புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
26-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_c1026-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_m1026-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_c10 
85 Posts - 79%
heezulia
26-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_c1026-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_m1026-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
26-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_c1026-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_m1026-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
26-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_c1026-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_m1026-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
26-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_c1026-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_m1026-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_c10 
250 Posts - 77%
heezulia
26-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_c1026-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_m1026-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
26-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_c1026-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_m1026-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
26-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_c1026-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_m1026-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
26-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_c1026-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_m1026-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
26-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_c1026-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_m1026-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
26-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_c1026-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_m1026-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
26-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_c1026-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_m1026-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
26-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_c1026-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_m1026-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
26-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_c1026-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_m1026-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

26-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Aug 26, 2013 8:57 am

26-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! P7hx

1883 ஆம் ஆண்டு ஆகஸ்டு 26 அன்று பிறந்தார். விருத்தாசலம் முதலியாருக்கும் சின்னம்மாளுக்கும் ஆறாவது குழந்தையாகத் தோன்றினார்.  1891 ஆம் ஆண்டு சென்னை இராயப்பேட்டையில் தொடக்கக் கல்வி கற்றார்.  1894 ஆம் ஆண்டு வெஸ்லி பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார்.  சேர்ந்த சில மாதங்களில் கை கால் முடக்கம் ஏற்பட்டது.  இதனால் கல்வி தடைப்பட்டது.  நான்கு ஆண்டுகள் பள்ளிக்குச் செல்லவில்லை.

மீண்டும் 1898 ஆம் ஆண்டு வெஸ்லி பள்ளியில் சேர்ந்து மெட்ரிகுலேஷன் வரை பயின்றார்.  ஆசிரியர் கதிரைவேற் பிள்ளை சார்பாக நீதிமன்றத்துக்குப் போனதால், இறுதித் தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்து நின்றார்.  1901 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளையிடம் தமிழ் இலக்கியம், சைவ சாத்திரங்கள் பயின்று தேர்ந்தார்.  

1907 இல் கதிரைவேலர் மறைவு நிகழ்ந்தது.  விபின் சந்திர பால் சொற்பொழிவைக் கேட்க நேர்ந்தது அதுமுதல் தேசியத்தின் பொருட்டுப் போராடத் துணிந்தார்.  1907 முதல் 1908 வரை ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த ஸ்பென்சர் கம்பெனியில் பணி செய்தார்.  அங்கே இந்திய உரிமைகளைப் பற்றி சக ஊழியர்களிடம் படித்துக்காட்டுவார்.  இதனால் அக்கம்பெனியின் மேலாளர் திரு.வி.க வை எச்சரிக்க நேர்ந்தது.  இருப்பினும் அதனைப் பொருட்படுத்தாத திரு.வி.க அப்பணியைத் துறந்தார்.  1908 ஆம் ஆண்டு ஜஸ்டின் சதாசிவத்துடன் தொடர்பு ஏற்பட்டது.  1910 ஆம் ஆண்டு அன்னிபெசண்ட் அம்மையாரைச் சந்தித்தார்.  அம்மா என்று தான் திரு.வி.க பெசண்டை அழைத்து மகிழ்வார்.  1910 முதல் 1916 வரை வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

1912 ஆம் ஆண்டு கமலாம்பிகை என்னும் அம்மையாரை மணந்தார்.  மணவாழ்க்கை அவருக்கு இனிப்பூட்டுவதாய் இருந்தது.  தன்னிடமிருந்த மிருகப் போக்கை மாற்றியடு மணவாழ்க்கை தான் என்று தன்னுடைய குறிப்பில் திரு.வி.க குறிப்பிட்டுள்ளார். (அவருடைய மண வாழ்க்கைக் குறித்து மற்றொரு கட்டுரையில் விரிவாக அலசலாம். )

1914 ஆம் ஆண்டு சுப்புராய காமத், எஸ்.சீனிவாச ஐயங்கார் தொடர்பு ஏற்பட்டது.  1916 ஆம் ஆண்டு வெஸ்லி கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார்.  1917 ஆம் ஆண்டு பி.பி. வாடிய உடன் தொடர்பு ஏற்பட்டது.  பின்னாளில் திரு.வி.க தொழிற்சங்கம் தொடங்குவதற்கு வாடியாவின் தொடர்பு தான் காரணமாக இருந்தது.
1917 ஆம் ஆண்டு தேசிய நீரோட்டத்தில் தம்மை இணைத்துக்கொள்ள வேண்டி பணியை விடுத்தார்.  

திசம்பர் 7ஆம் நாள் தேசபக்தன் இதழின் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.  அவ்விதழ் தான் அவரை அதிகம் சமூகத்துடன் தொடர்புகொள்ளச் செய்தது.  நாடு, நாட்டு மக்கள் என்று தன்னுடைய பார்வையை விசாலப்படுத்திக் கொண்டார்.  தேசபக்தனில் இரண்டரை அண்டுகள் பணியாற்றினார் அதன் பின்னர் அவ்விதழின் செயலாளருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டின் காரணமாக இதழ்ப்பணியை விடுத்தார்.  பின்னர் நவசக்தி என்னும் இதழை நண்பர்களின் துணையுடன் தொடங்கி நடத்தி வந்தார்.

1918 இல் இந்தியாவிலேயே முதன் முதலில் தொழிற்சங்கம் தொடங்கினார்.  சென்னைத் தொழிலாளர் சங்கம் என அதற்குப் பெயரிட்டார்.  இச்சங்கத்திற்கு திரு.வி.க துணைத்தலைவராகப் பொறுப்பு வகித்தார்.  இதே ஆண்டில் தான் அவரின் துணைவியார் இயற்கை எய்தினார்.  உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்த நேரிட்டது.
1919 ஆம் ஆண்டு முதன் முதலாகக் காந்தியடிகளைச் சந்தித்தார்.  இவ்வாண்டில் தான் பெரியாரின் நட்பும் திரு.வி.கவுக்குக் கிடைக்கப்பெற்றது.  திலகரை வ.உ.சி உடன் சென்று சந்தித்தார்.  1920 ஆம் ஆண்டு மத்திய தொழிலாளர் சங்கம் தோற்றம் பெற்றது.  இவ்வாண்டு அக்டோபர் திங்களில் நவசக்தி என்னும் இதழைத் தொடங்கினார்.

1921 ஆம் ஆண்டு ஆளுநர் வெலிங்டன் பிரபு இவரை அழைத்து நாடுகடத்திவிடவதாக மிரட்டினார்.  ஆனால் அதற்கு திரு.வி.க அஞ்சவில்லை.  சர். தியாகராய செட்டியாரின் உதவியால் நாடுகடத்தும் நடவடிக்கை கைவிடப்பட்டது.
1925 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் வரலாற்றில் தனிச்சிறப்புடைய மாநாடு காஞ்சிபுரத்தில் நடந்தது.  தலைவர் திரு.வி.க வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத் தீர்மானத்தை ஏற்காமல் தள்ளியதால் பெரியார் ஈ.வே.ரா மாநாட்டிலிருந்து வெளியேறினார்.  இதனால் தமிழக அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டது.

1944 ஆம் ஆண்டு திரு.வி.க வின் வாழ்க்கைக் குறிப்பு வெளிவந்தது.  1947 ஆம் ஆண்டு திசம்பர் 7 வரை காங்கிரஸ் ஆட்சியில் திரு.வி.கவுக்கு வீட்டுச் சிறைவாசம் விதிக்கப்பட்டது.  1949 இல் தன்னுடைய ஒரு கண் பார்வையை இழந்தார், பின் இரு கண்களுமே இழக்க நேரிட்டது.  1953 செப்டம்பர் 17 அன்று மறைந்தார்.
நன்றி- சிலம்புகள்பிலாக்ஸ்பாட்



சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Aug 26, 2013 9:05 am

திரு.வி.கவின் சில நூல்கள்:-

பெரியபுராணம் (குறிப்புரையும் வசனமும்)
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
என்கடன் பணி செய்து கிடப்பதே
சைவ சமய சாரம்
நாயன்மார் திறம்
தமிழ்நாடும் நம்மாழ்வாரும்
சைவத்தின் சமரசம்
இன்ப வாழ்வு
முருகன் அல்லது அழகு
பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை
தமிழ்த் தென்றல் அல்லது தலைமைப் பொழிவு
கடவுள் காட்சியும் தாயுமானாரும்
தமிழ் நூல்களில் பௌத்தம்
சைவத் திறவு
இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்
சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து
நினைப்பவர் மனம்
இமயமலை அல்லது தியானம்
உரிமை வேட்கை அல்லது நாட்டுப்பாடல்
முருகன் அருள் வேட்டல்
சமரச சன்மார்க்க போதம்
சமரச தீபம்
சமரச சன்மார்க்கத் திறவு
தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத் திரட்டு
சித்த மார்க்கம்
நாயன்மார் வரலாறு
முடியா? காதலா? சீர்திருத்தமா?
திருமால் அருள் வேட்டல்
திருக்குறள் விரிவுரை - பாயிரம்
திருக்குறள் விரிவுரை - இல்லறவியல்
இந்தியாவும் விடுதலையும்
பொதுமை வேட்டல்
உள்ளொளி
திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள்
ஆலமும் அமுதமும்
புதுமை வேட்டல் சிவனருள் வேட்டல்
பரம்பொருள் அல்லது வாழ்க்கை வழி
அருகன் அருகே அல்லது விடுதலைவழி
பொருளும் அருளும் அல்லது மார்க்சியமும் காந்தியமும்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Aug 26, 2013 12:55 pm

பாரதியாரும் திரு.வி.க.-வும்

19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ் இலக்கியம் எழுச்சியுறக் காரணமாக எழுந்த இருபெருங்கதிர்கள் மகாகவி பாரதியும், தமிழ்த்தென்றல் திரு.வி.க.-வும்.
ஒப்புநோக்கத்தக்க உயரிய பண்புகள் இவ்விருவருக்கும் உண்டு. எனினும் கவிதையைப் போலவே, கம்பீரமாக வாழ்ந்து வெகுவிரைவில் தம் பணியை முடித்து விடைபெற்றுக் கொண்டவர் பாரதி (11.12.1882 – -11.09.1921).
உரைநடையைப் போலவே, நீள இருந்து வளர்ந்து வாழ்ந்து நிறைவு பெற்றவர் திரு.வி.க (26.08.1883  -17.09.1953). ஏறத்தாழ ஒரே காலக் கட்டத்தில் உதயமாகிய இவ்விரு இலக்கியக் கதிர்களும் சந்தித்துக் கொண்ட பதிவுகள் கவனத்திற்குரியவை.

பள்ளியாசிரியர்களாகப் பணி தொடங்கிப் பத்திரிகை ஆசிரியர்களாகி, தேசபக்தர்களாகவும், தேசத் தொண்டர்களாகவும், தேச விடுதலைக்குப் பேராடும் ஆயுதமாக எழுத்தைக் கொண்ட இலக்கியவாதியராகவும், சொற்பொழிவாளர்களாகவும் இவ்விருவரும் திகழ்ந்திருக்கின்றனர்.
வாழ்க்கைப் போராட்டத்தில் நிலைகொள்ள வேண்டிப் பொருள் தேட வேண்டிய கட்டாயம் ஒருபுறம், தன்மானம் இழவாது, தாயகம் காக்க வேண்டிச் சமர்புரியவேண்டிய கடமை மறுபுறம். இணைகோடுகளாகச் செல்ல வேண்டிய இவ்விருபுறங்களும் ஒன்றுக்கொன்று பொருதிக் கொள்ளும்போது எதை விடுவது என்ற நிலை வருகிறது. அந்த நேரத்தில் முன்னதை விடுத்து, பின்னதை ஏற்று, வரலாற்றில் முன்நிற்பவர்களாக இவ்விருவரும் திகழ்ந்திருக்கிறார்கள்.

அந்த வகையில் முன்னர்ப் பிறந்த பாரதி, திரு.வி.க-வுக்கு முன்னோடியாகவும், சக பயணியாகவும் விளங்கியிருக்கிறார் என்பது திரு.வி.க.-வின் வாழ்க்கைக் குறிப்புகளிடையே துலக்கமாகிறது.
திரு.வி.க. ஸ்பென்ஸர் நிறுவனத்தில் பணிபுரிந்த சமயம். வங்கப் பிரிவினையால் நாடே கொந்தளித்துக் கொண்டிருந்த நேரம். திலகர் தலைமையில் தீவிரமாக அரசியல் பணிபுரிந்த அரவிந்தரின் வந்தே மாதரம் வங்கப் பத்திரிகையும், தமிழகத்தில் பாரதி பங்காற்றிய இந்தியா பத்திரிகையும் திரு. வி.க.-வை ஈர்த்துத் தேச பக்தியில் திளைக்கச் செய்தன.

அதிலும், பாரதி முதலானோரின் முயற்சியால் சென்னைக்கு வரவழைக்கப் பெற்ற விபின்சந்திரபாலரின் கடற்கரை முழக்கம் திரு.வி.க.-வுக்குள் கனன்று கொண்டிருந்த விடுதலை வேட்கையைத் தூண்டி எரியவிட்டது. பின்னர் நிகழ்ந்ததைத் திரு.வி.க.வே பின்வருமாறு குறிக்கிறார்: பந்தேமாதரப் பத்திரிகையும், பாலர் பேச்சும், திலகர் சிறையும், இன்னபிறவும் எனக்கு அரசியல் பித்தை உண்டாக்கின. ஸ்பென்ஸர் வேலையை விடச் செய்தன. (திரு.வி.க. வாழ்க்கைக்குறிப்புகள், ப.196)

பின்னர் தேசபக்தன் இதழுக்கு ஆசிரியப் பணியேற்ற திரு.வி.க., புதுவையைப் புகலிடமாகக் கொண்ட பாரதி, வ.வே.சு.ஐயர் ஆகியோரின் விடுதலை குறித்துத் தொடர்ந்து அவ்விதழில் எழுதியிருக்கிறார். இவ் இருவரும் பிரிட்டிஷ் எல்லையில் உலவும் உரிமையுடையவராயிருத்தல் வேண்டும் என்ற கிளர்ச்சியைத் தேசபக்தன் தொடங்கினான். கிளர்ச்சி வெற்றியடைந்தது. புதுவையினின்றும் வ.வே.சு.ஐயரும், பாரதியாரும் (1920 பிப்ரவரியில்) வெளிவந்தனர். வ.வே.சு.ஐயர் எனக்கொரு கடிதம் எழுதினார்…. சுப்பிரமணிய பாரதியாருக்குச் சில தடைகள் கூ(க)டலூரில் கிடத்தப்பட்டன என்று ஓர் அரசியல் கிள்ளை தேசபக்தனுக்கு அறிவித்தது. தேசபக்தன் பாசுபதம் எழுந்தது. தடைகள் உருவெளியாயின. கவிஞர் சென்னை சேர்ந்தனர். யான் பாரதியாரை டிராம் தொழிலாளர் சங்கத்தில் கண்டேன். பாரதியார் நாவினின்றும் சக்திப்பாட்டு வீறிட்டது என்று திரு.வி.க. எழுதுகிறார். இவ்வாறு, பாரதியின் விடுதலைக்குத் தம் பத்திரிகை வாயிலாகப் பங்களித்திருக்கிறார் திரு.வி.க.
பின்னர், திலகருக்குப் பின்னர் தேசவிடுதலைப் போராட்டத்தை மேலெடுத்துச் சென்ற காந்தியடிகளின் பணியில் திரு.வி.க. தலைநின்ற போதும் பாரதி – திரு.வி.க. சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது.

1919 ஏப்ரல் ஆறாம் நாள், காந்தியடிகள் காட்டிய வழியில் தெய்வபக்தியோடு கூடிய தேசபக்திப் பஜனை நடைபெற்றது. முன் ஏற்பாட்டின்படி, காலையில் இராயப்பேட்டையிலுள்ள பஜனைக் கோஷ்டிகளும், மற்றவர்களும் தேசபக்தன் நிலையம் போந்தார்கள். அவர்களுடன் சுப்பராயகாமத்தும், யானும் ஊர்வலம் வந்தோம்; பிற்பகல் ஸ்ரீபாலசுப்பிரமணிய பக்தஜன சபையின், குகானந்த நிலையத்தை அடைந்தோம். சுப்பிரமணிய பாரதியார் பஜனைக் கோஷ்டியில் எங்கேயோ எப்படியோ கலந்து வந்தார்.
அவரைக் கண்டதும் செவி அவரது பாடலை விரும்பியது. பாரதியாரைப் பாடுமாறு கேட்டேன். தமிழ்ப் பெருமான், முருகா, முருகா என்று பாடத் தொடங்கினார். பாட்டு-  தமிழ்ப்பாட்டு-  தேனினும் இனிய முருகன் பாட்டு – படத்திலுள்ள ஓவிய முருகனை நகரச் செய்தது. ஓவிய உருவம் வீறுடன் வெளிவருவது போன்ற தோற்றம் உண்டாயிற்று. அன்பர்கள் மெய்கள் அரும்பின; விதிர்விதித்தன; சிலர் மயங்கினர்; சிலர் விழுந்தனர்; சிலர் கண்ணீர் உகுத்துத் தம்மை மறந்தனர்; எல்லாரும் ஆனந்தப் பரவசராயினர்; பாரதியார் சித்திரப் பதுமையானார். பாட்டுக்கும் ஓவியத்துக்கும் உள்ள ஒருமைப்பாட்டை யான், கண்ணாரக் கண்டேன். சிறிதுநேரங் கழித்துப் பாரதியார் விடைபெற்றுச் சென்றார் என்று நெகிழ்ந்தும் மகிழ்ந்தும் குறிப்பிடும் திரு.வி.க., பாரதியைத் தமிழ்ப் பெருமான் என்று பெயர்சூட்டி மகிழ்கிறார். இவ்வாறு திரு.வி.க.வால் பாராட்டப் பெற்ற பாரதி, திரு.வி.க.&வைப் பாராட்டிய வரலாறும் உண்டு. அதனைப் பாரதிதாசன் மூன்று கவிதைகளில் சிறப்பாகப் பதிவுசெய்திருக்கிறார்.

1918 ஆண்டுவாக்கில், பாரதி, வ.வே.சு.ஐயர், ஸ்ரீநிவாசாச்சாரியார் உள்ளிட்ட புரட்சியாளர்கள் புதுவையில் தங்கியிருந்தபோது, திரு.வி.க.வின் இலக்கியச் சொற்பொழிவு நடைபெற்றிருக்கிறது. புதுவை சமரச சன்மார்க்க சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற அந்நிகழ்வில் சிலப்பதிகாரக் கவிநயம் குறித்துத் திரு.வி.க. உரை நிகழ்த்தியிருக்கிறார்.
“………தூய
மதுவையள்ளி மலர்தேக்கி வண்டுகட்கு
விருந்தாக்கி மயக்கு தல்போல்
பொதுவினர்க்குச் சிலப்பதிகா ரச்சுவையை
நடையழகைப் புகலும் போதில்
இதுவையா பேச்சென்பேன்; பாரதியார்
கைகொட்டி எழுவார், வீழ்வார்”
(திரு.வி.க. மணிமடல், 1943)
என்று தம் கவிதையில் பதிவுசெய்கிறார் பாரதிதாசன். இன்னொரு கவிதையில், அவ்வுரையைச் செவிமடுத்த பாரதியின் உணர்வுகளைப் பின்வருமாறு படம்பிடித்துக் காட்டுகிறார்.
“சமரசசன் மார்க்கசங்கக் கட்டி டத்தில்
தகுதிருவீ கலியாண சுந்த ரர்தம்
அமைவுடைய இளங்கோவின் கவிந யத்தை
அமுதம்போல் எடுத்துரைத்தார் பிரசங் கத்தில்
தமைமீறிப் பொங்கியெழும் சந்தோ ஷத்தால்
தடதடெனக் கரகோஷம் செய்தார் ஐயர்
நமதுதமிழ் இனிமைதனைக் கண்டு கொள்க
நானிலமே என்றனதம் விழியும் மார்பும்”
என்பது அப்பாடல். இவ்விரு பாடல்களைத் தவிர இன்னொரு பாடலிலும் திரு.வி.க.-  பாரதி இணைப்புச் சித்திரத்தைச் சிறப்புறத் தீட்டியிருக்கிறார்.

புதுவை பாலையசாமி மடத்தில் நடைபெற்ற சிலப்பதிகாரச் சொற்பொழிவு நிகழ்வு. பாரதி, பாரதிதாசனோடு, ஸ்ரீநிவாசாச்சாரியார், வ.வே.சு.ஐயர் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக அமர்ந்திருந்த சபை. சிலப்பதிகாரச் செய்யுளைப் பதம்பிரித்துச் சுளைசுளையாகச் செவியினில் சுவைபட ஊட்டிக் கொண்டிருந்த திரு.வி.க. இடையில் ஒரு சீர்திருத்தச் செய்தியையும் குறித்திருக்கிறார்.

இந்து- சைவ மரபில் நின்றொழுகிய அவர் இசுலாமிய அன்பரின் இல்லத்தில் சென்று விருந்து உண்ட அனுபவத்தைக் கூறி, மக்களில் உயர்வு தாழ்வு இல்லை என்று விளக்கியிருக்கிறார். இதனைக் கேட்ட பாரதி, கொண்ட மகிழ்வுக்கு அளவே இல்லை. செந்தமிழ் உணர்வும், சீர்திருத்தமும் இந்தநாட்டு முன்னேற்றத்திற்கு உயிர் எனக் கருதிய அவர், திரு.வி.க.-வுக்கு இணை, இந்நாட்டில் வேறு எவரும் இலர் என்று ஊர் அதிர்ந்திட உரைத்தார் என்று குறிப்பிடுகிறார் பாரதிதாசன். முந்தைய பாட்டில், பாரதியை, ஐயர் என்று சுட்டிய அவர், இப்பாட்டில், திரு.வி.கலியாண சுந்தரனாரை, மணவழகனார் என்று தமிழ்ப் பெயரிட்டுக் காட்டுகிறார்.

புதுவையில் இருந்து வெளியேறிய பின்னர், பாரதி, பொட்லபுதூர்ப் பள்ளிவாசலில் இசுலாம் மார்க்கத்தின் மகிமை குறித்துச் சொற்பொழிவு நிகழ்த்தியமையும், சென்னையில் இசுலாமியர் தேனீரகத்தில் பாரதி பலரும் அறிய அமர்ந்து தேனீர் பருகியமையும் இந்நிகழ்வோடு ஒப்பிட்டறிய வேண்டியவை.
எழுத்துக்கும் பேச்சுக்கும் முன்னெடுத்துக்கொண்ட கொள்கைகளை, இயல்பாகவே வாழ்வில் கடைபிடித் தொழுகிய முன்னோடிகளாக, காலத்தை முற்போக்குத்திசையில் முன்னெழுப்பிச் சென்ற வரலாற்று நாயகர்களாகத் திரு.வி.க.வும், பாரதியும் திகழ்ந்தனர் என்பதை இன்று நினைவுகூர்வது பொருத்தப் பாடுடையது.
இந்து & முஸ்லீம் இணக்கத்தோடு, செந்தமிழ் உணர்வும் நமக்கு வாய்க்க இவர்களின் வரலாறு இனிதே துணைநிற்கும் என்பதில் ஐயமில்லை.

நன்றி: omsakthionline.com

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Aug 26, 2013 3:58 pm

26-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! 3838410834 26-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! 3838410834 26-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! 3838410834 அய்யா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்துக்கள்




26-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! M26-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! U26-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! T26-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! H26-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! U26-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! M26-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! O26-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! H26-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! A26-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! M26-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! E26-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 26, 2013 4:00 pm

நல்ல பகிர்வு நண்பர்களே புன்னகை :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக