புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
# தமிழ் தாய் வாழ்த்து # Poll_c10# தமிழ் தாய் வாழ்த்து # Poll_m10# தமிழ் தாய் வாழ்த்து # Poll_c10 
29 Posts - 60%
heezulia
# தமிழ் தாய் வாழ்த்து # Poll_c10# தமிழ் தாய் வாழ்த்து # Poll_m10# தமிழ் தாய் வாழ்த்து # Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
# தமிழ் தாய் வாழ்த்து # Poll_c10# தமிழ் தாய் வாழ்த்து # Poll_m10# தமிழ் தாய் வாழ்த்து # Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
# தமிழ் தாய் வாழ்த்து # Poll_c10# தமிழ் தாய் வாழ்த்து # Poll_m10# தமிழ் தாய் வாழ்த்து # Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
# தமிழ் தாய் வாழ்த்து # Poll_c10# தமிழ் தாய் வாழ்த்து # Poll_m10# தமிழ் தாய் வாழ்த்து # Poll_c10 
194 Posts - 73%
heezulia
# தமிழ் தாய் வாழ்த்து # Poll_c10# தமிழ் தாய் வாழ்த்து # Poll_m10# தமிழ் தாய் வாழ்த்து # Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
# தமிழ் தாய் வாழ்த்து # Poll_c10# தமிழ் தாய் வாழ்த்து # Poll_m10# தமிழ் தாய் வாழ்த்து # Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
# தமிழ் தாய் வாழ்த்து # Poll_c10# தமிழ் தாய் வாழ்த்து # Poll_m10# தமிழ் தாய் வாழ்த்து # Poll_c10 
8 Posts - 3%
prajai
# தமிழ் தாய் வாழ்த்து # Poll_c10# தமிழ் தாய் வாழ்த்து # Poll_m10# தமிழ் தாய் வாழ்த்து # Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
# தமிழ் தாய் வாழ்த்து # Poll_c10# தமிழ் தாய் வாழ்த்து # Poll_m10# தமிழ் தாய் வாழ்த்து # Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
# தமிழ் தாய் வாழ்த்து # Poll_c10# தமிழ் தாய் வாழ்த்து # Poll_m10# தமிழ் தாய் வாழ்த்து # Poll_c10 
3 Posts - 1%
Barushree
# தமிழ் தாய் வாழ்த்து # Poll_c10# தமிழ் தாய் வாழ்த்து # Poll_m10# தமிழ் தாய் வாழ்த்து # Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
# தமிழ் தாய் வாழ்த்து # Poll_c10# தமிழ் தாய் வாழ்த்து # Poll_m10# தமிழ் தாய் வாழ்த்து # Poll_c10 
2 Posts - 1%
Shivanya
# தமிழ் தாய் வாழ்த்து # Poll_c10# தமிழ் தாய் வாழ்த்து # Poll_m10# தமிழ் தாய் வாழ்த்து # Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

# தமிழ் தாய் வாழ்த்து #


   
   
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Tue Aug 06, 2013 1:03 pm

# தமிழ் தாய் வாழ்த்து #

# தமிழ் தாய் வாழ்த்து # 533644_686282404719946_262984069_n

ஒரு 20 வருடங்களுக்கு முன்னால் அநேகமாக தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு நாளும் தமிழ் தாய் வாழ்த்துடன் தான் ஆரம்பமாகும்... அதென்ன 20 வருடங்கள் - இப்பொழுது இல்லையா என்கிற கேள்விக்கு --- இப்பொழுது அரசு பள்ளிகளில் மற்றும் ஒரு சில தனியார் பள்ளிகளில் மட்டுமே பாட படுகின்றன என்பதருகிறேன் ... மற்ற பள்ளிகளில் "நம் பாட்டன் முப்பாட்டன் பாடிய நம் கலாச்சாரம் பண்பாடு போற்றும் ஆங்கில பாடல்கள் தான்" !

தமிழக அரசால் போற்றப்படும் இந்த தமிழ் தாய் வாழ்த்தும் இதை எழுதியவர் தெய்வத்திரு.மனோன்மணியம் சுந்தரனார் என்பது அநேகம் பேருக்கு தெரிந்திருக்கும்.... இந்த பதிவில் எனக்கு தெரிந்த (படித்த) இந்த அறிய பாடல் பற்றி வேறு சில விவரங்களும் , இந்த பாடலின் பொருளையும் தங்களுடன் பகிரலாம் என்பது என் எண்ணம் -- தெரிந்தவர்கள் பொருளிலோ தந்துள்ள விவரத்திலோ ஏதாவது விடு பட்டிருந்தால் / தவறாக கூற பட்டிருந்தால் தயவு கூர்ந்து தெரிவிக்கவும் .

தெய்வத்திரு . சுந்தரனார் அவர்கள் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்க்கு தொண்டாற்றிய பெரும் மேதைகளில் முக்கியமானவர். இவர் கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி செய்து வெளியிட்டார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். மனோன்மணியம் என்னும் நாடக நூல் - இவர் எழுதிய மிகப்பெரிய படைப்பாகும்.
இந்த மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் சில திருத்தங்களுடன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன்1970 இல் அறிவிக்கப்பட்டது.

அனைவருக்கும் தெரிந்த அந்த பாடல் இதோ ...அதன் பொருளும் தந்துள்ளேன் ...

பாடல் :
~~~~~~

நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !
உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !

அறிஞர்களின் பொருள் :
~~~~~~~~~~~~~~~~~~~

நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு அழகு மிளிரும் சிறப்பு நிறைந்த முகமாக திகழ்கிற இந்தியக் கண்டத்தில் தென்னாடும் அதில் சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடும் பொருத்தமான. பிறைபோன்ற நெற்றியாகவும் அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன. அந்த திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல அனைத்துலகமும் இன்பம்பெறும் வகையில் எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருந்த(இருக்கின்ற?) பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே!

இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!

எளியவார்த்தையில் :
~~~~~~~~~~~~~~~~~~
அதாவது -- இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு பரந்த இந்த கடல் தான் ஆடை ...பாரத நாடே அவளின் முகம் ...தென்திசை அதன் நெற்றியாம்.... அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம் ...அந்தத் திலகத்தின் வாசனைப் போல் அனைத்து உலகமும் இன்பம் காண எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும் தெய்வமகள் ஆகிய தமிழே என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக் கண்டு வியந்து,செய்யும் செயலையும் மறந்து வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்.

இன்னொரு செய்தி ....

தமிழ் மொழியையே ஆட்சி மொழியாக கொண்ட மற்றொரு மாநிலமான புதுச்சேரியில் - புதுச்சேரி அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் வாழ்த்துப்பாடலை எழுதியவர், தமிழ் உலகுக்கு பெரும் தொண்டாற்றிய தெய்வத்திரு. பாரதிதாசன்...இதோ அந்த பாடல் .. பாடலே எளிய முறையில் இருப்பதால் பொருள் தனியாக தேவையில்லை ... இந்த பாடல் தான் புதுவையில் உள்ள அரசு பள்ளிகளில் பாட படுகிறது ( நான் என்னுடைய +1, +2 புதுவை மாநிலம்- காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல் நிலை பள்ளியில் படித்தேன் ..இந்த பாடல் தான் காலை வணக்க கூட்டத்தில் பாட படும் )


வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே!
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே!
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே!

தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ?
தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ?
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நீஉயிர் நான்மறப் பேனோ?

செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித்தேனே!
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!

முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி!

கடைசியாக ...

இப்படி எத்தனை எத்தனையோ பாடல்கள் படைப்புகள் நம் மொழியில் ஒன்றன கலந்துள்ளன - அவைகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்து சென்றாலே அது இந்த தமிழ் அன்னைக்கு பெரும் தொண்டாகும் ..... 100 கோடியில் சிலை வைப்பதை விட !

- ரா.ராஜகோபாலன்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Aug 06, 2013 1:20 pm

இன்றைய தலைமுறை தமிழிலில் உரையாடுவதையே அதிகமாக பார்க்கமுடியாத பட்சத்தில்,இத்தலைப்பு எனக்கு பெரிய அதிர்ச்சியை தரவில்லை.
ஒரு தனியார் தொலைக்காட்ச்சியில் அண்ணாச்சி ஒருவரால் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி அதில் பொதுமக்களை ஒவ்வொருவராக அழைத்து தமிழ்தாய் வாழ்த்தை பாடச்சொன்னார்,
என்ன கொடுமை ஒருவர் மட்டுமே சரியாகப்பாடினார் அவரும் அரசு கல்லூரியில் படிப்பவர்.
எனக்கு தமிழ் சரியாக படிக்கத்தெரியாது என்பது ஒரு சமுதாய கெளரவமாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளது  இன்றய நம் தமிழ் சமூகத்தில்.
தமிழ்தாய் வாழ்த்தை புத்தகங்களில் பதிவிட வேண்டும் என்ற சட்டம் போட்ட அரசு அவ்வாழ்த்து அனைத்துப் பள்ளிகளிலும் பாடப்படுகிறதா என அறிய ஒரு குழுவை நியமிக்க வேண்டுமா?      
பணம் மட்டுமே குறிக்கோள் என இயங்கும் பள்ளிகள் இருக்கும் வரை தமிழ் மட்டுமல்ல
வேறு எந்த மொழி வாழ்த்தும் மறக்கத்தான் செய்யும்.

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Aug 06, 2013 1:23 pm

அருமை அருமை அருமையிருக்கு 

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Aug 06, 2013 3:52 pm

malik wrote: தமிழ் தாய் வாழ்த்து

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலுந் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமு மதிற்சிறந்த திராவிடநற் றிருநாடும்
அத்திலக வாசனைபோ லனைத்துலகு மின்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் னிருந்தபடி யிருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்குங் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே பொன்றுபல ஆயிடினும்
ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையா
வுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.

இந்த பாடல் மனோன்மணீயம் என்ற நாடக நூலில் வருகிறது. நாடகத்தில் கடவுள் வணக்கத்திற்கு அடுத்ததாக தமிழ்த் தெய்வ வணக்கத்தில் வருகிறது. இதை எழுதியவர் பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை. தமிழ் மொழியில் சிறந்த நாடக நூலில் இதுவும் ஒன்று. சிவப்பு வண்ணத்தில் உள்ள வரிகளை எடுத்து விட்டு நமது தமிழ் மாநிலத்தின் தமிழ்த் தாய் வாழ்த்தாக அமைத்துக் கொண்டனர்.

விளக்கம்
நீலக் கடலை வண்ண ஆடையாக உடுத்திய நிலமகளுக்குப் பாரத நாடு முகமாக விளங்குகிறது.
அதன் பிறை போன்ற நெற்றியில் தெற்குப் பகுதி ஒளிர்கிறது.
அந்த நெற்றியிலே இட்ட திலகமாக தமிழ்நாடு திகழ்கிறது.
அத்திலகத்திலிருந்து பரந்து செல்லும் நறுமணம் தான் தமிழ்த்தாய் (தமிழ் மொழி).
அந்த நறுமணத்தின் மூலம் அனைத்து உலகும் இன்பமுறுகிறது.
அதனால் அகில உலகிலும் புகழ்பெற்றுச் சிறக்க வீற்றிருக்கிறாள்.

பல உலகங்களையும் உயிர்களையும் படைத்துக் காத்து ஒடுக்கும் பரம்பொருள் போல் இன்னும் என்றும் இளமையாகவே இருக்கிறாள் தமிழ்த்தாய்.
தமிழ்த்தாயின் மயக்குறு மக்களே கன்னடமும், தெலுங்கும், மலையாளமும் துளுவும்.
தமிழ்மொழி பரம்பொருள் போன்றது. ஆதலால் ஆரிய மொழி போல் உலக வழக்கொழியாதது, இறவாதது. என்றும் இளமைப் பொலிவுடன் வாழ்வது; வான்புகழ் பெறுவது.

உன் கன்னித்தன்மையைப் புகழ்ந்து, எங்கள் செயல்மறந்து, உன் வயப்பட்டு உலகினர் அனைவருமே இறைஞ்சுகின்றோம்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 06, 2013 4:01 pm

பதிவும் விளக்கமும் விளக்க பதிவும் அருமை



ஈகரை தமிழ் களஞ்சியம் # தமிழ் தாய் வாழ்த்து # 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 06, 2013 5:16 pm

தமிழையும் தாயையும் தமிழினம் தலையில் வைத்து
கொண்டாடா விட்டாலும் நாவினில் உதிர்த்து மதித்தால் நன்று




venugobal
venugobal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 26/07/2010

Postvenugobal Tue Aug 06, 2013 8:17 pm

'எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!' என்று இறந்தகாலத்தில் எழுதியுள்ளார். இனித் தமிழுக்கு ஏற்றமிகு காலமில்லை என்று பாவலர் உணர்ந்து எழுதினாரோ என்னவோ!  - நம் சிந்தனைக்கு.
தமிழ்வாழ்த்துக்குப் பாரதியின், 'வாழ்க தமிழ்மொழி, வாழ்க நிரந்தரம், வாழிய வாழியவே' என்னும் பாடலும் எளிய நடையும் உயரிய கருத்தும் கொண்டது.  இதையாவது நம் பிள்ளைகளுக்குக் கற்றுத் தரலாம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக