ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
 பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் Poll_c10 பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் Poll_m10 பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் Poll_c10 
heezulia
 பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் Poll_c10 பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் Poll_m10 பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் Poll_c10 
E KUMARAN
 பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் Poll_c10 பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் Poll_m10 பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் Poll_c10 
mohamed nizamudeen
 பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் Poll_c10 பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் Poll_m10 பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள்

4 posters

Go down

 பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் Empty பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள்

Post by பாரதிப்பிரியன் Sat Aug 17, 2013 11:04 pm

பிரித்தானியா சௌத்தம்ப்டன் பல்கலைக்கழகத்தைச் (University of Southampton) சார்ந்த அறிவியலாளர்கள் நானோக் கட்டமைப்புகளால் உருவான பளிங்குப் படிக்கக் கண்ணாடியில் (crystal of nanostructured glass) தகவலைச் சேமிக்கவும் பின்னர் வாசிக்கவும் முடிந்ததாக அறிக்கை விட்டுள்ளனர். மில்லியன் கணக்கிலான ஆண்டுகள் அழியாமல் இருக்கக்கூடிய இந்தப் படிகவட்டுகள் ஆயிரம் பாகை செல்சியஸ் வெப்பத்தையும் தாங்கும் திறன் கொண்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் Crystal_disc
புதிய தலைமுறை நான்கடுக்கு நீலக்கதிர் வட்டுகளின் (ப்ளூ ரே) கொள்ளளவு 128 ஜிகாபைட்டுக்கள் மட்டுமே. அதேவேளை, வெப்பத்துணை காந்தப் பதிவி [heat-assisted magnetic recording hard drive (HAMR)] எனப்படும் வெப்ப லேசர் கதிர் மூலம் தகவலைப் பதியக்கூடிய வன்வட்டுகளின் கொள்ளளவு 20 டெராபைட்டுக்கள், ஆனால் இன்னமும் இந்தத் தொழில்நுட்பம் விற்பனைக்கு வரவில்லை. வன்வட்டு, குறுவட்டு, இறுவட்டு, நீலக்கதிர் வட்டு எனும் தகவல் சேமிப்பு வட்டுகளையெல்லாம் விஞ்சும் படிகவட்டுகளின் உருவாக்கத்துக்குரிய அத்திவாரம் போடப்பட்டுள்ளது. இதன் கொள்ளளவு 360 டெராபைட்.

எப்படி இந்தத் தொழில்நுட்பம் வேலை செய்கின்றது?

இந்தக் குவார்ட்ஸ் படிக முறை ஐந்து பரிமாண தகவல் சேமிப்பு என அழைக்கப்படுகின்றது. ஒரு குவார்ட்ஸ் கண்ணாடியின் உள்ளே நானோக் கட்டமைப்புப் புள்ளிகள் அமைந்துள்ள அடுக்குகளில் மிகவும் குறுகியதும் செறிவானதுமான ஒளித் துடிப்புகளை உருவாக்கும் ஃபெம்டோ செக்கன்ட் லேசர்கள் (1 ஃபெம்டோ செக்கன் = 10−15 செக்கன்கள்) தகவல் கோப்புகளை குறியீட்டுவடிவாக மாற்றுகின்றன. இந்த அடுக்குகள் தமக்கிடையே மிகவும் நெருங்கிய இடைவெளியில் (5 மைக்ரோ மீட்டர்கள்) அமைந்துள்ளன.

கண்ணாடியில் ஒளி ஊடுருவும்போது இந்த ஒளித் துடிப்பலைகள் புள்ளிகளின் முனைவாக்கத்தையும் ஒளிவிலகலையும் மாற்றுகின்றன. பின்னர் அந்தப் புள்ளிகளில் குறியீட்டுவடிவில் சேமிக்கப்பட்ட தகவல்கள் குறுவட்டு, இறுவட்டுகளை வாசிக்கப் பயன்படுத்தப்படும் லேசர் ஸ்கான் முறைமூலம் வாசிக்கப்பட்டு பெற்றுக்கொள்ளப்படுகின்றன.

இவற்றில் மீண்டும் பதிவு செய்யலாமா என்பது தெரியவில்லை. இல்லையெனின் இந்தப் படிகவட்டுகளில் ஒருமுறை மட்டுமே தகவல்களைச் சேமிக்க முடியும். சேமித்த தகவல்களை அழிக்கமுடியுமா என்பதும் ஆய்வாளர்களால் கூறப்படவில்லை. அவர்கள் 300 கிலோபைட் உள்ள உரைக் கோப்பொன்றை (text file) வெற்றிகரமாகச் சேமித்து, பின்னர் தகவலைப் பெற்றுக்கொண்டு உள்ளனர்.

அறிவியல் புனை படங்களில் ஏற்கனவே பளிங்குகளில் தகவல் சேமிப்பு பற்றி வந்துள்ளது. இதனால் இந்த நுட்பத்தை “சூப்பர்மான் நினைவியப் படிகம் (Superman memory crystal)” என்று அழைக்கின்றனர். மில்லியன் ஆண்டுகளின் பின்னர் மனிதகுலம் அழிந்தாலும் இந்த நானோப் படிகவட்டுகள் அழியாது எமது தகவல்களைச் சேமித்து வைத்திருக்கும் என்று நம்பப்படுகின்றது.

எனவே இத்தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்தால் உங்களது பேரப்பிள்ளைகளின் பேரப்பிள்ளைகளுக்கும் அவர்களின் சந்ததிக்கும் அனைத்து தகவல்களையும் சேமித்து வைக்கலாம். இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்தபின்னர் வரலாறுகள் திரிபடைவதெல்லாம் இந்தத் தொழில்நுட்பம் மூலம் இல்லாது போய்விடும் என்று நம்புவோம்.
-பல்கலைக்கழகம்


Last edited by பாரதிப்பிரியன் on Sat Aug 17, 2013 11:11 pm; edited 1 time in total (Reason for editing : படம் சேர்க்கப்பட்டுள்ளது)
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

 பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் Empty Re: பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள்

Post by அசுரன் Sat Aug 17, 2013 11:07 pm

விந்தையான தகவல் கலைப்பிரியரே
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் Empty Re: பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள்

Post by யினியவன் Sat Aug 17, 2013 11:19 pm

அருமை - வரும் சந்ததியினருக்கு மூன்றாம் உலகப் போருக்கு பின் நமைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் கண்டுபிடிப்பு.

ஆனால் இதை ஒரு பிளேயரில் போட்டு பார்த்து தெரிந்துகொள்ள
அவர்களுக்கு அந்த பிளேயரை கண்டுபிடிக்க எவ்ளோ நாள் ஆகுமோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் Empty Re: பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள்

Post by Muthumohamed Sun Aug 18, 2013 12:51 am

நல்ல கண்டுபிடிப்பு பகிர்வுக்கு நன்றி நண்பரே



 பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் M பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் U பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் T பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் H பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் U பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் M பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் O பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் H பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் A பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் M பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் E பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள் Empty Re: பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum