Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்!
+3
யினியவன்
ராஜா
ராஜு சரவணன்
7 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்!
சரியாக இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. என் சகோதரியின் மகனை +1 ல் சேர்ப்பதற்காக பத்தாம்வகுப்பு தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பே திருச்செங்கோடு, ராசிபுரம், நாமக்கல் என அந்தந்த வட்டாரத்தில் பல பள்ளிகளை சுற்ற நேரிட்டது. எல்லா பள்ளிகளிலும் தாளாளரையும் சந்திக்காமல் வந்ததில்லை. ஒரு வழியாக ரிசல்ட் வந்தது 476 மதிப்பெண்கள் பெற்றிருந்தான்.
நாமக்கல்லில் இப்போது மாநில அளவில் இடங்களைப் பெற்றிருக்கும் பள்ளியில் சேர்ப்பது என இறுதியாக முடிவெடுக்கப்பட்டது.ரிசல்ட் வந்த தினத்திற்கு மறுதினம் சென்றோம். ஆனால் இடம் இல்லை என்று சொல்லிவிட்டனர். முன்பாகவே அட்வான்ஸ் கட்டியிருக்க வேண்டும், இப்படி தாமதமாக வருகிறீர்களே என சலித்துக்கொண்டனர்.
அங்கே ஒரு புறம் படிச்சா என் புள்ள இங்க தான் படிக்கனும் என்ற டயலாக்குகளோடு எங்களைப்போன்ற மதிப்பெண் அதிகமாகவோ அல்லது குறைவாக எடுத்த மாணவர்களின் பெற்றோர், மற்றொரு புறம் முன்பணம் கட்டியிருந்தும் மார்க் குறைவானதால் அட்மிஷன் செய்ய முடியாது என நிர்வாகம் கூறியதால் குழப்பத்துடன் பெற்றோர்களும் மாணவர்களும் மற்றொரு புறம் அதே பள்ளியில் பத்தாவது படித்தும் மார்க் குறைவாக எடுத்ததால் +1 வேறு பள்ளியில் சேர்த்துக்கொள்ளுங்கள் என நிர்வாகம் கூறிவிட்டதால் அதிர்ச்சியுடன் சில பெற்றோர்,ஆத்திரத்துடன் சண்டையிட்ட பெற்றோர் பலர்.
குறைவா நீ மார்க் எடுத்ததால்தானே நான் கண்ட நாயிட்ட கைய, கால புடிச்சி ரெக்கமண்டேஷன் வாங்க வேண்டியதிருக்கு என பொது இடம் என பாராமல் தம் குழந்தைகளை திட்டும் பெற்றோர், அவமானத்தில் கூனிக்குறுகி நிற்கும் குழந்தைகள். மொத்தத்தில் பல கலவையான உணர்ச்சிகளுடன் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது.
சீட் இல்லை என்று சொல்லிவிட்டதால் இங்கு ஒருபுறம் எனது சகோதரியை எனது மாமா கடிந்துகொண்டிருந்தார் சம்பந்தமில்லாமல். நான் அமைதி காக்கச் சொல்லிவிட்டு சிலரை பிடித்து ஒரு வழியாக டிரஸ்டி ஒருவரை சந்தித்து அவர் மூலமாக பள்ளித் தாளாளரை சந்திக்கவும் ஏற்பாடு செய்துவிட்டேன். அவரைச்சென்று சந்தித்தோம். மிக அருமையாக பேசினார். புள்ளிவிவரங்கள், பல்வேறு சார்ட்டுகள், ரிசல்டுகள், மாணவர்களை எவ்வாறு தரம்பிரிக்கிறார்கள் என லேப்டாப்புடன் மிகத் தெளிவாக விளக்கினார். (இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லியாக வேண்டும் நான் சந்தித்த தாளாளர்கள் அனைவருமே இதே போன்று பேச்சுக்கலையில் மிக மிக வல்லவர்களாகவே இருந்தனர்)
அவர் சொன்னவற்றுள் சில..
தினமும் 4 மணிக்கு எழவேண்டும் 4.30 – 8.00மணி வரை ஸ்டடியிங் கிளாஸ், 8.45 – 4.30 வரை நார்மலான கிளாஸ். திரும்ப 5.30 – 9.00 இது பரீட்சை சமயத்தில் இரவு 11 மணிவரை நீட்டிக்கப்படும். விளையாட்டு வகுப்புகளும் கிடையாது. அதற்கு அனுமதியும் கிடையாது. பொங்கல்,தீபாவளி என இரண்டுமுறை மட்டுமே வீட்டுக்கு செல்ல அனுமதி. படிப்பதற்காக அடிப்பதும் சகஜம் என்றார், அடிதாங்காமல் பாதியிலேயே பல மாணவர்கள் ஓடிவிடுவதாகவும் தெரிவித்தார். மேலும் 485 to 490,480 to 485,475 to 480 என இந்த அடிப்படையில் மாணவர்களை பிரித்துதான் வகுப்புபிரிவுகளையும், விடுதி அறைகளையும் ஒதுக்குவதாக தெரிவித்தார்.
அவரிடம் விடுதியைப் பார்க்கவேண்டுமென தெரிவித்தோம். வார்டனை தொலைபேசியில் அழைத்து எனக்கு தெரிஞ்சவங்க வருவாங்க ரூம்ச காண்பிங்க என்றார். அங்கு சென்றோம், அவர் சிறு வயதுக்காரராக இருந்தார் யதார்த்தமாக பல உண்மைகளை சொன்னார் நான்கு பேர் தங்க வேண்டிய அறையில் 8 பேர் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும், புதுவிடுதி அடுத்த வருடம் ரெடியாகும்,ஆனாலும் அதற்குள் அடிஷனல் சீட்ஸ் வாங்கிருவாங்க திரும்பவும் இடப்பற்றாக்குறயாத்தான் இருக்குமென்றார்.
திரும்ப தாளாளைரச் சந்தித்தோம். என்னுடைய கோட்டால ஒரு சீட் போட சொல்லிடுறன், ஆபீசில 1 லட்சத்த கட்டிடுங்க என்றார். நான் சார் இவ்ளோ மார்க் எடுத்திருக்கானே பீஸ் கன்ஷசன் கிடையாதானு கேட்டேன். கன்ஷசன்லாம் 485 க்கு மேல எடுத்திருந்தா மட்டும் கொடுக்கிறோம், அதுவும் கொஞ்ச பேருக்கு மட்டும் 10,000 குறைச்சிக்குவம் அப்டின்னார். சரின்னு நன்றி சொல்லி வெளீல வந்து பணம் கட்டுறதுனு முடிவாகி வரிசைலயும் நின்னாச்சி. அங்க அல்ரெடி வரிசைல செம கூட்டம். மாமா வரிசைல நின்னுட்டிருந்தாரு.
நான் அக்காட்ட சொன்னேன் “நல்லா யோசனை பண்ணிக்குங்க, கோவைல இருந்து 6 மணிநேர டிராவலிங். அதுவும் 2 மாசத்துக்கு ஒருமுறைதான் பாக்கமுடியும். தவிர இதுவரைக்கும் வாய்க்கு ருசியா சமைச்சி போட்டுட்டிருந்த ஆனா இங்க சிக்கனே கெடையாதுங்கிறாங்க, ஹாஸ்டல் சாப்பாடு எப்படியிருக்கும்னு சொல்ல முடியாது. உங்கள விட்டுட்டு அவன் இருந்ததுமில்ல. இவனுக எதோ காட்டுமிராண்டிக போலிருக்கு சரியா தூங்காம, சரியா விளையாடாம, பிரண்ட்சுகளோட பேசமுடியாம, ஒரு டிவியோ சினிமாவோ நியூஸ்பேப்பரோ கூட இல்லாம இரண்டு வருஷம் தினமும் 15, 16 மணி நேரம் படிச்சான்னா அவன் பைத்தியமாகிருவான். ஒரு வேள இதெல்லாம் சமாளிக்க முடியாம போயிருச்சினா அவன் எதிர்காலமே வீணாப்போயிரும். வேணாம் நம்மூருக்கு (எங்க ஊர்) பக்கத்துல இருக்குற ஸ்கூல்லயே சேத்திரலாம். அடிக்கடி நான் போயி நான் பாத்துக்குவேன், இந்தளவு டார்ச்சரும் கிடையாது. கோச்சிங்கும் நல்லாருக்கும். இவனுக படிக்கிற புள்ளைங்களா சேர்த்து நைட்டு பகலா புத்தகத்தயே கரச்சி குடிக்க வெச்சி பரீட்சைல வாந்தி எடுக்க வைக்கறானுக, மத்தபடி இவனுக திறமயெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் கெடையாது. படிக்கிற பையன் எங்கிருந்தாலும் படிச்சிக்குவான். நமக்கு தேவை கட் ஆப் தான், அங்க பீசும் 15,000 to 20,000க்குள்ள தான் வரும் அப்டினு சொல்லி மனச மாத்தி பணம் கட்டப்போற நேரத்தில தடுத்து கூப்பிட்டு வந்து எங்கூருக்கு பக்கத்தில இருக்குற ஸ்கூல்ல சேத்தினேன். 50 % பீஸ் கன்சஷனும் கொடுத்தாங்க. இருந்தாலும் பயந்துட்டே இருந்தேன், ஆனா பரவால்ல 1175 மார்க் எடுத்துட்டான். கட் ஆப்பும் 199.25 கிடைச்சிருச்சி.
# ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில் மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு சலுகை, மாணவர்களின் பெற்றோருக்கு பணம் எனக்கொடுத்து அவர்களை பள்ளியில் சேர்த்து அவர்கள் மூலமாக மாநில அளவில் ரேங்குகள் வாங்கி அதை விளம்பரப்படுத்தி ஆயிரக்கணக்கில் மாணவர்களை சேர்த்து அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து சிறந்த முறையில் “கல்விச்சேவையினை ” இவர்கள் ஆற்றி வருகின்றனர் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
## பிராய்லர் கோழிகளுக்கும் இப்பள்ளிகளின் மாணவர்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை.
இரண்டுமே சமுதாயத்திற்கு ஆபத்தானவை…
இரண்டுமே சமுதாயத்திற்கு ஆபத்தானவை…
- Thiru தம்பி
நன்றி - தமிழ்நியூஸ்24x7.காம்Last edited by ராஜு சரவணன் on Wed Aug 07, 2013 10:40 am; edited 1 time in total
Re: நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்!
பணத்தை லட்சம் லட்சமா கொட்டி கொடுத்தால் தன் பிள்ளைகள் நல்லா படிப்பாங்க என்ற மனோவியாதி கொண்ட பெற்றோர்கள் இருக்கும் வரை இதுபோன்ற கல்லூரி , பள்ளிகளுக்கு வருமானம் களைகட்டதானே செய்யும்.
Re: நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்!
என்ன பண்ணுவது இதுபோல எத்தனை கட்டுரைகள் வந்தாலும் ஒவ்வொரு வருடமும் இவர்களின் கல்லா நிரம்பிக்கிட்டு தானே இருக்கு
Re: நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்!
நம்ம கேசவன் அங்கிருந்தும் இந்த அநியாயம் இன்னுமா நடக்குது?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்!
யினியவன் wrote:நம்ம கேசவன் அங்கிருந்தும் இந்த அநியாயம் இன்னுமா நடக்குது?
நம்ம பூவனை கேட்ட தெரியும்
Re: நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்!
ராஜு சரவணன் wrote:யினியவன் wrote:நம்ம கேசவன் அங்கிருந்தும் இந்த அநியாயம் இன்னுமா நடக்குது?
நம்ம பூவனை கேட்ட தெரியும்
நானும் நாமக்கல் தான் என்ன அண்ணா டீடெயில் வேணும் ..
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்!
பூவன் wrote:ராஜு சரவணன் wrote:யினியவன் wrote:நம்ம கேசவன் அங்கிருந்தும் இந்த அநியாயம் இன்னுமா நடக்குது?
நம்ம பூவனை கேட்ட தெரியும்
நானும் நாமக்கல் தான் என்ன அண்ணா டீடெயில் வேணும் ..
மேல பாருங்கள் பூவன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்!
அலோ .. தமிழ்நாடு தானே நீங்க இருக்கிறது , போனவருடம் எனது அண்ணன் மகனை திருச்சி மான்ஃபோர்ட் பள்ளியில் சேர்க்க முயற்சித்தார்கள் ,ஜாஹீதாபானு wrote:+1 க்கே ஒரு லட்சமா :அடபாவி:
2 லட்சம் மூணு லட்சம் என சீட் விலை போகுதாம் , இத்தனைக்கு அவனுக்கு சீட் கிடைக்கவில்லை admission முடிந்துவிட்டது என்று சொல்லிவிட்டார்கள். (ஹி ..ஹி..ஹி அவன் படிப்பது 6 ஆம் வகுப்பு தான்)
Re: நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்!
இதுக்குதான் நாங்க படிக்கவே இல்ல - எங்க அப்பாருக்கு எம்புட்டு மிச்சம் பண்ணி இருக்கேன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» நாட்டுக்கோழி Vs பிராய்லர் கோழி!
» நாமக்கல் பிராய்லர் பள்ளிகள்..!
» பிராய்லர் கோழி : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!
» பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆபத்துகள் :
» ஸ்டாலின் விடுதலை
» நாமக்கல் பிராய்லர் பள்ளிகள்..!
» பிராய்லர் கோழி : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!
» பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆபத்துகள் :
» ஸ்டாலின் விடுதலை
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum