புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகளின் புனிதம்! Poll_c10உறவுகளின் புனிதம்! Poll_m10உறவுகளின் புனிதம்! Poll_c10 
29 Posts - 62%
heezulia
உறவுகளின் புனிதம்! Poll_c10உறவுகளின் புனிதம்! Poll_m10உறவுகளின் புனிதம்! Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
உறவுகளின் புனிதம்! Poll_c10உறவுகளின் புனிதம்! Poll_m10உறவுகளின் புனிதம்! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
உறவுகளின் புனிதம்! Poll_c10உறவுகளின் புனிதம்! Poll_m10உறவுகளின் புனிதம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகளின் புனிதம்! Poll_c10உறவுகளின் புனிதம்! Poll_m10உறவுகளின் புனிதம்! Poll_c10 
194 Posts - 73%
heezulia
உறவுகளின் புனிதம்! Poll_c10உறவுகளின் புனிதம்! Poll_m10உறவுகளின் புனிதம்! Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
உறவுகளின் புனிதம்! Poll_c10உறவுகளின் புனிதம்! Poll_m10உறவுகளின் புனிதம்! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
உறவுகளின் புனிதம்! Poll_c10உறவுகளின் புனிதம்! Poll_m10உறவுகளின் புனிதம்! Poll_c10 
8 Posts - 3%
prajai
உறவுகளின் புனிதம்! Poll_c10உறவுகளின் புனிதம்! Poll_m10உறவுகளின் புனிதம்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உறவுகளின் புனிதம்! Poll_c10உறவுகளின் புனிதம்! Poll_m10உறவுகளின் புனிதம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உறவுகளின் புனிதம்! Poll_c10உறவுகளின் புனிதம்! Poll_m10உறவுகளின் புனிதம்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
உறவுகளின் புனிதம்! Poll_c10உறவுகளின் புனிதம்! Poll_m10உறவுகளின் புனிதம்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
உறவுகளின் புனிதம்! Poll_c10உறவுகளின் புனிதம்! Poll_m10உறவுகளின் புனிதம்! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
உறவுகளின் புனிதம்! Poll_c10உறவுகளின் புனிதம்! Poll_m10உறவுகளின் புனிதம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகளின் புனிதம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 29, 2014 7:10 pm

பக்கத்து பிளாட்டில் குடியிருந்த தேவகி, உரத்த குரலில், தன் குழந்தைகளைத் திட்டிக் கொண்டிருந்தாள். அவளுடைய குரல், கர்ண கொடூரமாக ஒலித்தது.இது, தினசரி நடக்கும் நிகழ்ச்சி தான் என்றாலும், ஒவ்வொரு நாளும் அது, குருமூர்த்தியை திணறச் செய்ததுடன், ஒரு பக்கம் அவளை நினைக்க, பரிதாபமாகவும் இருந்தது.கல்யாணமாகி பதினைந்து ஆண்டுகள் ஓடி விட்டன. இரண்டு மகள்கள்; முதல் மகள் ஏழாவதும், இண்டாவது மகள் ஐந்தாவதும் படிக்கின்றனர்.

தேவகியின் கணவன் பத்மநாபன், மின் சாதனங்கள் விற்கும் கடையை நடத்திக் கொண்டிருந்தான். பெயர் பெற்ற பிராண்டுகளைப் போலவே டூப்ளிகேட் பொருட்களை வாங்கி விற்றால், நல்லா சம்பாதித்திருக்கலாம். ஆனால், அவனுக்கு அந்த நியாயமற்ற சம்பாத்தியத்தில் விருப்பமில்லை.இதில் தான் அவனுக்கும், அவளுக்கும் கருத்து வேறுபாடு தோன்ற ஆரம்பித்தது. 'எல்லாரும் செய்யும் போது, நாம மட்டும் ஏன் செய்யக்கூடாது...' என்பது தான், தேவகியின் வாதம்.

'அப்படி மத்தவங்கள ஏமாத்தி, நாம வாழ நினைச்சா, நிம்மதி இருக்காது...' என்று கூறிய பத்மநாபன், 'ஒரு உதாரணத்துக்கு சொல்றேன்... உண்மையிலயே உன்னை எனக்கு பிடிக்காம இருந்திருந்து, 'பிடிச்சிருக்கு'ன்னு பொய் சொல்லி கல்யாணம் செய்திருந்தா, நம்ம வாழ்க்கை எவ்வளவு மோசமாக போயிருக்கும், நினைச்சு பாரு...' என்றான்.'ஒரு வார்த்தைக்குன்னு ஏன் சொல்றீங்க... என்னைப் பொறுத்தவரை அப்படித்தான். உங்கள எனக்கு கொஞ்சம்கூட பிடிக்கலே; ஆனா, அப்படி சொல்ல என்னால முடியல...' என்றாள்.'ஏன்...' என்று, புரியாமல் கேட்டான் பத்மநாபன்.

'ஏற்கனவே எங்க அண்ணனோட அலுவலகத்திலே ஏதோ ஒரு பிரச்னைன்னு, தற்காலிகமாக அவன வேலையிலிருந்து நீக்கியிருந்தாங்க; அப்புறம், அவன் மேலே தப்பில்லேன்னு நிரூபிச்ச பிறகு, வேலை கிடைச்சிருச்சி. ஆனா, அந்த அலுவலகத்திலே அவனுக்கு வேலை செய்ய பிடிக்கலே. அதனாலே விருப்ப ஓய்வு குடுத்துட்டு வெளியே வந்துட்டான்.

'கையிலே கணிசமான தொகை இருந்தது. அந்த நேரத்திலே தான், நீங்க என்னை பொண்ணு பாக்க வந்தீங்க. பாத்தவுடனே ஒருத்தரைப் பிடிக்கணும்; ஆனா, பாத்தவுடனே உங்கள எனக்கு பிடிக்கல. வேற வழியில்லாம, வலுக்கட்டாயமா உங்க கிட்டே இருக்கிற சில நல்ல குணங்கள தேடிக் கண்டுப்பிடிச்சி, அதிலே திருப்தியடைஞ்சி, 'யெஸ்'ன்னு சொல்லிட்டேன்...' என்றாள்.
'தப்பு செய்துட்டியே தேவகி... அப்படி உனக்கு என்கிட்ட என்ன பிடிக்காம இருந்துச்சு?'

'நீங்க, 'கசாபுசா'ன்னு சாப்பிட்டது, அனாவசியமா தேவையில்லாம அடிக்கடி சிரிச்சது, பேசுறதுக்கு முன்னாடி தோள் பட்டையை வலிப்பு வந்த மாதிரி குலுக்கினது இப்படி நிறைய. ஆனா, அந்த நேரத்தை விட்டா அப்புறம் எனக்கு கல்யாணம் செய்துக்கிற வாய்ப்பே கிடைக்காது. அண்ணன் கிட்டே அவ்வளவு பணம், அப்புறம், இருக்குமான்னும் சொல்ல முடியாது. அதனாலே தான், சமாளிச்சுக்கலாம்ன்னு என் மனச சமாதானப்படுத்தி, உங்கள, 'பார்ட்னரா' ஏத்துக்க சம்மதிச்சேன்...'என்றாள்.

இது போதாதா ஒரு ஆண் மகனுக்கு, தன், 'ஈகோ'வை தட்டி எழுப்ப! வீறுகொண்டு எழுந்தான்.'இவ்வளவு நாளா தன்னைப் பிடிக்காமல், பொய்யாகத்தான் தன்னோட வாழ்ந்திருக் கிறாள். இது மாதிரி பொய்யான சூழ்நிலையில் பிறந்த குழந்தைகள் எப்படி உருப்படும்...தன் வாழ்க்கையையே அழித்து விட்டாள்...' என்று, எண்ணத் துவங்கினான் பத்மநாபன். அந்த எண்ணம், அவனுள் மேலோங்கி தேவகி மீது, ஒரு வெறுப்பை தோற்றுவித்தது.

அதற்கு அடுத்து வந்த ஒவ்வொரு நாளும், இருவரும் மல்லுக்கு நிற்க ஆரம்பித்தனர். எதற்கெடுத்தாலும், ஏட்டிக்கு போட்டிதான். தேவகிக்கு உதவியாக, பால் மற்றும் காய்கறி வாங்கி வருவது போன்ற வேலைகளை நிறுத்தினான்.தேவகி அவனை வற்புறுத்தி வாங்கி வரச் சொன்னால், தன் மகளை கடைக்கு அனுப்புவான். ஏழாவது படிக்கும் பெண்ணாகவே அவள் இல்லை. பள்ளி இறுதி வகுப்பு படிக்கும் பெண் போல நல்ல வளர்த்தி, அழகு வேற. அந்தி நேரங்களில், மகள் திரும்பி வரும் வரை தேவகி மனது படபடக்கும்.

'ஏங்க... உங்களுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா, அவளப் போயி, கடைக்கு அனுப்பறீங்களே... அன்னைக்கு அப்படித் தான் கூட்டத்திலே அவ பாட்டுக்கு, 'தேமே'ன்னு நின்னுகிட்டிருக்கா... மகள்ன்னு கொஞ்சமாவது பாசம், பரிவு இருக்கா...'என்றாள்.
இதுவரை, 'அறிவிருக்கா' போன்ற கடுமையான வார்த்தைகளை தேவகி உபயோகித்ததில்லை. இப்போது அந்த வார்த்தை பிரயோகம், அவனை மேலும் உசுப்பி விட்டது. அவனும் வாய்ப்பு கிடைக்கும் போது, தடிமனான மற்றும் மரியாதை குறைந்த வார்த்தைகளை உபயோகிக்க ஆரம்பித்தான்.

இப்படித்தான் இவர்களது தினசரி வாழ்க்கை, விரும்பத்தகாத ஒரு விஷயமாக மாறிக் கொண்டிருந்தது.
இதற்கு என்னதான் வழி என்று யோசித்த தேவகி, இது குறித்து பக்கத்து வீட்டு மாமியிடம், கேட்டாள்.

'தேவகி... இந்த சமூகம், எப்போதுமே ஆண், ஒரு பெண்ணை திட்றத அனுமதிக்கும். ஆனா, அதையே ஒரு பொண்ணு செஞ்சா, 'பொம்பள பிள்ளைக்கு இவ்வளவு வாய் கொழுப்பு ஆகாது; பொம்பளையா அடக்கமா நடத்துக்க'ன்னு அறிவுரை சொல்லும். ஒரு ஆம்பளை குடிச்சிட்டு வந்து மனைவியை தினமும் அடிக்கலாம்; ஆனா, அதையே ஒரு மனைவி, நியாயமான காரணத்திற்காக செஞ்சாக் கூட இந்த சமூகம், அடங்காபிடாரின்னு ஏசும்...''அப்ப எப்படித்தான் இந்த பிரச்னைய சமாளிக்கிறது...'
'நீ மொதல்லே, 'பிடிக்காம கல்யாணம் செய்துகிட்டேன்'ன்னு சொல்லியிருக்கக் கூடாது; எந்த ஆம்பளையும் அதை ஜீரணிக்க மாட்டான்...'

'என்ன மாமி செய்றது... ரெண்டும் பொம்பள பிள்ளையா போச்சு; அவங்க கல்யாணத்துக்கு சேத்து வைக்கணுங்கற அக்கறை கொஞ்சம் கூட அவருக்கு இல்ல. பேங்க்ல கடன் வாங்கி, கடையை விருத்தி செய்ங்கன்னா தயங்கறாரு. சரி எனக்காவது ஒரு கடை வச்சி கொடுங்க, நான் சேலை வியாபாரம் செய்றேன்னா... அதுக்கும் ஒத்துங்க மாட்டேங்கிறாரு. அந்த கோபத்திலே தான், அப்படி பேசிட்டேன்னு நெனைக்கிறேன்...'என்றாள் தேவகி.

'இனிமே உனக்கு கோபம் வந்தா ஒன் புருஷனத் திட்டாதே... ஒன் மகள்கள ஜாடை மாடையாத் திட்டு; அவருக்கு புரிஞ்சு போகும். அதே நேரத்தில, உன்மேலே கோபப்படவும் முடியாது...' என்று சொன்னாள் பக்கத்து வீட்டு மாமி.
இது நல்ல யோசனையாகத் தோன்றியது. அடுத்த நாளிலிருந்து செயல்படுத்த ஆரம்பித்தாள் தேவகி. அதுதான், குருமூர்த்தியின் நிம்மதியைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது.

குருமூர்த்தி இந்த பிரச்னையை ஒரு நாளில் தீர்த்து வைத்து விடுவான். ஆனால், அவன் மனைவிக்கு அவன், வேறு பெண்களிடம் பேசுவது பிடிக்காது. அவன் கொஞ்சம் வசீகரமானவன்; மொதல் பேச்சிலேயே மற்றவர்களை கவர்ந்துவிடும் ஆண்மகன். அதனால், அவன் மனைவி ஜாக்கிரதையாக இருந்தாள். அது, இந்த விஷயத்தில், அவனுக்கு பாதகமாக அமைந்து விட்டது.
ஆனால், எப்படியாவது தேவகிக்கும் - பத்மநாபனுக்கும் இடையே சுமுகமான உறவை ஏற்படுத்திவிட வேண்டும் என்கிற நல்ல எண்ணம் மட்டும் அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

ஒரு முறை, ஓட்டலில் எதிர்பாராவிதமாக பத்மநாபனை சந்தித்த போது, அவனுக்கு அறிவுரை கூறினான் குருமூர்த்தி.
'பழையத நினைச்சி, உங்க மனைவியோடு அடிக்கடி சண்ட போட்டுக்கிட்டே இருக்காதீங்க. அது பிள்ளைகளோட எதிர்காலத்த பாதிக்கும். ஒருத்தொருக்கொருத்தர் விட்டுக் கொடுத்து, சுமுகமாப் போக பாருங்க; அதுதான் உங்க எல்லாருக்கும் நல்லது...' என்றான்.

'நானா சண்ட ஆரம்பிக்கிறதில்லே சார்; அவதான் ஆரம்பிக்கிறா. போன வாரம், கொஞ்சம் வசதியா உட்கார்றமாதிரி காஸ்ட்லியான சேர் வாங்கினேன். உடனே, அவ வேணுமின்னு குழந்தைகள டான்ஸ் கிளாஸ்ல சேத்து, டிரஸ் மற்றும் பீஸ்ன்னு, 5,000 ரூபா செலவு செய்றா. கேட்டா, 'நீங்க நல்லா இருக்கலாம்; உங்க குழந்தைக நல்லா இருக்கக் கூடாதா'ன்னு கத்துறா. என்னாலே தாங்க முடியல சார். பேசாம விவாகரத்து வாங்கியிரலாம்னு நெனக்கிறேன்...' என்றான் பத்மநாபன்.இதைக் கேட்டதும் குருமூர்த்தி அதிர்ந்து போனான். தேவகியும், இதே வார்த்தைகளை, அவன் மனைவியிடம் சொல்லியிருந்தாள்.
நாளாக நாளாக அவர்களிடையே விரிசல் அதிகமாகி கொண்டே இருந்தது.

''ஹலோ...தேவகியா?''
''ஆமா; நீங்க யாரு?''
''நான் சுமதி பேசுறேன்டி; நாளைக்கு
உங்க ஊருல எனக்கு ஒரு இன்டர்வியூ.
ஸ்டேஷன்லேயிருந்து நேரா உங்க வீட்டுக்கு வந்துர்றேன்,'' என்றாள்.
''நீ மட்டுமா வர்ற... உன் வீட்டுக்காரர் வரலயா?''
''அவரை விவாகரத்து செஞ்சு, அஞ்சு வருஷமாச்சு; சாரி கெட்ட செய்தியை சொல்லி, உன்னை ஏன் கஷ்டப்படுத்தணும்ன்னு தான் சொல்லல,'' என்றாள்.

மறுநாள் காலை, 7:00 மணிக்கு, தேவகியின் வீட்டில் இருந்தாள் சுமதி. நிறம் குறைந்து, மெலிந்திருந்தாள். அவள் புன்னகையில் பழைய பளபளப்பு இல்லை. முன் பல் ஒன்று விழுந்து, இடம் காலியாகியிருந்தது. பார்ப்பதற்கு ஒரு மாதிரியாக இருந்தது.
''என்னடி ஆச்சு... நல்லா பேசி, பழகி, அஞ்சு வருஷம் காதலிச்சி தானே, கல்யாணம் செய்துக்கிட்டீங்க... பின்னே எப்படி?''
''என்ன தான் நெருங்கி பழகி கல்யாணம் செய்திருந்தாலும், கணவன், மனைவின்னு வரும் போது, அந்த உறவுக்கு, ஒரு தனி பரிமாணம் வந்துருது. சில சட்டைகள் சிலருக்கு நல்லாயிருக்கும்; சட்டையும் தனியாப் பார்க்கும் போது அழகாகத்தான் இருக்கும்.

ஆனா, ஏதோ ஒரு காரணத்துக்காக, அது இன்னொருத்தருக்கு நல்லா இருக்காது. அதேமாதிரி காதலிக்கும் போது, என்ன தான் ஆழமா பேசி பழகியிருந்தாலும் சில குறைபாடுகள் கணவன், மனைவின்னு வரும் போது தான் தெரியுது. வாழ்க்கைங்குற படகுல கணவன் மனைவியா சேர்ந்து பயணிக்கும் போது தான், நமக்கு வாழ்க்கையோட பல பக்கங்கள் தெரிய வருது; புரியுது. புரியாத போது, நாம அந்த உறவ புரிஞ்சுக்க முயற்சி செய்யலேன்னா என் வாழ்க்கை மாதிரி, விவாகரத்தில தான் முடியும்,''என்றாள் விரக்தியுடன்.

''அப்போ நீ சொல்றதப் பாத்தா, எந்த கணவன், மனைவியும் இந்த உலகத்திலே சந்தோஷமாகவே வாழ முடியாது போலிருக்கே!''
''ஏன் முடியாது... கணவன், மனைவிங்கறது ரெண்டு தண்டவாளம் மாதிரி. ஒரு தண்டவாளம், ஒரு பக்கம் வளையும் போது, இன்னொரு தண்டவாளமும் அந்தப் பக்கமே வளையணும்.

அப்ப தான், அது மேல போற வாழ்க்கைங்கிற ரயில் பயணம், பாதுகாப்பா இருக்கும். இதை புரிஞ்சுக்கிட்டா கணவன், மனைவி இடையே பிரச்னையே வராது. மொத்தத்துல, கொஞ்சம் பொறுமையுடன், விசாலமான மனதோட ஒருத்தரை ஒருத்தர் புரஞ்சு வாழ்ந்தால், கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும்.''மறுநாள் ஏதோ சத்தம் கேட்டு கண் விழித்து எழுந்த பத்மநாபனுக்கு, குளித்ததால் ஏற்பட்ட, 'பளபள' முகத்துடன், சூடான காபியுடன் எதிரே நின்றிருந்த தேவகியை பார்க்க ஆச்சரியமாக இருந்தது.''உங்களுக்காக, மயிலாப்பூர் போயி உங்களுக்கு பிடிச்ச காபித்தூள் வாங்கி, அதுல காபி போட்ருக்கேன்; எழுந்து குடிங்க,'' என்றாள்.''அவ்வளவு தூரமா போயி வாங்கிட்டு வந்தே?''

''ஏன், என் அன்பு கணவருக்காக இது கூட செய்ய மாட்டேனா... அப்பறம் ஒரு சந்தோஷமான செய்தி. நீங்க ஒரு காஸ்ட்லி சேர் வாங்குனீங்கல்ல... அந்த சேருக்கு குலுக்கல்லே முதல் பரிசா ஒரு பைக் - அதுவும் நீங்க வாங்கணும்ன்னு நெனச்சிகிட்ருந்த அதே மாடல் பைக் கெடச்சிருக்கு,''என்றாள் சந்தோஷத்துடன்.இதைக் கேட்டதும், பத்மநாபன் போர்வையை விலக்கி தூரப் போட்டு, சந்தோஷத்தில், தேவகியை சினிமாவில் வருவது மாதிரி தூக்கினான்.

அவனுடைய ஸ்பரிசமும், அந்த தருணம் அவளுக்கு பழய சுமுகமான தருணங்களை, கண்முன் கொண்டு வந்தது. மனம் சந்தோஷத்தில் திளைத்தது. 'இப்படி சந்தோஷமாக வாழ பழகிக் கொள்ளாமல், ஏதேதோ நினைத்து வாழ்க்கையை தொலைக்கப் போனேனே...' என்று, நினைத்து வருந்தினாள்.

வாழ்க்கையில் சந்தோஷத்தை தரும் விஷயங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு முன்னே செல்ல வேண்டும் என்பது தேவகிக்கு புரிந்தது. இப்போதெல்லாம் குருமூர்த்திக்கு காலைப்பொழுது நிம்மதியாக இருக்கிறது. ஏனென்றால், இப்பொழுது தேவகி, எந்த காரணத்திற்காகவும் யாரையும் திட்டுவதில்லை.

எல்.வி.வாசுதேவன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jun 30, 2014 1:02 pm

அருமையான கதை பகிர்வுக்கு நன்றிமாபுன்னகை





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
bparthasarathi
bparthasarathi
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Postbparthasarathi Mon Jun 30, 2014 6:02 pm

சிறப்பு...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 02, 2014 7:16 pm

நன்றி நண்பர்களே ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 02, 2014 11:05 pm

உறவுகளின் புனிதம்! 3838410834 



உறவுகளின் புனிதம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉறவுகளின் புனிதம்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உறவுகளின் புனிதம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக