புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 10:16 am

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 9:45 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 9:43 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:43 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:30 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:07 am

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 8:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:37 am

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 7:26 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:25 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 7:19 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:10 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 6:55 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 6:54 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:51 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 6:31 am

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 1:41 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 1:37 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 5:57 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 12:23 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 11:06 am

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 8:16 am

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 7:55 am

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 7:53 am

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 7:52 am

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 am

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:49 am

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 7:48 am

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 7:46 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 3:24 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 5:36 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 12:23 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 12:02 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 12:01 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:58 am

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:56 am

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:55 am

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:54 am

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:52 am

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 10:43 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 10:31 am

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 10:07 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 10:05 am

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 10:03 am

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 10:01 am

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 10:00 am

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:57 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Poll_c10தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Poll_m10தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Poll_c10 
25 Posts - 69%
heezulia
தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Poll_c10தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Poll_m10தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Poll_c10தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Poll_m10தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Poll_c10தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Poll_m10தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Poll_c10 
361 Posts - 78%
heezulia
தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Poll_c10தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Poll_m10தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Poll_c10தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Poll_m10தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Poll_c10தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Poll_m10தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Poll_c10தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Poll_m10தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Poll_c10தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Poll_m10தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Poll_c10தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Poll_m10தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Poll_c10தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Poll_m10தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Poll_c10தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Poll_m10தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Poll_c10தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Poll_m10தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Sep 17, 2013 12:37 pm

சிறுமழையை கூட சேமிக்க முடியாத துயரம்!

மன்னர்கள் கோயில்கள் கட்டிய அளவு ஏரிகளும் வெட்டினர். வடக்கே வீராணம் ஏரி முதல் தெற்கே விஜயநாராயணம் ஏரி வரை அனைத்தும் மன்னர்கள், ஜமீன்தாரர்கள், சில இடங்களில் மக்களால் அமைக்கப்பட்டவை. ஏரியிலிருந்து நீர் செல்லும் மதகுகள், வாய்க்கால்கள் குடி மராமத்து முறையில் ஊர்மக்கள் உழைப்பால் பராமரிக்கப்பட்டன. இதற்கு பிரதிபலனாக ஏரிக்கரை மரங்கள், மீன்களை குத்தகைக்கு விட்டனர். மன்னர் ஆட்சி காலத்தில் ஊர் சபைகளின் கீழ் அமைந்த ஏரி வாரியம் குளங்களை பராமரித்தது. கிபி 768ஆம் ஆண்டு பையனூர் கல்வெட்டு பையனூர் ஏரிக்கு மாமல்லபுரத்து வணிகர் 6400 காடி நெல்லை ஊர்சபையாராகிய ஆளுங்கணத்தாருக்கு வழங்கிய தகவலை கூறுகிறது. அதை இருப்பாக கொண்டு அதிலிருந்து கிடைக்கும் பொலிவூட்டு (வட்டி ) மூலம் குளத்தை பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சோழ முத்தரையன் என்ற அதிகாரி குருவித்துறை பெருமாளுக்கு தானமாக வழங்கிய நிலத்துக்காக ஏரியில் இருந்து கூடுதல் வாய்க்கால் அமைத்ததை ஊர்சபை அரசருக்கு தெரிவிக்க, அந்த வாய்க்கால் தூர்க்கப்பட்டது. இது தவிர, 10 முதல் 80 வயதுக்கு உட்பட்டோர் அனைவரும் ஆண்டுதோறும் ஏரியில் ஒரு குழி வண்டல் தோண்டவேண்டும். தவறினால் 4 பொன் தண்டம் கொடுக்கவேண்டும் என மற்றொரு கல்வெட்டு கூறுகிறது. ஏரி குளங்களில் விவசாயிக்கு மட்டுமின்றி சலவை தொழிலாளர், கால்நடை வளர்ப்போர், மீன் பிடிப்போருக்கும் உரிமை இருந்தது.

மழை நீர் சேமிப்பு திட்டம் அமலில் இல்லாவிட்டாலும் அதற்கான செயல்பாடு அக்காலத்தில் இருந்தது. தஞ்சை பெரியகோயில் வளாகத்தில் விழுந்த மழைநீரை சேமிக்கும் இடமாகவே சிவகங்கை குளத்தை ராஜராஜன் அமைத்தான். பிற்காலத்தில் செவ்வப்ப நாயக்கர் தஞ்சை நகரில் பெய்த மழைநீரை பல்வேறு தெருக்களிலிருந்து சுடுமண் குழாய்கள் மூலம் சிவகங்கை குளத்தில் சேர்த்தார். ஆங்கிலேயர்கள் பொதுப்பணித்துறையை நிறுவிய பின் நீராதார பராமரிப்பு அரசின் உரிமையானது. 1800ல் ராணுவ பொறியாளர் ஒருவரை ஏரி மராமத்து அலுவலராக ஆங்கில அரசு நியமித்தது. 1878 & 80ல் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரைப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏரி மராமத்து ஆய்வாளர் நியமிக்கப்பட்டார். 200 ஏக்கருக்கு மேல் பாசனப்பரப்பு கொண்ட குளங்களை அரசும் மற்றவற்றை மக்களும் பராமரித்தனர். இதுவே பின்னர் பொதுப்பணித்துறையாக உருவானது. நில உடமைதாரரே பாசன வேலையை செய்யவேண்டும். அல்லது அதற்கான சம்பளத்துக்கு இருமடங்கு பணம் செலுத்தவேண்டும் என வலியுறுத்தும் சென்னை கட்டாய வேலையாட்கள் சட்டம் 1858ல் இயற்றப்பட்டது. 1901ல் அமைக்கப்பட்ட ஆணையம், ‘நீராதார பராமரிப்பு அரசின் கடமை. எனவே, இந்த சட்டம் செல்லத்தக்கதல்ல‘ என்று கூறியது. அதன்பின்பு நீருக்கும் விளைச்சலுக்கும் தீர்வை வசூலித்ததால் விவசாயிகளுக்கு ஆர்வம் அற்றுப்போனது. சுதந்திரத்துக்கு பின்பு உணவு உற்பத்தியை பெருக்குவதற்காக அரசே பாசன பராமரிப்பை மேற்கொண்டதால் குளத்துப்பற்றுகளின் உரிமையாளர்கள் முற்றிலும் பற்றற்றவர்களாகினர்.

தமிழகத்தில் உள்ள 39,202 ஏரி, குளங்களில் கால் பங்கை காணவில்லை. அதற்காக ‘கிணற்றை காணோம்‘ கதையாக பொதுப்பணித்துறையிடம் புகார் செய்யமுடியாது. ஏனெனில், அவர்கள் அறியவே அவை களவாடப்பட்டன. ஓடைகள் ஆக்கிரமிப்பால் குளங்களும், குளங்களின் ஆக்கிரமிப்பால் வயல்களும், வயல்களின் ஆக்கிரமிப்பால் விவசாயமும் அழிந்துபோயின. பொதுப்பணித்துறைக்கு துணை நிற்கவேண்டிய வருவாய், உள்ளாட்சி துறைகள் ஆக்கிரமிப்பாளர்களின் ஆதரவாளர்களாக ஆனதால் இந்த நிலை. நீர்நிலை ஆக்கிரமிப்பால் உணவுப்பஞ்சம் மட்டுமல்ல, குடிநீர் பஞ்சமும் தலைதூக்குகிறது. வேளாண்மை தொழில் மட்டுமின்றி, மின் உற்பத்தி மற்றும் அனைத்து தொழில்களும் வியாபாரமும் சேர்ந்தே முடங்குகிறது. நீராதாரங்களை பாதுகாக்க நீரை பயன்படுத்துவோரின் பங்களிப்பு முக்கியம் என்பதால் அவர்களை கொண்டு சங்கம் அமைக்க உலக வங்கி நிபந்தனை விதித்தது. இதையொட்டி 2001 முதல் சங்கங்கள் அமைக்கப்பட்டு 2004ல் தேர்தல் நடைபெற்றது. இச்சங்கத்தினருக்கு விவசாயிகளிடம் நிதி வசூலிக்க, மீன், பாசி குத்தகை விட, பொதுப்பணித்துறை அதிகாரியுடன் இணைந்து கணக்கு தொடங்கி அதை வரவு, செலவு செய்ய உரிமை வழங்கப்பட்டது. ஆனால், அது நீர் மேல் எழுத்தாகிவிட்டது. பாசன சங்க தலைவர்கள் அடங்கிய நீராதார அமைப்பின் உச்சநிலைக்குழு பொதுப்பணித்துறை செயலர் முன்னிலையில் கூட்டப்படவேண்டும்.

ஆனால், அதைக்கூட திருமூர்த்தி நீர்த்தேக்கத்திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்றபின்பே கடந்த 4ஆம் தேதியில் கூட்டியுள்ளனர். 2012ல் வெளியிடப்பட்ட தேசிய நீர் கொள்கை நீர் வள ஆதார அமைப்பை பாதுகாக்கும் அரசின் பொறுப்பை தட்டிக்கழிக்கிறது. நீர் நிலையில் மக்களுக்கு உள்ள உரிமையை மறுதலிக்கிறது. அவற்றை தனியாருக்கு ஏலமுறையில் கொடுக்கவும், தண்ணீர் மற்றும் கழிவு நீருக்கு வரி விதிக்கவும் வகை செய்கிறது.எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அதை சேமித்து வைக்க குளங்களும் ஏரிகளும் தயார்நிலையில் இருக்க வேண்டும். ஆனால் ஆக்கிரமிப்பு காரணமாக குளங்களும் ஏரிகளும் சுருங்கிப் போய் விட்டன. சுருங்கிய ஏரி, குளங்களை பராமரித்து தூர்வாறி வைத்திருந்தால் அவற்றில் ஆண்டு முழுவதற்கும் தேவையான தண்ணீரை சேமிக்க முடியும். அதுவும் செய்வதில்லை. பாதிக்கு மேற்பட்ட குளங்கள் தூர்ந்து போய் விட்டன. ஏரி, குளங்களுக்கு வரும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் காணாமல் போய்விட்டன. சிறு மழையைக் கூட சேமிக்க முடியாத துயரம் தான் நிலவுகிறது.

இது குறித்து கோதையாறு வடிநிலக்கோட்ட பாசன தலைவர் வக்கீல் வின்ஸ் அன்ட்றோ கூறுகையில், ‘ விவசாயம் லாபகரமாக இருந்த அந்த காலத்துக்கு குடிமராமத்து பொருந்தும். இப்போது ஆக்கிரமிப்பை தடுக்கும் வலிமை விவசாயிகளுக்கு இல்லை. தற்போது ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நீர்பாசன அமைப்பின் பிரதிநிதிகளை இணைத்துக்கொண்டு அரசு செயல்படவேண்டும். குளங்களை தூர்வார கனிம வளத்துறை அனுமதிக்கும் முன்பு சுற்றுச்சூழல் குழு ஒன்று இசைவளிக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, அவ்வாறு ஒரு குழுவை அமைக்கவேண்டும். தமிழ்நாடு ஏரிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றும் சட்ட விதிகளை பின்பற்றி நாகர்கோவில் பார்வதிபுரம் அனந்தனார் சானல் கரையில் 160க்கு மேற்பட்ட வீடுகள், கடைகள் கொண்ட ஆக்கிரமிப்பை அகற்றினோம். புதிய ஆக்கிரமிப்பை அகற்ற இந்த நடைமுறையை பின்பற்ற தேவையில்லை.‘ என்றார்.
தண்ணீரின் பயன்பாட்டை குடிக்க, விவசாயம் செய்ய, நீர் மின்சாரம் தயாரிக்க, சுற்றுச்சூழலை பேண, விவசாயம் சார்ந்த, சாராத தொழில்கள் செய்ய, போக்குவரத்து மற்றும் இதர பயன்பாட்டுக்கு என 2002ஆம் ஆண்டு தேசிய நீர் கொள்கை வரிசைப்படுத்துகிறது. இதன் அடிப்படையிலேயே நீராதார பாதுகாப்பு உரிமையும் வழங்கப்படவேண்டும். பொதுச்சொத்தான தண்ணீரில் மக்களுக்கான உரிமை எப்போதும் இருந்துவரவேண்டும் என்பதே அனைவரின் கருத்தாகவும் உள்ளது.

4கட்ட நடைமுறை
தமிழ்நாடு ஏரிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றும் சட்டம் 2007ன்படி பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளரே நான்கு கட்ட நடைமுறையை பின்பற்றி ஆக்கிரமிப்பை அகற்றலாம். முதலாவதாக வருவாய் துறை மூலம் நீர் நிலையை அளந்து வரைபடமும், ஆக்கிரமிப்பு பற்றிய அறிக்கையும் தயாரிக்கவேண்டும். இரண்டாவது அதை விளம்பரப்படுத்தவேண்டும். ஆக்கிரமிப்பை அகற்றுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவேண்டும். அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் பொதுப்பணித்துறையே அகற்றப்போவதாக நோட்டீஸ் அனுப்பிவிட்டு நேரடியாக நடவடிக்கையில் இறங்கலாம்.
நன்றி-தினகரன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 17, 2013 12:55 pm

தமிழ்நாடு ஏரிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றும் சட்டம் 2007ன்படி பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளரே நான்கு கட்ட நடைமுறையை பின்பற்றி ஆக்கிரமிப்பை அகற்றலாம். முதலாவதாக வருவாய் துறை மூலம் நீர் நிலையை அளந்து வரைபடமும், ஆக்கிரமிப்பு பற்றிய அறிக்கையும் தயாரிக்கவேண்டும். இரண்டாவது அதை விளம்பரப்படுத்தவேண்டும். ஆக்கிரமிப்பை அகற்றுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவேண்டும். அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் பொதுப்பணித்துறையே அகற்றப்போவதாக நோட்டீஸ் அனுப்பிவிட்டு நேரடியாக நடவடிக்கையில் இறங்கலாம்.
இறங்கலாம் ..... அதன் பிறகு அவரால் ஏறி வரமுடியாது , நேரடியா மேலே அனுப்பிடுவோம்ல

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Sep 17, 2013 1:10 pm

எல்லாமே அரசாங்கம் செய்யனும் நாங்க ஏதும் செய்ய மாட்டோம் ஆனா அரசாங்கத்திடம் இருந்து வரும் இலவசம் மட்டும் வேணும்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக