புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரகண தேவதை! Poll_c10கிரகண தேவதை! Poll_m10கிரகண தேவதை! Poll_c10 
75 Posts - 54%
heezulia
கிரகண தேவதை! Poll_c10கிரகண தேவதை! Poll_m10கிரகண தேவதை! Poll_c10 
46 Posts - 33%
mohamed nizamudeen
கிரகண தேவதை! Poll_c10கிரகண தேவதை! Poll_m10கிரகண தேவதை! Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
கிரகண தேவதை! Poll_c10கிரகண தேவதை! Poll_m10கிரகண தேவதை! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கிரகண தேவதை! Poll_c10கிரகண தேவதை! Poll_m10கிரகண தேவதை! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
கிரகண தேவதை! Poll_c10கிரகண தேவதை! Poll_m10கிரகண தேவதை! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கிரகண தேவதை! Poll_c10கிரகண தேவதை! Poll_m10கிரகண தேவதை! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கிரகண தேவதை! Poll_c10கிரகண தேவதை! Poll_m10கிரகண தேவதை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கிரகண தேவதை! Poll_c10கிரகண தேவதை! Poll_m10கிரகண தேவதை! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கிரகண தேவதை! Poll_c10கிரகண தேவதை! Poll_m10கிரகண தேவதை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரகண தேவதை! Poll_c10கிரகண தேவதை! Poll_m10கிரகண தேவதை! Poll_c10 
70 Posts - 53%
heezulia
கிரகண தேவதை! Poll_c10கிரகண தேவதை! Poll_m10கிரகண தேவதை! Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
கிரகண தேவதை! Poll_c10கிரகண தேவதை! Poll_m10கிரகண தேவதை! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
கிரகண தேவதை! Poll_c10கிரகண தேவதை! Poll_m10கிரகண தேவதை! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கிரகண தேவதை! Poll_c10கிரகண தேவதை! Poll_m10கிரகண தேவதை! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
கிரகண தேவதை! Poll_c10கிரகண தேவதை! Poll_m10கிரகண தேவதை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கிரகண தேவதை! Poll_c10கிரகண தேவதை! Poll_m10கிரகண தேவதை! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கிரகண தேவதை! Poll_c10கிரகண தேவதை! Poll_m10கிரகண தேவதை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கிரகண தேவதை! Poll_c10கிரகண தேவதை! Poll_m10கிரகண தேவதை! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கிரகண தேவதை! Poll_c10கிரகண தேவதை! Poll_m10கிரகண தேவதை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரகண தேவதை!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 11, 2013 9:14 pm

அந்த சிறுமியின் பெயர் ஜாஸ்மின். ஜாஸ்மின் என்றால் மல்லிகை என்று பொருள். மல்லிகை என்றால் அழகும், நறுமணமும் மிக்கது. ஆனால் அந்தப் பெயர் வைக்கப்பட வேறு காரணம் இருந்தது.

மருத்துவமனையில் அவள் பிறந்தவுடன் ஒரு ஆச்சர்யம் காத்தபிருந்தது. கருவிலிருந்து வெளிவந்த சில நாட்கள் எல்லா குழந்தைகளுமே சற்று வெளுத்த நிறமாய் இருப்பது இயல்புதான். ஆனால் அந்த இயல்பை தாண்டி குழந்தையின் நிறம் முற்றிலும் மாறுபட்டிருந்தது. முழு வெள்ளையாக... தலை முடி செம்பட்டையாக. வழக்கம் போல் தட்டு நிறைய வெற்றிலைப் பாக்கு வைத்து, ஸ்வீட் பாக்ஸுடன் பிரசவம் பார்த்த டாக்டர் பொன்மணிக்கு தந்தபோது, அதைப் பெற்றுக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தார்.
அப்போதுதான் குழந்தையின் நிறத்திற்கான காரணத்தை கூறினார்.

“அதாவது... மெலானிக் பிக்மெண்ட்ங்கிற சத்துதான் உடம்புக்கு நிறத்தைக் கொடுக்கிறது. அந்தக் குறைபாடு இருக்கிறதால உங்க குழந்தை வெள்ளை நிறமா பிறந்திருக்கு. ஆயிரத்தில் ஒரு குழந்தை இப்படி பிறக்கிறதுண்டு. இந்தப் பிரச்னையுடன் பிறக்கிற குழந்தைகள் கண்பார்வை குறைந்து, மூளை பாதிக்கப்படறது கூட உண்டு. அந்த அளவுக்குப் போகாம ரொம்ப நாள் நல்லா வாழறவங்களும் உண்டு. நல்ல வேளையா இது இரண்டாவது வகைதான். எல்லாம் இயற்கையின் செயல்... மகிழ்ச்சியா ஏத்துக்கங்க...’ என்று கூறினார்.

அந்த குழந்தையின் பெற்றோரான பாஸ்கரும் காயத்ரியும், குழந்தையை வீட்டுக்கு எடுத்து வந்தனர்.
அந்த குழந்தை மல்லிகைப்பூ நிறத்தில் இருந்ததால் “ஜாஸ்மின்’ எனப் பெயர் சூட்டினர்.

தொடரும்............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 11, 2013 9:17 pm

ஊரிலிருப்பவர்களும், உறவினர்களும் ஜாஸ்மினின் நிறத்தை சட்டென கிரகிக்க முடியாமல் திகைப்பாய்ப் பார்த்தனர். வெளியூரிலிருக்கும் காயத்திரியின் அம்மாதான் தொண தொணத்துக் கொண்டேயிருப்பாள்.
காயத்ரி, ஜாஸ்மினுக்கு தாய்பால் புகட்டும் போதும்கூட, “தாய்ப்பால் கொடுத்து முடிச்சதும் குழந்தையோட பால் குடிச்ச உதட்டை அழுத்தித் துடைச்சிரணும். இல்லைனா உதடு கருத்திடும்னு சொல்வாங்க. இது அப்படியாவது கருத்தா தேவலை. ஒரேடியா எல்லா இடமும் எழவெடுத்த வெள்ளையால்ல இருக்கு. அதுதான் அப்பவே சொன்னேன்’ என இன்னொரு நெட்டுருவை ஆரம்பிப்பாள்.

அவள் சொல்கிற இன்னொரு காரணம் மிகவும் விசித்திரமாய் இருக்கும்.
“ஒவ்வொரு புள்ளத்தாச்சியும் தன்னோட கர்ப்ப காலத்தில் ஒரு சந்திர கிரகண நாளையாவது சந்திப்பாள். அந்த சமயங்களில் காய்கறி நறுக்கக்கூடாது... காயம் படக்கூடாது. வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. நிலாவைப் பார்க்கக் கூடாது. கிரகணம் விட்ட பின்பு குளிச்சுட்டுத்தான் சாப்பிடணும். தவறினால் இப்படித்தான் குழந்தை பின்னம்பட்டு பிறக்கும். எங்க காலத்துல நாங்க இப்படித்தான் இருந்தோம். இந்தக் காலத்து கழுதை கேக்குதுகளாக? நான் அப்பவே படிச்சுப் படிச்சு சொன்னேன். கேட்டியா மூளி. இப்ப காலத்துக்கும் அழு...’ என்று திட்டுவாள்.

அவள் சொல்கிற கிராமத்து நம்பிக்கை நிஜமோ, கற்பனையோ. ஆனால், “வானத்தில் கிரகணம் நிகழும் நாட்களில் சில பாதிப்புகள் நிகழும்’ என விஞ்ஞானிகள் எச்சரிக்கவே செய்கிறார்கள்.
காயத்திரிக்கு கரு அமைந்த சில நாட்களிலேயே கிரகண நாள் வந்ததும் அதை பொருட்படுத்தாமல் இருந்ததும் நிஜம்தான். ஆனால் அந்த அதிர்வலைகளின் காரணமாகத்தான் தனக்கு, மெலானிக் பிக்மெண்ட் சத்துக் குறைவான குழந்தை பிறந்துவிட்டது என்றெல்லாம் அவள் நினைக்கவில்லை.
ஆனால் அவள் அம்மாவின் வாய் வார்த்தைகளினூடாக, ஊர் மக்கள் அதை நம்பினார்கள். பிறகு வந்த கிரகண நாட்களில் கர்ப்பிணிப் பெண்கள் உஷாராய் இருந்தார்கள்.

ஜாஸ்மின் வளர்ந்து சிறுமி ஆனாள்.
ஆனால் பெண் குழந்தைக்கே உரித்தான மெருகும் நளினமும் இல்லாதபடி அவளது நிறம் அவளைத் தனித்துக் காட்டியது. சருமத்தில் செம்முடிகள் பளபளத்தன. நகங்கள் சோகையாக இருந்தன. பேச்சும் குழறியது.

சிறு வயதான பெண்களுக்கு குழந்தைகளிடம் எப்படிப் பேசுவதென இங்கிதம் தெரிவதில்லை. ஜாஸ்மின் குளித்துவிட்டு வரும்போது, “இப்படி தோலை உரிச்ச மாதிரி எல்லா இடத்திலும் வெள்ளை கொழிச்சுக்கிடக்கு... நாளைக்கு எவன் கட்டுவான்... எப்படித் தொடுவான்?’
இப்படியாகப்பட்ட சொற்களின் அதிர்வுகள். ஜாஸ்மினைவிட காயத்ரியை அதிகமாக உலுக்கின. கன்றுக்குட்டியின் காயத்தை காகங்கள் கொத்துவது போல் வலித்தது. ஆனால் நாள்பட நாள்பட எல்லாம் மரத்துப் போயிற்று.

உள்ளூர் ஆரம்பப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்தாள். படிப்பில் சூட்டிகைதான். குண்டு குண்டு எழுத்துக்களால் அழகாக எழுதுவாள். காயத்ரிக்கு உதவியாக வீட்டில் நிறைய கைவேலைகள் செய்வாள்.
புதினா, சேமியா உப்புமா, சப்பாத்தி அவளுக்கு மிகவும் பிடித்த உணவு. அவளுக்காகவே வீட்டு வாசலில் புதினா செடிகள் வளர்த்தாள் காயத்ரி.

தினமும் மாலை நேரங்களில் - தெருவோரத்தில் இருக்கும் அந்தப் பெரிய புளிய மரத்தடியில் தான் ஊர் பிள்ளைகள் கூடி விளையாடும்.
ஜாஸ்மினும் ஓடிப்போய் கலந்து கொள்வாள்.

மேலே நட்சத்திர மினுங்கலோடு புளியம்பூக்கள் பூத்திருக்கும் மரத்தில் பறவைகளின் கீச்சொலியும், கீழே பிள்ளைகளின் சப்தங்களும் சேர்ந்து கானமாய் கேட்கும்.
காயத்ரி, வீட்டு ஜன்னல் வழியே பார்த்தால்கூட, தூரத்தில் நூற்றுக்கணக்கான பிள்ளைகள் மத்தியில் ஜாஸ்மின் விளையாடுவது தனி அடையாளமாய் தெரியும்.

இரவு ஜாஸ்மின் சாப்பிட்டு முடித்ததும், விளையாடிக் களைத்த அவளது கால்களை தன் மடிமேல் போட்டு, வெண்ணிறப் பிஞ்சு விரங்களுக்கு ஆசையுடன் மருதாணி வைத்து விடுவான் பாஸ்கர்.
ஊரில் தொட்டியத்து சின்னான் கோவில் திருவிழா வந்தது. ஊரே காப்புக் கட்டு, மாவிலைத் தோரணம், தீர்த்தவாரி, தாரை, தப்பட்டை என அமளி துமளிப்பட்டது.

அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்தும் மக்கள் குழுமியிருந்தனர். அன்றிரவு கிடாவெட்டு நிகழ்வு. நேர்த்திக் கடனுக்கு வெட்டுகிறவர்கள் தவிர, பூஜைக் கிடாய் என பொதுவாக ஒரு கிடா வெட்டுவார்கள்.
அன்றிரவு அதை வெட்டி, அங்கேயே பெரிய அண்டாவில் போட்டு சமைத்து, சாதத்தில் குழைத்து, “புடிச்சுக்கோ... புடிச்சுக்கோ’ என்று காவு சோறு வீசிவிட்டு, கோவில் அருகே இருக்கும் ஏரிக்கரையில் வைத்து மீதமுள்ள உணவை, எல்லோரும் அன்னதானமாய்ச் சாப்பிடுவார்கள்.

ஆனால் அதில் பாஸ்கர் மட்டும் கலந்து கொள்ளமாட்டான். வாயில்லா ஜீவன்களைக் கொல்வதற்கு எதிரான மனநிலை கொண்டவன். அதனால், அவனும், காயத்ரியும், ஜாஸ்மினும், கூட்டத்தை விட்டு சற்று ஒதுங்கி அமர்ந்து, பச்சரிசிப் பொங்கல், பழம், சர்க்கரை சேர்த்துக் குழைத்துச் சாப்பிட்டனர். வித்தியாசமான அந்தக் குடும்பத்தை ஊர்மக்கள் கரிசனத்தோடு பார்த்தார்கள்.

ஒவ்வொரு ஊரிலும் ஒருவராவது ஈரமனதோடு இருக்கத்தான் செய்கிறார்கள். அதுமட்டுமல்ல, ஊரில் தண்ணீர் பஞ்சமேற்பட்டபோது அரசுக்கு மனுமேல் மனு எழுதிப்போட்டு தண்ணீர்த்தொட்டி கட்ட ஏற்பாடு செய்தது பாஸ்கர்தான்.

ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் இன்ன பிற அலுவலர்கள் சேர்ந்து ஒரு சின்னஞ்சிறு தண்ணீர்த் தொட்டி கட்டி தந்துவிட்டு, “மதிப்பீடு ஐந்து லட்சம்’என்று கொட்டை எழுத்தில் எழுதி வைத்துவிட்டுப் போனது வேறு விஷயம்.

இன்று ஊரெங்கும் வீடு வீடாகத் தண்ணீர் நீர்க்கோடாக ஊடுருவிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. “நல்ல மனம் கொண்ட பாஸ்கர், எந்தக் குறையுமின்றி நன்றாக வாழ வேண்டும்’ என இந்த திருநாளில் சிலர் நினைத்துக் கொண்டனர்.

தொடரும்............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 11, 2013 9:18 pm

அன்று காலை நேரம்.

கறுத்திருந்த மேகம் தண்ணீர்த் துளிகளைப் பிரசவித்தது. சிறு தூறலாய் ஆரம்பித்து, “ஹோ’வென கொட்டத் தொடங்கியது. புளிய மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள், புளியம்பூக்கள் மிதக்கும் சகதியில் சிதறி ஓடினார்கள். அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஜாஸ்மினும் ஓடினாள்.
அவரவர் வீட்டுக்கு ஓடுகிற துரிதகதியில் சிட்டாய்ப் பறந்து கொண்டிருந்த வேளையில்... மேற்கேயிருந்து வேகமாய்வந்து கொண்டிருந்த மாலை நேர பால்வேன் ஒன்று, திடீரென ஜாஸ்மின் மேல் மோதிவிட, ஒரு பொம்மைபோல் மேலே போய் கீழே வந்து விழுந்தாள்.

மழை கடுமையாய் வலுத்துக் கொண்டது. சகதி, ரத்தமாகி வழிந்து கொண்டிருந்தது. தகவலறிந்து பாஸ்கரனும், காயத்ரியும் மற்ற சிலரும் பதறியடித்துக் கொண்டு ஓடிவந்தார்கள்.
அதிவேகமாய் ஊரிலிருந்த ஒருவரின் காரைக் கிளப்பி, ஜாஸ்மினைத் தூக்கிப் போட்டுக்கொண்டு மருத்துவமனைக்குப் பறந்தார்கள். இரண்டு நாட்கள் கோமா நிலையில் இருந்த ஜாஸ்மினின் உயிர், நினைவு திரும்பாமலே பிரிந்துவிட்டது.
பாஸ்கரனும், காயத்ரியும் தலையிலடித்துக் கொண்டு அழுதார்கள்.
சாஸ்திரப்படி கர்ம நியமங்கள் நடத்தப்பட்டன.

பாஸ்கரும், காயத்ரியும் கண்கலங்கி அமர்ந்திருந்தனர். ஜாஸ்மினின் பாடப் புத்தகங்கள், விளையாட்டு பொம்மைகள், வகை வகையான செருப்புகள், துணிமணிகள், புதினா செடிகள் மற்றும் மருதாணிக் கொழுந்துகள் தங்கள் தேவதைகள் இழந்து வெறுமை பூத்துக் கிடந்தன.
இந்த அகன்ற வெளிக்காற்றில் அவளது சின்னஞ்சிறு உயிரும், மனசும் எங்கே சென்றது என எண்ணும்போது அந்தப் பரிதவிப்பும், பதிலற்ற சூனியமும் பெற்றோரை நடுக்கமுறச் செய்தது. பாரம் மொத்தமாய் நெஞ்சு அழுத்தியது.

துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள் மெள்ள கிளம்பிச் செல்ல ஆரம்பித்தார்கள். “போனதே நல்லாதாப் போச்சு! அதுக்ம். கஷ்டம். என் மவளுக்கும் கஷ்டம்’ என்று காயத்ரியின் அம்மாவே சொன்னாள். நெருங்கிய உறவினர்களில் சிலர் அருகே வந்து ஆறுதல் சொன்னார்கள்.
அதில் ஒருவர் பாஸ்கரின் தோளைத் தொட்டு, “பாஸ்கர்... நாங்க ஒண்ணு சொன்னா நீ தப்பா நினைக்கக்கூடாது...’ என ஆரம்பித்து நிதானமாய் சொல்லத் தொடங்கினார்.
“போனா போகட்டும்னு மனச தேத்திக்கப்பா.

இவ்வளவு நாளும் இந்த லூக்கோ டெர்மா குழந்தையை, எல்லாரும் வேடிக்கை பொருளா பார்த்ததையும், இரக்கப்பட்டதையும் மறுக்க முடியாது. சிலர் கேலி கூட செஞ்சிருப்பாங்க. பரிதாபத்திற்குரியவர்களா இருக்கிறது மிகக் கொடுமையான அனுபவம். ஒவ்வொரு நல்லது கெட்டதுக்குப் போகும் போதும் இத்தகைய விசாரிப்புகள் உங்களை எப்படியெல்லாம் சங்கடத்தில் தவிக்க வைத்திருக்கும். உள்ளுக்குள் வலிச்சிருக்கும்... காலத்துக்கும் இந்த நிலைதான் தொடர்ந்திருக்கும்.

நாளைக்கு இந்தக் குழந்தை பெரிசானாலும் அவளால நார்மலா வாழ்க்கை வாழ முடியுமா? ஒருத்தன் கையில பிடிச்சுக் கொடுக்க முடியாது. பணத்துக்காக வேணா ஒரு பயலைப் பிடிக்கலாம்... ஆனா, பணத்துக்காக வர்றவனால பயனும் இல்லை. காலத்துக்கும் சுமைதான். இதையெல்லாம் நினைச்சுப் பார்க்காம இருக்க முடியாது. இதுதான் யதார்த்தம்... பாதில வந்தது பாதில போச்சுன்னு நினைச்சுக்கிட்டு எல்லாத்தையும் மறந்துருங்க... இன்னொரு நல்ல குழந்தையா பெத்துக்கிட்டு சந்தோஷமா இருங்க... இதுதான் சரி...’ என்று கூறி கிளம்பினார்.

அது உறவினர்கள் கருத்து மட்டுமல்ல. ஊர் ஜனங்களின் கருத்தாகவும் இருந்தது.
இவ்வளவு நாளும், பாஸ்கருக்கும், காயத்ரிக்கும் இருந்த ஒரு குறை, களங்கம் தீர்ந்தது என நினைத்திருந்த ஊர் மக்களுக்கும், உறவினர்களுக்கும் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது.
சில மாதங்கள் கழித்து மீண்டும் இவர்கள் வீட்டில் வெள்ளை நிறத்தில் லூக்கோ டெர்மா குழந்தையின் சஞ்சாரம் தெரிந்தது. வியந்து போனவர்கள் வீட்டிற்கு வந்து கேட்டார்கள்.
புன்னகையோடு வரவேற்ற பாஸ்கரும், காயத்ரியும் கூறினார்கள்.

“நீங்க வேணா ஜாஸ்மினை ஒரு குறையா பார்த்திருக்கலாம். ஆனா நாங்க அவளை இயற்கை கொடுத்த ஒரு அதிசய வரமாய்தான் நினைச்சோம். இப்போ அவ பிரிவை தாங்க முடியலை... நேத்திக்கு ஜாஸ்மினோட பிறந்த நாள்ங்கிறதால அனாதை ஆசிரமத்திற்கு உணவு வழங்கப் போயிருந்தோம். அங்கே லுக்கோடெர்மாவால பாதிக்கப்பட்ட ஒரு பெண் குழந்தையைப் பார்த்தோம்... ஜாஸ்மின் நினைவாய் அந்தக் குழந்தையை வளர்க்கலாம்னு எடுத்துக்கிட்டு வந்துட்டோம்’ என்ற காயத்ரி அந்த குழந்தையைக் கொஞ்சத் தொடங்கினாள். கிராம மக்கள் அந்த தம்பதியின் உயர் குணத்தை எண்ணி வியந்து போய் நின்றார்கள்.

அப்போது உள்ளே சென்று வெளியே வந்த பாஸ்கரின் கையில் இனிப்புகள்.
“இந்தாங்க ஸ்வீட் எடுத்துக்கங்க...’
அந்த இனிப்பு, நாக்கில் மட்டுமல்ல; அவர்களது மனதிலும் இனிக்கத் தொடங்கியது!

நன்றி: மங்கையர்மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக