ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது? எங்கே புகார் செய்வது?

3 posters

Go down

உணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது? எங்கே புகார் செய்வது? Empty உணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது? எங்கே புகார் செய்வது?

Post by சிவா Sun Sep 01, 2013 8:56 am

உயிர் வாழ்வதற்காகவும் உடல் நலம் பேணுவதற்காகவும் நாம் உண்ணும் உணவு பாதுகாப்பானதாக இல்லை என்றால்...? எவ்வளவு விபரீதம்!

“உணவுக் கலப்படத் தடைச் சட்டம்’ 1954 நீக்கப்பட்டு ஆகஸ்டு 2011 முதல் “உணவுப் பாதுகாப்புத் தரச்சட்டம்’ 2006 அமுலுக்கு வந்துள்ளது, இச்சட்டத்தில் “கலப்படம்’ என்ற சொல் நீக்கப்பட்டு பாதுகாப்பற்ற உணவு பற்றிய விளக்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், “கலப்படம்’ என்ற சொல்லுக்கான விளக்கம் புதிய சட்டத்தில் மறைமுகமாகக் கையாளப்படுகிறது.

உணவுக் கலப்படம் பற்றிய சட்ட விளக்கம்: உணவு பொருளில் கலப்படம் செய்யப்படும் நோக்கத்தில் சேர்க்கப்பட்ட அல்லது தெரியாமல் சேர்ந்த பொருட்கள் கலப்பட பொருட்கள் எனப்படும்.

உணவு பாதுகாப்புத் தரச் சட்டத்தில் பாதுகாப்பற்ற உணவு என்பதற்கு பின்வரும் விளக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

* தரம் குறைந்த விலை குறைந்த பொருட்கள் முழுமையாகவோ, பகுதியாகவோ உணவு பொருளின் தரத்தை குறைக்கும்படி சேர்க்கப்பட்டிருந்தால்

*உணவில் உள்ள பொருட்கள் முழுமையாகவோ பகுதியாகவோ பிõருட்கள் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டு, கட்டப்பட்டு சுகாதாரமற்ற முறையில் பாதுகாக்கப்பட்டிருந்தால் அதனால் தரம் குறைந்து, சுகாதாரக் கேடு ஏற்பட்டால்

கலப்படத்தால் ஏற்படும் கேடுகள்: சில கலப்பட உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் நம் உடல்நலம் பாதிப்படையும்.

பால் கெட்டுப்போகாமல் இருக்க சிலரால் யூரியா, சோடியம் கார்போனேட், சோடியம் ஹைடிராக்ஸைட், பார்மால்டிஹைட், ஹைடிரோஜன் பெராக்ஸைட் ஆகியவை சேர்க்கப்படுவதால் குடலில் அரிப்பு ஏற்பட்டு பாதிப்பு உண்டாகும். உணவு வண்ணங்கள் , நறுமணங்கள், பதனப் பொருட்கள், ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் போன்றவை அதிக அளவில் சேர்க்கப்பட்டாலும் அல்லது அவை அனுமதிக்கப்படாதவையாக இருந்தாலும் உடல் நலம் பாதிப்படையும்.

உணவில் அனுமதிக்கப்படாத வண்ணங்களான மெடானில் எல்லோ, ரோடமின் - பி.ஆரமின், ஆரஞ்சு 2, மாலசைட் கிரீன் ஆகியவை கல்லீரல் , சிறுநீரகம், எலும்பு, நுரையீரல் ஆகியவற்றை தாக்கி குறைப்பிரசவம், மலட்டுத்தன்மை போன்றவற்றை ஏற்படுத்தலாம்.

கலப்படத்தினால் ஏற்படும் பாதிப்பு: உணவுக் கலப்படத்தினால் ஏற்படும் தீவிர பாதிப்புகள் நுகர்வோரை ஏமாற்றுவது மட்டுமின்றி, உணவு கலப்படம் பல்வேறுகேடுகள் மற்றும் வியாதிகள் வரக்காரணமாகிறது. கலப்பட உணவில் கற்களும், மணலும், இருக்குமாயின் அது பற்களையும், குடலின் உட்பகுதியில் இருக்கும் மெல்லிய சதையையும் பாதிக்கும், அழுக்கு இருந்தால் பாக்டீரியா மூலம் வியாதியை உண்டாக்கும் நுண்ணுயிரியை சுமந்து வரும் டால்க் மற்றும் சுண்ணாம்பு பவுடர் நம்மால் ஜீரணிக்கப்படாமல் செரிமான சக்தியை பாதிக்கும், தூய்மையற்ற நீர் பல வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகள் வரக் காரணமாகும்.


Last edited by சிவா on Sun Sep 01, 2013 8:59 am; edited 1 time in total


உணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது? எங்கே புகார் செய்வது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது? எங்கே புகார் செய்வது? Empty Re: உணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது? எங்கே புகார் செய்வது?

Post by சிவா Sun Sep 01, 2013 8:56 am

சிலவகைக் கலப்படங்கள்:

* ஆர்ஜிமோன் கலப்படம்: உணவு எண்ணெயில் ஆர்ஜிமோன் எண்ணெய் கலப்படம்.

*ஆர்ஜிமோன் எண்ணெயின் நச்சுத்தன்மை பலரை பாதிக்கும் டிராப்ஸி என்னும் நோய் வரக்காரணமாகிறது. உணவு எண்ணெயில் ஆர்ஜிமோன் மெக்ஸிகானா என்ற கடுகுச் செடியோடு வளரும் களையின் எண்ணெய் சேர்ந்து விடுவதால் டிராப்ஸி உண்டாகிறது.

*டிராப்ஸி என்பது தொற்றுநோயல்ல, ஆனால் மிகவும் கடுமையான வியாதி, இதில் தொட்டால் அமுங்கி உள் செல்லும் அளவுக்கு வீக்கம் கால்களில் தோன்றும். இது மட்டுமல்லாது சருமம் சம்பந்தமான எரித்தீமா உடலின் பல பாகங்களில் தோன்றும், இதனால் இருதயமும் பாதிக்பகபட்டு இறக்க நேரிடலாம் அல்லது க்ளூகோமா உண்டாகி பார்வையற்று போகலாம்.

கேசரிப் பருப்பு கலப்படம்: கேசரிப் பருப்பை தொடர்ந்து அதிகமாக உட்கொண்டால் அது தண்டுவடத்தை பாதித்து லத்தைரிசம் என்ற நோயை உண்டாக்கும். அது கை, கால் வளைந்து போகும் நிலையை ஏற்படுத்தும் இதனால், பாதிக்கப்பட்ட நபரின் நடையில் மாற்றம் மற்றும் மூட்டு முழங்கால்களில் அளவுக்கு மீறிய நடுக்கம் போன்றவை உண்டாகும், குறைவாக பாதிக்கப்பட்டவர்கள் வளைந்த கால்களுடன் நடப்பார்கள், அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் கத்திரியை போன்று வெட்டி வெட்டி நடப்பார்கள்.

B - oxalyal amino alanine (BOAA) என்ற அமினோ அமிலம் கேசரிப் பருப்பில் உள்ளது. இதுவே நியூரோ லப்தைரிசம் வரக்காரணம். சமீபத்திய ஆராய்ச்சியில் (BOAA) என்பது எக்ஸைட்டோ டாக்ஸின் (Excito toxin) இதுவே நரம்பில் வியாதி வரக் காரணமாகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் கேசரிப் பருப்புச் செடிகள் வளர்க்கப்படுவது குறைந்த வருகிறது. ஏனென்றால் இதனை விற்பதற்கு உணவுப் பாதுகாப்பு சட்டம் தடை விதித்துள்ளது.

காய்கறிகள் மற்றும் பழங்களில் அடங்கியள்ள ஆபத்து: காய்கறிகள் மற்றும் பழங்கள் நமக்கு தேவையான சத்துக்களை கொண்டுள்ளன. ஆனால், அவை பல வகையான நச்சுப்பொருட்கள் மற்றும் ரசாயனங்களால் பாதிக்கப்படுவதால், காய்கனிகளிலும் ஆபத்து மறைந்துள்ளது. செயற்கையான முறையில் காய்கறிகள் மற்றும் பழங்களை பழுக்க வைப்பதற்கு கால்சியம் கார்பைட் , எதிபான் மற்றும் ஆக்ஸிடோஸின் பயன்படுத்தப்படுகிறது. உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைப்பதற்கு கால்சியம் கார்பைட் உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

கால்சியம் கார்பைட், கேன்ஸர் உருவாக காரணமாகிறது. எதிபான், ஒரு பூச்சிக்கொல்லி மருந்து ஆக்ஸிடோஸின் ஒரு ஹார்மோன், பழத்தை, செயற்கையாக பழுக்க வைக்க இவை மூன்றும் உபயோகப்படுத்தப்படுகின்றன.

பழங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள்: பூச்சிக்கொல்லி மருந்துகள், உலோகங்கள், இயற்கையான நச்சு பொருட்கள் மற்றும் பலவகையான நச்சுகள் (அஃப்லோடாக்ஸின் படுலின், ஆக்ரோடரக்ஸின்) போன்றவை காய்களிகள் மற்றும் பழங்களில் கலக்கின்றன. அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லி மருந்துகளின் உபயோகமும், பூச்சிகளால் பாதிக்கப்பட்ட விதைகள், தண்ணீர், மண், உரங்களில் உள்ள உலோகங்களுமே அதற்கு காரணம்.

பழங்களை பாதுகாப்பாக உபயோகிக்க சில குறிப்புகள்: புள்ளிகள் மற்றும் சேதங்கள் இல்லாத காய்கறிகள் மற்றும் பழங்களை தேர்ந்தெடுக்கவும்.

* சாப்பிடுவதற்கும் சமைப்பதற்கும் முன்னர் காய்கறிகள் மற்றும் பழங்களை சுத்தமான தண்ணீரில் நன்றாக கழுவவும்.

* காளான்களால் பாதிக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களை உபயோகிக்கூடாது.

* காய்கறிகள் மற்றும் பழங்களை டிடர்ஜென்ட்களால் கழுவுதல் கூடாது. அது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

* திறந்தவெளியில் உள்ள நறுக்கப்பட்ட பழங்களை வாங்குதல் கூடாது.

* உபயோகிக்கும் முன்னர் மட்டுமே காய்கறிகள் மற்றும் பழங்களை நறுக்குதல் வேண்டும். முட்டைக்கோஸ், லெட்டுஸ் போன்றவற்றின் வெளித்தோலை நீக்குதல் வேண்டும். இது இவற்றில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளை நீக்குகிறது.


Last edited by சிவா on Sun Sep 01, 2013 9:00 am; edited 1 time in total


உணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது? எங்கே புகார் செய்வது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது? எங்கே புகார் செய்வது? Empty Re: உணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது? எங்கே புகார் செய்வது?

Post by சிவா Sun Sep 01, 2013 8:56 am

உணவு மாசுபடுதல்:

* உணவிலுள்ள நுண்ணுயிர்களாலோ, பாக்டீரியாக்களாலோ, அவற்றில் ஏற்படும் விஷத்தன்மையாலோ, அது உண்பதற்கு லாயக்கற்றதாகும் போது அதனை மாசுபடுதல் என்கிறோம்.

*பல்லாயிரக்கணக்கானோர் இந்த உணவு மாசுபடுதலால் ஏற்படும் உணவு தொடர்பான வியாதிகளால் பாதிக்ப்படுவதாலும், இது ஒரு முக்கிய விஷயமாக கருதப்படுகிறது. எனவே இது பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியமாகிறது.

*ஏற்கனவே கூறியபடி நுண்ணுயிர்களாலும் சுற்றுப்புற மாசாலும் இது ஏற்படுகிறது. பூச்சி மருந்து அடிப்பதாலும் அவற்றில் உள்ள உலோகத்தாலும் மற்ற இரசாயன கலவைகளாலும் இது ஏற்படுகிறது. உணவு தயாரிக்கும்போது விநியோகம் செய்யப்படும்போது இத்தாக்குதல்கள் நிகழ்கின்றன.

உணவு மாசுபடுதல் ஒரு விளக்கம் : சுற்றுப்புறத்தாலும் நுண்ணுயிர்களாலும் உணவு மாசுபடலாம். பூச்சிக்கெல்லிகள், உலோகங்கள், பிறவேதியல் பொருட்கள் சேர்வதற்கு சுற்றுப்புறம் ஒரு காரணமாகலாம். உணவு தயாரித்து பரிமாறப்படும்போது இறைச்சியிலிருந்து பாக்டீரியாக்கள், கோழிமுட்டையிலிருந்து நுண்ணுயிர்கள், மிருகம் வதைக்கும் இடங்களிலிருந்து அயல் சேர்க்கைகள் மூலம் உணவு மாசுபடுகிறது. தூய்மையற்ற நீரில் பழங்கள், காய்களிகள், கழுவப்படும்போது உரங்கள், மனிதக் கழிவுகள் நீரில் சேர்வதாலும் சுகாதாரமற்ற கைகள் மற்றும் சுற்றுப்புற தூய்மைகேட்டாலும் உணவு மாசுபடலாம்.


Last edited by சிவா on Sun Sep 01, 2013 9:01 am; edited 1 time in total


உணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது? எங்கே புகார் செய்வது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது? எங்கே புகார் செய்வது? Empty Re: உணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது? எங்கே புகார் செய்வது?

Post by சிவா Sun Sep 01, 2013 8:57 am

சில பாக்டீரியாக்கள்

* க்ளோஸ்டிரியம் போடுலினம் - போடுலிஸம் என்பவை விஷத்தன்மை, உணவில் உருவாக காரணமாக இருப்பவை. நரம்பு நோய்கள் உருவாக இவை காரணமாக உள்ளன.

*எச்செரிக்கியாகோலை - உணவு மாசுபடக்காரணமாகும் பாக்டீரியாக்களில் முதன்மையானவை, இவ்வகை பாக்டீரியாக்கள், பச்சைப்பால், கோழி, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றில் உள்ளன.

*சால்மனல்லாடை பீரியம், கோழி, பச்சைக் காய்கறி மற்றும் பால் பொருட்கள் மாமிச பொருட்களில் அதிகம் காணப்படுகின்றன.

* ஸ்டோபி லோகஸ் அவரியஸ் - க்ரீம் உள்ள பேக்கரி பொருள்கள், கோழி இனப்பொருட்கள், உருளை முதலிய காய்கறிகளில் காணப்படுகின்றன.

* விப்ரியோ காலரா - நீர் மற்றும் உணவில் பரவும் இவ்வகை பாக்கடீரியாக்கள் காலரா நோய் உருவாகக் காரணமாகின்றன.

*பால் திரியக் காரணமாகும் பாக்டீரியாக்கள் லாக்டோபேஸில்லஸ், எண்டிரோபாக்டர், ஹெடிரோஜீன்ஸ்.

*தண்ணீர் மாசுபடுதலுக்கு காரணமான பாக்டீரியாக்களான ஈகோலை, பக்ளோஸ்ட்ரியம், மற்றும் எண்டிரோகோகி இவை பெரும்பாலும் நமது முகங்களிலும் மிருகங்களின் முகங்களிலும் உள்ளன.

எளியமுறைகளில் இத்தகைய அபாயங்களை தவிர்க்கலாம்: சாதாரண சீதோஷ்ணத்தில் உருவாகும் பாக்டீரியாக்கள், குளிர்பதன பெட்டிகளில் பொருட்கள் வைக்கப்படும்போது அழிந்து போகின்றன. மாமிசம் ஆகியற்றை கையாளும்போது மிகவும் ஜாக்கிரøயாக இருக்க வேண்டும். மரக்கறி உணவும் மாமிச உணவும் கலந்து பரிமாறப்படும் உணவு பகுதிகளில் எச்சரிக்கை தேவை.


உணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது? எங்கே புகார் செய்வது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது? எங்கே புகார் செய்வது? Empty Re: உணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது? எங்கே புகார் செய்வது?

Post by சிவா Sun Sep 01, 2013 8:57 am


உணவு மாசுபடுதலைத் தவிர்க்கும் வழிகள்:


* உணவுக் கூடங்கள், பாத்திரங்கள் மற்றும் உணவுத் தயாரிப்பவரின் கைகள் சுத்தமாக வைத்திருக்கப்பட வேண்டும். இது அயல் மாசுபடுதலைத் தவிர்க்க உதவுகிறது.

* அது போலவே சமைத்த/சமைக்காத உணவுகளை குளிர்பதனப் பெட்டியில் அருகருகே வைக்கக்கூடாது.

பாதிப்புகள்: உணவு 70 டிகிரி செல்சியஸ் வரை சூடாக்க வேண்டும். அது போலவே உறைத்து வைக்க வேண்டியவற்றை (எளிதில் கெட்டுப் போகக் கூடியவை) குளிர் பதனப் பெட்டியின் ஃப்ரீசர் பாக்ஸில் வைக்க வேண்டும் இவற்றில் வ்கப்படும் மாமிச உணவுகளை மெல்லிய பாலீதீன் உறைகளால் மூடிவைக்க வேண்டும். இதிலிருந்து கசியும் நீர் மற்றப் பொருட்களைப் பாதிக்கும். இவற்றை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு, குளிர்ந்த நீரில் தொடர்ந்தும் வைத்திருக்கலாம்.

மீந்து போன உணவை இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக, வைத்திருக்கக் கூடாது. குளிர்ந்த உபயோகப் படுத்த வேண்டிய உணவை (உம்) ஐஸ்க்ரீம் குளிர்பதனப் பெட்டியின் அறையிலும், சூடான உணவை ஓவன்களில் வைத்தும் அதன் உஷ்ணத்தைப் பாதுகாக்கவும், ஒரு உணவுப் பொருளின் தரத்தைப் பற்றி ஐயம் ஏற்பட்டாலே, அதனை வெளியே எறிந்துவிட வேண்டும். வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்பட மாசுபட்ட உணவு காரணமாகிறது. ஆனால் கெட்டுப் போன உணவில் உள்ள பாக்டீரியா நமது உடலில் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தும். நாம் உண்டபின் பல மணி நேரங்கள் அல்லது சில நாட்கள் கழித்துக்கூட, பாதிப்பு ஏற்படலாம். இந்தச் சமயத்தில் அவை பல்கிப் பெருகி விஷத்தன்மையை இரத்தத்தில் கலக்கச் செய்யும் ஒரு சில பாக்டீரியாக்கள் திசுக்களை நேரடியாகத் தாக்கும். ஒவ்வொரு நோய்க்கும் அறிகுறிகள் வேறுபட்டாலும் வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, குமட்டல் போன்ற ஒரே மாதிரியான அறிகுறிகள் தோன்றும்.

உணவுப் பாதுகாப்பில் நுகர்வோருக்கான குறிப்புகள்: உணவைக் கையாளும் போது சில பாதுகாப்பு வழிமுறைகளைப் பயன்படுத்துவது ஒவ்வொரு நுகர்வோரின் கடமையாகும்.

* சமையலறையையும் சமையல் சாதனங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மேலும் சமையல் செய்பவரும் உடல் சுத்தம் பேண வேண்டும்.

* தேவையான அளவு உஷ்ணத்தைப் பயன்படுத்தி உணவு சமைக்கப்பட வேண்டும். சமைத்த உணவை 70 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்திலேயே வைத்து உட்கொள்ள வேண்டும்.

* சூப், சாஸ் ஆகியவற்றை அவற்றின் கொதிநிலை வரை சூடாக்க வேண்டும்.

* சமைத்த மற்றும் சமைக்காத மாமிச வகை உணவுகளை, குளிர்சாதனப் பெட்டியில் தனித்தனியாக வைத்திருக்க வேண்டும்.

* பழங்கள், காய்கறிகள், விரைவில் அழுகக்கூடிய மற்றும் மீந்து போன உணவுப் பதார்த்தங்களை 2 மணி நேரத்திற்குள் குளிர்ப்பதனப் பெட்டியில் சேமிக்க வேண்டும்.

* குளிரூட்டுவதற்கு வய் அகன்ற பாத்திரங்களில் வைக்க வேண்டும். பதனப் பெட்டியில் உஷ்ணம் 4 டிகிரி செல்சியஸ்க்கு மிகாமல் இருக்க வேண்டும். உணவு அøட்கப்பட்ட டின்கள்/கேன்களில் வடிவம் மாறியிருநதால் அவை நிராகரிக்கப்பட வேண்டும்.

* உணவு தொடர்பான நோய்களின் அறிகுறிகள், உணவு உண்ட ஒரு மணி நேரத்திலிருந்து மூன்று வாரம் வரை கூட வெளிப்படலாம்.

* குடும்பத்தில் யாரேனும் பாதுகாப்பற்ற உணவால் பாதிக்கப்பட்டனர் என தெரிந்தால், உடனே இந்திய உணவுப் பாதுகாப்பு அலவலர்களிடம் குறைகளைத் தெரிவிக்கலாம்.

* உணவு கலப்படங்களைக் காண நேர்ந்தால், இது பற்றி உணவுப் பாதுகாப்பு அல்லது நிர்ணய அலுவலருக்குத் தெரிவி“க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள நிர்ணய அலுவலர்களின் அலைபேசி எண் இணைக்கப்பட்டுள்ளது.

* உணவு, பாதுகாப்பற்றது என நிச்சயம் தெரிந்தால், அதுபோன்ற உணவுப் பாக்கெட்களைப் பிரித்து, அவற்றின் மேல் “அபாயம்’ எனக் குறியிட்டுத் தனிமைப்படுத்தவும் மற்றும் பாட்ச் எண், வாங்கிய தேதி, பட்டியல் எண், ஆகியவற்றை உணவு பாதுகாப்பு அலுவலருக்குத் தெரியப்படுத்தவும்.

மின்தடையின் போது உணவு பாதுகாப்பு

* குளிர்ப்பதனப் பெட்டியின் கதவுகளை அடிக்கடி திறக்கக்கூடாது. நீண்ட நேரம் மின்தடை இருக்கும்போது உணவுகளை ஐஸ் பெட்டியிலோ, உறை பனிப்பெட்டியிலோ வைக்கவும்.

* தொடர்ந்து மின்தடை இருந்தால், டின்களில் அøட்கப்பட்ட உணவு, பால் பவுடர், பழரசங்கள், பாட்டிலில் அடைக்கப்பட்ட நீர் ஆகியவற்றைப் பாதுகாக்க, மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.


உணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது? எங்கே புகார் செய்வது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது? எங்கே புகார் செய்வது? Empty Re: உணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது? எங்கே புகார் செய்வது?

Post by Muthumohamed Sun Sep 01, 2013 11:46 am

பலருக்கும் பயன்படும் நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி அண்ணா



உணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது? எங்கே புகார் செய்வது? Mஉணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது? எங்கே புகார் செய்வது? Uஉணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது? எங்கே புகார் செய்வது? Tஉணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது? எங்கே புகார் செய்வது? Hஉணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது? எங்கே புகார் செய்வது? Uஉணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது? எங்கே புகார் செய்வது? Mஉணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது? எங்கே புகார் செய்வது? Oஉணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது? எங்கே புகார் செய்வது? Hஉணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது? எங்கே புகார் செய்வது? Aஉணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது? எங்கே புகார் செய்வது? Mஉணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது? எங்கே புகார் செய்வது? Eஉணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது? எங்கே புகார் செய்வது? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது? எங்கே புகார் செய்வது? Empty Re: உணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது? எங்கே புகார் செய்வது?

Post by jesudoss Sat Sep 07, 2013 9:50 pm

அருமையான பதிவு....மிக்க நன்றி


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

உணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது? எங்கே புகார் செய்வது? 154550 உணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது? எங்கே புகார் செய்வது? 154550 உணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது? எங்கே புகார் செய்வது? 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

உணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது? எங்கே புகார் செய்வது? Empty Re: உணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது? எங்கே புகார் செய்வது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கலப்படம் செய்யப்பட்ட பியர் கண்டுபிடிப்பது எப்படி? (வீடியோ)
» உணவு பொருட்களில் செய்யும் கலப்படம் எப்படி கண்டுபிடிப்பது என்று தெரிந்தவர்கள் சொல்லவும்
» எங்கே , எப்படி கண்டுபிடிப்பது ?
» ஆதார் கார்டு | புதிய கார்டு பெறுவது எப்படி | தவறாக இருந்தால் திருத்துவது எப்படி | தொலைந்தால் என்ன செய்வது
» சாம்சங் கேலக்சி 5302 எப்படி 3ஜி கன்னெக்ட் செய்வது ? மேலும் எப்படி கணினி உடன் கன்னெக்ட் செய்வது ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum