ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்றலை இனிமையாக்கும் கனவு ஆசிரியர்கள்!

2 posters

Go down

கற்றலை இனிமையாக்கும் கனவு ஆசிரியர்கள்!  Empty கற்றலை இனிமையாக்கும் கனவு ஆசிரியர்கள்!

Post by சாமி Wed Sep 18, 2013 8:57 am

கற்றலை இனிமையாக்கும் கனவு ஆசிரியர்கள்!  Y16y
வாய்ப்பு கிடைத்தால் வானையும் வளைக்கலாம்!

''வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்காமல் மாணவர்களைக் குறைசொல்லக்கூடாது'' என்கிற சேகரன், காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணிபுரிகிறார்.

உடற்கல்வி ஆசிரியரிடம் மாணவர்கள் பொதுவாக ஒருவித பயம் கலந்தே பேசுவார்கள். ஆனால், எல்லா மாணவர்களும் நண்பருடன் பழகுவதுபோலவே சேகரனோடு பழகுகிறார்கள். அவர் வரச்சொல்லும் நேரத்துக்கு வருகிறார்கள். மிக ஆர்வத்தோடு பயிற்சி மேற்கொள்கிறார்கள். இவை எல்லாம் எப்படி நடந்தது?
''விளையாட்டின் மீது இருந்த அதிக ஆர்வத்தினால் உடற்கல்வி ஆசிரியரானேன். அதனால், எனது பணியை மிகுந்த விருப்பத்துடன் செய்கிறேன்'' என்கிறார் சேகரன்.

ஒரு பால்காரரின் மகனுக்கு ஓட்டத்தில் ஈடுபாடு இருந்தும் பெற்றோர் அந்த மாணவனைப் பயிற்சிக்கு அனுப்பவில்லை. அப்போது, சேகரன் அந்த மாணவனின் வீட்டுக்குச் சென்று, பெற்றோரிடம் அவனுடையத் திறமையை எடுத்துக்கூறி அவர்களைச் சம்மதிக்க வைத்தார். போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களின் நுழைவுக் கட்டணத்தைப் பெரும்பாலும்  இவரே கட்டிவிடுகிறார். இவரின் வருகைக்குப் பிறகு மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் இந்தப் பள்ளியின் மாணவர்கள் பரிசுகளைக் குவிக்கிறார்கள். வினோத் எனும் மாணவர் மாநிலஅளவிலான ஓட்டத்தில் மூன்றாம் இடம் பிடித்தார். யோகேஷ் மாவட்ட அளவிலான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.

2011-12 கல்வி ஆண்டில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியைப் படப்பை மேல்நிலைப் பள்ளியில் நடத்தியது சேகரனின் முயற்சிகளில் முக்கியமானது. ''கிராமப் பள்ளியில்  இதுபோன்ற பெரியப் போட்டியை நடத்துவது சாதாரண விஷயம் இல்லை. நிறைய சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. இந்தப் போட்டிக்கு சிறப்பு விருந்தினர்களாக அந்தப் பகுதியில் உள்ள கல்லூரி நிறுவனர்களை அழைத்திருந்தோம். விழாவில் பங்கேற்றவர்கள், 'படப்பை பள்ளியில் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு எங்கள் கல்லூரியில் இலவச சீட் தருகிறோம்’ என்று சொன்னார்கள். ஓர் ஆசிரியராக நான் மிகவும் மகிழ்ச்சியடைந்த நேரம் அதுதான்'' என்கிறார் சேகரன்.

இதற்கெல்லாம் சிகரம் வைப்பதுபோல  சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற  மாரத்தான் போட்டியில் முதல் இடத்தையும் நான்காம் இடத்தையும் பிடித்த யோகேஷ், சிவா ஆகிய இருவரையும் முறையான மற்றும் கடுமையான பயிற்சியும் ஊக்கமும் கொடுத்து தயார்படுத்தியவரும் இவர்தான்.

தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளியில் பணிபுரியும் சக ஆசிரியர்களும் போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு செய்துவரும் உதவிகளையும் மறக்காமல் குறிப்பிடுகிறார் சேகரன். ''ஒரு மாணவர் ஓடும் விதத்தை வைத்தே இவர் திறமையாவனர்தானா என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். அவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி கொடுத்தால், மிகப்பெரிய வெற்றிகளைப் பெறுவார்கள். இதை நான் வாய்வார்த்தையாகச் சொன்னபோது சிலர் நம்பவில்லை. சில விஷயங்களைச் சாதித்துக் காட்டிய பிறகு பெரும் உதவிகளைச் செய்துவருகிறார்கள். இந்த நிலை தொடர்வதோடு அரசின் உதவிகளும் அதிகரித்தால் எங்கள்  பணி இன்னும் கொஞ்சம் சுலபமாகிவிடும்.  அர்ப்பணிப்போடு பயிற்சி எடுத்துவரும் எங்கள் பள்ளி மாணவர்கள் ஒலிம்பிக்கில் இடம்பெறும் காலம் வெகுதூரமில்லை'' என்கிற சேகரன் கண்களில் நம்பிக்கை ஒளிர்கிறது.

அந்த நம்பிக்கை ஜெயிக்கும் என்பது அங்கே பயிற்சியில் இருந்த மாணவர்களின் சுறுசுறுப்பில் தெரிந்தது.

நன்றி- விகடன்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கற்றலை இனிமையாக்கும் கனவு ஆசிரியர்கள்!  Empty Re: கற்றலை இனிமையாக்கும் கனவு ஆசிரியர்கள்!

Post by சாமி Wed Sep 18, 2013 9:07 am

கனவு ஆசிரியர் - கற்றலை இனிமையாக்கும் ஆனந்தி டீச்சர்!
கற்றலை இனிமையாக்கும் கனவு ஆசிரியர்கள்!  Xfpc

தமிழகத்தில் சி.சி.இ. மதிப்பீட்டு முறை நடைமுறைக்கு வந்த பிறகு, பள்ளி மாணவர் களிடையே கற்றல் இனிமையாகி இருக்கிறது. இனிமையான சூழலுடன் மாணவர்கள் பாடங்களைச் சுமையின்றிக் கற்கிறார்கள்.

ஆனால், கும்பகோணம் அருகே முத்துபிள்ளை மண்டபம் பகுதியில் உள்ள ஊராட்சி ஓன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள்,  ஆனந்தி டீச்சர் ஆசிரியையாக வந்ததிலிருந்தே கடந்த பல ஆண்டுகளாக  கற்பதை இனிமையாகக் கொண்டாடிவருகின்றனர்.

ஆனந்தி டீச்சர் 1999-ல் ஆசிரியர் பயிற்சிக்குச் சென்றபோது, மாணவர்களுக்கு ஃப்ளாஷ் கார்டுகளைப் பயன்படுத்திப் பாடம் நடத்துவதன் அவசியம் சொல்லித்தரப்பட்டது. அப்போது கார்டுகளை உருவாக்கத் தொடங்கி, இன்று வரை சுமார் 30,000 ஃப்ளாஷ் கார்டுகள் வைத்துள்ளார்.

ஆனந்தி டீச்சரைச் சந்திக்கச் சென்றபோது, 'தன்னானன்னே தன்னானே... தன்னானன்னே தன்னானே...'' என மெட்டு அமைத்து, தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களின் பெயர்களையும் பாடலாகப் பாடி வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார்.

'ஒன்று... யாவர்க்கும் தலை ஒன்று. இரண்டு... முகத்தில் கண்கள் இரண்டு. இப்படித்தான் நான் ஒன்று, இரண்டு கற்றேன். அதே வழிமுறையில்தான் 32 மாவட்டங்கள், இந்திய மாநிலங்கள், தலைநகர் என அனைத்தையும் பாடல்களாகச் சொல்லித் தருகிறேன்'' என்கிறார்.

அறிவியலில் கோள்கள், பிளாஸ்டிக்கின் தீமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு... என 150 தலைப்புகளில் மாணவர்களுக்குப் பாடல்கள் எழுதிவைத்திருக்கிறார் ஆனந்தி டீச்சர். ''இதற்கு பாடல் திறமை அவசியம் இல்லை. மாணவர்களுக்குப் புரியும்படி இருந்தாலே போதும். இப்படிப் பாடம் நடத்தும்போது அவர்கள் மனதில் நன்றாகப் பதியும்'' என்றவரிடம் ஃப்ளாஷ் கார்டு பயன்படுத்துவது பற்றி கேட்டோம்.

''ஆரம்பத்தில் இருந்தே எனக்கு ஃப்ளாஷ் கார்டு மூலம் சொல்லித்தரும் பழக்கம் இருந்தது. இப்போது சமச்சீர்க் கல்வி முறையால், என்னுடைய ஃப்ளாஷ் கார்டுகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிட்டது. ஆசிரியர் விருப்பத்தோடு வகுப்பில் பாடம் நடத்தும்போதுதான், அது மாணவர்களிடம் கற்றலில் விருப்பத்தை உண்டாக்கும். நான் படிக்கும்போது தங்கம் என்றொரு டீச்சர் இருந்தார். அவர்தான் என்னுடைய கனவு ஆசிரியர். 'நான் ஆசிரியரானால் இவர் போலத்தான் இருக்கணும்’ என நினைத்தேன். அந்தக் கனவு பலித்திருப்பதாக நினைக்கிறேன்'' என்கிறார் பூரிப்புடன்.

ஆனந்தி டீச்சர்
ஆனந்தி டீச்சரின் வித்தியாசமான கற்பித்தல் முறையைக் கண்டு, குஜராத்தில் உள்ள ஐ.ஐ.எம். உயர் கல்வி நிறுவனமும், ரத்தன் டாடா அறக்கட்டளையும் இணைந்து, 2005-ம் ஆண்டு 'இன்னோவேட்டிவ் டீச்சர்’ என்ற விருதை வழங்கிக் கௌரவித்து இருக்கின்றன.

''மாணவர்களுக்கு நிறைய புதுப் புதுத் தகவல்களைக் கொடுக்க வேண்டியது ஆசிரியர்களின் வேலை. அதனால், தினம் தினம் ஆசிரியரும் புதிய அறிவைத் தேடிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களின் அறிவை வளர்க்க முடியும்' என்கிறார் ஆனந்தி டீச்சர்.

நன்றி - மா.நந்தினி - நன்றி- விகடன்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கற்றலை இனிமையாக்கும் கனவு ஆசிரியர்கள்!  Empty Re: கற்றலை இனிமையாக்கும் கனவு ஆசிரியர்கள்!

Post by சாமி Wed Sep 18, 2013 9:12 am

அறிவியல் மேதைகளை உருவாக்கும் நாகேந்திரன்!


கற்றலை இனிமையாக்கும் கனவு ஆசிரியர்கள்!  Nt0w
கணக்கு பிணக்கு என்று கசப்பவர்கள் மத்தியில், கணக்கைக் கற்கண்டாய்ச் சொல்லிக் கொடுப்பவர் இருந்தால் எப்படி இருக்கும்...

திருவள்ளூர் மாவட்டம், சீனிவாசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியராக இருக்கும்  நாகேந்திரன்தான் அந்தக் கற்கண்டு ஆசிரியர். விளையாட்டு முறையில் கணக்கைச் சொல்லிக் கொடுக்கும் நாகேந்திரன், பயன்படுத்தப்பட்ட    பொருட்களைக்கொண்டே எளிய பரிசோதனைகள் செய்து அறிவியலைச் சொல்லித்தருகிறார்.

கோழி இறகைக்கொண்டு திசையைக் கண்டறிவது, டங்ஸ்டன் இழை இல்லாத ஜீரோ வாட்ஸ் பல்பை லென்ஸாகப் பயன்படுத்துவது என்று இவரின் செயல்முறைகள் வியப்பை அளிக்கின்றன.

மீன் இரண்டு எழுத்து, அதன் இதயத்திலுள்ள அறைகளும் இரண்டு. தவளைக்கு மூன்று இதய அறைகள், அதன் எழுத்துகளும் மூன்று. அதே போல், நான்கு எழுத்துகள்கொண்ட மனிதனுக்கு நான்கு இதய அறைகள் என்று இவரின் புதிய உத்தி முறையால், மாணவர்களைத் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் விடையைச் சரியாகச் சொல்கின்றனர்.

2011-ல் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாட்டில், இவருடைய கட்டுரை சிறந்த ஆய்வுக் கட்டுரையாகத் தேர்வானது. தமிழகத்திலிருந்து அழைக்கப்பட்ட 27 பேர்களில் இவரும் ஒருவர். தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், இரண்டு முறை செயல்திட்ட வழிகாட்டு நடுவராக இருந்துள்ளார்.
 
பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு பிள்ளைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களைச் சந்தித்து, கல்வியின் தேவையை எடுத்துக்கூறி, மீண்டும் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பச் செய்திருக்கிறார். பள்ளி செல்லாமல் இடை நிற்கும்  மாணவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் குறித்து, 'சமுதாயச் சிற்பிகள்’ என்ற குறும்படத்தை எடுத்திருக்கிறார்.

கணித மேதை ராமானுஜர் பிறந்தநாளான டிசம்பர் 22 அன்று ராமானுஜம் எண் 1729 என்பதைக் கொண்டு, 1729 ஸ்லைடுகளை உருவாக்கி, 'உலகிலேயே மிக நீண்ட பவர்பாயின்ட் ஸ்லைடு நிகழ்ச்சி’ (The World Longest Powerpoint Slide Show)என்ற உலக சாதனையைப் பதிவுசெய்தார். இவரின் கல்விச் சாதனைக்கு மாவட்ட நிர்வாகம், 'நல்லாசிரியர்’ விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது. விடுமுறை நாட்களில்... விளையாட்டு முறையில் கணிதம் மற்றும் அறிவியல் பயிற்சி கொடுத்தும் தேர்வு நடத்தியும், 'சிறந்த அறிவியல் ஆர்வலர்’ என்ற விருதினை மாணவர்களுக்கு வழங்கிவருகிறார்.

'மாணவர்களைக் கேள்விகள் கேட்க ஊக்குவித்தால்தான், அவர்களின் அறிவு விரியும். இதன் மூலம் மட்டுமே கிராமத்து மாணவர்களும், ஐ.ஐ.டி., போன்ற தேர்வுகளில் எளிதில் சாதிக்க முடியும்' என்கிறார் நாகேந்திரன்.

இந்தப் பகுதியில் பிறந்தவர்தான் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன். அவர், ’என்னுடைய வெற்றிக்கு முக்கியக் காரணம், எனது ஆசிரியரே’ என்று சொல்லி இருக்கிறார். அந்த வரிசையில் அறிவியல் மேதைகளை உருவாக்கும் பணியில் இருக்கும் நாகேந்திரனும் ஒரு கனவு ஆசிரியரே.

நன்றி / க.பிரபாகர் /விகடன்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கற்றலை இனிமையாக்கும் கனவு ஆசிரியர்கள்!  Empty Re: கற்றலை இனிமையாக்கும் கனவு ஆசிரியர்கள்!

Post by சாமி Wed Sep 18, 2013 9:19 am

கனவு ஆசிரியர் - பெற்றோர்களை ஈர்க்கும் காந்த ஆசிரியர் !

கற்றலை இனிமையாக்கும் கனவு ஆசிரியர்கள்!  5eam

ஊரிலிருந்து 20 கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் அந்தப் பள்ளிக்கூடத்தில் காத்துக்கிடந்து தங்கள் குழந்தைகளைக் சேர்த்துவிட்டுச் செல்கிறார்கள். இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா..? நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மலையம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளிதான் அது. பெற்றோர்களை அந்தப் பள்ளியை நோக்கி வரவைத்திருப்பவர், அந்தப் பள்ளியின் ஆசிரியர் செந்தில்.

தமிழக அரசால் 1975-ம் ஆண்டு மலையம்பாளையம் ஆதிதிராவிடர் குழந்தைகளுக்காகத் தொடங்கப்பட்டதுதான் இந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி. 17 மாணவர்களைக்கொண்டு துவங்கிய இந்தப் பள்ளிக்கு, 2000-ல் ஆசிரியராக வந்தார் செந்தில். அப்போது 43 மாணவர்கள் படித்துக்கொண்டிருந்தனர்.

கல்வி போதிப்பதில் ஆர்வமும் சமூக அக்கறையும்கொண்ட ஆசிரியர் செந்தில், பக்கத்து ஊர்களில் இருக்கும் குழந்தைகளை இந்தப் பள்ளியில் சேர்க்கச் சொல்லிக் கேட்டபோது, ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஆதிதிராவிடர் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு அனுப்ப மற்றவர்கள் மறுத்துவிட, தன்னிடம் படிக்கும் 43 மாணவர்களையும் திறமைமிக்கவர்களாக உருவாக்கினார். மாலை நேரத்தில், அந்த மாணவர்களைப் பக்கத்து ஊர்களுக்கு அழைத்துச்சென்று, அவர்களின் அறிவாற்றலை வெளிக்காட்டச் செய்தார். இதைக் கவனித்தவர்கள், தங்கள் வீட்டுக் குழந்தைகளையும் அந்தப் பள்ளியில் சேர்க்க ஆரம்பித்தனர்.

இப்போது, அரசு அதிகாரிகள், வசதி படைத்தோர் எனப் பல தரப்பினரும் இங்கே தங்கள் குழந்தைகளைச் சேர்க்க முந்துகின்றனர். ஆனாலும் ஏழை மாணவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. தற்போது இந்தப் பள்ளியில், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த 185 மாணவர்கள் படிக்கின்றனர். இந்த ஆண்டு மட்டும் 80 குழந்தைகள் மெட்ரிக் பள்ளிகளில் இருந்து மாற்றல் வாங்கி இங்கே சேர்ந்திருக்கிறார்கள். ஓராசிரியர் பள்ளியாக இருந்த இந்தப் பள்ளியில், இன்று ஐந்து ஆசிரியர்களுடன் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பாக இரண்டு ஆசிரியர்களும் பணிபுரிகின்றனர். மேலும் வேன் வசதியும் வந்துள்ளது.

இது எப்படிச் சாத்தியமானது?

''முதலில் குழந்தைகளுடன் நெருங்கிப் பழகி, அவர்களை நண்பர்களாக ஆக்கிக்கொள்கிறோம். அவர்களை மிரட்டுவதோ, அடிப்பதோ கிடையாது. நான்காம் வகுப்பு வரை செயல்வழிக் கற்றல் முறைப்படி எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் வார்த்தைகளை ஒரு புத்தகமாகத் தயாரித்துக் கொடுக்கிறோம். படங்களைப் பார்த்து அவர்களாகவே புரிந்துகொள்ளத் தேடல் ஆர்வத்தை ஏற்படுத்துகிறோம். ஆங்கில இலக்கணத்தை புரியும்படிச் சொல்லிக்கொடுக்கிறோம். பெற்றோர்களிடம் தினமும் குழந்தைகளைப் பற்றிப் பேசுகிறோம். நம்மால் முடிந்ததைச் சரியாகச் செய்தால்தான் பெரிய விஷயத்தையும் சாதிக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ளச் செய்ததால், ஒவ்வோர் ஆண்டும் மாவட்டத்தில் சிறந்த மாணவர்களாக எங்கள் பள்ளி மாணவர்களே திகழ்கின்றனர்'' என்றார் செந்தில்.

அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க பலர் தயங்கும் இந்தச் சூழலில், மலையம்பாளையம் அரசுப் பள்ளியில் சேர முண்டியடிக்க வைத்த ஆசிரியர் செந்தில், நிச்சயம் ஒரு கனவு ஆசிரியரே!

நன்றி- வீ.கே.ரமேஷ் - விகடன்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கற்றலை இனிமையாக்கும் கனவு ஆசிரியர்கள்!  Empty Re: கற்றலை இனிமையாக்கும் கனவு ஆசிரியர்கள்!

Post by mbalasaravanan Wed Sep 18, 2013 11:39 am

அருமை
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

கற்றலை இனிமையாக்கும் கனவு ஆசிரியர்கள்!  Empty Re: கற்றலை இனிமையாக்கும் கனவு ஆசிரியர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum