புதிய பதிவுகள்
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_c10நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_m10நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_c10 
107 Posts - 49%
heezulia
நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_c10நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_m10நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_c10நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_m10நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_c10நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_m10நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_c10நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_m10நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_c10 
7 Posts - 3%
prajai
நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_c10நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_m10நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_c10 
3 Posts - 1%
Barushree
நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_c10நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_m10நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_c10நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_m10நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_c10நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_m10நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_c10நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_m10நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_c10நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_m10நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_c10 
234 Posts - 52%
heezulia
நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_c10நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_m10நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_c10நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_m10நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_c10நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_m10நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Barushree
நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_c10நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_m10நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_c10நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_m10நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_c10நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_m10நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_c10நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_m10நேற்று லிபியா, இன்று சிரியா! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேற்று லிபியா, இன்று சிரியா!

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Sep 13, 2013 9:39 pm

வியட்நாம், ஆப்கானிஸ்தான், இராக், லிபியா வரிசையில் அடுத்ததாக அமெரிக்க ராணுவத்தின் தலையீட்டால் தவிக்க இருப்பது சிரியா. இராக்கிலும், லிபியாவிலும் முன்வைக்கப்பட்ட அதே காரணங்களைத்தான் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளான சில அரபு நாடுகளும் சிரியாமீது ராணுவத் தாக்குதலில் ஈடுபடுவதற்கும் காரணம் கூறுகிறார்கள்.

பொறுப்பற்ற ஆட்சி, பொதுமக்களை அழிப்பதற்காக ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துதல், மனிதாபிமானமில்லாத படுகொலைகள் என்று அதிபர் பஷார் அல் அஸாத் அரசின் மீதும் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்கள்.

சிரியா பிரச்னையின் பின்னணி ஒன்றும் புரிந்து கொள்ள முடியாதது அல்ல. எப்படி இராக்கின் எண்ணெய் வளங்களைக் குறிவைத்து, அதற்கு முன்னோடியாக ஆப்கானிஸ்தானின் தலிபான்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் சாக்கில் சவூதி அரேபியாவில் தங்கள் ராணுவ தளத்தை அமைத்துக் கொண்டார்களோ, அதேபோல அடுத்ததாக ஈரானைத் தாக்குவதற்காக இப்போது சிரியாமீது ராணுவப் படையெடுப்பு நடத்த முயற்சிக்கிறார்கள். லிபியாவில் தங்களது நோக்கம் நிறைவேறாத நிலையில் இப்போது சிரியா குறிவைக்கப்பட்டிருக்கிறது, அவ்வளவே!

சிரியாவில் உள்நாட்டுப் பிரச்னை இருந்தது என்னவோ உண்மை. அதை பயன்படுத்தி, சிரியாவிலுள்ள ஸன்னி முஸ்லிம்களுக்கு ஆதரவாக அரபு நாடுகள் ஆயுத உதவி செய்து, பஷார் அல் அஸாத் ஆட்சிக்கு எதிராகப் போராட்டத்தை முடுக்கி விட்டன. இதுவரை ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் இந்தப் போராட்டத்தில் சிரியாவில் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி போராட்டக்காரர்களுக்கும் அஸாத் ஆதரவு ராணுவத்திற்கும் இடையே நடந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் மரணமடைந்தனர். இவர்கள் ராணுவத்தின் ரசாயன ஆயுதங்களால் தாக்கப்பட்டனர் என்பது போராட்டக்காரர்கள் சார்பில் அவர்கள் ஆதரவாளர்களான அரபு நாடுகள் மற்றும் அமெரிக்காவின் குற்றச்சாட்டு.

ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதே போராட்டக்காரர்கள் என்பதும், தங்களது அரசுக்கு எதிராக அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்க அதன் மூலம் காரணம் ஏற்படுத்துகிறார்கள் என்பதும் பஷார் அல் அஸாத் தலைமையிலான அரசுத் தரப்பின் கூற்று. அதில் உண்மை இல்லாமல் இல்லை.

கடந்த மே மாதம் ஐ.நா. சபையால் நியமிக்கப்பட்ட கார்லாடெல் போன்ட்டே குழுவின் விசாரணை அறிக்கை, போராளிகள்தான் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கிறது. அதுமட்டுமல்ல, துருக்கி எல்லையில் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களிடமிருந்து 2 கிலோ "சரின்' வாயு கைப்பற்றப்பட்டிருக்கிறது.

இராக்கிலும் சதாம் ஹுசேன் அரசின் மீது இதேபோலக் குற்றம்சாட்டித்தான் ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டது. சதாம் ஹுசேன் கொல்லப்பட்டதும், அமெரிக்காவுக்கு ஆதரவான ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. குற்றச்சாட்டு பொய் என்பதை அமெரிக்காவே ஒத்துக் கொண்டது. அதேபோல, இப்போது சிரியாவிலும் ஒரு பொய்க்காரணம் கூறப்படுகிறது என்பது தெளிவு.

கத்தார் மற்றும் அரேபிய நாடுகளின் நேரிடையான, மறைமுகமான ஆதரவுடனும், அமெரிக்காவின் ஆசியுடனும் போராளிகள் ஆயுதமும், பண உதவியும் வழங்கப்பட்டு அஸாத் அரசுக்கு எதிராகப் போராடத் தூண்டப்படுகிறார்கள். அவர்களை எதிர்கொள்ள ஈரான் அஸாதின் படைகளுக்கு உதவுகிறது. ரஷியா, சீனா ஆகிய நாடுகளின் ஆதரவு, அஸாத் அரசுக்கு இருக்கிறது. இதுதான் சிரியா பிரச்னைக்குக் காரணம்.

ஐ.நா. சபைத் தீர்மானம், போராட்டக்காரர்களுக்கு ஆயுத உதவி, கடைசியாக அமெரிக்காவின் நேச நாட்டுப் படையின் நேரடி ராணுவத் தலையீடு - இவைதான் லிபியாவில் கடாபி அரசைப் பதவியிலிருந்து அகற்ற அமெரிக்கா கையாண்ட உத்தி. அதையேதான் சிரியாவிலும் நடைமுறைப்படுத்த நினைத்தது அமெரிக்கா. ஆனால், லிபியா அனுபவமும், ரஷியா மற்றும் சீனாவின் எதிர்ப்பும், சிரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை ஆதரிக்க முடியாமல் ஐ.நா. சபையைத் தடுத்து விட்டது.

அமெரிக்காவுக்கு சிரியாவில் தலையிடுவதில் இன்னொரு தர்மசங்கடமும் இருக்கிறது. பஷார் அல் அஸாதின் அரசுக்கு எதிராகப் போராடும் ஸன்னி பிரிவு இஸ்லாமியப் போராளிகளில் பலர் அல்- கொய்தா ஆதரவாளர்கள் என்பதுதான் அது. போராளிகளுக்கு வலிமையான ஆயுதங்களை அளித்து பலப்படுத்தினால், அதுவே தங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு விடுமோ என்கிற அச்சம் அமெரிக்காவை பயமுறுத்துகிறது.

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் புரட்சியாளர்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கினால், அஸாத் அரசு உடனடியாக அடிபணிந்து விடப் போவதில்லை. மிகப்பெரிய போராட்டம் வெடித்து 1999 கோசோவோ பிரச்னைபோல, அக்கம்பக்கத்து நாடுகளுக்கு அகதிகள் ஆயிரக்கணக்கில் தஞ்சம் அடைய நேரிடும். ஈரான், சீனா, ரஷியா நாடுகளின் ஆதரவுடன் வியட்நாம் போல போர் நீளும். அதன் விளைவுகள் மோசமானதாக இருக்கும்.

அமெரிக்காவும் நட்பு நாடுகளும் ஐ.நா. சபையின் அனுமதி இல்லாமல் லிபியாவைப் போல சிரியாமீதும் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டால், அதுவே தவறான முன்னுதாரணமாகி உலகிலுள்ள ஏனைய நாடுகளுக்கும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் அச்சுறுத்தலாகக் கூடும்.

சிரியா பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண அமெரிக்காவோ, ரஷியாவோ தயாராக இல்லை. காரணம், அன்னிய நாடுகளின் அக்கறை பக்கத்திலிருக்கும் ஈரானின் எண்ணெய் வளத்தின் மீதுதானே தவிர சிரிய நாட்டு மக்களின் நல்வாழ்வில் அல்ல.

இந்திய அரசுக்கு பண்டித ஜவகர்லால் நேருவுக்கு இருந்ததுபோல உலக அமைதியில் அக்கறை இருக்குமேயானால், சிரியா பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்கிற தீர்மானத்தை ஐ.நா. சபையில் முன்மொழிந்து ஆதரவு திரட்டி நிறைவேற்ற வேண்டும். நமக்கு அந்தக் கடமை உண்டு!
நன்றி-தினமணி

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Sep 14, 2013 6:04 am

அருமையான பகிர்வு

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Sep 14, 2013 9:23 am

ஒரு தலை பட்சமாக எழுதப்பட்டுள்ள கட்டுரை இது ..இதை பற்றி பிறகு விரிவாக விளக்குகிறேன்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 14, 2013 10:27 am

தினமணி போன்ற ஒரு பத்திரிகையின் தலையங்கமா இது ?! ஆச்சரியமாக இருக்கிறது
SajeevJino wrote:ஒரு தலை பட்சமாக எழுதப்பட்டுள்ள கட்டுரை இது ..இதை பற்றி பிறகு விரிவாக விளக்குகிறேன்
வரவேற்கிறோம்

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Sep 14, 2013 1:12 pm

வியட்நாம், ஆப்கானிஸ்தான், இராக், லிபியா வரிசையில் அடுத்ததாக அமெரிக்க ராணுவத்தின் தலையீட்டால் தவிக்க இருப்பது சிரியா. இராக்கிலும், லிபியாவிலும் முன்வைக்கப்பட்ட அதே காரணங்களைத்தான் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளான சில அரபு நாடுகளும் சிரியாமீது ராணுவத் தாக்குதலில் ஈடுபடுவதற்கும் காரணம் கூறுகிறார்கள்.
வியட்நாமை இதில் ஏன் சேர்க்கிறார்கள் என்பது எனக்கு விளங்கவில்லை..அமெரிக்காவின் நட்பு நாட்டிற்கு அது உதவியது ..சீனாவும் அதன் நட்பு நாட்டிற்கு உதவியது..எப்படி நாமும் போரில் ரஷ்ய உதவியை நாடுகிறோமோ அது போலதான் வியட்நாமும் ..

ஆனால் ஆப்கானிஸ்தான், இராக், லிபியா போன்ற நாடுகளில் சர்வதிகார ஆட்சிகளை எதிர்த்து மக்கள் போராடியது தான் காரணம் ..நீங்களே நினைத்துப் பாருங்கள் காங்கிரஸ் அரசு பதவியை விட்டுகொடுக்காமலும் தேர்தலை நடத்த விடாமலும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பதவியில் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் ...!!!

பொறுப்பற்ற ஆட்சி, பொதுமக்களை அழிப்பதற்காக ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துதல், மனிதாபிமானமில்லாத படுகொலைகள் என்று அதிபர் பஷார் அல் அஸாத் அரசின் மீதும் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்கள்.
இவன் எவ்வளவு ஆண்டு காலமாக சிரியாவை ஆளுகிறான் தெரியுமா ..?

அவனது தகப்பன் 1970 இல் இருந்து 2000 வரை சுமார் 30 வருடமும் இவன் 2000 இல் இருந்து இன்று வரை சுமார் 13 வருடங்களும் ஆட்சி செய்கிறான் ..

கடந்த மார்ச் 2011 இல் இருந்து மார்ச் 2013 வரை ஐ நா கணக்கின் படி இவன் கொன்று குவித்த மக்கள் தொகை சுமார் 70,000 கும் மேல்

இதில் சுமார் 2000 பேர் ரசாயன ஆயுதங்கள் மூலம் கொல்லப்பட்டனர்

சிரியா பிரச்னையின் பின்னணி ஒன்றும் புரிந்து கொள்ள முடியாதது அல்ல. எப்படி இராக்கின் எண்ணெய் வளங்களைக் குறிவைத்து, அதற்கு முன்னோடியாக ஆப்கானிஸ்தானின் தலிபான்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் சாக்கில் சவூதி அரேபியாவில் தங்கள் ராணுவ தளத்தை அமைத்துக் கொண்டார்களோ, அதேபோல அடுத்ததாக ஈரானைத் தாக்குவதற்காக இப்போது சிரியாமீது ராணுவப் படையெடுப்பு நடத்த முயற்சிக்கிறார்கள். லிபியாவில் தங்களது நோக்கம் நிறைவேறாத நிலையில் இப்போது சிரியா குறிவைக்கப்பட்டிருக்கிறது, அவ்வளவே!
மிகவும் அருமை

இராக் எதற்காக குவைத் மீது படையெடுத்தது என்று அவரால் கூற முடியுமா ..அல்லது இஸ்ரேல் மற்றும் சவுதி மீது ஏன் ஏவுகணைகளை வீசினார்கள் என்று தான் சொல்ல முடியுமா ..!!

எழுத்தாளரின் புத்திக் கூர்மை ..!!

ஆப்கானிஸ்தானின் தலிபான்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலுவான காரணங்கள் உண்டு ..நமது விமானத்தை கடத்தி தலிபான்களின் சொர்க்க பூமியான ஆப்கானிஸ்தானின் நிறுத்தி நம்மிடம் பேரம் பேசியவர்கள் சோவியத் ராணுவத்திடமிருந்து மரண அடி வாங்கியவர்கள் ..உலக மகா தீவிரவாதி ஒசாமாவிற்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் இன்னும் சொல்லப்போனால் நிறைய காரணங்கள் உண்டு

லிபியாவில் கடாபியை வீழ்த்துவதில் அமெரிக்காவை விட பிரஞ்சு படைகளே மும்முரம் காட்டியது ..பிரான்சில் நடந்த சில தாக்குதல்களுக்கு லிபியாவிலிருந்து சில ஆட்கள் உதவுவதும் ..மேலும் மக்கள் மீது விமான தாக்குதல் நடத்தியதுமே லிபியாவின் மீதுள்ள குற்றங்கள் ரஷ்யாவும் இதற்கு எந்த வித மறுப்பும் தெரிவிக்கவில்லை..

சிரியாவில் உள்நாட்டுப் பிரச்னை இருந்தது என்னவோ உண்மை. அதை பயன்படுத்தி, சிரியாவிலுள்ள ஸன்னி முஸ்லிம்களுக்கு ஆதரவாக அரபு நாடுகள் ஆயுத உதவி செய்து, பஷார் அல் அஸாத் ஆட்சிக்கு எதிராகப் போராட்டத்தை முடுக்கி விட்டன. இதுவரை ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் இந்தப் போராட்டத்தில் சிரியாவில் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி போராட்டக்காரர்களுக்கும் அஸாத் ஆதரவு ராணுவத்திற்கும் இடையே நடந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் மரணமடைந்தனர். இவர்கள் ராணுவத்தின் ரசாயன ஆயுதங்களால் தாக்கப்பட்டனர் என்பது போராட்டக்காரர்கள் சார்பில் அவர்கள் ஆதரவாளர்களான அரபு நாடுகள் மற்றும் அமெரிக்காவின் குற்றச்சாட்டு.
இது குற்றச்சாட்டு அல்ல ..ஐ நா வால் கூறப்பட்ட உண்மை

ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதே போராட்டக்காரர்கள் என்பதும், தங்களது அரசுக்கு எதிராக அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்க அதன் மூலம் காரணம் ஏற்படுத்துகிறார்கள் என்பதும் பஷார் அல் அஸாத் தலைமையிலான அரசுத் தரப்பின் கூற்று. அதில் உண்மை இல்லாமல் இல்லை.
ரசாயன ஆயுதங்களை மிகவும் கை தேர்ந்த வீரர்களே கையாள முடியும் ..உங்களாலோ என்னாலோ அது இயலாது ..பின்பு எப்படி போராட்டக்காரர்களால் முடியும் ..

கடந்த மே மாதம் ஐ.நா. சபையால் நியமிக்கப்பட்ட கார்லாடெல் போன்ட்டே குழுவின் விசாரணை அறிக்கை, போராளிகள்தான் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கிறது. அதுமட்டுமல்ல, துருக்கி எல்லையில் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களிடமிருந்து 2 கிலோ "சரின்' வாயு கைப்பற்றப்பட்டிருக்கிறது.
ஏன் சிரிய ராணுவ வீரர்கள் தங்களை போராளிகள் என்று துருக்கியிடம் கூறியிருக்கக் கூடாது .மேலும் சிரியாவிலிருந்து ஒரு சில பேரல் ரசாயன ஆயுதங்கள் களவாடப்பட்டது உண்மை ..அதை ஏன் கூறவில்லை

இராக்கிலும் சதாம் ஹுசேன் அரசின் மீது இதேபோலக் குற்றம்சாட்டித்தான் ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டது. சதாம் ஹுசேன் கொல்லப்பட்டதும், அமெரிக்காவுக்கு ஆதரவான ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. குற்றச்சாட்டு பொய் என்பதை அமெரிக்காவே ஒத்துக் கொண்டது. அதேபோல, இப்போது சிரியாவிலும் ஒரு பொய்க்காரணம் கூறப்படுகிறது என்பது தெளிவு
பொய் காரணமா ..போன பத்தியில் தான் ஆசிரியர் கூறினார் 1 லட்சம் பேர் இறந்தனர் என்று ..சதாமுக்கு எதிராக மக்கள் போராடவில்லை ஆனால் அவர் அந்நிய நாடுகள் மீது போர் தொடுத்தார் என்பது தான் அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகள் ஏற்கனவே கூறியபடி அவர் இஸ்ரலிலும் சவுதியிலும் ஏவுகணை வீசிய போது அதில் ரசாயன warhead களை பயன் படுத்தியிருந்தால் ..!!!

கத்தார் மற்றும் அரேபிய நாடுகளின் நேரிடையான, மறைமுகமான ஆதரவுடனும், அமெரிக்காவின் ஆசியுடனும் போராளிகள் ஆயுதமும், பண உதவியும் வழங்கப்பட்டு அஸாத் அரசுக்கு எதிராகப் போராடத் தூண்டப்படுகிறார்கள். அவர்களை எதிர்கொள்ள ஈரான் அஸாதின் படைகளுக்கு உதவுகிறது. ரஷியா, சீனா ஆகிய நாடுகளின் ஆதரவு, அஸாத் அரசுக்கு இருக்கிறது. இதுதான் சிரியா பிரச்னைக்குக் காரணம்.
சிரியாவில் மக்களுக்கு எதிராக விமானப் படையை பயன்படுத்தியதால் தான் மற்ற நாடுகள் போராளிகளுக்கு ஆயுத உதவி செய்தது

கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் டெல்லியில் அன்னா ஹசாரே அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் போது காங்கிரஸ் அரசு அவர்கள் மீது விமானத்திலிருந்து குண்டு மழை பொழிந்தால் நாம் என்ன செய்வோம் ..

[quote]ஐ.நா. சபைத் தீர்மானம், போராட்டக்காரர்களுக்கு ஆயுத உதவி, கடைசியாக அமெரிக்காவின் நேச நாட்டுப் படையின் நேரடி ராணுவத் தலையீடு - இவைதான் லிபியாவில் கடாபி அரசைப் பதவியிலிருந்து அகற்ற அமெரிக்கா கையாண்ட உத்தி. அதையேதான் சிரியாவிலும் நடைமுறைப்படுத்த நினைத்தது அமெரிக்கா. ஆனால், லிபியா அனுபவமும், ரஷியா மற்றும் சீனாவின் எதிர்ப்பும், சிரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை ஆதரிக்க முடியாமல் ஐ.நா. சபையைத் தடுத்து விட்டது[.quote]

இதிலிருந்தே தெரிகிறது லிபியாவில் அனைத்து நாடுகளின் பங்களிப்புடனும் ஐ.நா. ஆதரவுடனும் தான் போர் நடந்தது என்று ..

சிரியாவிலும் தனது பலத்தை இழந்தால் அரபு கண்டத்தில் ரஷ்யாவின் நிலை பெயர்ந்து விடும் அதனால் தான் ரஷ்யா சிரியா ஆதரிப்பது

அமெரிக்காவுக்கு சிரியாவில் தலையிடுவதில் இன்னொரு தர்மசங்கடமும் இருக்கிறது. பஷார் அல் அஸாதின் அரசுக்கு எதிராகப் போராடும் ஸன்னி பிரிவு இஸ்லாமியப் போராளிகளில் பலர் அல்- கொய்தா ஆதரவாளர்கள் என்பதுதான் அது. போராளிகளுக்கு வலிமையான ஆயுதங்களை அளித்து பலப்படுத்தினால், அதுவே தங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு விடுமோ என்கிற அச்சம் அமெரிக்காவை பயமுறுத்துகிறது.
இது உண்மை ..ஆனால் இதே போன்ற பல நிலைமைகளை அமெரிக்கா சமாளித்துள்ளது .

அமெரிக்காவும் நட்பு நாடுகளும் ஐ.நா. சபையின் அனுமதி இல்லாமல் லிபியாவைப் போல சிரியாமீதும் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டால், அதுவே தவறான முன்னுதாரணமாகி உலகிலுள்ள ஏனைய நாடுகளுக்கும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் அச்சுறுத்தலாகக் கூடும்.
முதலில் ஐ.நா. ஆதரவுடனும் தான் போர் நடந்தது என்றுகூறினார்கள் ..இப்போது

சிரியா பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண அமெரிக்காவோ, ரஷியாவோ தயாராக இல்லை. காரணம், அன்னிய நாடுகளின் அக்கறை பக்கத்திலிருக்கும் ஈரானின் எண்ணெய் வளத்தின் மீதுதானே தவிர சிரிய நாட்டு மக்களின் நல்வாழ்வில் அல்ல.
சவுதியில் இருக்கும் எண்ணை வளம் அமெரிக்காவிற்கு போதும் ..எண்ணைக்காக தான் சண்டை என்பதை விட்டுவிட்டு உண்மை காரணத்தை என்று தான் பத்திரிகையாளர்கள் கூறுவார்களோ

இந்திய அரசுக்கு பண்டித ஜவகர்லால் நேருவுக்கு இருந்ததுபோல உலக அமைதியில் அக்கறை இருக்குமேயானால், சிரியா பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்கிற தீர்மானத்தை ஐ.நா. சபையில் முன்மொழிந்து ஆதரவு திரட்டி நிறைவேற்ற வேண்டும். நமக்கு அந்தக் கடமை உண்டு!
இலங்கை பிரச்னையில் ஒரு முடிவு எடுக்க தெரியாத அரசு சிரியாவை மாற்றப் போகிறதாம்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Sep 14, 2013 1:16 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:அருமையான பகிர்வு
நண்பரே அருமையான பகிர்வு என்கிறீர்களே ..எனது பதிலுக்கு தாங்களின் கருத்து

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Sep 14, 2013 3:43 pm

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் புரட்சியாளர்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கினால், அஸாத் அரசு உடனடியாக அடிபணிந்து விடப் போவதில்லை. மிகப்பெரிய போராட்டம் வெடித்து 1999 கோசோவோ பிரச்னைபோல, அக்கம்பக்கத்து நாடுகளுக்கு அகதிகள் ஆயிரக்கணக்கில் தஞ்சம் அடைய நேரிடும். ஈரான், சீனா, ரஷியா நாடுகளின் ஆதரவுடன் வியட்நாம் போல போர் நீளும். அதன் விளைவுகள் மோசமானதாக இருக்கும்.

அமெரிக்காவும் நட்பு நாடுகளும் ஐ.நா. சபையின் அனுமதி இல்லாமல் லிபியாவைப் போல சிரியாமீதும் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டால், அதுவே தவறான முன்னுதாரணமாகி உலகிலுள்ள ஏனைய நாடுகளுக்கும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் அச்சுறுத்தலாகக் கூடும்
.
   
...............என்று
மூன்றாம் உலகப்போர் போன்ற பயங்கரங்களை சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே அந்தத் தலையங்கம் அமைந்திருந்தது .இதில் ஒருதலைப் பட்சம் எங்கே இருக்கிறதென்று புரியவில்லை .மேலும் அந்த அன்பர் ஒரு பத்திரிக்கையின் செய்தியை பகிர்ந்திருந்தார் (கவனிக்க பதிவு அல்ல) .எனக்கு போர் வேண்டியதில்லை என்று தோன்றியதாலேயே அத்தகைய கருத்தை என் சொந்தக்கருத்தாகப் பதிந்தேன் .அன்பரே உங்களுக்கு உங்கள் கருத்தைப் பதிய ஈகரையில் நிறைய இடம் உண்டு .நீங்கள் அங்கு பதிந்தால் ஒருவேளை நான் கருத்துச் சொல்லாமல் கூட சென்றிருக்கலாம் .அடுத்தவரின் திரிக்குள் இது வேண்டாம் என்று நினைக்கிறேன்,மட்டுமல்லாமல் உங்கள் கருத்தில் மேற்க்கூறிய செய்தியே உள்ளடங்கியதாகத் தெரிகிறது அல்லது உங்களின் செய்தியை தனித்திரியாகத் தாருங்கள் அன்பரே

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Sep 14, 2013 4:18 pm

நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் ..!!

நண்பரே இது ஒரு ஓபன் forum ..நிர்வாக விதிகளுக்கு உட்பட்டு யாருடைய பதிவிற்கும் நீங்கள் கருத்து கூறலாம்..ஆகவே உங்களின் கருத்தை மறுதலிக்க /ஆதரிக்க மட்டுமே உரிமை உண்டே தவிர நீங்கள் எழுதக் கூடாது என நான் கூற முடியாது

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 14, 2013 4:23 pm

லிபியா சிரியா ஊடலில் நமக்குள் வேண்டாம் பிரச்சினை சரியா.

அவரவர் கருத்துகளை தாராளமாக பதிவிடுங்கள் - நமக்குள் வேண்டாம் சர்ச்சை.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 14, 2013 4:25 pm

சிரியா லிபியா பேச போய் இந்தியா இப்படி ஆகிவிட்டதே ....புன்னகை புன்னகை புன்னகை 

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக