புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-2) Poll_c10 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-2) Poll_m10 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-2) Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram

3 Posts - 27%
mohamed nizamudeen

2 Posts - 18%
VENKUSADAS

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-2)

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Sep 08, 2013 12:50 am

[You must be registered and logged in to see this image.]
உலக மொழிகளிலேயே அதிகமான சொற்கள் கொண்டது தமிழ் மொழி. பழங்காலத்தில் தமிழன் அப்போதிருந்த வாழ்வியல் மற்றும் நுட்பவியல் சுழலில் அழகான தமிழ் சொற்களை உருவாக்கியுள்ளார்கள். அதுவும் ஒவ்வொரு சூழலுக்கும், பண்புக்கும், இடத்திற்கும், பயன்படும் முறைக்கும் ஏற்றவாறு ஒரே பொருள் கொண்ட பல சொற்களை பயன்படுத்தி இருக்கிறார்கள்.எடுத்துகாட்டாக [You must be registered and logged in to see this link.] என்ற விலங்கை சுமார் 170 பெயர்களில் அழைக்கிறது நம் தமிழ். இதுபோல் பல சொற்களை சொல்லலாம். தற்போது அன்றாடம் புதுபுது சொற்கள் மற்ற மொழிகளில் வந்துகொண்டிருக்க அவைகளுக்கு சரியான ஒரு தமிழ் சொற்களை உருவாக்கமுடியாமலும், 20 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கியிருக்க வேண்டிய சொற்களுக்கு இன்னமும் சொல்லாக்கம் செய்துவருகிறோம். அவ்வாறு உருவாக்கப்படும் சொற்களை வழக்கத்திற்கு கொண்டுவர பல ஆண்டுகாலம் காத்திருக்க வேண்டியுள்ளது. மின்சாரம் என்ற செல்லே நடைமுறைக்கு வர 24 ஆண்டு காலம் ஆனது. இதுதான் நமக்கும் நம் முன்னோர்களுக்கும் உள்ள வித்தியாசம்.எப்போது ஆங்கிலேயர் நம் மண்ணில் காலடி வைத்தார்களோ அப்போதே நாம் மட்டுமில்லை நம் மொழியும் அடிமைப்பட்டு விட்டது. நமக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது, தமிழ் இன்னமும் அயல் மொழிக்கு அடிமைப்பட்டு கிடக்கிறது.
சொல்லாக்கம் என்பது ஒரு மொழியின் மரபையறிந்து, தேவைப்படின் மரபை மீறியும், ஏற்கெனவே உள்ள சொல்லைத் திருத்தியோ, பதுக்கியோ புதுச்சொல்லாக உருவாக்குதல் என்று வரையறுக்கலாம். இன்றைய அறிவியல் தொழில் நுட்பமும் பல்வேறு துறைகளும் நாளும் வளர்ந்து வரும் சூழலில், அளவிட இயலாதவாறு புதிய சொற்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இந் நெருக்கடியான சூழல், தமிழில் சொல்லாக்க முயற்சியில் முனைந்திருப்பவர்களுக்குச் சவாலாக உள்ளது. தகவல் வெள்ளத்தில் பெருகிவரும் பல்துறைத் தகவல்களுக்கேற்ப, சொல்லாக்கத்தில் தொடர்ந்து செயற்படும் வல்லுநர்கள், சொற்கள் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். சொற்களின் மூலங்கள் எப்படி அமைந்துள்ளன என்ற புரிதல் சொல்லாக்கத்தினை நுட்பமாகச் செய்திட உதவும். நன்றி : Tamilvu.org
மேலே உள்ள பதிவை பார்த்தோமேயானால் சொல்லாக்கம் பற்றிய இரண்டு முக்கிய கருத்துக்கள் விளங்கும்,
1) மொழி மரபு அறிந்து, தேவைபட்டால் மரபை மீறியும், ஏற்கனவே இருக்கும் சொல்லை திருத்தியோ அல்லது பதுக்கியோ புதிய சொற்கள் உருவாக்கலாம்.
2) பழந்தமிழ் சொற்களின் மூலம் எவ்வாறு அமைத்துள்ளது என்பது பற்றிய அறிவு புதிய சொல்லாக்கத்திற்கு பெரிதும் உதவி செய்யும்.
- மரபை மீறுதல் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டை சொல்கிறேன். ஆங்கிலத்தில் ISS என்றால் International Space Station என்பதின் சுருக்கமாகும். அதாவது அனைத்துலக விண்வெளி நிலையம் என்று பொருளாகும். இதை தமிழில் சொல்லாக்கம் செய்யும் போது அவிநி அல்லது அவினி என்று பெயர் வைக்கலாம்.அதாவது ஆங்கிலத்தில் சொற்களின் முதல் எழுத்தை கொண்டு புதிய சொல் உருவாக்குவது போன்று. இதுபோன்றதொரு மரபு நம் தமிழில் இருக்கிறதா/இருந்ததா என்று கண்டுபிடிப்பது கடினம். அப்படியே இல்லை என்றாலும் அதை நாம் பின்பற்றுவது ஒன்றும் தவறு இல்லை. இதை பின்பற்றி ஏற்கனவே ISS என்ற ஆங்கில சொல்லுக்கு [You must be registered and logged in to see this link.] என்ற பெயர் வைத்திருக்கிறார்கள். நான் இந்த சொல்லுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னரே சவிநி (சர்வதேச விண்வெளி நிலையம்) என்று பெயர் வைத்து அழகு பார்த்த ஞாபகம்.
- ஏற்கனவே இருக்கும் சொல்லை திருத்துதல் அல்லது பதுக்குதல் என்பதுக்கும் ஒரு எடுத்துக்காட்டை வைக்கிறேன். Technology என்ற ஆங்கிலசொல்லுக்கு தமிழில் தொழில்நுட்பம் என்று சொல்லுவோம். ஆனால் தற்போது சில மாற்றங்கள் கண்டு நுட்பியல் என்று அழைக்கபடுகிறது. (நன்றி- திரு ராம்கி [You must be registered and logged in to see this link.] . TECHNIC என்றால் நுட்பம் TECHNOLOGY என்றால் நுட்பியல் என்று இந்த வேர்ச்சொல் தொடர்பான பல சொற்களை சொல்லலாம்.
- பழந்தமிழ் சொற்களின் மூலம் அமைத்துள்ளது என்பது பற்றிய அறிவு தான் இந்த கட்டுரையின் மூல கருத்தாகும். இதை பற்றி பார்போம். அதற்கு முன் மனிதனின் பொதுவான இயல்பு ஒன்றை தெரிந்துகொள்ளவேண்டும் - பிள்ளைகளுக்கு பெயர் வைக்கும் முறையில் பார்த்தோமேயானால், யாருக்கும் தெரியாத, புரியாத, சொன்னால்/எழுதினால் அழகாக இருக்கும் , சிறியதாக உள்ள பெயரை தேடி தேடி வைக்கிறான். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் மனிதன் எது மாதிரி சொற்களை விரும்புகிறான் என்றால் 
1) இதுவரை யாரும் பயனபடுத்தாத சொல் 
2) யாருக்கும் புரியாத சொல்
3) எளிதில் உச்சரிக்க உகந்த சொல் 
4) குறைந்த சொல்நீளம் கொண்ட சொல்
5) உச்சரிக்க அழகாக இருக்கும் சொல் 
சொற்கள் உருவாக்கபட்டிருக்கும் நுணுக்கங்களை அல்லது மூலங்களை பற்றிய ஆராய்ச்சிக்கு ஆங்கிலத்தில் Word Morphology என்று பெயர் தமிழில் உருபனியல் என்று அழைக்கப்படுகிறது. Morphing என்றாலே மறைத்தல் என்று பொருள். புதிய சொற்களை உருவாக்க இரண்டுக்கு மேற்பட்ட சொற்களை மறைவான முறையில் (அதாவது பொருள் எளிதில் விளங்கா வண்ணம்) இணைத்து உருவாக்குவது தான் இந்த உருபனியல் (Morphology) முறையின் அடிப்படை தத்துவமாகும்.மறைத்து வைக்கும் விஷயங்கள் தான் முதலில் நம் கவனத்தை ஈர்க்கும். மனிதனின் இந்த மனதத்துவ பண்பை அறிந்ததாலே என்னவோ ஆங்கிலத்தில் இதற்க்கு Morphology என்று பெயர் வைத்துள்ளனர். தமிழில் இல்லையா என்று கேட்க வேண்டாம்,தமிழில் மட்டும் இல்லை உலக மொழிகள் அனைத்திலும் இந்த முறை கொண்டு தான் சொற்கள் குறிப்பாக வேர்சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ் சொற்களின் உருபனியல் முறைகளில் சிலவற்றை தெரிந்துகொள்ள சில சொற்களை இங்கு ஆதாரமாக வைக்கிறேன். இதனை தானா என கேட்க வேண்டாம், இவைகள் ஒரு மாதிரிகள் (Sample) தான். 
குதிரை, புசுனை, கரடி, துப்பாக்கி, பீரங்கி, துப்பாக்கி, அகடூரி(பாம்பு),கண்ணாடி, எண்ணெய், மூலதனம், முகவரி, கற்பு, நாற்காலி, மேசை , சைகை, புகுடி, புகுதி
இந்த சொற்களுக்கு என்ன பொருள்?, இதில் மூல சொற்கள் என்ன?, அந்த மூல சொற்கள் எப்படி மறைத்து வைக்கப்பட்டுள்ளது, இந்த சொற்களை உருவாக்கியது எப்படி?, என்று கேட்டால் நமக்கு சொல்ல தெரியுமா? - மீறி கேட்டால் என்ன சொல்லுவோம் 
குதிரை – என்றால் குதிரை என்போம் ... இல்லை ஒரு விலங்கு என்போம்.
கரடி - என்றால் அதுவும் ஒரு விலங்கு என்போம்.
பூசுனை - அது ஒரு வகையான காய்கறி என்று சொல்லலாம்.
துப்பாக்கி - என்றால் சுடும் கருவி என்போம்.
பீரங்கி - என்றால் பெரிய அளவில் இருக்கும் சுடும் கருவி என்போம்.
மேலும் இந்த சொற்களில் வேறு எதாவது பெருள் தெரிகிறதா? நிச்சயம் தெரியாது. இப்படி பெயரை வைத்து விளக்கம் சொல்லமுடியாத சொற்களுக்கு, சுருக்கமாக சொன்னால் நாம் படிக்கும் / பார்க்கும் சொற்களுக்கு எளிதில் பொருள் தெரியாவண்ணம் மூல சொற்களை மறைத்தும்/ஒளித்தும் வைத்து சொற்களை உருவாக்கும் முறைக்கு தான் உருபனியல் என்று பெயர். சரி மேலே சொன்ன சொற்களில் அப்படி என்ன மூல சொற்களை ஒளித்து வைத்துள்ளனர் என்று கேட்டால் இதோ பின்வரும் கட்டியலை பாருங்கள். 
சொல்

பகுப்பு

பொருள்

குதிரை

குதி + விரை = குதிரை

குதித்து விரைந்து செல்லும் விலங்கு

கரடி

கரம் + அடி = கரடி

கை போன்ற பாதம் உடைய விலங்கு

பூசுணை (பூசணி)

பூசு + சுணை(அரிப்பு பொருள்)       = பூசுணை

சுணை முள்ளால் பூசப்பட்ட காய்

பீரங்கி

பீரும் +அக்கி(நெருப்பு) = பீரங்கி

பீறிக்கொண்டு செல்லும் நெருப்பு

துப்பாக்கி

துப்பல் + அக்கி = துப்பக்கி (துப்பாக்கி)

ஆக்கியை துப்புதல்

அகடூரி(பாம்பு)

அகடு(வயிறு) + ஊரி=அகடூரி

வயிறால் ஊர்ந்து செல்லும் விலங்கு

கண்ணாடி

கண் + ஆடி(Glass) = கண்ணாடி

கண்ணால் பார்க்கும் ஆடி

எண்ணெய்

எள் + நெய் = எண்ணெய்

விதையில் எடுக்கப்படும் திரவம்

மூலதனம்

மூலம் + தனம்(பணம்) = மூலதனம்

மூல பணம்

முகவரி

முகம் + வரி (எழுத்து) = முகவரி

முதன்மையான அடையாள வரிகள்(எழுத்து)

கற்பு

கல் + பண்பு = கல்பு ( கற்பு )

கல் போன்ற பண்பு

நாற்காலி

நால் + கால் = நாற்காலி

நான்கு கால் கொண்ட இருக்கை 

மேசை

மே (மேல்) + சை(கட்டுதல்) = மேசை

உயரமாக கட்டப்படும் பொருள்

சைகை

அசை + கை = சைகை

கை அசைத்து சொல்லும் மொழி 

புகுடி

புகும் +அடி = புகுடி

புகும் இடம்

புகுதி

புகும் + பகுதி = புகுதி

புகும் பகுதி

ஈகை

ஈ + கை = ஈகை

ஈ -கொடுத்தல் கை - தன்னிடம் இருப்பது
இப்போது தெரிகிறதா ஏன் சொற்கள் சொல்லின் பொருளை நேரிடையாக சொல்லாமல் சுற்றி வளைத்து சொல்கிறது என்று, காரணம் மனிதனின் இயல்பு. சொல் என்பது முடிந்தவரை பயன்படுத்தும் உச்சரிக்கும் யாருக்கும் பொருள் விளங்காவண்ணம் இருக்க வேண்டும் அப்போது தான் அச்சொல் பேசுபவரின் மனதில் நிற்கும், எளிதில் பேச்சு வழக்கில் வரும். புதிய கண்டுபிடிப்புகளுக்கு புதிய சொல்லை தான் உருவாக்கவேண்டும், அதாவது வேர்ச்சொல். இந்த கூற்று அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும் உதாரணமாக
- புகைவண்டி என்ற சொல்லை சொல்லிபாருங்கள், புகைவண்டி என்பது இரண்டு சொற்களாக (புகை, வண்டி) தான் மூளைக்கு பொருள்படும். அதுவும் இந்த சொல் புகையை குறிகிறதா அல்லது வண்டியை குறிகிறதா என சிந்தித்து , பின்பு இது புகையை கக்கும் வண்டியை குறிக்கிறது என நமது அறிவு இறுதியாக எடுத்துகொள்ளும். ஆகா இந்த சொல்லை மூளை புரிந்துகொள்ள இரண்டு பொருள், ஒரு ஒப்பீடு, கடைசியாக புரிதல் என மூன்று செலுத்தங்களை(Process) கொண்டுள்ளது.
- புகைவண்டிக்கு பதில் சாரணம் என்று சொல்லிபாருங்கள், புதிதாக அதே வேளையில் எளிதில் நினைவில் வைத்து கொள்ளும்படி ஒற்றை சொல்லாக உள்ளது. அதுவும் இது தற்காலத்திய கண்டுபிடிப்பு அதற்கு புதிதாக சொல்லை உருவாக்கினால் தான் அந்த கண்டுபிடிப்பை சார்த்த மற்ற சொற்களை கொண்டுவர எளிதாக இருக்கும். இதில் ஒப்பிட்டு புரிதல் என்று செலுத்தங்களுக்கு (Process) வேலையே இல்லை. இது ஒருவகையில் மனிதனின் மனோதத்துவ அடிப்படையில் சரியான ஒன்று தான். நாம் அர்த்தமே தெரியாமல் பயன்படுத்தும் பல ஆங்கில சொற்கள் பலவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம்.

தொடரும்.....

பாகம்-1 க்கு [You must be registered and logged in to see this link.] சுடக்கவும்

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 08, 2013 5:10 pm

இது மிகவும் மிகவும் பயனுள்ள அறிவுப்பகுதி ராஜு. தொடருங்கள். நேரம் கிடைக்கும் போது அத்தனையும் படித்து விடுவேன். நல்ல பதிவுக்கு நன்றிகள் பல.
Aathira
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira

[You must be registered and logged in to see this link.]
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Sep 08, 2013 5:28 pm

தமிழறியப் பயன்தரும் பகுதி.

உங்கள் யாழ்பாவாணன்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Sep 08, 2013 8:52 pm

Aathira wrote:இது மிகவும் மிகவும் பயனுள்ள அறிவுப்பகுதி ராஜு. தொடருங்கள். நேரம் கிடைக்கும் போது அத்தனையும் படித்து விடுவேன். நல்ல பதிவுக்கு நன்றிகள் பல.
நன்றி அம்மா புன்னகை
நிச்சயம் உங்களை போன்றோரின் ஆலோசனைகளும்/ஊக்கங்களும் அவசியம் தேவை.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Sep 08, 2013 8:57 pm

yarlpavanan wrote:தமிழறியப் பயன்தரும் பகுதி.
நன்றி நண்பரே, அடுத்த பதிவில் நான் சொல்லும் மரபை கொண்டு நான் உருவாக்கிய சில சொற்களை பகிர்கிறேன்.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 08, 2013 9:45 pm

தமிழ் ஆராய்ச்சி வித்தகரா இருக்கீங்களே - தொடருங்கள் டெக்லஸ்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 09, 2013 2:56 pm

யினியவன் wrote:தமிழ் ஆராய்ச்சி வித்தகரா இருக்கீங்களே - தொடருங்கள் டெக்லஸ்
நன்றி தல புன்னகை

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 09, 2013 3:09 pm

சாரணம் கண்டு பிடித்த சாரதி பாஸ் நீங்க ,

 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-2) 3838410834  தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-2) 3838410834  தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-2) 3838410834 

[You must be registered and logged in to see this link.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 09, 2013 3:12 pm

பூவன் wrote:சாரணம் கண்டு  பிடித்த  சாரதி  பாஸ் நீங்க ,  

 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-2) 3838410834  தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-2) 3838410834  தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-2) 3838410834 
 
பூவை கொண்டு பாவை பிடிக்கும் பூவர் தானே நீங்கள் புன்னகை

நன்றி பூவன் புன்னகை

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 09, 2013 3:16 pm

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:சாரணம் கண்டு  பிடித்த  சாரதி  பாஸ் நீங்க ,  

 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-2) 3838410834  தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-2) 3838410834  தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-2) 3838410834 
 
பூவை கொண்டு பாவை பிடிக்கும் பூவர் தானே நீங்கள் புன்னகை

நன்றி பூவன் புன்னகை
சாரணம் சரியா தான் இருக்கு மாவிலைகள் வரிசையாக சேர்த்தால் தோரணம் ,
அதுபோல பெட்டிகளை வரிசையாக சேர்த்தால் சாரணம் ...

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக