புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரம் Poll_c10மரம் Poll_m10மரம் Poll_c10 
156 Posts - 79%
heezulia
மரம் Poll_c10மரம் Poll_m10மரம் Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
மரம் Poll_c10மரம் Poll_m10மரம் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மரம் Poll_c10மரம் Poll_m10மரம் Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
மரம் Poll_c10மரம் Poll_m10மரம் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
மரம் Poll_c10மரம் Poll_m10மரம் Poll_c10 
3 Posts - 2%
Pampu
மரம் Poll_c10மரம் Poll_m10மரம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மரம் Poll_c10மரம் Poll_m10மரம் Poll_c10 
1 Post - 1%
prajai
மரம் Poll_c10மரம் Poll_m10மரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரம் Poll_c10மரம் Poll_m10மரம் Poll_c10 
321 Posts - 78%
heezulia
மரம் Poll_c10மரம் Poll_m10மரம் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மரம் Poll_c10மரம் Poll_m10மரம் Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
மரம் Poll_c10மரம் Poll_m10மரம் Poll_c10 
8 Posts - 2%
prajai
மரம் Poll_c10மரம் Poll_m10மரம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மரம் Poll_c10மரம் Poll_m10மரம் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
மரம் Poll_c10மரம் Poll_m10மரம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மரம் Poll_c10மரம் Poll_m10மரம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மரம் Poll_c10மரம் Poll_m10மரம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
மரம் Poll_c10மரம் Poll_m10மரம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரம்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Aug 09, 2013 4:16 pm

உனக்குத் தெரிந்த 50 மரங்களைப் பட்டியலிடு என்றால் நம்மில் பெரும்பாலோர் வேப்ப மரம், மா மரம், கொய்யா மரம், நெல்லி மரம், அரச மரம், ஆல மரம், பலா மரம், தேக்கு மரம், வாழை மரம், தென்னை மரம், பனை மரம் என்று தொடங்கி அதிக பட்சமாக ஒரு 20 மரங்களின் பெயர்களைச் சொல்லக் கூடும். அதில் பல மரங்களை இக்காலத் தலைமுறையினர் பலரும் பார்த்திருக்கக் கூட மாட்டார்கள்.

இன்னும் பல மரங்களை தினசரி நாம் நடந்து செல்லும் பாதையில் கண்டிருப்போம் ஆனால் அவற்றின் பெயரைத் தெரிந்து கொள்ள முயன்றிருக்கக் கூட மாட்டோம். இன்னும் பல மரங்களின் பெயர்களை நாம் அடிக்கடிக் கேள்விப் பட்டிருப்போம் ஆனால் அது எப்படி இருக்கும் எங்கு இருக்கும் என்றுத் தேடிப் போய் அறிந்து கொண்டிருக்க மாட்டோம். மரங்கள் என்று மட்டும் இல்லை, பறவைகள், பூச்சிகள், விலங்குகள், செடிகள் என்று நம் சுற்றுச் சூழலில் நாம் உறவாடும் எந்தவொரு உயிரினத்தை எடுத்துக் கொண்டாலும் நமது எல்லைகள் மிகவும் சுருங்கியவை என்பதை சற்று யோசித்துப் பார்த்தால் உணர்வோம்.

அப்படியெல்லாம் எளிதாக மறந்து போய் விடக் கூடாது அரிய வகை தாவரங்களையும், பறவைகளையும் பிற உயிரினங்களையும் நாம் தவற விட்டு விடக் கூடாது என்பதற்காகவே நம் பழம் இலக்கியங்களில் அவற்றையும் சேர்த்தேதான் பதிந்து வைத்திருக்கிறார்கள். சங்க இலக்கியங்களில் அடையாளம் சொல்லப் படும் பல வகை மரங்களையும், பறவைகளையும் நம்மால் இன்று துல்லியமாக அடையாளம் கண்டு சொல்லி விட முடியாது.

‘எல்லா உயிரினங்களிலேயும் மிகச்சிறப்பானவை தாவரங்கள். ஆதவனின் ஒளிச்சக்தியை வேதிய ஆற்றலுடைய உணவுப்பொருட்களாக மாற்றும் தன்மை தாவரங்களுக்குத்தான் உண்டு. மனித இனமும், மற்ற விலங்குகளும் இந்த வேதிய ஆற்றலைப் பெறுவதற்காக நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாவரங்களைச் சார்ந்துள்ளன’

என்று குறிப்பிடுவதாக தமிழரும் தாவரமும் என்னும் நூலின் அறிமுகத்தில் நாஞ்சில் நாடனின் இந்த சொல்வனம் கட்டுரையில் குறிப்பிடுகிறார். அதே நூலில் ”தொல்காப்பியத்தில் 52 தாவரங்களும், சங்க இலக்கியங்களில் 207 தாவரங்களும், சங்கம் மருவிய காலத்தில் 185 தாவரங்களும், பக்தி இலக்கிய காலத்தில் 238 தாவரங்களும்” குறிப்பிடப்பட்டுள்ளன என்கிறார். நம் தலைமுறையினருக்கு எல்லாம் தாவரங்களின் பெயர்கள் கூட “பூவரசம் பூ பூத்தாச்சு” என்று பொண்ணுக்குச் சொல்லும் சேதியான திரைப்படப் பாடல்கள் மூலமாகவே அறிய வருகின்றன. பூவரச மரத்தையும் பூவையும் நேரில் பார்த்தவர்கள் குறைவாகவே இருக்கக் கூடும். பூவரச இலையிலே பீப்பீ செஞ்சு ஊதினோம் என்ற சென்ற தலைமுறையினரின் சிறுபிள்ளை விளையாட்டைக் கூட இன்னொரு திரையிசைப் பாடலே அறியத் தருகிறது.

ட்ரை சைக்கிள், வித் ட்ரெயினிங் வீல் எல்லாம் குழந்தைப் பருவத்து விளையாட்டுச் சாமானாக கிடைக்க வழியில்லாத அந்தக் காலத்தில் நொங்கு உண்ணப் பட்ட பின் எறியப் படும் பனம் காய்களே மானசீகமான சைக்கிள்களாகவும் கார்களாகவும் விளையாட்டுச் சாமான்களாகப் புழங்கிய இருந்த காலத்தில் நொங்கு என்பது பனை மரத்தில் இருந்து விளைவது என்ற விபரமாவது தெரிந்திருந்தது. கருப்பு சிவப்பு நிறத்தில் மின்னும் அழகிய சிறு மணிகள் ப்ளாஸ்டிக் பொருள் அல்ல அவை விளைவது குன்றி மணி மரத்தில் இருந்து என்ற விபரம் விளையாட்டுப் போக்கில்தான் தெரிய வந்தது. இக்காலத்தில் கிராமப் பகுதி சிறுவர்கள் கூட காடு, மலை, நதி என அலைந்து திரிந்து விளையாடியும் அதன் மூலமாகச் சுற்றுச் சூழலை அறிந்து கொள்ளும் அனுபவத்திற்கான நேரமில்லாமலேயே டி வி யின் முன் வளர்கிறார்கள்.

அப்படி நம் இலக்கியங்கள் அடையாளப் படுத்திய பாடல் பெற்ற சிறப்புடைய இந்த நானூற்றி சொச்சம் மரங்களில் எத்தனை மரங்களை நாம் தற்காலத்தில் அறிவோம்? எத்தனை மரங்கள் இன்னும் உயிர்ப்புடன் வாழுகின்றன. எத்தனை அழிந்து போயின என்ற விபரங்கள் அரசாங்கத்தின் தோட்டக் கலை/வனத் துறை அலுவலர்கள் கூட அறிந்திருப்பார்களா என்பது தெரியாது.

மதுரையைக் கடம்ப வனம் என்கிறார்கள் ஆனால் அந்த கடம்ப மரத்தை மீனாட்சி அம்மன் கோவிலின் உள்ளே வணங்கப் படும் ஒரு மரமாக அன்றி நான் மதுரைப் பகுதியில் வேறு எங்கும் கண்டிலேன். அப்படியே கண்டிருந்தாலும் இது கடம்ப மரம் என்ற விபரமே தெரிந்திருக்காது. நமக்கு ஏற்கனவே பரிச்சியமான ஒரு பத்திருபது மரங்களுக்கு அப்பால் எந்தவொரு தாவர இனத்தையும் அடையாளம் கண்டு கொள்ள முடியாது என்பதே உண்மை நிலமை. அந்த அளவுக் குறைந்த பட்ச தேவைக்கு மட்டுமே தெரிந்து கொள்ளும் அறிவுடனேயே நாம் வளர்க்கப் படுகிறோம். நம்மை வளர்த்த பெற்றோர்களும் ஆசிரியர்களும் கூட அந்த நிலையில்தான் பெரும்பாலும் இருந்தார்கள். ஒரு வேளை தாவரவியல் படித்த மாணவர்களுக்குக் கூடுதலாக ஒரு பத்து மரங்கள் தெரிந்திருக்கலாம்.

இப்பொழுது சிக்குன் குனியா, டெங்கு போன்ற வினோத நோய்கள் நாடு முழுவதும் பரவுகின்றன. உடனே அவற்றிற்கான மருந்துகள் அலோபதி துறையில் இன்னும் கண்டு பிடிக்கப் படவில்லை ஆகவே சித்த மருத்துவம் பரிந்துரைத்த மூலிகைக் கஷாயத்தையே நாங்களும் பரிந்துரைக்கிறோம் என்கிறார்கள் எம் டி, படித்த ஆங்கில மருத்துவர்கள். நில வேம்பு கஷாயம் குடித்தால் அந்த நோய் குணமாகிறது என்கிறார்கள். அந்த நிலவேம்புச் சூரணத்தையும் கஷாயத்தையும் தேடி மக்கள் ஓடுகிறார்கள். ஆனால் அந்த நில வேம்பு என்பது செடியா, மரமா என்பதைத் தெரிந்து கொள்வதில் எவருக்கும் ஆர்வமில்லை. நானும் வேம்பு என்றால் அது ஒரு வகை வேப்ப மரம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதை வளர்ப்பதற்காக கன்றுகளைத் தேடிச் சென்ற பொழுதுதான் ஒரு குறுஞ்செடி என்ற விபரம் தெரிய வந்தது.

சில இலைகளைப் பறித்து சுவைத்தால் கடுமையான கொடும் கசப்பு நாக்கில் நீண்ட நேரம் தங்குகிறது. அது விஷ முறிவு மூலிகையும் கூட என்கிறார்கள். இவை போன்ற தகவல்கள் பாரம்பரியமாக செவி வழி அனுபவத்தின் மூலமாகக் கடத்தப் படும் செய்தியாக மட்டுமே கிராம மக்களின் அனுபவ அறிவாகவே நின்று விடுகின்றன. புற்று நோய் சிகிச்சையான கீமோதெரப்பிக்குப் பதிலாக ஒரு வகைப் பழத்தை உண்டால் பலன் கிடைக்கிறது என்றார்கள். அதைத் தேடிய பொழுது அந்த மரத்தின் தமிழ் அல்லது வட்டாரப் பெயரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. அது சீத்தாப் பழத்தின் ஒரு வகை என்பது மட்டுமே தெரிந்தது. பின்னர் அதைத் தேடி கர்நாடக மாநிலத்தில் ஒரு பண்ணையில் வளர்க்கப் படுவதாக அறிந்தேன்.

இணையத்தில் ஒவ்வொரு தாவரத்தையும் தேடிக் கண்டறிவதற்குப் பதிலாக தாவரங்கள் குறித்த எளிய சுவாரசியமான புத்தகங்கள் இருந்தால் அவை ஆர்வமுள்ளவர்களிடம் எளிதில் சென்றடையக் கூடும். ஆனால் அவை போன்ற நூல்கள் அபூர்வமாகவே எழுதப் படுகின்றன, பதிப்பிக்கப் படுகின்றன....

இப்படியெல்லாம் படித்தேன் சொல்வனம் இணைய தளத்தில். மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. சரி நமக்குத் தெரிந்த மரங்களின் படம், பெயர், பயங்கள் இவற்றை எழுதலாமே என்று நினைத்தேன். உறவுகளும் பங்கு கொள்ளுங்கள். வரும் தலைமுறைக்கு இதைக் கொண்டு போய்ச் சேர்ப்போம். தயவுசெய்து தமிழ்ப் பெயர்களை மட்டும் எழுதுங்கள். விளங்காத... பொடொனிகல் பெயர்களை எழுத வேண்டாம்.
(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Aug 09, 2013 4:21 pm

1. பனை மரம்

மரம் 0irb
கற்பகத் தரு என அழைக்கப்படும் பனை , புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம்.
பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு. தமிழில் உள்ள மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் புல், மரம் என்பவற்றுக்கு இடையேயான வேறுபாட்டைப் பின்வருமாறு வரையறை செய்கிறது.

புறக் காழனவே புல்லெனப் படுமே (பாடல் 630)
அகக் காழனவே மரமெனப் படுமே (பாடல் 631)


பலவகையான பயன்களை நெடுங்காலத்துக்குத் தருவதால் பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர்.​
பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 - 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.

பனையின் பயன்கள்
பனைமரம் உணவு மற்றும் உணவிலிப் பொருள்களை நல்குகிறது. உணவுப் பொருள்களில் பதநீர் முதன்மையானது. இதுவே கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் எனப் பல்வேறு உணவுப் பொருள்களாக வடிவம் பெறுகிறது. பனந்தும்பு, தூரிகைகள், கழிகள், பனையோலைப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், மரம், மரப் பொருள்கள் ஆகியன பனையிலிருந்து பெறப்படும் உணவிலிப் பொருள்களாகும். கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமக் கணக்கின்படி ஒரு பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை நல்கும் வளவாய்ப்புடையது. மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது.
நன்றி-விக்கிபிடியா

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Aug 09, 2013 4:28 pm

2. புங்க மரம்
மரம் Zmzb

மரம் Fy0h

இயற்கையின் அருட்கொடைகள் தான் மரங்கள், செடி, கொடிகள்.  இவை ஒவ்வொன்றுமே மருத்துவக் குணங்கள் கொண்டவை.  மேலும் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் தேவைப்படும் பிராண வாயு அதாவது ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்கள் மரங்கள்.   மழையை வருவிக்கும் வருணபகவானாக மரங்களும், செடிகளும் உள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த மரங்களில் பல வகைகள் உள்ளன.  இந்த மரங்களில் புங்க மரத்தின் மருத்துவப் பயன்களை அறிந்து கொள்வோம். ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கிலுக்கு அடுத்து புங்க மரம்தான்.  எந்தப் பகுதியிலும், எத்தகைய சீதோஷ்ண நிலையிலும் வளரக்கூடியவை.  அதிக நிழலை தரக்கூடியது.  பசுமை படர்ந்த மரமாக காட்சியளிக்கும்.  இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படும்.  சாலை ஓரங்களில் நிழல்  தரவும்,, மண் அரிப்பைத் தடுக்கவும் புங்கை மரங்கள் வளர்க்கப்படுகின்றன.

புவி வெப்பமயமாதலை தடுக்கும் தன்மையுள்ள மரங்களில் புங்க மரமும் ஒன்று.  வெப்பத்தின் தன்மையை உறிஞ்சி  சீரான சீதோஷ்ண நிலையை ஏற்படுத்தும் குணம் இதற்கு உண்டு.

புங்க மர விதையிலிருந்து பயோடீசல் (Biodisel) உருவாக்கும் திட்டத்தைப் பற்றி மஹாராஷ்டிர அரசு ஆலோசனை செய்து வருகிறது.  இந்த விதைகளிலிருந்து 30 – 40 சதவீத எண்ணெய்ச் சத்து உள்ளதாக கண்டறிந்துள்ளனர்.

மருத்துவப் பயன்கள்
இலைகளின் சாறு – இருமல், சளி, பேதி, வயிற்றுப் பொருமல், பசியின்மை போன்றவற்றைப் போக்கும்.
விதைகள் – தோல் வியாதிகளை அகற்றும்.
வேர்கள் – பற்கள் மற்றும் ஈறு சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும்.
மரப்பட்டை – மூல வியாதிக்கு சிறந்த மருந்து.
பூக்கள் -  உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.
விதையின் பொடி – காய்ச்சல், இருமல், நெஞ்சுச் சளியைப் போக்கும்.
வித்துகளில் உள்ள எண்ணெய் வாத வியாதிகளுக்கும், மூட்டு வலிக்கும் இந்திய மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
புங்க மரத்தின் இலை, பூ, வேர், விதை, எண்ணெய் அனைத்துமே மருத்துவப் பயன் கொண்டது.  இதற்கு புன்கு, பூந்தி, கரஞ்சகம், கரஞ்சம் என்ற வேறு பெயர்களும் உண்டு.

புங்கின்விதை காற்கிரந்த புண்கரப்பான் காதெழுச்சி
அங்கசன்ன கண்ணோய்க்கும் ஆம்பேதி-யுங்கட்கும்
காட்டுப்புங் கின்விதைக்கு கண்டதே மற்சொறிமேய்ப்
பூட்டுப்பங் கின்வாய்வும் போம்
(அகத்தியர் குணபாடம்)

புங்கன் இலை, புளியிலை, நொச்சியிலை, மாவிலை, வேப்பிலை, பொடுதலை, உத்தாமணி, கறிவேப்பிலை, நாரத்தை இலை, சங்கச்செடி இலை, அவுரி இலை, பொன்னாவாரை இலை இவைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நீர்விட்டு கொதிக்க வைத்து அதில் கடுகுரோகிணி, இந்துப்பு இவற்றை துணியில் சிறு பொட்டலங்களாகக் கட்டி கொதிக்க வைத்த நீரில் போட்டு நன்றாக சாறு இறங்கியவுடன் வடிகட்டி மாந்த நோய்களுக்கு கொடுத்து வந்தால் மாந்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும்.

புங்கம் பூ எடுத்து நெய்விட்டு வதக்கி தூளாக செய்து  தினமும் 1 ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் மேக நோய்கள் வராது.  மேலும் மேக நோயின் பாதிப்புகள் முற்றிலும் நீங்கும்.  இதைத் தொடர்ந்து ஒரு மண்டலம் உண்டு வருவது நல்லது.  இக்காலங்களில் புளி, புகை வாயுவை அதிகரிக்கும் உணவுகள் முதலியவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

புங்கம் பூ, புளியம்பூ, வசம்பு, சின்ன வெங்காயம், சீரகம், வெட்பாலை அரிசி, நன்னாரி என வகைக்கு 35 கிராம் எடுத்து 3/4 லிட்டர் பாலில் கொதிக்க வைத்து 1 லிட்டர் புங்க எண்ணெய் விட்டு காய்ச்சி கரப்பான், நாள்பட்ட ஆறாத புண்கள் மீது தடவினால் அவை எளிதில் குணமாகும்.
தீக்காயம், நாள்பட்ட ஆறாத புண்கள், வடுக்கள், தழும்புகள், கரப்பான் நோய்கள், சொரி, சிரங்கு இவற்றிற்கு புங்க எண்ணெயை லேசாக சூடாக்கி அவற்றின் மீது பூசி வர மேற்கண்ட நோய்கள் அனைத்தும் தீரும்.

புங்க வேரின் தோலை நீக்கி, மெல்லியதாக சீவி சாறு பிழிந்து அதற்கு சமமான அளவு தேங்காய்பால் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு, ஒரு மெல்லிய துணியில் நனைத்து, பிளவை, ஆறாத புண்கள், பால்வினை நோய்களால் ஏற்பட்ட புண்கள் மீது தடவிவந்தால் புண்கள் எளிதில் ஆறும்.

புங்க எண்ணெய் சருமத்தை பாதுகாப்புடன்  பளபளக்கச் செய்யும்.  தினமும் உடலில் புங்க எண்ணெய் தடவி வந்தால் சரும நோய்கள் ஏதும் அணுகாது.

புங்க எண்ணெய் , வேப்ப எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், புன்னை எண்ணெய் இவைகளை வகைக்கு 700 மி.லி. எடுத்து அதனுடன் சின்ன வெங்காயம், வசம்பு, பெரிய வெங்காயம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், கிராம்பு, சதகுப்பை, கடுகுரோகிணி, சித்திரமூலம் வகைக்கு 17.0 கிராம் எடுத்து இவைகளை காடி நீர்விட்டு அரைத்து மேற்கூறிய எண்ணெய்களுடன் கலந்து, மேலும் சிறிது காடி நீர் சேர்த்து அடுப்பேற்றி எரித்து மெழுகு பதத்தில் இறக்கி வைத்துக்கொண்டு சருமத்தில் தடவி வந்தால் மேக நோய், சூலைநோய், இசிவி  சூதக வலி போன்ற நோய்கள் தீரும்.
புங்க இலையை வதக்கி வீக்கங்களுக்கு கட்டலாம்.

புங்கமரத்தின் பால் புண்களையும், வாய்வையும் நீக்கும் தன்மை கொண்டது.  உடலுக்கு பொன்போன்ற நிறத்தைக் கொடுக்கும்.

புங்க மரத்தின் பயன்கள் ஏராளம்.  அதன் பயனை முழுமையாக அடைய நிறைய மரங்களை நாமும் நட்டு வளர்த்து பயன் பெறுவோம்.
நன்றி-சாந்தன்.கொம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Aug 09, 2013 4:42 pm

துரியன் பழம்

மரம் 49r8

மரம் Images?q=tbn:ANd9GcTyR_hjxpDprbw0vSVmpVWCQYY0nQVBE_rybg9hzRQESqqYxRMT-g&t=1



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Aug 09, 2013 4:47 pm

நல்ல தொடர் பதிவு ...தொடருங்கள் சாமி அவர்களே



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 09, 2013 4:52 pm

அருமையான தொடர் பதிவு சாமிபுன்னகை சூப்பருங்க தொடருங்கள் உங்கள் பதிவுகளை , நானும் போடுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Aug 09, 2013 4:52 pm

பாலாஜி wrote:துரியன் பழம்
இது தமிழ்ப் பெயரா? வட்டாரப் பெயர் ஏதாவது உள்ளதா பாலாஜி?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 09, 2013 4:58 pm

சாமி wrote:
பாலாஜி wrote:துரியன் பழம்
இது தமிழ்ப் பெயரா? வட்டாரப் பெயர் ஏதாவது உள்ளதா பாலாஜி?
ஆமாம் சாமி, ஊட்டி போன்ற மலாய் பிரதேசத்தில் விளையும் பழம் இது, குழந்தை பேறு இல்லாதவர்கள் இதை சாப்பிட்டால் பலன் உண்டு என்று சொல்வார்கள். சீசனில் இந்த பழத்துக்கு சொல்லிவைத்து வாங்குவார்கள். ஒரு பழம் சில சமையம் 1000 ரூபாய்க்கு கூட விற்கும் புன்னகை

யுட்யூப் இல் போயி பாருங்களேன்,இதை உரிப்பதற்கு கூட பல வீடியோ கிடைக்கும்புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Aug 09, 2013 5:06 pm

சாமி wrote:
பாலாஜி wrote:துரியன் பழம்
இது தமிழ்ப் பெயரா? வட்டாரப் பெயர் ஏதாவது உள்ளதா பாலாஜி?
இங்கு அதிகம் கிடைக்கின்றது ....அதன் விலை இந்திய மதிப்பில் 125 ரூபாய் வரும்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக