்து, அவன் மீது சளாளவென்று கொட்டினாள்.
“ஏய்... ஏய்.. என்னாடி பண்ற... என்னைக் கொன்னுடுவியா? நான் உன் புருஷன்டி?’

“த்தூ! புருஷனாம் புருஷன்! பிஞ்சுப் பூவையெல்லாம் கொன்னுத் தின்ன காமப்பன்னி செத்து ஒழிடா.. செத்து ஒழி!’
தீக்குச்சியை உரசி அவன் மீது போட்டாள். “பக்’ என பற்றிக் கொண்ட தீ “திகு திகு..’ என் கொழுந்து விட்டு எரிந்தது.
முகமெல்லாம் கடும் கோவத்தில் சிவந்திருக்க, பற்களைக் கிட்டித்தபடி, கண்களை விரித்து உருட்டி, உக்ரகமாய் நின்றிருந்தாள் செல்லி. சிவப்பு நிறப்புடவையில், தீ ஜ்வாலையின் செந்நிற வெளிச்சத்தில் அப்படியே செங்காளியைப் போலவே ஆவேசத்துடன் நின்றிருந்தாள் செல்லி! சில மாதங்களுக்கு பின்:

குடிபோதையில் ஏற்பட்ட தீ விபத்தில் வீரய்யன் இறந்துபோனதாக போலீஸ் வழக்கைப் பதிவு செய்து முடித்தது. கருணை அடிப்படையில் அதே பள்ளியில் செல்லிக்கு ஆயா வேலை கிடைத்தது. வயதான கெங்கம்மா அத்தையுடன் வாழ்ந்து வருகிறாள். இளம் குழந்தைகளை செல்லி பத்திரமாக அழைத்துச் சென்று வருவதால், பிஞ்சு சாவுகளே இல்லை.
ஆனால், சுத்துப்பட்ட நாலு ஊரு ஜனங்களும் என்ன பேசிக் கொள்கிறார்கள் தெரியுமா?

“செங்காளிக்கு பௌர்ணமி அன்னிக்கு பெரும் படையல் போட்டதனால்தான், முரட்டான் பன்னிக் கூட்டத்தோட அட்டகாசம் கொஞ்ச நாளா இல்ல.’மலைஜாதி ஜனங்க சந்தோஷப்பட்டுப் பேசிக் கொள்ளும்போதெல்லாம், செல்லியின் கண்கள் மட்டும் வேதனை நீரைச் சொரிந்தன ரகசியமாக!

நன்றி - என். சகுந்தலா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 24, 2013 9:59 am

அருமையான கதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக