புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவகிரகங்கள் Poll_c10நவகிரகங்கள் Poll_m10நவகிரகங்கள் Poll_c10 
25 Posts - 38%
heezulia
நவகிரகங்கள் Poll_c10நவகிரகங்கள் Poll_m10நவகிரகங்கள் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
நவகிரகங்கள் Poll_c10நவகிரகங்கள் Poll_m10நவகிரகங்கள் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
நவகிரகங்கள் Poll_c10நவகிரகங்கள் Poll_m10நவகிரகங்கள் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
நவகிரகங்கள் Poll_c10நவகிரகங்கள் Poll_m10நவகிரகங்கள் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
நவகிரகங்கள் Poll_c10நவகிரகங்கள் Poll_m10நவகிரகங்கள் Poll_c10 
2 Posts - 3%
prajai
நவகிரகங்கள் Poll_c10நவகிரகங்கள் Poll_m10நவகிரகங்கள் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
நவகிரகங்கள் Poll_c10நவகிரகங்கள் Poll_m10நவகிரகங்கள் Poll_c10 
1 Post - 2%
Barushree
நவகிரகங்கள் Poll_c10நவகிரகங்கள் Poll_m10நவகிரகங்கள் Poll_c10 
1 Post - 2%
M. Priya
நவகிரகங்கள் Poll_c10நவகிரகங்கள் Poll_m10நவகிரகங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நவகிரகங்கள் Poll_c10நவகிரகங்கள் Poll_m10நவகிரகங்கள் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
நவகிரகங்கள் Poll_c10நவகிரகங்கள் Poll_m10நவகிரகங்கள் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
நவகிரகங்கள் Poll_c10நவகிரகங்கள் Poll_m10நவகிரகங்கள் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
நவகிரகங்கள் Poll_c10நவகிரகங்கள் Poll_m10நவகிரகங்கள் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
நவகிரகங்கள் Poll_c10நவகிரகங்கள் Poll_m10நவகிரகங்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
நவகிரகங்கள் Poll_c10நவகிரகங்கள் Poll_m10நவகிரகங்கள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நவகிரகங்கள் Poll_c10நவகிரகங்கள் Poll_m10நவகிரகங்கள் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
நவகிரகங்கள் Poll_c10நவகிரகங்கள் Poll_m10நவகிரகங்கள் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நவகிரகங்கள் Poll_c10நவகிரகங்கள் Poll_m10நவகிரகங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நவகிரகங்கள் Poll_c10நவகிரகங்கள் Poll_m10நவகிரகங்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவகிரகங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 25, 2013 9:48 am

சூரியன்

நவக்கிரகங்களின் நாயகனாக விளங்குபவர் சூரியன். நமது ஐந்து மதத்தின் ஆறு பிரிவுகளில் ஒன்றான செளரம் என்பது சூரியனையே முழுமுதல் கடவுளாக கொண்டாடுகிறது.

இருகரங்களில் தாமரை ஏந்தி, வலம் புறம் உஷா, இடது புறம் பிரத்யுஷா என இரு மனைவியருடன் ஏழு குதிரை பூட்டிய ரதத்தில கம்பீரமாய் வலம் வருபவர்.

ஒரிசா மாநிலத்தில் கோனார்க் என்னும் இடத்தில் உள்ள சூரியனால் கோயில் பிரசித்தி பெற்றது.

சூரியனுக்கு உரிய கடவுள் சிவனும் அக்னியுமாகும். தானியம் கோதுமை, மலர் செந்தாமரை, ராசிக்கல் மாணிக்கம், சிம்ம ராசிக்கு சூரியன் அதிபதி ஆவார்.

சூரியன் நாம் வாழும் பூமியை விட 109 மடங்கு பெரியது. ஆரஞ்சு நிறமான கதிர்களை வீசிக்கொண்டு, 26 நாட்களுக்கு ஒரு சுற்று தன்னைதானே சுற்றுகிறது.

இதன் கதிர் அலைகள் நமது எலும்புக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க வல்லது. வாழ்க்கையில் வெற்றி, கல்வி மேன்மை அறிவு மேன்மை, வாழ்க்கை வளங்கள் ஆகியன அளிக்கும் வல்லமை சூரியக் கதிர்களுக்கு உண்டு.

தமிழ்நாட்டில் சூரியனுக்கான தலம் சூரியனால் கோயில். இது தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

சூரியனால் கோயிலில் பிராணநாதர் என்ற பெயரில் சிவனும் மங்களாம்பிகை என்ற பெயரில் பார்வதியும் எழுந்தருளி உள்ளனர்.

இங்குள்ள விநாயகருக்கு கோள் தீர்த்த விநாயகர் என்றே பெயர்.

11-ம் நூற்றாண்டில் சோழ மன்னரால் கட்டப்பட்ட கோயில். கோயில் வாசலிலேயே ஏராளமாக தாமரை மலர்கள் விற்பனைக்கு கிடைக்கிறது. இங்கே வந்து சூரிய பகவானைப் பிரார்த்தனை செய்தால் சகல தோஷங்களும் நீங்கி, குறைகள் எல்லாம் தீயினில் விழுந்த தூசியாகிவிடும் என்பதில் ஐயமில்லை.

சீலமாய் வாழச் சீரருள் புரியும்

ஞாலம் புகழும், ஞாயிறே போற்றி

சூரியா போற்றி. சுதந்திரா போற்றி

வீரியா போற்றி. வினைகள் களைவாய்.



நவகிரகங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 25, 2013 9:49 am

சந்திரன்

அழகானவர், குளிர்ச்சியானவர். இந்திரன் கெட்டதும் பொண்ணாலே சந்திரன் கெட்டதும் பொண்ணாலே என்று ஒரு பழமொழி உண்டு.

இந்திரனின் சகோதரர்தான் சந்திரன் என்பது வழக்கம். 27 நட்சத்திரப் பெண்களை மணந்தவர் எனினும் ரோகிணியுடன் வாழ்பவர். தேய்வதும் வளர்வதும் இவரது போக்கு என்பது புராணக்கதை. விஞ்ஞான ரீதியில் அப்படி அல்ல...

அமாவாசையும் பவுர்ணமியும் இவரால் ஏற்படுகிறது. கால கணிதத்தின் நாயகர் இவர்.

சிவன் இவரைத் தலையில் குடியுள்ளதால் 'பித்தா பிறை சூடி பெருமானே அருளாளர்' என்பது பாடினார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

இரு கரங்களில் அல்லி(குமுதம்) மலர் ஏந்தி வரத முத்திரையுடன் காணப்படும் இவர் மான்கள் பூட்டிய 10 சக்ர தேரில் வலம் வருபவர்.

இவருக்கு உரிய கடவளு வருணன். நிறம் வெள்ளை. தானியம் அரிசி. ராசிக்கல் முத்து, மலர் செவ்வல்லிப்பூ. இடம் அக்னிமூலை.

சூரியனின் இருந்து 9 கோடி, 20 ஆயிரத்து 30 மைல்களுக்கு அப்பால் வான மண்டபத்தில் வெண்ணிறமான கதிர்கறை வீசிக்கொண்டு 29 நாட்களுக்கு ஒரு சுற்று சுழலும் சந்திரன் ரத்தத்திற்கு ஆக்கமும் ஊக்கமும் தரவல்லவர். ரத்த ஓட்டம் சீரமைப்பு. அறிவு மேன்மை, வாழ்க்கை வளங்கள் அளிக்க கூடியவர்.

திருப்பதி சந்திரனக்கான தலம் எனினும் தமிழ் நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் திங்களூர் என்ற பெயரிலேயே சந்திரனுக்கு ஒரு பரிகாரத்தலம் உள்ளது.

சிவன், கைலாசநாதர் என்ற பெயரிலும் பார்வை, பூங்கோதை என்ற பெயரிலும் எழுந்தருளியுள்ள இக்கோயிலில் சந்தரனும் வீற்றிருந்து நன்மை செய்கிறார்.

நிலவொளியில் வளரும் மூலிகைக்கு மருத்துவ குணம் அதிகம். திங்கள் கிழமை விரதம் சந்திரனுக்கு ஏற்றது. அவருக்கு சோமன் என்றொரு பெயரும் உண்டு. ஆன்மீக எழுச்சிக்கு சந்திரன் காரணகார்த்தா. அம்புலி மாமா என சிறுவர்களாலும் கொண்டாடும் சந்திரன் நலம் பயக்கும் கோள் என கொள்வோம்.

எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்

திங்களே போற்றி திருவருள் தருவாய்

சந்திரா போற்றி. சத்குணா போற்றி

சங்கடம் தீர்ப்பாய் சதுரா போற்றி.



நவகிரகங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 25, 2013 9:50 am

செவ்வாய்

செவ்வாயை அங்காரன் ன்று அழைப்பது வழக்கம். 8 குதிரைகள் பூட்டிய ரதத்தில் பவனிவரும் இவரது வாகனம் ஆடு. சிவந்த உருவம் உடையவர். முன்னிரு கரங்கள், அபய, வரத முத்திரைகள் காண்பிக்க, பின்னிரு கரங்களில் ஆயுதம் தரித்தவர்.

பூமியின் மைந்தன் எனப்படும் இவன் தோன்றியது சிவனின் கண்களின் கோபக் கனலில் இருந்து என்கிறது புராணம்.

இவரது கடவுள் சுப்பிரமணியர், தானியம் துவரை, ராசிகக்கல் பவளம், மலர் செண்பகப்பூ. இவர் ஒரு வைத்தியரும் கூட நோய்களை குணப்படுத்துவதில் வல்லவர்.

ஆகவே இவரது தலமே வைத்தீஸ்வரன் கோயில்தான். இத்தலம் நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகில் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

அங்கு ​வைத்தீஸ்வரன் என்ற பெயரில் சிவனும், தையல் நாயகி என்ற பெயரில் பார்வதி எழுந்தருளி உள்ளனர். வைத்தீஸ்வரன் கோயிலுக்கு புள்ளிருக்கு வேயூர் என்று புராணப் பெயர்.

கோயில் பிரகாரத்தில் செவ்வாய் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். செவ்வாய்க்கிழமை அன்று சாமி புறப்பாடு உண்டு. செவ்வாய் கிழமைகளில் இங்கு சித்த மிருதத்தீர்த்தத்தில் நீராடி வழிபட எல்லா நலங்களும் தருவார்.

சூரியனில் இருந்த 14 கோடி மைல்களுக்கு அப்பால், செந்நிறமான கதிர்களை வீசிக் கொண்டு 18 மாதத்திற்கு ஒரு சுற்று சுழலும் செவ்வாய் எலும்புகளின் இடையே உள்ள மஞ்சைக்கு ஆக்கமும் ஊக்கமும் தருபவர். அச்சமின்மை, விஞ்ஞான அறிவு, மெய்யறிவு ஆகியவை வழங்குபவர் வாழ்க்கை வளங்களைத் தருபவர். இவருக்கு இன்னொரு முக்கியமான வழிபாட்டு ஸ்தலம் பழனி மலை.

சிறப்பறு மணியே செவ்வாயத் தேவே

குறையிலா தருள்வாய் குணமுடன் வாழ

மங்களச் செவ்வாய் மலரடி போற்றி

அங்காரகனே அவதிகள் நீக்கு.



நவகிரகங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 25, 2013 9:51 am

புதன்

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது பழமொழி. புதன் கிரகம் அறிவுத் தெய்வம்.

புதனை பூஜித்தால் கவிபாட வரும் என்பது சான்றோர் கருத்து.

நான்கு கரங்கள் உடைய புதன், மஞ்சள் ஆடை அணிந்து தங்க ஆபரணங்கள் பூட்டி, சிம்ம வாகனத்தில் வலம் வருபவர்.

இவரது நிறமே மஞ்சள்தான். வித்யா காரகன் எனப் புகழப்படும் இவர் எப்போதும் நன்மையே செய்பவர்.

மிதுன, கன்யா ராசிகளின் அதிபதி. கையில் புத்தகம் ஏந்தி இருக்கும் இவருக்கான கடவுள் விஷ்ணு.

தானியம் பயறு, மலர் வெண்காந்தள் மலர். ராசிக்கல் மரகதம், க்ஷேத்ரம் மதுரை என்றாலும் நாகை மாவட்டத்தில் உள்ள திருவெண்காட்டில் புதனுக்கான ஆலயம் உள்ளது.

இத்தலம் சீர்காழியில் இருந்து தரங்கம்பாடி செல்லும் வழியில் சுமார் 10-12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

திருவெண்காட்டில் எழுந்தருளியுள்ள சிவனின் பெயர் சுவேதாரண்யேச்வரர். அம்பாளின் பெயர் பிரும்மவித்யாம்பிகை.

பூமியில் பயிர்களுக்கு எல்லாம் பசுமை தரும் கிரகம் புதன் என்பது சாஸ்திரம்.

அவரே வியாபாரத்தில் வெற்றி, தர்க்க சாஸ்திரத்தில் வல்லமை, கல்வி மேன்மை எல்லாம் வழங்குபவர்.

புத் என்ற வடமொழிச் சொல்லின் பொருளே அறிதல் என்பதுதான்.

புத்தி காரகன் ஆன புதன் எல்லோருக்கும் நல்ல புத்தி வழங்கட்டும்.

இதமுறை வாழ இன்னல்கள் நீக்கு
புதபகவானே பொன்னடி போற்றி
பதஜ்தந் தாள்வாய் பண்ணொலியானே
உதவியே யருளும் உத்தமா போற்றி




நவகிரகங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 25, 2013 9:51 am

வியாழன்

வியாழனை குரு என்றும் அழைப்பது பிரசித்தம். தேவர்களின் குருவாக விளங்கும் பிரகஸ்பதியும் இவரே. ஆங்கிலத்தில் ஜூபிடர் என்பார்கள்.

ஆங்கிரஸ மகரிஷிக்கும் - சிரத்தா தேவிக்கும் மகனாக பிறந்தவர் இவர். அவர்களின் கடைசி மகன். குரு பார்க்க கோடி பலன் என்பது பழமொழி.

குருவின் நிறம் பொன்னிறம், வாகனம் மீன், தானியம் கொத்துக் கடலை, மலர் முல்லை, வஸ்திரம் மஞ்சள் ஆடை, ராசிக்கல் புஷ்பராகம்.

நாக்கு சக்கரங்கள் உள்ள நீதிகோவும் என்ற தேரில் வலம் வருவார் வியாழன். அதில் மஞ்சள் நிற குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும்.

நான்கு கரங்களை உடைய வியாழபகவான் மூன்றில் ஜப மாலை, யோகதண்டம், கமண்டலம் ஏந்தி இருப்பார் ஒருகரம். அபய ஹஸ்த முத்திரையுடன் இருக்கும்.

ஸ்ரீரங்கம் புதனுக்கான க்ஷேத்ரம் என்பார்கள். எனினும் ஆலங்குடி வியாழன் வழிபாட்டுக்கு புகழ் பெற்ற ஸ்தலமாகும். இத்தலம் கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் 17 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு குரு தெஷ்ணார்த்தி கோலத்தில் வீற்றிருக்கிறார். இங்கு வடக்குப் பிரகாரத்தில் தனி சந்நிதி உண்டு எனினும் தெற்கு பிறகாரத்தில் உள்ள தெஷ்சிணா மூர்த்தி குருவாக வழிபடப்படுகிறார்.

தெஷ்ணாமூர்த்தியே குருவாக அமர்ந்து அறிவை, ஞானத்தை போதிக்கும் அரிய தலம்தான் இந்த ஆலங்குடி திருச்செந்தூர் பிரகஸ்பதி (குரு) தலம் என்றும் அங்கு முருகனே பிரகஸ்பதியாக இருப்பதாக ஐதீகம். அதோடு மயிலாடு துறை அருகே திட்டை என்றொரு தலமும், சென்னை திருவலிதாயம் (பாடி) என்ற தலமும் குருவுக்கு ஏற்ற வழிபாட்டு தலங்களாகும்.

ஜாதகத்தில் குருபலன் வந்தால் திருமணம் நிச்சயமாகும். சுப காரியங்களுக்கு குருவின் கடைக்கண் முக்கியம். வியாழக்கிழமை தெஷ்ணாமூர்த்தியை வழிபட எல்லாம் நலனும் கிடைக்கும்.

குணமிகு வியாழக் குரு பகவானே
மனமுடன் வாழ மகிழ்வுடனருள்வாய்
பிரகஸ்பதி வியாழ பரகுரு நேசா
கிரகதோஷ மின்றி கடாஷித் தருள்வாய்.




நவகிரகங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 25, 2013 9:52 am

வெள்ளி

வெள்ளி என்பதையே சுக்கிரன் என்று அழைக்கிறோம். ஆங்கிலத்தில் வீனஸ் என்பார்கள். விடியற்காலையில் நாம் இவரைக் கண்ணால் பார்க்க முடியும். வெள்ளி முளைத்து விட்டது என்பது சொல்வழக்கு. இவரும் ஒரு குருதான். வியாழன் தேவர்களின் குரு என்றால் வெள்ளி அதாவது சுக்கிரச் சாரியார் அசுரர்களின் குரு.

ஒருவர் ஜாதகத்தில் சுக்கிர திசை என்றால் கேட்க வேண்டாம் அதிர்ஷ்டம் அடித்துக் கொண்டு வந்து சேரும். செல்வம் பெருகும். பிருகு மகரிஷி - புலோமிசை ஆகியோர் புதல்வரான இவருக்கு பார்க்கவர் என்ற பெயரும் உண்டு. அதிபுத்திசாலி.

இவர் ஒரு கண் உடையவர். ராஜயோக காரகன். எட்டு வெள்ளிக் குதிரை பூட்டிய ஐங்கோண வடிவ ரதத்தில் வலம் வரும் இவர் சரீர ஆரோக்கியம், நல்லவர் நட்பு, நல்ல வீடு, செல்வம், புகழ் ஆகியவற்றை அருள்பவர்.

இவருக்கான தானியம் மொச்சை, ராசிக்கல் வைரம், திசை தென்கிழக்கு, மலர் வெண்தாமரை, இவரை வழிபட சிறந்த ஸ்தலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கஞ்சனூர். இது சூரியனின் தலமான சூரியனார் கோவிலில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

இங்கு சிவன் அக்னிசுவரர் என்றும் அம்பாள் கற்பகாம்பிகை என்றும் எழுந்தருளி உள்ளனர். வெள்ளிக்கிழமைகளில் அம்பாளை வழிபட்டாலே போதும் சுக்கிரனின் பூரண அருள் கிட்டும்.

சென்னை மயிலாப்பூரில் சுக்கிரனுக்கு ஒரு கோயில் உள்ளது. கபாலிசுவரர் கோயில் அருகேயே உள்ள இந்த ஆலயம் வெள்ளீசுவரர் கோயில் என்றழைக்கப்படுகிறது. இங்கு வழிபட்டாலும் நலன் கிட்டும்.

சுக்கிரமூர்த்தி சுபசுக மீவாய்
வக்கிரமின்றி வரமளித் தருவாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே





நவகிரகங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 25, 2013 9:52 am

சனி

சனி என்றாலே சங்கடங்கள் தருபவர் என்ற அச்ச உணர்வு பலருக்கு உண்டு. அவரை அசுபகிரகம் என்றும் பயங்கரமானவர் என்றும் கருத்துக்கள் உண்டு. ஆனால் அது முற்றிலும் உண்மையல்ல. சனீஸ்வரன் வேண்டு மென்றே யாருக்கும் துன்பம் தருவதில்லை. முந்தைய வினைப் பயன்களை அனுபவிக்கும்படி செய்கிறார் அவ்வளவே.

சனி வேகமாக செயல்படுபவர் அல்ல எனவே அவரே 'மந்தன்' என்று சொல்வார்கள். மெதுவாக செயல்படும் இவர் ஒரு கால் ஊனமானவர். குள்ளமானவர்.

நீலமணித் தேரில் நீலப் பட்டுத் துணியுடன் காற்றில் பறக்க, தேரை எட்டு கரு நிறக் கழுகுகள் இழுத்துக் கொண்டு வர வான்வெளியில் சனி பவனி வருகிறார் என்பது ஐதீகம்.

சனிஸ்வரனுக்கு பிரியமான ஆடை கருப்பு, உலோகம் இரும்பு, தானியம் எள், சுவை கசப்பு, மலர் வன்னி (இந்தீவிர புஷ்பம்), இவருக்கான கடவுள் பிரம்மா.

இருகரம் உடைய இவர் வலது கரத்தில் தண்டம் ஏந்தியிருப்பார். இடது கரத்தால் வரத முத்திரை காட்டுவார். தாமரை மலர் போன்ற பீடத்தில், காக்கை வாகனத்தில் அமர்ந்திருந்திருப்பார். இவருக்கு மூன்று மனைவியர் உண்டு. வேஷ்டா, மந்தா, நீலா என்பது அவர்களின் பெயர். குளிகன் என்றொரு மகன் உண்டு. அவனது பெயரில் தினமும் ஒரு நேரம் உண்டு. அந்த நேரத்தில் எது செய்தாலும் விருத்தியாகும் எனவே அந்நேரத்தில் நல்லதே செய்ய வேண்டும்.

சனிக்கான ஸ்தலம் புதுவை மாநிலத்தில் காரைக்கால் அருகில் உள்ள திருநள்ளாறு. இங்கு நளனுக்கு நற்கதி கிடைத்ததாகப் புராணம். இங்கு சிவன் தர்பாரண்யேச்சுவரர் என்றும் தேவி பிராணாம்பிகை என்றும் எழுந்தருளி உள்ளனர். நளதீர்த்தம் முக்கிய தீர்த்தமாக உள்ளது. பிராணாம்பிகை சன்னதிக்கு வலதுபுரத்தில் சனிஸ்வரர் சன்னதி உள்ளது. அவரை வழிபட சகல துன்பங்களும் விலகும். நல்ல எண்ணெயில் எள் முடிச்சில் தீபமேற்ற சகல நோயும் நீங்கும்.

சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் அளித்தருள்வாய்
சச்சரவின்றிச் சனீஸ்வரத் தேவே
அசச்கம் வாழ இன்னருள் தா தா.





நவகிரகங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 25, 2013 9:53 am

ராகு

பாற்கடலைக் கடைந்து எடுத்த அமுதைத் தேவர்களுடன் திருட்டுத் தனமாக அமர்ந்து அருந்தியதால் மோகினி வேடத்தில் இருந்த விஷ்ணுவால் தண்டிக்கப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட, அசுரகுல மைந்தன் சுவர்பானு (ஸைம்ஹிகேயன்) இரு துண்டானான்.

ஆனால் அவன் அமுதம் உண்டதால் தலையில் இருந்து பாம்பு உடலும் உடலில் இருந்து பாம்பு தலையுமாக இரு உருவம் ஆனான்.

இருவரும் சந்திர - சூரியர்களைப் பிரார்த்தித்தனர். ஏனெனில் அவர்களே அமுதம் உண்ணும்போது மோகினியிடம் காட்டி கொடுத்தவர்கள். சூரிய - சந்திரர்கள் சிவனிடம் ஓடி தஞ்சம் புகுந்தனர். துரத்தி வந்தவர்களை தடுத்து நிறுத்திய சிவன் அவர்களுக்கு கிரகபதவி வழங்கி அருளினார்.

அன்றே ராகு கேது என்றழைக்கப்படும் கிரகங்கள் ஆகும். இவர்களை சாயா கிரகம் என்பார்கள். ஏனெனில் இவர்களுக்கு உருவம் கிடையாது வெறும் நிழல் மட்டுமே.

மனிதத் தலையும் பாம்பு உடலும் கொண்ட ராகு நான்கு சுரத்தவர் வாளும், கேடயமும், சூலமும் வைத்திருப்பார். ஒருகரம் வரத முத்திரை காட்டும், எட்டு குதிரைகள் பூட்டிய தேரில் மேருவை அப்பிரதட்சிணமாக சுற்றி வரும் இவர் சிறந்த சிவபக்தர்.

இவரது ஆடை கறுப்பு அல்லது புகையும் ஆடை, மலர் மந்தார புஷ்பம் சமித்து அருகம்புல். உலோகம் ஈயம், தானியம் உளுந்து, ராசிக்கல் வைடூரியம். இவருக்கு இரு மனைவியர் ஸிம்ஹி சித்ரலேகா, நாகவல்லி, வாகனம் சிம்மம் தர்ப்பாசனத்தில் வீற்றிருப்பார். சனி, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் ராகுவின் நண்பர்கள்.

ராகுவின் அருள் இருந்தால் அரச பதவி கிட்டும். குண்டலியின் அதிதேவதையான ராகுவின் அருள் இருந்தால் சித்தராகலாம். அஷ்டமா சித்தி பெறலாம்.

ராகுவைத் துதித்தால் ஞானம் பெறலாம். பாவங்களைக் களையவே இவர் மனிதர்களுக்கு சங்கடங்கள் தருகிறார்.

அமாவாசை மற்றும் சனிக்கிழமைகளில அரச மரத்தடியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாகர்களை வழிபட வியாதிகள் போகும், துன்பம் விலகும்.

ராகு - கேதுவுக்கான பரிகாரத்தலம் காளஹஸ்தி. வாயு லிங்கமான காளஹத்தீர்வரரை ராகு-கேதுவுமே ஸ்தாபித்து வழிபட்டதாக வரலாறு. எனினும் தமிழ் நாட்டில் கும்பகோணத்தை அடுத்த திருநாகேசுவரம் ராகுவுக்கு சிறப்பான தலமாக விளங்குகிறது. ராகுகால வழிபாடு இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. முக்கியமாக ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டம் அலைமோதும். ராகுவின் சந்நிதி வெளிப்பிரகாரத்தில் உள்ளது. இங்கு சிவன் நாக நாதராக எழுந்தருளியுள்ளார். அம்பிகை பிறையணிவாளுதலாள். ராகுவை இங்கு வந்து வழிபட கைமேல் பலன் உண்டு.

அரவெனும் ராகு அய்யனே போற்றி
கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஆகவருள் புரி அனைத்திலும் வெற்றி
ராகுக்கனியே ரம்மியா போற்றி




நவகிரகங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 25, 2013 9:53 am

கேது

பாம்பு தலையும் மனித உடலும் கொண்டவர் கேது பகவான். இந்த கிரகம் சகிப்புத் தன்மையை அளிக்கவல்லது. ஞானம் வழங்கும் குருவைக் காட்டித் தருபவர். இவர் மிகவும் சூடானவர். பார்வை ஜ்வாலை மாதிரி இருக்கும். கேதுவின் பார்வையும் சூரியக் கதிரும் சேர்ந்து படும் கற்களே வைடூரிய மணியாகிறது என்பது கருத்து.

கறுத்த நிறம் உடைய இவர் ஒரு கையில் கதை ஏந்தியிருப்பார், இன்னொரு கையால் அபயஹஸ்தம் காட்டுபவர்.

பத்து குதிரைகள் பூட்டிய ரதத்தில் வரும் இவர் ராகுவைப் போலவே அப்பிரதட்சிணமாக வலம் வருபவர். முக்கோணக் கொடிக்குச் சொந்தக்காரர். கோபக்காரர், அதர்மத்தைப் பொறுக்க மாட்டார் என்றெல்லாம் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கேதுவின் மனைவி பெயர் சித்ரலேகா. எட்டு பிள்ளைகளுக்கு சொந்தக்காரர். கேதுவுக்கு பிரியமான தான்யம் கொள்ளு, மலர் செவ்வல்லி, ராசிக்கல் கோமேதகம். கடவுள் வாயு.

கேதுவுக்கு ஏற்ற தலம் காளஹ்ஸ்திதான் என்றாலும் தமிழ் நாட்டில் புதன் பகவானின் ஸ்தலமான திருவெண்காட்டின் அருகே சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கீழப் பெரும்பள்ளம் முக்கிய கேது ஸ்தலமாக விளங்குகிறது.

கேதுத் தேவே கீர்த்தித் திருவே
பாதம்போற்றி பாபம் தீர்ப்பாய்:
வாதம், வம்பு வழக்கு களின்றி
கேதுத் தேவே கெண்மையாய் ரக்ஷி!




நவகிரகங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக