ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுதலை தியாகிகள் - *மதுமிதா*

Go down

விடுதலை தியாகிகள் - *மதுமிதா* Empty வீரபாண்டிய கட்டபொம்மன்

Post by மதுமிதா Thu Aug 15, 2013 4:57 pm


விடுதலை தியாகிகள் - *மதுமிதா* 1098046_315675768576509_205024697_n

ஜனவரி 3 1760 அன்று ஆறுமுகத்தம்மாள் -
திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு,
பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய
கட்டபொம்மன். பெப்ரவரி 2, 1790 அன்று 47
வது பாளையக்காரராகப்
பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
இவரது துணைவியார் வீரசக்கம்மாள்.
இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை.
குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம்
என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு,
துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும்
இருந்தனர். இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள்
அரசுப் பொறுப்பிலிருந்தார்.
கும்பினியார் கி.பி. 1793 இல் கப்பம் (திறை)
கேட்டனர். கி.பி. 1797 இல் முதன் முதலாக
ஆங்கிலேய ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக்
கோட்டைக்கு வந்தார். 1797 - 1798 இல் நடந்த
முதல் போரில் வீரபாண்டிய கட்டபொம்மனிடம்
ஆலன் துரை தோற்று ஓடினார். அதன் பின்னர்
நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் வீரபாண்டிய
கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார்.
கட்டபொம்மனை அவமானப்படுத்த
நினைத்து வேண்டுமென்றே பல
இடங்களுக்கு அலைக்கழித்தார். இறுதியில்
செப்டம்பர் 10, 1798 இல் இராமநாதபுரத்தில்
சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய
கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார்.
அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன்
பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார். செப்டம்பர் 5,
1799 இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத்
தளபதியால் பாஞ்சாலங்குறிச்
சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு கடும்
போர் நடைபெற்றது. போரில் பல ஆங்கிலேயர்கள்
உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்துவிடும்
என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன்
கோட்டையை விட்டு வெளியேறினார். செப்டம்பர் 9
1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்
சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799
இல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத
தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன்
கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய
கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799
இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன்
ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதோடு பாஞ்சாலக்
குறிச்சியின் வரலாறு முடிந்து விடவில்லை.
ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டை சிறையில்
அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர்
ஊமைத்துரை 02.02.1801 இல் பாஞ்சாலக்
குறிச்சி வீரர்களால் மீட்கப்பட்டார். பாஞ்சாலக்
குறிச்சிக் கோட்டைக்குப் புத்துயிர் கிடைத்தது.
ஊமைத்துரையைக் கைது செய்ய வந்த மேஜர்
மெக்காலே கோட்டையினுள் செல்ல முடியாமல்
திரும்பினார். அவர் தலைமையில்
ஒரு பெரும்படை 30.03.1801 இல்
கோட்டையை முற்றுகையிட
ஆரம்பித்து 24.05.1801 இல் அதனைக்
கைப்பற்றியது. தப்பி, காளையார் கோவில்,
விருப்பாட்சி, திண்டுக்கல் என்று ஓடிய
ஊமைத்துரையும் அவர் தம்பி துரைசிங்கமும்
கைது செய்யப்பட்டு பாஞ்சாலக்
குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர்.
பாஞ்சாலங்குறிச்சி என்கிற பெயரையே தமிழகத்தின்
வரைபடத்திலிருந்து நீக்கினர் வெள்ளையர்.
கோட்டை முற்றிலும் தகர்க்கப்பட்டுத்
தரைமட்டமாக்கப்பட்டது.
1974-ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில்
பழங்காலத்துக் கோட்டையின் வடிவினை ஒத்த
ஒரு கோட்டையினை அன்றைய தமிழக முதல்வர்
திரு. மு.கருணாநிதி எழுப்புவித்தார்.
அது இன்றளவும் வீரபாண்டியனின்
புகழ்பாடி நிற்கிறது. கோட்டை, கொத்தளம்,
கொலுமண்டபம், ஜக்கம்மா தேவி ஆலயம்
அனைத்தும் மீண்டும் தோன்றின. நினைவுக்
கோட்டையை உள்ளடக்கிய 6 ஏக்கர் பரப்பினைச்
சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது.
உள்ளே தொல்பொருள் ஆய்வு மையமும் உள்ளது.
மண்டபத்தின் உள்ளே கட்டபொம்மனின்
வீரவரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது.
இக்கோட்டை 1977 முதல் சுற்றுலாத் துறையின்
பராமரிப்பில் இயங்கி வருகிறது.
தற்போது 35 ஏக்கர் பரப்பிற்கு மேல் உள்ள பழைய
கோட்டையின் அடிப்பகுதிக் கட்டிடங்கள்
தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பின் கீழ்
உள்ளன. கட்டபொம்மன் பயன்படுத்திய
ஆயுதங்கள், அவர் காலத்து மக்கள் பயன்படுத்திய
பல்வேறு பொருட்கள், அணிகலன்கள் நாணயங்கள்
போன்றவை தொல்பொருள் ஆய்வுத் துறையினரால்
கண்டெடுக்கப்பட்டு சென்னையில்
தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள்
பார்வைக்கு வைக்கப்பத்துள்ளது

நன்றி முகநூல்


விடுதலை தியாகிகள் - *மதுமிதா* Mவிடுதலை தியாகிகள் - *மதுமிதா* Aவிடுதலை தியாகிகள் - *மதுமிதா* Dவிடுதலை தியாகிகள் - *மதுமிதா* Hவிடுதலை தியாகிகள் - *மதுமிதா* U



விடுதலை தியாகிகள் - *மதுமிதா* 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

விடுதலை தியாகிகள் - *மதுமிதா* Empty சுப்பிரமணிய பாரதி

Post by மதுமிதா Thu Aug 15, 2013 5:01 pm

விடுதலை தியாகிகள் - *மதுமிதா* 1011497_315653135245439_187538384_n

சுப்பிரமணிய பாரதி ( திசம்பர் 11, 1882 -
செப்டம்பர் 11, 1921 ). இவர் பாரதியார் என்றும்,
மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார்.
பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர்,
பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக
சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள்
கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர்
கொண்டவர்.

பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக
நவம்பர் 1904 முதல் ஆகத்து 1906
வரை பணியாற்றியதோடு தம் வாழ்நாளின்
இறுதியிலும் ஆகத்து 1920 முதல் செப்டம்பர்
1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப்
பணியாற்றி மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற
மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905-ஆக.
1906 ), இந்தியா என்ற வார இதழில் (மே 1905-
மார்.1906/செப்.1906, புதுச்சேரி : 10.19.1908-
17.05.1910), சூரியோதயம்(1910),
கர்மயோகி (திசம்பர் 1909-1910), தர்மம்
(பிப்.1910),என்ற இதழ்களிலும் பாலபாரதா ஆர்
யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும்
ஆசிரியராகப் பணியாற்றினார்.

விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய
உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப்
படைத்து மக்களை ஒருங்கிணைத்த
காரணத்தால் பாரதி தேசிய கவியாக
போற்றப்படுகிறார். மண்ணும்
இமயமலை எங்கள் மலையே...
மாநிலமீதிதுபோல் பிறிதிலையே...
இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே...
இங்கிதன் மாண்பிற்கெதிர்
எது வேறே என்று எழுதியவர்.
தன்னுடைய
தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன்
எதிர்காலம் எவ்வாறிருக்கவேண்டும் என்ற
பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம்
என்போம் எங்கள் மாநிலத்
தாயை வணங்குதும் என்போம்" என்றவர்,
பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம்
என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்செய்யும் நதிநீர்
இணைப்புத்
திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.
ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த
சுதந்திரம் அடைந்துவிட்டோம் -
என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த
பாரதி, தேச
விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தவர்.

மதுரை சேதுபதி பள்ளியில் தமிழ் பணி ஆற்றியுள்ளார்

நன்றி முகநூல்


விடுதலை தியாகிகள் - *மதுமிதா* Mவிடுதலை தியாகிகள் - *மதுமிதா* Aவிடுதலை தியாகிகள் - *மதுமிதா* Dவிடுதலை தியாகிகள் - *மதுமிதா* Hவிடுதலை தியாகிகள் - *மதுமிதா* U



விடுதலை தியாகிகள் - *மதுமிதா* 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

விடுதலை தியாகிகள் - *மதுமிதா* Empty வ.உ.சி

Post by மதுமிதா Thu Aug 15, 2013 5:04 pm

விடுதலை தியாகிகள் - *மதுமிதா* 1006053_315641101913309_711590215_n


மற்ற எந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும்
நேராத அவலம் வ.உ.சிக்கு மட்டுமே நேர்ந்தது.
அவர் ஒருவர்தான் பிரட்டிஷ் அரசின்
ஒடுக்குமுறைககும் உள்ளானர். தான் சார்ந்திருந்த
காங்கிரஸ் கட்சியின் துரோகத்திற்கும், சதிக்கும்
ஆளானார்.
வ.உசி வாழ்க்கையின் முற்பகுதி பிரிட்டிஷ் அரசின்
ஒடுக்குமுறைக்கு உள்ளாகி சீரழிந்தது. அவரின்
பிற்பகுதி அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சி செய்த
துரோகத்தில் சிக்கி பாழானது. வாழும்
காலத்திலேயே, தான் கொண்ட கொள்கையின்
இரண்டு நேர் எதிர் நிலைகளையும் சந்தித்த
தியாகி, அநேகமாக வ.உ.சிதம்பரமாக
மட்டுமாகத்தான் இருப்பார்.



இந்தியாவின் சுதேசி வணிகர்கள் இப்படியாகத்
திரைகடல் ஓடித் திரவியம் தேடிக்
கொண்டிருந்தபோது வெள்ளையனை விரட்ட
வேண்டும் என்றால் அவனை எதிர்த்துப்
போட்டி வர்த்தகம் நடத்த வேண்டும்
என்று ஒரு குரல் தூத்துக்குடியிலிருந்து உரத்துக்
கூவியது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்
வணிகரல்ல. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த
வழக்குரைஞரான வ.உ.சிதம்பரம் .
ஒரு பரிதாபத்துக்குரிய சுதந்திரப் போராட்டத்
தியாகி. ஏதோ ஒரு உந்துதலில்
வெள்ளையனுக்கு எதிராகப் போராடிச்
சிறை சென்றவர்” என்பது போன்ற தோற்றம்
வ.உ.சி.யைப் பற்றி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
உண்மையில் அவர் மிகவும் திட்டமிட்டுச்
செயல்பட்ட ஒரு விடுதலை வீரர்.
பிரிட்டிஷாருக்கு எதிரான
நெருப்பாகவே வாழ்ந்தவர்.
“வெள்ளையனை விரட்டுவது என்றால்
நம்மவர்க்குக் கடல் ஆதிக்கம் வேண்டும்.
எனவே தமிழர்கள் மீண்டும் கடல் மேல்
செல்வது எவ்வாறு என்பதைத் திட்டமிட்டேன்”
என்று சுதேசிக் கப்பலுக்கான “விதை‘ பற்றிக்
குறிப்பிடுகிறார் வ.உ.சி.
சுதேசிக் கப்பல் என்பது வியாபாரம் அல்ல,
அது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான
போராட்டத்தின் வீரியமிக்க வடிவம் என்ற புரிதல்
வ.உ.சி.க்கு இருந்தது. எனவே தன்னுடைய
கம்பெனிக்கு மிகச் சாதாரண மக்களிடமெல்லாம்
பங்கு வசூல் செய்தார் வ.உ.சி.
1906 அக்டோபர் 16ஆம் நாள் “சுதேசி ஸ்டீம்
நேவிகேஷன் கம்பெனி‘ என்ற பெயரில் சுதேசிக்
கப்பல் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. 1907
மே மாதம் “காலியோ, லாவோ‘ என்ற
இரண்டு சுதேசிக் கப்பல்கள்
தூத்துக்குடி துறைமுகத்தில் மிதக்கத்
தொடங்கின.
கிலி பிடித்த வெள்ளையர்களின் பிரிட்டிஷ்
இந்தியன் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியும்
(பி.ஐ.எஸ்.என்) பிரிட்டிஷ் அரசும் இணைந்த
கைகளோடு சுதேசிக் கப்பலுக்கு எதிராகச் சதிகள்
செய்ய ஆரம்பத்தன.
தூத்துக்குடிக்கும் கொழும் புக்கும் இடையில் 5
ரூபாயாக இருந்த மூன்றாம் வகுப்புக்
கட்டணத்தை 75 பைசாவாகக்
குறைத்தது பி.ஐ.எஸ்.என் நிறுவனம். அடுத்த
சதியாக, இந்திய இலங்கை ரயில்வே நிர்வாகம்,
பி.ஐ.எஸ்.என் நிறுவனக் கப்பல்களில் ஏற்றப்படும்
சரக்குகளுக்கும் பயணிகளுக்கும் ரயிலில்
கட்டணச் சலுகை என்று அறிவித்தது.
ஆனாலும் தேசப்பற்று மிக்க மக்கள் இந்த
சதி நிறைந்த சலுகைகளைப் புறம் தள்ளி,
வ.உ.சி.யின் சுதேசிக்
கப்பல்களையே ஆதரித்தனர். அதனால்
வெள்ளையன் கப்பல் நிறுவனத்திற்கு மாதம்
40,000 வரை நட்டம் ஏற்பட்டது. சுதேசிக் கப்பல்
மக்களை அரசியல் படுத்தியது. பிரிட்டிஷ்
அரசுக்கு எதிரான போராட்ட உணர்வை மக்கள்
மனதில் விதைத்தது.


விடுதலை தியாகிகள் - *மதுமிதா* Mவிடுதலை தியாகிகள் - *மதுமிதா* Aவிடுதலை தியாகிகள் - *மதுமிதா* Dவிடுதலை தியாகிகள் - *மதுமிதா* Hவிடுதலை தியாகிகள் - *மதுமிதா* U



விடுதலை தியாகிகள் - *மதுமிதா* 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

விடுதலை தியாகிகள் - *மதுமிதா* Empty பூலித்தேவன்

Post by மதுமிதா Thu Aug 15, 2013 5:06 pm

விடுதலை தியாகிகள் - *மதுமிதா* 1173824_315631685247584_83857088_n

நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக்
கொண்டு ஆண்ட பூலித்தேவன் மற்றும்
பூலித்தேவரின் சுற்று வட்டார பாளையங்களைச்
சேர்ந்த வாண்டாயத்தேவன் போன்றவர்கள்
பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில்
கிழக்கிந்திய நிறுவனத்துக்கு எதிராகச்
செயல்பட்டனர்.
1750-ல் இராபர்ட் கிளைவ்
திருச்சிக்கு வந்து ஆங்கிலக்
கொடியை ஏற்றிவைத்துவிட்டு தென்னாட்டுப்
பாளையக்காரர்கள் தன்னை பேட்டி காண
வேண்டுமென்று அறிவித்தார். இதனால் வெகுண்ட
பூலித்தேவன் திருச்சிக்குத் தனது படையுடன்
சென்று ஆங்கிலேயரை எதிர்த்தார். இதில்
பூலித்தேவனே வெற்றிபெற்றார் என 'பூலித்தேவன்
சிந்து' என்ற கதைப்பாடல் கூறுகிறது.பூலித
்தேவனும் இராபர்ட் கிளைவும் திருவில்லிப்புத்தூர்
கோட்டையில் சந்தித்திருக்கலாம் என்றவும்
கருதப்படுகிறது.
பின்னர் 1755 -ல் கப்பம் வசூலிக்க வந்த ஆங்கிலத்
தளபதி அலெக்சாண்டர் கெரான்
என்பவரோடு போரிட்டு வெற்றி பெற்றார்.
இதுவே பாளையக்காரர்கள்-ஆங்கிலேயர்
மோதல்களில் ஆங்கிலேயருக்கு ஏற்பட்ட முதல்
தோல்வியாகும். மேலும் பூலித்தேவன் 1750
முதல் 1767 வரை சுமார் 17 ஆண்டு காலம்
தொடர்ந்து பல போர்களை நடத்திவந்தார்.
பூலித்தேவரின்
மறைவு பற்றி இரு வேறு கருத்துக்கள்
நிலவுகின்றன. மன்னர் தப்பிச் சென்றாலும் அவர்
உயிரை குறியாகக் கொண்ட ஆங்கிலேயர்கள்
அவரைத் தீவிரமாகத் தேடினர். ஒரு சாரார்
கருத்துப்படி ஆரணிக் கோட்டையின் தலைவன்
அனந்த நாராயணன் என்பவனின்
மாளிகைக்கு பூலித்தேவரை வரச்
செய்து அங்கு கைது செய்யப்பட்டார் என்றும்,
பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லும்
வழியில், சங்கரன் கோயிலின் இறைவனை வழிபட
வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பியதாகவும்,
அதன்படி கும்பினியப் போர் வீரர்கள் புடைசூழச்
சென்று இறைவனை வழிபட்டதாகவும் ,
அப்போது பெரிய புகை மண்டலமும் சோதியும்
கைவிலங்குகள் அறுந்து விழ சோதியில் கலந்தார்
என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன்
ஐக்கியமானதால் "பூலிசிவஞானம்" ஆனார் என்றும்
நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன.
இன்றைக்கும் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர
நாராயணன் கோவிலில் பூலித்தேவர் மறைந்த
இடம் என்று ஒரு இடம் பாதுகாக்கப்பட்ட
ு வருகின்றது.
மற்றொரு கருத்து பூலித்தேவர் ஆங்கிலேயரால்
கைதுசெய்யப்பட்டு தூக்கிலிட்ட செய்தியை மக்கள்
அறிந்தால் அவர்கள் கிளர்ச்சி செய்யக்கூடும்
என்பதால் ஆங்கிலேயர் இதனை ரகசியமாகச்
செய்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் தமிழக
அரசால் புதுப்பிக்கப்பட
்டு அவரது நினைவு மாளிகையாக
அமைக்கப்பட்டுள்ளது.

நன்றி முகநூல்


விடுதலை தியாகிகள் - *மதுமிதா* Mவிடுதலை தியாகிகள் - *மதுமிதா* Aவிடுதலை தியாகிகள் - *மதுமிதா* Dவிடுதலை தியாகிகள் - *மதுமிதா* Hவிடுதலை தியாகிகள் - *மதுமிதா* U



விடுதலை தியாகிகள் - *மதுமிதா* 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

விடுதலை தியாகிகள் - *மதுமிதா* Empty காந்தி

Post by மதுமிதா Thu Aug 15, 2013 5:44 pm

விடுதலை தியாகிகள் - *மதுமிதா* 1175089_315685505242202_1719835968_n


மோகன்தாசு கரம்சந்த் காந்தி ( Mohandas
Karamchand Gandhi , அக்டோபர் 2, 1869 -
ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி
என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய
விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக
தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர்
" விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை"
என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம்
என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப்
போராட்டம் இந்திய
நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற
சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும்
ஒரு வழிகாட்டியாக அமைந்தது.


விடுதலை தியாகிகள் - *மதுமிதா* Mவிடுதலை தியாகிகள் - *மதுமிதா* Aவிடுதலை தியாகிகள் - *மதுமிதா* Dவிடுதலை தியாகிகள் - *மதுமிதா* Hவிடுதலை தியாகிகள் - *மதுமிதா* U



விடுதலை தியாகிகள் - *மதுமிதா* 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

விடுதலை தியாகிகள் - *மதுமிதா* Empty வேலுநாச்சியார்

Post by மதுமிதா Thu Aug 15, 2013 6:13 pm

விடுதலை தியாகிகள் - *மதுமிதா* 534015_315702691907150_1896758190_n

1730ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாளுக்ு ஒரே பெண் மகவாக பிறந்தார் வேலுநாச்சியார். எனினும் ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி பெற்றார்; பல மொழிகள் கற்றார்.

1746ல் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதருக்கு மனைவியானார்.

1772ல் ஐரோப்பியரின் படையெடுப்பால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க இடம் மாறி மாறிச் சென்றார் வேலுநாச்சியார்.

இந்த படையெடுப்பை எதிர்க்க நினைத்த வேலுநாச்சியார் அவர்கள் விருப்பாட்சியில் தங்கி ஹைதர் அலியைச் சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேயர் எதிர்ப்பு பற்றி பேசி விளக்கினார்.

வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஹைதர் அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார்.

ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்து வந்தார்.

இதற்கிடையில் தமது எட்டு வயது மகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை அவருக்கு இருந்தது.

அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையின் முயற்சியினால் சிவகங்கை மக்கள் பிரதிநிதிகள் வேலுநாச்சியாரோடு கலந்து பேசியதன் கம்பனி எதிர்ப்புப்படை ஒன்று உருவாக்கப்பட்டது.

மருது சகோதரர்கள் இப்போராட்டத்துககு தலைமை தாங்கினார்.

ஆண் வாரிசு இல்லாமல் உள்ள நாட்டை (அரசாங்கத்தை) தாமே எடுத்து நடத்தலாம் என்று ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியின் சட்ட படி புதிய முறை (doctrine of lapse) தோற்றுவிக்கப்பட்டது.

அதன் பின்பு, சிவகங்கையின் ஆட்சி அதிகாரத்தை காக்கும் பொறுப்பில் இருந்த மருது சகோதர்களே ஆட்சியை கைப்பற்றி இருவரும் சிறப்பாக ஆட்சி நடத்தினர்.

மேலும், தங்களது இறப்பு வரையிலும் சிவகங்கையை சிறப்பான கட்டமைப்போடு ஆண்டு வந்தனர் என்பது இங்கே குறிப்பிடதக்கது.

1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது.

ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகங்கையில் வேலுநாச்சியார், தம்மைக் காட்டிக் கொடுக்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார்.

இந்தக் கோயில் கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருது, பெரிய மருது, தலைமையில் படை திரட்டப்பட்டது.

சிவகங்கை அரண்மைனயில் விஜயதசமி, நவராத்திரி விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்து அதில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள்.

வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார்.

1793ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார்.

பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் டிசம்பர் 25, 1796 அன்று இறந்தார்.


விடுதலை தியாகிகள் - *மதுமிதா* Mவிடுதலை தியாகிகள் - *மதுமிதா* Aவிடுதலை தியாகிகள் - *மதுமிதா* Dவிடுதலை தியாகிகள் - *மதுமிதா* Hவிடுதலை தியாகிகள் - *மதுமிதா* U



விடுதலை தியாகிகள் - *மதுமிதா* 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

விடுதலை தியாகிகள் - *மதுமிதா* Empty பகத் சிங்

Post by மதுமிதா Thu Aug 15, 2013 8:34 pm

விடுதலை தியாகிகள் - *மதுமிதா* 556433_315613581916061_96755294_n


இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார் (சாஹீது என்பது மாவீரர் எனப் பொருள்படும்). இவர் இந்தியாவின் முதலாவது மாக்சியவாதி எனவும் சில வரலாற்றாசிரியர்களால் குறிக்கப்படுவதுண்டு. இந்தியாவின் பிரித்தானிய ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் பிறந்த பகத் சிங்
இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார். பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்.

விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதாற்காக உண்ணாநோன்பு இருந்ததில்
இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது.

முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப்பட்டார். இந்நிகழ்வானது மேலும் பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவும் சோசலிசக் கொள்கைகள் இந்தியாவில் பரவவும்
வழிவகுத்தது.

வாழ்க்கைச் சுருக்கம் பகத் சிங் பஞ்சாபில் உள்ள லாயல்பூர் மாவட்டத்தில், பங்கா என்னும் கிராமத்தில் சர்தார் கிசன் சிங், வித்தியாவதி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப்
பிறந்தார். இவர் விடுதலைப்போராட்ட வீரர்களை கொண்ட சீக்கியக் குடும்பத்தில் பிறந்ததால் இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார். இவரது குடும்பத்தினர் சிலர் பஞ்சாபின் ரஞ்சித் சிங் மன்னரின் இராணுவத்தில் பணியாற்றியவர்கள். தனட்டு 13வது அகவையில் பகத்சிங் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார். பகத்சிங்கின் தூக்குதண்டனை பகத்சிங்கின் தூக்குதண்டனையின் போது வெள்ளையர்கள் கேட்ட தூக்குதண்டனை அங்கீகரிக்கும் பத்திரத்தில் காந்தி கையொப்பம் இட்டது போலவும், தி லெஜன்ட் ஆஃப் பகத்சிங் என்ற இந்தி திரைப்படத்தில் இந்த தண்டனைக்கான ஒப்பீட்டு பத்திரத்தில்(காந்தி இர்வின் பேக்ட்) கையெழுத்திட்டதற்காக காந்தியை மக்கள் கடுமையாக விமர்சிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.
அகிம்சையை பின்பற்றுபவர் எப்படி இம்சை தரும் தூக்குதண்டனைக்கு ஒப்பீடு அளிக்கலாம் என்பது போல கருத்துகள் மக்களால் பேசப்பட்டது.

முகநூல்


விடுதலை தியாகிகள் - *மதுமிதா* Mவிடுதலை தியாகிகள் - *மதுமிதா* Aவிடுதலை தியாகிகள் - *மதுமிதா* Dவிடுதலை தியாகிகள் - *மதுமிதா* Hவிடுதலை தியாகிகள் - *மதுமிதா* U



விடுதலை தியாகிகள் - *மதுமிதா* 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

விடுதலை தியாகிகள் - *மதுமிதா* Empty Re: விடுதலை தியாகிகள் - *மதுமிதா*

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum