ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

100 யாரு? ரூபாய், பெட்ரோல், வெங்காயம் !

4 posters

Go down

100 யாரு? ரூபாய், பெட்ரோல், வெங்காயம் ! Empty 100 யாரு? ரூபாய், பெட்ரோல், வெங்காயம் !

Post by krishnaamma Sat Aug 24, 2013 7:46 pm

இந்த மூன்று "வஸ்து'களும் 100 என்ற அபாயகரமான எண்ணை நோக்கி, "அதிரடி'யாக "பாய்ந்து' கொண்டுஇருக்கின்றன.

ஆறு மாதங்களுக்கு முன்...:

அமெரிக்க டாலருக்கு எதிராக 53.88 ரூபாயாக இருந்த ரூபாய் மதிப்பு, 65.30 ரூபாயை தொட்டுள்ளது. ஒரு லிட்டர் 72.17 ரூபாயாக இருந்த பெட்ரோல் விலை, 74.49 ரூபாய் ஆகி உள்ளது.ஒரு கிலோ 25 ரூபாயாக இருந்த பெரிய வெங்காயத்தின் விலையும், "பெரிதாகி' 75 ரூபாயை எட்டி உள்ளது. நூறு என்ற எல்லைக் கோட்டை யார் முதலில்தொடுவது, என இந்த மூன்று "அயிட்டங்களும்' ஒன்றுக்கு ஒன்று சளைக்காமல் போட்டி போடுகின்றன.

"இவற்றில் எது முதலில் நூறை தொடும்' என பட்டிமன்றம் வைத்தால்,திருவாளர் பொதுஜனத்தின்' கண்களில், வெங்காயத்தை உரிக்காமலேயே குடம் குடமாய் "தண்ணீர்' கொட்டும்.மக்களின் அத்தியாவசிய பொருட்களான இவை, ஏதோ அனாவசியமான பொருட்களைப் போல "தாவி'க்கொண்டு இருக்கின்றன. வெங்காயம், ஒரு உணவுப் பொருள். பெட்ரோல்இல்லாமல் போக்குவரத்து இல்லை. இந்த இரண்டையும் வாங்க வேண்டும் என்றால் ரூபாய் வேண்டும். ஆக,ஒரு மனிதனுக்கு எது எல்லாம் தேவையோ, அதுஎல்லாம் எட்டா பொருளாகி "அந்தரத்தில்' நின்று கொண்டு, "கை கொட்டி' சிரிக்கின்றன. போதாதற்கு தங்கமும்தன் பங்கிற்கு, 22 காரட் ஒரு கிராம் 3000 ரூபாயை தொட்டு, நடுத்தர மக்களை "நடுங்க' வைக்கிறது.

""போடா...வெங்காயம்''என இனியாரையும்திட்ட முடியாது...

உடம்பைக் கூடதூக்கிக்கொண்டு நடக்க சோம்பேறித்தனப்பட்டு, எதற்கெடுத்தாலும் பெட்ரோல் வண்டியை நாடுவோர் இனி "நட'ராஜா தான்...

வெறும் காற்றைக் குடித்துக்கொண்டு, எச்சிலை விழுங்கிக் கொண்டு, வயிற்றை வாயைக் கட்டிப்போட்டு, கட்டுக் கட்டாய் சம்பாதித்த பணத்தை, இனிமேல் பார்த்துக்கொண்டு மட்டும் தான் இருக்க முடியும்...

66 ஆண்டுகள்...66 ரூபாய்...


ஆடிட்டர் ஸ்ரீதரன், மதுரை: இனி வீட்டில் வெங்காய பஜ்ஜி சுடும் வாசனை அடித்தால், வருமான வரி ரெய்டுக்கு வந்து விடுவோம் என, அதிகாரிகள் அச்சுறுத்துமளவுக்கு வெங்காய விலை ஏறி கொண்டுள்ளது.டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ந்து வரும் போது, வெங்காய விலை ஏற்றம்கொஞ்சம் ஆறுதலளிப்பதாக தான் இருக்கிறது. ரூபாய் மதிப்பை அதிகரிக்க ரிசர்வ் வங்கிக்கு ஒரு ஆலோசனை. இனி எல்லா வங்கி கிளைகளிலும், ஒரு கிலோ வெங்காயம் வாங்கி கொண்டு ஒன்றரை டாலர் கொடுக்குமாறு ஏற்பாடு செய்து விட்டால் போதும்.

அமெரிக்கர்கள் பயந்து கொண்டு, டாலரை அச்சடித்து அனுப்பி வைப்பர்.ஒரு வகையில் இது நம் அரசின் மிகப்பெரிய சோசலிஸ சாதனை என்று தான் சொல்ல வேண்டும். இன்று இந்தியாவில் பெட்ரோல், வெங்காயம் மற்றும் பீர் மூன்றும் ஏறக்குறைய ஒரே விலையில் தான் விற்கிறது. அத்தியாவசியம், வசதி, ஆடம்பரம் எல்லாவற்றுக்கும் ஒரே தலைவிதி தான்.இன்னொரு கோணத்தில் பார்த்தால், இது பிரமாண்டமான வளர்ச்சி. நாம் சுதந்திரம் பெற்ற போது, ஒரு டாலர்- ஒரு ரூபாய் என இருந்தது. ஆண்டுக்கு ஒரு ரூபாய் வீதம் வளர்ந்து, இந்தாண்டு இறுதிக்குள் 66 ரூபாயை தொட்டு விடும் போல் இருக்கிறது. 66 ஆண்டுகள்...66 ரூபாய்...நல்ல வளர்ச்சி தான். சரி ரூபாய் இனிமேல் எப்போது மேலே போகும்? அடுத்த 20:20 கிரிக்கெட் நடக்கும் போது நிச்சயம் மேலே போகும். எப்படி என்று வெள்ளந்தியாக கேட்காதீர்கள். கிரிக்கெட் போட்டி துவங்கும் போது "டாஸ்' போடுவார்கள் அல்லவா? அப்போது அந்த ஒரு ரூபாய் நாணயம் நிச்சயம் மேலே போகும்.

அதுவரை நாம் சந்தோஷமாக டிவி சீரியல் பார்த்து கொண்டிருப்போம். வெங்காயமும், ரூபாயும் சீஸாவிளையாடிக் கொண்டிருக்கிறது என்றால், இப்போது அந்த விளையாட்டில் தங்கம், பெட்ரோலும் சேர்ந்து கொண்டுள்ளன. ஒரு பக்கம் தங்கநகைகள் வாங்குவீர் என்ற பிரசாரம். மறுபக்கம் தங்கம் வாங்குவதை குறைத்துகொள்ளுங்கள் என நிதியமைச்சரின் கெஞ்சல். இது கொஞ்சம் வேடிக்கையாக இருக்கிறது. தெருவில் நடக்காதீர்கள், விபத்துக்களே இருக்காது என போக்குவரத்து போலீசார் அறிவுரைகூறினால் எப்படியிருக்கும்? அப்படியுள்ளது.தங்கத்தில் முன்பேர வர்த்தகம் ராட்சத அளவில் நடந்து கொண்டிருக்கிறது. அந்த தரப்பை செல்லமாக மணிக்கட்டில் தட்டி கொண்டிருக்கிறது அரசு.

வெங்காயம், டாலர், பெட்ரோல், தங்கம்- இந்த நாட்டில் அரசியல்வாதிகள், பணமுதலைகள் எல்லோரும் உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறார்கள். இந்திய மக்களும், இந்திய ரூபாயும் பரிதாபமாக கீழே நின்று கொண்டு மேலே பார்த்து கொண்டிருக்கும் ஜீவன்களை பார்த்து கொண்டிருக்கிறார்கள். நிதியமைச்சரும், ரிசர்வ்வங்கியும் புற்றுநோய்க்கு சுக்கு கஷாயத்தை மருந்தாக கொடுத்து கொண்டிருக்கிறார்கள். பாமரன்... பாவம் மூக்கை பிடித்துகொண்டுகஷாயத்தை குடித்து கொண்டிருக்கிறான்.

வெளிநாட்டு முதலீடுகளைஊக்குவித்தால் தப்பிக்கலாம்:

முத்துராஜா, பொருளியல் பேராசிரியர்,அமெரிக்கன் கல்லூரி, மதுரை:இந்தியா இன்றைக்கு எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்னை, டாலருக்கு எதிரான ரூபாயின் வீழ்ச்சி தான். இதற்கு, நாட்டின் குறைந்த பொருளாதார வளர்ச்சி விகிதம், உற்பத்தி மற்றும் முதலீடுகள் சரிவு, பண வீக்கம் அதிகரிப்பு ஆகிய முக்கியகாரணங்களை குறிப்பிடலாம்.இந்தியாவின் நூறு சதவீதம் பெட்ரோல் தேவை, இறக்குமதியை நம்பி உள்ளது. இதன் விலைநிர்ணயத்தில் அரசின் பங்கு சிறிதளவும் இல்லை. எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்கின்றன. பெட்ரோலுக்காக அதிகளவில் நாம் டாலரில் விலையைகொடுக்க வேண்டியுள்ளது.

இதனால், டாலர் தேவை அதிகரித்து, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தியாவில் முதலீடு செய்யும், எப்.எப்.ஐ., எனப்படும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களுக்கு, 8 சதவிகிதம் வரை வட்டி வழங்கப்பட்டது. ஆனால், அமெரிக்காவில் ஓரிரு சதவீகிதம்மட்டுமே வட்டி அளிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் சுதாரித்துக்கொண்ட அமெரிக்கா, வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இதனால், எப்.எப்.ஐ.,காரர்கள் அமெரிக்காவை நோக்கிசெல்லத் துவங்கியதும், இந்தியாவின் ரூபாய்வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக அமைந்தது.சமீபத்தில், பொருளாதார வளர்ச்சியை புரட்டிப்போடும் அளவிற்கு "வெங்காய அரசியலும்' விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறுகிய காலத்தில்வெங்காயத்தின் தேவை பலமடங்கு உயர்ந்துள்ளது.

அதேநேரத்தில், அறுவடை நேரத்தில் பெய்த மழையால் உள்நாட்டு உற்பத்தி பாதித்துள்ளது. மேலும், எல்லையில் பதட்டம், ஆட்சி மாற்றம் காரணமாக பாக்கிஸ்தானில் இருந்து நாம் இறக்குமதிசெய்வதும் பாதித்துள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வுகாண மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து பொருளதார வளர்ச்சியை எட்டுவதில் தீவிரகவனம் செலுத்த வேண்டும்.

நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

100 யாரு? ரூபாய், பெட்ரோல், வெங்காயம் ! Empty Re: 100 யாரு? ரூபாய், பெட்ரோல், வெங்காயம் !

Post by krishnaamma Sat Aug 24, 2013 7:48 pm

பயம் பயம் பயம் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

100 யாரு? ரூபாய், பெட்ரோல், வெங்காயம் ! Empty Re: 100 யாரு? ரூபாய், பெட்ரோல், வெங்காயம் !

Post by Muthumohamed Sat Aug 24, 2013 8:19 pm

யாரு வெங்காயம் தான் 100 தொட போகிறது



100 யாரு? ரூபாய், பெட்ரோல், வெங்காயம் ! M100 யாரு? ரூபாய், பெட்ரோல், வெங்காயம் ! U100 யாரு? ரூபாய், பெட்ரோல், வெங்காயம் ! T100 யாரு? ரூபாய், பெட்ரோல், வெங்காயம் ! H100 யாரு? ரூபாய், பெட்ரோல், வெங்காயம் ! U100 யாரு? ரூபாய், பெட்ரோல், வெங்காயம் ! M100 யாரு? ரூபாய், பெட்ரோல், வெங்காயம் ! O100 யாரு? ரூபாய், பெட்ரோல், வெங்காயம் ! H100 யாரு? ரூபாய், பெட்ரோல், வெங்காயம் ! A100 யாரு? ரூபாய், பெட்ரோல், வெங்காயம் ! M100 யாரு? ரூபாய், பெட்ரோல், வெங்காயம் ! E100 யாரு? ரூபாய், பெட்ரோல், வெங்காயம் ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

100 யாரு? ரூபாய், பெட்ரோல், வெங்காயம் ! Empty Re: 100 யாரு? ரூபாய், பெட்ரோல், வெங்காயம் !

Post by SajeevJino Sun Aug 25, 2013 7:56 am

ச்சே பீர விட்டுட்டாங்களே


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

100 யாரு? ரூபாய், பெட்ரோல், வெங்காயம் ! Empty Re: 100 யாரு? ரூபாய், பெட்ரோல், வெங்காயம் !

Post by ராஜா Sun Aug 25, 2013 10:45 am

SajeevJino wrote:ச்சே பீர விட்டுட்டாங்களே
இது அத்தியாவசிய பொருள் அதனால் இதன் விலை எவ்வளவு இருந்தாலும் மக்கள் வாங்கிவிடுவார்கள் , போராட்டம் பண்ண மாட்டார்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

100 யாரு? ரூபாய், பெட்ரோல், வெங்காயம் ! Empty Re: 100 யாரு? ரூபாய், பெட்ரோல், வெங்காயம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum