புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து
Page 1 of 1 •
அஞ்சல் துறையில் என்னுடன் பணியாற்றி, உத்தரப் பிரதேச போஸ்ட்மாஸ்டர் ஜெனரலாக ஓய்வு பெற்ற ஷம்சுர் ரஹ்மான் ஃபரூக்கி அவர்களின் உருது நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு The Mirror of Beauty (Hamish Hamilton) என்ற தலைப்புடன் வெளியாகியுள்ளது. பல இதழ்களில் வெளி வந்துள்ள மதிப்புரைகள் எல்லாமே அதைப் போற்றியுள்ளன. ஃபரூக்கி சில ஆண்டுகளுக்கு முன் உருது இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்புக்காக பத்ம அளித்து கெளரவிக்கப்பட்டார்.
இந்த நாவலைப் பற்றிப் படித்து விட்டு அஞ்சல் துறையில் இலக்கியப் பணி ஆற்றிய மற்றவர்களைப் பற்றி எண்ணியபோது என் நினைவில் முதலில் வந்த பெயர் வி.கனகசபை பிள்ளை (1855-1906) . இவர் எழுதிய Tamils 1800 Hundreds Years Ago நூல் தமிழ் மறுமலர்ச்சிக்கு முக்கிய வித்துக்களில் ஒன்றாக அமைந்தது. இந்நூல் ஒரு ஆழமான ஆய்வு முயற்சி.
தமிழில் பதிப்பு முயற்சிகள்
இந்தியா ஒரு காலனி நாடாக, தன்மானமிழந்து அவதிப்பட்டுத் தன்னிரக்கத்தில் உழன்றுகொண்டிருந்த ஆண்டுகளில் தமிழகத்தில் தமிழ்க் காப்பியங்களும் பிற நூல்களும் கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில், உ.வே. சாமிநாத அய்யரும் தாமோதரம் பிள்ளையும் பழந்தமிழ் நூல்களைத் தேடிப் பதிப்பித்துக்கொண்டிருந்த சமயத்தில் கனகசபை பிள்ளையும் ஓலைச்சுவடி களைச் சேகரித்து வைத்திருந்தார்.
சிலவற்றை அய்யரிடம் கொடுத்தார். தாமோதரம் பிள்ளைக்கும் அய்யருக்கும் இருந்த போட்டி காரணமாக அரிய தமிழ் நூல்கள் அச்சேறுவது பாதிக்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சிய கனகசபை அய்யருக்குக் கடிதம் எழுதி பதிப்புப் பணியை நிறுத்தி விட வேண்டாமென்று கேட்டுக்கொண்டார்.
ஆனால் இந்திய அளவில் வரலாற்றாய்வளர்களிடையே 9-ம் நூற்றாண்டுக்கு முந்தி தமிழ் இலக்கியமே கிடையாது என்றும், அதற்குப் பின் வந்த தமிழ்ப் படைப்புக்களும் சமஸ்கிருத இலக்கியத்தைச் சார்ந்தே இருந்தன என்ற கருத்து அந்த காலகட்டத்தில் பரவலாக இருந்தது. இதைச் சுட்டிக்காட்டிய கனகசபை இந்த அணுகுமுறையை மாற்றும் நோக்கத்தினூடேதான் தமிழ்க் காப்பியங்கள் பற்றியும் அவை காட்டுகின்ற தமிழர் வாழ்வுமுறை கலாச்சாரம் பற்றியும் ஆங்கிலத்தில் எழுத முற்பட்டதாகப் பதிவு செய்திருக்கின்றார்.
தமிழ்-ஆங்கில அகராதிப் பணி
தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை கொண்ட கனகசபை பிள்ளை முதலில் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களை ஆராய்ந்து பண்டைய தமிழ்ச் சமூகம், வரலாறு பற்றிப் பல ஆய்வுக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் 1895 முதல் 1901 வரை எழுதினார். The Madras Review மாத இதழில் இந்தக் கட்டுரைகள் வெளியாயின. மகாவம்சம் போன்ற புத்த இலக்கியக்கியங்களை ஆராய்ந்து, அதன் மூலம் இந்த இரு தமிழ் காப்பியங்களில் வரும் சில வரலாற்று ஆளுமைகளை அடையாளம் கண்டார்.
சிலப்பதிகாரக் கதையில் சேரன் செங்குட்டுவனின் பட்டாபிஷேகத்திற்கு வந்திருந்த கயவாகு, இலங்கை அரசன் கஜபாகு என்று கூறினார். பின்னர் இவர் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான, பொய்கையார் படைத்த, போர்க்களங்களைப் பின்புலமாக கொண்ட கலிங்கத்துப் பரணி, நூலை பொழிப்புரையாக ஆங்கிலத்தில் எழுதி அன்று பம்பாயிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த பிரபல வரலாற்று இதழான Indian Aniquary-ல்
1890-ல் வெளியிட்டார். களவழி நாற்பது, விக்கிரம சோழனுலா போன்ற நூல்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கின்றார். கனகசபையின் கட்டுரைகள் மூலம் தமிழ்நாட்டு பண்டைய வரலாறு, பாரம்பரியம், மொழி சார்ந்த கலாச்சாரம் உலகிற்குக் காட்டப்பட்டது.
அப்பாவு பிள்ளை என்ற ஆய்வாளர் இருபது ஆண்டுகளாக இவருடன் சேர்ந்து உதவியாளராகப் பணியாற்றினார். தமிழ்-ஆங்கில அகராதி ஒன்றைத் தயாரித்துக்கொண்டிருந்த வின்சுலோவிற்கு இவரது தந்தையார் கெல்லாக் (Kellog) விசுவநாதன் பிள்ளை செய்து வந்த ஆய்வு உதவியைக் கனகசபை தொடர்ந்து செய்தார். 1890-ல் வெளியான இந்த அகராதி இன்னும் பயன்பாட்டில் உள்ளது.
தபால் துறை வேலை
இரு நூற்றாண்டுகளுக்கு முன் அஞ்சல் துறையில் பணியாற்றிய இந்த முக்கியமான ஆய்வாளரைப் பற்றிப் பலருக்குத் தெரியாது. யாழ்ப்பாணத்திற்கருகே உள்ள மல்லாகம் கிராமத்தில் பிறந்த கனகசபை தன் பெற்றோரின் ஒரே பிள்ளை. படிப்பு முடித்து 1872-ல் பி.ஏ. பட்டம் பெற்று பி.எல். படிப்பு முடித்து மதுரையில் வழக்கறிஞராக வேலை செய்ய ஆரம்பித்தார். முதல் வழக்கிலேயே திறம்பட வாதாடி கட்சிக்காரருக்கு வெற்றி ஈட்டித் தந்தார்.
ஆனால் நீதிமன்றத்திற்கு விட்டு வெளியே வந்த பின், எதிர்க்கட்சிக்காரர் இவரை அவதூறாக ஏசியதால் வெறுப்புற்று, அந்த வேலையை துறந்து அஞ்சல் துறையில் எழுத்தராக சேர்ந்தார். ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற்று, கள்ளிக்கோட்டையில் போஸ்டல் சூப்பிரண் டெண்டாகப் பணியாற்றிய மைசூரில் சில ஆண்டுகள் இருந்த பின், கடைசியாக சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது வேலை நிமித்தம் காஞ்சிபுரம் சென்றிருந்த இடத்தில் நலம் குன்றி 21.6.1906-ல் காலமானார்.
1904 ஆண்டில் இக்கட்டுரைகளை தொகுத்து Tamils 1800 Years Ago என்ற தலைப்பில் புத்தகமாக ஹிக்கின்பாதம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. வரலாற்று ஆய்வில் பிள்ளையவர்களின் ஆர்வத்தைக் கவனித்து அவரை எழுதத் தூண்டிய, சென்னை பிரதம நீதிபதி எஸ். சுப்ரமணிய அய்யர் அவர்களுக்கு இந்நூல் அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றது. பின்னர் இந்த நூலை கா. அப்பாதுரை அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் என்ற தலைப்பில், சைவ சித்தாந்த கழகம் மூலம் வெளியிட்டார். இதன் புதிய பதிப்பு 1956-ல், அன்று கல்வி அமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியம் அவர்களின் முன்னுரையுடன், கெட்டி கேலிகோ அட்டையுடன் வெளிவந்தது.
சிலப்பதிகாரம், மணிமேகலை பற்றிய இரு பகுதிகள் இந்நூலின் சிறப்பு அம்சம். பண்டைய தமிழர்களின் கலாச்சாரம், வாழ்வுமுறை இவற்றை வரலாற்றுப் பின்புலத்தில் விளக்கியிருந்தார் கனகசபை. இந்த இரு இயல்களை ஒரு தனி நூலாக வெளியிட சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம் தீர்மானித்து 1956-ல் கெட்டி அட்டையுடன் The Great Twin Epics of Tamil என்ற தலைப்பில் வெளியிட்டது. தெ.பொ. மீனாட்சிசுந்தரம் அவர்களின் முன்னுரையுடன் இது வெளிவந்தது. .
கனகசபை பிள்ளையின் ஆய்வுப் பணியைப் பற்றி அதிகம் எழுதப்படவில்லை. அண்மையில் வெளிவந்துள்ள Manuscripts, Memory and History: Classcial Literature in Colonial India என்ற நூலில்
வி. ராஜேஷ் கனகசபையின் நூல் பற்றியும் தமிழ் மறுமலர்ச்சியில் அதன் பங்கு பற்றியும் குறிப்பிடப்பட்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது.
- சு. தியடோர் பாஸ்கரன், இயற்கையியலாளர், மற்றும் கட்டுரையாளர் (thehindu)
சு. தியடோர் பாஸ்கரன் அவர்களுக்கும் சாமி அவர்களுக்கும் நன்றி !
தமிழ்த் தொண்டர்களில் மறக்கமுடியாதவர் தி. கனகசபைப் பிள்ளை !
நம் நெஞ்சில் நிற்பவர் அவர் !
தமிழ்த் தொண்டர்களில் மறக்கமுடியாதவர் தி. கனகசபைப் பிள்ளை !
நம் நெஞ்சில் நிற்பவர் அவர் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1