புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_vote_lcapநிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_voting_barநிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_vote_rcap 
37 Posts - 39%
heezulia
நிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_vote_lcapநிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_voting_barநிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_vote_rcap 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
நிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_vote_lcapநிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_voting_barநிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_vote_rcap 
13 Posts - 14%
Rathinavelu
நிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_vote_lcapநிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_voting_barநிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_vote_rcap 
7 Posts - 7%
mohamed nizamudeen
நிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_vote_lcapநிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_voting_barநிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_vote_rcap 
4 Posts - 4%
Guna.D
நிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_vote_lcapநிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_voting_barநிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_vote_rcap 
1 Post - 1%
mruthun
நிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_vote_lcapநிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_voting_barநிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar
நிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_vote_lcapநிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_voting_barநிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_vote_lcapநிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_voting_barநிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_vote_rcap 
106 Posts - 45%
ayyasamy ram
நிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_vote_lcapநிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_voting_barநிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_vote_rcap 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
நிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_vote_lcapநிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_voting_barநிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_vote_rcap 
17 Posts - 7%
mohamed nizamudeen
நிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_vote_lcapநிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_voting_barநிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_vote_rcap 
12 Posts - 5%
Rathinavelu
நிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_vote_lcapநிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_voting_barநிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_vote_rcap 
7 Posts - 3%
Karthikakulanthaivel
நிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_vote_lcapநிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_voting_barநிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
மொஹமட்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 18, 2013 12:19 pm

நிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? Astro-articles-53

பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட அமுதத்தை, தேவர்கள் ஒரு பக்கமும் அசுரர்கள் ஒரு பக்கமுமாக அமர்ந்திருக்க, மகாவிஷ்ணு மோகினி வடிவில் வந்து பங்கிட்டார். அப்போது, அசுரர்கள் எல்லாம் அப்படியே மோகினியின் அழகில் மயங்கிக் கிடந்தார்கள். தேவர்களும் மோகினியின் அழகில் மயங்கத்தான் செய்தார்கள்; ஆனால், உடனேயே தங்கள் மனதை நிலை நிறுத்திக்கொண்டு, அமுதத்தைப் பெறுவதிலே அறிவைச் செலுத்தினார்கள். அசுரர்களின் எண்ணப்படியே, ஏக்கப்படியே மோகினியின் நடமாட்டம் அவர்கள் பக்கமே இருந்தது. அதேசமயம் தேவர்களின் எண்ணப்படி, அவர்களுக்கு அமுதம் கிடைத்துக் கொண்டிருந்தது!

அசுரர்கள் பலரும் மோகினியிடம் மயங்கி இருந்தாலும் அவர்களில் ஒருவனுக்கு மட்டும் சந்தேகம் இருந்தது. அவனுக்கு உண்மையும் புரிந்தது. அதனால் அவன் மெள்ள நகர்ந்து தேவர்களின் பக்கம் போய், அவர்களோடு சேர்ந்து அமர்ந்து கொண்டான். அவன், சுவர்பானு, காஸ்யபர் வம்சத்தில் வந்தவன். பெற்றோர், விப்பிர சித்து-சிம்ஹிகை. அவன் தேவர்களில் ஒருவனாக வரிசையில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் வந்து அமர்ந்தான். மோகினி, தேவர்களுக்கு அமுதம் வழங்கியபோது அவனும் அமுதம் பெற்று, அதை உண்டுவிட்டான். அப்போது சூரியனும் சந்திரனும், 'இவன் அசுரன்' என்று, குறிப்பு (சாடை) காட்டினார்கள்.

உடனே மோகினி தன் கையிலிருந்த கரண்டியால், சுவர், பானுவின் தலையில் அடித்தார். அதனால், சுவர்பானுவின் தலை தனியாகவும் உடல் தனியாகவும் விழுந்தது. அமுதம் உண்டதால், சுவர் பானு இறக்கவில்லை. தலையும் கைகளும் பர்ப்பர தேசத்தில் விழுந்தன. அவற்றை பர்ப்பர தேசத்து அரசனான பைடீனசன் என்பவன் எடுத்துப்போய் வளர்த்து வந்தான். அவனால் வளர்க்கப்பட்ட, அந்தத் தலையும் கைகளும் சேர்ந்த வடிவம்தான், ராகு. ராகு, மகாவிஷ்ணுவை நோக்கித் தவம் செய்து, கறுத்த பாம்பின் உடலைப் பெற்றான்; கிரக பதவியும் பெற்றான் என அபிதான சிந்தாமணி கூறுகிறது.

சூரிய, சந்திரர் தன்னைக் காட்டிக் கொடுத்ததால், அவர்களுடன் பகைமை கொண்டான் ராகு. அதனால், அவர்களைப் பீடிக்கத் தொடங்கினான். அதுவே, கிரகணம் எனப்படுகிறது. சிற்ப ரத்தினம் என்ற நூல் ராகுவை வர்ணிக்கிறது: சிங்காதனத்தில் அமர்ந்திருப்பான்; நான்கு திருக்கரங்கள் கொண்டவன். வரமருளும் வரத முத்திரையுடன் ஒரு கரம்; சிறு கத்தி, கேடயம், சூலம் ஆகியவற்றை ஏந்திய மற்ற மூன்று கரங்கள் கொண்டிருப்பான். விஷ்ணு தர்மோத்திரம் என்ற நூல் சொல்லும் வர்ணனை, வேறு விதமாக இருக்கிறது: ராகு, இரண்டு கரங்கள் கொண்டிருப்பார்; வலக்கரத்தில் புத்தகமும் கம்பளியும் வைத்திருப்பார்; இடது கையில் ஏதுமிருக்காது; எட்டுக் குதிரைகள் பூட்டிய, வெள்ளி ரதத்தில் ஏறி வருவார்.

தொடரும்..................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 18, 2013 12:19 pm

நவகிரக ஆராதனம் என்ற நூலும் ராகுவைப் பற்றி இன்னும் விரிவாகவே வர்ணிக்கிறது: ராகு முறத்தைப் போன்ற ஆசனத்தில் அமர்ந்திருப்பார்; தென்மேற்குத் திசைக்கு உரியவர்; வரதம், சூலம், கேடயம் ஏந்திய கரங்களை உடையவர்; கரிய மேனியும் கறுத்த உடம்பும் கொண்டவர்; முடி தரித்தவர்; நான்கு திருக்கரங்கள் கொண்டவர்; சிங்க வாகனத்தில் ஏறுபவர். கறுப்பு சந்தனம், கறுப்பு மலர், கறுப்பு மாலை, கறுப்பு உடை, கறுப்புக் கொடி ஆகியவற்றை உடையவர். பைடீனஸ கோத்திரத்தில் உதித்தவர். ராகுவிற்கு உரிய தானியம் உளுந்து. ராகுவை, சூரிய மண்டலத்தில் சூரிய கிரகத்திற்குத் தென்மேற்கில் ஆவாகனம் செய்து வழிபடுவது மரபு.

ராகுவின் அதிதேவதை பசு; பிரத்யதி தேவதை பாம்பு என்று நவகிரக ஆராதனம் என்ற நூல் விவரிக்கிறது. இந்நூலில் இல்லாத தகவல்களை மற்றொரு நூல் விவரிக்கிறது. அவை: ராகுவிற்கு அமுத கடிகன் என்று ஒரு பிள்ளை உண்டு. நெடிதுயர்ந்த உருவம்; தாமத குணம். கருங்கல்லும் கோமேதகமும் ராகுவிற்கு விருப்பமானவை. மந்தாரை மலரும், அறுகும் கொண்டு, ராகுவை அர்ச்சிக்க வேண்டும். புளிப்புச் சுவையில் விருப்பம் கொண்ட ராகுவிற்கு ஆட்டையும் வாகனமாகச் சொல்வது உண்டு.

ராகுவிற்குப் பல பெயர்கள் உண்டு. தானவ மந்திரி, ருத்திரப்பிரியன், ரௌத்திரன், சந்திர-ஆதித்த விமர்த்தனன், சதாக்ரோதீ, அர்த்தகாயன், சிம்ஹிகாசித்திர நந்தனன், பானு பீதிதன், கிரகராஜன், காலரூபன், ஸ்ரீகண்ட இருதயாச்ரயன், சைம்ஹிகேயன், கோரரூபன், மகாபலன், கிரக பீடாகரன், தம்னுட்ரீ, ரக்த நேத்திரன், மகோதரன் என்றெல்லாம் ராகு அழைக்கப்படுகிறார். கர்நாடக சங்கீத மும் மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், நவகிரகங்களைப் பற்றி எழுதியிருக்கும் கீர்த்தனைகளில், ராகுவைப் பற்றிக் குறிப்பிடுகிறார். ராகு, சூரிய சந்திரருடன் கிரகண காலத்தில் காண்பதற்கு உரியவர்.

அசுரனாக இருந்து, தேவனாக மாறிய உடம்பை உடையவர். நோயைப் போக்குபவர். பாம்பு முதலான விஷப்பிராணிகளால் உண்டாகும் பயத்தை ஒழிப்பவர். முறத்தை ஆசனமாகக் கொண்டவர். கயான மந்திரத்திற்கு உரியவர். கருணை பொங்கும் கடைக்கண் நோக்கு உடையவர். நான்கு திருக்கரங்கள் கொண்டவர். கத்தி, கேடயம் ஆகிய படைகளை எந்தியவர். தோல் முதலான கறுத்த ஆடைகளை உடையவர். கோமேதகத்தை அணிந்தவர். சனிக்கும் சந்திரனுக்கும் நண்பர். ஞான குருவான முருகனுக்கு மகிழ்ச்சியை அளிப்பவர் என்கிறார் தீட்சிதர்.

தொடரும்...............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 18, 2013 12:20 pm

அடுத்ததாக, ஆகமங்கள் ராகுவைப் பற்றிய என்ன கூறுகின்றன?

ராகு பகவான், நவகிரக பீடத்தில், சூரியனுக்கு வடமேற்காக இருப்பார். உயரமான வடிவம் கொண்டு, முறம் போன்ற ஆசனத்தில் அமர்ந்திருப்பார். அவர் தலை மனித வடிவிலும், உடல் கரும்பாம்பின் வடிவிலும் இருக்கும். அவருக்கு வாகனம், ஆட்டுக்கிடா, எட்டுக் குதிரைகள் பூட்டிய தேரிலும் இருப்பார். சிம்ஹி, சித்ரலேகை என இரு மனைவியருடன் இருப்பார். சுவர்பானு என்பவனின் இரு பகுதிகளில் ஒரு பகுதி ராகுவாக மாறியது. ராகுவினால் வினையக் கூடியவை என்னென்ன?

ஒருவருடைய ஞானம், புகழ், சேவகத் தொழில், வெளிநாட்டு வாழ்க்கை, கைத்தொழில், வித்தைகள், கஷ்டம் ஏற்படுவது, நீரில் கண்டம் உண்டாவது, அங்கஹீனம், வாதம், வலிப்பு நோய், பித்த நோய், சிறைவாசம், களத்திர தோஷம், புத்திர தோஷம் ஆகியவற்றிற்கு ராகுவே காரணம்! இனி, மற்றொரு பகுதியான கேதுவைப் பார்க்கலாம். தேவர்களில் ஒருவனாக கலந்து சுவர்பானு என்ற அசுரன், மோகினியிடமிருந்து அமுதம் பெற்று உண்டுவிட்டான். பிற்பாடு, மோகினியால் தண்டிக்கப்பட்டு, தலை வேறு உடல் வேறாக விழுந்தான். தலைப்பகுதி ராகுவாக ஆனது: உடல்பகுதி என்ன ஆனது?

வெட்டுப்பட்டு விழுந்த (சுவர்பானுவின்) உடலை மினி என்ற அந்தணன் எடுத்துப் போய் பாதுகாத்து, அன்போடு வளர்த்து வந்தான். அதுவே கேது. தேவருடலுடன் நாகத்தின் தலையைப் பெற்ற கேது, கல்வி, கேள்விகளில் நன்கு தேர்ச்சி பெற்று இறைவனை நோக்கித் தவம் செய்து, கிரகங்களில் ஒன்றாகும் நிலையைப் பெற்றார். தலையை இழந்த உடம்பு, பின்பு பகவான் விஷ்ணுவை நோக்கித் தவம் செய்து, பாம்புத் தலையை பெற்றது. அதுவே கேது என அபிதான சிந்தாமணி கூறுகிறது.

கேதுவும் கறுப்பு நிறம். இரண்டு கரங்கள். ஒரு கரம் அபயமாகவும், மற்றொன்று கதையை ஏந்தியும் இருக்கும். கேதுவினுடைய தேரில், பத்துக் குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும், என விசுவகர்ம சிற்ப சாத்திரம் கூறுகிறது. நவகிரக வழிபாட்டு முறைகளைக் கூறும் நவகிரக ஆராதனம் என்ற நூல், கேது கொடி போன்ற ஆசனத்தில் வீற்றிருப்பார். அந்தர்வேதி என்ற தேசத்தைச் சேர்ந்தவர். விசித்திரமான வண்ணம் கொண்டு, வாயு திசைக்கு உரியவராக இருப்பார். புகை நிறம் போல மேனி கொண்ட கேதுவிற்கு எட்டுப் பிள்ளைகள் உண்டு. கேதுவிற்கு, வரத முத்திரையும் கதையும் தாங்கியதாக, இரண்டு கரங்கள் உண்டு. மணி முடியும், தோள் வளையும், மற்ற அணிகலன்களும் அணிந்திருப்பார்.

அமைதியான தோற்றம் கொண்ட கேதுவிற்கு, பல வண்ண சந்தனமும் பல வண்ண மலரும் விருப்பமானவை. கேதுவின் ஆடை, குடை, கொடி ஆகியவை பல வண்ணங்களால் ஆனவை. நல்ல தேரில், மேருவை அப்பிரதட்சிணமாக (எதிர்வலம்) வருவார். கேதுவின் அதிதேவதை சித்திரகுப்தன்; பிரத்யதி தேவதை பிரம்மா. (ஆனால், கேதுவின் அதிதேவதை பிரம்மா என்கிறது நவகிரக ஆராதனம் எனும் நூல்.)

தொடரும்............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 18, 2013 12:20 pm

முத்துஸ்வாமி தீட்சிதர், கேதுவைப் பற்றி என்ன கூறுகிறார்?

அசுரர்களில் பெரியவர் கேது. சாயாக் (நிழல்) கிரகங்களில் சிறந்தவர். அவர், பலவகையான மணிகள் இழைத்த பெரிய திருமுடியை அணிந்திருப்பார். மஞ்சள் முதலான பல வண்ணங்கள் கொண்ட ஆடையை அணிந்திருப்பார். மனித உடலாகிய பீடத்தில் எழுந்தருளி இருப்பார். கிரகப் பதவியைப் பெற்ற ராகுவுடன் இணைந்து இருப்பார் அவர். 'கேதும் க்ருண்வன்' எனத் தொடங்கும் மந்திரத்தைக் கொண்ட கேதுவிற்கு, மிகுந்த கோபம் வரும். ஜைமினி கோத்திரத்தில் பிறந்த கேது, கொள்ளு முதலானவற்றை உண்பார். முக்கோண வடிவம் கொண்ட கொடியை ஏந்தியிருப்பார். கேது, முருகப் பெருமானுக்கு வெண் கவரி வீசுவார். குணங்களையும், குறைகளையும் வென்ற ஞானிகளுக்கு அணியாக இருப்பார்.

கிரகணத்திற்குக் காரணமாக இருக்கும் கேது, ஆகாய வீதியில் மேருவை இடமாகச் சுற்றி வருவார். கேதுவிற்குப் பல பெயர்கள் உண்டு. கரிய நிறமாக இருப்பதால், கேதுவைக் காலன் என அழைப்பார்கள். கோபம் கொண்டவராக இருப்பதால் ரௌத்திரன் என்ற பெயரும் உண்டு. தூம்ரகேது. லோக கேது, மகா கேது, சர்வ கேது, செம்பாம்பு, கதிர்பனை, சிகி என்ற பெயர்களும் கேதுவிற்கு உண்டு. கேதுவிற்கு பிரியமான ரத்தினம் வைடூரியம். உரிய தானியம் கொள்ளு, உரிய மலர் செவ்வல்லி, பிடித்தமான சுவை புளிப்பு, பல வண்ண ஆடை, சந்தனம், மலர் விரும்புவார். கேதுவின் மனைவி சித்ர லேகா. மகன் அமிருத்யு.

கேது ஞானத்தைக் கொடுக்கக்கூடியவர். தாய்வழிப் பாட்டன், கபடத் தொழில் செய்வது, பாவத் தொழில் செய்வது, வெளிநாட்டு வாசம், குஷ்டம், வயிற்றுவலி முதலான நோய்கள் அக்கினியில் கண்டம், அகங்காரம் உண்டாவது, சிறைவாசம் ஆகியவற்றிற்கெல்லாம் கேதுவே காரணம். ராகு, கேது இரண்டைப் பற்றியும் சற்று ஆராய்வோமா? இதிகாச, புராணங்கள், ஜோதிட நூல்கள் ஆகியவற்றின்படி, ராகுவும் கேதுவும் கிரகங்கள் அல்ல. அவற்றை சாயா (நிழல்) கிரகங்கள் என்பார்கள். அவை இரண்டிற்கும் திடமான உருவமோ, வடிவமோ கிடையாது என்பார்கள்.

இக்கூற்றை, சுவர்பானு என்பவன், தலை வேறு - உடல் வேறாக வெட்டுப்பட்டான். வெட்டுப்பட்ட அவன் தலையுடன் பாம்பு உடல் சேர்ந்தது; உடலுடன் பாம்பு தலை சேர்ந்தது எனும் புராண சம்பவம் மெய்ப்பிக்கும். ஆகவே, மற்ற கிரகங்களைப் போல, ராகுவிற்கும் கேதுவிற்கும் திட வடிவமோ, உருவமோ கிடையாது என்பதை மட்டும், மனதில் பதிய வைத்துக்கொண்டு, சற்று அறிவியல் ரீதியாக ஆராயலாம். தற்கால அறிவியலின்படி சூரியன், சந்திரன், பூமி எனும் மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திரன் பூமியை மறைக்கும். அதுவே சூரிய கிரகணம்.

சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழும். பிறகு மெள்ள நகரும்போது, நிழல் விலகி விடும். இவ்வாறு, பூமியின் நிழலால் சந்திரன் ஒளி சிறிது நேரம் மங்கி இருப்பதே சந்திர கிரகணம். பூமியின் நிழலையே கேது எனும் பாம்பு என்றும், அது சந்திரனை விழுங்குவதாகவும் நம் முன்னோர்கள் சொல்லி வந்தார்கள். பூமி, ஒரு நீள் வட்டப் பாதையில், சூரியனைச் சுற்றி வருகிறது. அதேபோல, சந்திரனும் ஒரு நீள் வட்டப் பாதையில், பூமியைச் சுற்றி வருகிறது.

அப்படி பூமியை சுற்றி வரும் சந்திரன், பூமியின் வட்டப்பாதையில் மேல் நோக்கிச் செல்லும்போது ஒருமுறையும்; கீழ்நோக்கிச் செல்லும்போது ஒரு முறையும் ஆக இருமுறை வெட்டுகின்றது. இப்படி சந்திரன் மேல் நோக்கிப் போகும்போது பூமியின் பாதையைச் சந்திப்பது 'ராகு' என்றும், கீழ்நோக்கி வரும்போது பூமியின் பாதையைச் சந்திப்பது 'கேது' என்றும், தற்போதைய விஞ்ஞானம் கூறுகிறது. இதை ஆங்கிலத்தில், Assending node , Descending node (கேது) என்று கூறுவார்கள். புராண, ஜோதிட நூல்களின்படி, சாயா (நிழல்) கிரகங்கள் என்பதையே, அறிவியலின்படி மாயா தோற்றமாக உள்ளதாக விஞ்ஞானம் கூறுகிறது.

நன்றி - தினகரன் - பி.என்.பரசுராமன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Sep 18, 2013 12:30 pm

நல்ல பதிவு ஆனால் பெரிய பதிவு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 18, 2013 12:38 pm

நன்றி பல பாலா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Wed Sep 18, 2013 2:10 pm

நிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? 103459460 சூப்பருங்க 

அன்புடன் அமிர்தா

நிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? Aநிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? Mநிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? Iநிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? Rநிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? Tநிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? Hநிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 18, 2013 8:47 pm

நன்றி அமிர்தா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக