புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேனீர் வகைகளும், செய்முறையும்..!! Poll_c10தேனீர் வகைகளும், செய்முறையும்..!! Poll_m10தேனீர் வகைகளும், செய்முறையும்..!! Poll_c10 
62 Posts - 57%
heezulia
தேனீர் வகைகளும், செய்முறையும்..!! Poll_c10தேனீர் வகைகளும், செய்முறையும்..!! Poll_m10தேனீர் வகைகளும், செய்முறையும்..!! Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
தேனீர் வகைகளும், செய்முறையும்..!! Poll_c10தேனீர் வகைகளும், செய்முறையும்..!! Poll_m10தேனீர் வகைகளும், செய்முறையும்..!! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
தேனீர் வகைகளும், செய்முறையும்..!! Poll_c10தேனீர் வகைகளும், செய்முறையும்..!! Poll_m10தேனீர் வகைகளும், செய்முறையும்..!! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேனீர் வகைகளும், செய்முறையும்..!! Poll_c10தேனீர் வகைகளும், செய்முறையும்..!! Poll_m10தேனீர் வகைகளும், செய்முறையும்..!! Poll_c10 
104 Posts - 59%
heezulia
தேனீர் வகைகளும், செய்முறையும்..!! Poll_c10தேனீர் வகைகளும், செய்முறையும்..!! Poll_m10தேனீர் வகைகளும், செய்முறையும்..!! Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
தேனீர் வகைகளும், செய்முறையும்..!! Poll_c10தேனீர் வகைகளும், செய்முறையும்..!! Poll_m10தேனீர் வகைகளும், செய்முறையும்..!! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தேனீர் வகைகளும், செய்முறையும்..!! Poll_c10தேனீர் வகைகளும், செய்முறையும்..!! Poll_m10தேனீர் வகைகளும், செய்முறையும்..!! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேனீர் வகைகளும், செய்முறையும்..!!


   
   
avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Thu Sep 24, 2009 11:36 am

தேனீர் வகைகள்

வெண்தேநீர்

பச்சை நிறம் படியாத இளந்தளிர்களில் இருந்து இவ்வகைத்
தேயிலை
தயாரிக்கப்படுகிறது. அதிக சூரிய வெளிச்சம் படாமல் இருக்க சில சமயம் அவ்விளந்தளிர்களை மறைத்து வைப்பதும் உண்டு. வசந்த காலத்தில் தளிர்களைப் பறித்துக்காய வைத்துப் பின் அப்படியே பெட்டிகளில் அடைத்தோ பொடி செய்து சிறிய பைகளில் அடைத்தோ விற்பனை செய்யப்படுகிறது. தேயிலைச் செடிகளில் இருந்து இவ்வகைத் தேயிலை சிறிய அளவிலேயே கிடைப்பதால் மற்ற வகைகளை விட இது அரிதாகவும் விலை உயர்ந்ததாகவும் உள்ளது. வெண்தேநீர் மங்கிய மஞ்சள் நிறமும், நறுமணமும், மிகக்குறைந்த
இனிப்பும் உடையதாக இருக்கும். வெண்தேயிலை புக்கியன் (
Fukien) எனப்படும்
சீன மாகாணத்தில் தான்
பெருமளவு உற்பத்தி செய்யப்படுகிறது.
வெண்தேயிலைகளை ஆண்டிற்கு ஒரு முறை
வசந்த காலத்தில் இரண்டு நாட்களுக்குள் அறுவடை செய்து பின்னர் துரிதமாகநீராவியால் அவித்து காய வைக்கப்படுகிறது. இத்தேயிலை மற்ற வகைகளை விட மிகக் குறைவாக பதனிடப்படுவதால் சுவை மிகுந்ததாகவும் புதுமை குன்றாததாகவும் இருக்கும்.

பசுந்தேநீர்


பசுந்தேநீர் சீனத்தில் கடந்த மூவாயிரம் ஆண்டுகளுக்கும்
மேலாக பலராலும் அருந்தப்படும் ஒரு பானமாகும்.
சப்பான்,
கொரியா மற்றும் பற்பல தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இவ்வகைத் தேநீர் மிகவும் விரும்பி அருந்தப்படுகிறது. பசுந்தேயிலைகளைப் பறித்த பின்பு துரிதமாக ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் சிறிது நேரம் நீராவியில்
அவித்து அல்லது சூடான காற்றில் உலர வைத்துப் பின் பெட்டிகளில் அடைத்து விற்கப்படுகிறது. சில வகை பசுந்தேயிலைகளை சிறிய உருண்டைகளாக உருட்டிப் பின் விற்பதும் உண்டு. ஆனால் உயர்ந்த வகை பசுந்தேயிலைகள் மட்டுமே சீராக உருட்ட முடியும் என்பதால் இவ்வகை பசுந்தேயிலைகள் சிறிய அளவில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. பசுந்தேநீரில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. குறிப்பாக, புற்று நோயைக்
குணப்படுத்தும் சில வகை வேதிப்பொருட்கள் உள்ளதாக சில ஆராய்ச்சிகள் சுட்டுவதால், பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிக் குழுக்கள் பசுந்தேநீரை ஆராய்ந்து
வருகின்றனர்.


ஊலாங்கு தேநீர்


ஊலாங்கு தேயிலை பசுந்தேயிலைக்கும் கருந்தேயிலைக்கும் உள்ள இடைப்பட்ட
வகையாகும். ஊலாங்கு தேநீர் சீனத்தில் உள்ள ஃபுசியன்
மாகாணத்தில் சுமார்
400 ஆண்டுகளுக்கு முன் மிங்கு மன்னர்குல ஆட்சியின் கீழ் முதன்முதலில் தயாரிக்கப்பட்டது. ஊலாங்கு தயாரிப்பதற்கு தேயிலைகள், மூவிலைகளும் ஒரு மொட்டும் கொண்ட தொகுதிகளாக பறிக்கப்படுகிறது. பறித்த இலைகளை ஒன்றில் இருந்து மூன்று நாட்கள் (தேயிலைகள் 30% சிவப்பாகும் வரை) புளிக்க வைத்துப் பின் கரிப்புகை கொண்டு உலர வைக்கப்படுகிறது. இவ்வகைத் தேயிலைகளில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரானது தெளிந்த சிவப்பு நிறம் உடையதாகவும், மணம் மிகுந்ததாகவும், கசப்பின்றி சிறு இனிப்புச் சுவையுடனும் விளங்குகிறது. சீனாவில் தயாரிக்கப்படும் ஊலாங்கு தேயிலைகள் சப்பானுக்குத் தான் பெரும்பாலும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கருந்தேநீர்/செந்தேநீர்

கருந்தேயிலை அல்லது செந்தேயிலை ஆசியாவில்தான் மிக அளவில் தயாரிக்கப்படுகிறது. தென்னாசிய நாடுகளான
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை,
வங்காளதேசம் மற்றும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலும் கருந்தேநீரை விரும்பி அருந்துகின்றனர். சீனா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் தயாரிக்கப்படும் கருந்தேயிலைகள் பெரும்பாலும் ஏற்றுமதிக்கே பயன்படுகிறது. தேயிலைகளைப் பறித்த பின்பு இரண்டு வாரங்களில் இருந்து ஒரு மாதம் வரை புளிக்க வைத்துப் பின்பு உலர வைத்து பெட்டிகளில் அடைத்து விற்கப்படுகிறது. கருந்தேயிலைகளின் தரத்தை நிர்ணயிக்க செம்மஞ்சள் பீகோ என்னும் முறை பயன்படுத்தப்படுகிறது. கருந்தேயிலையில் மற்ற வகை தேயிலைகளை விட மிக அதிக அளவில் கஃபைன் எனப்படும் வேதிப்பொருள் நிறைந்துள்ளது. இதனால் கருந்தேநீர் அருந்துபவர்க்கு உடனடி புத்துணர்ச்சி கிடைக்கிறது.புவார் தேநீர்

புவார் தேயிலை சீனத்தில் உள்ள யுன்னான் மாகாணத்தில்தான்
பெருமளவு
தயாரிக்கப்படுகிறது. கருந்தேயிலை போலவே புவார்
தேயிலைகளையும் புளிக்க
வைக்கப்பட்டு, அதிலும் இருமுறை புளிக்க வைக்கப்பட்டு பின் பல ஆண்டுகளுக்கு முதிர வைக்கப்படுகிறது. புவார் தேயிலைகள் இரு வகையில், பச்சையாகவோ அல்லது பக்குவப்படுத்தியோ
தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலான் புவார் தேயிலைகளை
தயாரித்த முதல் ஆண்டுக்குள் உட்கொள்ளப்படுகிறது. ஆனால் சில உயர்ந்த வகை பச்சைப்
புவார் தேயிலைகள்
30 முதல் 50 ஆண்டுகள் முதிர வைக்கப்படுகிறது. பக்குவப்படுத்திய புவார் தேயிலைகள் 10 முதல் 15 ஆண்டுகளே முதிர வைக்கப்படுகிறது. புவார் தேயிலையை பெட்டிகளில் உதிரியாகவோ அடர்த்தியாகவோ அடைத்து விற்கப்படுகிறது. புவார் தேநீர் கருஞ்சிவப்பு நிறத்தைக் கொண்டதாக இருக்கும். இவ்வகைத் தேநீர் செரிமானத்துக்கும் இரத்தக்கொழுப்பை குறைப்பதற்கும் உகந்ததாகக் கருதப்படுகிறது.மஞ்சள் தேநீர்

இவ்வகைத் தேயிலை உலகச் சந்தையில் மிக அரிதாக சிறிய
அளவிலேயே
கிடைக்கிறது. சீனாவில் உள்ள யுன்னான் மற்றும் அன்னூயி (Anhui) மாகாணத்தில் தயாரிக்கப்படுகிறது. வெண்தேயிலைகளைப் போலவே மஞ்சள் தேயிலைகளும் தளிர்களில் இருந்தும் மொட்டுக்களில் இருந்தும் தயாரிக்கப்படுகிறது. வெண்தேயிலை போலல்லாமல் தேயிலையை பறித்த பின் ஓரிரவு உலர (புளிக்க) வைக்கப்படுகிறது. இதனால் மஞ்சள் தேநீர் சிறிது பொன்னிறம் கலந்த மஞ்சள் நிறம் பெற்றிருக்கும். மஞ்சள் தேயிலை, 'பொன்னூசிகள்' எனவும் அழைக்கப்படுகிறது. சீன மன்னர்களின் முத்திரை நிறமான தங்க நிறத்தில் இவ்வகைத் தேநீர் இருப்பதால் சீன மன்னரவையில் மிகவும் அதிமாக அருந்தப்பட்டது.

குக்கிச்சா தேநீர்


தேயிலைச் செடிகளில் உள்ள குச்சிகளையும் முற்றிய
இலைகளையும்
குளிர்காலத்தில் பறித்த பிறகு காய வைத்து, நீராவியில்
அவித்து
, முதிர வைத்துப் பின் நெருப்பில் வருக்கப்படுகிறது. இத்தேநீரை குச்சித் தேநீர் எனவும் அழைக்கின்றனர். குக்கிச்சா தேநீர் சப்பான் நாட்டில் பலராலும் அருந்தப்படுகிறது. உலகில் சீனாவும் இந்தியாவுமே இதை பெருமளவு தயாரிக்கின்றனர். குக்கிச்சா தேநீர் நறுமணத்துடனும், மிகக் குறைந்த அளவு கஃபைன் உடையதாகவும் இருப்பதால், இயற்கை உணவு அருந்தும் மக்களிடம் இது ஒரு முக்கியமான பானமாக விளங்குகிறது.

செய்முறை

சூடான தேநீர்

பாலுடன் கலந்த கருந்தேநீர்

  • தெளிந்த நீரை ஒரு சுத்தமான் கொதிகலத்தில் 75 முதல் 90 டிகிரி செல்சியசுக்கு சூடாக்கவும். நீரை அதிக அளவு
    கொதிக்க விடாமல் இருப்பது நன்று.

  • தேயிலைகளை ஒரு கலத்திலிட்டு பின் கொதித்த நீரை அதன் மேல் கொட்டவும்.
  • தேநீர் கலத்தை மூடி வைப்பதன் மூலம் தேநீரின் நறுமணத்தைக் காக்க முடியும்.
  • மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் ஊற வைத்தபின் தேநீரை வடிகட்டவும்
  • தூய்மையான பீங்கான் கிண்ணத்தில் தேநீரை ஊற்றி அருந்தவும்.
  • தேநீரில் சிறிது பால்
    மற்றும் தேவையான அளவு சர்க்கரை
    சேர்த்தும் அருந்தலாம்
மசாலா தேநீர்

  • தெளிந்த நீரை ஒரு தூய்மையான கொதிகலத்தில கொதிக்க விடவும்.
  • நீர் சிறிது கொதித்ததும் நெருப்பைக் குறைத்து சர்க்கரையும் மசாலா
    பொடியையும் (
    மிளகு,ஏலக்காய், இஞ்சி, சோம்பு) சேர்த்து
    ஐந்து நிமிடங்கள் மென்மையாக கொதிக்க விடவும்.

  • தேவையான அளவு கருந்தேயிலைகளையும் சிறிது பாலையும் சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் மென்மையாக கொதிக்க விடவும்.
  • தூய்மையான பீங்கான் அல்லது மண் கிண்ணத்தில் வடிகட்டிய தேநீரை ஊற்றி அருந்தவும்.
  • மசாலா பொடியில் சுக்கு, திப்பிலி, பட்டை, கிராம்பு போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்
குளிர் தேநீர்

  • தெளிந்த நீரை ஒரு சுத்தமான் கொதிகலத்தில் கொதிக்க விடவும்.
  • தேயிலைகளை ஒரு கலத்திலிட்டு பின் கொதித்த நீரை அதன் மேல் கொட்டவும்.
  • தேநீர் கலத்தை மூடி வைப்பதன் மூலம் தேநீரின் நறுமணத்தைக் காக்க முடியும்.
  • மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் ஊற வைத்தபின் தேநீரை வடிகட்டவும்.
  • குளிர்பதனப்பெட்டியில் தேநீரை ஆறு முதல் 24 மணி நேரம் வைக்கவும்.
  • தூய கண்ணாடிக் கிண்ணத்தில் குளிர் தேநீரை பனிக்கட்டிகளுடன் அருந்தவும்.
  • சிலர் சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்த்தும் அருந்துவர்.
திரிகடுகம் தேநீர்


  • சுக்கு, மிளகு, திப்பிலி, இவை மூன்றையும் திரிகடுகம் என பொதுவாக அழைக்கப்படும். இம்மூன்றையும் சரி அளவு கலந்து பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
  • சூடான தேநீரில் ஒரு சிட்டிகை அல்லது இரண்டு சிட்டிகை திரிகடுகப் பொடியை கலந்து பருகினால் கபம், சளி, புகைச்சலான இருமல், ஒவ்வாமையினால் உண்டாகும் (allergy) இருமல் ஆகியவை நீங்கும்.
  • திரிகடுகம் உடம்பு சூட்டை கூட்டுவதால் அளவாக அருந்துவது உடலுக்கு நலம்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 24, 2009 11:40 am

அட ஷரன் ..அசத்துறீங்க ..(இப்போ மீசை ஒரு முறுக்கு முறுக்குவது தெரியுது )
அருமையான தகவல் ..நன்றிகள் ஷரன் ..



avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Thu Sep 24, 2009 11:41 am

முறுகிடுவோம்.. தேனீர் வகைகளும், செய்முறையும்..!! Icon_lol

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 24, 2009 11:43 am

அதுதானே மீசை வளர்ப்பதே முறுக்க தானே..



avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Thu Sep 24, 2009 11:44 am

தேனீர் வகைகளும், செய்முறையும்..!! Icon_lol தேனீர் வகைகளும், செய்முறையும்..!! Icon_lol

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Thu Sep 24, 2009 11:52 am

மற்றைய பதிவை நீக்கிவிட்டேன் மீனு

avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Thu Sep 24, 2009 11:53 am

நன்றி ஈழமகன் தேனீர் வகைகளும், செய்முறையும்..!! 678642

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 28, 2009 5:15 am

சரண் தி.வீ உண்மையில் அருமையான தகவல் நண்பா... நன்றி.... தேனீர் வகைகளும், செய்முறையும்..!! 678642

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Oct 28, 2009 2:31 pm

தேனீரில் இத்தனை வகை இருக்கிறதா! புதிய தகவல், செய்முறை விளக்கத்துடன் தந்திருப்பது சிறப்பாக இருக்கிறது, பதிவிற்கு நன்றி சரண்!



தேனீர் வகைகளும், செய்முறையும்..!! Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக