ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் சினிமாவின் ராணி டி.பி.ராஜலட்சுமி - ஸ்பெஷல் ஸ்டோரி!

3 posters

Go down

தமிழ் சினிமாவின் ராணி டி.பி.ராஜலட்சுமி - ஸ்பெஷல் ஸ்டோரி! Empty தமிழ் சினிமாவின் ராணி டி.பி.ராஜலட்சுமி - ஸ்பெஷல் ஸ்டோரி!

Post by krishnaamma Mon Sep 16, 2013 9:16 pm

தமிழ் சினிமாவின் ராணி டி.பி.ராஜலட்சுமி - ஸ்பெஷல் ஸ்டோரி! NT_130916125446000000

இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இதே ஆண்டில்தான் தமிழ் சினிமாவின் முதல் ஹீரோயின் டி.பி.ராஜலட்சுமிக்கும் நூற்றாண்டு விழா, வருகிற 19ந் தேதி தமிழக அரசு சார்பில் டி.பி.ராஜலட்சுமியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருக்கிறது. அதையட்டி அவரைப் பற்றிய ஒரு ஸ்பெஷல் ஸ்டோரி...

7 வயதில் திருமணம்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள இசைக்கு பெயர் பெற்ற திருவையாறு தான் டி.பி.ராஜலட்சுமியின் சொந்த ஊர். ஏழை பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை பஞ்சாபகேச அய்யர், தாயார் மீனாட்சி. அக்கால வழக்கப்படி டி.பி.ராஜலட்சுமிக்கு 7வது வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. பால்மணம் மாறாத பருவத்தில் மணமகளாக அனுப்பி வைக்கப்பட்டவர். வரதட்சணை கொடுமையால் திருப்பி அனுப்பப்பட்டார். மகளின் நிலை கண்டு வருந்திய தந்தை துக்கம் தாங்காமல் மரணம் அடைந்தார்.

வாட்டிய வறுமை

விதவை தாயும், வாழாவெட்டி மகளும் பிழைப்பு தேடி திருச்சி வந்தனர். வறுமை அவர்களை துரத்தியது. அந்த துயரம் தாங்காமல் ஒரு நாள் சாமி சிலை முன்பு உட்கார்ந்து டி.பி.ராஜலட்சுமி தந்தை கற்றுக்கொடுத்த பாடலை மனமுருக பாடினார். அதைக் கேட்ட தாய் மகிழ்ந்தார். தன் குடும்ப வறுமை நீங்க அந்த பகவான் மகளின் குரலில் அருள் அளித்திருக்கிறான் என்பதை தாய் உணர்ந்து கொண்டார். அந்த குரல்வளம்தான் அவரை உச்சத்துக்கு கொண்டு செல்லப்போகிறது என்பது அப்போது தாய்க்கும், மகளுக்கும் தெரியாது.

பசி பிரச்னை தீர்ந்தது

அப்போது திருச்சியில் நிறைய நாடக கம்பெனிகள் முகாமிட்டு நாடகம் போட்டுக்கொண்டிருந்தன. அதில் சி.எஸ்.சாம்பண்ணா நாடக குழுவும் ஒன்று. அங்கு தன் மகளை அழைத்துச் சென்ற தாயர் "என் மகள் நன்றாக பாடுவாள் உங்கள் கம்பெனியில் பாடகியாக சேர்த்துக் கொள்ளுங்கள் நான் சமையல்காரியாக வேலை செய்கிறேன்" என்றார். மனம் உருகிய சாம்பண்ணா இருவரையும் தனது நாடக கம்பெனியில் சேர்த்துக் கொண்டார். ராஜலட்சுமிக்கு மாதம் 30 ரூபாயும், அவரது அம்மாவுக்கு 20 ரூபாயும் சம்பளம் வழங்கப்பட்டது. பசி பிரச்னை தீர்ந்தது.

தொடரும்..............


Last edited by krishnaamma on Mon Sep 16, 2013 9:19 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழ் சினிமாவின் ராணி டி.பி.ராஜலட்சுமி - ஸ்பெஷல் ஸ்டோரி! Empty Re: தமிழ் சினிமாவின் ராணி டி.பி.ராஜலட்சுமி - ஸ்பெஷல் ஸ்டோரி!

Post by krishnaamma Mon Sep 16, 2013 9:17 pm

ஹீரோயினாக அவதரிப்பு

முதலில் பெண் வேடத்தில் நடித்த ஆண்களுக்கு பின்னணி பாடத் தொடங்கிய ராஜலட்சுமி பிறகு சின்ன சின்ன வேடங்களில் நடிக்கவும் தொடங்கினார். பவளக்கொடி நாடகத்தில் முதன் முறையாக ஹீரோயினாக நடித்தார். அப்போது நாடகத்தில் பெண்கள் நடிப்பதில்லை, ஆண்கள்தான் பெண்வேடமிட்டு நடித்து வந்தார்கள். இந்த நிலையில் நேரடிய ஒரு பெண் நடிப்பதும், பாடுவதும் வேகமாக பரவியது. அவரது பாட்டும் நடிப்பும் எல்லைகளை தாண்டிச் சென்றது. கண்ணையா நாடக கம்பெனி ராஜலட்சுமிக்கு பெரிய சம்பளம் கொடுத்து தன் கம்பெனியில் சேர்த்துக் கொண்டது. கே.எஸ்.செல்லப்பாவின் கம்பெனி ராஜலட்சுமிக்கு மாதம் 75 ரூபாய் சம்பளம் கொடுத்து ரங்கூனுக்கு அழைத்துச் சென்று நாடகம் போட்டது. அக்கால நாடக ஹீரோ எஸ்.ஜி.கிட்டப்பாவுடன் இணைந்து நடித்ததும் அவரது புகழ் பரவத் தொடங்கியது. ராஜலட்சுமியின் தேதிக்காக நாடக ஹீரோக்கள் காத்துகிடக்கத் தொடங்கினார்கள்.

வெள்ளித்திரையின் முதல் ஹீரோயின்

நாடக உலகின் கனவு கன்னியாக ராஜலட்சுமி வலம் வந்து கொண்டிருந்தபோது தமிழ் சினிமாவில் மவுன படங்கள் அறிமுகமானது. அதிலும் முதலில் ஆண்கள்தான் நடித்தார்கள். ஏ.நாராயண அய்யர் என்பவர் ராஜலட்சுமியை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். 1929ம் ஆண்டு வெளிவந்த கோவலன் என்ற மவுனப்படம்தான் ராஜலட்சுமிக்கு முதல் படம். அதன் பிறகு உஷாசுந்தரி உள்பட பத்துக்கும் மேற்பட்ட ஊமைப் படங்களில் நடித்தார். அதன் பிறகு பேசும் படங்கள் வந்தது. இம்பீரியல் மூவிடோன் நிறுவனம் தமிழ், தெலுங்கில் காளிதாஸ் என்ற முதல் பேசும் படத்தை தயாரித்தது. இதில் நடிக்க ராஜலட்சுமியை தேர்வு செய்த நிறுவனம் அவரை மும்பைக்கு அழைத்துச் சென்று குரல் வளம் மற்றும் மேக்அப் டெஸ்ட் நடத்தி ஓகே சொன்னது.

1931ம் ஆண்டு அக்டோபர் 31ந் தேதி சென்னை செண்ட்ரல் தியேட்டரில் காளிதாஸ் ரிலீசானது. தமிழ் சினிமாவின் முதல் ஹீரோயின் திரையில் தோன்றினார். அந்தப் படத்தில் டி.பி.ராஜலட்சுமி பாடி, ஆடிய "மன்மத பாணமடா மாரில் பாயுதடா" என்ற பாடல் அப்போது தமிழ்நாடே கொண்டாடிய துள்ளல் பாடல் (குத்து சாங்). அதைத் தொடர்ந்து சாவித்ரி, வள்ளி திருமணம், திரௌபதி, வஸ்திரா பரிணயம், குலசேகரா உள்பட பல படங்களில் நடித்தார். அப்போது நம்பர் ஒன் ஹீரோவாக இருந்த வி.ஏ.செல்லப்பாவும், ராஜலட்சுமியும் இணைந்து நடித்த படங்கள் சூப்பர் ஹிட்டானது. தமிழ் சினிமாவின் முதல் மேட் ஃபார் ஈச் அதர் ஜோடி இவர்கள்தான்.

தொடரும்.............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழ் சினிமாவின் ராணி டி.பி.ராஜலட்சுமி - ஸ்பெஷல் ஸ்டோரி! Empty Re: தமிழ் சினிமாவின் ராணி டி.பி.ராஜலட்சுமி - ஸ்பெஷல் ஸ்டோரி!

Post by krishnaamma Mon Sep 16, 2013 9:17 pm

தமிழ் சினிமாவின் ராணி

நடிகையாக வாழ்க்கையை தொடங்கினாலும், தயாரிப்பாளர், இயக்குனர். நாவலாசிரியர், திரையரங்கு உரிமையாளர் என பல்வேறு தளங்களில் 20 ஆண்டுகள் ராஜலட்சுமி வலம் வந்தார். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முதல் பெண் தயாரிப்பாளர், பெண் இயக்குனரும் அவர்தான். மிஸ்கமலா, இந்திய தாய், மதுரை வீரன் (எம்.ஜி.ஆர் நடித்த படம் அல்ல), உள்பட சில படங்களை இயக்கினார். வள்ளி திருமணம் படத்தில் நடித்தபோது அதில் தனக்கு ஜோடியாக நடித்த டி.வி.சுந்தரம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு பெண் குழந்தைக்கும் தாயானார்.

சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்தார் ராஜலட்சுமி. சொந்த பட தயாரிப்பில் பெரும் பொருளை இழந்த ராஜலட்சுமி அதைப் பற்றி கலங்காமல் தொடர்ந்து சினிமாவுக்கே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். அதனால் அந்தக் காலத்திலேயே அவர் சினிமா ராணி என்ற சிறப்பு பெயரில் அழைக்கப்பட்டார். அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது அரசின் கடமை மட்டுமல்ல ஒவ்வொரு சினிமா ரசிகனின் கடமையாகும்.

நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழ் சினிமாவின் ராணி டி.பி.ராஜலட்சுமி - ஸ்பெஷல் ஸ்டோரி! Empty Re: தமிழ் சினிமாவின் ராணி டி.பி.ராஜலட்சுமி - ஸ்பெஷல் ஸ்டோரி!

Post by ரேவதி Tue Sep 17, 2013 12:43 pm

தகவலுக்கு நன்றி அம்மா !


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தமிழ் சினிமாவின் ராணி டி.பி.ராஜலட்சுமி - ஸ்பெஷல் ஸ்டோரி! Empty Re: தமிழ் சினிமாவின் ராணி டி.பி.ராஜலட்சுமி - ஸ்பெஷல் ஸ்டோரி!

Post by mbalasaravanan Tue Sep 17, 2013 5:54 pm

நல்ல தகவல்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

தமிழ் சினிமாவின் ராணி டி.பி.ராஜலட்சுமி - ஸ்பெஷல் ஸ்டோரி! Empty Re: தமிழ் சினிமாவின் ராணி டி.பி.ராஜலட்சுமி - ஸ்பெஷல் ஸ்டோரி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum