ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!!

+2
krishnaamma
அருண்
6 posters

Go down

'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!! Empty 'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!!

Post by அருண் Sun Sep 22, 2013 3:05 pm

'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!! Madurai_jpg_1592184h

கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்

பிதற்றிப் பிதற்றி ஏதேதோ பேசுகிறான். கடந்த நான்கு மாதங்களாக, முடை நாற்றம் வீசும் அந்த வீட்டுக்குள் ஈக்களுக்கு மத்தியில் முடங்கிக் கிடந்திருக்கிறான். கலெக்டராவதற்காகத் துடித்துக் கொண்டிருந்த பிள்ளை, கனவுகளை தொலைத்துவிட்டு நிற்பது எதனால்? கந்தக்குமாருக்கு என்ன ஆயிற்று?

எவ்வளவு பெரிய மாளிகையை காட்டினாலும் யாருமே சொந்த வீட்டைத்தான் சொர்க்கம் என்பார்கள். ஆனால், சொந்த வீட்டுக்குள்ளேயே நான்கு மாதங்கள் நரகத்தை அனுபவித்திருக்கிறான் பதினைந்து வயது சிறுவன்!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள ஒரு கிராமம் அது. இங்குள்ள மதுரைவீரன் - மருதாயி தம்பதியின் இரண்டாவது பிள்ளை கந்தக்குமார் (பெயரை மாற்றி இருக்கிறோம்). தலித்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் சாதியில் பிறந்தவர் மதுரைவீரன். இவரிடம் பணம் காசுக்குத்தான் பஞ்சம்; புத்திர பாக்கியத்தில் சுக்கிர தசை சுழற்றியடித்தது. 19 வயதில் மூத்த மகள், 6 மாதக் கைக்குழந்தையாய் கடைசி மகன் என மொத்தம் எட்டு குழந்தைகளுக்கு தகப்பன் இந்த மதுரை வீரன்.

இவர்களது வீட்டைப் பார்த்தால் இதற்குள்ளேயா இத்தனை பேரும் உண்டு உறங்குகிறார்கள்? என்று அசந்து போவீர்கள். இத்தனையையும் சகித்துக்கொண்டு கலெக்டர் கனவோடு பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்தான் கந்தக்குமார். கடந்த வருடம் ஒன்பதாவது வகுப்பிலேயே இவன்தான் முதல் மாணவன். ’நிச்சயம் கலெக்டரா வருவேடா’ என்று ஆசிரியர் கைகுலுக்கியபோது அசந்து போனான் கந்தக்குமார். ‘வாத்தியார் என்னைய தொட்டுக் கைகுலுக்கிட்டாருப்பா’ அப்பாவிடம் ஆச்சரியப்பட்டுச் சொன்னான். ‘கலெக்டர் ஆவாய்’ என்று சொன்னதைவிட யாருமே தொடாத தன்னை ஆசிரியர் தொட்டுவிட்டார் என்பதே தேடக் கிடைக்காத பெருமையாய் இருந்தது அவனுக்கு.

ஆனால் இப்போது? இது எதுவுமே சரிவர ஞாபகமில்லை அவனுக்கு. பிதற்றிப் பிதற்றி ஏதேதோ பேசுகிறான். கடந்த நான்கு மாதங்களாக, முடை நாற்றம் வீசும் அந்த வீட்டுக்குள் புத்தகப் பையை தலைக்கு வைத்துக் கொண்டு ஈக்களுக்கு மத்தியில் முடங்கிக் கிடந்திருக்கிறான். வஞ்சகமில்லாமல் பிள்ளைகளை பெத்துப் போடத் தெரிந்தவர்களுக்கு, வீட்டுக்குள் ஒரு பிள்ளை ஏன் இப்படி முடங்கிக் கிடக்கிறது என்று கேட்கவும் நேரமில்லை. அந்த அக்கறையு மில்லை. கலெக்டராவதற்காகத் துடித்துக் கொண்டிருந்த பிள்ளை கனவுகளை தொலைத்துவிட்டு நிற்பது எதனால்? கந்தக்குமாருக்கு என்ன ஆயிற்று?

மனநல சிகிச்சைக்காக கந்தக் குமாரை அந்த நரகத்திலிருந்து மீட்டு வந்த மதுரை ‘எவிடென்ஸ்’ அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் விவரிக்கிறார்..

“நல்லா படிச்சிட்டு இருந்த பையன் சார். அவன் இன்னைக்கி இந்த நிலையில இருக்கதுக்கு காரணமே பெத்தவங்கதான். இத்தன புள்ளைங்கள பெத்துப் போடுறோமே, இதுகள நல்லா வளத்து ஆளாக்க முடியுமாங்கிற கவலை கொஞ்சம்கூட இல்லை. அந்தாளுக்கு 47 வயசாச்சு. இப்பவும் கைக்குழந்தை இருக்கு.

இதைச் சொல்லித்தான் கந்தக்குமாரோட படிக்கிற பசங்க அவன கிண்டல் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. ’உங்க அப்பனுக்கு வேற வேலையே இல்லையாடா?’ன்னு அந்தப் பசங்க கேட்டதையே அவனால தாங்கிக்க முடியல. தனக்குள்ளயே புழுங்கிச் செத்துருக்கான்.

மேற்கொண்டும் அந்தப் பசங்க, ‘ஏண்டா... நீங்க அக்கா தம்பி தங்கச்சி எல்லாரும் ஆளுக்கு ஒரு தினுசா இருக்கீங்க?’ன்னு சீண்டி இருக்காங்க. அதுக்கு மேல அவனால வாய மூடிட்டு இருக்க முடியல. ’நாங்க எல்லாரும் எங்க அப்பனுக்குத்தாண்டா பொறந்தோம்’னு ஆத்திரத்தோட கத்திருக்கான்.

அப்படியும் விடாம அந்தப் பிஞ்சு மனச கொத்திக் கொத்தி அவன மனநோயாளியாவே மாத்திட்டாங்க’’ கலங்கிப்போன கதிர், தொடர்ந்து பேசினார்..

’’ஸ்கூலுக்குப் போனா பசங்க கிண்டல் பண்ணுவாங்களேங்கிற நடுக்கம் அவனுக்கு. அதனால, நாலு மாசமா வீட்டுக்குள்ளேயே புத்தக பை மேலேயே முடங்கிப் படுத்துட்டான். ரெண்டு மாசமா குளிக்கக்கூட இல்ல. தன்னையறியாம யூரின் போனதுகூட தெரியாம படுத்திருந்திருக்கான்.

’ஏண்டா கந்தக்குமார் ஸ்கூலுக்கு வரலைன்னு ஆசிரியர்கள் கேட்டதுக்கு, ‘அவனுக்கு என்னவோ ஆயிருச்சு சார். வீட்ட விட்டு வெளியில வரவே இல்ல’ன்னு மத்த பசங்க சொல்லிருக்காங்க.

இதைக் கேட்டுட்டு ஆசிரியர்கள் பாலச்சந்திரனும் சேகரும் எங்களுக்கு தகவல் குடுத்தாங்க. அவன கூட்டிட்டு வந்து மனநல மருத்துவரிடம் கவுன்சலிங் குடுத்தோம். ‘எனக்கு டி.என்.ஏ. டெஸ்ட்கூட எடுத்துப் பாருங்க சார்’னு அவன் சொன்னதக் கேட்டப்ப ரொம்பப் பரிதாபமா இருந்துச்சு . ‘

இனிமே புள்ள பெத்தீனா ஒன்னைய கொலை பண்ணிருவேன்’னு அம்மாவைப் பாத்து பல்லைக் கடிக்கிறான். வேற ஸ்கூல்ல சேர்த்து படிக்க வைக்கலாம்னு நாங்க பேசுனப்ப, ‘அதெல்லாம் வேணாம் சார்.

எல்லாரையும் தொட்டுப் பேசலாம்னுதான் கலெக்டராவேன்னு சொன்னேன். எங்க சாரு தான் என்னைய தொட்டு கைகுடுத்துட்டாருல்ல’னு அவன் சொன்னப்ப, இந்த சமூகம் அவன எவ்வளவு கேவலமா நடத்தி இருக்குன்னு புரிஞ்சிக்க முடிஞ்சுது.

அக்கம் பக்கத்துக்காரங்க எல்லாம், ‘மொதல்ல இவங்கள பிடிச்சு உள்ள போடுங்க சார்’னு மதுரை வீரனையும் அவரு பொண்டாட்டியையும் கைகாட்டுறாங்க. தன்னோட ரெண்டு பசங்கள

பத்தாயிரம் ரூபாய்க்கு மும்பையில முறுக்கு கம்பெனிக்காரனுக்கு கொத்தடிமையா அனுப்பி வைச்சிருக்காரு மதுரை வீரன். அவனுக்கு இப்போதைக்கு தேவை நல்ல கவுன்சலிங். அதுக்கு ஏற்பாடு செய்துருக்கோம்.

மனநல மருத்துவரோட ஆலோசனைப்படி அவனை குணப்படுத்திருவோம்’’ - நம்பிக்கை துளிர்க்க பேசினார் கதிர்.

tamil.thehindu
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!! Empty Re: 'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!!

Post by krishnaamma Sun Sep 22, 2013 5:55 pm

அடப்பாவமே ! சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!! Empty Re: 'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!!

Post by பார்த்திபன் Mon Sep 23, 2013 12:22 pm

இது மிகவும் கொடுமை. தைரியமானவர்களையும் அழ வைத்துவிடும் இச்சிறுவனின் நிலை. அந்தச் சிறுவனின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? அவன் குணமடைந்தான் என்ற செய்தி வந்தால்தான் சற்று ஆறுதலாக இருக்கும்.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!! Empty Re: 'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!!

Post by ஜாஹீதாபானு Mon Sep 23, 2013 12:30 pm

குழந்தையைப் பெற்று இப்படி சீரழிய விடுவதற்கு மலடியா இருந்திருக்கலாம் பெற்றவர்கள்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!! Empty Re: 'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!!

Post by பூவன் Mon Sep 23, 2013 12:38 pm

சமூகம் இன்றும் சாகடித்து கொண்டு தான் உள்ளன இது போன்ற குழந்தை மனங்களையும் கொன்று விட்டு ...

கண்ணீர் மட்டும் அல்ல செந்நீர் சிந்த வைத்த கந்தகுமார் நிலைமை , இந்த சிறுவன் விரைவில் குணம் அடைந்து ஆட்சியாளர் ஆகட்டும் என இறைவனை வேண்டுகிறேன் .
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!! Empty Re: 'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!!

Post by mbalasaravanan Mon Sep 23, 2013 6:21 pm

இப்படியும் பேசுற ஸ்டூடண்ட்ஸ் இருக்கங்களா
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!! Empty Re: 'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum