புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதியின் காதல்! I_vote_lcapபாரதியின் காதல்! I_voting_barபாரதியின் காதல்! I_vote_rcap 
90 Posts - 73%
heezulia
பாரதியின் காதல்! I_vote_lcapபாரதியின் காதல்! I_voting_barபாரதியின் காதல்! I_vote_rcap 
18 Posts - 15%
Dr.S.Soundarapandian
பாரதியின் காதல்! I_vote_lcapபாரதியின் காதல்! I_voting_barபாரதியின் காதல்! I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
பாரதியின் காதல்! I_vote_lcapபாரதியின் காதல்! I_voting_barபாரதியின் காதல்! I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
பாரதியின் காதல்! I_vote_lcapபாரதியின் காதல்! I_voting_barபாரதியின் காதல்! I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பாரதியின் காதல்! I_vote_lcapபாரதியின் காதல்! I_voting_barபாரதியின் காதல்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதியின் காதல்! I_vote_lcapபாரதியின் காதல்! I_voting_barபாரதியின் காதல்! I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
பாரதியின் காதல்! I_vote_lcapபாரதியின் காதல்! I_voting_barபாரதியின் காதல்! I_vote_rcap 
45 Posts - 13%
mohamed nizamudeen
பாரதியின் காதல்! I_vote_lcapபாரதியின் காதல்! I_voting_barபாரதியின் காதல்! I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பாரதியின் காதல்! I_vote_lcapபாரதியின் காதல்! I_voting_barபாரதியின் காதல்! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பாரதியின் காதல்! I_vote_lcapபாரதியின் காதல்! I_voting_barபாரதியின் காதல்! I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
பாரதியின் காதல்! I_vote_lcapபாரதியின் காதல்! I_voting_barபாரதியின் காதல்! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பாரதியின் காதல்! I_vote_lcapபாரதியின் காதல்! I_voting_barபாரதியின் காதல்! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
பாரதியின் காதல்! I_vote_lcapபாரதியின் காதல்! I_voting_barபாரதியின் காதல்! I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
பாரதியின் காதல்! I_vote_lcapபாரதியின் காதல்! I_voting_barபாரதியின் காதல்! I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பாரதியின் காதல்! I_vote_lcapபாரதியின் காதல்! I_voting_barபாரதியின் காதல்! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதியின் காதல்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 11, 2013 9:23 pm

பாரதி முதன்முதலாக காதல் வயப்பட்டபோது, அவளுக்கு பதினான்கு வயதிருக்கும். எட்டாம் வகுப்பு எக்ஸாம் முடித்த கையோடு வெக்கேஷன் லீவுக்கு மும்பை போயிருந்தாள். அவளுடைய அத்தை வீடு மாதுங்காவில் இருந்தது. சங்கரி அத்தையின் உறவுக்காரப் பையன் திலீப்பும் லீவுக்கு வந்திருந்தான். ப்ளஸ்டூ முடித்திருந்த அவன் நல்ல சிவப்பாக உயரமாக இருந்தான்.

திலீப்பை தெரியும்லையா பாரதி? சின்ன வயசுல நீங்க இரண்டு பேரும் சில்ரன்ஸ் பார்க்ல எடுத்துக்கிட்ட போட்டோ கூட எங்க வீட்டு ஆல்பத்துல இருக்கு என்று மகிழ்ந்தாள் சங்கரி அத்தை. திலீப் சிநேகரமாக சிரித்தான். குச். நாகஹோ என்று பாடினான். பாரதியுடன் கேரம்ஸ் விளையாடினான். சிவந்த விரல்களால் அவன் சுண்டும்போது இரண்டு காயின்கள் பாக்கெட்டில் விழுந்த ஸ்டைலை ரசித்தாள் பாரதி. அவளுடை பிறந்த நாளுக்கு ஸ்க்கெட்ச் பெண்களால் பர்த் - டே கார்ட் வரைந்த கொடுத்தான். இவளும் வண்ண நூலில் கர்ச்சீப்பில் தாமரைப்பூவில் லவ் பேர்ட்ஸ் எம்ப்ராய்டரி போட்டு பரிசளித்தாள்.

சித்தி விநாயகர் கோயிலுக்கு போய்விட்டு மழையில் ஆட்டோவில் நெருக்கி கொண்டு திரும்பியபோது தூறலின் ஈரம் அவள் மனத்தில் காதலாய் பதிந்தது. லீவு முடிந்து கோயமுத்தூர் திரும்பும்போது ரயிலிலும் பாரதிக்கு திலீப்பின் நினைவு தான் தளும்பிகொண்டிருந்தது.

அடுத்த ஸ்டேஷனில் திடுப்பென்று திலீப் ரயிலில் ஏறுவானாம். ஐ மிஸ் யூ பாரதி. ஐ லவ் யூ வெரி மச் என்பானாம். அப்படியே கோயமுத்தூர் போகும் வரை... யாருமில்லாத ரயில் பெட்டியில் பாரதியின் கனவு வெக்கேஷனோடு நீர்த்துப்போயிற்று.

தீலீப் இன்ஜினியரிங் முடிச்சுட்டு, யு.எஸ்.போயிட்டான்டி. ஒரு பெங்காலிப் பொண்ணை லவ் பண்ணி.... ஒரு முறை சங்கரி அத்தை போனில் சொன்னபோது, அதை முழுசாக கேட்கக் கூட பிடிக்கவில்லை. கரஸ்பான்டன்ஸில் பி.காம் படித்துக் கொண்டிருந்த பாரதிக்கு. அப்புறம்... அப்பா இறந்து போய், குடும்பம் கஷ்டப்பட்டபோது, ட்யூஷன், டெய்லரிங் என பணம் சம்பாதிக்கும் முயற்சியில் திலீப்பை மறந்தே போனாள். ஆனால், எப்போதாவது சோனி மியூஸிக்கில் குச் நா கஹோ பாடலைக் கேட்டால், தீலீப்பின் ஞாபகம் கண்ணாடியை கொத்தும் குருவி அலகாய் இதயத்தில் வலிக்கும். அப்படிப்பட்ட பாரதிக்கு இரண்டாவது முறையாக காதல் வயப்படும் வாய்ப்பு விரைவில் வந்தது.

திலீட் என்னை பத்தி என்ன நெனைச்சான்? நான் அவன் மனசுல சின்ன சலனம் கூட உண்டாக்கலையா?
திலீப்புக்கும் என்னை பிடிச்சுருந்ததா இல்லையா?

தொடரும்..........



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 11, 2013 9:25 pm

இதுக்கு மட்டுமாவது விடை தெரிஞ்சா என் மனசு ஆறியிருக்குமே என்றெல்லாம் குழம்பிப்போவாள் பாரதி. ஆனால் பாஸ்கர் அப்படியெல்லாம் குழுப்பவேயில்லை.
என்னமோ.. என்னமோ பிடிச்சுருக்கு. எனக்கு உன்னை பிடிச்சுருக்கு. என்று காதல் மெசேஜ் அனுப்பி விட்டான்.

பாரதி கம்ப்யூட்டர்ஸ் போகும்வழியில் பாஸ்கரின் செல்போன் ரீசார்ஜ் கடை இருந்தது. பாரதிக்கு முதல் பார்வையில் பாஸ்கரை பிடிக்கவில்லை. ஆனால், பாரதியின் ப்ரெண்ட் அமுதாதான். எய்... தனுஷ் மாதிரி சூப்பாரா இருக்காண்டி இப்பல்லாம் இது மாதிரி பசங்களதான் யூத் கேர்ள்ஸ் லைக் பண்றாங்க... என்றெல்லாம் தூபம் போட்டு காதலை வளர்த்து விட்டாள்.

இருவரும் குருவி (பாரதி, விஜய்யின் ரசிகை) படம் பார்க்க சென்றனர். இருட்டில் முத்தமிட்டு கொண்டார்கள். வாலன் டைஸ் டே அன்று ஒரே நிறத்தில் டிரஸ் போட்டுக்கொண்டு, கோவை குற்றாலம்போய் நனைந்து வந்தார்கள். ஒன்பது மாதங்கள், ஒன்பது நிமிடங்களாய் பறக்க, பாரதி பாஸ்கர் காதல் செம் ஸ்பீடாக வளர்ந்து கிளர்ந்தது.

எல்லாம் பாஸ்கரின் அப்பாவின் பார்வை விழும் வரை).
ஸாரி பாரதி வீட்டுல ஒரே ப்ராப்ளம். ஜாதி பிரச்னை வேறயா? அம்மா நேத்திக்கு தூக்கு போட்டுக்க போயிட்டாங்க. ப்ளீஸ்... என்னை மறந்துடு. நான் யாரைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டாலும் நீ தான் என் டியர் பெண்டாட்டி. ஐ. லவ் யூ பார் எவர் என்று ஒரு கடிதம் எழுதி அமுதாவின் கையில் கொடுதனுப்பி விட்டு, ஏதோ மாமன்காரன் ஊராம் அங்கே ஓடிவிட்டான்.

கண்ணில் நீர் வழிய, அவன் கடிதத்தை கிழித்து அதனுடன் அவன் வாங்கி கொடுத்த ஹேர் க்ளிப் அனார்கலி சுரிதார், தாஜ்மகால் கீ - செயின் போன்ற எல்லாவற்றையும் தூக்கி குப்பையில் எரிந்தாள்.
சீ... காதலும் வேணாம்,. ஒரு கருமாந்திரமும் வேணாம் எனஅவள் சோக ராகம் வாசித்து கொண்டிருந்த போது தான் மூன்றாவது முறையாக காதல் வசப்பட்டாள் பாரதி.

இந்த காதலுக்கு உடனே தலை அசைத்து விடவில்லை. இரண்டு சூடுகள் கண்ட பூனையாச்சே எனக்கு கொஞ்சம் டயம் வேணும். என்று கேட்டு கொண்டாள் பந்தாவாக. அப்போது தான் நீங்கள் விரும்பியதை எல்லாம் அடைவது எப்படி? ன்னு ஒரு கட்டுரையை படித்திருந்தாள். அதை டெஸ்ட் செய்ய நினைத்து அதுபடியே எழுதிப்பார்த்தாள்.

நம்பர் ஒன்: திலீப்பை நான் காதலிச்சப்போ வயசு 13. அவன் அழகன். பெரிய இடத்து பிள்ளை. எட்டாக்கனி. இது சும்மா பப்பி லவ் மட்டுமே இதை நான் பெருசா எடுத்துக்கல்ல.
நம்பர் டூ: பாஸ்கர் ஒரு கோழை. காதல் செய்ய தான் லாயக்கு: கல்யாணம்னதும் பெத்தவங்க, ஜாதி அது, இதுன்னு காரணம் சொல்லி ஓடியே போயிட்டான்

நம்பர் த்ரீ: இப்ப எனக்கு வயசு 21. திருமணத்துக்கு ஏற்ற வயசுன்னு ஆட்டோவுல எல்லாம் எழுதியிருக்கு. சிவகுமார் சுமாரான மூஞ்சி தான். ஆனால் ஒரே ஜாதி. துணிக்கடையில மேனேஜர் வேலை. பத்தாயிரம் ரூபாய் சம்பளம். எனக்க சேல்ஸ் கேர்ள் வேலை அஞ்சாயிரம் வருது. குடும்பம் நடத்த இது போதும். சரியாக காய்களை நகர்த்தினால் இந்த காதல் என் எண்ணப்படி முடிய வாய்ப்பிருக்கு என்று கணக்குப்போட்டாள்.

சிவகுமார், செல்போன் எண்ணைப் பரிமாற்றம் செய்தான். முதலில் தேசபக்தி மெசேஜ், தன்னம்பிக்கை மெசேஜ் என டீசன்டாக அனுப்பி விட்டு பின் எதிர்சைடின் மகிழ்ச்சி ரியாக்ஷனை பார்த்து கொஞ்சம் நூல்விட்டு, ஜோக்ஸ், டன்ஸ் ஆப் லவ் என டயம் பார்த்து தட்டியதில் பாரதியின் காதல் உள்ளம் கனிந்து உவந்தது.

மறுபடியும் டூவீலர் ரைடிங் த்ரில், துப்பாக்கி படம் (பாரதி, விஜய்யின் பரம ரசிகையாச்சே) அன்னபூர்ணாவில் மில்க்ஷேக், சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சில முத்தங்கள், இணைப்பாக சில தழுவல்கள் என பாரதியின் வாழ்க்கை தித்திப்பாக நகர்ந்தது.

ஒருமுறை மறந்து விட்ட டிபன்பாக்ஸை எடுக்க ஜவுளிக்கடை ஸ்டோர் ரூமுக்குள் நுழைந்த பாரதி, அங்கே அரையிருட்டில் சிவகுமாரும் அமுதாவும் கட்டித் தழுவி நின்றதை பார்த்து, பதறிப்போய் ரகசியமாய் நகர்ந்தாள்.

மறுநாள் சிவக்குமாரின் மொபைலை திருடி வீட்டுக்கு எடுத்து வந்து ஆராய்ந்தபோது தான் பாரதிக்கு தான் செமத்தியாக ஏமாந்துபோனது தெரிய வந்தது. அவன் பல பெண்களுக்கு அனுப்பி காதல் மெசேஜ்கள், அவர்களிடமிருந்து வந்த தகவல்கள் எல்லா விவரமும் இரவு முழுக்க வந்த அழைப்புகளால் அறிந்து கொண்டாள்.

மறுநாள் சிவகுமாரை சந்தித்து மனம் வலித்து அழுதபோது, அவன் தனது மொபைலை பாரதி திருடி சென்றுவிட்டதாக சொல்லி, பழிப்போட்டு வேலையை விட்டு தூக்கிவிட்டான்.
த்தூ... துரோகி என்று சொல்லி விட்டு, சம்பளம் கூட வாங்கி கொள்ளாமல் கண்ணீருடன் வெளியேறினாள் பாரதி.

அந்த பாரதிக்குத்தான் இன்று திருமணம். மாப்பிள்ளை ஜகதீசன் கொஞ்சம் குண்டாக இருந்தான். முன் வழுக்கை தெரியாமல் படிய வாரியிருந்தான். கம்பெனிகளுக்கு பெயிண்ட் அடிக்கம் கான்ட்ராக்டர், பல்ஸர் வண்டி வைத்திருந்தான் என்பதை தவிர வேறு எதுவும் பிடிக்கவில்லை பாரதிக்கு.
ஆனால் ஜகதீசன் பாரதியை பார்க்கும் போதெல்லாம் கண்களில் அன்பு வழிய பார்த்தான். தேனிலவுக்கு மூணாறு அழைத்து சென்றான். குளிருதா? என்று கேட்டு சால்வை போத்திவிட்டான். அவளை விதவிதமாக போட்டே எடுத்து காட்டினான்.

திலீபனின் சிவந்த உதடுகள்... பாஸ்கரின் கொத்தான தலைமுடி... சிவகுமாரின் அழகிய பல் வரிசை... இப்படி எதுவும் இல்லாத ஜகதீசனை தன்னால் லவ் செய்ய முடியுமா? என்று திகைத்தபடியே ஊர் திரும்பினாள் பாரதி.

குளிச்சுட்டுவா பாரதி... இன்னிக்கு உங்கம்மா வீட்டுக்கு போயிட்டு வரலாம். நாளைக்கு எங்கம்மா வீட்டுக்கு போகலாம் என்றபடி மலையாள நாட்டு ஸ்பெஷலான நேந்திரம் சிப்ஸ், மலபார் அல்வா போன்றவற்றை மாமியாருக்காக தனியாக எடுத்து வைத்தான் ஜகதீசன்.

துணிமணியை எடுத்து கொண்டு, குளியலறைக்குள் சென்று தாளிட்டபோதுதான் பாரதிக்கு தான், ஷாம்பூ பாட்டிலை கொண்டு வராமல் போனது நினைவுக்க வந்தது. மீண்டும் ஹாலுக்கு வந்தபோது, ஜகதீசன் வராந்தாவில் நின்றபடி, யாருடனோ பேசுவது கேட்டு பாரதியின் கால்கள் தானாக நின்றன.
பேசியது அமுதா பயமும் வெறுப்பும் பிசைய திகைத்து நின்றாள் பாரதி.

அண்ணா உன் பொண்டாட்டி சரியான அலைச்சல் கேஸ். மொபைல் கடைக்காரனோட ஒரு வருஷம் சுத்திக்கிட்டிருந்தா. அ’ப்புறம் எங்க ஜவுளிக்கடை மேனேஜரை வளைச்சுபோட்டா. போயும்... போயும்... பேசிக்கொண்டே போனவளை தடுத்து நிறுத்தினான் ஜகதீசன்.

நிறுத்துடி.... ஏதோ தெரிஞ்ச பொண்ணுன்னு உன்னை உள்ளை அழைச்சு வெச்சுபேசினா.... ஓவரா போறியே பாரதி, யாரை வேணும்னாலும் காதலிச்சுருக்கலாம். எத்தனை பேர் கூடவும் சுத்தியிருக்கலாம். இனி அவ என் பொண்டாட்டி அவள பத்தி எனக்கு நல்லா தெரியும். அவள பத்தி தப்பா பேசுன.. உன் வாய் வெத்திலைபாக்கு போட்டுக்கும். போடி வெளியே காட்டமாக அதே சமயம் தீர்மானமானக் குரலில்

அவளை விரட்டினான் ஜகதீசன்.பாரதி மீண்டும் ஒரு முறை காதல் வயப்பட்டாள். ஆனால் இந்த முறை நெஞ்சார உண்மையாக இறுதியாக.

நன்றி : மங்கையர்மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக