ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 8:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 7:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோதிடம் உண்மை என நிரூபித்தால் ரூ. 1 கோடி பரிசு ஜோதிடத்தை ஆராய்ந்த பேராசிரியர் சவால்

+3
ராஜ்.ரமேஷ்
சதாசிவம்
பார்த்திபன்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஜோதிடம் உண்மை என நிரூபித்தால் ரூ. 1 கோடி பரிசு ஜோதிடத்தை ஆராய்ந்த பேராசிரியர் சவால் - Page 2 Empty ஜோதிடம் உண்மை என நிரூபித்தால் ரூ. 1 கோடி பரிசு ஜோதிடத்தை ஆராய்ந்த பேராசிரியர் சவால்

Post by பார்த்திபன் Thu Aug 22, 2013 1:36 pm

First topic message reminder :

ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் திருத்த முடியாத அளவுக்கு ஜோதிடம், வாஸ்து, எண்கணிதம், பெயரியல், நாடி ஜோதிடம், சோழி உருட்டுதல், குறி சொல்லுதல் எனப் பலவேறு முகங்களில் மக்களை மூளைச் சலவை செய்து பணம் கறந்து வருகிறார்கள் ஜோதிட சிகாமணிகளும், பூஷணங்களும்.

ஜோதிடம் என்பது அறிவியல் ரீதியில் மூட நம்பிக்கையே. அது இந்தியாவில் வேத நூல்களிலோ, மகாபாரதம், ராமாயணம், உபநிஷத்துகள் போன்றவற்றிலோ அது பற்றிய சிறுகுறிப்புகள் கூட இடம் பெறவில்லை.

ஜோதிடம் பற்றிய குறிப்புகளோ கிரகங்கள், ராசிகள் பற்றிய தகவல்களோ பழைமையான இந்திய நூல்களில் எதிலும் காணப்படவில்லை.

ஜோதிடக் கலை என்பது புராதன கிரேக்க ரோமானிய கலாச்சாரத்திலிருந்து பிறந்து உலகம் முழுவதும் பரவியதாகும்.

பெரும்பாலான ஜோதிடர்கள் தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் பேச்சு கொடுத்து கிடைக்கும் தகவல்களிலிருந்து யூகமாக பல ஆரூடங்களைக் கூறுவார்கள்.

இப்படி சுமார் 10-12 ஆருடக் குறிப்புகள் சொல்லும்போது அவற்றில் ஒன்றிரண்டு இயற்கையாகவே பொருந்தி இருந்தால் மக்கள் ஜோதிடரை நம்பத் தொடங்கிவிடுகிறார்கள். சரியாக 10 பலன்கள் சொன்னால் அதில் பலித்த 3 பலன்களையே ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ள பலரிடம் சொல்லிக் கொண்டு திரிவார்கள். பலிக்காக பலன்களைப் பற்றி வாய்த் திறப்பதில்லை. ஜோதிடர்களிடம் ஏமாந்துவிட்டோம் என்பதை மற்றவர்களிடம் காட்டிக் கொள்ள விரும்பாத மனநிலையின் விளைவே இதற்குக் காரணம்.

தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைகள், மனப்பயம், கவலைகள் இவையே ஜோதிடரின் மூலதனமாகும். இவற்றை மிகைப்படுத்தி கற்பனை கலந்து பல ஆருடங்களைச் சொல்லி வாடிக்கையாளர்களை பிரமிக்க வைத்துவிடுவார்கள்.

தேடி வரும் வாடிக்கையாளர்கள் மனத்தில் நம்பிக்கை உண்டாக்கும் வகையில், பல்வேறு சாமி படங்கள், பூஜைப் பொருள்கள், சங்கு சக்கரங்கள், செப்புத் தகட்டில் வரைந்த எந்திரங்கள், கமகமக்கும் பூமணம், ஊதுவத்தி நெடி, திருநீறு, சாம்பிராணி புகை, சந்தனம் போன்ற பொருள்களுடன் ஜோதிடரிடம் பணிந்து போகும் சூழ்நிலையை உருவாக்கி வைத்து உளவியல் ரீதியாக தாங்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட வைத்து விடுவார்கள். பூர்வஜென்ம கர்மபலன் என்றெல்லாம் சொல்லி, சிந்தனைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடுவார்கள். எந்தவொரு ஜோதிடமும் பத்துக்குப் பத்து பலன்களை மிகத் துல்லியமாகச் சொன்னது இது வரையில் யாரும் கிடையாது

ஜோதிடம் மூடநம்பிக்கை என்பதை விளக்குவதற்காக பல்வேறு அறிவியலாளர்கள் பெரு முயற்சி எடுத்து வருகிறார்கள். கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஏ.எஸ்.நடராஜ் என்பவர் ஜோதிடத்தைக் கற்றிருப்பவர். இந்த ஜோதிடம் மக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்குத்தான் பயன்படும் என்று எண்ணி ஜோதிடத்திற்குப் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். ஜோதிடத்திற்கே சவால், கடவுள் ஒரு முழு சிந்தனை, போன்ற தனது கன்னட மொழி பெயர்ப்பு நூல்களில் வாஸ்து, ஜோதிடம், ஆன்மா, மறுபிறப்பு மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு கடவுள்கள் உள்பட அனைத்துப் பிரச்சினைகளையும் அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து கன்னடமொழியில் பல நூல்களை எழுதியுள்ளார்.

முதன் முதலில் 2001 ஆம் ஆண்டில் ஜோதிடம் உண்மையென்பதை நிரூபித்துக் காட்டுமாறு ரூ 10 லட்சம் பரிசு தருவதாக சவால் விட்டு நாடு முழுவதுமுள்ள பல ஜோதிடர்களுக்கு ஏ.எஸ்.நடராஜ் கடிதங்கள் எழுதி அனுப்பினார். ஆனால், ஜோதிடர் எவரும் அந்தச் சவாலை ஏற்று ஜோதிடத்தை நிரூபிக்க முன்வர-வில்லை. ஒரு சிலர் சவாலை ஏற்பதாக பத்திரிகைகளில் அறிவித்து விளம்பரம் பெற்றுவிட்டு காணாமல் போனார்கள்.

எனவே, இப்பொழுது பரிசுத் தொகையை ரூபாய் ஒரு கோடியாக உயர்த்தி தனது சவாலை நடராஜ் திரும்பவும் அறிவித்திருக்கிறார். அவரது சவால் விவரம் வருமாறு:

சவாலை ஏற்று வரும் ஜோதிடரிடம் ஒரே ஒரு ஜாதகம் வழங்கப்பட்டு 10 கேள்விகள் கேட்கப்படும். இவை கடந்த காலத்தைப் பற்றி, நிகழ்காலத்தைப் பற்றி, எதிர்காலத்தைப் பற்றியதாக இருக்கும்.

ஜோதிடம் என்பதே எதிர்காலத்தைப் பற்றி கூறும் ஆரூடம் என்பதால் எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகள் மிக முக்கியமானவை. இவற்றிற்கு 80 சதவிகிதமாவது சரியான பதில்களைக் கூறவேண்டும். சவாலை ஏற்க வரும் ஜோதிடரோ, மந்திரவாதியோ யாராக இருந்தாலும் ரூபாய் ஒரு லட்சம் காப்புத் தொகை செலுத்தி கலந்து கொள்ளலாம். போட்டியில் வென்றால், டெபாசிட் தொகையுடன் ரூபாய் ஒரு கோடி பரிசும் வழங்கப்படும்.

ஜோதிடத்திற்கு சவால் விட்டுள்ள ஏ.எஸ். நடராஜ் பெங்களூரு பத்மநாப நகர், 5-ஆவது பிரதான சாலையில் வசித்து வருகிறார்.

ராஜ் வைச்சரிக்கா வேதிகே என்ற சங்கத்திற்கும் அகில கர்நாடக விச்சரவாடி சங்கத்திற்கும் தலைவராக உள்ளார். அவர் ஜோதிஷெகே சவாலு என்ற புத்தகத்தை ஜோதிடர்களுக்கு சவால் விட்டு அவர் எழுதியுள்ளார். ஜோசியம், ஆவி, மறுபிறவி, கீதை, வேதாந்த இந்து மதம், கடவுளின் தோற்றம், வேத உபநிடதத்தில் பவுத்த வாதம், புராணங்கள், தர்மங்கள், ஆதியாத்மா போன்ற பல புத்தகங்கள் பிரபல ஜோதிடர்கள் எழுதியுள்ள புத்தகங்களைப் படித்து ஆராய்ந்துள்ளார்.

ஜோதிடப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்த போது, பாலஜோதிடம் என்பது முற்றிலும் தவறானது; அடிப்படையற்றது; இந்தியாவைச் சேர்ந்ததல்ல; முறையற்றது என்பதை நன்றாக அறிந்து கொண்டார். பிறகு, அவர் பழைய பாரம்பரியத்திலிருந்து பகுத்தறிவு வாதியாகவும் பழைமை வாதத்திலிருந்து நவீன விஞ்ஞான பார்வைக்கும் மாறினார். ஜோசியத்தில் உள்ள கிரகங்கள், நட்சத்திரங்கள் அவற்றின் பலன்கள் அனைத்தும் முற்றிலும் பிழையானது; ஆதாரமற்றது; விஞ்ஞானத்திற்கு எதிரானது என்று அறிந் தார்.

ஏ.எஸ்.நடராஜ் கன்னடத்தில் எம்.ஏ., பட்டமும், அறவியலில் எம்.ஏ.பட்டமும், பி.எட். பட்டமும் பெற்றவர். கல்லூரிப் பேராசிரியராகவும் பணியாற்றியவர். தற்போது அவர் பங்குச் சந்தை ஆலோசகராக உள்ளார்.

மனமறிந்து ஒரு சின்னஞ்சிறு சிசுவை படுகொலை செய்வதற்கு ஒப்பானது ஜோதிடம்.

மடமையை அறியாமையால் பயந்து சாகின்ற அப்பாவி மக்களை ஏமாற்றி தங்கள் வயிற்றை வளர்க்கின்ற அயோக்கியத்தனம் என்கிறார்.

---------------------------------இயற்கைவாதி செ. கஜபதி
நன்றி: எதிரொலி -28.2.2010
மூலம்: http://thamizhoviya.blogspot.in/
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down


ஜோதிடம் உண்மை என நிரூபித்தால் ரூ. 1 கோடி பரிசு ஜோதிடத்தை ஆராய்ந்த பேராசிரியர் சவால் - Page 2 Empty Re: ஜோதிடம் உண்மை என நிரூபித்தால் ரூ. 1 கோடி பரிசு ஜோதிடத்தை ஆராய்ந்த பேராசிரியர் சவால்

Post by ராஜ்.ரமேஷ் Sat Aug 24, 2013 11:48 am

[quote="Aathira"]
சிவா wrote:ஜோதிடம் உண்மையோ பொய்யோ எனக்குத் தெரியாது, ஆனால் ஜோதிடத்தை நம்பியவன் வாழ்வில் முன்னேற முடியாது என்பது மட்டும் நன்றாகத் தெரியும்!
மருத்துவத்தால் அனைத்து நோய்களையும் குணப்படுத்திவிட முடியுமா? முடியாது. முடியாது என்பதற்காக மருத்துவத்தை நம்பாமலா இருக்கிறோம்.





திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்


பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

ஜோதிடம் உண்மை என நிரூபித்தால் ரூ. 1 கோடி பரிசு ஜோதிடத்தை ஆராய்ந்த பேராசிரியர் சவால் - Page 2 Empty Re: ஜோதிடம் உண்மை என நிரூபித்தால் ரூ. 1 கோடி பரிசு ஜோதிடத்தை ஆராய்ந்த பேராசிரியர் சவால்

Post by ராஜா Sat Aug 24, 2013 12:59 pm

ஜோதிடர்களை நம்பாதீர்கள் , ஆனால் ஜோதிடத்தை நம்புங்கள்.

முழு ஆர்வத்துடன் இதில் என்ன இருக்கிறது என தெரிந்துகொள்ள முயலுங்கள் உங்களுக்கு பல ஆச்சரியங்கள் கிடைக்கும்.இதற்காக நீங்கள் பல அரைகுறை ஜோதிடர்களை சந்திக்க வேண்டியிருக்கும் (இப்ப தான் முழுவதும் ஜோதிட சாஸ்திரத்தை அறிந்தவர்கள் இல்லையே)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜோதிடம் உண்மை என நிரூபித்தால் ரூ. 1 கோடி பரிசு ஜோதிடத்தை ஆராய்ந்த பேராசிரியர் சவால் - Page 2 Empty Re: ஜோதிடம் உண்மை என நிரூபித்தால் ரூ. 1 கோடி பரிசு ஜோதிடத்தை ஆராய்ந்த பேராசிரியர் சவால்

Post by ராஜ்.ரமேஷ் Sat Aug 24, 2013 1:16 pm

ராஜா wrote:ஜோதிடர்களை நம்பாதீர்கள் , ஆனால் ஜோதிடத்தை நம்புங்கள்.

முழு ஆர்வத்துடன் இதில் என்ன இருக்கிறது  என தெரிந்துகொள்ள முயலுங்கள் உங்களுக்கு பல ஆச்சரியங்கள் கிடைக்கும்.இதற்காக நீங்கள் பல அரைகுறை ஜோதிடர்களை சந்திக்க வேண்டியிருக்கும் (இப்ப தான் முழுவதும் ஜோதிட சாஸ்திரத்தை அறிந்தவர்கள் இல்லையே)  
நிச்சயமான உண்மை.




திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்


பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

ஜோதிடம் உண்மை என நிரூபித்தால் ரூ. 1 கோடி பரிசு ஜோதிடத்தை ஆராய்ந்த பேராசிரியர் சவால் - Page 2 Empty Re: ஜோதிடம் உண்மை என நிரூபித்தால் ரூ. 1 கோடி பரிசு ஜோதிடத்தை ஆராய்ந்த பேராசிரியர் சவால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum