புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமக்கும் கடமையுண்டு! I_vote_lcapநமக்கும் கடமையுண்டு! I_voting_barநமக்கும் கடமையுண்டு! I_vote_rcap 
30 Posts - 83%
heezulia
நமக்கும் கடமையுண்டு! I_vote_lcapநமக்கும் கடமையுண்டு! I_voting_barநமக்கும் கடமையுண்டு! I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
நமக்கும் கடமையுண்டு! I_vote_lcapநமக்கும் கடமையுண்டு! I_voting_barநமக்கும் கடமையுண்டு! I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
நமக்கும் கடமையுண்டு! I_vote_lcapநமக்கும் கடமையுண்டு! I_voting_barநமக்கும் கடமையுண்டு! I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
நமக்கும் கடமையுண்டு! I_vote_lcapநமக்கும் கடமையுண்டு! I_voting_barநமக்கும் கடமையுண்டு! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நமக்கும் கடமையுண்டு!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Sep 13, 2013 9:37 pm

உலகிலுள்ள எல்லா வளர்ச்சி அடைந்த நாடுகளும், தங்களது சரித்திரப் பின்னணியையும், கலாசார அடையாளங்களையும், புராதனச் சின்னங்களையும் பாதுகாத்து, வெளிநாட்டினருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டித் தங்களது வரலாற்றுச் சிறப்புகளை நிலைநிறுத்தத் தயங்குவதில்லை. பல ஐரோப்பிய நாடுகளின் புராதனச் சின்னங்கள் ஏழெட்டு நூற்றாண்டுகள் பழமையானவை, அவ்வளவே. சில கோட்டைகளும், மாதா கோவில்களும்தான் அவர்களால் காட்ட முடிகிற சரித்திரச் சான்றுகள். ஆனால், அந்த சரித்திரச் சான்றுகளை அவர்கள் பாதுகாத்துப் பராமரிக்கும் விதமும், அவைகளைப் பற்றிய விவரங்களைப் புத்தகங்களாகவும், சுற்றுலாப் பயணிகள் எடுத்து செல்லும் விதத்திலான நினைவுப் பொருள்களாகவும் விற்பனைச் செய்து பெருமை தட்டிக் கொள்வதும், எந்த அளவுக்கு அவர்கள் தங்கள் பாரம்பரியத்தை பறைசாற்றி பெருமிதம் கொள்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன.

உலகிலேயே மிகப் பழமையான சரித்திரத்தை உடைய நமது இந்தியாவின் நிலைமை மெச்சிக் கொள்ளும்படியாக இல்லை. தென்னிந்தியாவிலுள்ள பல ஆலயங்களையும், அஜந்தா, எல்லோரா குகைச் சிற்பங்களையும், மாமல்லபுரம் குடவரைக் கோவில்களையும், நாம் இன்னும் முழுமையான பராமரிப்புக்கும், பாதுகாப்புக்கும் உள்படுத்தவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். அவற்றைப் பற்றிய குறிப்புகளும், சுற்றுலாப் பயணிகளுக்குத் தரப்படும் கையேடுகளும்கூட கவர்ச்சிகரமாகவும் முறையாகவும் தயாரிக்கப்படவில்லை என்பதை நினைக்கும்போது, எந்த அளவுக்கு நாம் நமது பெருமைகளை உதாசீனப்படுத்துகிறோம் என்பது தெரிகிறது.

இப்படிப்பட்ட நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல, மத்திய கணக்குத் தணிக்கை குழு அதிகாரியின் அறிக்கை வெளிவந்திருக்கிறது. இந்தியத் தொல்லியல் துறை பற்றிய தலைமைக் கணக்குத் தணிக்கை குழு அதிகாரியின் அறிக்கை எந்த அளவுக்கு அந்தத் துறை, அரசால் வழங்கும் நிதியை முறைகேடாக வீணாக்குகிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

ஏறத்தாழ 5000 ஆண்டு அறியப்பட்ட சரித்திரப் பின்னணியுடைய இந்தியாவில் எண்ணிலடங்காத நினைவுச் சின்னங்களும், பாதுகாத்துப் பராமரிக்கப்பட வேண்டிய சரித்திரச் சான்றுகளும் பரந்து கிடக்கின்றன. அவ்வப்போது அகழ்வாராய்ச்சிகள் மூலம் பல புதிய சின்னங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்தியத் தொல்லியல் துறையிடம், அதன் கண்காணிப்பில் எத்தனை நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப்படுகின்றன என்கிற தகவல்கூட இல்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா? பல அறிவிக்கப்பட்ட பாதுகாக்கப்படும் நினைவுச் சின்னங்கள் காணாமல் போயிருக்கின்றன என்றால் அதை என்னவென்று சொல்வது? தலைமைக் கணக்குத் தணிக்கை குழு அதிகாரியின் அறிக்கையில் காணப்படும் குற்றச்சாட்டுகள் இவை.

பழமையான பல கலைப் பொக்கிஷங்கள், பட்டியலில் காணப்படுகின்றன. ஆனால், களவு போயிருக்கின்றன. சில சரித்திரச் சின்னங்களே காணாமல் போயிருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஒன்று, அவை ரியல் எஸ்டேட்காரர்களால் கட்டடம் கட்ட இடித்துத் தகர்க்கப்பட்டிருக்கின்றன அல்லது சரியான பராமரிப்பு இல்லாமல் இடிந்து விழுந்து அழிந்திருக்கின்றன. வேடிக்கை என்னவென்றால், இந்தியத் தொல்லியல் துறை, அந்தச் சின்னங்களின் பராமரிப்புக்கான செலவை மட்டும் கணக்கெழுதி வந்திருக்கிறது...!

இல்லாத நினைவுச் சின்னங்களைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும் நிதி ஒதுக்கீடு பெற்றிருக்கிறார்கள். நமது திருமலை நாயக்கர் மகால் போன்ற பல சரித்திரச் சின்னங்கள், போதிய பராமரிப்பும் பாதுகாப்பும் இல்லாமல் சீரழிந்து வருகின்றன. அதைப் பாதுகாக்க வேண்டிய இந்தியத் தொல்லியல் துறையோ, கவலைப்படாமல் இருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறது கணக்குத் தணிக்கை அறிக்கை.

தலைமைக் கணக்குத் தணிக்கை குழு அதிகாரிகளின் அறிக்கையின் முக்கியக் குற்றச்சாட்டு, இந்தியத் தொல்லியல் துறை, சரித்திரச் சின்னங்களைப் பராமரிக்கும் பாதுகாப்புத் திட்டத்தை நவீனப்படுத்தி வகுக்கவில்லை என்பது. காலனிய ஆட்சி வகுத்த பாதையில்தான் இப்போதும் அந்தத் துறை செயல்படுகிறது. மத்திய அரசின் கலாசார அமைச்சகமும் சரி, நமது பண்பாட்டுச் சின்னங்களைப் பாதுகாப்பதிலும், இந்தியத் தொல்லியல் துறையின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதிலும் அக்கறை செலுத்தாமல் இருப்பதுதான் இதன் அடிப்படைக் காரணம்.

பாரம்பரியப் பெருமைகளை, சரித்திரச் சான்றுகளைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் செய்யும் பொறுப்பு அரசுக்கு மட்டுமல்ல, நமக்கும் உண்டு. பொதுமக்கள் அக்கறை செலுத்தவோ, கவலைப்படவோ தயாராக இல்லாத நிலையில், அதற்கு ஒதுக்கப்படும் நிதியாதாரங்கள் அதிகாரிகளால் ஒதுக்கப்படுகின்றன. அரசு விழித்துக் கொள்கிறதோ இல்லையோ, நாம் விழித்துக் கொண்டாக வேண்டும். பாரம்பரியச் சின்னங்கள் இந்தியாவின் சொத்து. நமது சொத்து. அவை அழிந்துவிடலாகாது!
நன்றி-தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக