ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

+46
Namasivayam Mu
பழ.முத்துராமலிங்கம்
சசி
M.Jagadeesan
வேல்முருகன்
balakarthik
சரவணன்
Preethika Chandrakumar
shobana sahas
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
prabatneb
சிவனாசான்
அகிலன்
idigiti
solomon
உமேரா
மாணிக்கம் நடேசன்
தமிழ்நேசன்1981
M.Saranya
jesifer
விமந்தனி
பிஜிராமன்
கோ. செந்தில்குமார்
Dr.S.Soundarapandian
கிருஷ்ணா
பாலாஜி
சிவா
SenthilMookan
T.N.Balasubramanian
உதயசுதா
பார்த்திபன்
ஹர்ஷித்
jenisiva
amirmaran
விஸ்வாஜீ
ayyasamy ram
ஜாஹீதாபானு
அருண்
M.M.SENTHIL
அசுரன்
Muthumohamed
mbalasaravanan
ராஜா
malik
krishnaamma
50 posters

Page 78 of 100 Previous  1 ... 40 ... 77, 78, 79 ... 89 ... 100  Next

Go down

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 78 Empty படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by krishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

Last edited by krishnaamma on Thu Feb 23, 2017 10:38 pm; edited 5 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 78 Empty Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by krishnaamma Mon Dec 07, 2015 10:19 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:கலிகாலம்!
திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன், இதை படம் பிடித்துள்ளனர். ஒருவேளை ஏதாவது காரணத்தால், திருமணம் நின்று விட்டால், அப்பெண்ணின் கதி? அப்படி ஏதும் நடக்கக் கூடாது என்பதுதான் எல்லாருடைய விருப்பம். விதி மாற்றி எழுதிவிட்டால்...
நாகரிகம் என்ற பெயரில் நடந்த இந்த அநாகரிகத்தை என்ன சொல்வது?
பெரியவர்களாவது யோசித்திருக்கலாமே!
எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.
மேற்கோள் செய்த பதிவு: 1178959
தவிர்க்க வேண்டிய ஒரு நிகழ்வு, நாகரீகம் என்ற விபரீதம் கூடாது.
ம்ம்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 78 Empty Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by krishnaamma Mon Dec 07, 2015 10:22 pm

ayyasamy ram wrote:காலத்திறகு ஏற்ற கோலம்
-
மணமேடையில் செருப்புக் காலுடன் செல்கின்றனர்
-
திருமணத்திற்கு முன் தினம் இரவு வரவேற்பு நிகழ்ச்சியில்
மணமக்களை ஒரு சேர அமர வைத்த போதும் இப்படித்தான்
முகம் சுளித்தோம்....இது என்ன வழக்கம் என்று..
-

அது இப்போது இன்னும் டெவலப் ஆகி கட்டிப் பிடிடா
வரை வந்துள்ளது...
-
திருமண சடங்கே கேலிக்கூத்தாகி விட்ட நிலையில்
இதையும் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்...
-

மேற்கோள் செய்த பதிவு: 1179118

அந்த வழக்கமே  எனக்கு பிடிக்கலை அண்ணா சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 78 Empty Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by krishnaamma Tue Dec 08, 2015 10:04 am

முன் யோசனையோடு செயல்பட்ட மனைவி!

அரசு பதவியிலிருந்து ஓய்வு பெற்ற என் நண்பருக்கு, குழந்தைகள் கிடையாது. சமீபத்தில் அவரைப் பார்க்க, அவரது வீட்டுக்குச் சென்றிருந்த போது, அவர் மனைவி, அவரிடம், 'அரிசியை களைஞ்சு வையுங்க. புளிய கரைச்சு வச்சுட்டீங்களா... காய் நறுக்கியாச்சா...' என, பல வித உத்தரவுகளை போட்டுக் கொண்டிருந்தார்.

இதை கவனித்த நான், சிரித்துக் கொண்டே, 'என்ன நடக்கிறது இங்கே?' என்றேன். அதற்கு அவர் மனைவி, 'எங்க ரெண்டு பேருக்கும் வயசாகிடுச்சு. எந்த நேரத்தில, என்ன நடக்கும்ன்னு சொல்ல முடியாது. ஒருவேளை எனக்கு ஏதாவது ஆகிட்டா, இவரை யார் கவனிச்சுப்பா... குறைந்தபட்சம், சமையல் தெரிஞ்சாலாவது யாரையும் எதிர்பார்க்காம, மிச்ச காலத்தை நிம்மதியா ஓட்டிட முடியும். அதான், சமையல் செய்ய கத்துக் கொடுக்கிறேன்...' என்றார்.

அவரது முன் யோசனையை பாராட்டியதோடு, என் மனைவியிடமும், எனக்கு சமையல் செய்ய கற்றுக் கொடுக்குமாறு கூறியுள்ளேன்.
இந்த யோசனை, எந்தளவுக்கு உதவுமென்பதை அனுபவத்தில் தான், உணர முடியும். தேவைப்பட்டவர்கள் இதைக் கடைப்பிடிக்கலாமே!

எஸ்.பி.பாலு, சென்னை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 78 Empty Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by krishnaamma Tue Dec 08, 2015 10:06 am

மின்சார பகிர்மான பெட்டிக்கு வலை!

எங்கள் பகுதியில், பல மின்சார பகிர்மான பெட்டிகள் உள்ளன. அவைகளின் எல்லா பக்கங்களிலும், விளம்பர சுவரொட்டிகளை ஒட்டுவதுடன், அப்பில்லர்களில் எழுதியுள்ள, 'அபாயம்' எச்சரிக்கை அறிவிப்பின் மீதும் ஒட்டுகின்றனர். 

இதனால், 'சுவிட்'சை இயக்குவதற்கோ அல்லது பழுது நீக்குவதற்கோ வரும் மின்சார தொழிலாளர்கள், ஒட்டப்பட்டுள்ள போஸ்டரை கிழிக்கும் போது, எச்சரிக்கை வார்த்தைகளும், அப்பகிர்மான பெட்டியில் அடித்துள்ள, பெயின்ட்டும் உரிந்து விடுகிறது. எதற்காக பெயின்ட் அடித்தனரோ, எச்சரிக்கை செய்தனரோ, அது, பயனற்று போய் விடுகிறது.

இதனால், சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுக்க, நல்ல எண்ணம் கொண்ட எங்கள் ஏரியாவைச் சேர்ந்த ஒருவர், மின்வாரியத்தின் அனுமதி பெற்று, பெட்டியிலிருந்து, ஒரு அங்குல இடைவெளியில், எல்லா பக்கத்திலும், தனித் தனி வலை கதவை போட்டு விட்டார். இந்த வலைக்கு மேல் காகிதம் ஒட்டாது; அப்படியே ஒட்டினாலும், பிய்ந்து விடும். அதோடு, எச்சரிக்கை தகவலும், பெயின்ட்டும் பாதிப்பு அடையாது.

இதுதான், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போலும்! இதை, எல்லா மின் பகிர்மான பெட்டிகளிலும் செய்யலாமே!

என்.சுப்ரமணியம், சென்னை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 78 Empty Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by krishnaamma Tue Dec 08, 2015 10:09 am

பெரிசுகளே... கேட்டுக்கங்க!

எங்கள் பக்கத்து வீட்டில், ஒரு இளம் தம்பதி குடியிருக்கின்றனர். அவர்களுக்கு, ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை உண்டு. அந்த பெண்ணின் மாமனார், சரியான சந்தேகப் பேர்வழி. அவளது கணவரைத் தேடி, அவரது நண்பர்கள், அவர் இல்லாத போது வந்தால், கணவர் வரும் வரை அவர்களை வரவேற்பறையில் அமரச் சொல்வாள். கணவரின் நெருங்கிய நண்பர்களாக இருந்தால், இரண்டொரு வார்த்தை பேசுவாள். இது, அப்பெண்ணின் மாமனாருக்கு பிடிப்பதில்லை.

சமீபத்தில் ஒருநாள், அப்பெண்ணின் கணவர் வெளியே சென்றிருந்த சமயம், அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் வரவே, அவரை வரவேற்று, காபி கொடுத்து, அவருடன் பேசியிருக்கிறாள். அவர்களையே வட்டமிட்டபடி இருந்த அவளது மாமனார், பேத்தியை அழைத்து, 'உன் அம்மாவும், அந்த மாமாவும் என்ன கூத்தடிக்கிறாங்கன்னு போய் பாத்துட்டு வா...' என்று கூறி அனுப்பியுள்ளார்.

அந்த சிறுமியும், தாத்தா கூறியதை தன் அம்மாவிடம் சத்தமாகக் கூற, இருவருக்கும் அதிர்ச்சி. வேதனையோடு உடனே கிளம்பி விட்டார் அந்த நண்பர்.

வீட்டில் இருக்கும் பெரியவர்கள், பெருந்தன்மையாக இருந்து, குடும்பத்தை வழி நடத்தாமல், இப்படி குழப்பத்தையும், குழந்தைகள் மனதில் தவறான அபிப்ராயத்தையும் ஏற்படுத்தலாமா?

 நிர்மலா ராஜகோபால், விருதுநகர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 78 Empty Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by krishnaamma Tue Dec 08, 2015 10:13 am

நூலகம் வளர்ச்சியடைய...

பெண்கள் கல்லூரி ஒன்றில், பேராசிரியையாக பணிபுரிந்த என் உறவினர், சமீபத்தில் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு நடைபெறும், பிரிவு உபசார விழாவில் கலந்து கொள்ள, என்னையும் அழைத்திருந்தார். நானும், குடும்பத்தோடு அவ்விழாவில் கலந்து கொண்டேன்.

வாழ்த்துரை வழங்கியோர், கல்லூரியில் அவர் செய்த பணிகளையும், அவரின் குணநலன்களையும் புகழ்ந்து பேசி, அவருக்கு நினைவுப் பரிசு வழங்கினர்.

இறுதியில் ஏற்புரை ஏற்று பேசிய, உறவினர், 'எத்தனையோ ஏழ்மை நிலையில் தான், இக்கல்லூரியில் பணிக்குச் சேர்ந்தேன்; இன்று வாழ்க்கையில் எல்லா வசதிகளும், சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கிடைத்துள்ளது. அதற்கு நன்றிக் கடனாகவும், என் மன ஆறுதலுக்காகவும், நம் கல்லூரியில் இயங்கும் நூலகத்தின் வளர்ச்சிக்காக, சிறு தொகையை நன்கொடையாக வழங்குகிறேன்; 

அதில் வரும் வட்டியைக் கொண்டு, ஆண்டுதோறும் மாணவியருக்கு பயன்படும் வகையில், நூலகத்திற்கு தேவையான புதிய நூல்களை வாங்க கேட்டுக் கொள்கிறேன். இத்தனை ஆண்டுகள் இக்கல்லூரியில் பணிபுரிந்ததன் பயனாக, எனக்கு கிடைக்கும் ஓய்வு கால நிதியிலிருந்து, நூலக வளர்ச்சிக்கு நிதி அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது...' என்று கூறியதும், விழாவில் கலந்து கொண்ட அனைவரும் கைதட்டி, பாராட்டு தெரிவித்தனர்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரிந்து ஓய்வு பெறுவோர், தங்களுடைய ஓய்வு கால நிதியிலிருந்து, ஒரு சிறிய தொகையை இவ்வாறு நன்கொடையாக அளித்து, அங்குள்ள நூலகங்களை வளர்ச்சியடைய செய்தால், மாணவ, மாணவியருக்கு பயன்படுமே... பள்ளி மற்றும் கல்லூரியில் பணிபுரிவோர் சிந்திப்பரா?

தி.சுந்தரேசன், கோவை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 78 Empty Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by krishnaamma Tue Dec 08, 2015 10:19 am

கணவன்மார்கள் கவனத்திற்கு...

நானும், என் தோழியும் அரசு அலுவலகத்தில் பணிபுரிகிறோம். கடந்த வாரம் அலுவலகம் முடிந்து, வீடு திரும்பும் போது, களைப்பாகவும், படபடப்பாகவும் இருப்பதாக கூறினாள் தோழி. 'பழச்சாறு வாங்கிக் குடித்தால் தெம்பாக இருக்கும்...' என்று நான் கூறியதும், அவசரமாக மறுத்து, பாட்டிலில் கொண்டு வந்திருந்த தண்ணீரைக் குடித்து சமாளித்தாள்.

அரைமணி நேரத்தில், அவளுக்கு படபடப்பு அதிகமாகி மயங்கி விட்டாள். அவள் மயக்கத்தை தெளிவித்து, பழச்சாறு குடிக்க வைத்து, ஆட்டோவில் அனுப்பும் போது தான், அவள் கையில் பணம் இல்லாததை கவனித்தேன். பின், 100 ரூபாய் கொடுத்து அனுப்பினேன்.

மறுநாள், அவள் அலுவலகம் வந்த போது கூறிய தகவல், என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவளது கைச் செலவுக்கென, மாதம், 1,000 ரூபாய் மட்டுமே கொடுப்பாராம் அவளது கணவர்.

அதிலேயே தனக்குரிய செலவுகளை அவள் செய்து கொள்ள வேண்டும் என்பதால், டீ குடிப்பது, தன்னை தேடி வருவோருக்கு காபி வாங்கிக் கொடுப்பது, அவசர செலவுகள் என, 20ம் தேதியே அப்பணம் செலவாகி விட, இம்மாதிரி நேரங்களில் குளிர்பானம் வாங்கவோ, அவசரத்திற்கு ஆட்டோவில் செல்லவோ பணமின்றி தவித்திருக்கிறாள்.

மனைவியை வேலைக்கு அனுப்பி, குடும்ப பாரத்தை பகிர்ந்து கொள்ளும் ஆண்களே... வேலைக்குச் செல்லும் மனைவிக்கு எதிர்பாராத செலவுகள் வரலாம்; அவர்களுக்கு தாராளமாக, 'பாக்கெட்' மணி கொடுங்கள்; ஆபத்துக்கு உதவும்.

தமிழரசி செல்வக்குமார், சென்னை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 78 Empty Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by krishnaamma Tue Dec 08, 2015 10:23 am

krishnaamma wrote:கணவன்மார்கள் கவனத்திற்கு...

மேற்கோள் செய்த பதிவு: 1179201

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இந்தக் காலத்தில் சின்ன பசங்களே நிறைய பாக்கெட் மணி கேட்கும் நேரத்தில், சம்பாதிக்கும் பெண்ணுக்கு இப்படி செய்வது ரொம்ப அதிர்ச்சியாக இருக்கு, அந்த பெண்ணாவது கையில் இருக்கும் பணம் ஆனதும் கேட்கக் கூடாதோ  ? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 78 Empty Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by krishnaamma Tue Dec 08, 2015 10:25 am

கண்ணை பொன்னெனப் பாதுகாப்போம்!

சமீபத்தில், கண் பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றிருந்தேன். அங்கு, முதியவர் ஒருவர், கண் சிவந்த நிலையில், வலி தாளாமல், முனங்கிய படி அமர்ந்திருந்தார். விசாரித்த போது, பணி ஓய்வு பெற்ற அவர், தோட்ட வேலையில் ஈடுபட்ட போது, சிறு கல், கண்ணில் பட்டு விட்டதாக கூறினார். 

நல்லவேளையாக, சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும், சொட்டு மருந்து மூலம் குணமாக்கி விடலாம் என்று மருத்துவர் கூறியதாக கூறினார்.கண் பார்வை குறைபாடு, மிகுந்த சிரமத்தை தரும் என்பது கண்கூடு. ஆயினும், பலர் கண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல், அலட்சியமாக, பல பணிகளில் ஈடுபடுகின்றனர்; இதில் பல ஆபத்துகள் உள்ளன. உதாரணமாக, சமையல் செய்கையில், குறிப்பாக, தாளிக்கும் போது, கடுகு வெடித்து கண்ணில் பாயும் அபாயம் உள்ளது.

குளியலறையில், அமிலம் ஊற்றி சுத்தம் செய்யும் போது அமிலத் துளிகள் தெறித்து கண்ணில் விழலாம்; இது பார்வையை பாதிக்கும்; பறிக்கும் சக்தி கொண்டது. இருசக்கர வாகனத்திலோ, பஸ்சிலோ பயணிக்கும் போது, பூச்சிகள் பறந்து வந்து கண்ணை தாக்கி, சொல்ல முடியாத வலியையும், சேதத்தையும் உண்டாக்கும்.
வீட்டை சுத்தம் செய்கையில் தூசியும், ஒட்டடையும் கண்ணில் விழும் அபாயம் உள்ளது.

எனவே, எல்லாரும் மேற்கண்ட பணிகளில் ஈடுபடுகையில், மூக்கு கண்ணாடி அணிவது அவசியம். தங்கள் கண்ணின் பவருக்கு ஏற்றபடி, 'பவர் கிளாஸ்' அல்லது 'ப்.ௌயின் கிளாஸ்' அணிவது மிக நல்லது!

ஆர்.மாலதி, ஸ்ரீபெரும்புதூர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 78 Empty Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by krishnaamma Mon Dec 14, 2015 11:30 pm

இனிய நினைவுகள்!

எங்கள் குடும்ப நண்பரின் மகளுக்கு, சமீபத்தில், மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. விழாவில் எடுக்கப்பட்ட புகைப்பட, 'ஆல்பத்தை' காட்டுவதற்காக எடுத்து வந்தார் நண்பர். அதில், முதல் பக்கத்தில், சிறு வண்ண அட்டையில் அச்சிடப்பட்டிருந்த தகவல், வித்தியாசமாக இருந்தது. அது: 

* ஈரக் கைகளால், 'ஆல்பத்தை' தொடாதீர்கள்.
* வெப்பம் மற்றும் குளிர்ச்சியான இடத்தில் வைக்காதீர்கள்.
* கைகளில் எண்ணெய் பசை இல்லாமல், 'ஆல்பத்தை' கையாளவும்.
* குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளிடமிருந்து பாதுகாக்கவும்.
* பிறரிடம் கொடுக்கும் போது மேற்கண்ட குறிப்புகளை கூறி, கொடுக்கவும்.

- இது நல்ல யோசனையாக இருந்தது. இதை அனைவரும் பின்பற்றினால், திருமணம் போன்ற இனிய நினைவுகளை சுமக்கும், 'ஆல்பம்' பாழாகாமல் இருப்பதோடு, எத்தனை ஆண்டுகளாயினும், புதுப்பொலிவுடன் இருக்குமே!

வத்சலா சதாசிவன், சென்னை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 78 Empty Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 78 of 100 Previous  1 ... 40 ... 77, 78, 79 ... 89 ... 100  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum