புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_m10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_m10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_m10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_m10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_m10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10 
5 Posts - 3%
Karthikakulanthaivel
தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_m10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%
prajai
தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_m10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_m10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_m10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%
சிவா
தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_m10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_m10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10 
435 Posts - 47%
heezulia
தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_m10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_m10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_m10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_m10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10 
30 Posts - 3%
prajai
தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_m10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_m10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_m10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_m10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 0%
ayyamperumal
தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_m10தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue May 01, 2012 5:07 pm

(திரு. மு.பெ.ச அவர்கள் எழுதிய உரையில் இருந்து சுருக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.)
1 )
தூதுக்கள் பல வகை. இராமாயணத்தில் அங்கதன் தூது. பாரதத்தில் சஞ்சயன் தூது; உலூகன் தூது; கண்ணன் தூது; இவையெல்லாம் அரசியல் தூதுக்கள். ஒன்றும் வெற்றி பெறாத தூதுக்கள். இவற்றிற்கு மாறாக தலைவன் தலைவியிடையே நிகழும் காதல் தூதுக்கள் உண்டு. இவற்றை இலக்கியத்தில் காணலாம். சிவபெருமான் சுந்தரர்க்காக பரவையாரிடம் தூது சென்றார். வெற்றி பெற்ற தூது இது. இதுவல்லாமல் கவிஞர்கள் விட்ட கற்பனை தூதுக்கள் பல. தாமரை விடு தூது, நெல்விடு தூது, துகில் விடு தூது என்று தூதுக்கள் பல.

சரி! தூதுக்கு எதை எதை எல்லாம் விடலாம்? ஒரு பழம்பாடல் ஒன்று கூறுகிறது.
இயம்புகின்ற காலத் தெகினமயில் கிள்ளை
பயம்பெறுமே கம்பூவை பாங்கி – நயந்த குயில்
பேதை நெஞ்சம் தென்றல் பிரமரம் ஈரைந்தும்
தூதுரைத்து வாங்கும் தொடை.

அதாவது எகினம் எனப்படும் அன்னம், மயில், கிளி, மேகம், தற்காலத்தில் மைனா எனப்படும் பூவை, தோழி, குயில், நெஞ்சம், தென்றல், பிரமரம் எனப்படும் வண்டு என்னும் பத்தும் தூது செல்லப் பயனாகும் என்று அந்தப்பாடல் சொல்லுகிறது. இவை தலைவியினால் தலைவனுக்கு அனுப்பப்பட்டு தலைவியின் காதலை தலைவன் அங்கீகரித்ததன் அடையாளமாக அவனிடமிருந்து அவன் அணிந்த மாலையை வாங்கி வரக்கூடியவை என்றும் பாடல் சொல்கிறது.

இந்தப் பத்தில் தோழி, கிளியைத்தவிர ஏனைய எட்டும் பேசக்கூடியவை அல்ல. கிளி கூட சொன்னதைச் சொல்லுமே தவிர ஒரு வார்த்தை கூட பேசத் தெரியாது. அப்புறம் எதற்கு இவை தூதுக்கு?

அதுதான் காதலின் தனித்தன்மை! காதல் வந்து விட்டால் இயற்கை எல்லாம் பேசும். காதல் உணர்வு இந்த மாயத்தை எல்லாம் செய்யவல்லது. ஆகையால் முன்னே கூறியவை பேசினால் தான் என்ன? பேசாவிட்டால்தான் என்ன? உணர்வு வெளிப்பாட்டிற்கு அவை ஒரு சாக்கு. அவ்வளவுதான்! ஆனால் இதை வைத்துத்தான் எத்தனை எத்தனை இனிய இலக்கியங்கள் வந்துள்ளன.!

அப்படி வந்த இனிய தூதுதான் தமிழ்விடுதூது! இதைப்பாடியவர் யார்? யாருக்குத் தெரியும்? மிக அற்புதமான நூலைப்படைத்த அந்த ஆசிரியரின் பெயர் கூட பொறித்து வைக்காத தமிழ் உலகை என்னவென்று சொல்வது?

(தொடரும்)

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue May 01, 2012 5:46 pm

அரிய தகவல்கள் சாமி, தொடருங்கள் ..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 01, 2012 8:08 pm

அருமை சாமி...உங்களின் பதிவைப் படித்தவுடன் ...நாராய்.... நாராய் செங்கால் நாராய் என்று பள்ளியில் படிக்கும்போது படித்தது ஞாபகம் வந்தது....தொடருங்கள் சாமி ...விரும்பினேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu May 03, 2012 8:10 am

2 )
ஆமாம்! இங்கே யார் யாருக்கு தூது விடுகிறார்கள்? மதுரை சொக்கநாதக் கடவுள்பால் ஒரு தமிழார்வம் மிக்க ஒரு தலைவி தூது விடுகிறாள்.

தூது செல்வது எது?

தமிழ்!

இது புறத்திணைகளுள் ‘கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்’ என்ற துறையில் அடங்கும் என்று இலக்கணிகள் கூறுகின்றனர்.

இது மொத்தம் 268 கண்ணிகளை உடையது. சரி! தலைவி ஏன் தூதுக்கு உரிய ஏனையவற்றை எல்லாம் விட்டு தமிழைப் பிடித்தாள்?

காரணம் காட்டுகிறார் புலவர்; அதாவது தலைவி அன்னத்தைத் தூது விடலாமா என்று பார்க்கிறாளாம்! அட, அன்னமாவது சொக்கநாதக்கடவுளைக் காண்பதாவது! காணாமலே கண்டதாக அது பொய் சொன்னாலும் சொல்லக்கூடும். ஏனெனில் முன்னர் நான்முகன் (பிரம்மா) என்கிற அன்னம் சிவபெருமானின் முடியைத் தேடிப் பறந்து சென்று சென்று காணாமல் பாதிவழியில் சிவன் முடியில் இருந்து கீழே விழுந்த தாழம்பூவைப் பொய் சாட்சியாக வைத்து இறைவனது முடியைப் பார்த்து விட்டதாக பொய் சொல்லவில்லையா? வேண்டாம்பா! இந்த அன்னம் எல்லாம் தூதுக்குத் தோதுப்படாது.

அடுத்து வண்டைத் தூது விடலாமே! அனுப்பலாம்தான்! ஆனால் ஏற்கனவே இறைவர் வண்டை அதட்டிப் பேசியிருக்கிறார். அதாவது சௌந்திரப்பாண்டியனின் சந்தேகத்தை தீர்க்க பெண்களின் கூந்தலில் இயற்கையாகவே மணம் உண்டு என்று ‘காமம் செப்பாது கண்டது மொழிமோ’ என்று வண்டைப் பயமுறுத்தி இருக்கிறார். அதாவது ஒரு பக்கமாக பேசாமல் உண்மையைச் சொல்! என்று அதட்டி இருக்கிறார். அதிலும் இந்த வண்டு நான் இறைவன்பால் வைத்த காமத்தைச் சொல்லச் செல்லும்போது அவர் காமம் செப்பாதே என்றால் இந்த வண்டு என்ன பண்ணும் பாவம்! அதிலிருந்து வண்டினங்கள் எல்லாம் அவர்கிட்ட போகவே பயப்படுகின்றனவே, என்ன செய்ய?

சரி மானைத் தூது விடலாமா? ஊஹூம்! மான் சரிப்படாது. காரணம், அவர் இடுப்பில் உடுத்தியிருக்கிற புலித்தோலைப் பார்த்தவுடனே மான் பயந்து போய் ஓடி வந்து விடும்.

ஏன் குயிலைத் தூது விடலாமல்லவா? அடடா அதுவும் சரிப்படாது. காரணம் மதுரையிலே முன்னொரு நாள் சின்ன கரிக்குருவி ஒன்று பார்ப்பதற்கு காக்கைபோல ஆனால் காக்கையைவிட சின்னதாக இருக்கும். அதைப்பார்த்த காக்கைகள் எல்லாம் இது என்ன நமக்குப் போட்டியா ஒரு நகல் பேர்வழி என்று அதைக் கூட்டம் கூட்டமாக வந்து கொத்தினவாம். அந்தக் கரிக்குருவி ‘சொக்கா! சொக்கா!....காக்கா! காக்கா! என்று கதறியதாம். உடனே மதுரைச் சொக்கநாதர் அருள்புரிய கரிக்குருவி வலியான் பறவையாகி காக்கைகளை திரும்பிப் பார்த்தவுடனே காக்கைகள் எல்லாம், அவ்வளவுதான்! பிடித்தன் ஓட்டம்!!

இப்படி இருக்கும் போது குயிலை அனுப்பினால் எப்படி? குயில் கறுப்பா காக்கா மாதிரியே இருக்கும். முன்னால் அருள் பெற்ற வலியனாகிய அந்தப் பறவை இன்னும் சொக்கரிடம்தானே இருக்கும்! காக்கை இனமாகிய நான் போக மாட்டேம்பா என்று குயிலும் அஞ்சி ஒதுங்குகின்றதே என்ன செய்ய?

புலவரின் பாடல் வரிகள் இதோ :
“-ஒண்கமலத்(து)
அன்னம் தனைவிடுப்பேன் அன்னந்தான் அங்கவரை
இன்னம்தான் கண்டறியா(து) என்பரே – மன்னெந்தாய்

அப்பாலோர் வண்டை அனுப்பின் அவர்காமம்
செப்பாதே என்றால் திகைக்குமே – தப்பாது

மானைப்போய்த் தூது சொல்லி வாவென்பேன் வல்லியப்பூந்
தானைப் பரமற்பாற் சாராதே – ஏனைப்பூங்

கோகிலத்தை நான்விடுப்பேன் கோகிலமும் காக்கையினம்
ஆகி வலியானுக் கஞ்சுமே

(தூது தொடரும்)

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Fri May 04, 2012 9:39 pm

சாமி wrote:
அதுதான் காதலின் தனித்தன்மை! காதல் வந்து விட்டால் இயற்கை எல்லாம் பேசும். காதல் உணர்வு இந்த மாயத்தை எல்லாம் செய்யவல்லது. ஆகையால் முன்னே கூறியவை பேசினால் தான் என்ன? பேசாவிட்டால்தான் என்ன? உணர்வு வெளிப்பாட்டிற்கு அவை ஒரு சாக்கு. அவ்வளவுதான்! ஆனால் இதை வைத்துத்தான் எத்தனை எத்தனை இனிய இலக்கியங்கள் வந்துள்ளன.!

விரும்பினேன் தமிழ்விடுதூது!

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri May 04, 2012 9:45 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அருமை சாமி...உங்களின் பதிவைப் படித்தவுடன் ...நாராய்.... நாராய் செங்கால் நாராய் என்று பள்ளியில் படிக்கும்போது படித்தது ஞாபகம் வந்தது....தொடருங்கள் சாமி ...விரும்பினேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி
நாராய்...நாராய்...செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக்கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் பெடையும், தென் திசைக்கு மரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின்
எம்மூர் சத்திமுத்தவாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun May 06, 2012 11:33 am

3 )
சரி அதெல்லாம் பிரசினைதான்! பேசாமல் நெஞ்சைத் தூது விடேன் என்றால் சொக்கநாதரைப் பற்றி ஞானிகள் ஏதோ சொல்கிறார்களே! ஆங்! அவர் மனாதீதராமே! அதாவது நெஞ்சுக்கு எட்டாதவராமே! என்ன செய்ய?

இப்ப என்ன பண்ணலாம், இப்ப என்ன பண்ணலாம் என்று பல வழிகளை யோசித்தபோது தலைவிக்கு ஒரு யோசனை பளிச்சிட்டதாம்.

ஆம்! தமிழைத் தூது விட்டால்!

அற்புதம்! அற்புதம்!!

எனக்கும் நல்ல யோசனை தோன்றுகிறதே; இந்த தமிழுக்காக ஏங்கித்தானே திருவாரூரில் இந்த இறைவன் “பாவலான் ஒருவன் செந்தமிழ்க்கிரங்கி பரவையார் ஊடலை மாற்ற ஏவலாளாகி இரவெல்லாம்’ உழன்றான். ஆ! அப்ப இவருக்கு தூது தமிழ்தான் தோது!
அது மட்டுமல்ல தமிழில் மோனை, எதுகை என்பன போன்று தொடைகள் உண்டு; தொடை என்றால் இடுப்புக்கு கீழே இருக்குமே, அதுவா? அட, சீ! தொடுப்பது தொடை; மலர்களைத் தொடுத்தால் அது ஒரு தொடை. அதாவது மாலை.

இப்ப சொக்கநாதரிடமிருந்து அவர் அணிந்த மாலை அதாவது ஒரு தொடை வாங்கிக் கொண்டு வரவேண்டும். அதுதானே தூதுச் செய்தி.

அட, இது தமிழால் முடியாதா? தமிழில் எதுகை, மோனை என்ற வகையில் 19,291 தொடைகள் இருக்கின்றன என்று இலக்கணப்புலவர்கள் கூறுகிறார்கள். இத்தனை தொடை வைத்திருக்கும் தமிழால் அதனோடு நெருங்கி இருக்கின்ற சொக்கநாதரிடம் இருந்து ஒரு தொடை வாங்கி வர முடியாதா?

‘விடு தமிழை தூது!’

என்று தலைவி தமிழை சொக்கநாதரிடம் தூது அனுப்ப முடிவு செய்தாளாம்.
பாடல் வரிகள்:
இந்தமனத் தைத்தூதாய் ஏகென்பேன் இம்மனமும்
அந்தமனோ தீதர்பால் அண்டாதே – எந்தவிதம்
என்றென்(று) இரங்கினேன் என்கவலை எல்லாம்பொற்
குன்றனையான் உன்னுடனே கூறுகேன் – சென்றாலும்
பண்ணிய பத்தொன் பதினா யிரத்திருநூற்(று)
எண்ணியதொண் ணூற்றொன்(று) எனுந்தொடையாய் – நண்ணி
ஒருதொடை வாங்கி உதவாயோ ஓர்சே
விருதுடை யார்க்கு நீ வேறோ?

(தூது தொடரும்)

[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon May 07, 2012 2:39 pm

சாமி wrote:
இப்ப சொக்கநாதரிடமிருந்து அவர் அணிந்த மாலை அதாவது ஒரு தொடை வாங்கிக் கொண்டு வரவேண்டும். அதுதானே தூதுச் செய்தி.

அட, இது தமிழால் முடியாதா? தமிழில் எதுகை, மோனை என்ற வகையில் 19,291 தொடைகள் இருக்கின்றன என்று இலக்கணப்புலவர்கள் கூறுகிறார்கள்.
தமிழில் இத்தனை தொடைகளா?

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Tue May 08, 2012 10:54 am

சாமி wrote:3 )
சரி அதெல்லாம் பிரசினைதான்! பேசாமல் நெஞ்சைத் தூது விடேன் என்றால் சொக்கநாதரைப் பற்றி ஞானிகள் ஏதோ சொல்கிறார்களே! ஆங்! அவர் மனாதீதராமே! அதாவது நெஞ்சுக்கு எட்டாதவராமே! என்ன செய்ய?
இப்ப என்ன பண்ணலாம், இப்ப என்ன பண்ணலாம் என்று பல வழிகளை யோசித்தபோது தலைவிக்கு ஒரு யோசனை பளிச்சிட்டதாம்.
ஆம்! தமிழைத் தூது விட்டால்!
அற்புதம்! அற்புதம்!!

அற்புதம்! அற்புதம்!!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jul 18, 2012 9:23 pm

4 ) தமிழே! சொக்கநாதருக்கு தூது விட உன்னைத் தேர்ந்தெடுத்தது எவ்வளவு நல்லதாகப் போயிற்று! நீ என்ன தனி ஆளா என்ன? உன்னைத்தூது விட்டால் கல்வி கேள்விக்குரிய பலரைத் தூதுவிட்டதாக அல்லவா பொருள்! யார், யார் உன்னோடு வருவார்கள்?

தலை, இடை, கடை தமிழ்ச் சங்கத்தில் தொடர்புடைய புலவர்களும் அல்லவா உன்னோட கூட வருவார்கள்? காரணம் அவர்கள் உன்னை என்றும் பிரியாதவர்கள் ஆயிற்றே! கூடல் என்னும் மதுரையை சிவபெருமானே அதாவது சொக்கநாதரே ஒருமுறை அரியணையில் அமர்ந்து செங்கோல் ஓச்சியதால் அது சிவராசதானி ஆயிற்று. அங்கே தமிழ்ச்சங்கத்தை நிறுவியவரும் சொக்கநாதர்தான். நிறுவியது மட்டும் அல்லாமல் தானும் புலவர்களோடு புலவராக இடையிருந்து தமிழை ஆய்கின்றவரல்லவா சொக்கநாதர்!
“கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து
பண்ணுறத் தெரிந்து ஆய்ந்தஇப் பசுந்தமிழ்”

என்றல்லவா பெரியோர்கள் பாடி இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல. புலவர்கள் சங்கத்தில் அமர்ந்திருப்பார்களாம்! சொக்கநாதர் அவர்களிடையே நின்றிருந்தே தமிழ் ஆய்வாராம்!
மூவர்கட்கு அரியான் நிற்ப முத்தமிழ் தெய்வச்சங்கப்
பாவலர் வீற்றிருக்கும் பாண்டி நன்னாடு போற்றி”

என்று இன்னொரு பெரியவரும் சொல்லி இருக்கிறார் அல்லவா?

அப்படியானால் அந்தத் தமிழ்ச் சங்கப்புலவர்கள் எவ்வளவு பெருமைக்குரியவர்கள்! அவர்களுக்கு பெருமை தந்தது யார்? மதுரையை ஆண்டு மதுரையை சிவராசதானி ஆக்கிய சொக்கநாதக் கடவுள், எனவே அவர்கள் அரசுக்கலைஞர்கள். அவர்களோடு அல்லவா தமிழே நீ தூது போவாய்! அதாவது சொக்கநாதர் மதிக்கும் புலவர்களோடு அல்லவா நீ தூது போவாய்! இதைவிட வேறு எனக்கு என்ன வேண்டும்? எனக்காக நீ செல்லும் தூது நிச்சயம் வெற்றிதான்!

அது மட்டுமா? மதுரையை ஆண்ட அங்கயற்கண்ணி (மீனாட்சி) யார்? உலகமெல்லாம் அவளைத் தமிழரசி என்றல்லவா கூறும்? மண்ணுலகம் விண்ணுலகம் எங்கும் திக்கு விசயம் செய்து தமிழின் பெருமையை நிலை நாட்டியவள் அவள். உன்னைத்தூதூ அனுப்பினால், தமிழே! அவளும் அல்லவா கூட வருவாள்!

அதோடு வேறு யார் யார் வருவார்கள்? செய்ய சிவஞானத்திரள் எனப்படும் சிவாகமத்தில் ஓர் ஏடு எடுத்த கணபதியும் உடன் வருவார்!

அதோடு மதுரையை ஆண்ட மன்னவர்களில் உக்கிரப் பெருவழுதியாகத் தோன்றி ஆண்ட முருகப்பெருமானும் அல்லவா வருவார்? முருகப்பெருமான் முத்தமிழ்க்கடவுள் அல்லவா? ஒருமுறை சொக்கநாதக் கடவுள் இயற்றிய ‘இறையனார் களவியல்’ என்ற நூலுக்கு உரை செய்து புலவர்கள் அரசவையில் படிக்க அவற்றை எல்லாம் கேட்டு அவற்றில் நக்கீரர் உரைக்கு மட்டும் கை தட்டி தலையசைத்து அவர் தமிழை ரசித்த கடவுள் அல்லவா முருகன்? அவரும் உன்னோடு வருவார்.

சீர்கொண்ட கூடற் சிவராச தானிபுரந்
தேர்கொண்ட சங்கத் திருந்தோறும் – போர்கொண் 1
டிசையும் தமிழரசென் றேத்தெடுப்பத் திக்கு
விசையஞ் செலுத்திய மின்னும் – நசையுறவே 2
செய்யசிவ ஞானத் திரளேட்டி லோரேடு
கையி லெடுத்த கணபதியும் – மெய்யருளாற் 3
கூடல் புரந்தொருகாற் கூடற் புலவரெதிர்
பாடலறி வித்த படைவேளும் – 4

(தூது தொடரும்)

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக