Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலர் தேவதை!
+3
ஜாஹீதாபானு
Muthumohamed
சிவா
7 posters
Page 1 of 1
மலர் தேவதை!
முன்னொரு காலத்தில் ஒரு சோம்பேறி மனிதன் வாழ்ந்து வந்தான். அவன் சோம்பேறி மட்டும் அன்றி, பெரிய முட்டாளும் கூட. "நான் உழைக்க மாட்டேன். ஆனால், எனக்கு வயிறார உணவை அதிர்ஷ்ட தேவதைக் கொடுக்க வேண்டும்!' என்பது அவன் குறிக்கோள்.
ஒருநாள், திறந்த வெளியில் மல்லாந்து படுத்து இருந்தான். "இன்று அதிர்ஷ்ட தேவதை என் வாயில் ஓர் அப்பத்தைப் போட வேண்டும்!' என்று வெகு நேரம் வாயைத் திறந்து வைத்திருந்தான். காற்றடித்த போதெல்லாம் வாயில் மண்தான் விழுந்தது. மாலை வரை அப்படியே படுத்துக் கிடந்த அவனுக்கு வாய் வலித்தது.
எழுந்தான். ஒரு சாக்கு பையையும், ஒரு கோலையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டான் வேலைதேடி அல்ல... அதிர்ஷ்ட தேவதையைத் தேடி.
வழியில் ஒரு ஓநாயைக் கண்டான்.
"எங்கே போகிறாய்... நல்லவனே!''
"அதிர்ஷ்ட தேவதையிடம், எனக்கு செல்வமும், மகிழ்ச்சியும் தர வேண்டி செல்கிறேன்,'' என்றான்.
"நல்லது! எனக்கு ஓர் உதவி செய்வாயா?''
"தாராளமாக!''
"நான் பிறந்ததிலிருந்தே எலும்பும், தோலுமாகவே இருக்கிறேன். என் உடம்பில் உரோமம் ஏன் வளர வில்லை? அது வளர என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு வருகிறாயா?'' என்றது ஓநாய்.
"ஆகட்டும்!''
இன்னும் சிறிது தூரம் சென்றதும் ஒரு திராட்சைத் தோட்டம் வந்தது. அந்தோ பரிதாபம். அந்தக் கொடிகளில் ஒரு பச்சை இலைக்கூட இல்லை. எல்லாம் பழுப்பேறி இருந்தன. அதுவும் அவனை, "எங்கே செல்கிறாய்?'' என்று கேட்டது.
"அதிர்ஷ்ட தேவதையிடம், வேலை செய்யாமல் நான் பணக்காரனாகவும், செல்வாக்கு உள்ளவனாகவும் இருக்க, வரம் பெற போகிறேன்!'' என்றான்.
"அப்படியானால், என் பழுத்த இலைகள் பச்சை இலைகளாக மாற, நான் என்ன செய்ய வேண்டும்!'' என்று கேட்டுக் கொண்டு வா!''
"ஆகட்டும்!''
இன்னும் கொஞ்ச தூரம் சென்றதும், ஓர் ஆறு வந்தது. அதைத் தாண்டும் போது, நீருக்கு மேல் வந்தது ஒரு மீன். அதன் முதுகில் இராஜப் பிளவைக் கட்டி பெரிதாக இருந்தது. அதனிடமும், "தான் அதிர்ஷ்ட தேவதையைப் பார்க்கப் போவதைப் பற்றி பெருமை அடித்துக் கொண்டான்' அந்த முட்டாள்.
"இதோ பார்த்தாயா இந்த கட்டியை... இது பெரிதாகிக் கொண்டே வருகிறது. அதிர்ஷ்ட தேவதையிடம் இதற்குப் பரிகாரம் கேட்டு வருகிறாயா?'' என்றது.
அவனும் ஒத்துக்கொண்டான். இன்னும் சிறிது தூரம் சென்றதும் ஓர் அழகிய சிற்றோடை தென்பட்டது. அதன் அருகே மிகவும் அழகிய பெண்ணொருத்தி நின்று கொண்டு இருந்தாள். வெள்ளை நிற ஆடையும், புதிதாக பூத்த மலர் கிரீடமும் கொண்ட அவளை கண் கொட்டாமல் பார்த்தான்.
"நீ யார்? எதற்கு வந்தாய்?வழியில் யாரை சந்தித்தாய்?''என்று கேட்டாள்.
"ஒரு ஓநாய், ஒரு திராட்சைத் தோட்டம், ஒரு மீன், என்றான்.
"அவைகள் உன்னிடம் என்னென்ன கேட்டன?''
"ஓநாய்க்கு உரோமம் வர வேண்டுமாம்! அதைப் பற்றி அதிர்ஷ்ட தேவதையை கேட்டு வரச் சொல்லிற்று!'' என்றான்.
"முழு சோம்பேறியும், முட்டாளுமான ஒருவன் இதயத்தைத் தின்றால் அதன் குறை நீங்கும்!''
"திராட்சையின் குறை என்ன?''
"அதன் இலைகள் துளிராகயிருக்கும் போதே பழுத்து உதிர்ந்துவிடுகின்றன!''
"அந்தத் திராட்சைக் கொடியின் அடியில், ஒரு பெரிய இடம் நிறைய பொற்காசுகளை யாரோ எப்போதோ புதைத்துவிட்டனர். அந்தப் புதையலை தோண்டி எடுத்து விட்டால், திராட்சை கொடிகள் செழிப்பாக வளர்ந்து, கொத்து கொத்தாக பழுத்துத் தொங்கும்!''
"அது சரி! மீனின் கட்டிக்கு?'' என்றான் சோம்பேறி.
"அந்தக் கட்டி முழுவதும் வைரங்கள் இருக்கின்றன. அந்தக் கட்டியை அறுத்து வைரங்களை எடுத்துவிட்டால் மீனின் கட்டி போய்விடும்!'' என்றது.
"இதை நான் மீனிடம் சொல்கிறேன்!''
"சரி, நீ வந்த வழியே போ! அதிர்ஷ்டம் உன் கையில்!'' என தேவதை மறைந்தது.
சோம்பேறியோ, தான் வெகு விரைவிலேயே பெருஞ்செல்வந்தனாகி விட்டது போல் நினைத்துக்கொண்டு சந்தோஷமாக வந்தான்.
ஆற்றில் மீன் வந்தது.
சோம்பேறி அதனிடம், தேவதை கூறியதை கூறினான்.
"நீயே அந்தக் கட்டியை அறுத்து வைரங்களையெல்லாம் எடுத்துச் செல்!'' என வேண்டியது.
"எனக்கு அதற்கெல்லாம் நேரமே இல்லை. அதிர்ஷ்டம் எனக்காகக் காத்திருந்தது. நீ வேறு யாரையாவது அந்தக் கட்டியை அறுக்கச் சொல்!'' என வேகமாச் சென்று விட்டான்.
அடுத்து திராட்சைத் தோட்டத்தை அடைந்து தேவதைச் சொன்னதைச் சொன்னான்.
"நீயே அந்தப் புதையலை வெட்டி எடுத்துச் செல்!'' என மன்றாடியது.
"அதெல்லாம் முடியாது. எனக்கு நேரமில்லை. அதிர்ஷ்டம் எனக்காகக் காத்திருக்கிறது,'' என வேகமாகச் சென்றான்.
ஓநாய் எதிர்ப்பட்டது.
"ஓநாயிடம் தேவதைச் சொல்லியதை சொன்னதுடன், மிகப் பெருமையாக, தான் எப்படி மீனையும், திராட்சைத் தோட்டத்தையும் உதறிவிட்டு வந்ததைச் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டான்.
"உன் சோம்பேறித்தனத்தால் நீ கெட்டாய். முட்டாளே புதையலைத் தோண்டியிருந்தால் நீ செல்வந்தனாகியிருப்பாய். மீனின் கட்டியை அறுத்திருந்தால், எவ்வளவோ வைரங்கள் உனக்கு கிடைத்திருக்கும். எனவே, உன்னைப் போன்ற முட்டாள் சோம்பேறிகளுக்கு, இந்த உலகில் இடமில்லை. உழைப்பின்றி எதுவும் கிடையாது!'' என்று கூறிக்கொண்டே, அவனைக் கொன்று தின்றது.
சிறுவர் மலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலர் தேவதை!
எனவே, உன்னைப் போன்ற முட்டாள் சோம்பேறிகளுக்கு, இந்த உலகில் இடமில்லை. உழைப்பின்றி எதுவும் கிடையாது!''
சிறந்த கருத்துள்ள கதை பகிர்வுக்கு நன்றி அண்ணா
சிறந்த கருத்துள்ள கதை பகிர்வுக்கு நன்றி அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: மலர் தேவதை!
ரொம்ப நல்ல கதை நன்றி சிவா !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Similar topics
» அணில் தேவதை! - (சிறுவர் மலர்)
» பெருந்தகை மு .வ .நூற்றாண்டு விழா மலர் மலர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» சஞ்சிகைகள், இதழ்கள்
» தேவதை
» தேவதை
» பெருந்தகை மு .வ .நூற்றாண்டு விழா மலர் மலர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» சஞ்சிகைகள், இதழ்கள்
» தேவதை
» தேவதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum