புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுவும் மனிதனும் ! Poll_c10மதுவும் மனிதனும் ! Poll_m10மதுவும் மனிதனும் ! Poll_c10 
156 Posts - 79%
heezulia
மதுவும் மனிதனும் ! Poll_c10மதுவும் மனிதனும் ! Poll_m10மதுவும் மனிதனும் ! Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
மதுவும் மனிதனும் ! Poll_c10மதுவும் மனிதனும் ! Poll_m10மதுவும் மனிதனும் ! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மதுவும் மனிதனும் ! Poll_c10மதுவும் மனிதனும் ! Poll_m10மதுவும் மனிதனும் ! Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
மதுவும் மனிதனும் ! Poll_c10மதுவும் மனிதனும் ! Poll_m10மதுவும் மனிதனும் ! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
மதுவும் மனிதனும் ! Poll_c10மதுவும் மனிதனும் ! Poll_m10மதுவும் மனிதனும் ! Poll_c10 
3 Posts - 2%
prajai
மதுவும் மனிதனும் ! Poll_c10மதுவும் மனிதனும் ! Poll_m10மதுவும் மனிதனும் ! Poll_c10 
1 Post - 1%
Pampu
மதுவும் மனிதனும் ! Poll_c10மதுவும் மனிதனும் ! Poll_m10மதுவும் மனிதனும் ! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மதுவும் மனிதனும் ! Poll_c10மதுவும் மனிதனும் ! Poll_m10மதுவும் மனிதனும் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுவும் மனிதனும் ! Poll_c10மதுவும் மனிதனும் ! Poll_m10மதுவும் மனிதனும் ! Poll_c10 
321 Posts - 78%
heezulia
மதுவும் மனிதனும் ! Poll_c10மதுவும் மனிதனும் ! Poll_m10மதுவும் மனிதனும் ! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மதுவும் மனிதனும் ! Poll_c10மதுவும் மனிதனும் ! Poll_m10மதுவும் மனிதனும் ! Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
மதுவும் மனிதனும் ! Poll_c10மதுவும் மனிதனும் ! Poll_m10மதுவும் மனிதனும் ! Poll_c10 
8 Posts - 2%
prajai
மதுவும் மனிதனும் ! Poll_c10மதுவும் மனிதனும் ! Poll_m10மதுவும் மனிதனும் ! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மதுவும் மனிதனும் ! Poll_c10மதுவும் மனிதனும் ! Poll_m10மதுவும் மனிதனும் ! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மதுவும் மனிதனும் ! Poll_c10மதுவும் மனிதனும் ! Poll_m10மதுவும் மனிதனும் ! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மதுவும் மனிதனும் ! Poll_c10மதுவும் மனிதனும் ! Poll_m10மதுவும் மனிதனும் ! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மதுவும் மனிதனும் ! Poll_c10மதுவும் மனிதனும் ! Poll_m10மதுவும் மனிதனும் ! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மதுவும் மனிதனும் ! Poll_c10மதுவும் மனிதனும் ! Poll_m10மதுவும் மனிதனும் ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவும் மனிதனும் !


   
   
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Fri Aug 30, 2013 11:35 pm

மனித இனம் வளர வளர மதுவும் வளர்ந்துள்ளது .மதுவைத் தவிர்த்து மனித வரலாற்றை அறிய முடியாது . அது ,மனித இனத்தில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருக்கிறது .நெடுங்காலமாக கொண்டாட்டத்தின் அடையாளமாக மட்டுமே மது இருந்து வந்துள்ளது . காலப்போக்கில் மதுவின் பயன்பாடு விரிவடைந்து இன்று நம் சமூக அமைப்பையே மிகவும் மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும் ஒன்றாக மாறிவிட்ட சூழல் நாம் வாழும் காலத்தின் அவலம் . மற்ற வரலாற்றைப் போலவே மதுவின் வரலாறும் சுவாரசியமானது தான் .

' நாகரீகமும் புளிக்கவைப்பதும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதது ' என்றார் ஓர் அறிஞர் . காடு காடாக அலைந்த ஆதிமனிதன் விவசாயம் செய்யக் கற்றுக் கொண்டதன் பலனாக நிலையாக வாழ ஆரம்பித்தான் . அறுவடை செய்த தானியத்தை தண்ணீரில் ஊறவிட்டபோது அது புளித்தது தற்செயலாக நடந்த ஒன்று . அது தான் வெறித்தன்மையைக் கொடுத்த முதல் பானம். பீர் . முளைவிட்ட தானியத்தில் தண்ணீரை ஊற்றி ,சுடவைத்து புளிக்கவைத்தபோது பீரின் சுவை இன்னும் கூடி வெறித்தன்மையும் அதிகமாகியது ( பீர் தான் மனிதன் கண்டுபிடித்த முதல் பானம் என்பது எனக்கெல்லாம் ஆச்சரியமானது ).

பீருக்கு அடுத்தபடியாக மனிதன் கண்டுபிடித்த பானம் வைன் .பழச்சாறைப் புளிக்கவைத்துக் கிடைப்பது வைன் . வைனைக் காய்ச்சி வடிகட்டினால் கிடைப்பது பிராந்தி .பீரைக் காய்ச்சி வடிகட்டும்போது கிடைப்பது விஸ்கி .கரும்புச்சக்கையிலிருந்து வீரியமிக்க மது செய்ய்லாம் என்பதை 1657 -ல் ரம்புல்லியன் என்பவர் கண்டுபிடித்தார் . குடித்தவுடன் வெறிக்கச் செய்யும் அந்த மதுவின் பெயர் ரம் ஆனது .அடிமைகளைப் பிடிப்பவர்களுக்கு ரம் விலையாகத் தரப்பட்டது . ரம்மை உற்பத்தி செய்யும் அடிமைகளுக்கு சம்பளமும் ரம் .இப்படி மது உலகம் முழுக்க ஆளத் தொடங்கியது .

எத்தியோப்பியாவில் ஆடு மேய்ப்பவன் ஒருவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது சில ஆடுகள் ஒரு செடியின் காய்களைத் தின்று விட்டு துள்ளிக் குதிப்பதை அவதானித்தான் . அவனும் அந்த விதைகளைத் தின்று பார்த்தபோது புத்துணர்ச்சி உண்டானது .மனிதனை சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இயங்கவைக்கும் காபி பிறந்த கதை இது . 4700 ஆண்டுகளுக்கு முன்னர் சீனப் பேரரசர் ஷென் நுங் காட்டிலே தண்ணீர் கொதிக்கவைத்துக் கொண்டிருந்த போது சில இலைகள் காற்றில் அடிபட்டு நீரில் விழுந்தன . அந்த நீரை அரசர் பருகியபோது புத்துணர்வு பெற்றதுபோல உணர்ந்தார் . அப்படிப் பிறந்தது தான் தேநீர்.

சீனாவின் தேயிலை ஆட்சியை முறியடிக்க பிரிட்டன் முடிவு செய்தது . இந்தியாவில் அதை எங்கே வளர்க்கலாம் என ஆராய்ச்சி செய்தபோது அஸ்ஸாமில் ஏற்கனவே தேயிலை காட்டுச்செடியாக வளர்ந்தது தெரியவந்தது . இந்தியாவில் தேயிலை உற்பத்தி ஆரம்பமானது . இன்று உலக அளவில் தேயிலை உற்பத்தியில் இந்தியா முதல் இடம் ( 23% ) .இவ்வாறு தேயிலை உற்பத்தி செய்ய எவ்வளவு காடுகளை அழித்தார்களோ ? 1886 ம் ஆண்டு பெம்பர்டன் என்ற அமெரிக்கர் தலைவலிக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார் . அவருடைய முயற்சிகள் எல்லாமே தோல்வியில் முடிந்தாலும் அவர் தளராது பல்வேறு விதமான ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார் . ஒரு நாள் ,தென் அமெரிக்காவில் கிடைக்கும் கொக்கோ இலை
(உண்ணும் போது மயக்கம் தருவது ), மேற்கு ஆப்ரிக்காவின் கோலாநட் ( இதுவும் போதைப் பொருள் தான் ) இவை இரண்டையும் சேர்த்து ஒரு பழுப்பு நிற பானத்தைத் தயாரித்தார் .அது தான் ' கொக்கோ கோலா '.

பீர்,வைன்,பிராந்தி,விஸ்கி,காபி,தேநீர் ,கொக்கோ கோலா இந்தப் பானங்களின் கதையைப் பற்றி தமிழ் மொழியின் ரசவாத எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ,ஆகஸ்ட் "உயிர்மை " மாத இதழில் 'ஆறு கோப்பைகள் ' என்ற பெயரில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதிலிருந்து சில பகுதிகளை மேலே குறிப்பிட்டுள்ளேன் . அ.முத்துலிங்கம் அவர்களின் எழுத்துச் சுவை அவ்வளவு ருசியானது . அந்தச் சுவையை நீங்களும் ருசிக்க அவரது எழுத்துக்களை வாசியுங்கள் ; இடைவிடாமல் ஆச்சரியங்களும் ,புதுமைகளும் கிடைத்துக் கொண்டே இருக்கும் .

உலகில் மனிதன் வாழும் அனைத்து இடங்களிலும் பல விதமான பானங்கள் அருந்தப்படுகின்றன. அவர்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப அந்த பானங்களின் தன்மை இருக்கும் . உலகமயமாக்கல் காரணமாக இன்று எந்தப் பானமும் எங்கு வேண்டுமானாலும் கிடைக்கிறது ;அருந்தப்படுகிறது .வலுத்தது நிலைக்கும் என்பது இந்தப் பானங்களுக்கும் உண்டு . ஆங்கிலேயர் இந்தியாவின் மீது படையெடுக்காமல் இருந்திருந்தால் இந்தியாவில் இவ்வளவு பானங்கள் இருந்திருக்காது .

மனிதன் குழுவாக வாழ ஆரம்பித்த போதே மதுவின் பயன்பாடு தொடங்கிவிட்டது .காலம் சுழல சுழல மனிதனின் பெருக்கத்தைப் போல மதுவும் பெருகிவிட்டது .புளிக்க வைக்கும் எந்த உணவிற்கும் ஒரு வித போதை இருக்கும் போல .இரவில் மிச்சமான சாதத்தில் உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டு காலையில் எழுந்து அதைக் குடித்தால் கள் குடிப்பது போல் இருக்கும் . ஆனால் , இது நம் வயிற்றுக்கு மிகவும் நல்லது .சென்னைப் பகுதியில் சுண்ட கஞ்சி என்ற பானம் ,இவ்வாறு புளிக்க வைப்பதன் மூலமே தயாரிக்கப்படுகிறது .

இன்றைய சூழலில் கலாச்சார பானங்கள் அழிவைச் சந்தித்து வருகின்றன . கலாச்சாரக் குடிதாங்கிகள் இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை . ஜாதி ,மதம் மட்டும் முக்கியமாய்த் தெரிகிறது இந்தக் குடிதாங்கிகளுக்கு . தமிழ்நாட்டில் அருந்தப்பட்ட உள்ளூர் பானங்களுக்கு மாற்றாக விதவிதமான நிறங்களில் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் அயல்நாட்டு குளிர் பானங்கள் ,மதுபானக் கடைகளில் விற்கப்படும் பலவிதமான மதுபானங்கள் (இலவசங்களின் வருமானம் ) மட்டுமே மக்களுக்கு கிடைக்கின்றன . மிஞ்சி நிற்கும் சில கலாச்சார உள்ளூர் பானங்கள் ஜிகர்தண்டா,நன்னாரி சர்பத்,பன்னீர் சோடா ,பொவண்டோ ,காதலோ....இளநீர் ( பணப் பேய்களிடமிருந்து தப்பித்த ஒரே பானம் , விலை மட்டும் இடத்திற்கு இடம் மாறுபடுவதால் மக்கள் தொடர்ந்து இளநீர் குடிக்கத் தயங்குகின்றனர் .விலை எவ்வளவாக இருந்தாலும் தமிழகத்திற்கென்று பொதுவான விலை நிர்ணயிக்கலாம் !) . தண்ணீர் ( தண்ணீரையும் பானங்கள் வரிசையில் சேர்க்கும் நிலைக்கு கொண்டுவந்துவிட்டார்கள், படுபாவிகள் ! பெட்ரோல் ,டீசல் போல தண்ணீரையும் மாற்றி விட்டார்கள் .அடுத்த பெரிய வணிகம் தண்ணீர் வணிகம் தான் . இன்று எண்ணைக் கிணறு வைத்திருப்பவன் பெரிய ஆள்,நாளை தண்ணீர்க் கிணறு வைத்திருப்பவன் தான் பெரிய ஆள் ).

மதுபானங்கள் வரவிற்கு முன்பு கள் அதிக அளவில் பயன்பாட்டில் இருந்துள்ளது .இரண்டு விதமான கள் இருக்கின்றன .தென்னங்கள் மற்றும் பனங்கள் . இயற்கையான மதுபானங்கள் என்று இவற்றை அழைக்கலாம் . அரசே மதுக்கடைகளை நடத்தும் சூழலில் கள் இறக்க தடை இருப்பது முரணான விசயமாக இருக்கிறது .கையில் கிடைப்பதை எல்லாம் போட்டு சாராயம் காய்ச்சுவார்கள் போல , பல நேரங்களில் நல்ல சாராயமாக இருப்பது மரணங்கள் நிகழும் போது வெளிச்சத்திற்கு வந்து கள்ளச்சாராயமாக மாறிவிடுகிறது . இன்று சாராயம் காய்ச்சுவது முற்றிலும் தடுக்கப்பட்டது போலவே தெரிகிறது .இன்று சாராயத்தினால் மரணங்கள் நிகழ்வது நின்று போனாலும் மதுவினால் சாராயத்தை விட அதிக மரணங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன .

எந்த பானமும் பானமாக இருக்கும் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை ,அது பழக்கமாக மாறும் போது தான் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது .எந்த பானமும் அது தேநீர் ,காபியாக இருந்தாலும் சரி மதுவாக இருந்தாலும் சரி அளவோடு அருந்தினால் எந்தப் பாதிப்பும் இல்லை . தேநீர் மற்றும் காபி அதிகமாக அருந்துவதால் உண்டாகும் பாதிப்புகளை விட மது அதிகமாக அருந்துவதால் உண்டாகும் சமூக பாதிப்புகள் அதிகம் .

ஒரு மனிதன் புகைப்பிடிப்பதால் அவனுக்கு மட்டுமே பாதிப்பு அதிகம் ,மற்றபடி அந்தப் புகையைச் சுவாசிக்கும் வேறு மனிதர்களுக்கு உடல்ரீதியான பாதிப்புகள் இருக்கவே செய்யும் .ஆனால் புகைப்பிடிப்பதால் பெரிய அளவில் சமூகப்பாதிப்புகள் இல்லை ( அதிக பணத்தை புகைப்பிடிக்க செலவு செய்வதால் குடும்ப பாதிப்புகள் இருக்கலாம்). மதுவினால் குடிப்பவருக்கு உடல்ரீதியான பாதிப்புகள் அதிகம் .அதைவிடவும் அந்த பழக்கத்தால் ஏற்படும் சமூகப் பாதிப்புகள் அதிகம் .அடுத்த மனிதனைப் பாதிக்காத எந்தப் பழக்கமும் தவறில்லை .அடுத்த மனிதனைப் பாதிக்கும் எந்தவொரு செயலுக்கும் சமூக அமைப்பில் இருக்கும் மனிதன் பதில் சொல்லியே ஆக வேண்டும் .

சமீப காலமாக மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் அதிகரித்துள்ளன . அதுவும் தமிழகத்தில் நிலமை மிகவும் மோசம் . மதுவை வணிகரீதியாக பயன்படுத்துவதன் விளைவு தான் இது . உணவுவிடுதி போல தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. சாராயத்தை ஒழிப்பது தான் நோக்கம் என்றால் ஊருக்கு ஒரே ஒரு டாஸ்மாக் கடை திறக்க வேண்டியது தானே. இதில் ஒவ்வொரு மாவட்டமும் மாதம் இவ்வளவு ரூபாய்க்கு மது விற்க வேண்டும் என்ற மாத இலக்கு வேறு. எல்லா வகையிலும் மது குடிப்பதை ஊக்கப்படுத்திவிட்டு " மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு " என்று பிரச்சாரம் செய்கிறார்கள் .

மதுவை யார் குடிக்கலாம் ? வயது வந்தவர்கள் தான் குடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது . தொலைக்காட்சியிலும் ,சினிமாவிலும் மதுக் குடிப்பதை நேரடியாக காட்டுகிறீர்கள் .இதை தொடர்ந்து பார்த்து வளரும் குழந்தைகள் 18 வயதிற்கு முன்பே மது குடிக்கப் பழகிவிடுகின்றனர் .ஆண் ,பெண் உடலை ,உடல் உறவை ஒரு வரம்பிற்குள் தான் காட்ட வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது . மதுக்குடிப்பதைக் திரையில் காட்டுவதில் எந்தக் கட்டுப்பாடும் ("மது உடல் நலத்திற்கு தீங்கானது " என்ற ஒரு வரி போடுவதைத் தவிர ) கிடையாது . மது என்ன எல்லோரும் குடிக்கும் பானாமா? "வயது வராதவர்கள் பார்க்க வேண்டாம் " அடைமொழியுடன் ஆண் பெண் உடலுறவு காட்சியை நேரடியாக திரையில் காட்ட வேண்டியது தானே .

நாட்டில் கற்பழிப்பு அதிகமாக நடக்கிறது என்ற காரணத்திற்காக வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகளைப் போல சிவப்பு விளக்கு பகுதியை உருவாக்க வேண்டியது தானே .இதிலும் வருமானம் கிடைக்கும் இதை வைத்து இன்னும் மக்களை சோம்பேறியாக்க ரேசன் கடைகளில் உணவுப் பொருளுடன் மாதம் மாதம் ஒரு தொகையும் கொடுக்கலாம் .நம்ப முடியாது ,ஒரு வேளை இது நடந்தாலும் நடக்கும் ! அவ்வளவு கேடு கெட்ட அரசியல்வாதிகள் நம் நாட்டில் இருக்கின்றார்கள் . அதிகளவு மது விற்பதை சாதனை என்று கொண்டாடும் ஜென்மங்கள் அல்லவா நம் அரசியல்வாதிகள் .

வாழ்க்கையே ஒரு கொண்டாட்டம் தான் .ஒவ்வொருவருக்கும் இருப்பது ஒரு வாழ்க்கை தான் அதை எல்லாவிதத்திலும் கொண்டாட எல்லொருக்கும் உரிமை உண்டு .இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை .மது என்பது கொண்டாட்டத்திற்கான பானம் . மது அருந்துவதில் எந்தத் தவறும் இல்லை . மனித இன வரலாறு முழுவதும் மதுவிற்கு ஒரு பெரிய பங்கு இருக்கிறது .இன்றும் உணவின் போது உட்கொள்ளும் பானாமாக மது உலகெங்கும் பல நாடுகளில் ஆண்கள் மற்றும் பெண்களால் அருந்தப்படுகின்றன . ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் மதுக்கடைகள் இருக்கின்றன மதுவினால் உண்டாகும் சின்ன சின்ன தகராறுகளும் ( கிரிக்கெட் வீரர்கள் (வீரர்கள்!) அவ்வப்போது குடிபோதையில் தகராறு செய்து மாட்டிக் கொள்கிறார்கள் ) இருக்கின்றன. ஆனால் , நம் நாட்டைப் போல பெரிய அளவிலான சமூகப்பாதிப்புகள் இருகின்றனவா என்று தெரியவில்லை .

போதையில் நண்பனைக் கொல்லுதல் , தாய்,தந்தை,மனைவியைக் கொல்லுதல் , பணத்திற்காக யாரை வேண்டுமானாலும் கொல்லுதல், வாகனத்தை தாறுமாறாக ஓட்டி தானும் செத்து மற்றவர்களையும் சாகடித்தல் .மற்றவர்களுடன் வீண் சண்டைக்குப் போதல், அதிக குடியால் தன் குடும்பத்தை தவிக்க விட்டு செத்துப் போதல் , குடும்பத்திற்காக பெண் சம்பாதிக்கும் பணத்தையும் புடுங்கி குடித்தல் , குடித்துவிட்டு பொதுமக்களிடமும் தகராறு செய்தல் ;பெண்களைத் தொந்தரவு செய்தல், குடித்துவிட்டு வந்து பொண்டாட்டி பிள்ளைகளை அடித்தல் என்று மது பழகத்தால் உண்டாகும் சமூகப்பாதிப்புகள் நம் நாட்டில் மிகவும் அதிகம் .மற்ற நாடுகளில் மதுவினால் இவ்வளவு பாதிப்புகள் உண்டாகின்றனவா என்று தெரியவில்லை .

பொதுவாக உணவாக இருந்தாலும் மதுவாக இருந்தாலும் நாம் வாழும் சூழலுக்கு எது பொருந்துமோ அதை உட்கொள்வதுதான் நம் உடலுக்கு நல்லது . இன்றைய உலக வணிகமயமாக்கத்தின் விளைவாக எந்த நாட்டு உணவும் ,பானமும் எங்கும் கிடைக்கின்றன .நாம் பூமியில் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் நம்மை வைத்து பணம் சம்பாதிக்க வித விதமான தளங்களில் வித விதமான பொய்களுடன் ஒரு மாபெரும் கூட்டம் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது . மது குடித்தல் என்பது சமூகத்திற்கு கேடு உண்டாக்கும் ஒரு பழக்கமாக மாறுவதை தடுக்காமல் மது குடிப்பதை ஊக்கப்படுத்தும் ஒரு அரசு இருக்கும் வரை சமூகக் குற்றங்கள் அதிகரிக்கவே செய்யும் .

மதுவும் மனிதனும் - பிரிக்க முடியாதவை !

மதுப்பழக்கமும் மனிதனும் - பிரிக்க முடிபவை !

பின்குறிப்பு :
இந்தக் கட்டுரையும் மதுவைப் போல நீண்ட நாட்களாக ஊர வைத்து எழுதியது தான் .

[You must be registered and logged in to see this link.]

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Aug 30, 2013 11:53 pm

மதுப்பழக்கமும் மனிதனும் - பிரிக்க முடிபவை !

இது ஓகே ஆனால் மது அடிமைகள் பிரிக்க நினைப்பதில்லை அது தான் கொடுமை




[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக