Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மோடியும் அமெரிக்காவும்!
+6
SajeevJino
ரா.ரமேஷ்குமார்
shenbagakumar
பார்த்திபன்
DERAR BABU
khaleel
10 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
மோடியும் அமெரிக்காவும்!
First topic message reminder :
இந்தியாவிலிருந்து ஒரு மாணவர் தனது மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்ல முடியும்.
தொழிலதிபர் தனது வர்த்தக நோக்கத்திற்காக அமெரிக்கா செல்ல முடியும். விளையாட்டு வீரர் நாட்டின் பெருமையை நிலைநாட்ட அமெரிக்கா செல்ல முடியும்.ஆனால் மூன்றாவது முறையாக குஜராத் முதல்வராக இருக்கும், இன்னும் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ்ஸால் முன்மொழியப்படும் மோடி அவர்கள் அமெரிக்கா செல்ல முடியாது.
நாங்கள் அவரை அனுமதிக்க முடியாது என்று அமெரிக்கா ஒருமுறை அல்ல பலமுறை திட்டவட்டமாகக் கூறி வருகிறது. கடைசியாக இரண்டு நாட்களுக்கு முன்புகூட மீண்டும் அதை உறுதிபடுத்தியதை நான் தமிழ் தொலைக்காட்சி செய்தியில் கேட்டேன். ஆனால் அந்தச் செய்தியை மறுநாள் எந்தத் தமிழ் தினசரியும் வெளியிடவில்லை. அது மோடி மீதான பயத்தினாலா அல்லது மோடியின் விளம்பர கம்பெனி தந்த பணத்துக்கு விலைபோனதாலா என்பது தெரியவில்லை. நாம் கேட்டால், அது பத்திரிகை சுதந்திரம் என்பார்கள்.
சரி, இப்போது விசயத்துக்கு வருவோம். மோடியை அமெரிக்கா ஏன் அனுமதிக்கவில்லை? இதற்கு நாம் எவ்வளவு முயன்றாலும் ஒரு வரியில் பதில் சொல்ல முடியாது. கொஞ்சம் விரிவாக அலச வேண்டியுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் பிரபல இந்தி நடிகர் சல்மான்கானுக்கு பிரிட்டன் விசா மறுக்கப்பட்டது. அதற்கான காரணம், சாலை விபத்தில் ஒருவர் உயிரிழக்க காரணமாக சல்மான்கான் இருந்தார். அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அது எந்த நேரமும் இறுதிக் கட்டத்தை அடையலாம். இப்படி ஒரு குற்றப் பின்னணியில் இருக்கிறார். மேலும் சமீபத்தில் மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய்தத் 3.5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அனுபவிக்கின்றார். இந்தப் பீதியில் சல்மான்கான் இருக்கலாம். இந்தக் காரணங்களால் அவர் பிரிட்டனில் தலைமறைவாகிவிட்டால், குற்றவாளிக்குத் தஞ்சம் அளிப்பதாக இந்தியா குற்றம் சாட்டும். இதனால் இருநாட்டின் சகஜ நிலை பாதிக்கும் என்ற தொலைநோக்கு சிந்தனையே சல்மான்கானுக்கு விசா மறுப்பு.
இதைப்போன்று பல மடங்கு தீவிரமான பிரச்சனை மோடியுடையது. ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை நோக்கி கொலைவெறித் தாக்குதல் நடத்தி பல ஆயிரம் பேரைக் கொன்ற, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருள்களைச் சூறையாடி துவம்சம் செய்த மெகா குற்றப் பின்னணி மோடியுடையது. இப்படியிருக்க, அமெரிக்கா ஒரு சுதந்திர ஜனநாயக நாடு, தனது நாட்டின் பாதுகாப்பு கருதி எதையும் செய்ய அதற்கு உரிமை உள்ளது. இந்திய ஜனாதிபதியையே பாதுகாப்புக் கருதி சோதனை என்ற நோக்கில் அசிங்கப்படுத்தியதை இந்தியா என்றும் மறக்காது. அப்படிப்பட்ட அமெரிக்கா, ஒரு மெகா குற்றப் பின்னணி கொண்ட மனிதரை அனுமதிப்பதால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுவிட்டால் என்ற தொலைநோக்கு சிந்தனையே மோடிக்கான விசா மறுப்பு.
இந்த மோடி சிறந்த நிர்வாகி, பேச்சாளர் என்றெல்லாம் சொல்லப்படுகின்றது. அப்படிப்பட்ட ஒருவரை ஒரு தனியார் தொலைக்காட்சி ஓடை நேர்காணலுக்கு அழைத்தது. அங்கு தனக்கு சூனியம் வைக்கப் போகிறார்கள் என்று அறியாத மோடி பெருமையாக அங்கு அமர்ந்தார்.
நிகழ்ச்சியில் நிருபர் மோடியைப் பார்த்து குஜராத் கலவரம் தொடர்பாக தன்னிலை விளக்கம் கேட்டார். அந்த நிமிடம் மோடி திக்கித் திணறி, விக்கி தண்ணீர் குடித்து பேட்டியைப் பாதியில் நிறுத்தி ஓடிப்போனதை நாடே பார்த்தது. ஏன் அமெரிக்காவும் பார்த்திருக்கலாம். இப்படி ஒரு அவமானத்துக்குப் பேர் பெற்ற மோடி பிரதமர் மன்மோகன் சிங்கை விவாதத்துக்கு அழைப்பது அடக்கமுடியா சிரிப்பை வர வைக்கிறது.
இந்த மோடி பிரதமராகவே ஆனாலும் அமெரிக்கா செல்ல முடியாது. ஏன் தெரியுமா? அமெரிக்க விசா பெற அமெரிக்கா வைக்கும் நிபந்தனை, நீதிமன்றத்தில் எந்த வழக்கும் நிலுவையில் இல்லாத நிரபராதியாக இருக்க வேண்டும். இவர் பிரதமரானால் நீதிமன்றத்தில் வழக்கு இல்லாமல் போய்விடுமா என்ன? பாபர் மசூதியை இடிக்க கரசேவைக்குத் தலைமை தாங்கினார் என்ற ஒரே குற்றப் பின்னணியை கொண்ட அத்வானி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு அந்தக் கட்சி படுதோல்வி அடைந்தது. இன்று நாட்டின் ஒரு சமுதாயமே வெறுக்கும் நபராகவும், வல்லரசு அமெரிக்கா புறக்கணிக்கும் நபராகவும் இருக்கும் மோடியும் அவர் சார்ந்து இருக்கும் கட்சியும் ஒருமுறை அல்ல பலமுறை சிந்திக்க வேண்டும். இக்கட்டுரையின் இறுதியாக கவிஞர் அல்லாமா இக்பால் அவர்களின் வைர வரிகளை நினைவுகூறி நிறைவு செய்கிறேன்.
"நீங்கள் எது ஒன்றுக்கும் ஆசைப்படுவதற்கு முன் அதற்கு உங்களை நீங்கள் தகுதியாக்கிக் கொள்ளுங்கள்”
@ inneram.com 18.08.2013

Re: மோடியும் அமெரிக்காவும்!
இதனுடன் ரஷ்யாவையும் சேர்த்து கொண்டால் நன்றாக இருக்கும்Muthumohamed wrote:மற்ற நாடுகளிடம் ஒற்றுமை இல்லை பிறகு அமெர்க்கா அடிமைகளும் கூடயினியவன் wrote:மோடியை பற்றிய கருத்து பல விதங்கள் - அத விடுங்க.
அமெரிக்காவுக்கு வருவோம் - உலக மகா உத்தமர்களா அவர்கள்????
எத்தனை நாடுகளை மத்தியஸ்த்தம் செய்கிறேன், அடக்குமுறயை ஒழிக்கிறேன் என்று நாசம் செய்திருக்கிறார்கள், செய்து கொண்டிருக்கிறார்கள், செய்யப்போகிறார்கள்...
அதற்கு என்ன செய்வது????
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: மோடியும் அமெரிக்காவும்!
இது உங்களுக்கே சற்று அதிகமாகப் படவில்லையா? என்னதான் அமெரிக்காமீது அளவு கடந்த மோகம் இருந்தாலும் அதற்காக, உலகில் உள்ள எல்லா நாடுகளும் ஓன்று சேர்ந்து வந்து அமெரிக்காவை எதிர்த்து போரிட்டாலும் அமெரிக்காதான் வெற்றிபெறும் என்று கூறுவது நகைப்பிற்குரிய ஒன்று என்பதை அனைவரும் அறிவர். அதே சமயம், அமெரிக்கா சத்தியம் ஒன்றையே கடைபிடிக்கும் உத்தம நாடு என்று நீங்கள் சொல்வீர்களேயானால், ஒபாமாவே விழுந்து விழுந்து சிரிப்பார்.SajeevJino wrote:மொத்தத்தில் மக்கள் ஒன்றை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்ரா.ரமேஷ்குமார் wrote:அமெரிக்ககாரன் அவனுக்கு அடிபணியும் ஆட்சியை தான் இந்தியாவில் விரும்புகிறான் போலும் மோடி வந்தால் அதற்கு வழியில்லாமல் போகலாம் என்று பயப்படுகிறானோ என்னவோ...அணு குண்டு சோதனை நடத்தியதற்கே ஆடி போனவன்...
இந்த உலகில் எவராலும் அமெரிக்காவை எதுவும் செய்ய முடியாது
அமெரிக்கா நினைத்தால் எந்த நாட்டையும் எதுவும் செய்ய முடியும்
மேலும் உலகில் உள்ள எல்லா நாடும் ஓன்று சேர்ந்து வந்து அமெரிக்காவை எதிர்த்து போரிட்டால் அமெரிக்கா தான் வெற்றி பெறும்
Re: மோடியும் அமெரிக்காவும்!
மோடிக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டதைக் குறித்து புதிய ஜனநாயகம் இதழில் 2005ம் ஆண்டு வெளி வந்த கட்டுரை.
“மதச் சுதந்திர உரிமைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ மீறும் எந்தவொரு அந்நிய நாட்டு அதிகாரிக்கும் விசாவினை (நுழைவுச் சீட்டு) மறுக்கலாம்” என்ற அமெரிக்க சட்டத்தின்படி குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு வழங்கியிருந்த வர்த்தக சுற்றுலா விசாவினை அமெரிக்கா ரத்து செய்திருக்கிறது.
“மோடியின் அமெரிக்க பயணம் அரசுமுறை பயணம் அல்ல. அதனால் அவருக்கு அரசுமுறை விசாவும் வழங்க முடியாது” என மறுத்துவிட்டது அமெரிக்க அரசு.
குஜராத்தில் கொத்துக் கொத்தாக முசுலீம்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த பொழுது விசுவ இந்து பரிசத்தின் குஜராத் மாநிலத் தலைவர் கேசவ்ராம் காசிராம் சாஸ்திரி “ஆம். நாங்கள் திட்டமிட்டுத்தான் கலவரம் நடத்தினோம்” எனப் பகிரங்கமாகவே பேட்டி கொடுத்தார். இந்த இனப்படுகொலையின் தளபதி நரேந்திர மோடிதான் என்பதை கலவரத்துக்குப் பின் கோவாவில் நடந்த பா.ஜ.க.வின் உயர்மட்டக் கூட்டம் மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறது. இவை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நம் கண் முன் நடந்தவை.
இந்த சமீபத்திய வரலாற்று உண்மைகளை முசுலீம் பிணங்களோடு போட்டுப் புதைத்துவிட்டு “எந்த நிரூபணமும் இல்லாமல் அரசியல் கட்சிகளும் மத்திய அரசும் அதன் அமைச்சர்களும் பத்திரிகை உலகமும் நரேந்திர மோடிக்கு குஜராத் கலவரங்களைப் பின் நின்று நடத்தி அந்தக் கொலைகளுக்குக் காரணமானவர் என்ற முத்திரையைக் குத்தி விட்டன… அமெரிக்காவிற்கு இந்த முத்திரை பயன்பட்டது…. அமெரிக்க நடவடிக்கை கண்டிக்கத் தகுந்தது” எனப் பொய்யைக் கக்கி மோடிக்கு வக்காலத்து வாங்குகிறார் துக்ளக் “சோ”.
ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கும்பலோ இன்னும் ஒருபடி மேலே போய் மோடிக்கு விசா மறுக்கப்பட்டதை “இந்திய அரசியல் சாசனத்திற்கும் இந்திய மக்களுக்கும் நேர்ந்துவிட்ட அவமானமாகவும்; இந்திய நாட்டிற்கு ஏற்பட்ட இழுக்காகவும்” ஊதிப் பெருக்குகிறது.
பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் இராணுவ மந்திரியாக இருந்த ஜார்ஜ் பெர்ணான்டசு அமெரிக்க விமான நிலையம் ஒன்றில் “சோதனை” என்ற பெயரில் துகில் உரியப்பட்டார். ஒரு கிறித்தவ இந்திய அமைச்சருக்கு நேர்ந்த அவமானத்தை இந்திய அரசியல் சாசனத்திற்கு நேர்ந்த அவமானமாக பா.ஜ.க. அரசு கருதவில்லை. மாறாக “அது அமெரிக்காவின் சட்டம்” என்று சொல்லி அவமானத்தைச் சகித்துக் கொண்டார்கள்.
உலக வர்த்தக மையக் கட்டிடங்கள் தகர்க்கப்பட்ட பின் இந்தியா உள்ளிட்ட சில ஏழை ஆசிய கண்டத்து நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குச் செல்லும் அனைவரும் தங்களின் கைரேகைகளை அமெரிக்க அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. இரவு நேரத்தில் சந்தேகத்தில் பிடித்துக் கொள்ளும் நபர்களின் கைரேகைகளை போலீசார் பதிவு செய்து கொள்கிறார்களே அதற்கும் அமெரிக்காவின் சட்டத்திற்கும் பெரிய வேறுபாடு எதுவும் கிடையாது.
இந்திய நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் தீவிரவாதியாகச் சந்தேகிக்கும் இந்தச் சட்டத்தை பா.ஜ.க. அவமானமாகப் பார்க்கவில்லை. ஆனால் இந்துமத பயங்கரவாதி மோடிக்கு விசா மறுக்கப்பட்டதை அரசியல் சாசனத்தின் அவமானமாக ஒப்பிடுகிறது. அப்படியென்றால் மோடி என்ற கேடியைக் காப்பாற்றுவதுதான் அரசியல் சாசனத்தின் வேலையா?
இந்தக் கேள்விக்கு பா.ஜ.க. மட்டுமல்ல மதச்சார்பற்ற காங்கிரசும் கூட “ஆம்” என்று தான் பதில் அளிக்கிறது. “மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; குஜராத் மாநிலத்தின் முதல் மந்திரி; குஜராத் கலவரங்களுக்காக அவர் எந்தவொரு இந்திய நீதிமன்றத்தாலும் தண்டிக்கப்படவில்லை; எனவே அவருக்கு விசா மறுக்கப்பட்டதை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என இந்திய அரசின் சார்பாகவே அமெரிக்காவிடம் வேண்டுகிறார்கள்.
2000 முசுலீம்களைக் கொன்ற மோடி சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் என்பது இந்திய அரசியல் சாசனத்தின் ஓட்டாண்டித்தனத்தைத் தான் காட்டுகிறது.
“இந்து என்பது மதமல்ல; அது ஒரு வாழ்க்கை முறை” என உச்சநீதி மன்றம் ஒரு தீர்ப்பில் சொல்லியிருக்கிறது. இதைத்தான் பா.ஜ.க. இந்துத்துவா என்கிறது.
ராமர் கோவில் கட்டுவதற்காகச் செதுக்கப்பட்ட தூண்களை பாபர் மசூதி வளாகத்தில் வைத்துப் பூசை செய்ய வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் செய்தபொழுது உச்சநீதி மன்றம் அப்பூசையைத் தடை செய்யவில்லை. மாறாக வளாகத்திற்கு வெளியே பூசை நடத்திக் கொள்ளுங்கள் என்ற சந்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இப்படி பலவிதங்களில் ஆர்.எஸ்.எஸ்.க்கு அனுசரணையாக நடந்து கொள்ளும் நீதிமன்றங்கள் மோடியைத் தண்டிக்க வேண்டும் என்றால் சூரியன் மேற்கேதான் உதிக்க வேண்டும். மோடி தண்டிக்கப்படாமல் இருப்பதுதான் அவமானமேயொழிய அவருக்கு அமெரிக்கா விசா மறுக்கப்பட்டிருப்பது அவமானத்திற்குரியதல்ல! ···
“சவூதி அரேபியா ஈரானில் எல்லாம் மதவெறி ஆட்சி நடக்கிறது. பாகிஸ்தான் வங்காள தேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள். அந்நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு விசாவை மறுக்காத அமெரிக்கா மோடிக்கு மட்டும் மறுத்திருக்கிறது” என அமெரிக்காவின் இரட்டை வேடத்தை பா.ஜ.க. அம்பலப்படுத்துகிறது.
அமெரிக்காவின் இந்த இரட்டைவேடத்தினால் பா.ஜ.க.வும்தான் பலன் அடைந்திருக்கிறது. கொசோவாவில் முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டதைச் சாக்காக வைத்து யுகோஸ்லாவியா நாட்டின் மீது அமெரிக்கா போரே தொடுத்தது. அதே அமெரிக்கா குஜராத்தில் முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது அதைக் கண்டித்து ஒரு அறிக்கைகூட விடவில்லை. இதற்குக் காரணம் குஜராத் கலவரம் நடந்தபொழுது ஆட்சியில் இருந்த வாஜ்பாயி அரசுக்கும் ஜார்ஜ் புஷ்ஷூக்கும் இடையே இருந்த நெருக்கம்தான்.
அமெரிக்காவில் உண்டியலைக் குலுக்கி வசூலிக்கப்பட்ட டாலர்கள் குஜராத் கலவரத்திற்குப் பயன்படுத்தப்பட்டன என்பதை பல்வேறு அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன. ஆனாலும் விசுவ இந்து பரிசத் அமெரிக்காவில் உண்டியல் குலுக்குவதை இன்று வரை புஷ் தடை செய்யவில்லை.
“சுதந்திரத்துக்கு” முன்னும் பின்னும் ஆர்.எஸ்.எஸ். கும்பல் நூற்றுக்கணக்கான மதவெறிக் கலவரங்களை நடத்தியிருக்கிறது. மதச் சுதந்திரத்துக்கே வேட்டு வைக்கும் மதமாற்றத் தடைச் சட்டம் இந்தியா முழுவதும் கொண்டு வரப்பட வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.இன் கொள்கை. இதன்படி பார்த்தால் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களைச் சேர்ந்த அனைவருக்குமே “விசா” மறுக்கப்பட வேண்டும். ஆனால் அமெரிக்காவோ மோடிக்கு மட்டும் விசாவை மறுத்துவிட்டு எங்களுக்கும் பா.ஜ.க.விற்கும் இடையே நல்ல உறவு இருப்பதாக அறிக்கை விடுகிறது.
இந்தியாவின் அத்வானி இசுரேலின் ஏரியல் ஷரோன் போன்ற மதவெறி பிடித்த அரசியல் தலைவர்களுக்குக் கூட “விசா” வழங்கி வரும் அமெரிக்கா கம்யூனிஸ்டுகள் இடது சாரி முற்போக்கு சிந்தனை கொண்டவர்களுக்கு “விசா” வழங்க மறுப்பதை அரசியல் தந்திரமாகவே கடைப்பிடித்து வருகிறது. அமெரிக்காவின் இந்த இரட்டை வேடத்தைப் பற்றி பா.ஜ.க. என்றைக்காவது வாயைத் திறந்ததுண்டா?
அமெரிக்காவின் நலன்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மதச் சர்வாதிகாரியாக இருந்தாலும் அவர்களுக்கு விசா வழங்க எந்தத் தடையும் இல்லை என அமெரிக்க சட்டமே கூறுகிறது. அதனால்தான் அத்வானி வாஜ்பாயி வகையறாக்களின் விசா ரத்து செய்யப்படவில்லை. மோடியின் விசா ரத்து செய்யப்பட்டிருப்பது ஒரு விதி விலக்கு. நமது நாட்டு நீதிமன்றங்கள் மனித உரிமைகளை மீறிய போலீசு அதிகாரிகளை அதிசயமாகத் தண்டிப்பது போல! ···
ஈராக் ஆக்கிரமிப்பு அபு கிரைப் சிறைச்சாலை சித்திரவதைகள் இவற்றைக் காட்டி மனித உரிமை பற்றிப் பேச அமெரிக்காவுக்குத் தகுதியில்லை என வாதாடுகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல். ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதைதான் இது.
இந்திய மக்களின் சட்டபூர்வ மனித உரிமைகள் அனைத்தையும் பறிப்பதற்காகவே “பொடா” என்ற கருப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தவர்கள் பா.ஜ. கட்சியினர். மனித உரிமைப் போராளிகள் இச்சட்டத்தை எதிர்த்த பொழுது அமெரிக்காவிலும் இது போன்ற சட்டம் பேட்ரியாட் சட்டம் கொண்டு வந்திருப்பதாகக் கூறி நியாயப்படுத்தினார்கள்.
இது மட்டுமின்றி ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுக்கத் திட்டம் போட்ட பொழுது தீவிரவாதத்துக்கு எதிரான போரில் தன்னை இளைய பங்காளியாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என பா.ஜ.க. கூட்டணி ஆட்சி மன்றாடியது.
அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்த பின் அமெரிக்காவின் தயவில் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு வியாபார ஒப்பந்தம் வாங்கித் தருவதற்காக “அமெரிக்காவுக்கு உதவ ஈராக்கிற்கு இந்தியப் படைகளை அனுப்புவதாக” புஷ்ஷிடம் வாக்குறுதி கொடுத்தார் அத்வானி. உள்நாட்டு எதிர்ப்பின் காரணமாக படைகளை அனுப்ப முடியாமல் போனதால் முன்னாள் இராணுவ வீரர்களைக் கூலிப் படைகளாக ஏற்றுமதி செய்ய பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அனுமதித்தது.
இப்படி அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு அடியாளாக வேலை செய்ய விருப்பம் கொண்ட இந்து மதவெறிக் கும்பல் “மனித உரிமைகளை மீறிய அமெரிக்க அதிகாரிகளுக்கு இந்தியா விசாவை மறுத்தால் என்னவாகும்?” எனச் சவால் விடுகிறது.
ஒருவேளை அப்படி நடந்து விடுகிறது எனக் கற்பனை செய்து கொள்வோம். பிறகு அந்நிய நிதி மூலதனத்தையும் தொழில்நுட்பத்தையும் பெறுவதற்கு இந்தியா எந்த நாட்டிடம் கையேந்தி நிற்க முடியும்?
1994இல் நடந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலின் பொழுது அமெரிக்க என்ரான் நிறுவனத்தை அரபிக் கடலில் தூக்கியெறிவோம் எனச் சவடால் அடித்தது பா.ஜ.க. ஆனால் அந்தத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தபின் என்ரானின் இரண்டாவது மின்திட்டத்திற்கும் சேர்த்தே அனுமதி கொடுத்தது.
வாஜ்பாயின் ஆட்சியில் அணுகுண்டு வெடித்த பொழுது அமெரிக்கா இந்தியா மீது அணு ஆராய்ச்சி சம்மந்தமான பொருளாதாரத் தடைகளை விதித்தது. அந்நியப் பொருட்கள் இறக்குமதிக்கு இந்தியாவில் உள்ள தடைகளை நீக்கி விடுகிறோம் என அமெரிக்காவோடு பேரம் நடத்திதான் பொருளாதாரத் தடையை நீக்கச் செய்தது வாஜ்பாயி அரசு. இதுதான் பா.ஜ.க.வின் கடந்தகால அமெரிக்க எதிர்ப்பு வீர வரலாறு!
மோடிக்கு விசா வழங்கப்பட்டதை எதிர்த்து அகமதாபாத் நகரில் நடந்த பேரணியில் “நமது நாட்டின் சட்டம் இப்படி இருக்க வேண்டும்; நமது நாட்டின் பாடநூல்கள் இப்படி இருக்க வேண்டும் என அமெரிக்கா கட்டளையிடுவதா?” என்று கொதிப்போடு பேசினாராம் மோடி. பா.ஜ.க. இந்தப் பேரணிக்கு “சுயமரியாதை பேரணி” எனப் பெயரிட்டிருந்தது.
அமெரிக்கா உத்திரவு போட்டு காப்புரிமைச் சட்டம் திருத்தப்பட்ட பொழுது; அமெரிக்கா உத்திரவு போட்டு தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட்டபொழுது பா.ஜ.க.வின் சுயமரியாதை எங்கே ஒளிந்து கொண்டிருந்தது?
“குஜராத்தில் நடந்த கலவரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். அதில் தலையிட்டுத் தீர்ப்புச் சொல்ல அமெரிக்காவிற்கு அதிகாரம் கிடையாது” என பா.ஜ.க.வோடு சேர்ந்து கொண்டு காங்கிரசும் தர்க்க நியாயம் பேசுகிறது.
இந்திரா காந்தியின் அவசரநிலை காட்டாட்சியை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா தலையிட்டதை ஆர்.எஸ்.எஸ். கும்பல் வரவேற்றிருக்கிறது. கார்கில் போரை முடிவுக்குக் கொண்டுவர கிளிண்டனோடு இரகசியப் பேச்சு வார்த்தை நடத்தினார் வாஜ்பாயி. இவையெல்லாம் சர்வதேசப் பிரச்சினைகளா?
இந்த உள்நாட்டு அளவுகோலை ஈராக் நாட்டிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் பிரயோகித்தால் அமெரிக்கப் படைகளை அந்நாடுகளில் இருந்து வெளியேறச் சொல்ல வேண்டும். அந்த நாணயம் காங்கிரசு பா.ஜ.க. விடம் உண்டா?
அமெரிக்கா சதாமை சர்வாதிகாரி எனக் குற்றம் சாட்டியபொழுது “அதை ஈராக் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்; அதில் அமெரிக்கா தலையிடக் கூடாது” என மோடியோ அத்வானியோ எதிர்த்துப் பேசியதுண்டா? மாறாக “சதாமை நீங்கள் தண்டிக்க விரும்பினால் ஐ.நா.வின் ஒப்புதலோடு தண்டியுங்கள்” என்றுதான் அமெரிக்காவிடம் மன்றாடினார்கள்.
இன்றுள்ள உலகச் சூழலில் சில பிரச்சினைகளை உள்நாட்டு பிரச்சினைகள் என ஒதுக்கி விட முடியாது. தென்னப்பிரிக்காவில் நடந்த வெள்ளை இனவெறி அரசு கருப்பின மக்களுக்கு எதிராக நிறவெறிக் கொள்கையைக் கடைப்பிடித்த பொழுது அந்நாட்டை உலக நாடுகள் கண்டித்ததோடு அந்நாட்டோடு வர்த்தக அரசியல் உறவுகள் வைத்துக் கொள்ளாமல் புறக்கணித்தன. பாலஸ்தீன மக்களுக்குச் சொந்தமான பூமியை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்ளும் நோக்கத்தோடு இசுரேல் கட்டிவரும் சுவரை இடித்துத் தள்ள வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. போஸ்னியாவிலும் கொசாவாவிலும் முசுலீம்களை இனப்படுகொலை செய்த யுகோஸ்லாவியாவின் முன்னாள் அதிபர் அந்தக் குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுகிறார்.
குஜராத்தில் நடந்த இனப்படுகொலை கூட சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டிய அளவிற்குக் கொடூரமானவைதான். இந்த இனப்படுகொலையின் தளபதியான மோடியை இந்தியச் சட்டங்கள் தண்டிக்க மறுக்கும் பொழுது அவனைத் தண்டிக்கக் கோரும் உரிமையை அமெரிக்க அரசிற்கு (அதனின் இரட்டை வேடம் காரணமாக) வேண்டுமானால் மறுக்கலாம். ஆனால் உலக மக்கள் அப்படிக் கோருவதைத் தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. இன்று போர் குற்றவாளி ஜார்ஜ் புஷ்ஷைத் தண்டிக்கக் கோரி போராடும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் நாளை மோடியையும் தண்டிக்கக் கோரி போராடினால் அதை நாம் இருகரம் கூப்பி வரவேற்கத்தான் வேண்டும்.
- முத்து
நன்றி: vinavu.com

முதலில் இந்த படத்தை பாருங்கள் ..உலகில் உள்ள எல்லா போர் விமானங்களின் தொகுப்புபார்த்திபன் wrote:
இது உங்களுக்கே சற்று அதிகமாகப் படவில்லையா? என்னதான் அமெரிக்காமீது அளவு கடந்த மோகம் இருந்தாலும் அதற்காக, உலகில் உள்ள எல்லா நாடுகளும் ஓன்று சேர்ந்து வந்து அமெரிக்காவை எதிர்த்து போரிட்டாலும் அமெரிக்காதான் வெற்றிபெறும் என்று கூறுவது நகைப்பிற்குரிய ஒன்று என்பதை அனைவரும் அறிவர். அதே சமயம், அமெரிக்கா சத்தியம் ஒன்றையே கடைபிடிக்கும் உத்தம நாடு என்று நீங்கள் சொல்வீர்களேயானால், ஒபாமாவே விழுந்து விழுந்து சிரிப்பார்.
அமெரிக்காவிற்கும் மற்ற நாடுகளுக்கிடையிலும் உள்ள புள்ளிகளை ஒப்பீடு செய்யும் போது அமெரிக்கா மற்ற நாடுகளை விட 10,000 புள்ளிகள் முன்னிலையில் உள்ளது ..அதிலும் நான் கணக்கிட்டதில் அதன் விமானபடையின் எண்ணிக்கை மட்டுமே
அதன் கப்பல் படையின் விமானபிரிவையும் கடலோர காவல் படையின் விமானபிரிவையும் தரைபடையின் விமானபிரிவையும் சேர்த்தால் இன்னும் இன்னும் 5000 புள்ளிகள் சேர்க்க வேண்டும்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: மோடியும் அமெரிக்காவும்!
முதலில் அமெரிக்காவின் நில அமைப்பை புரிந்து கொள்ள வேண்டும் எல்லா நாடுகளும் அமெரிக்காவிற்கு எதிராக போர் தொடுக்கும் போது அது முதலில் தன் கண்டத்தில் உள்ள எல்லா நாடுகளையும் 10 நிமிடத்தில் வென்று விடும்பார்த்திபன் wrote:இது உங்களுக்கே சற்று அதிகமாகப் படவில்லையா? என்னதான் அமெரிக்காமீது அளவு கடந்த மோகம் இருந்தாலும் அதற்காக, உலகில் உள்ள எல்லா நாடுகளும் ஓன்று சேர்ந்து வந்து அமெரிக்காவை எதிர்த்து போரிட்டாலும் அமெரிக்காதான் வெற்றிபெறும் என்று கூறுவது நகைப்பிற்குரிய ஒன்று என்பதை அனைவரும் அறிவர். அதே சமயம், அமெரிக்கா சத்தியம் ஒன்றையே கடைபிடிக்கும் உத்தம நாடு என்று நீங்கள் சொல்வீர்களேயானால், ஒபாமாவே விழுந்து விழுந்து சிரிப்பார்.SajeevJino wrote:மொத்தத்தில் மக்கள் ஒன்றை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்
இந்த உலகில் எவராலும் அமெரிக்காவை எதுவும் செய்ய முடியாது
அமெரிக்கா நினைத்தால் எந்த நாட்டையும் எதுவும் செய்ய முடியும்
மேலும் உலகில் உள்ள எல்லா நாடும் ஓன்று சேர்ந்து வந்து அமெரிக்காவை எதிர்த்து போரிட்டால் அமெரிக்கா தான் வெற்றி பெறும்
Statics முறையிலும் சரி அல்லது Number game முறையும் சரி அமெரிக்கா தான் முன்னிலை
அடுத்ததாக தனது கப்பல் படையை தனது கண்டத்தை சுற்றி நிறுத்தும் அதை தாண்டி எந்த ஒரு படையும் உள்ளே வர முடியாது அப்படி வந்தாலும் நேஷனல் guards பார்த்து கொள்வார்கள்
தனது விமானபடையை கொண்டு தன் மீது போர் தொடுத்த எல்லா நாட்டையும் ஒரு சில நாட்களில் துவம்சம் செய்து விடும்
அணுகுண்டுகளோடு போரிட்டால் உலகம் மொத்தமாக அழியும்
வேறு எந்த நாடாவது இதேபோல இருந்தால் கூறுங்கள்
மேலும் வேறு ஏதாவது வழியில் அவர்களை தாக்க முடியும் என்றால் கூறுங்கள் நான் பதில் தருகிறேன்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: மோடியும் அமெரிக்காவும்!
நான் அவர்கள் கடவுள் நம்பிக்கை அதிகம் உடையவர்கள் என்று தான் கூறினேன்பார்த்திபன் wrote:அதே சமயம், அமெரிக்கா சத்தியம் ஒன்றையே கடைபிடிக்கும் உத்தம நாடு என்று நீங்கள் சொல்வீர்களேயானால், ஒபாமாவே விழுந்து விழுந்து சிரிப்பார்.
ஆனால் சத்தியம் ஒன்றையே கடைபிடிக்கும் உத்தம நாடு என்று ஒரு போதும் கூற மாட்டேன்
உலகில் பிறந்த அனைவரும் பாவம் செய்தவர்களே
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: மோடியும் அமெரிக்காவும்!
உங்கள் அட்டவனைப்படிப் பார்த்தால் கூட, மற்ற நாடுகளின் புள்ளிகளையெல்லாம் கூட்டினால் அமெரிக்காவின் புள்ளிகளைக் காட்டிலும் அதிகமாகத்தானே வருகிறது? இத்தனைக்கும் இந்த அட்டவணையில் அமெரிக்கவைத் தவிர 10 நாடுகளின் பட்டியம் மட்டுமே உள்ளது. மீதமுள்ள நாடுகளின் புள்ளிகளையும் சேர்த்தால்...? சற்று பிராக்டிகலாக யோசியுங்கள். உலகில் மொத்தம் 196 அங்கீகரிக்கப்பட்ட நாடுகள் இருக்கின்றன.SajeevJino wrote:முதலில் இந்த படத்தை பாருங்கள் ..உலகில் உள்ள எல்லா போர் விமானங்களின் தொகுப்புபார்த்திபன் wrote:
இது உங்களுக்கே சற்று அதிகமாகப் படவில்லையா? என்னதான் அமெரிக்காமீது அளவு கடந்த மோகம் இருந்தாலும் அதற்காக, உலகில் உள்ள எல்லா நாடுகளும் ஓன்று சேர்ந்து வந்து அமெரிக்காவை எதிர்த்து போரிட்டாலும் அமெரிக்காதான் வெற்றிபெறும் என்று கூறுவது நகைப்பிற்குரிய ஒன்று என்பதை அனைவரும் அறிவர். அதே சமயம், அமெரிக்கா சத்தியம் ஒன்றையே கடைபிடிக்கும் உத்தம நாடு என்று நீங்கள் சொல்வீர்களேயானால், ஒபாமாவே விழுந்து விழுந்து சிரிப்பார்.
அமெரிக்காவிற்கும் மற்ற நாடுகளுக்கிடையிலும் உள்ள புள்ளிகளை ஒப்பீடு செய்யும் போது அமெரிக்கா மற்ற நாடுகளை விட 10,000 புள்ளிகள் முன்னிலையில் உள்ளது ..அதிலும் நான் கணக்கிட்டதில் அதன் விமானபடையின் எண்ணிக்கை மட்டுமே
அதன் கப்பல் படையின் விமானபிரிவையும் கடலோர காவல் படையின் விமானபிரிவையும் தரைபடையின் விமானபிரிவையும் சேர்த்தால் இன்னும் இன்னும் 5000 புள்ளிகள் சேர்க்க வேண்டும்
அவற்றில் சில நாடுகளின் ராணுவத்தைக் கணக்கில் கொள்ளமுடியாவிட்டாலும், 190 நாடுகள் சேர்ந்து மூலைக்கொன்றாக ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தினால், ஐந்தே நிமிடத்தில் அமெரிக்கா என்கிற தேசம் உலக வரைபடத்திலிருந்து காணாமல் போய்விடும்தானே? (இதில் உலக நாடுகளின் கூட்டுத் திட்டமிடலும் அடங்கும்). சிங்கம்-எருதுகள் கதையை நீங்கள் படித்திருக்கிறீர்கள்தானே? தவிர, வியட்நாம் என்ற குட்டி நாட்டிடம் அடிவாங்கிப் பின் சுதாரித்த தேசம்தானே அமெரிக்கா? அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக அன்றும் இன்றும் சில நாடுகள் இருக்கத்தானே செய்கின்றன?
Re: மோடியும் அமெரிக்காவும்!
பார்த்திபன் wrote:
உங்கள் அட்டவனைப்படிப் பார்த்தால் கூட, மற்ற நாடுகளின் புள்ளிகளையெல்லாம் கூட்டினால் அமெரிக்காவின் புள்ளிகளைக் காட்டிலும் அதிகமாகத்தானே வருகிறது? இத்தனைக்கும் இந்த அட்டவணையில் அமெரிக்கவைத் தவிர 10 நாடுகளின் பட்டியம் மட்டுமே உள்ளது. மீதமுள்ள நாடுகளின் புள்ளிகளையும் சேர்த்தால்...? சற்று பிராக்டிகலாக யோசியுங்கள். உலகில் மொத்தம் 196 அங்கீகரிக்கப்பட்ட நாடுகள் இருக்கின்றன.
அவற்றில் சில நாடுகளின் ராணுவத்தைக் கணக்கில் கொள்ளமுடியாவிட்டாலும், 190 நாடுகள் சேர்ந்து மூலைக்கொன்றாக ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தினால், ஐந்தே நிமிடத்தில் அமெரிக்கா என்கிற தேசம் உலக வரைபடத்திலிருந்து காணாமல் போய்விடும்தானே? (இதில் உலக நாடுகளின் கூட்டுத் திட்டமிடலும் அடங்கும்). சிங்கம்-எருதுகள் கதையை நீங்கள் படித்திருக்கிறீர்கள்தானே? தவிர, வியட்நாம் என்ற குட்டி நாட்டிடம் அடிவாங்கிப் பின் சுதாரித்த தேசம்தானே அமெரிக்கா? அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக அன்றும் இன்றும் சில நாடுகள் இருக்கத்தானே செய்கின்றன?
உலகில் மொத்தம் 40 நாடுகளே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விமானப்படையை கொண்டுள்ளது ..SajeevJino wrote:
முதலில் அமெரிக்காவின் நில அமைப்பை புரிந்து கொள்ள வேண்டும் எல்லா நாடுகளும் அமெரிக்காவிற்கு எதிராக போர் தொடுக்கும் போது அது முதலில் தன் கண்டத்தில் உள்ள எல்லா நாடுகளையும் 10 நிமிடத்தில் வென்று விடும்
Statics முறையிலும் சரி அல்லது Number game முறையும் சரி அமெரிக்கா தான் முன்னிலை
அடுத்ததாக தனது கப்பல் படையை தனது கண்டத்தை சுற்றி நிறுத்தும் அதை தாண்டி எந்த ஒரு படையும் உள்ளே வர முடியாது அப்படி வந்தாலும் நேஷனல் guards பார்த்து கொள்வார்கள்
தனது விமானபடையை கொண்டு தன் மீது போர் தொடுத்த எல்லா நாட்டையும் ஒரு சில நாட்களில் துவம்சம் செய்து விடும்
அணுகுண்டுகளோடு போரிட்டால் உலகம் மொத்தமாக அழியும்
வேறு எந்த நாடாவது இதேபோல இருந்தால் கூறுங்கள்
மேலும் வேறு ஏதாவது வழியில் அவர்களை தாக்க முடியும் என்றால் கூறுங்கள் நான் பதில் தருகிறேன்
புரியும் என்று நினைக்கிறன் ..
இது நவீன உலகம் உலகப்போரின் முடிவுகளோ அல்லது வியட்னம் போரின் முடிவுகளோ இப்போதைய யுகத்தில் கணக்கிட முடியாது
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: மோடியும் அமெரிக்காவும்!
உலகின் எந்த நாட்டின் ராணுவ அசைவையும் துல்லியமாக பார்க்க அமெரிக்காவால் மட்டுமே முடியும்பார்த்திபன் wrote: 190 நாடுகள் சேர்ந்து மூலைக்கொன்றாக ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தினால், ஐந்தே நிமிடத்தில் அமெரிக்கா என்கிற தேசம் உலக வரைபடத்திலிருந்து காணாமல் போய்விடும்தானே? (இதில் உலக நாடுகளின் கூட்டுத் திட்டமிடலும் அடங்கும்).
மேலும் மற்ற நாடுகள் எப்படி அமெரிக்காவின் கண்டத்தில் நுழைவார்கள் என்று கூற முடியுமா
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: மோடியும் அமெரிக்காவும்!
190 நாடுகளும் அமெரிக்கக் கண்டத்திற்குள் நுழைவதற்கு சாத்தியக் கூறுகள் இல்லைதான். ஆனால் அவ்ற்றால் பொருளாதார ரீதியிலும் தளவாடங்கள் கொடுப்பதிலும் அமெரிக்கக் கண்டத்தைச் சுற்றியுள்ள நாடுகளுக்கு உதவ முடியும்தானே? கடல் வழி மற்றும் வான் வழி என்கிற இரு வழிகள்தானே இருக்கிறது? தரைவழியில் அமெரிக்கக் கண்டத்தை நெருங்குவது பூகோள ரீதியாக இயலாத ஒன்று. எனவே இதில் பெரும்பங்கு வகிக்கக் கூடியது ஏவுகணைத் தாக்குதல்களே! அதுதான் தற்போது சர்வ சாதாரணமாக பல ஆயிரம் மைல்கள் பயணித்துத் தாக்கும் ஏவுகணைகளை அமெரிக்கவைத் தவிர மற்ற நாடுகளும் தயாரிக்கின்றனவே.SajeevJino wrote:உலகின் எந்த நாட்டின் ராணுவ அசைவையும் துல்லியமாக பார்க்க அமெரிக்காவால் மட்டுமே முடியும்பார்த்திபன் wrote: 190 நாடுகள் சேர்ந்து மூலைக்கொன்றாக ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தினால், ஐந்தே நிமிடத்தில் அமெரிக்கா என்கிற தேசம் உலக வரைபடத்திலிருந்து காணாமல் போய்விடும்தானே? (இதில் உலக நாடுகளின் கூட்டுத் திட்டமிடலும் அடங்கும்).
மேலும் மற்ற நாடுகள் எப்படி அமெரிக்காவின் கண்டத்தில் நுழைவார்கள் என்று கூற முடியுமா
நீங்கள் சொல்வதுபோல 40 நாடுகளிடம் மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லும்படியான விமானப் படைகள் இருந்தபோதும் அந்த 40 நாட்டு போர் விமானங்களையும் அமெரிக்கத் துருப்புகள் ஒரே நேரத்தில் தடுத்துவிட முடியுமா? சாதாரண பயணிகள் விமானத்தை வைத்துக்கொண்டு இரட்டைக் கோபுரத்தையும், பெண்டாகனையும் தாக்க முடிகிறபோது, இத்தனை நாடுகளின் போர்த்தந்திரங்கள் ஒன்று சேர்ந்தால்?...தவிர அமெரிக்க சாட்டிலைட்டுகளைக் குறி வைத்து சீனா தயாரித்து வைத்திருக்கும் ராக்கெட்டுகளையும் ஏவுகணைகளையும் நீங்கள் அறிவீர்கள். இந்த சாட்டிலைட்டுகள் தகர்க்கப்பட்டால் எங்கிருந்து மற்ற நாடுகளின் இராணுவ நகர்வுகளைத் துல்லியமாகக் கணிப்பது? இங்கிலாந்து மற்றும் பிரான்சின் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்கள் பற்றி சொல்லத் தேவையில்லை.
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» நரேந்திர மோடியும் "முதல்வன் ரகுவரனும் "
» நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்!
» இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்...
» மோடியும் அவரின் ஆளுமையும் !
» மோடியும் டிரம்பும் அருகருகே

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|