புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா - மேட் இன் சீனா ! Poll_c10இந்தியா - மேட் இன் சீனா ! Poll_m10இந்தியா - மேட் இன் சீனா ! Poll_c10 
65 Posts - 64%
heezulia
இந்தியா - மேட் இன் சீனா ! Poll_c10இந்தியா - மேட் இன் சீனா ! Poll_m10இந்தியா - மேட் இன் சீனா ! Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
இந்தியா - மேட் இன் சீனா ! Poll_c10இந்தியா - மேட் இன் சீனா ! Poll_m10இந்தியா - மேட் இன் சீனா ! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
இந்தியா - மேட் இன் சீனா ! Poll_c10இந்தியா - மேட் இன் சீனா ! Poll_m10இந்தியா - மேட் இன் சீனா ! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
இந்தியா - மேட் இன் சீனா ! Poll_c10இந்தியா - மேட் இன் சீனா ! Poll_m10இந்தியா - மேட் இன் சீனா ! Poll_c10 
1 Post - 1%
viyasan
இந்தியா - மேட் இன் சீனா ! Poll_c10இந்தியா - மேட் இன் சீனா ! Poll_m10இந்தியா - மேட் இன் சீனா ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா - மேட் இன் சீனா ! Poll_c10இந்தியா - மேட் இன் சீனா ! Poll_m10இந்தியா - மேட் இன் சீனா ! Poll_c10 
257 Posts - 44%
heezulia
இந்தியா - மேட் இன் சீனா ! Poll_c10இந்தியா - மேட் இன் சீனா ! Poll_m10இந்தியா - மேட் இன் சீனா ! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
இந்தியா - மேட் இன் சீனா ! Poll_c10இந்தியா - மேட் இன் சீனா ! Poll_m10இந்தியா - மேட் இன் சீனா ! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தியா - மேட் இன் சீனா ! Poll_c10இந்தியா - மேட் இன் சீனா ! Poll_m10இந்தியா - மேட் இன் சீனா ! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இந்தியா - மேட் இன் சீனா ! Poll_c10இந்தியா - மேட் இன் சீனா ! Poll_m10இந்தியா - மேட் இன் சீனா ! Poll_c10 
15 Posts - 3%
prajai
இந்தியா - மேட் இன் சீனா ! Poll_c10இந்தியா - மேட் இன் சீனா ! Poll_m10இந்தியா - மேட் இன் சீனா ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இந்தியா - மேட் இன் சீனா ! Poll_c10இந்தியா - மேட் இன் சீனா ! Poll_m10இந்தியா - மேட் இன் சீனா ! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இந்தியா - மேட் இன் சீனா ! Poll_c10இந்தியா - மேட் இன் சீனா ! Poll_m10இந்தியா - மேட் இன் சீனா ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இந்தியா - மேட் இன் சீனா ! Poll_c10இந்தியா - மேட் இன் சீனா ! Poll_m10இந்தியா - மேட் இன் சீனா ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இந்தியா - மேட் இன் சீனா ! Poll_c10இந்தியா - மேட் இன் சீனா ! Poll_m10இந்தியா - மேட் இன் சீனா ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா - மேட் இன் சீனா !


   
   
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Mon Sep 23, 2013 9:43 pm

என்னா சார் , என்னா மேடம் எப்படி இருக்கீங்க ? வாழ்க்கை எப்படி போவுது ? எப்படி போனா என்ன வாழனும் அதானே முக்கியம் . வாழ்க்கை ஒரு முறை தான் ;அதை நம் விருப்பப்படி வாழ வேண்டும் ,அவ்வளவு தான் .ஒரு முறை உங்களைச் சுற்றிப் பாருங்கள் . விதவிதமான பொருட்கள் நம் அறையை நிறைத்திருக்கும் .ஒரு சில பொருட்களை தினமும் பயன்படுத்துவோம் .ஒரு சிலவற்றை எப்பவாவது பயன்படுத்துவோம் . ஒரு சிலவற்றை சுவருக்கு வர்ணம் பூசும் மட்டும் எடுப்போம் .பிறகு மீண்டும் அதே இடத்தில் வைத்து விடுவோம் .நாளுக்கு நாள் நாம் பயன்படுத்தும் பொருட்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே தான் போகிறது .  

பொருள் சார்ந்த வாழ்வை வாழவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் . நாம் சம்பாதிக்கும் பணத்தில் அதிகளவு பணத்தை விதவிதமான பொருட்கள் வாங்கவே பயன்படுத்துகிறோம் . இவ்வளவு பொருட்கள் நம் வீட்டை அடைத்த பிறகும் நமக்கு திருப்தி என்பதே இல்லை . இது நம் குறையல்ல ,நம்மைச் சுற்றி கவனமாக சிக்கலாக வெளியே வரமுடியாதவாறு வலை பின்னப்படுகிறது . உலகத்தின் மாபெரும் ஏமாளிகள்  நாம் தான் . உலகத்தில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு பொருளும் இந்தியச் சந்தையை மையமாக வைத்தே தாரிக்கப்படுகிறது .  தொலைக்காட்சி வந்த பிறகு தான் நாம் பயன்படுத்தி வந்த பொருட்களின் எண்ணிக்கை  பல மடங்கு உயர்ந்து விட்டது . அவர்கள் விளம்பரப்படுத்தும் பொருட்களை பயன்படுத்துபவர்கள் மட்டுமே மனிதர்கள் என்ற பிம்பத்தை உருவாக்கி விட்டார்கள் .

பொருட்கள் அதிகமாக அதிகமாக நம் நிம்மதி குறைகிறது .  " கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன் ,கண்ணில் தூக்கம் சொக்குமே அது அந்தக் காலமே ,மெத்தை விரித்தேன் ,சுத்தப் பன்னீர் தெளித்தும் ,கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்தக் காலமே "அண்ணாமலை திரைப்படத்தில் வைரமுத்து எழுதிய வரிகள் இவை . பொருட்கள் கூட கூட நாம் அதிகம் உழைக்க வேண்டியிருக்கிறது . உணவிற்காக உழைப்பதை விட மண் ,பொன் போன்ற பொருட்களுக்காகத்தான் அதிகம் உழைக்கிறோம் . எவ்வளவு கிடைத்தாலும் நம் மனம்  அமைதி அடைவதேயில்லை .

இருபதாம் நூற்றாண்டில் அதிகளவில் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டன . அதற்கு முன்பு வரை நாம் இவ்வளவு பொருட்களைப் பயன்படுத்தவில்லை . கண்டுபிடிப்புகளை முன்வைத்து நிறைய தொழிற்சாலைகள் உருவாகின . கோடிக்கணக்கான பொருட்கள் சந்தைகளில் குவிக்கப்பட்டன . உள்நாட்டு தேவை போக மீதம் வெளிநாட்டு சந்தைகளில் விற்கப்பட்டன . இன்று, மக்கள் தொகை அதிகமுள்ள இந்தியா ,சீனா போன்ற நாடுகள் தான் உலகின் மிகப்பெரிய சந்தையாக உள்ளன . சீனாவில் அதிகளவில் தொழிற்சாலைகள் உள்ளன . தரமில்லாத  மலிவான பொருட்கள் தான் அங்கு  அதிகம்  தயாராகின்றன . சீனத் தயாரிப்புகளோடு வேறு எந்த நாடும் போட்டிபோட முடியாது .

" Made in China " இந்த வார்த்தை சமீப காலமாக மிக அதிகளவில் கண்ணில் படுகிறது . மிகச் சாதாரண 5 ரூபாய் ,10 ரூபாய்  விற்கக்கூடிய பொருட்கள் முதல் விலை உயர்ந்த iphone னின் உதிரி பாகங்கள் வரை அங்கு தயாரிக்கப்படுகின்றன . விளையாட்டு பொம்மைகள் மிக அதிகளவில் தயாராகின்றன . தரம் குறைவான நெகிழியைப் (பிளாஸ்டிக்கைப் ) பயன்படுத்தியே அதிகளவில் பொருட்கள் செய்யப்படுகின்றன . நாம்  என்று அதிகமான பொருட்களைப் பயன்படுத்த ஆரம்பித்தோமோ  அன்று முதல்  நம் தெருக்களில் குப்பைகள் அதிகம் சேரத் தொடங்கின . சீனத் தயாரிப்புகள் மிகக்குறைந்த காலகட்டத்தில் குப்பையாகி விடுகின்றன . இப்போதெல்லாம்  Made in China என்ற வார்த்தையைப்  பார்த்தாலே குப்பை தான் நினைவிற்கு வருகிறது .

விதவிதமான சிறுவர் விளையாட்டுப்  பொம்மைகள் மற்றும் பொருட்கள் , மின்னணுப் பொருட்கள் , தொழிற்சாலை உபகரணங்கள் ,பரிசுப்  பொருட்கள் ,விளையாட்டு உபகரணங்கள்,கடிகாரங்கள் ,நகவெட்டிகள் , சார்ச் லைட்கள் ,LED  பல்ப்கள் , செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்கள் ,கணினி சாதனங்கள் ,ஜெல்லி மிட்டாய் போன்ற தின்பண்டங்கள் ,மிகச் சின்னது முதல் மிகப்பெரியது வரை  நெகிழியால் செய்யப்பட விதவிதமான வீட்டு உபயோகப் பொருட்கள் என்று இன்று நம் நாட்டின் சிறு அங்காடிகள் முதல் பெரிய அளவிலான பல்பொருள்  அங்காடிகள் வரை சீனத் தயாரிப்புகள் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளன . சீனத் தயாரிப்புகள் அதிகம் வெற்றிபெற இரண்டு காரணங்கள் .ஒன்று ,நுகர்வோருக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கின்றன .இரண்டு , விற்பவருக்கு மற்ற பொருட்களைக் காட்டிலும் அதிக லாபம் கிடைக்கிறது . MRP அச்சிடாத சீனத் தயாரிப்புகளை தங்கள் விருப்பம் போல் விற்பனை செய்கிறார்கள் ,விற்பனையாளர்கள் .

ISI ,AGMARK  என்பதெல்லாம் பள்ளியில் படிக்க மட்டுமே பயன்படுகின்றன . நடைமுறையில் நாம் பொருட்கள் வாங்கும் பொது இவற்றையெல்லாம் கவனிப்பதில்லை . மிக அதிக விலையுள்ள பொருட்கள் வாங்கும் போது மட்டுமே நாம் தரம் குறித்து கவனிக்கிறோம் .மற்ற நேரங்களில் எதையும் கவனிக்காமல் பொருட்கள் வாங்கி விடுகிறோம் . சீனத் தயாரிப்புகளுக்கு கடிவாளம் போடா விட்டால் இந்தியாவில் இந்தியப் பொருட்களை விற்க முடியாத சூழ்நிலை உண்டாகும் .இல்லையென்றால் " இந்தியா "என்னும் பொருள் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்ற நிலை உருவாகிவிடும் . தரமில்லாத சீனப் பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் . சிறுவர் விளையாட்டுப் பொருட்களில் இந்தியத் தயாரிப்பை ஊக்குவிக்க வேண்டும் . ஒரு சிறிய நகவெட்டியைக் கூடவா இவ்வளவு பொறியாளர்கள் உள்ள தேசத்தில் இன்னும் தயாரிக்க முடியவில்லை .

இயற்கை பொருட்களைத் தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களும் சுற்றுச்சூழலை மிகக் கடுமையாக பாதிக்கின்றன . பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வெளியிடும் கழிவுகள் , பொருட்கள் உரிய இடத்திற்கு செல்ல தேவைப்படும் போக்குவரத்து எரிபொருள் கழிவு ,நாம் பயன்படுத்திய பிறகு தூக்கி எரிவதால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு என்று பொருட்கள் அதிகமாக ,அதிகமாக இயற்கை அழிகிறது .சீனத் தயாரிப்புகளில் நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்கள் அதிகம் சேர்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது .அவை  சூழலுக்கு கடும் பாதிப்பை உண்டாக்குகின்றன . இன்றைய சூழலில் இயற்கையை பாதிக்காமல் எந்தப் பொருளும் சந்தைக்கு வருவதில்லை . ஒரு சிறு இரும்புத் துண்டு தயாரிக்க எவ்வளவு மண் தோண்டப்படும் ? நாம் உணர்வதே இல்லை . எப்படிப் பார்த்தாலும் விதவிதமான பொருட்களின் அதிகரிப்பு நம் சூழலுக்கு எதிரி தான் .

பொதுவாக நாம் ஒரு விசயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும் . நாம் இருக்கும் இடங்களில்  என்னென்ன பொருட்கள் கிடைக்கிறதோ அதை வைத்து வாழப் பழகிவிட்டால் இயற்கையை ஓரளவு காப்பாற்றலாம் . அதற்கு நாம் செய்ய வேண்டியது  .அவசியம் தேவைப்பட்டால் மட்டுமே புதிய பொருட்களை வாங்க வேண்டும் . முடித்தவரை உள்ளூரில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்கலாம் . நாம்  இருக்கும்  பகுதில் விளைந்த உணவுப்பொருட்களை வாங்கி உண்பதன் மூலம் நம் உடல் நலத்தையும் பேணலாம் .

விதவிதமான பொருட்களோ , விலை உயர்ந்த பொருட்களோ , நம் சூழலுக்குப் பொருந்தாத  வெளிநாட்டு உணவுகளோ நமக்கு நிலையான அமைதியையோ ,மகிழ்ச்சியையோ தராது . ஒரு நாள் வேண்டுமானால் நீங்கள் மகிழலாம் . மற்ற எதுவும்  அவற்றால் நமக்குக் கிடைக்காது . இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ முயல வேண்டும் . நம்முடன் மற்றவர்களை  ஒப்பிடுவதை நிறுத்தினாலே நாம் பல பொருட்கள் வாங்க மாட்டோம் . ஆடம்பரத்தினால் கிடைக்கும் மற்றவர்களின் அங்கீகாரம் நமக்குத் தேவையில்லை .

முன்பு ஒரு முறை புகழ் பெற்ற வெளிநாட்டு ஞானி ஒருவர் வாரம் ஒருமுறை அங்காடிகளுக்குச்  சென்று அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் விதவிதமான பொருட்களை வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு வருவாராம் . அங்காடி ஊழியர் அவரிடம் ," நீங்கள் தான் எந்தப் பொருளையும் வாங்குவதில்லையே ,அப்புறம் ஏன் அவ்வபோது அங்காடிக்கு  வந்து போகிறீர்கள் " என்று கேட்டார் .அதற்கு அந்த ஞானி " எனக்குத் தேவையில்லாத பொருட்கள் எவ்வளவு இந்த உலகத்தில் இருக்கின்றன "என்று பார்வையிடவே வந்ததாக கூறினார் . நமக்குத் தேவையில்லாத பொருட்கள் தான் உலகில் அதிகம் இருக்கின்றன . அதிகமாக தேவைப்படும் அன்பு குறைவாகவே இருக்கிறது . ஆனால் ,அந்த அன்பிற்கு இருக்கும் சக்தி மிகப்பெரியது .

பொருட்களை நம்பி இருக்கும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் என்ன செய்வார்கள் ? என்று கவலைப் பட வேண்டாம் . அவர்களுக்காக இந்தியாவின் மிச்சமிருக்கும் விவசாயநிலங்கள் காத்திருக்கின்றன ..
http://jselvaraj.blogspot.in/2012/10/blog-post_20.html

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 23, 2013 10:26 pm

மிக சிறந்த கட்டுரை, செல்டுடே
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 24, 2013 9:01 am

//முன்பு ஒரு முறை புகழ் பெற்ற வெளிநாட்டு ஞானி ஒருவர் வாரம் ஒருமுறை அங்காடிகளுக்குச்  சென்று அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் விதவிதமான பொருட்களை வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு வருவாராம் . அங்காடி ஊழியர் அவரிடம் ," நீங்கள் தான் எந்தப் பொருளையும் வாங்குவதில்லையே ,அப்புறம் ஏன் அவ்வபோது அங்காடிக்கு  வந்து போகிறீர்கள் " என்று கேட்டார் .அதற்கு அந்த ஞானி " எனக்குத் தேவையில்லாத பொருட்கள் எவ்வளவு இந்த உலகத்தில் இருக்கின்றன "என்று பார்வையிடவே வந்ததாக கூறினார் . நமக்குத் தேவையில்லாத பொருட்கள் தான் உலகில் அதிகம் இருக்கின்றன . அதிகமாக தேவைப்படும் அன்பு குறைவாகவே இருக்கிறது . ஆனால் ,அந்த அன்பிற்கு இருக்கும் சக்தி மிகப்பெரியது //

அருமையான வரிகள் புன்னகைமகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 

//பொருட்களை நம்பி இருக்கும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் என்ன செய்வார்கள் ? என்று கவலைப் பட வேண்டாம் . அவர்களுக்காக இந்தியாவின் மிச்சமிருக்கும் விவசாயநிலங்கள் காத்திருக்கின்றன //

ரொம்ப சரி புன்னகைநல்ல கட்டுரை பகிர்வுக்கு ரொம்ப நன்றி நன்றி அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Sep 24, 2013 3:47 pm

தற்காலத்திற்கு பொருத்தமான நல்லதொரு கட்டுரை! பகிர்விற்கு நன்றி!இந்தியா - மேட் இன் சீனா ! 3838410834 

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 03, 2013 5:26 am

இந்தியாவின் மிச்சமிருக்கும் விவசாயநிலங்கள்
தொழிலாளர்களுக்கு, காத்திருக்கின்றன ..
-
ஆனால் நீர் ஆதாரம் இல்லாததால், சாலை ஓர விவாசய
நிலங்கள் வீட்டு மனைகளாக மாறி வருகின்றன..என்பதும் உண்மை..!
-


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 03, 2013 12:29 pm

சீனாவின் கழிவுகளை அகற்ற கிடைத்திருக்கும் குப்பை தொட்டி இந்தியா. மிக மிக அவசியமான பதிப்பு. இந்த சமயத்தில் தேவையான படைப்பும் கூட.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Oct 03, 2013 1:03 pm

நல்ல பதிவு இந்தியா - மேட் இன் சீனா ! 3838410834 இந்தியா - மேட் இன் சீனா ! 103459460 இந்தியா - மேட் இன் சீனா ! 1571444738 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 03, 2013 3:15 pm

பகிர்வுக்கு நன்றீ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக