ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவணி மாத ராசி பலன்கள் !

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஆவணி மாத ராசி பலன்கள் ! - Page 2 Empty ஆவணி மாத ராசி பலன்கள் !

Post by krishnaamma Fri Aug 09, 2013 9:21 pm

First topic message reminder :

மேஷம்: உண்மைக்காக உரக்க குரல் கொடுக்கும் நீங்கள், அதர்மத்தை தட்டிக் கேட்க தயங்க மாட்டீர்கள்.  உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியன் 5ல் அமர்ந்து ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் பிள்ளைகளின் பிடிவாதம் நீங்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.  பூர்வீகச் சொத்தைப் பெறுவதில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். சுக்கிரன் 6ந் தேதி வரை 6ம் வீட்டில் மறைந்து நிற்பதால் கணவன்- மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வீண் சந்தேகத்தால் பிரிவுகள் வரக்கூடும். வாகன விபத்துகள் வரக்கூடும். மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வரக்கூடும்.

7ந் தேதி முதல் சுக்கிரன் 7ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்வதால் கணவன்மனைவியுடன் இருந்த கசப்புணர்வுகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். விருந்தினர், நண்பர்கள் வருகையால் வீடு களைகட்டும். உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் 19ந் தேதி முதல் 4ல் கேந்திர பலம் பெற்று அமர்வது உங்களின் மனோபலத்தை அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். ஆனால், செவ்வாய் நீசமாகி அமர்வதால் சோர்வு, களைப்பு வந்து நீங்கும். வேலைச்சுமை இருக்கும். தூக்கம் குறையும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறையக் கூடும்.

எனவே இரும்புச் சத்துள்ள காய், கனிகளை உட்கொள்வது நல்லது. சகோதர வகையிலும் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். கண்டகச்சனி நடைபெறுவதால் யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். குரு 3ம் வீட்டில் மறைந்து நிற்பதால் பழைய கடனை நினைத்து அவ்வப்போது குழம்புவீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மாணவர்களே! நினைவாற்றல் அதிகரிக்கும். புது நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அரசியல்வாதிகளே! உங்கள் கை ஓங்கும். செல்வாக்கு கூடும். பெரிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரும்.

வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். 7ல் சனி நிற்பதால் பங்குதாரர்களிடையே சிறு பிரச்னைகள் வெடிக்கும். அனுசரித்துப் போவது நல்லது. உத்யோகத்தில் சிறு அவமானங்கள் வந்து நீங்கும். வேலைச்சுமையும் அதிகரிக்கும். வீண் பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது. விரும்பத்தகாத இடமாற்றங்கள் ஏற்படக்கூடும்.  கலைத்துறையினரே! புதிய வாய்ப்புகளால் உற்சாகமடைவீர்கள். விவசாயிகளே! மாற்றுப் பயிர் மூலமாக மகசூல் பெருகும். மாறுபட்ட அணுகுமுறையாலும் யதார்த்தமான பேச்சாலும் இழந்ததை எட்டிப்பிடிக்கும் மாதமிது.          

ராசியான தேதிகள்:

ஆகஸ்ட் 19, 20, 21, 29, 30, செப்டம்பர் 1, 5, 6, 7, 8, 15, 16.

சந்திராஷ்டம தினங்கள்:

செப்டம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் எதிலும் அவசரப்பட வேண்டாம்.

பரிகாரம்:

கரூர் என்கிற தலத்தில் அருளும் கல்யாண பசுபதீஸ்வரரை தரிசியுங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து வணங்குங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


ஆவணி மாத ராசி பலன்கள் ! - Page 2 Empty கும்பம்

Post by krishnaamma Fri Aug 09, 2013 9:31 pm

மற்றவர்கள் செய்யப் பின்வாங்கும் செயல்களை தானாக முன்வந்து செய்யும் ஆற்றலுடைய நீங்கள், தன்னை மதியாதவர்களுக்கும் மறுக்காமல் உதவி செய்வீர்கள். கடந்த ஒன்றரை மாதங்களாக உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் அமர்ந்து உங்களை கோபப்பட வைத்ததுடன் குழப்பங்களையும் பிரச்னைகளையும் தந்து கொண்டிருக்கும் செவ்வாய் 19ந் தேதி முதல் 6ல் அமர்வதால் எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளால் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். குழந்தை பாக்யம் உண்டாகும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் சரியாகும். சகோதர வகையில் உதவிகளுண்டு. பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். முன் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த வீடு, மனையை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள்.

சிலர் கோலாகலமாக கிரகப் பிரவேசம் செய்வீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். 5ல் குரு தொடர்வதால் சமூகத்தில் அந்தஸ்து கூடும். சூரியன் வலுவாக நிற்பதால் மனைவி உங்களின் புது முயற்சிகளை ஆதரிப்பார். யோகாதிபதி புதன் சாதகமாக இருப்பதால் அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சுக்கிரன் 7ந் தேதி முதல் வலுவடைவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வீடு கட்டுவீர்கள். வெளியூர் பயணங்களால் பயனடைவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.

உங்கள் ராசிநாதனான சனிபகவான் 9ம் வீட்டில் நிற்பதால் எதையும் சமாளிக்கும் பக்குவம் கிடைக்கும். தந்தையாருடன் கருத்து மோதல்கள் வரும். அவருக்கு மருத்துவச் செலவுகளும் ஏற்படும். மாணவர்களே! உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். வேற்றுமதத்தை சேர்ந்தவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். கன்னிப் பெண்களே! காதலும் இனிக்கும், கல்வியும் இனிக்கும். பெற்றோரின் நீண்ட நாள் கனவுகளை நனவாக்குவீர்கள். அரசியல்வாதிகளே! கட்சித் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். சகாக்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதிய பதவிகள் வரும்.

வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். கட்டிடம், வாகனம், உணவு வகைகளால் லாபமடைவீர்கள். எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். வேலையாட்கள், பங்குதாரர்களிடம் கறாராக இருங்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப்பற்றி நல்ல இமேஜ் உண்டாகும். புது பொறுப்புகள், சலுகைகள் தேடி வரும். கலைத்துறையினரே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். விவசாயிகளே! அரசாங்க சலுகைகளை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். அடகு வைத்திருந்த பத்திரத்தை மீட்பீர்கள். மனநிம்மதியும் பணவரவும் அதிகரிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஆகஸ்ட் 23, 24, 25, 26, 27, 28, 29, செப்டம்பர் 2, 3, 5, 11, 12, 14.

சந்திராஷ்டம தினங்கள்:

செப்டம்பர் 6ந் தேதி மாலை 3 மணி முதல் 7, 8 தேதிகளில் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்:

சென்னை - திருப்போரூர் சாலையிலுள்ள செங்கண்மால் தலத்தில் அருள்புரியும் செங்கண்மாலீஸ்வரரை வணங்கி வாருங்கள். அருகிலுள்ள கோயிலுக்கு விளக்கேற்ற எண்ணெய் வாங்கிக் கொடுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆவணி மாத ராசி பலன்கள் ! - Page 2 Empty மீனம்

Post by krishnaamma Fri Aug 09, 2013 9:31 pm

எப்படியும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழவேண்டும் என்று வரைமுறைப்படுத்தி வாழும் நீங்கள், வெள்ளை உள்ளமும் வெளிப்படையான பேச்சும் கொண்டவர்கள். கடந்த ஒரு மாத காலமாக 5ல் அமர்ந்து உங்களை பாடாய்படுத்தி, எதிலும் ஒரு தெளிவில்லாமல் செய்த சூரியன் இப்போது 6ம் வீட்டில் அமர்ந்ததால் குழப்பம், கோபம் நீங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை தீர்க்க புது வழி பிறக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொண்டை வலி, மூக்கடைப்பு வந்து போகும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும்.

மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். யோகாதிபதி செவ்வாய் 19ந் தேதி முதல் 5ல் நீச்சம் பெற்று அமர்வதால் பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. அவர்களின் உங்களின் எண்ணங்களை திணிக்க வேண்டாம். அவர்களின் உடல் நிலை பாதிக்கும். ராசிநாதன் குருபகவான் 4ல் தொடர்வதால் வேலைச்சுமை, அலைச்சல், தலைச்சுற்றல் வந்துபோகும். தாயாருடன் விவாதம் வேண்டாம். தாய்மாமன், அத்தை வகையில் மனஸ்தாபம் வந்து நீங்கும்.

அஷ்டமத்துச் சனி தொடர்வதால் யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. குடும்பத்தினருடன் வெளியூர் செல்வதாக இருந்தால் விலை உயர்ந்த நகை, பணம், பத்திரத்தை பாதுகாப்பாக வைத்துச் செல்வது நல்லது. களவுபோக வாய்ப்பிருக்கிறது. 2ல் கேதுவும், 8ல் ராகுவும் தொடர்வதால் சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். மாணவர்களே! சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது அதற்கான உழைப்பும் வேண்டும். கன்னிப் பெண்களே! சமயோஜித புத்தியுடன் நடந்து கொள்ளுங்கள். பெற்றோரை அனுசரித்துப் போங்கள். அரசியல்வாதிகளே! சகாக்களுடன் உரிமையாகப் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். கட்சி மேல்மட்டத்தை விமர்சிக்க வேண்டாம்.

வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகளிடம் நெருக்கமும் வேண்டாம், பகையும் வேண்டாம். அளவோடு பழகுங்கள். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். கலைத்துறையினரே! பழைய நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்புகள் வரும். மூத்த கலைஞர்கள் உங்களின் புது முயற்சியை ஆதரிப்பார்கள். விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லையால் மகசூல் குறையும். பம்பு செட் பழுதாகி சரியாகும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பழைய நண்பர்களாலும் பிரபலங்களின் ஆதரவாலும் முன்னேறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஆகஸ்ட் 17, 18, 19, 20, 26, 27, 29, செப்டம்பர் 1, 4, 5, 7, 13, 14, 15, 16.

சந்திராஷ்டம தினங்கள்:

செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம்.

பரிகாரம்:

தேனி - கம்பம் பாதையில் அமைந்துள்ள வீரபாண்டி கௌமாரி அம்மனை தரிசியுங்கள். கோயில் கும்பாபிஷேகங்களுக்கு உதவுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆவணி மாத ராசி பலன்கள் ! - Page 2 Empty Re: ஆவணி மாத ராசி பலன்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum