ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவில் மணி ஓசை!

Go down

கோவில் மணி ஓசை! Empty கோவில் மணி ஓசை!

Post by krishnaamma Tue Aug 13, 2013 9:15 pm

"மகாலிங்கம் வர்றார்...' கோமளா தகவல் சொல்லி விட்டு உள்ளே போக, தொடர்ந்து கேட் திறக்கும் சத்தமும், பின் மூடும் சத்தமும் கேட்டது. படித்துக் கொண்டிருந்த பேப்பரை மடித்து வைத்து, மகாலிங்கத்தை எதிர்கொள்ள ஆயத்தமானார் முரளிதரன்.
மடித்துக் கட்டிய வேட்டி, முழுக்கை சட்டை, தோளில் துண்டு சகிதமாக வந்து கொண்டிருந்தார் மகாலிங்கம்.

தனியார் அலுவலகத்தில் வேலை பார்த்து ஒய்வு பெற்றவர் மகாலிங்கம். கருப்பான முகத்தில் நரைத்திருந்தாலும், கச்சிதமாக அமர்ந்திருந்த மீசையும், அகல நெற்றி, மேல் நோக்கி சீவப்பட்டிருந்த தலைமுடி, கண்ணாடி எல்லாமாக சேர்த்து, அவருக்கு மதிப்பான தோற்றத்தை கொடுத்திருந்தது என்றாலும், அவர் முகத்தில் சமீபகாலமாக ஒரு இறுக்கம் தெரிந்தது.
கோவில் வேலை துவங்கியதிலிருந்து தான் இந்த மாற்றம்.

நகரின் விளிம்பில் இருந்தது சக்தி கோவில்; பழமையானது. பக்தர்கள் கைங்கர்யத்தில், இரு வேளை ஆராதனை நடந்து கொண்டிருந்தது. கடந்த பத்து ஆண்டில், நகர் நன்றாகவே விரிவடைந்து, புதுப்புது கட்டடங்கள், குடியிருப்புகள், வணிக வளாகங்கள் என்று பெருகின.

கோவில் மட்டும் பழமையாய் இருந்து வந்தது. ஏதேனும் செய்யணுமே என்று கூடிப் பேசி, ஒரு முடிவுக்கு வந்து, வேலையை துவக்கியிருக்கின்றனர் உள்ளூர் மூத்த குடிமக்கள். தினமும் கோவிலுக்கு போகும் வழக்கமுடைய மகாலிங்கம், அந்தக் குழுவில் இல்லாதபோதும், ஏதாவது யோசனை சொல்லிக் கொண்டிருப்பார். ஆனால், யாரும் அவர் யோசனையை கேட்பதில்லை என்று மனிதருக்கு செமக் கோபம்.

கோபம் வந்தால், அவர் புறப்பட்டு வந்து சேர்கிற இடம், முரளிதரன் வீடுதான். சொல்வதை பொறுமையாக கேட்டுக் கொள்ளும் காதுகள் முரளிதரனுக்கு.
""வாங்க மகாலிங்கம்,'' என்று அழைத்தார் முரளிதரன்.
""என்னத்த வாங்குறது. வாங்க வாங்க கடன்தான்,'' என்று சலிப்புடன் அமர்ந்தார்.

""என்ன சாப்பிடுறீங்க...காபி, டீ...''
""ஒண்ணும் வேணாம் சார்... எல்லாம் முடிச்சுட்டு தான் வர்றேன்,'' என்றவர், கழுத்தை வளைத்து தடவிக் கொண்டே, ""கடுப்பா இருக்கு சார்,'' என்று ஆரம்பித்தார்.

"இன்னைக்கு என்ன பிராதோ...' என்று, மனதில் நினைத்துக் கொண்டு, மகாலிங்கத்தின் முகத்தைப் பார்த்தார் முரளிதரன்.
""எல்லாம் கோவில் விவகாரம் தான். தரையெல்லாம் கொத்திப் போட்டுட்டாங்க சார். உடனயே, புது தரை போடப் போறது மாதிரி. இதுல, டைல்ஸ் போடலாமா, கிரானைட் போடலாமான்னு வாக்குவாதம் வேற. எதோ ஒண்ணை கையோடு போட்டு முடிச்சுட்டுல்ல சார்... அடுத்த வேலையை பார்க்கணும்.

தரையை கொத்தி நாலு நாள் ஆச்சு. அது மண்ணும், கல்லுமா அப்படியே கிடக்கு. நடக்க முடியலை. கால் பொத்துப் போகுது. நமக்கே இப்படி இருக்குன்னா... குழந்தைகள், பெண்கள் எல்லாம் எப்படி, நடக்க முடியும்? இதனாலேயே, கோவிலுக்கு பாதி பேர் வர்றதில்லை. கேட்டால்... "முடிச்சிடுவோம், இதுக்குள்ள எலெக்ட்ரிக் வேலைக்கு ஆள் வந்திருக்கு. ஆள் இருக்கும் போதே, அந்த வேலையையும் முடிச்சுக்கணுமில்ல'ன்னு சொல்றாங்க.
""இன்னொருத்தர் என்னடான்னா, "உத்திர வேலையெல்லாம் முடிச்சுட்டுத் தான், தரை வேலை பார்க்கணும். தரையை முதல்ல போட்டுட்டால், அப்புறம், மேலே பூச்சு வேலை செய்யும் போது சிமென்ட் கலவையும், சுண்ணாம்பும் கீழே சிதறி, தரையை இன்னொரு முறை, சீர் செய்ய வேண்டி இருக்கும்... செலவு டபுளாகும்'ன்னு சொல்றார். இவ்வளவு பேசுறவங்க முதல்லயே யோசிச்சு, தரையை கொத்தாமலயாவது இருந்திருக்கணும். என்ன நான் சொல்றது,'' என்றார்.
""சரி தான்,'' என்றார் முரளிதரன்.

""தரை இப்படி இருந்தால், மக்கள் எப்படி கோவிலுக்கு வருவாங்கன்னு கேட்டால்... "சரி செய்ற வரைக்கும் வெளியில் நின்னு கும்பிட்டுட்டு போகட்டுமே'ன்னு, நக்கலா பதில் சொல்றார். எனக்கு சரியான கோபம், அங்கே நின்னால், சண்டையாகிப் போகும்ன்னு வந்துட்டேன்,'' என்று குமைந்தார்.

""சார்... நான் ஒண்ணு சொல்லட்டுமா. உங்களுக்குதான், அவங்க செய்யற எதுவும் ஒத்துப் போகலையே...கோவில் வேலை முடியுறவரை, நீங்க அந்தப் பக்கம் போகாம இருக்கலாமே. சொன்னது போல தூர தரிசனம் செய்துட்டு, வந்துடலாமே!''
""முடியலையே சார். நமக்கு தப்புன்னு படும்போது, எடுத்து சொல்லாம இருக்க முடியலை. இப்படித்தான் பாருங்க, நேத்து சாயங்காலம் கூட்டமா வந்து, வாசல்ல நின்னு, "கோவில் வேலை நிறைய செலவு வைக்குது. அதனால, எல்லாரும் அடுத்த ரவுண்டு செலவுக்கு, தாராளமா டொனேஷன் கொடுக்கணும். உங்க பங்குக்கு 5,000 ரூபாய் போட்டிருக்கோம்'ன்னு சொல்றாங்க. உங்ககிட்டயும் வந்து நிப்பாங்க பாருங்க. இவங்க என் தலையிலேயே கட்டலாம்ன்னு நினைக்கறாங்களா...

"" முதல்ல போட்ட ஆயிரத்தையே, தவணை முறையில் கட்டிகிட்டிருக்கோம். இதுல ஐயாயிரம், பத்தாயிரத்துக்கு எங்க போறது. பில் புக் எடுத்துக்கிட்டு, நாலு பேர் நாலு ஊர் போக வேண்டியது தானே... வசதியானவங்க, வியாபாரிகள்ன்னு பார்த்து கேட்க வேண்டியது தானே! அதுக்கு போக மாட்டாங்களாம். மக்களா பார்த்து செய்யணுமாம். விளம்பரம் செய்யாம, நாலு இடம் சுத்தாம காசு எப்படி வரும்? மேற்கொண்டு என்னால முடியாதுன்னு சொன்னதுக்கு, முறுக்கிட்டு போறாங்க...

""புதுசா ஒரு குருக்களை போட்டாங்க. அவரு, அபார சுறுசுறுப்பு. ஒரு அர்ச்சனைக்கு அதிகபட்சம் எவ்வளவு நேரம் ஆகும் சார். அஞ்சு நிமிஷம்... இவர் கால் மணி நேரம் எடுத்துக்கறார். வர்றவங்க, எவ்வளவு நேரம் காத்திருப்பாங்க!''
தலையசைத்துக் கொண்டார் முரளிதரன்.

""வேலையோட வேலையா, மதிலை அணைச்சு செடிகள் வைக்க, வசதியா குழி வெட்டிடுங்கன்னு யோசனை சொன்னேன் சார். மொத்தமும் தரையாக போட்டு விட்டால், அப்புறம் குழி வெட்றது சிரமம். சரியாகவும் இருக்காது. ஆரம்பத்துலேயே, குழி வெட்டி வச்சுட்டால், துளசி, அரளி, தும்பைன்னு ஒரு பக்கமும், மா, தென்னைன்னு, இன்னொரு பக்கமும் வளர்த்துட்டால், நல்லாருக்கும்ன்னு சொன்னேன் சார்.''

தொடர்ம்.............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கோவில் மணி ஓசை! Empty Re: கோவில் மணி ஓசை!

Post by krishnaamma Tue Aug 13, 2013 9:17 pm

""நல்ல யோசனை தானே... கோவில் என்றால், பின்னால் நந்தவனமும் இருந்தால் தானே சிறப்பு!''
""இந்தக் கோவிலுக்கு முன்பு இருந்தது சார். பராமரிப்பில்லாமல் போச்சு. அதை சொன்னதுக்கு, ஒருத்தர் சலிச்சுக்குறார்... "இருக்குற வேலைகளை முடிக்கவே முழி பிதுங்குது. இதுல செடி, கொடி, மரம்ன்னு இழுத்து விடுறிங்களே'ங்கறார்.''

""சொல்லுங்க சார்... நான் செடிகள் ஸ்பான்சர் செய்றேன்,'' என்றார் முரளிதரன்.
""வாங்கிக் கொடுத்தாலும், நட்டு வைக்கணுமில்ல சார். இவங்க, அதை ஓரமா காய வைச்சுட்டு, அடுத்த வேலை பார்க்கறவங்களா இருக்காங்க. நாம என்னத்தை சொல்ல முடியும். நீங்க, புதுசா இந்த ஊருக்கு குடி வந்தவங்க. இவங்களை பத்தி தெரியாது. நான், அம்பது வருஷமா பார்க்கறேன். என்னமோ, அந்த சாமியே பார்த்து, சரி செய்துகிட்டா தான் உண்டு,'' என்று அவர் அங்கலாய்த்த போது, அவரை தேடிக் கொண்டு ஒருவர் வந்தார்...

""தர்மகர்த்தா, உங்களை கூட்டிகிட்டு வரச் சொன்னாரு,'' என்று அழைத்தார் மகாலிங்கத்தை.
""எதுக்கு?''
""தெரியலை.''

""இந்த தர்மகர்த்தா, ஒரு சோப்ளாங்கி. சொந்த புத்தியே கிடையாது. நாய், பூனை சொன்னாலும் தலையாட்டுவார். எதுக்கு கூப்பிடறார்... நான் வாய வச்சுகிட்டு சும்மா இருக்காம தப்புன்னு பட்டதை, "பட் பட்'ன்னு பேசிடறேன்ல. எவனோ போய் வத்தி வச்சிருப்பான். என்ன ஏதுன்னு விசாரிக்கத் தான், ஆள் அனுப்புறார். மரியாதை கொடுத்து பேசினால், பொறுமையா எல்லாம் சொல்லுவேன். தாட் பூட்டுன்னால், போய்யான்னு வந்திருவேன். என்னை பத்தி, அவருக்கும் நல்லா தெரியும். வர்றேன் சார்,'' என்று எழுந்து போனார்.

பின், அவர் வரவில்லை.
ஒரு பிரதோஷ நாளில், முரளிதரன் கோவில் பக்கம் போன போது, அங்கே மகாலிங்கம் பிசியாக இருப்பதை பார்க்க முடிந்தது. ஆட்களுக்கு உத்தரவிட்டுக் கொண்டிருந்தார். அவர் தலைமையில் எல்லாம் நடப்பது போலிருந்தது. ஆச்சரியமாக இருந்தது முரளிதரனுக்கு.

""வாங்க சார். இந்த பொறுப்பிலிருந்த மணிகண்டனுக்கு டைபாய்ட். மருத்துவனைக்கு கொண்டு போயிட்டாங்க. அவர் பார்த்துக் கொண்டிருந்த வேலையை தொடர்ந்து பார்க்க, யாரைப் போடலாம்ன்னு யோசிச்சுருக்காங்க. யாரோ, என் பேரை சிபாரிசு செய்திருக்காங்க. அன்னைக்கு உங்க வீட்ல பேசிகிட்டிருக்கும் போது, ஆள் அனுப்பி கூப்பிட்டது, இதுக்காகத் தான். எனக்கு விருப்பமில்லை. கட்டாயப்படுத்தும் போது என்ன செய்ய... பொறுப்பு எடுத்ததிலிருந்து நிற்க நேரமில்ல. நேரத்துக்கு சாப்பிட முடியல. அதனால் தான், உங்களை கூட பார்க்க முடியவில்லை,'' என்றார்.

""என்னைப் பார்க்கறது முக்கியமில்லை. அதை, எப்ப வேணாலும் செய்யலாம். தேவைப்பட்டால், நானே வந்து உங்களை பார்த்துட்டு போறேன். உங்களுக்கு, இந்தக் கோவில் வேலைகளில் நிறைய அதிருப்தி இருந்தது. இப்போ நீங்களே பொறுப்பில் இருப்பதால், எல்லா குறைகளையும் சீர் செய்து, உங்கள் மனம் திருப்திபடும்படி கோவிலை புதுப்பிச்சுடலாம் இல்லையா,'' என்று புன்னகைத்தார்.

மகாலிங்கம் ஏதோ சொல்ல வந்த போது, போன் ரீங்கரிக்க, ""ஒரு நிமிடம் சார்,'' என்று, ஒதுங்கிப் போய் பேச ஆரம்பித்தார்.
"பாலுச்சாமி ஸ்டோர்சுங்களா, பத்து மூட்டை சிமென்ட் அனுப்பியிருக்கீங்களா... நல்லது சார். நான் பார்த்து இறக்கிக்கிறேன். கோவில்ல தான் இருப்பேன்...' என்று பேசிக் கொண்டிருக்கும் போது யாரோ ஒருவர், "தரையை கொத்திப் போட்டு எத்தனை நாள் ஆகுது. இதை, முதலில் சரி செய்யாம என்ன வேலை பாகுறாங்களோ...' என்று சலித்துக் கொள்ள, அது மகாலிங்கத்தின் காதுக்கு எட்டி, மொபைலில் பேசிக் கொண்டிருந்தவர் பாதியில் நிறுத்தி,""ஆமாம். எங்களுக்கு வேலை பார்க்கத் தெரியலை. நீங்க தான் கொஞ்சம் வந்து பார்த்து முடியுங்களேன்,'' என்று கோபமாக சொன்னார்.

""அதுக்காக மாசக் கணக்கிலா இழுக்கறது. பணம் வசூல் செய்றிங்கள்ல... எது முக்கியமோ, அதை உடனே முடிக்க வேணாமா?''
""எவ்வளவு பணம் கொடுத்துட்டிங்க... பத்து லட்சம் இருக்குமா?''
""பத்து ரூபாய் கூட சொல்லுங்க.''
""பத்து ரூபாய் கொடுத்திட்டு, இந்த பேச்சு பேசறீங்க. ஒரே நேரத்துல எல்லாம் முடிக்க, இங்க ஆளுக்கு பத்து கையா இருக்கு.

ஒவ்வொன்னா தான், முடிக்க முடியும். இஷ்டம்ன்னா உள்ள வந்து சாமி கும்பிடுங்க. இல்லன்னா வீட்லருந்தே கும்பிடுங்க,'' என்று பேசிக் கொண்டே திரும்பியவர், முரளிதரனைக் கண்டு திடுக்கிட்டார். வரிசையில் நின்றிருந்த முரளிதரனும், மகாலிங்கத்தை ஆச்சரியமாக பார்த்தார் .

""நான் தப்பு செய்துட்டேன் சார். அவர்கிட்ட நான், அப்படி பேசியிருக்க கூடாது. அவர் வெளியில் இருந்து பார்ப்பவர். அவருக்கு தரை சீராக இல்லைங்கறது மட்டும் தான் தெரியும். உள்ளே என்ன நிலைமை, ஏன் அதை பெண்டிங்கில் வைத்திருக்கிறோம்ன்னு தெரியாது. நான், அதை பொறுமையா விளக்கியிருக்கணும். அப்படி தான் ஒருத்தர், ரெண்டு பேர்களுக்கு விளக்கமா சொல்லிகிட்டிருந்தேன். திரும்ப திரும்ப கேட்கும் போது, பொறுமை போய் எரிச்சல் வந்துடுதுல்ல,'' என்று தன் செயலுக்கு நியாயம் சொன்னார்...

""கொஞ்சம் நாள் முன் வரைக்கும், நானும் அப்படி தான் கேட்டுகிட்டிருந்தேன். சம்பந்தப்பட்டவங் களை நிந்தனை செய்துக்கிட்டிருந்தேன். ஆனால், ஒரு வாய்ப்பு கிடைச்சு உள்ளே போய் என்ன நடக்குது, என்ன சிரமங்கள் இருக்குதுன்னு நேரில் பார்த்தப்ப தான், அடடா... இது தெரியாம, அவங்களை பேசிக்கிட்டிருந்தோமேன்னு ரொம்ப வருத்தபட்டேன் சார்.

""ஆமாம் சார்... கைநிறைய பணம் வச்சுக்கிட்டு, வேலையை துவங்கினாலே, ஆயிரத்தெட்டு தடை, சிக்கல் வருது. ஒவ்வொரு வேலைக்கும், மத்தவங்களை எதிர்பார்த்து செய்யும் போது, வேலை நினைச்சபடி வந்திடுமா... யார் பணம் கொடுப்பாங்க, யார் மண்ணும், கல்லும் கொடுப்பாங்கன்னு தேடித்தேடி ஓடி, எது கிடைக்குதோ, அதைக் கொண்டு கொஞ்சம், கொஞ்சமாய் வேலைகளை நகர்த்திட்டு போறதுங்கறது பெரிய சவால் சார். அதற்கு அதிக பொறுமையும், நிதானமும் வேணும். நான் அப்ப சொன்னேன்... "செடிகள் நட, இப்பவே குழிகள் வெட்டுங்க'ன்னு. இப்ப கேட்டால், நானே வேணாம்ன்னு தான் சொல்லுவேன்,'' என்றார்.
அதற்குள் மொபைலில் ரீங்காரம்...

""சரி சார், நான் கிளம்புறேன். கூடுமானவரை, கோவிலுக்கு வர்ற யாரையும் கடிஞ்சுக்காம, பதில் சொல்ல பார்க்குறேன். அது முடியுதோ, இல்லையோ, உண்மை புரியாம, வெளியிலிருந்து வெட்டி விமர்சனம் செய்ற வேலையை, இன்னையோடு தலை முழுகிடுறேன். கனவுல கூட, இனி யாரையும் எதையும் குறை சொல்லக் கூடாது நான். அந்த புத்தியை கொடுத்த கடவுள், அதன்படி நடக்கும் சக்தியையும் கொடுக்கட்டும்,'' என்றபடி, மொபைலில் பேசியபடி நடந்து போனார்.

முரளிதரனும், அவர் மனைவியும் வாயடைத்து நின்றனர்.
அப்போது, கோவிலிலிருந்து மணியோசை காற்றில் மிதந்து வந்தது.
டாங்...
டாங்...
டாங்...
டாங்.

நன்றி : வார மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum