Latest topics
» விளையாட்டு செய்திகள்- by ayyasamy ram Today at 13:52
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:51
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
க்ரூப்பு!! ஃபேஸ்புக்கை கலக்கும் க்ரூப்புகள்!!
Page 1 of 1
க்ரூப்பு!! ஃபேஸ்புக்கை கலக்கும் க்ரூப்புகள்!!
இதுவரை ஸ்டேட்டஸ்ட் போட்டு வம்பிழுப்பது, கமெண்ட் செய்து கலாய்ப்பது, லைக்கிங், சாட்டிங் என ரகளை செய்வதாய் வெறும் பொழுதுபோக்கு அம்சமாக போய்க்கொண்டிருந்த ஃபேஸ்புக், க்ரூப்ஸ் எனப்படும் ஃபேஸ்புக் குழுக்களின் வருகைக்குப் பின் நிறையவே மாறிப்போய்விட்டது. சாப்பாட்டில் ஆரம்பித்து ரியல் எஸ்டேட், ஸ்டாக் மார்க்கெட் என எக்கச்சக்க மேட்டர்களை இங்கே சரமாரியாக உடனுக்குடன் அப்டேட் செய்து அமர்க்களப்படுத்துகிறார்கள்.
விஷயம் கேள்விப்பட்ட நாமும் மவுஸைக் கையிலெடுத்து “ஃபேஸ்புக் க்ரூப்ஸ்’ஐ தேடிப் புறப்பட்டோம். கிட்டத்தட்ட சென்னையைப் பற்றிய டீட்டெய்ல்களுடன் மட்டுமே நூற்றுக்கும் அதிகமான குழுக்கள் ஃபேஸ்புக்கில் ஆக்டிவாக இயங்கி வருகிறது.
அவற்றிலிருந்து சில முக்கியமான குழுக்களைத் தருகிறோம்.
ரியல்எஸ்டேட், வாட்வீடு: சென்னை போன்ற மாநகரங்களில் வீடு தேடுவதும் நிலம் வாங்குவதும் அம்மா உணவகத்தில் இட்லி சாப்பிடுவதைப் போல் அவ்வளவு சாதாரணமான விஷயமில்லை. சென்னைக்கு மிக அருகாமையில் என்று சொல்லி வேலூருக்கும் ஏழு கிலோ மீட்டர் முன்னால் இருக்கும் இடத்தைக் காட்டும் விளம்பரத் தொல்லையில் ஆரம்பித்து பட்டாவின் தன்மை,
நிலத்தின் வளம் என்று ஏகப்பட்ட வில்லங்கங்கள் இருக்கிறது. இந்த சிக்கல்களுக்கு எல்லாம் தீர்வாக ஃபேஸ்புக்கில் வந்திருக்கிறது இந்த ரியல் எஸ்டேட் க்ரூப்கள்.
வீடு தேடுபவர்கள் தங்களுக்கு விருப்பமான ஏரியாக்களில் என்ன மாதிரியான வீடு வேண்டும் என்று தங்களுக்கான பட்ஜெட் எது என்பதைப் பற்றிய விவரங்களையும் சொல்லிவிட்டால் போதும், அடுத்த நொடியே வரிசை கட்டி உங்களுக்கான பதில்கள் கமெண்ட்டுகளாக அங்கே குவிய ஆரம்பித்துவிடும்.
இந்தக் குழுவின் மூலம் புரோக்கர்கள் தொல்லை இருக்காது., அலுவலக நேரத்தையோ, விடுமுறை நாளையோ வீடு தேடி அலைந்து வீணடிக்கத் தேவையில்லை. எல்லாமே ஒரே க்ளிக்கிலும் ஒரு செல்போன் அழைப்பிலும் எளிதில் முடிந்துவிடும். இதற்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்த சில தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வீடு, நிலம் வாங்குவதற்காக ஒரு ஆன்ராய்டு அப்ளிகேஷனையே உருவாக்கிவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
பார்ட்டி மற்றும் கிளப்பிங்: பார்ட்டி பண்ணுவதில் ஈடுபாடு கொண்ட இரவுப் பறவைகளுக்காக உருவாக்கப்பட்ட விசேஷமான ஃபேஸ்புக் குரூப் இது. பாட்டு, டான்ஸ் என்று பார்ட்டி சம்பந்தப்பட்ட எல்லாமுமே இங்கே கொட்டிக் கிடக்கும். இளசுகளின் ரசனைக்கேற்ப சிட்டியில் எந்தெந்த கிழமைகளில் என்ன மாதிரியான பார்ட்டிகள் நடத்தப்படும், பார்ட்டி பண்ணுவதற்கு சிறந்த ஹோட்டல் எது, டி.ஜே. யார், பெர்க்கப்பிளுக்கான பேக்கேஜ் எவ்வளவு என்று அனைத்து தகவல்களும் தரப்பட்டிருக்கும் இந்தக் குழுவை சொர்க்கமென்று தானே சொல்ல வேண்டும்.
கூடவே சென்னை ஃபுட் கைடு என்றிருக்கும் குழு சென்னையிலுள்ள சாலையோர தள்ளுவண்டிக் கடைகள் முதல் சவேரா, ஷெரட்டான் வரை அங்கு கிடைக்கும் உணவு விவரங்களைச் சொல்கிறது.
அதுமட்டுமில்லாமல் மலையேற்றம், சைக்கிளிங் போன்ற அட்வென்சரஸான ஆசைகள் கொண்டவர்களின் எண்ணத்தை நிறைவேற்ற அது பற்றிய பயிற்சி வகுப்புகள், ட்ரெக்கிங் அழைத்துச் செல்வது போன்ற தகவல்களைத் தாங்கி நிற்கிறது சென்னை ட்ரெக்கிங் கிளப் என்னும் ஃபேஸ்புக் க்ரூப்.
கட்கெட், மொபைல் என்று ஏக்கத்திற்கும் டிஜிட்டில் வாசியாக வாழ்ந்து வருபவர்கள் தங்களது டிஜிட்டல் லைஃபை எப்படியெல்லாம் மாற்றிக் கொள்ளலாம். சந்தையில் எந்த ஸ்மார்ட் போனுக்கு மவுஸ் அதிகம், எந்த அப்ளிகேஷன் யூசர் ஃப்ரெண்ட்லியானது, மொபைல்களைப் பாதுகாப்பதற்கான புது சாஃப்ட்வேர்கள் என்ன என்பது பற்றிய டெக்னாலஜி சார்ந்த தகவல்களை அப்டேட் செய்து வருகின்றனர் மொபைல் ஸ்சோன் மற்றும் டெக்சிம் குரூப் நிர்வாகிகள்.
இது தவிர சென்னை மாநகரின் ஆதி அந்தத்தை புட்டுப் புட்டு வைக்கும் சென்னை பஸ்ஸ், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காக வடிவமைக்கப்பட்ட என்ஆர்ஐ பஸ்ஸ் போன்ற க்ரூப்களும் ஃபேஸ்புக்கில் இருக்கின்றன. ஸ்டாக் மார்க்கெட், ஷேர் மார்க்கெட் என சந்தை நிலவரங்களைச் சொல்லவும் தனித்தனியாக க்ரூப்கள் இருப்பது ஆச்சரியம்!
- மணிகண்டன் நமஷ் -
குமுதம்
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Similar topics
» நண்பேன்டா - தேவையானவற்றுக்கு மட்டும் ஃபேஸ்புக்கை சிறந்தது
» கலக்கும் லட்சுமிராய்
» இணையத்தை கலக்கும் பாடல்
» சந்தையைக் கலக்கும் Nokia C5, E5
» பஞ்சாப்பைக் கலக்கும் சூப்!
» கலக்கும் லட்சுமிராய்
» இணையத்தை கலக்கும் பாடல்
» சந்தையைக் கலக்கும் Nokia C5, E5
» பஞ்சாப்பைக் கலக்கும் சூப்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum