ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Today at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Today at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Today at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று தேசிய விளையாட்டு தினம்

2 posters

Go down

இன்று தேசிய விளையாட்டு தினம்  Empty இன்று தேசிய விளையாட்டு தினம்

Post by சிவா Thu Aug 29, 2013 12:36 pm

இன்று தேசிய விளையாட்டு தினம்  1187126_542449545828147_825417567_n

விண்வெளி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. விளையாட்டு துறையில் மட்டும் இன்னும் பின் தங்கியே உள்ளது. சமீபத்தில் ரஷ்யாவில் நடந்த உலக தடகளப்போட்டியில், இந்தியா சார்பில் 15 வீரர்கள் பங்கேற்றனர். இந்தியாவால் ஒரு பதக்கம் கூட வெல்ல முடியவில்லை. இந்தியாவை விட சிறிய நாடுகள் கூட, பதக்கங்கள் வென்று, பெருமை சேர்த்தனர். இது இந்தியாவில் விளையாட்டுத் துறை எந்தளவுக்கு இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. 120 கோடி மக்கள் வாழும் இந்த நாட்டில் சில நூறு சிறந்த வீரர்களை உருவாக்குவது கூட முடியவில்லை என்பது வேதனைக்குரியது. இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக திகழ்ந்த "தயான் சந்த்'தை கவரவிக்கும் விதமாக அவரது பிறந்த தினம், தேசிய விளையாட்டு தினமாக (ஆக.29) கொண்டாடப்படுகிறது. விளையாட்டு மீதான ஆர்வத்தை வருங்கால சந்ததியினரிடம் உருவாக்குவதே இதன் நோக்கம்.

ஆயிரம் கோல்:

தயான் சந்த் 1905 ஆக. 29ல் உத்தரபிரதேத்தின் அலகாபாத் நகரில் பிறந்தார். 14வது வயதில் ஹாக்கி விளையாட துவங்கினார். ராணுவத்தில் சேர்ந்த தயான் சந்த், இந்திய ராணுவ ஹாக்கி அணியில் இடம்பெற்றார். சர்வதேச அளவில் ஹாக்கி போட்டிகளில், ஆயிரம் கோல்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் இவரே. 1928ம் ஆண்டு ஆம்ஸ்டர்டம் ஒலிம்பிக் போட்டியில், முதன் முதலாக இந்திய ஹாக்கி அணி அறிமுகமானது. இதில் தயான் சந்த்தும் இடம் பெற்றிருந்தார். இதில் இந்தியா தங்கப்பதக்கம் கைப்பற்றியது. தயான் சந்த் 14 கோல்கள் அடித்தார். 1932 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியிலும் இந்தியா தங்கப்பதக்கம் கைப்பற்றியது. இத்தொடரில் தயான் சந்த் 133 கோல் அடித்து சாதனை படைத்தார். 1936ல் பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று "ஹாட்ரிக்' தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. இதில் தயான் சந்த் 33 கோல் அடித்தார். 1956ல், 51வது வயதில் இந்திய ராணுவத்தில் மேஜர் பதவியுடன் ஓய்வு பெற்றார். இவரது சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக இதே ஆண்டு இவருக்கு இந்திய அரசு, பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது. 1979 டிச. 3ல் மறைந்தார்.

சலுகைகள் அவசியம்:

விளையாட்டில் தற்போது அரசியல் கலந்து விட்டது. இதன் காரணமாக வீரர்கள் தேர்வு, விருது தேர்வு என அனைத்திலும் குழப்பமே ஏற்படுகிறது. கிரிக்கெட் விளையாட்டுக்கு தரப்படும் விளம்பரம், ஸ்பான்சர்ஷிப் வேறு எந்த போட்டிகளுக்கும் கிடைப்பதில்லை. விளையாட்டு என்றாலே கிரிக்கெட் மட்டும் தான் இருக்கிறது என பலர் நினைக்கின்றனர். போதிய மைதானங்கள், உபகரணங்கள் நாட்டில் குறைவாகவே உள்ளது. பெற்றோரும் தனது பிள்ளை டாக்டராகவோ, இன்ஜினியராகவோத் தான் விரும்புகின்றனர். யாரும் விளையாட்டு வீரராக்க விரும்புவதில்லை. பள்ளிகளில் கூட விளையாட்டு பிரிவு, பெயரளவுக்குத் தான் இருக்கிறது. விளையாட்டும் மதிப்பெண் உள்ள ஒரு பாடப்பிரிவாக மாற வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும்.

வீரர்களுக்கு விருது:

தேசிய விளையாட்டு தினத்தில், சாதனை படைத்த வீரர்களுக்கு ராஜிவ்காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, மற்றும் துரோணாச்சாரியார் விருதுகள் ஜனாதிபதியால் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு 31ம் தேதி இவ்விழா நடக்கிறது. விளையாட்டு துறையில் சாதனை படைத்த மற்றும் ஓய்வுக்குப்பிறகும் விளையாட்டு துறைக்கு உரிய பங்களிப்பு வழங்கியவர்களுக்கு தயான் சந்த் பெயரில் 2002ம் ஆண்டு முதல் விருது வழங்கப்படுகிறது.


இன்று தேசிய விளையாட்டு தினம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்று தேசிய விளையாட்டு தினம்  Empty Re: இன்று தேசிய விளையாட்டு தினம்

Post by பாலாஜி Thu Aug 29, 2013 12:44 pm

தேசிய விளையாட்டு தினத்தில் நமது தேசிய விளையாட்டு ஹாக்கி மேன்பெற அரசு கவனம் செலுத்த வேண்டும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum